ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –11– -பால சேஷ்டிதங்கள– வெண்ணெய் உண்டு கட்டுண்ணப் பண்ணிய பெரு மாய — அருளிச் செயல்கள்

உழந்தாள் நறு நெய் ஓரோர் தடா வுண்ண இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழின்மத்தின் பழம் தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான்
பெருமா வுரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு இருமா மருதம் இறுத்த இப்பிள்ளை
தாழியில் வெண்ணெய் தடங்கை யார விழுங்கிய பேழை வாயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான் –
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயுமுண் பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி பற்ப நாபா கொட்டாய் சப்பாணி
பொத்த வுரலைக் கவிழ்த்து அதன் மேலேறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறார
விழுங்கிய அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆழியான் என்னைப் புறம் புல்குவான்
திருடி நெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைத் தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று ஆப்புண்டான் அப்பூச்சி காட்டுகின்றான்
யாம் வைத்த துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வாடி தயிரும் நறு வெண்ணெய் யும் இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்து கரை யுரலோடு என்னைக் காணவே கட்டிற்று இலையே
வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
கறந்த நல பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாகப் பெற்று அறியேன் எம்பிரானே
திண்ணக் கலத்தில் திரையுறி மேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடையிட்டு அதனோசை கேட்கும் கண்ணா பிரான் கற்ற கல்வி தன்னைக் காக்ககில்லோம்
உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான்
பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல்வளையால் என் மகள் இருப்ப மேலை யகத்தே நெருப்பு வேண்டிச்
சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன் சாளக்ராமமுடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறு நெய் பாலால் பன்னிரண்டு திருவோணம் அட்டேன்
பண்டும் இப்பிள்ளை பரிசு அறிவன் இன்னமுகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுந்கிட்டுப் போந்து நின்றான்
அகம் புக்குக் குறியை நோக்கிப் பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்உன் மகன்
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு வேய்த் தடம் தோளினார்
வெண்ணெய் கொள்மாட்டாது அங்கு ஆப்புண்டு இருந்தான்
பொன்னேய் நெய்யோடு பாலமுதுண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி –இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ
முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி கப்பாலாயர்கள் காவிற் கொணர்ந்த
கலத்தொடு சாய்த்துப் பருகி மெய்ப்பாலுண்டு அழு பிள்ளைகள் போலே நீ விம்மி விம்மி அழுகின்ற அப்பா –
மிடறு மெழு மெழுத்தோட வெண்ணெய் விழுங்கிப் போய் படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே
கடிறு பலதிரி கானதரிடைக் கன்றின் பின் இடற வென் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே –

ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் கார் ஏறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சிகண்டு ஆர்த்த தோளுடை எம்பிரான் என்னரங்கன்
ஒல்லை நானும் கடையவன் என்று கள்ள விழியை விழித்துப் புக்கு –தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய்யறிவன் நானே
முழுதும் வெண்ணெய் அழைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரைக் கையும் எழில் கொள் தாம்பு கொண்டு
அடிப்பதற்கு எள்கு நிலையம் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும் அணி கொள்
செஞ்சிறு வாய் நெளிப்பதுவும் தொழுகையும் இவை கண்ட வசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே

ஆய்ச்சி பாலையுண்டு மண்ணையுண்டு வெண்ணெய் யுண்டு பேய்ச்சி பாலையுண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா —

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் அணி யரங்கன் என் அம்தினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பன்

—————————————

உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக கொண்டாய்
ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை
உறியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று ஆங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தரியார்ந்த கரும் களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான்
வேல் நெடும் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து இவ்வுலகாண்ட காளை
உகந்து இனிது நாள் தோறும் மருவி யுறை கோயில் –நாங்கூர் வைகுண்ட விண்ணகரம் –
வாய்த்த தயிருண்டு வெண்ணெய் அமுதுண்டு வலிமிக்க கஞ்சனுயிரது உண்டு இவ்வுலகுண்ட காளை கருதுமிடம் –நாங்கூர் அரிமேய விண்ணகரம்
படலடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும் அடலடர்த்த வேறகணார் தோக்கை பற்றி
அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர் –நாங்கூர்த் திருத் தெற்றி யம்பலத்து என் செங்கண் மாலே
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் யுண்டு ஒருகால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான் –கோயில் –திரு வெள்ளியங்குடி யதுவே
மையார் தடம் கண் கரும் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயனிடம் –புள்ளம் பூதங்குடி தானே –
பிள்ளை யுருவாய்த் தயிருண்டு அடியேன் உள்ளம் புகுந்த ஒருவரூர் –கூடலூரே
கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய் பருகு நந்தன் பெற்ற ஆனாயன்
வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி யோச்சி கண்ணியார் குறும் கையிற்றால் கட்டவெட்டு
என்று இருந்தான் –தென் திருப் பேருள் வேலை வண்ணனார் –
உருக்குறு நறு நெய் கொண்டு –விண்ணகர் மேயவனே
உறியார் வெண்ணெய் யுண்டு உரலோடும் கட்டுண்டு -வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றானூர் –நறையூரே
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி யழுதான் –நறையூர் நின்ற நம்பியே –
தோயாவின் தயிர் நெய் யமுதுண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற தாயால் ஆப்புண்டு இருந்து
அழுது ஏங்கும் தாடாளா—அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே
வம்பவிழும் மலர்க் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்–அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய் மாந்தழுந்தையில் கண்டு மகிழ்ந்து
வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
பூங் கோதை யாய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண ஆங்கவள் ஆர்த்துப் புடைக்க புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் ஒங்கோத வண்ணனே சப்பாணி ஒளி மணி வண்ணனே சப்பாணி
தாயார் மனங்கள் தடிப்பத் தயிர் நெய்யுண்டே எம்பிராக்கள் இரு நிலத்து எங்கள் தம் ஆயர் அழகா அடிகள் அரவிந்த வாயவனே
தாமோருருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டு தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால் தாமோதரக் கையால் ஆர்க்கத் தழும்பிருந்த தாமோதரா
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்ரை நிறைப்பான் உறிப்பால் தயிர் நெய் அன்று ஆய்ச்சியர் வெண்ணெய்
விழுங்கி உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான்
காலை எழுந்து கடைந்த இம்மோர் விற்கப் போகுன்றேன் கண்டே போனேன் மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலையகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்று இருந்த பாலும் பதின்குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ
தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த வெள்ளி மலையிருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு பிள்ளை பரமன்று இவ் வேழ் உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஓரோர் குடம் துற்றிடும் என்று ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை நங்காய் சோத்தம்பிரான்
இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்ப கில்லேன் பேய்ச்சி முலையுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே
ஆழ்கடல் சூழ் வையகத்தார் ஏசப்போய் ஆய்ப்பாடித் தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ –
தாழ் குழலார் வைத்த தயிருண்ட பொன் வயிறு இவ் வேழ் உலகுமுண்டும் இடமுடைத்தால் சாழலே –
அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உறியார் நறு வெண்ணெய் உண்டுகந்தான் காணேடீ
உறியார் நறு வெண்ணெய் உண்டுகந்த பொன் வயிற்ருக்கு எறி நீருலகனைத்தும் எய்தால் சாழலே
வண்ணக் கரும் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே

வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த உறியார் நறு வெண்ணெய் தானுகந்துண்ட சிறியானை
செங்கண் நெடியானைச் சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே

———————————————-

உறி வெண்ணெய் தோன்ற வுண்டான் –மண்ணளந்த மால்
வெறி கமழும் காம்பே மென்தோளி கடை வெண்ணெய் யுண்டாயை தாமே கொண்டார்த்த தழும்பு
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி உரலோடு உறப் பிணித்த நான்று குரலோவாது ஏங்கி நினைந்து
அயலார் காண விருந்திலையே ஒங்கோத வண்ணா உரை
வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய் தேனாகிப் பாலாம் திரு மாலே ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே
முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு

மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றா தாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி
கண்ணிக் கயிற்றினால் கட்டத் தன கட்டுண்டு இருந்தான் வயிற்றினோடு ஆற்றா மகன்

சுருங்குறி வெண்ணெய் தொடு யுண்ட கள்வனை வையம் முற்றும் ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை
மாவலி மாட்டு இரும் குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே

ஆழி நீர் ஆரால் கடைந்து இடப்பட்டது அவன் காண்மின் ஊரா நிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டு உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்
ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி சீரார் கலை யல்குல் சீரடிச் செந்துவர் வாய் வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு
எராரிடை நோவ எத்தனையோர் போதுமாய்
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை வேறார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்ததனை
போரார் வேற்கண்ட மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம் ஒராதவன் போல் உறங்கி யறிவுற்று தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி -அருகிருந்த மோரார் குடமுருட்டி முன் கிடந்த தானத்தே ஒராதவன் போல் கிடந்தானைக் கண்டவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறடித்து இங்கு ஆரார புகுதுவார் ஐயர் இவர் அல்லால் நீராமிது செய்தீர் என்றோர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண விரலோடு தீரா வெகுளியாய்ச் சிக்கென வார்த்தடிப்ப ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்

தான் முன நாள் மின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண் துன்னு பாடல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் தன் வயிறார விழுங்க
கொழும் கயல் கண் மன்னு மடவோர்கள் பற்றி யோர் வான் கயிற்றால் பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்

———————————————————————–

பத்துடை யடிவவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அறிய வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை கழ வேழ் வெண்ணெய் தொடு வுண்ட கலவா என்பன்
உண்டாய் உலகு ஏழ முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும்பீர் சிறிதும் அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே ஆயர் கொழுந்தாய்
அவரால் புடையுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே
தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்க்கு என்றே தொழும் அவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசைமுகற்கும் ஆமோ தரம் அறிய எம்மானை என்னாழி வண்ணனையே
வேயகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆனாயர் தாயவனே என்று தடவும் என் கைகளே
ஆய்ச்சியர் வெண்ணெய் காணில் அவனுண்ட வெண்ணெய் ஈது என்னும் –என் பெண் கொடி ஏறிய பித்தே
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க பையவே நிலையும் வந்து என்நெஞ்சை உருக்குங்களே
ஆய்ச்சி யாகிய வன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்டு அழு கூத்தவப்பன்
நோவ வாய்ச்சி யுரலோடு ஆர்க்க இரங்கிற்றும் –தேவக் கோலப்பிரான் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள்
கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே –
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் –

—————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading