சிறியன் என்று என்னிளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலிடைச் சென்று கேள்
தரணி தலைமுழுதும் தாரகையின் உலகும் தடவியதன் புறமும் விம்ம வளர்ந்தவனே
மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் தக்கதிதன்று என்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்ச வச்சோ
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியானே அச்ச வச்சோ
மன்னன் தன தேவிமார் கண்டு மகிழ்வெய்த முன்னிவ்வுலகினை முற்றும் அளந்தவன்
வருக வருக வருக விங்கே வாமன நம்பீ வருக விங்கே கரிய குழல் செய்யவே முகத்துக் காகுத்த நம்பீ வருக விங்கே
மாவலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று மூவடி தா வென்று இரந்த விம் மண்ணினை ஓரடியிட்டு
இரண்டாமடி தன்னிலே தாவடியிட்டானால் இன்று முற்றம் தரணி யளந்தானால் இன்று முற்றும்
மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்க நன்குடைய வெம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான்
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-10-
குறள் பிரமசாரியாய் மாவலியை குறும்பதக்கி அரசு வாங்கி
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த வெம்மான் கோயில்
எறிப்புடைய மணி வரைமேல் இள நாயிறு எழுந்தால் போல் அரவணையின் வாய்ச்
சிறப்புடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே -4 9-7 –
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
———————————–
தேசமுன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
கோவிந்தா முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய்
கொண்ட கோலக் குறளுருவாய்ச் சென்று பண்டு மாவலி தன பெரு வேள்வியில் அண்டமும் நிலனும் அடி ஒன்றினால் கொண்டவன் வரில் கூடிடு கூடலே
குயிலே உலகளந்தான் வரக் கூவாய்
அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியு முறைமை யறியேன்
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை
பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று எல்லா வுலகும் அளந்து கொண்ட எம்பெருமான்
ஊட்டக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று யறக் கூவும்
————————————————
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி -2-3-
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய் மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே
படைத்த பாரிடந்து பாரளந்து அதுண்டுமிழ்ந்து பௌவநீர் படைத்தடைத்து அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மண்ணளந்து கொண்ட காலனே
மண்ணளந்த பாத
அன்று பாரளந்த பாதபோதை ஒன்றி வானின் மேல் சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே
மண்ணையுண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து
——————————-
தாவி யன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய் சேவியேன் உன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே
—————————————-
உவந்த வுள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிவந்த நீண் முடியன்
———————-
இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-
தொண்டையார் தாம் பரவும் அடியினானைப் படி கடந்த தாளற்கு ஆளாய் உய்தல் விண்டானை –
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த
அந்தணர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-2-
இலகிய நீள் முடி மாவலி தன பெரு வேள்வியில் மாணுருவாய் முன்நாள் சலமொடு நிலம் கொண்டவனுக்கு
இடம் தான் –பரமேச்சுவர விண்ணகரமதுவே
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து –திருவயிந்திரபுரமே
மூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே–3-1-10-
மூவராகிய ஒருவனை மூவுலகுண்டு உமிழ்ந்து அளந்தானை
அரு மா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்க–
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருக வெனா மாவலியைச்
சிறையில் வைத்த தாடாளன் தாளணைவீர்
ஒ மண் அளந்த தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த தோளாளா ஏன் தனக்கு ஓர் துணை யாளன் ஆகாயே
கண்டவர் தம் மனம் மகிழ மா வலி தான வேள்விக் களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு அண்டமும் இவ்வலை கடலும்
அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் –நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே
அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்துறை கோயில் — வண் புருடோத்தமமே
வசையறு குறளாய் மாவலி வேள்வி மண்ணளந்து விட்டவன் தன்னை அசைவறும் அமரர் அடியினை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை
—-நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே —-கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறளுருவாய்ப் பொருந்தா வாணன் மங்கலம் சேர் மறை வேள்வி
யதனுள்புக்கு மண்ணகலம் குறையிரந்த மைந்தன் கண்டீர் –நாங்கூர்த் திருத் தெற்றி யம்பலத்து என் செங்கண் மாலே
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
ஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6-
தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நா வள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1-
மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே –4-6-2-
பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்து மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும் ஆசை என்னும்
கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும் ஏதுகின் றது இதுவே காணும் இந்தளூரிரே-
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்து மா வலி வேள்வியில் புக்கு தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற
வளர்ந்தவன் கோயில் –திரு வெள்ளி யங்குடி யதுவே
அறிவதரியான் அனைத்துலகுடையான் என்னையாளுடையான் குறிய மாணியுருவாய் கூத்தன் மன்னி யமரும் இடம் புள்ளம் பூதம் குடி தானே
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம் புள்ளம் பூதம் குடி தானே
கூற்றேருவின் குறளாய் நிலம் நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் –கூடலூரே
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும் பாங்கினால் கொண்ட பரம
பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே —
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொட அகலிடம் அளந்தவனே–6-1-1-
அன்றுள மூன்றினையும் அளந்து வேறோர் அரியுருவாய் இரணியனதாகம் கீண்டு வென்றவனை விண்ணுலகில் செல வுய்த்தாற்கு விருந்தாவீர்
இரந்தான் மாவலி மண்–6-7-3-
மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே
யுலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-1-
யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-
மிக்க தாடாளன் இடந்தான் வையம் கேளளாகி உலகை ஈரடியால் நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே
நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பரிதால் ஆண்டே என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை பூண்டேன் –நறையூர் நின்ற நம்பீயோ
வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மானுருவாய் மூவடி மாவலியை வேண்டி தானமர ஏழுலகும் அளந்த வென்றித் தனி
முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்
.தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ அண்டமொடு அகலிடம் அளந்தவர் அமர் செய்து
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழ கண்டவர் கணபுரம் அடிகள் தம் இடமே
படிபுல்கும் அடியிணை பலர் தொழ மலர் வைகு கோடி புல்கு தடவரை யக்லமதுடையவர்
தொழு நீர் வடிவின் குறளுருவாய் வந்து தோன்றி மாவலிபால்
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை –கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10
மாணாகி வையம் அளந்ததுவும் –ஈண்டு நினைத்து இருந்தேன் –
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரோடும் கொண்டு பின்னும் ஏழுலகும் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட
நிமிர்ந்தோன் –திருக் கண்ணங்குடியுள் நின்றானே
முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்
நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே
அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த எம் அடிகள் தம் கோயில் –மாலிரும் சோலை வணங்குதும் வா மட நெஞ்சே
தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன் –திருமால் இரும் சோலை நின்ற வானவர் கோன்
நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம் செல வைத்த பிரான்
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உற்றார் ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும் எய்தாது மண்
என்று இமையோர் தொழுது இறைஞ்சி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் ஏன் கண்ணனையே
வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கு ஓர் குறளாகி மெய்ம்மை உணர செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து
பெறினும் மந்தரமீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதமது நம்மை யாளும் அரசே
கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய் வண் தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண் தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும் விண்டேழுலகுக்கும் மிக்கான் காண் சாழலே
கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டளந்தான் வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பாரேல் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஆனலும் கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே
உலகளந்த உம்பர் கோமான்
பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே —-11-6-5-
நீள் வான் குறளுருவாய் நின்று இரந்து மாவலி மண் தாளால் அளவிட்ட தக்கணைக்கும் மிக்கானை
தோளாத மணியைத் தொண்டர்க்கு இனியானை கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே
———————————————————————————–
மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தட வரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-
—
ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து அண்டமீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர வோடித் தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடி9எ வணங்கினேனே
மிக்க பாராளன் பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரையாண்ட பேராளன்
தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச்
சென்றுலகம் மூன்றினையும் திரிந்தோர்
———————————-
பாரளவும் ஓரடிவைத்து ஓரடியும் பாருடுத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே சூருருவின் பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன் நீ யளவு கண்ட நெறி
பொரு கோட்டோர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே விரி தோட்ட சேவடியை நீட்டித் திசை
நடுங்க விண் துளங்க மாவடிவில் நீ யளந்த மண்
உலகளந்த மூர்த்தி உருவே முதல்
அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல முடியும் விசும்பு அளந்தது என்பர் –உலகளந்த நான்று
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால் நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று-20–
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும் படை யாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம் அடையாழி நெஞ்சே அறி
முரணை வலி தொலைதற்காம் என்றே முன்னம்
தரணி தனதாகத் தானே இரணியனைப்
புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் நீ
மண்ணிரந்து கொண்ட வகை
அரிய புலன் ஐந்தடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது ——50-
கணம் வெருவ ஏழுலகும் தாயினவும் எண் திசையும் போயினவும் சூழரவப் பொங்கணையான் தோள்
மண் தா வென விரந்து மாவலியை ஒண் தாமரை நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில் அங்கை தோய வடுத்து
பிரான் உன் பெருமை பிரறார் அறிவார் உராய் உலகளந்த ஞான்று வராகத் தெயிற்று அளவு போதாவாறு என்கொலோ எந்தை அடிக்களவு போந்தபடி
செற்று எழுந்து தீ விளித்துச் சென்ற விந்த வேழுலகும் மற்றிவை ஆ வென்று வாயங்காந்து முற்றும் மறையவர்க்கு
காட்டிய மாயவனை யல்லால் இறையேனும் ஏத்தாது என் நா
பொன் திகழு மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்று உலகந்தாய நெடுமாலும் என்றும் இரு வரங்கத்தால் திரிவரேலும் ஒருவன் ஒருவனங்கத்து என்றும் உளன்
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியின் தாயவனைக் கேசவனைத்
தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை
——————————————————————————————
அடி மூன்று இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும் அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படி நின்ற நீரோத மேனி நெடுமாலே நின்னடியை யாரோத வல்லார் அறிந்து
அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி நின்று முலை தந்த இந்நீர்மைக்கு அன்று வரன் முறையால் நீ யளந்த மா கடல் சூழ் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து காத்தனை பல்லுயிரும் காவலனே ஏத்திய நா வுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால் கா அடியேன் பட்ட கடை
கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது உண்டதுவும்
தான் கடந்த வேழுலகே தாமரைக் கண் மால் ஒரு நாள் வான் கடந்தான் செய்த வழக்கு
ஞாலம் அளந்து அடிக்கீழ் கொண்டவவன்
நீ யன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் புகையால் நறு மலரால் முன்னே மிகவாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு என்பாக்கியத்தால் இனி
மண் கொண்டு மண்ணுண்டு மண் உமிழ்ந்தாய் மாயன் என்று எண் கொண்டு என்னெஞ்சே இரு
ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து
நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று கரு மானியை இரந்த கள்வனே
உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு
இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்த தாழி விடங்காலும் தீவாய் அரவணை மேல் தோன்றல்
திசை யளப்பான் பூவாரடி நிமித்த போது
தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி நிவந்து அளப்ப நீட்டிய பொற்பாதம் சிவந்த தன கை யனைத்தும் ஆரக் கழுவினான்
கங்கை நீர் பெய்தனைத்துப் பேர் மொழிந்து பின்
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச் சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று கருக் கோட்டியுள் கிடந்து கை
தொழுதேன் கண்டேன் திருக் கோட்டிஎந்தை திறம்
பாணியால் நீரேற்றுப் பண்டு ஒரு கால் மாவலியை மாணியாய்க் கொண்டிலையே மண்
பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர் முன்னால் வணங்க முயன்மினோ பல்நூல் அளந்தானைக் கார்க்கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன் சேவடி
கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான் வளர்ந்தது உண்டது உலகு ஏழும் உள்ளொடுங்க கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி
என்நெஞ்சம் இடமாகிக் கொண்ட இறை
இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் முறை நின்று மொய்ம்மலர்கள் தூவ அறை கழல சேவடியான் செங்கண் நெடியான்
குறள் உருவாய் மாவடிவில் மண் கொண்டான் மால்
———————————————————————————————–
மருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங்கண் மால் அங்கே நீர் ஏற்றும் மூவடியால் அன்று உலகம் தாயோன் அடி
அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் படி வண்ணம் பாற்கடல் நீர் வண்ணம் முடி வண்ணம் ஓராழி
வெய்யோன் ஒளியும் அக்தன்றே ஆராழி கொண்டாற்கு அழகு
அழகன்றே யாழியார்க்கு ஆழி நீர் வண்ணம் அழகன்றே யண்டம் கடத்தல் அழகன்றே அங்கை நீர் ஏற்றாற்கு
அலர் மேலோன் கால் கழுவ கங்கை நீர் கான்ற கழல்
கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும் மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில் கரு மா முகில் வண்ணன்
கார்க்கடல் நீர் வண்ணன் திருமா மணி வண்ணன் தேசு
படிவட்டத் தாமரை பண்டுலகம் நீர் ஏற்று அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடிவட்டம் ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே மாகாயமாய் நின்ற மாற்கு
வாய் மொழிந்து மா வாலிபால் மூவடி மண் நீ யளந்த கொண்ட நெடுமாலே தாவிய நின் எஞ்சா விணை யடிக்கே
யேழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க அருள்
முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே என்னே திருமாலே
செங்கண் நெடியானே எங்கள் பெருமானே நீ இதனைப் பேசு
விரும்பி விண் மண் அளந்த அஞ்சிறை வண்டார் சுரும்புதொளையில் சென்றூத அரும்பும் புனம் துழாய் மாலையான்
பொன்னம் கழற்கே மனம் துழாய் மாலாய் வரும்
அன்று இவ்வுலகம் அளந்த வசைவே கொல் நின்று இருந்து வேளுக்கை நீள் நகர் வாய் அன்று கிடந்தானைக் கேடில் சீரானை
முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்
கைய கனலாழி கார்க்கடல் வாய் வெண் சங்கம் வெய்ய கதை சார்ங்கம் செஞ்சுடர் வாள் செய்ய படை பரவை பாழி பனி நீருலகம் அடியளந்த மாயரவர்க்கு
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்ன உடையாகக் கொண்டு
அன்று உலகு அளந்தான் குன்றம் குடையா ஆ காத்த கோ
நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா
நீ யன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய்
சென்று குறள் உருவாய்
இனியவன் மாயன் என வுரைப்பரேலும் இனியவன் காண்பரியனேலும்இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்தான்
பைங்கழலான் உள்ளத்தின் உள்ளே உளன்
சிலம்பும் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணாறு அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள் எண் திசையும்
சூழ இடம் போதாது என் கொலோ வன் துழாய் மால் அளந்த மண்
நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால் அனைத்துலகும் உள் ஒடுக்கியால் மேல் கனைத்துலவு வெள்ளத்தோர்
பிள்ளையாய் மெல்லத் துயின்றானை உள்ளத்தே வை நெஞ்சே உய்த்து
—————————————————————————–
பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் மலர் ஏற விட்டு இறைஞ்சி வாழ்த்த
ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன் -ஞாலம் அளந்தானை
ஆழிக் கிடந்தானை ஆல்மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு
தாளால் உலகம் அளந்த அசைவே கொல் வாளா கிடந்தது அருளும் வாய் திறவான் நீளோதம் வந்தலைக்கும்
மா மயிலை மா வல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத்தணை
——————————————————————————————————————————————–
உலகளந்த மால் பால் துழாய்க்கு மனமுடையார்க்கு
கமலத் தடம் போல் பொலிந்தன -மண்ணும் விண்ணும் என் காலக்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்துவான் நிமிர்ந்த
தன கால் பணிந்த என்பால் எம்பிரான் தடம் கண்களே
இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகு அளந்த திருத் தாளினை நிலத்தேவர் வணங்குவர்
பொரு கடல் சூழ் நிலம் தாவிய எம்பெருமான்
புவனி எல்லாம் பீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே
பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்த வஞ்சித்து ஒரரசே அருளாய்
ஆணிப் பொன்னன்ன சுடுர் படு மாலை -உலகு அளந்த மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரி இல்லா ஆணிப் பொன்னே அடியேனாவி அடைக்கலமே
அன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப் பெய்வனே
மாவலி மாட்டு இரும் குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே
——————————————-
தாமரையுந்தித் தனிப் பெரு நாயக மூவுலகளந்த சேவடியோயே -உலகு படைத்ததுண்ட வெந்தை –
மா முதலடி போதொன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒன சுடர் அடிப் போது ஓன்று விண் செலீஇ
நான்முகப்புத்த் தேழ் நாடு வியந்து உவப்ப வானவர் முறைமுறை வழி பட நெறிஇ
படைத்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் நிற்ப
——————————–
பருகலாம் பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் காண்பரிய நுண்புடையீர்
மாணி யுருவாகிக் கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்
அடியால் படி கடந்த முத்தோ அதன்றேல் முடியால் விசும்பு அளந்த முத்தோ நெடியாய் செறி கழல்கள் தாள் நிமிர்த்துச் சென்று
உலகம் எல்லாம் அறிகிலமால் நீ யளந்த வன்று
நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும் ஒன்றும் ஓவா ஆற்றான் என் நெஞ்சு அகலான்
பாரிடந்தான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான் பாரிடம் முன் படைத்தான் என்பரால்
மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் –காண்பான் நம் கண்ணவா மற்று ஓன்று கண்ணுறா சீர் பரவாது உண்ண வாய் தான் உறுமோ வொன்று
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வினிதால் எல்லே ஒருவாறு ஒருவன் புகாவாறு — அன்று உலகம் தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி
இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள் மறை முறையால் வானாடர் கூடி முறைமுறையின் தாதிலகு பூத் தெளித்தால்
ஒவ்வாதே தாழ் விசும்பின் மீதிலகித்தான் கிடக்கும் மீன்
மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய் வான் என்னும் கேடிலா வான் குடைக்கு தானோர் மணிக்காம்பு போல் நிமிர்ந்து
மண்ணளந்தான் நங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்
எல்லாம் ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண்ணளந்த பாதமே ஏத்தாப் பகல்
—————————————-
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப்பொரு மாணாகி ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை
—————————————-
ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது தான்
பேர் வாமனாகிய காலத்து மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகெல்லாம் நின்றளந்தான் மாவலியை ஆராத போரில்
———————————
நில மங்கை தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல் மன்னிய சேவடியை வானியங்கு தாரகை மீன் என்னும் மலர்ப்பிணை யலேய்ந்த
மின்னி ஏறி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால் பொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
தன்னுருவம் ஆரும் அறியாமல் தானங்கு ஓர் மன்னும் குறள் உருவின் மாணியாய் மாவலி தன பொன்னியலும்
வேள்விக்கண் புக்கிருந்து போர் வேந்தர் மன்னை –மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி என்னுடைய பாதத்தால் யான் அளப்ப
மூவடி மண் மன்னா தருக வென்று வாய் திறப்ப மற்றவனும் என்னால் தரப் பட்டது என்றலுமே அத்துணைக் கண் மின்னார் மணி முடி
போய் விண் தடவ மேலேடுத்த பொன்னார் கனை கழல் கால் ஏழுலகும் போய்க் கடந்து அங்கு ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னு இவ்வகலிடத்தை மாவலியை வஞ்சித்து தன்னுலகம் ஆக்குவித்த தாளானை -தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை –
————————————————–
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி மதி எலாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் தான் ஒருவனே
கலந்து என்னாவி நலம் கொள் நாதன் புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே
நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான் ஓதம் போல் கிளர் வேத நீரனே
பொரு மா நீள் படை ஆழி சங்கத்தோடு திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கரு மாணிக்கம் என் கண்ணுளதாகுமே
கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர் எண் தானும் இன்றியே வந்தியலுமாறு உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானை கண்டு கொண்டனை நீயுமே
மண்ணளந்த மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே
ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து மேல் தன்னை மீதிட நிமிர்ந்து
மண் கொண்ட மால் தனில் மிக்கும் ஓர் தேவும் உளதே
வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி வைக்கும் வைகல் தோறும் அமுதாய வானேறே
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தியவையே சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான்
பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே
கிடந்தது இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப்புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும் தடம் பெரும் தோள் ஆரத் தழுவும்
பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே
முறையால் இவ்வுலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
வன்மா வையம் அளந்த எம் வாமனா
உலகம் எல்லாம் தாவிய வம்மானை எங்கன் இனித் தலைப் பெய்வனே
அன்று ஞாலம் அளந்த பிரான்
தாள் பரப்பி மண் தாவிய வீசனை
ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே
கொல்வான் நான் மாவலி மூவடி தா வென்ற கள்வனே –உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே விரை கொள்
பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேநேலும் உன் உரை கொள் சோதித் திரு உருவம் என்னதாவி மேலதே
என் வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்று என்று நள்ளிரவும் நன்பகலும் நானிருந்து ஓலமிட்டால்
கள்ள மாயா உன்னை என் கண் காண வந்தீயாயே
தாவி வையம் கொண்ட வெந்தாய் தாமோதரா என்று என்று கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண் பனி சோர நின்றால்
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே
குறிய மாணுருவாகிக் கொடும் கோளால் நிலம் கொண்ட கிரி யம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவிலமே
உறுவதாவது –திருக் குருகூர் அதனுள் குறிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே –
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புககவாரும் –உள்ளமுள் குடைந்து என்னுயிரை யுருக்கி யுண்ணுமே
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள் எண்ணும் தோறும் என்நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே
அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியுமாறு அவை கேட்கும் தோறும் என்நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உருகும் கொடிய வல் வினையேன் உன்னை என்று கொல் கூடுவதே
தன் சரண் நிழல் கீழ் உலகம் வைத்தும் –திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை யாளுடை என்னப்பனே
காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்தே தாளிணையன்
அகல் கொள் வையம் அளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே பகல் இராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப்பரிப்பே
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே
திசை ஞாலம் தாவி யளந்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு நீலக் கருநிற மேக நியாயற்கு கோலச் செந்தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர் ஏலக் குழலி இழந்தது சங்கே
நிறம் கரியானுக்கு நீடுலகுண்ட திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வர்க்கு கறங்கிய சக்கரக் கையவனுக்கு என் பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே
மாடுடை வையம் அளந்த மணாளற்கு –என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே
மாண்பமை கோலத்து எம்மாயக் குறளற்கு சேண் சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என் பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலம் காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய வம்மானே
நண்ணி யுனை நான் கண்டு உகந்து கூத்தாட நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப் பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ
பாயோரடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம் தாய் ஓரடியால் எல்லா வுலகும் தடவந்த மாயோன்
உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும் தீயோடுடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ
எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனயினமாய்
மெய்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே மெய்நான் எய்தி எந்நாள் உன்னடிக்கண் அடியேன் மேவுவதே
ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே
பாமரு மூவுலகு அளந்த பற்ப பாதாவோ –உன்னை என்று கொல் சேர்வதுவே
ஆகும் கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியால் ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறள் அப்பன் அமர்ந்து உறையும்
–திருவாறன் விளை –வலம் செய்து கை தொழக் கூடும் கொலோ
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா
ஆருயிரேயோ அகலிடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த பேர் உயிரேயோ –உன்னை நான் எங்கு வந்து உறுகோ
மான் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு
என் நிறைவினோடு நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்றே என்னை உன்னேரார் கோலத் திருவடிக் கீழ் நின்றே யாட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழுவேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே
பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப் பேருருவமாய் நிமிர்ந்த குறிய மாண எம்மான்
குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான் —திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு அறிய மெய்ம்மையே நின்ற
எம்பெருமான் அடியிணை அல்லாதோர் அரணே
வந்து தோன்றாய் யன்றேல் உன் வையம் தாய மலர் அடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன் மண் வின் முழுதும் அளந்த ஒண் தாமரை மன்னவர் தாம் தொழ
வானவர் தாம் வந்து நண்ணு திருக் கடித்தான நகரே
இருந்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று அருத்தித்து எனத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் கண்டு கொண்டே
குடிக் கிடந்தது ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் செய்து உன் பொன்னடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்கு அருளி நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்ந்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் கொடிக் கொள்
பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் அவனே யக்துண்டு உமிழ்ந்தான் அளந்தான்
கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் தேவாசுரம் செற்றவனே திருமாலே நாவாய் உறைகின்ற நாரண நம்பி ஆவா அடியான் இவன் என்று அருளாயே
அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் அண்டம் மூவுலகளந்தவன் அணி திரு மோகூர் –கோயிலை வலம் செய்து இங்காடுதும் கூத்தே
ஞாலத்தூடே நடந்து உழக்கி தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை நாங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே
——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வ ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply