திருப்பாவை -வையத்து வாழ்வீர்காள் — வியாக்யானம் .தொகுப்பு –

அவதாரிகை –
க்ருத்ய அக்ருத்ய விவேகம் பண்ணுகிறது –
இதர விஷயங்களில் விடப்படுமவை விடவும் அரிதாய் இருக்கும் —பற்றபடுமவை பற்றவும் அரிதாய் இருக்கும்-
அதுக்கடி -இவன் உடைய கர்ம அனுகுணமாக நன்றாயும் தீதாயும் தோற்றுகிற இத்தனை போக்கி-
ஸ்வத விஷயத்தைப் பற்றி வருவதொரு நன்மையையும் தீமையும் இல்லை
எங்கனே என்னில் –
ஒரு நாள் ஒருவன் ஒன்றை ஆதரித்து அவன் தானே பின்பு சில நாள் சென்றவாறே–அது தன்னையே உபேஷியா நின்றான்
முன்பு உபேஷித்தது தன்னையே பின்பு ஒரு நாளில் ஆதரிப்பதும் செய்யா நின்றான் ஆகையால் இவனுடைய கர்மம் அடியாக நன்றாயும் தீதாயும் தோற்றுகிற
இத்தனை போக்கி–விஷயத்தைப் பற்றவரில் என்றும் ஒரு படிப் பட்டு இருக்க வேணும்
அது இல்லாமையால் புறம்பு உள்ளவை விடவும் அரிது -பற்றவும் அரிது–விடுகிறவற்றுக்கும் பற்றுகிறவற்றுக்கும் வாசி தெரிவிக்க–அரிதாகையாலே-
இங்கன் இன்றிக்கே
அல்பமுமாய் அஸ்த்ரிரமுமாய் ஹேயமுமாய் இருக்கிற–விஷயங்களை விட்டு–சமஸ்த கல்யாண குணாத்மகனை பற்றுகையாலே
விடுகையும் பற்றுகையும் இரண்டும் எளிதாய் இருக்கும்

கீழில் பாட்டில்
பிராப்ய ஸ்வரூபத்தையும்–பிராபக ஸ்வரூபத்தையும்–அதிகாரி ஸ்வரூபத்தையும்–சொல்லிற்று
இதில்–அந்த அதிகாரிக்கு சம்பாவித ஸ்வபாவங்களை சொல்லுகிறது
இப்பாட்டில் பகவத் கைங்கர்யத்துக்கு ருசி உடையராய் அவனையே உபாயமாக பற்றி இருக்கிற இவ் அதிகாரிக்கு-சம்பாவித ஸ்வபாவ விசேஷங்களை அருளிச் செய்கிறார் –

——-
திருவாய்ப்பாடியிலே–வாழ்வை உடையவர்கள் என்று–சப்தார்தம் திரு உள்ளம் பற்றி–வையத்து வாழ்வீர்காள் -என்கிறார்
சர்வேஸ்வரன் திருவாய்ப்பாடியிலே கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து–தன்னை தாழ விட்டு பரிமாறுகிற காலத்தில் வாழப் பிறந்த பாக்யவதிகாள்-
இங்குத்தை வாழ்ச்சிக்கு பரமபதமும் சத்ருசம் அன்று–அங்கு மேன்மை காணலாம் இத்தனை போக்கி–நீர்மை கண்டு அனுபவிக்கலாம் படி இருப்பது இங்கே இறே
அங்கு போக்தாக்கள் அங்குசதராய் இருப்பார்கள் —இங்கு போக்யம் அங்குசிதமாய் இருக்கும் —
தயநீர் உண்டான இடத்தில் இ றே தயாதி குணங்கள் அனுபவிக்கலாவது –
அங்கு விஷயம் இல்லாமையாலே தயாதி குணங்கள் பிரகாசிக்கப் பெறாதே —அக்குறை தீருகைக்காக இ றே நித்ய சூரிகள் இங்கே வந்து
அனுபவிக்கிறது —அவதாரத்தில் நீர்மையில் அகப்பட்டாருக்கும் மற்றோர் இடம் பொறாத படியாய் இருக்கும்
பாவோ நான்யத்ர கச்சதி -என்றான் இ றே திருவடி –
அச்சுவை பெறினும் வேண்டேன் -என்றாரும் உண்டு இ றே–கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றார் இ றே
அதவா —மரு பூமியில் தண்ணீர் போலே–இருள் தருமா ஞாலமான சம்சாரத்திலே இருந்து வைத்து–கிருஷ்ண அனுபவம் பண்ணி வாழப் பிறந்தீர்கள் என்றுமாம்-

வையத்து வாழ்வீர்காள் –
இருள் தரும் மா ஞாலமான இவ் விபூதியிலே பிறந்து வைத்து பகவத் அனுபவம் பண்ணப் பெற்ற பாக்ய வதிகாள்-
பகவத் குணங்கள் ஸ்வ ஸ்வ விஷயத்திலே சேர்ந்து–விளங்கா நின்றுள்ள இவ் விபூதியிலே பிறந்து
பகவத் குணாநுபவம் பண்ணுகிற பாக்யவதிகள் என்கிறார்கள் ஆகவுமாம் –
இத்தால் விண்ணுளாரினும் சீரியர் -என்கிறது–விண்ணுளாருக்கும் இங்கே வந்து இ றே சீலாதி குணங்களை அனுபவிக்க வேண்டுவது –
இங்கு உள்ளாருக்கு ஸ்வரூப ஜ்ஞானம் உண்டானால்–யாவத் குண விசிஷ்டனை இங்கே அனுபவிக்கலாம் இ றே

வாழ்வீர்காள் –
அவ் வூர் தன்னிலே பிறந்து வைத்து பருவம் நிரம்பி இருக்கை–அன்றிக்கே–அவனுடைய கடாஷத்துக்கு இலக்காம்படி ஒத்த பருவமாய் இருக்கை –
கிருஷ்ண அவதாரத்துக்கு முன்னாதல் பின்னாதல் அன்றிக்கே–சம காலத்தில் பிறக்கப் பெறுவதுமாம் –
அது தன்னிலும் இவ் ஊரை ஒழிந்த இடத்தே அன்றியே இவ் ஊரிலேயே பிறக்கப் பெறுவதாம் –
அது தன்னிலும் அவனோடு ஒத்த பருவமாகப் பெறுவதாம்–இது ஒரு பாக்யாதிசயம் இருக்கும்படி என் –

கிருஷி பூமியிலே -பலம் அனுபவிக்கும் -இவர்கள்–கர்ம பூமியிலே அங்கே பலம் —வையத்திலும் வையத்திலே வாழ்வீர்காள்–வானுலகம் போய் சிறை இராதே
பெருமாள் காடேற போக அயோத்தியில் இருப்பது போலே–திருவாய்ப்பாடியில் இருக்க மதுரையில் இருப்பு போலே
மாம் வித்தி ஜனகாத்மஜா அயோத்யா வனம் வித்தி–ராமம் தசரதம் வித்தி கச்சதா–அழவே இல்லை –
சந்தோஷமாக போகிறான் —மனம் அறிந்து அர்த்தம் —காட்டை -நீர்மை குணாதிக்யத்தால் வஸ்துவுக்கு ஏற்றம்–
பெருமாள் போன பின்பு அயோத்யா காடானதே -என்ற அர்த்தம் –
தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்–தொல்லை இன்பம் -பரமபத இன்பம் -நித்யாஞ்சலிபுடா அங்கே–சீல குணத்தில் அகப்பட்டார் வேறு ஒன்றில் அகப்படார்

வையத்து வாழ்வீர்கள் -வாழ்ச்சி உள்ளது இங்கே இ றே–காக்கா ஓட்டுகிற மந்த்ரம் -காக்கை பின் போவதே ஹாவு ஹாவு ஹாவு

வாழ்வீர்காள் –
அவ் ஊரில் வர்த்தகம் என்றும் வாழ்ச்சி என்றும் இரண்டு இல்லை காண –
அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் வர்த்தகமே வாழ்ச்சியாய் இருக்கும் இ றே
வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் -என்னக் கடவது இ றே–இது கோயிலிலே வர்த்தகம் போலே காணும்-

சொல்லுகிற தங்களுக்கும் வாழ்ச்சி ஒத்து இருக்க–வாழ்வீர்காள் என்று பிறரைச் சொல்லுகிறது என் என்னில் –
தாங்கள் தனியே அனுபவிக்கும் அனுபவம் ரசானுபவமாய்–தோற்றாமையாலே–அத்தை ரசமாக்கித் தருமவர்களைக் கொண்டாடுகிறார்கள்-

நாமும் –
அத்தலையால் பேறு -புருஷார்த்தம்-என்று இருக்கிற நாமும் —அவனாலே பேறாகிலும் ருசி இருந்த இடத்திலே இருக்க ஒட்டாது இ றே –
இந்தப்பலம் ஒருநாள் வரையிலே கை வந்ததாக வற்றே -என்று இருக்கிற நாமும் -என்னவுமாம்

நாமும் -உம்மைத் தொகை -பேற்றுக்கு பிரவ்ருத்தி பண்ண உரிமை அற்றதாய் இருக்க–ருசி தூண்ட பதறி செய்யும் கார்யம்
அப்ராப்த விஷயங்களில் சக்தனானவன் அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்–பிராப்த விஷய பிரவணனுக்கு சொல்ல வேண்டா இ றே
அனுஷ்டானமும் அனநுஷ்டானமும் உபாய கோடியிலே அன்வயியாது–அநந்ய உபாயத்வமும் அநந்ய உபேயத்வமும் அநந்ய தைவத்மமும்-குலையும்படி பிரவ்ருத்தி காணா நின்றோம் இ றே–ஜ்ஞான விபாக கார்யமான அஜஞானத்தாலே வருமவை எல்லாம் அடிக் கழஞ்சு பெறும்-உபாய பலமாய் உபேய அந்தர்பூதமாய் இருக்குமது உபாய பிரதிபந்தகம் ஆகாது

நம் பாவைக்கு –
நம்முடைய நோன்புக்கு–அவனையையும் அவனுடையாரையும் அழிக்கைக்குப் பண்ணும்-இந்த்ரிஜித் பிரப்ருதிகள் -பௌண்டரீக வாசுதேவாதிகள் போல்வார் – உடைய யாகம் போல் அன்றியே–ததீயரும் அவனும் வாழுகைக்குப் பண்ணும் யாகம் –
பிரயோஜனாந்த பரமான நோன்பு அன்றிக்கே கிருஷ்ண விபூதியும் உண்டாக்குகைக்கு பண்ணுகிற நோன்பு –
ப்ராப்ய ருசி பரவசராய் நாம் அனுஷ்டிக்கிற நோன்புக்கு– பகவத் விஷய மங்களா சாசன பரரான நாம்--அனுஷ்டிக்கிற நோன்புக்கு -என்னவுமாம்

செய்யும் கிரிசைகள்
அவசியம் அனுஷ்டேயமான–பண்ணக் கடவ க்ருத்யங்கள்–சேதனன் ஆகையாலே ப்ராப்ய சித்தி அளவும் கால ஷேபத்துக்காக இழிந்து
அனுபவிக்கக் கடவ அனுஷ்டானம் என்றபடி —ஆரம்பித்துத் தவிருமவை அல்ல —பத்தும் பத்தாக செய்து அற வேணும்-மடல் போலே காட்டி விடுமதல்ல –

செய்யும் கிரிசைகள் கேளீரோ உய்யுமாறு எண்ணி -கைங்கர்யமாக -உபாசன பரமாக இல்லை –திருக்கண்ண மங்கை ஆண்டான் -தர்சன புஷ்கரணி -நாத முனி சச் சிஷ்யர் -நாய் -யஜமானன் -அபிமானம்–இப்படியா -பகவத் – ஸுய வியாபாரத்தை விட்டார்
அலகிட்டு தொண்டு செய்து -பரம பதம் -பெருக்கினதால் என்ன சாதனை -இரண்டையும் பாரே -அழுக்கு மனசில் –

பகவானை காட்டினார் எம்பெருமானார் —கரண்ட மாடு பொய்கை -புஷ்கரணி -திருக்குறுங்குடி —குறிய மாண் உருவாய் –வைஷ்ணவ நம்பி -இவரை காட்டிக் கொடுக்க–ஐயமும் பிச்சையும் -கை காட்டி –திரிபுரா தேவி -ஈசான முல்லையில் கை காட்டில்–கையில் கனி என்ன கண்ணனை காட்டி தரிலும்–தன் சரண் அது தந்திலன் தான் அது தந்து –

கேளீரோ –
பெண்கள் கிடாய் கிருஷ்ணன் கிடாய் என்று நிஷேதிக்கிற ஊரிலே–இங்கனே ஒரு சேர்த்தி உண்டாவதே
பகவத் விமுகர் கோலாஹலத்திலே கிருஷ்ண அனுபவத்துக்கு இத்தனை பேர் உண்டாவதே–என்று அவர்கள் இந்த லாப-அனுசந்தானத்தாலே சதப்தைகளாய்–இருக்கையாலே -கேளீரோ –என்கிறார்கள் –
அந்ய பரதை இல்லாமல் கேளுங்கோள்–பகவத் விமுக கோலாஹலத்திலே தாங்கள் பகவத் அனுகூலராய் பகவத் அனுகூலரைத் தேடி
அழைக்கும் படி இத்தனை பேர் உண்டாவதே -என்று அந்ய பரராய் இருக்க -கேளீரோ -என்று அந்ய பரத்தையை தவிர்க்கிறார்கள்
மேய்ச்சல் தலையிலே -கிருஷ்ண சம்ச்லேஷம் பண்ணும் காலம் –அசை இடுவார் உண்டோ -இந்த நாலு நாளும் போனால் நம்மை ஒருவரை ஒருவர் சேர ஓட்டுவார்களோ-

கேளீரோ
சம்ச்ரவே மதுரம் வாக்யம்-என்னும்படியே ஸ்ரவணம் தானே–பிரயோஜனமாய் இருக்கிற படி-புருஷார்த்தோ அயமேவைகோ யத்தா ஸ்ரவணம் ஹரே -என்றான் இ றே -வைசம்பாயன பகவான் இடம் சிஷ்யன் ஜனமேஜயன் தனக்கு புருஷார்த்தமாக சொல்லியது —சொல்லுகிறவர்கள் தான் ஆச்சார்ய பதம் நிர்வஹிக்கைக்காக–சொல்லுகிறார்கள் அல்லர் —கேட்கிறவர்கள் தங்களுக்கு அஞ்ஞாதமாய் கேட்கிறவர்கள் அல்லர்
போதயந்த பரஸ்பரம் -என்று இங்கனே அல்லது போது போகாமல் இருந்த படி –
எங்களுக்கு ஏதனால் நல்லது ஆகில் சொல்லல் ஆகாதோ -என்ன–மேல் சொல்லுகிறார்கள்

கேளீரோ
கேட்டாயே மட நெஞ்சே -திரு வட்டாறு பாசுரம் -கேசவ நம்பிரானை பாட்டாய பல பாடி பழ வினை பற்று அறுத்து–நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினோமே –

பாற் கடலுள் பையத் துயின்ற –
பரம பதத்தில் நின்றும் ஆர்த்த ரஷணத்துக்காக–திருப் பாற் கடல் அளவும் ஒரு பயணம் எடுத்து–ஜகத் ரஷண சிந்தையிலே அவகாஹிதனாய்-ஆர்த்த த்வனிக்கு செவி கொடுத்துக் கொண்டு கிடக்கிற படி
சந்தரன் கடலைக் கண்டு பொங்கும்-பொங்கிய பாற்கடல் சந்த்ரம மா மனசா -பொங்கிய பாற் கடல் பத்து சந்தரன்கள் இங்கே உண்டே -பத்து திரு விரல்கள் –

பையத் துயின்ற –
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து-அதன் மேல் கள்ள நித்தரை கொள்கின்ற -என்னக் கடவது இ றே-இவ் உறக்கத்தின் உண்மை அறிந்தவர் கள்ளம் என்று வெளி இட்டார் இ றே

பையத் துயின்ற
பிராட்டி மாரோடு போகத்துக்கு இடம் கொடாதே–ஆராலே ஆருக்கு என்ன நலிவு வருகிறதோ என்று அதிலே–அவஹிதனாய் கொண்டு சாய்ந்தபடி

முதல் பாட்டிலே
நாராயணத்வம் சொல்லி–இப்பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக–திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறது-

பரமன்
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே–திரு அனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின பின்பு–வடிவில் பிறந்த புகரின் பெருமையைச் சொல்லுகிறது
அன்றியே
ஜகத் ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகையாலே--குணத்தின் ஏற்றத்தை சொல்லிற்றாகவுமாம்–சர்வத்தாலும் அதிகன் என்றபடி

அடி பாடி-
அவனுடைய ஆதிக்யத்தின் எல்லையை அனுசந்தித்தால்–பின்னை தங்கள் தாழ்ச்சியின் எல்லையில் நிற்கும் இத்தனை இ றே
ஔசித்யத்தாலும் போக்யதையாலும் கிருஷ்ணன் திருவடிகளைப் பாடாதே–திருப் பாற் கடலில் கண் வளர்ந்து அருளுகிறவனை
பாடுவான் என் என்னில் -இரண்டு இடமும் ஒருவனே ஆகையாலே–நோன்பு நோற்க புக்கவர்கள் கிருஷ்ணனைப் பாடா நின்றார்கள்
என்று சொல்லாமைக்காக–ஒரு தெய்வத்தின் பேரைச் சொல்லிற்றாக சொல்லுகிறார்கள்-
பாடி -உகந்து -செய்வதே சந்தோஷம் உபாயம் இல்லையே இதுவே பிராப்தம் -பலானுபவம் இது

பாற் கடலுள் பையத் துயின்ற –
கிருஷ்ணனை அனுபவிக்கப் புகுந்து ஷீராப்தி நாதனை சொல்லுகிறது என் என்னில் –
கிருஷ்ணனைச் சொல்லி பண்டே சங்கித்து இருக்கிற இடையர்–நமக்கு தைவம் தந்த இந்த சேர்த்தியை அழிக்கிறார்களோ–என்று பயப்பட்டு
கிருஷ்ணனுக்கு அடியான ஷீராப்தி நாதனைச் சொல்லுகிறார்கள் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான்–ஷீரார்ணவ நிகேதன–நாக பர்யங்க முஸ்த்ருஜ்ய–ஹ்யாகதோ–மதுராம் புரீம் -என்னக் கடவது இ றே

பாற் கடலுள் பையத் துயன்ற பரமன் –
உன் பாலேபோல் சீரில் பழுத்து ஒழிந்தேன் –பகவத் குணங்கள் பாலாகவும்–சீர்க்கடலை உள் பொதிந்த -குணங்களை கடலாகவும்
அனந்த குண சாகரம் ப்ரஹ்ம-குணங்களையே வாய் வெருவிக் கொண்டு திவ்ய பிரபந்தங்களையே அனுசந்தித்துக் கொண்டு-

அடி பாடி –
மகிஷிகளோடு அல்லாதாரோடு வாசி யற சேஷத்வம் சமானமாய் இருக்கையாலே-திருவடிகளைப் பாடி -என்கிறார்கள்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கூடிட -என்னக் கடவது இ றே–அவனுடைய வடிவழகை ப்ரீதி ப்ரேரிதை களாய்க் கொண்டு பாடி

திருப் பாற் கடலிலே திரு அநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே–பிராட்டியார் திருமுலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்
அவர்களுக்கு முகம் கொடாத படி ஜகத் ரஷண சிந்தைனையினில்–அவஹிதனாய் கண் வளர்ந்து அருளுகிறவனாய்
அத ஏவ பரம பதத்தில் நின்றும் சம்சார சேதன சம்ரஷணார்த்தம்–திருப் பாற் கடலிலே அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே
வந்த குணாதிசயத்துக்கு ஒப்பு இல்லாதவனாய்–திரு அநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளுகையால் வந்த–பரபக சோபைக்கு ஒப்பு இல்லாதவனாக இருக்கிற
எம்பெருமான் உடைய திருவடிகளை ப்ரீதிக்கு போக்கு வீடாக–பாடி போக்யாந்தராங்களிலே அந்வயியோம்

பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம் –
போக்யாந்தரங்களில் அந்வயியோம்—உண்டார்க்கு உண்ண வேண்டா வி றே –
இவர்கள் உண்டார்களோ என்னில்–ஓம்–உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை -நமோ நாராயணா என்று
உன் பாதம் நண்ணா நாள் அவை பட்டினி நாளே -என்றும்–எல்லாம் கண்ணன் -என்றும்–கூறை சோறு இவை வேண்டுவது இல்லை -என்றும்
பாதேயம் புண்டரீகாஷ நாம சங்கீர்த்தன அமிர்தம் -என்றும்–வாசு தேவஸ் சர்வம் -என்றும்–இப்படி இ றே ஜ்ஞானம் பிறந்தால் இருப்பது –

குடியோம் -என்னாதே உண்ணோம் -என்பான் என் என்னில்
உண்ண என்று குடிக்கைக்கு ஜாதி பேச்சு–ஆகை இ றே நெய் உண்டான் வெண்ணெய் உண்டான் என்று–கிருஷ்ணனுக்கு பேராகிறது
முதல் தன்னிலே கிருஷ்ணன் பிறந்த பின்பு அதில் வுயுத்பத்தி இல்லாமை–அவன் வரும் அளவும் உபவாச க்ருசைகளாய் இருக்கக் கடவோம்
இவர்கள் தான் ஆரைக் கெடுக்க பட்டினி கிடக்கிறது என்னில்–இவர்கள் உண்ணாது ஒழிந்தால் பட்டினி விடுவான் அவன் போலவே காணும்
ஆகையில் இ றே இவர்கள் இங்கனே சொல்லுகிறது

உண்டாருக்கு உண்ண வேண்டாமே பரமன் அடி பாடி –நெய் உண்ணோம் —நாவில் கொண்டு அழையா மானிடர் பருகும் நீரும்-உடுக்கும் கூறையும் பாபம் செய்தன பெரியாழ்வார் –திரு கோஷ்டியூர் -மாதவ பெருமாள் சௌம்யநாராயண பெருமாள் -எம்பெருமானார் ஆன தேசம்

நாட்காலே நீராடி –
அவன் வந்தால் குளிக்க இராதே–முன்பே தத் போக போக்யமாக குளித்து விடுவோரைப் போய்–குளிக்கக் கடவோம்

அவன் திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து அருளினதை அசத்–சமமாக ஆக்கக் கடவோம்-மகிஷியானவள் ஸ்வ ரஷணத்திலே பிரவர்த்திக்கும் படியாக–இருக்கைக்காக மேற்பட–புருஷனுக்கு அவத்யம் இல்லை இ றே
அதாவது தங்கள் த்வரையாலே அத்தலையில் உபாய பாவத்தை அழிக்கிறார்கள்
ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஒளி மா மலர்ப் பாத–நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலில் -என்கிறார்கள்
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விரஹ தாபம் ஆறுகைக்காக–நோன்பு -என்கிற வியாஜ்யத்தை இட்டு குளிக்கத் தேடுகிறார்கள் இ றே
அத்யந்த சுக சம வ்ருத்தஸ் ஸூகுமாரஸ் ஸூ கோசித கதந்வ–பாராத்ரே ஷூ சரயூமவ காஹதே -என்கிறபடியே-

உண்ணா நாள் பசியாவது -ஓன்று இல்லை ஓவாது உரைக்கும் -நா வாயில் உண்டே -அன்று அவை எனக்கு பட்டினி நாளே –
எப்போதாவாது திரு நாமம் சங்கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தால் எப்போதும் திரு நாமம் சங்கீர்த்தனம் செய்வோமே
அமிர்தத்திலும் ஆற்ற இனியன் -என் அமுதம் கொண்டா அமுதம் பெற கடல் கடைய –
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே கலந்து ஒழிந்தோம் -ஒரு ரசம் கலந்தது போலே இல்லை -ரசக் கூட்டங்கள் போலே கலந்தோம் –
ரசககனமான அவனை முக்தன் அனுபவிப்பது போலே–பஞ்சாம்ருதம் –எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் -பாட்டில் எல்லாம் உண்டே –
இது போலே 12 இடங்கள் எம்பெருமானார் நிர்வாகம் -பிள்ளான் -சாந்தீபன் கண்ணன் -வசிஷ்டர் ராமன் போலே —சர்வ ரச
அடியார் அளவும் சேர ஆர்த்தி பிறக்க -ஆழ்வாருக்கு ஆடி ஆடி -வாடி வாடும் இவ் வாள் நுதலே – —எனது அக உயிர்க்கு அமுதே என்னும்
– -தேகம் மட்டும் அந்த அமுதம் உப்புச் சாறு —அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதம் —-ஆழ்வார் அமுதம் பல இடங்களிலும் அருளி –
2-3/2-4/2-5 திருவாய்மொழி –2-9 அக்காரக் கனியே உன்னை யானே —சக்கரைப் பழம் இல்லை –
சக்கரை விதை -விதைத்து மரம் -பழம்–எக்காலத்து எந்தையே என்னுள் மன்னில் மற்று எக்காலத்திலும் யான் ஒன்றும் வேண்டேன் –
நாக்கு நனைக்க அமையும் -இதிலும் எம்பெருமானார் நிர்வாகம் -ஆழ்வார் பிரக்ருதிக்கு சேராதே —கொண்டு கூட்டு பொருள் அணி –
மிக்கானை தக்கானை கடிகை குன்றின் மிசை அக்காராக்கனி —கடிகாசலம் – அசலம் நினைக்காமல்- சலம் சரீரம் நினைப்பார்களோ –
அச்சுதன் அமலன் என்கோ –அடியவர் வினை கெடுக்கும் -நச்சுமா மருந்தம் என்கோ —அவனே நெய் பால் -ஆண்டாள் –
அநாதி காலம் கர்மா போக்கும் அமிர்தம் இது —மா மருந்து -மருந்து -என்னாமல் சமபலம் வியாதி -இது மா மருந்து -வாட்டம் தணிய வீசீரே
அச்சுவைக் கட்டி என்கோ —அமுதம் என்கோ -கனி என்கோ–கடைந்த அமுதம் இல்லை –கிடந்த அமுதம் -சாஸ்வதம்
நெய்ச்சுவை தேறல் நெய்யில் இருந்து தேன் பால் என்கோ கனி என்கோ -சர்வ ரசம் —மனிசரும் –கனியை தேனை பாலையை கட்டியை அமுதை -பாடாமல்
தேட்டறும் திறல் தேனினை -ரிஷிகள் தேனிக்கள் கட்டி வைத்த தேன்–தேனிடை கரும்பின் சாற்றை-தேன் கொட்டி வளர்ந்த கரும்பு
நான்காம் பத்து —நானும் ஏத்தி –ஏத்த ஏத்த எங்கு எய்தும் -தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாய் தித்திக்கும் –
அமுதம் ஸ்தோத்ரம் இதில் —ஐந்தாம் பத்து -கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியான்–அமுர்தம் திரு ஆபாரணம் சாதிக் கொண்டு இதில்
ஆரா அமுதே 5-8-பேர் உடனே சேவை -அபரியாப்தம் அமர்த்தம் -ஆரா அமுதம் போலே இல்லையே–திராவிட சுருதி தர்சன –
6-10 எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே அடியேன் மேவி அமர்கின்ற அமுதம் திருவேங்கடத்தில் –
அமிர்தமே மலையாக -இருக்க -சஞ்சீவி —வாய் புகுந்து தித்திக்கும் அவ்வமுதம்–இதை ஐம்புலன்களாலும் சுவைக்கலாம்
ஜீவனம் தேடி திருக் கோளூருக்கு-உண்ணும் சோறு -என் ஜீவனம் பறித்து போனாள் பாகவதர் திரு முகம் தானே ஜீவனம்
அலைகடல் கடைந்த ஆரமுதே கங்குலும் பகலும் -அமுதம் கடைந்த அமுதம் –
கறந்த பால் நெய்யே நெய்யின் சுவையே கடலினுள் அமுதே அமுதின் இன் சுவையே சுவையின் பயனே எட்டாம் பத்தில்
திருந்து உலகுண்ட பெருமான் தேனை -நன் பாலை அமுதை கன்னலே– வார்கெடா வருவி -சக்தி காட்டிய–நெய்யூண் மருந்தோ மாயோனே –
கண்கள் சிவந்து 8-8–நின்ற உன்னை உணர்ந்தேன் -தேனில் அமுதில் தித்திக்கும் உன்னை —-கூவுதல் வருதல் செய்யாதே -அடி இணை வருட —கடுவினை நஞ்சே -என்னுடை அமுதே -திருப்புளிங்குடி -காய்ச்சின வேந்தன் —யானே தன்னை பாடி 10-7
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே -தன்னுடைய அமுதம் என்கிறார்-

நாட்காலே நீராடி
ப்ராதஸ் ஸ்நானத்தைப் பண்ணி–இத்தால் கர்ம யோகத்தை உப லஷிக்கிறது–இத்தால் தத் தத் வர்ணாஸ்ரம உசிதமான ஸ்நானாதி நித்ய கர்மங்கள்

இவ்வதிகாரிக்கு யாதாவத அனுஷ்டேயம் என்றது ஆய்த்து–பாடி -என்ற இது–பாடக் கடவோம் என்றபடி–நீராடி -என்றது நீராடக் கடவோம் என்றபடி
தத்து கர்மசமா சரேத் என்று இவ்வதிகாரிக்கு–அநபிசம்விதஸ்வ பாவ விசேஷங்களை அருளிச் செய்கிறார் –

ஆக நீராடி மூன்று அர்த்தம்–போகார்தம்–சாதனமாக–விரஹ தாபம் தீர

மை இட்டு எழுதோம் –
முதலிலே மைய கண்ணாள் இ றே–இனி அஞ்சனம் இடுவதும் மங்களார்த்தமாக விறே
அது தவிரக் கடவோம் என்கையாலே அவனுக்கு அவகாச பிரதானம் பண்ணக் கடவோம் அல்லோம் என்கிறார்கள் –
இவர்கள் அஞ்சனம் எழுதப் புக்கால் குறையும் தலைக் கட்டுவான் அவனே இ றே
பரிபூர்ண விஷயத்தில் இப்படி அவகாச பிரதானம் பண்ணப் பெறாத அன்று–கிஞ்சித் கரித்ததாக விரகு இல்லை இ றே
அவனும் பரம பிரண யியாகையாலே -இங்கே கிஞ்சித் கரித்து–ஸ்வரூபம் பெற வேணும் என்று இருக்கும் –

மலரிட்டு நாம் முடியோம் –
சுரும்பார் குழல் கோதை -என்றும்-வாசம செய் பூம் குழலாள் -என்றும் இ றே இருப்பது–இனி பூவுக்கும் தான் நாற்றம் கொடுக்கைக்காக வாய்த்து பூ முடிப்பது –
அது செய்யக் கடவோம் அல்லோம் என்கை –

நாம் முடியோம் –
அவன் தான் மாலையைக் கொடு வந்து–மயிரை முடித்து அலங்கரித்து–விரல் கவ்வி
இது வாங்காது ஒழிய வேணும் -என்னுமாகில் செய்யலாவது இல்லை-அவன் தீம்பாலே செய்யுமத்தை நம்மால் செய்யலாவது இல்லை –
நாமாக செய்யாது ஒழியும் இத்தனை இ றே வேண்டுவது–அவன் உகந்த விஷயத்தில் இப்படி அலங்கரித்தது உண்டோ என்னில்
அத்ரோ பவிஸ்ய சாதேன காபி புஷ்பை ரலங்க்ருதா–அந்ய ஜன்மனி சர்வாத் மா விஷ்ணு ரப்யர்ச்சி தோயயா—என்னக் கடவது இ றே

செய்யாதன செய்யோம்
விதி உண்டாகிலும் பூர்வர்கள் ஆசரித்ததற்கு மேற்பட–ஆசசரிக்க கடவோம் அல்லோம்
அதாகிறது -ஸூ ஹ்ருதம் சர்வ பூதாநாம் -என்று அவன் சர்வ பூத ஸூ ஹ்ருத்தாக இருந்தானே யாகிலும்
ததீயரை முன்னிட்டுக் கொண்டு அல்லது அவனைக் கிட்டக் கடவோம் அல்லோம் என்கை -பெண்களில் முற்பட உணர்ந்தார்–ஒருவரை ஒருவர் எழுப்பி–எல்லாரும் கூடி அல்லது கிருஷ்ணனைக் கிட்டக் கடவோம் அல்லோம் -என்கை
நிவேதயதாம் மாம் ஷிப்ரம் -என்றும்–பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரசத் -என்றும்–இவை இ றே பிரமாணங்கள்
ஸ்ரீ பரத ஆழ்வானை முடி சூட சொன்ன இடத்திலும்–சர்வ பிரகாரத்தாலும் யோக்யதை உண்டாய் இருக்க-இக்குடியில் இதுக்கு முன்பு செய்யாதன நான் செய்ய மாட்டேன் -என்றான் இ றே

தீக் குறளை சென்றோதோம்
பிறர்க்கு அநர்த்தரவஹமாக பொய் சொல்லக் கடவோம் அல்லோம்–பிராட்டி பெருமான் பக்கல் ஏகாந்தத்திலும் எகாஷி ஏக கர்ணிகள்-நலிந்தபடி சொல்லிற்றாக வில்லையே ஸ்ரீ ராமாயணத்தில்
நம்மில் நாம்–நப்பின்னை நங்காய் -என்றும்–நாயகப் பெண் பிள்ளாய் -என்றும் -நிர்வாஹகையாக இருந்த படி இதுவோ -என்று வெறுத்து சொன்ன வார்த்தை –
பேய்ப் பெண்ணே -என்றும்–ஒருவருக்கு ஒருவர் இட்டீடு கொண்டு சொன்னவை–கிருஷ்ணன் செவிப் படுத்த கடவோம் அல்லோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி —ஐயம் ஆவது யோக்ய விஷயத்திலே குருவாக வ்யவிக்குமது
பிச்சை யாகிறது–ப்ரஹ்மசாரிகளுக்கும் சந்யாசிகளுக்கும் இடுமது–இங்கு கிருஷ்ண அனுபவம் பண்ணுவோம் -என்பாருக்கு அவனை அனுபவிப்பித்தும்
ததீயரை அனுபவிப்போம் என்பாருக்கு அவர்களை அனுபவிப்பித்தும் போரக் கடவோம் –

ஆந்தனையும் –
அவர்கள் கொள்ள வல்ல ராந்தனையும்–அர்த்திகள் ஆமளவும்–கை காட்டி–சர்வத்தையும் கொடுத்தான்-ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று இருக்கை
இவர்களை கிருஷ்ண அனுபவம் பண்ணி வைத்தும் இவர்கள் திறத்தில்–ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கையை சொல்லுகிறது

அதவா
ஐயம் ஆகிறது -ஈஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விஷய ஜ்ஞானம்–பிச்சை யாகிறது -ஆத்ம ஸ்வரூப மாத்ர ஜ்ஞானம்-இவற்றைத் தனக்கு உள்ளளவும் உபதேசிக்கை என்றுமாம் –

கை காட்டி
இப்படி ஞான உபகாரகன் ஆனாலும் அவ் உபகாரம் தன் நெஞ்சிலே தட்டாது இருக்கை

உய்யுமாறு எண்ணி
இதப் பிரகாரங்களினாலே உஜ்ஜீவிக்கும் படிகளை எண்ணி —பகவத் விஷயத்தில் உள் புக்க அன்று இ றே இவன் உஜ்ஜீவித்தான் ஆகிறது –
அது இல்லாத போது-அசந்நேவ-இ றே-ஆறு கேள்விகளில் பதில் சொல்லவே ஸ்ரீ மத் பாகவதம் / ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் -த்வயம் ஷட் பதம் -ஸ்ரீ ராமாயணம் ஆறு காண்டங்கள்  -ஆறி இருக்க வேண்டும் -சாஸ்த்ர சாரம் –
உய்யுமாறு ஆறு வார்த்தைகள் -திருக் கச்சி நம்பி–எம்பெருமானார் ஆறு வார்த்தை -என்னவுமாம் –
வையத்து வாழ்வீர்காள் -பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –உனது பாலே போல் சீரிலே பழுத்து ஒழிந்தேன் -பகவத் குணங்களே பால் –சீர் கடலை உள் பொதிந்த –அநந்த குண சாகரம் -அக் குணங்களே கடல் –இவற்றையே வாய் வெருவி -பகவத் குண சாகரத்தில் அஸ்தமி தான்ய பாவராய் இன்புறும் பரமர் எம்பெருமானார் -என்கை –

-உய்யு மாலை —உய்யுமாறு எண்ணி–ஆறு வார்த்தைகள்–என்னவுமாம் –
1-வதுவை வார்த்தை –வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் -திருவாய் -5-10-2-
2–நெய்யுண் வார்த்தை -நெய்யுண் வார்த்தையுள் உன்னைக் கோல் கொள்ள -5-10-3-
3-வெண்ணெய் வார்த்தை -ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்ட அழு கூத்தப்பன் -6-2-11-
4-நடந்த வார்த்தை -தேசம் அறிய ஒரு சாரதியாய் சென்று சேனையை நாம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை -7-5-9-
5-மெய்ம்மைப் பெரு வார்த்தை -செம்மை யுடைய திருவரங்கர் தாம் பனித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை -நாச் -11-10-
6-கஞ்சன் விடுத்தான் என்பதோர் வார்த்தை -கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு -பெரியாழ்வார் -2-8-6-

எண்ணி உகந்து –
மநோ ரத வேளையே தொடங்கி ரசிக்கிற படி–ஸூ ஸூ கம் கர்த்தும் அவ்யயம் -என்கிறபடியே-ஸ்மர்த்தவ்ய விஷயத்தின் ரச்யதையாலே ஸ்ம்ருதி வேளையே தொடங்கி ரசிக்கும் இ றே
ஸ்வ உஜ்ஜீவன இச்சா யதி தி ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி
ஆத்மா தாஸ்யம் ஹரே ச்வாம்யம் ஸ்வ பாவம் ச சதா ஸ்மர-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -உய்யுமாறு எண்ணிக் கொண்டே உகந்து இருக்க வேண்டும்

எண்ணி உகந்து –செய்யும் கிரிசைகள் கேளீரோ -என்று அந்வயம்
ஏல் ஓர் எம்பாவாய் -பாதத்தைப் பூரித்துக் கிடக்கிறது-

நெய் உண்ணோம் -எம்பெருமானே போக்யம்–வர்ணாஸ்ரம கர்மங்கள் விடாமல் அனுஷ்டிக்க நாட்காலே நீராடி
மை கண்ணுக்கு – பிரகாசகம் -ஆத்மயாதாத்மிய ஞான யோகம் அன்வயிக்கலாகாது —ஐஸ்வர்ய ஆசை ஒழிந்தோம் என்றுமாம்
மலரிட்டு முடிகை பக்தியோகம்–கைவல்யாசை ஒழிந்தோம்–நாம் முடியோம் -அவனே ஞானபக்த்யாதிகள் அருளி
ஐயம் பகவத் வைபவம்–பிச்சை பாகவத் வைபவம்–யதாசக்தி கூற வேண்டும்

சித்த உபாயம் முதலில் சொல்லி -சாத்திய உபாயம் இரண்டாம் பாசுரம் -அதன் பிராதான்யம் இதில் அப்ரதான்யம் சொல்லி –
வையகம் -ஈஸ்வரன் வைத்து இருக்கும் அகம் கர்ம அனுகுணமாக பிரக்ருதியில் வைத்து இருக்கும் -வையத்தும் -உம்மைத் தொகை –
தாழ்ச்சி மற்றும் எங்கும் தவிர்ந்து –தேவாதி சரீரங்கள் தவிர்ந்து –நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி –
நாமும் -இதில் –நம் பாவைக்கு –நாராயணனே -பிரதான்யம்-அங்கு
பிராப்ய பிராபகம் சொன்ன பின்பு -பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி -த்வயம் அனுசந்தித்து -சம்சார நிவ்ருத்தி
-சரீர போஷணங்கள் தவிர்ந்து -நெய் உண்ணோம் பால் உண்ணோம் -விவேகம் –
ஆனுகூல்ய சங்கல்பமும் பிரதிகூல்ய வர்ஜனமும் சொல்லிற்று -ஸ்நான மூலம் கிரியா நீராடி நித்ய நைமித்திய கர்மாக்கள் உப லஷணம்
பகவத் ஆராதனா ரூபம் உபாய துவக்கு அற்று -பகவத் ஆஜ்ஞையா பகவத் பரீத் யார்ர்த்தம் பகவத் கைப்ங்கர்ய ரூபம்
ஆனுகூல்ய சங்கல்பம் -பிரதிபத்தி ஆனுகூல்ய செய்வது ஆஜ்ஞ்ஞா -அடியாக கைங்கர்ய ரூபம் என்றவாறு –
பாடின பின்பு உத்தர ஷணம்-இவ்வாறு –
சதம் அஞ்சன ஹஸ்தா -மாலா ஹஸ்தா -அமானவன் கர ஸ்பர்சத்தால் அங்கே சென்று –
உய்யும் ஆறு -ஷடவித அங்கங்கள் -கிருஷ்ண கைங்கர்யம் -நாட்டாருக்கு மழை சம்ருத்தி –திருநாம கானம் தான் வ்ரதம் இவர்களுக்கு – –
பரமன் அடி -ஸ்ரீ மத் சரனௌ-பேர் பாடி த்வயம் உச்சாரணம்-
பகவத் பாகவத கைங்கர்யம் -ஐயம் -வர்ணாஸ்ரமம் பிச்சை –
அவன் திரு உள்ள உகப்புக்காக -ஷடவித சரணாகதி உய்யும் ஆறு தாத்பர்யம் –
கேளீரோ -என்கிறாள் -நாமும் -தாயைப் போலே தம்மையும் சேர்த்துக் கொண்டு
பாடுவதே பறை —அங்கி இது மற்றவை அங்கம் -சரீர சிந்தை விட்டு ஆத்மசிந்தனையே நோன்பு
பையத் துயின்ற பரமன் –தெய்வக் குழாங்கள் கை தொழ கிடந்த தாமரை உந்தி தனிப் பெரும் நாயக -குழந்தை மழலைப் பேச்சு போலே இவர்கள் ஸ்துதி —
அவனை பாட மாட்டும் -திருவடி பாட -குழந்தை ஸ்தனத்தில் வாய் வைக்குமா போலே -சித்தாலம்பன சௌகர்ய –
கிருபையை தூண்டும் -திருவடியில் விழுந்தால்
ஆனுகூலச்ய சங்கல்பம் பிரதிகூலம் வர்ஜனம் –அக்ருத்த்ய கரணம் கிருத்ய அகரணம் –பகவத் பாகவத அசஹ்யா அபசாராம்
-நாநா வித அபசாரம் அசேஷண ஷமஸ்வ –
கண்ணனுக்கு மை ஞானம் -கர்ம ஞானம் பக்தி யோகம் இல்லை என்றுமாம்
ஆசார்யர் -ஞானம் அபேஷிக்க கொடுக்கிறார்கள் ஐயமும் பிச்சையும் கருணையால் கேட்காமல் அருளி –
பசு திருவடி பார்க்க -கன்றுக்குட்டி திரு முகம் பார்த்து -மன்னார் குடி -சேவை நாம் அடியிலே ஒதுங்க வேண்டும்
அஞ்சனம் -திருஷ்டி -உபயோகம் -திருஷ்டி கழிக்கவும் -உள்ளுள்ள தனம் காண -நிரஞ்சனம் -குற்றம் அற்றவன் –
அஞ்சனாவின் பிள்ளை -அஞ்சானாசலம்- ஈஸ்வர தாம் நிரஞ்சனம் கொடுப்பான் தேசிகன்
ஐயம் –ஆசார்யர் கொடுக்கும் உபதேசம் -ஆசார்யர்க்கு கொடுக்கும் சம்பாவானை –பிச்சை -தீனர்களுக்கு கொடுக்கும்
அஷ்டாஷரம் பெருமை -மார்கழி -நாராயணனே நமக்கே பறை தருவான் –நாராயணன் சிங்கம் பர நிலை-
வையத்து -த்வய மகா மந்த்ரம் -நாமும் நம் பாவைக்கு சாற்றி நீராடினால் -வ்யூஹம் -பாற் கடலில் பையத் துயின்ற
ஓங்கி -சரம ச்லோகார்த்தம் -விபவம் -வாமனன் -அடுத்து அந்தர்யாமி அர்ச்சா -இப்படி ஐந்தும்
மார்கழி வையத்து ஓங்கி -பக்தி யோக பிரபத்தி -ஞான கர்மம் அங்கங்கள் -பக்திக்கு -பிரபதிக்கு ஐந்து அங்கங்கள் -பிரபத்தியே ஓங்கிய மார்க்கம் –
ஸ்வஸ்தி வாக்ய வேத மந்த்ரம் போலே ஓங்கி உலகு அளந்த –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading