ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –6—பால சேஷ்டிதங்கள—கன்று கொண்டு விளங்கனி எறிந்த சேஷ்டிதம் — அருளிச் செயல்கள் —

கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறியும் கரு நிற வென் கன்றே –
கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி எறிந்த பரமன்
பாற்கடல் வண்ணா யுன் மேல் கன்றின் உருவாகி மேய்ப்புலத்தே வந்த கள்ளவசுரர் தம்மை சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே
விளங்காய் எறிந்தாய் போலும் என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே
கரும்பார் நீள் வயல் காய் கதிர்ச் செந்நெலைக் கற்றாநிரை மண்டித்தின்ன விரும்பாக் கன்று ஓன்று கொண்டு விளங்கனி வீழ வெறிந்த பிரானே –
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
உலங்குண்ட விளங்கனி போலே உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு
கன்றினால் விள வெறிந்ததும்–ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி யுண்டு எனில் அருளே

———————————————————————————————————————————————-

விளங்கனி முனிந்தாய் வஞ்சனேன் அடியேன் –வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்
விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து –யுலகுண்ட காளை உகந்து இனிது நாடொறும் மருவி யுறை கோயில் –நாங்கூர் வைகுண்ட விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –
கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன்
அம்புருவ வரி நெடும் கண் அலர்மகளை வரையகலத்து அமர்ந்து மல்லல் கொம்புருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர்

————————————————————————————————————————————————————————————–

கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்

——————————————————————————————————————————

குழக்கன்று தீ விழாவின் காய்க்கு எறிந்த –திருமாலே –
தாழ்ந்த விளங்கனிக்குக் கன்று எறிந்து வேற்று உருவாய் ஞாலம் அளந்து அடிக் கீழ்க் கொண்டவன்
கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப் பணிலம் வாய் வைத்துகன்ற்ஹான் பண்டு-

———————————————————————————————————————————————————————————————

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி எறிந்த பரமன்
கரும்பார் நீள் வயல் காய் கதிர்ச் செந்நெலைக் கற்றாநிரை மண்டித்தின்ன விரும்பாக் கன்று ஓன்று கொண்டு விளங்கனி வீழ வெறிந்த பிரானே –
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
உலங்குண்ட விளங்கனி போலே உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு
குழக்கன்று தீ விழாவின் காய்க்கு எறிந்த –திருமாலே –
தாழ்ந்த விளங்கனிக்குக் கன்று எறிந்து வேற்று உருவாய் ஞாலம் அளந்து அடிக் கீழ்க் கொண்டவன்
கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப் பணிலம் வாய் வைத்துகன்ற்ஹான் பண்டு

கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன்
அம்புருவ வரி நெடும் கண் அலர்மகளை வரையகலத்து அமர்ந்து மல்லல் கொம்புருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர்

விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து –யுலகுண்ட காளை உகந்து இனிது நாடொறும் மருவி யுறை கோயில் –நாங்கூர் வைகுண்ட விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –

கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறியும் கரு நிற வென் கன்றே –
கன்றினால் விள வெறிந்ததும்–ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி யுண்டு எனில் அருளே

பாற்கடல் வண்ணா யுன் மேல் கன்றின் உருவாகி மேய்ப்புலத்தே வந்த கள்ளவசுரர் தம்மை சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே
விளங்காய் எறிந்தாய் போலும் என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே

கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
விளங்கனி முனிந்தாய் வஞ்சனேன் அடியேன் –வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்

———————————————————————————————————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading