தங்கள் நெஞ்சுக்கு ஆழ்வார்கள் அருளும் அருளிச் செயல்கள் –

பெரிய திருமொழி

இமயத்துள் –பிருதி சென்று அடை நெஞ்சே –1-2-
அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம்பெருமான் அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளனிடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலையார்த்து அதர்வாய்ச் சில்லு சில்லு என்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே -1-1-7-
திருவேங்கடம் அடை நெஞ்சே -1-8-
என் நெஞ்சமே —வேங்கடம் மேவி —இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-
கடல் மல்லைத் தல சயனம் நச்சித் தொழுவாரை நச்சு என் தன் நல நெஞ்சே –2-6-5-
கடல் மல்லைத் தல சயனம் வலம் கொள் மனத்தாரவரை வலம் கொள் என் மட நெஞ்சே –2-6-6-
கடல் மல்லைத் தல சயனம் நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாய் என் தூய நெஞ்சே –2-6-7-
கடல் மல்லைத் தல சயனம் தொழு நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய நெஞ்சே –2-6-8-
கடல் மல்லைத் தல சயனம் வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட மேஞ்சே -2-6-9-
நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-
நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே -3-9-
நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே -3-10-
நந்தி புர விண்ணகரம் நன்னு மனமே -5-10-
நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-
திரு நறையூர் –திருவாளன் –இணை யடியே –குரை கழலே -பொன்னடியே -மலரடியே -தளிரடியே -நீள் கழலே அடை நெஞ்சே –6-9-
திரு வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-
திருமால் இருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-
பாடமே எந்தை பெருமானை பாடி நின்று ஆடோமே ஆயிரம் பேரானை பேர் நினைந்து சூடோமே சூடும் துழாய்
அலங்கல் சூடி நாம் கூடோமே கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே –11-3-8-
நன்னெஞ்சே நம் பெருமான் நாளும் இனிதமரும் அன்னம் சேர் கானல் அணியாலி கை தொழுது முன்னம் சேர் வல் வினைகள்
போக முகில் வண்ணன் பொன்னம் சேர் சேவடி மேல் போதணியப் பெற்றோமே –11-3-9-
மீனமாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1-

———–

திரு நெடும் தாண்டகம் –

பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –6
பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –7

——-

முதல் திருவந்தாதி –

ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க நாமே யறி கிற்போம் நல் நெஞ்சே பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த
வாளரக்கன் நீள் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு –45
கழல் ஓன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கை மேல் சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் செருவாழி
ஏந்தினான் சேவடிக்கே செல்ல மருவாழி நெஞ்சே மகிழ் –48-
நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி நின்று நில முழுதும் ஆண்டாலும் என்றும் விடலாழி நெஞ்சமே வேண்டினேன்
கண்டாய் அடலாழி கொண்டான் மாட்டன்பு –71-
இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம் தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த படமுடைய பைந்நாகப் பள்ளியான் பாதமே
கை தொழுதும் கொய்ந் நாகப் பூம் போது கொண்டு –78
படி கண்டு அறிதியே பாம்பணையினான் புள் கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில் பொறி ஐந்தும்
உள்ளடக்கிப் போதொடு நீரேந்தி நெறி தின்ற நெஞ்சமே நீ –85
உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் –99
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியின் தாயவனைக் கேசவனைத்
தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை –100-

————————————————

இரண்டாம் திருவந்தாதி –

கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார் அழல் எடுத்த சிந்தையரா யஞ்ச தழல் எடுத்த போராழி ஏந்தினான்
பொன் மலர்ச் சேவடியை ஓராழி நெஞ்சே உகந்து –7-
சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும் அறியாரும் தாம் அறியாராவர் அறியாமை மண் கொண்டு மண்ணுண்டு
மண்ணுமிழ்ந்த மாயன் என்று எண் கொண்டு என்நெஞ்சே இரு -36
மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர குலை சூழ் குரை கடல்கள் ஏழும் முலை சூழ்ந்த நஞ்சுரத்துப் பெண்ணை
நவின்றுண்ட நாவன் என்று அஞ்சாது என்நெஞ்சே அழை –49-
மதிக்கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம் மதிகண்டாய் மற்றவன் பேர் தன்னை மதிக்கண்டாய் பேராழி நின்று
பெயர்ந்து கடல் கடைந்த நீராழி வண்ணன் நிறம் –51-
இது கண்டாய் நன்னெஞ்சே இப்பிறவியாவது இது கண்டாய் எல்லாம் நாமுற்றது இது கண்டாய் நாரணன் பேரோதி
நரகத் தரு கணையா காரணமும் வல்லையேல் காண் –66
உறுங்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் நற்பாதம் உறுங்கண்டாய் ஒண் கமலம் தன்னால் உறுங்கண்டாய் ஏத்திப் பணிந்து
அவன் பேர் ஈரைஞ்ஞூறு எப்பொழுதும் சாத்தி யுரைத்தல் தவம் –77-
உற்று வணங்கித் தொழுமின் உலகேழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் பற்றிப் பொருந்தாதான் மார்பிடந்து
பூம் பாடகத்துள் இருந்தானை ஏத்தும் என் நெஞ்சே –94-

———————————————-

மூன்றாம் திருவந்தாதி –

கழல் தொழுதும் வா நெஞ்சே கார்க்கடல் நீர் வேலை பொழில் அளந்த புள்ளூர்த்திச் செல்வன் எழில் அளந்த
அம கண்ணற்கு அரியானை எப்பொருட்கும் சேயானை நண்ணற்கு அரியானை நாம் -7
நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அம் கையால் தொழுதும் நன்னெஞ்சே வா மருவி மண்ணுலகம்
உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய் கண்ணனையே காண்க நம் கண் –8
வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும் கடியார் மலர் தூவிக் காணும் படியானை செம்மையால் உள்ளுருகிச்
செவ்வனே நெஞ்சமே மெய்ம்மையே காண விரும்பு -22
வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும் நெருங்கு தீருருவமானான் பொருந்தும் சுடராழி ஒன்றுடையான்
சூழ் கழலே நாளும் தொடராழி நெஞ்சே தொழுது -24
தொழுதால் பழுதுண்டே தூநீருலகம் முழுதுண்டு மொய் குழலாள் ஆய்ச்சி இழுதுண்ட வாயானை மால் விடை யேழ்
செற்றானை வானவர்க்கும் சேயானை நெஞ்சே சிறந்து -25-
அன்று இவ்வுலகம் அளந்த வசைவே கொல் நின்றிருந்து வேளுக்கை நீள் நகர் வாய் அன்று கிடந்தானைக் கேடில்
சீரானை முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண் –34
உளன்கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான் மண் ஒடுங்கத்தான் அளந்த மன் –40-
உலகமும் ஊழியும் ஆழியும் ஒண் கேழ் அலர் கதிரும் செந்தீயுமாவான் பல கதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான்
அடி இணைக்கே பூரித்து என் நெஞ்சே புரி –44
நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள் ஒன்றிய வீரைஞ்நூறுடன் துணிய வென்றிலங்கும் ஆர்படுவான்
நேமி யரவணையான் சேவடிக்கே நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு –80
நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்று என் நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் நெஞ்சத்துப் பேராது
நிற்கும் பெருமானை என் கொலோ ஓராது நிற்பது உணர்வு –81-
நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால் அனைத்துலகும் உள் ஒ டுக்கியால் மேல் கனைத்துலவு வெள்ளத்தோர்
பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை உள்ளத்தே வை நெஞ்சே உய்த்து –93
புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய் இகழ்ந்த விரணியனதாகம் சுகிர்ந்து எங்கும் சிந்தப் பிளந்த திருமால்
திருவடியே வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து –95-

—————–

நான்முகன் திருவந்தாதி –

இல்லை துணை மற்று என்நெஞ்சே ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேரா குலை கொண்ட
ஈரைந்தலையான் இலங்கையை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை –8
மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும் பேறாகக் கொள்வனோ பேதைகாள் நீறாடி தான் காண மாட்டாத
தாரகலச் சேவடியை யான் காண வல்லேற்கிது-27-
ஒருங்கிருந்த நல்வினையும் தீ வினையுமாவான் பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் மருங்கிருந்த வானவர்
தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சமானவர் தாம் அல்லாததேன் –57
என்நெஞ்சமேயான் இருள் நீக்கி எம்பிரான் மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான் என்நெஞ்சமேயானை
இல்லா விடையேற்றான் வெவ்வினை தீர்த்து ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு –58
உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் தன்னொப்பான்
தானாய் உளன் காண் தமியேற்கும் என்னொப்பார்க்கு ஈசன் இமை –86-

——————

திரு விருத்தம் –

அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே -3-
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம்மேல் ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ் பவருளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு மருங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே –45-
மட நெஞ்சம் என்றும் தமதென்றும் ஓர் கருமம் கருதி விட நெஞ்சை யுற்றார் விடவோ அமையும் அப்பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக்கீழ் விடப் போய்த் திட நெஞ்சமாய் எம்மை நீத்தின்று தாறும் திரிகின்றதே –46

———————-

பெரிய திருவந்தாதி –

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே -இயற்றுவாய் எம்மோடு நீ கூடி நயப்புடைய நாவீன் தொடைக் கிளவியுள்
பொதிவோம் நற்பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ் –1
இரு நால்வர் ஈரைந்தின் மேலொருவர் எட்டோடு ஒரு நால்வர் ஓரிருவர் அல்லால் திருமாற்கு
யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே நாமா மிகவுடையோம் நாழ் -10-
நீ யன்றே யாழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய் போயொன்று சொல்லி என் போ நெஞ்சே நீ என்றும்
காழ்த்துபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு –12
சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே பேயார் முலை கொடுத்தார் பேயராய் நீ யார் போய்த்
தேம பூண் சுவைத்து ஊனறிந்து அறிந்தும் தீ வினையாம் பாம்பார் வாய்க்கை நீட்டல் பார்த்தி –14
பார்த்தோர் எதிரிதா நெஞ்சே படு துயரம் பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை ஆர்த்து ஓதம்
தம்மேனி தாள் தடவத்தாம் கிடந்து தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார் சீர் –15-
சொல்லிற் குறையில்லை சூதறியா நெஞ்சமே எல்லிப் பகல் என்னாது எப்போதும் தொல்லைக் கண்
மாத்தானைக் கெல்லாம் ஒரைவரையே மாறாக காத்தானைக் காண்டும் நீ காண் -19-
ஆமாறறிவ்வுடைய ராவது அரிதன்றே நாமே யது வுடையோம் நன்னெஞ்சே பூ மேய
மதுகரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம் அது கரமே யன்பாலமை –37-
அமைக்கும் பொழுதுண்டே ஆராயில் நெஞ்சே இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத் திறங்கள்
ஏசியே யாயினும் ஈன துழாய் மாயனையே பேசியே போக்காய் பிழை –38-
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய் தழைக்கும் துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒரு கால்
போயுபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –39-
வாய்ப்போ இது வொப்ப மற்று இல்லை நெஞ்சே போய்ப்போ ஒய் வெந்நரகில் தீப்பால
பேய்த்தாய் உயிர் காலாய்ப் பாலுண்டு அவளுயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி-40-
வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே தழீ இக் கொண்டு போரவுணன் தன்னை கழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால் வெள்ளம் தானுகள வாழ வடங்க மார்விடந்த மால் -57
பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய் ஈன துழாய் மாயனையே என்னெஞ்சே பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இல்லை காண் மற்றோர் இறை –60-
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை மாட்டே துயர் இழைத்த மாயவனை ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது –65
அதுவோ நன்று என்று அங்கமருலகோ வேண்டில் அதுவோ பொருளில்லை யன்றே அது ஒழிந்து
மண்ணின்று ஆள்வேன் எனிலும் கூடும் மட நெஞ்சே கண்ணன் தாள் வாழ்த்துவதே கல் –67-
என்றும் ஒரு நாள் ஒழியாமை யானிரந்தால் ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே புடை தான் பெரிதே புவி –74
துணை நாள் பெரும் கிளையும் தொல்குலமும் சுற்றத் திணை நாளும் இன் புடைத்தா மேலும் கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல நெஞ்சே ஓவாத வஊணாக வுண் –76-
அயர்ப்பாய் அயர்ப்பாய் நெஞ்சமே சொன்னேன் உயப்போம் நெறியிதுவே கண்டாய் செயற்பால
வல்லவே செய்கிறுதி நெஞ்சமே அஞ்சினேன் மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து –83-
வாழ்த்தி யவனடியைப் பூப் புனைந்து நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பென்றால் கூப்பாத பாழ்த்த விதி
எங்குற்றாய் என்றவனை ஏத்தாது என்னெஞ்சமே தங்கத்தானா மேலும் தங்கு –84-
இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என்னெஞ்சே எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் –87-

———

சிறிய திருமடல் –

வாராய் மட நெஞ்சே வந்து மணி வண்ணன் சீரார் திருத் துழாய் மாலை நமக்கு அருளி தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்றதனை -58

——————–

திருவாய் மொழி –

உயர்வற வுயர் நலம் உடையவன் யவனவன் மயர்வற மதி நலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரரகளதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேர் இடை மார்வனை எம்பிரானைத் தோலாய் மட நெஞ்சமே -1-10-3-
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனை துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் -1-10-4-
கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர் எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழும் ஓர் மூவடி கொண்டானை கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-
நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே -1-10-6-
முடியானே மூவுலகும் தொழுது ஏத்தும் சீரடியானே ஆழ கடலைக் கடைந்தாய் புள்ளூர்
கொடியானே கொண்டல் வண்ணா அண்டத்து உம்பரில் நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சமே –3-8-1-
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை கோவை வீயச் சிலை குனித்தாய் குல நல யானை மருப்பு ஒசித்தாய்
பூவை வீயா நீர் தூவிப்போதால் வணங்கே னேலும் நின் பூவை வீயா மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே -4-3-1-
பூசும் சாந்து என்னஞ்சமே புனையும் கன்னி எனதுடைய வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அக்தே
தேசமான அணி கலனும் என் கை கூப்பிச் செய்கையே ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே –4-3-2-
ஆவி காப்பார் இனியார் ஆழ் கடல் மண் வின் மூடி மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால் பாவியேன் நெஞ்சமே நீயும் பாங்கல்லையே -4-4-2-
நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே நீளிரவும் ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால் மாயும் வகை யறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே –4-4-3-
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தருமா மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன் மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே –10-6-1-
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலப் பிறப்பு அறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானை
பாட்டாய பல பாடிப் பல வினைகள் பற்றறுத்து நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினமே –10-6-2-
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே எண்ணின வாறாகா இக்கருமங்கள் என்னெஞ்சே –10-6-3-
என்நெஞ்சத்துள் இருந்து இங்கு இரும் தமிழ் நூலிவை மொழிந்து வன்னெஞ்சத்து இரணியனை மார்விடந்த வாட்டாற்றான்
மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்கப் படை தொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே -10-6-4-
வானேற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே நான் ஏறப் பெறுகின்றன் நரகத்தை நகு நெஞ்சே
தேனேறு மலர்த்துவளம் திகழ் பாதன் செழும் பறவை தானேறித் திரிவான தாளிணை என் தலை மேலே –10-6-5-

————————–

இராமானுச நூற்றந்தாதி –

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே –1-
பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னை பேய்ப்பிறவிப் பூரியரோடு உள்ள சுற்றம் புலத்தி பொருவரும் சீர்
ஆரியன் செம்மை இராமானுச முனிக்கு அன்பு செய்யும் சீரிய பேறுடையார் அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே –3
பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே -மற்றுளார் தரமோ
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறில் பெரும் புகழே தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே –39
அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாகமன்னும் பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கிய தென்னத் தளைத்து நெஞ்சே நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசணன் அடிப்பூ மன்னவே –108-

————-

உபதேச ரத்ன மாலை –

கற்றோர்கள் தாமுகப்பர் கல்வி தன்னில் ஆசை யுள்ளோர் பெற்றோம் என உகந்து பின்பு கற்பார் மற்றோர்கள்
மாச்சரியத்தால் இகழில் வந்ததென் நெஞ்சே இகழ்கை ஆச்சரியமோ தானவர்க்கு -2-
பேதை நெஞ்சே இன்றைப் பெருமை யறிந்திலையோ எது பெருமை இன்றைக்கு என் என்னில் ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த கார்த்திகையில் கார்த்திகை நாள் காண் –8
மாறன் பனித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன் ஆரங்கம் கூற அவதரித்த வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் என்று என்று காதலிப்பார் வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து -9
மா நிலத்தில் முன் நம் பெரியாழ்வார் வந்துதித்த ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் ஞானியர்க்கு
ஒப்போர் இல்லை இவ்வுலகு தனில் என்று நெஞ்சே எப்போதும் சிந்தித்திரு -17
உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான் உண்டோ பெரியாழ்வார்க்கு ஒப்பொருவர் தண் தமிழ் நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய் கலையில் பைதல் நெஞ்சே நீ வுணர்ந்து பார் –20-
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்ப்
பழுத்தாளை யாண்டாளைப் பத்தி யுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து –24
ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த சீராரும் சித்திரையில் சித்திரை நாள் பாருலகில்
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துத்தித்த நாள்களிலும் உற்றது எமக்கு என்று நெஞ்சே ஓர் –25
எந்தை எதிராசார் இவ்வுலகில் எம் தமக்கா வந்துதித்த நாள் என்னும் வாசியினால் இந்தத்
திருவாதிரை தன்னின் சீர்மைதனை நெஞ்சே ஒருவாமல் எப்பொழுதும் ஓர் -29-
எந்தை எதிராசர் இவ்வுலகில் எம் தமக்கா வந்துத்தித்த நாள் என்னும் வாசியினால் இந்தத்
திருவாதிரை தன்னின் சீர்மைதனை நெஞ்சே ஒருவாமல் எப்பொழுதும் ஓர் -29-
ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும் தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ அவர் பால் சென்று அணுகக் கூசித் திரி –35
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை யறிவாரார் அருளிச் செயலை யறிவாரார் அருள் பெற்ற
நாதமுனி முதலா நம் தேசிகரை யல்லால் பேதை மனமே யுண்டோ பேசு –36-
பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை தெள்ளார் வடக்குத் திருவீதிப் பிள்ளை
மணவாள யோகி திரு வாய் மொழியைக் காத்த குணவாளர் என்று நெஞ்சே கூறு –39
முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும் அந்த வியாக்கியைகள் அன்றாகில் அந்தோ
திருவாய் மொழிப் பொருளைத் தேர்ந்து உரைக்க வல்ல குரு ஆர் இக்காலம் நெஞ்சே கூறு –40
நம் பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர் அவரவர் தம் ஏற்றத்தால் அன்புடையோர்
சாத்து திரு நாமங்கள் தான் என்று நன்னெஞ்சே ஏத்ததனைச் சொல்லி நீ இன்று –50-
பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில் அன்பதுவும் அற்று மிக்க வாசையினால் நம்பிள்ளைக்கு
ஆன வடிமைகள் செய்யந நிலையை நன்னெஞ்சே ஊனமற வெப்பொழுதும் ஓர் –66
ஆசாரியர்கள் அனைவரும் முன்னாசரித்த ஆசாரம் தன்னை யறியாதார் பேசுகின்ற
வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள் சீர்த்த நிலை தன்னை நெஞ்சே சேர் –67
நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேராத்திகரும் ஆத்திக நாத்திகருமாம் இவரை ஓர்த்து நெஞ்சே
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடுச் சொன்னவரை நாளும் தொடர் –68-

———————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading