கானக மா மடுவில் காளியின் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர வென் சிறுவா
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படம்படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு
உடம்பை யசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்
காய நீர் புக்குக் கடம்பேறி காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி–வித்தகனாய் நின்ற ஆயன்
காளியன் என்னும் தீப் பப்பூடுகள் அடங்க வுழக்கி கானகம் படியுலாவிக் கரும் சிறுக்கன்
அஞ்சுடர் ஆழி யுன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்து இருந்தேன் –
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன் –தூ மணி வண்ணன் –
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன்
குருந்தம் ஓன்று ஒசித்தானொடும் சென்று கூடியாடி விழாச் செய்து
பொல்லாங்கு ஈதென்று கருதாய் பூங்குருந்தம் ஏறி இருத்தி –
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து வாய்த்த காளியன் மேல் நடமாடிய கூத்தனார்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிறுத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் –
காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும்
அங்கு என்னுள்ளம் உள் குளிர ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி யுண்டெனில் அருளே
பொய்கைவாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய் ஆடரவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே –
——————————————————————————————————————————————————————-
வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப தளைத்த தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த வெயிற்று அழல் நாகத்த்கு உச்சியில் நின்றதுவாட திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடத்து உள்ளானே –
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்துத் தடம் தாமரைப் பொய்கை புக்கான் இடம் தான் நாங்கூர் –மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே
தலைக்கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் இளைக்கத் திளைத்திட்டு
அதன் உச்சி தன மேல் அடி வைத்த அம்மான் இடம் –நாங்கூர் –மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே
பல்லவம் திகழ் பூம் கடம்பேறி அக்காளியன் பண வரங்கில் ஒல்லை வந்துறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர் கோன் உறை கோயில் –வண் புருடோத்தமமே
பூம் குருந்து ஒசித்து –எந்தை நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
படவர வுச்சி தன் மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து –நான்கை மேய கடவுளே காவளம் தண் பாடியாய்-
கடு விடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன்னலக் கழித்து அவன் தன் படமிறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில் –திரு வெள்ளி யம் குடியதுவே
பாய்ந்தான் காளியன் மேல் -நறையூர் நின்ற நம்பியே
பூம் குருந்து ஒசித்து –அடியேனை யாளுகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான் –திருக் கோட்டியூரானே-
பூம் குருந்தம் சாய்த்து துள்ளி விளையாடி
அச்சம் தினைத்தினை இல்லை இப்பிள்ளைக்கு -ஆண்மையும் சேவகமும் உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான்
இன்று போய் பச்சிலைப் பூம் கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிரவாய் நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –
பூம் குருந்து ஒசித்து -இவ்வாயன் வாய் ஏங்கு வேய்ங்குழல் என்னோடாடும் இளமையே –
———————————————————————————————————————————————————————————
உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததுவும் உட்பட மற்றும் பல அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி இரவு நன் பகலும் தவிர்கிலம் என்ன குறை நமக்கே
உயர்கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல அகல் கொள் வையம் அளந்த மாயன் என்னப்பன்
தன் மாயங்களே பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப்பரிப்பே
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே
——————————————————————————————————————————————————————-
பூம் குருந்தம் சாய்த்தனவும் காற்கொடு பற்றியான் கை –
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் குரவை குட முலை மற்குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு எடுத்த செங்கண் அவன் –
பூம் குருந்தம் சாய்த்து –சூழ் அரவப் பொங்கணையான் தோள்
அரவாட்டி –கோ பின்னுமானான் குறிப்பு
ஓராயிரம் பண வெங்கோ வியல் நாகத்தை வாராய் எனக்கு என்று மற்றதன் மத்தகத்து சீரார் திருவடியால் பாய்ந்தான் –
—————————————————————————————————————————————————————————-
குருந்தம் ஓன்று ஒசித்தானொடும் சென்று கூடியாடி விழாச் செய்து
பொல்லாங்கு ஈதென்று கருதாய் பூங்குருந்தம் ஏறி இருத்தி –
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படம்படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு உடம்பை யசைத்தானால்
கானக மா மடுவில் காளியின் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர வென் சிறுவா
காய நீர் புக்குக் கடம்பேறி காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி–வித்தகனாய் நின்ற ஆயன்
காளியன் என்னும் தீப் பப்பூடுகள் அடங்க வுழக்கி கானகம் படியுலாவிக் கரும் சிறுக்கன்
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன் –தூ மணி வண்ணன் –
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன்
குருந்தம் ஓன்று ஒசித்தானொடும் சென்று கூடியாடி விழாச் செய்து
பொய்கைவாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய் ஆடரவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே –
வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப தளைத்த தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த வெயிற்று அழல் நாகத்த்கு உச்சியில் நின்றதுவாட திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடத்து உள்ளானே –
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்துத் தடம் தாமரைப் பொய்கை புக்கான் இடம் தான் நாங்கூர் –மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே
தலைக்கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் இளைக்கத் திளைத்திட்டு
அதன் உச்சி தன மேல் அடி வைத்த அம்மான் இடம் –நாங்கூர் –மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே
பல்லவம் திகழ் பூம் கடம்பேறி அக்காளியன் பண வரங்கில் ஒல்லை வந்துறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர் கோன் உறை கோயில் –வண் புருடோத்தமமே
பூம் குருந்து ஒசித்து –எந்தை நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
படவர வுச்சி தன் மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து –நான்கை மேய கடவுளே காவளம் தண் பாடியாய்-
கடு விடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன்னலக் கழித்து அவன் தன் படமிறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில் –திரு வெள்ளி யம் குடியதுவே
பாய்ந்தான் காளியன் மேல் -நறையூர் நின்ற நம்பியே
பூம் குருந்து ஒசித்து –அடியேனை யாளுகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான் –திருக் கோட்டியூரானே-
பூம் குருந்தம் சாய்த்து துள்ளி விளையாடி
பூம் குருந்தம் சாய்த்தனவும் காற்கொடு பற்றியான் கை –
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் குரவை குட முலை மற்குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு எடுத்த செங்கண் அவன் –
பூம் குருந்தம் சாய்த்து –சூழ் அரவப் பொங்கணையான் தோள்
அரவாட்டி –கோ பின்னுமானான் குறிப்பு
ஓராயிரம் பண வெங்கோ வியல் நாகத்தை வாராய் எனக்கு என்று மற்றதன் மத்தகத்து சீரார் திருவடியால் பாய்ந்தான் –
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து வாய்த்த காளியன் மேல் நடமாடிய கூத்தனார்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிறுத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் –
அஞ்சுடர் ஆழி யுன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்து இருந்தேன் –
அச்சம் தினைத்தினை இல்லை இப்பிள்ளைக்கு -ஆண்மையும் சேவகமும் உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான்
இன்று போய் பச்சிலைப் பூம் கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிரவாய் நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –
பூம் குருந்து ஒசித்து -இவ்வாயன் வாய் ஏங்கு வேய்ங்குழல் என்னோடாடும் இளமையே –
உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததுவும் உட்பட மற்றும் பல அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி இரவு நன் பகலும் தவிர்கிலம் என்ன குறை நமக்கே
உயர்கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல அகல் கொள் வையம் அளந்த மாயன் என்னப்பன்
தன் மாயங்களே பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப்பரிப்பே
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே
காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும்
அங்கு என்னுள்ளம் உள் குளிர ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி யுண்டெனில் அருளே
————————————————————————————————————————————————————————————————–
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply