ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –10– -பால சேஷ்டிதங்கள– குரவை கூத்து -குடமாட்டம் —- அருளிச் செயல்கள்

மூத்தவை காண முது மணல் குன்றேறி கூத்து வந்தாடிக் குழலால் இசை பாடி
சுரி குழலாரோடு நீ போய் கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடுவனோ நம்பீ
குடங்கள் எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல எங்கோவே
குடமாடு கூத்தா வேதப் பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே

கோலக் குரவை கோத்ததும் குடமாட்டும் –முதலா வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என்னுள்ளம் உள்குளிர
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி யுண்டு எனில் அருளே

———————————————————-

கோத்து அங்கு ஆயர்தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன்
குரவை முன்னே கோத்தானை குடமாடு கூத்தன் தன்னை –எம்மானை
குடமாடு கூத்தன் குலவும் இடம் –நாங்கூர் அரிமேய விண்ணகரம்
குடம் கலந்து ஆடிக் குரவை முன் கோத்த கூத்த எம் அடிகள் தம் கோயில்
கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் –தேவ தேவ பிரான் திருக் கோட்டியூரானே
ஆடி யசைந்து ஆய்மடவாரோடு நீ போய் கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
கொட்டாய் பள்ளிக்குட்டி குடமாடி உலகளந்த மாட்டார் பூங்குழல் மாதவனை வர கொட்டாய் பள்ளிக் குட்டி
இளையாரோடும் மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்
கன்றப் பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் காணேடீ
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் ஆகிலும் என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்

————————————————————————————————-

அரவ மடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் குரவை குட முலை மற்குன்றம் கரவின்றி
விட்டு இருத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு எடுத்த செங்கண் அவன்
நீரார் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன் பாரோர்கள் எல்லாம் மகிழப் பறை கறங்க
சீரார் குடம் இரண்டும் ஏந்தி செழும் தெருவே ஆரார எனச் சொல்லி ஆடுமது கண்டு ஏரார் இள
முலையார் என்னையரும் எல்லாரும் வாராயோஎன்றார்க்குச் சென்றேன் என் வல் வினையால்
காரார் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் கலிப்பா கொன்னவிலும் கூத்தனாய்ப் பெயர்த்தும் குடமாடி என்னிவன் என்னப்படுகிற்ற ஈடறவும்

————————————————————–

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
குரவை கோத்த குழகனை மணி வண்ணனைக் குடக் கூத்தனை –இரவு நன்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ –
எனது ஆருயிர் கெழுமிய கதிர்ச் சோதியை மணி வண்ணனைக் குடக் கூத்தனை –தொழுமின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே
கோவலனார் குடக் கூத்தனார் தாளிணை மேலணி தண்ணம் துழாய் என்று நாளு நாள் நைகின்றதால் என்தன் மாதரே
கூத்தர் குடமெடுத்தாடில் கோவிந்தனாம் எனா ஓடும்
மதுவைவார் குழலார் குரவை பிணைந்த அழகும் அது விது வுது வென்னலாவன வல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் முதுவைய முதல்வா –
குரவை யாய்ச்சியரோடு கோத்ததும் –மாய வினைகளையே அலற்றி இரவும் நன்பகலும் தவிர்கிலம் என்ன குறை வெனக்கே
கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா என் அண்ட வானா என்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்– தொண்டடேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே
கோயில் கொண்டான் தன திருக் கடித் தானைத்தை கோயில் கொண்டான் அதனோடு என்னேஞ்சகம்
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே
கூத்தன் கோவலன்
ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு கூத்தனை குருகூர் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த ஆயிரத்துள் இவை
வண் திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே –

—————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading