ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –2—பால சேஷ்டிதங்கள—-பூதனா சம்ஹாரம் – அருளிச் செயல்கள் —

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த விப்பிள்ளை
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட அஞ்சன வண்ணனை
வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள வஞ்ச முலைப் பேயின் நஞ்சமுது உண்டவனே
பேய் முலை உண்டானே சப்பாணி
பேய்ப்பால்முலையுண்ட பித்தனே -கேசவ நம்பீ
பேய்ச்சி முலை யுண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என்நெஞ்சம் ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் –
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே –
பேயின் முலை யுண்ட பிள்ளையிவன் முன்னம்
பிள்ளை அரசே நீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன்
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர் துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்
வன் பேய் முலை யுண்டதோர் வாயுடையன் –
பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க வல்லானை
பேய் முலை நஞ்சுண்டு
தாய் முலைப் பாலிலமுதிருக்கத் தவழ்ந்து தளர் நடையிட்டுச் சென்று பேய் முலை வாய் வைத்து நஞ்சை யுண்டு பித்தன் என்றே பிறர் எச நின்றாய்
வஞ்சமேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வறண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க நஞ்சமார் தரு சுழி முலை யந்தோ சுவைத்து நீ யருள் செய்து வளர்ந்தாய்
கள்ளதாய பேய்மகள் வீட வைத்த வெய்ய கொங்கை ஐயபாலமுது செய்து ஆடகக் கை மாதர்வாய் அமுதுண்டது என் கொலோ –
ஆய்ச்சி பாலையுண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் யுண்டு பின் பேய்ச்சி பாலை யுண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய் அஞ்சனத்த வண்ணனாய ஆதி தேவன் அல்லையே
————————————————————————————————————————————————————–
பேயிடைக்கிருந்து வந்த மற்றவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற தாயிடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்
தாயாய் வந்த பேயுயிரும் தயிரும் விழுதும் உடனுண்ட வாயான் –
வன் பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரானவன் பெருகுமிடம்
வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேய் அலறி மண் சேர நஞ்சமர் முலையோடு உயிர் செக வுண்ட நாதனைத் தானவர் கூற்றை
அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனைக்
பேய்த்தாயை முலை யுண்ட பிள்ளை தன்னைப்
பஞ்சிச் சிறு கூழைஉருவாகிய மருவாத வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல்
பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசிதுவென்றால்
இழையாடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு
பண்ணேர் மொழி யாய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க் கழுதுக்கு இரங்காது அவள் தன் உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தானிடம் –
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவு கொடு மாள வுயிருண்டு
வஞ்சனையால் வந்தவள் தனுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெய் அமுதுண்டு –
பொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி பெற்றெடுத்த தாய் போலே மடுப்ப ஆரும் பேணா நஞ்சுண்டுகந்த பிள்ளை கண்டீர் –
வஞ்ச மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும்
பேய்ச்சி முலையுண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன்
கலையுடுத்த வகல்குல் வன் பேய் மகள் தாயென முலை கொடுத்தாள் உயிருண்டவன் வாழிடம் என்பாரால்-
பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயனாய் -மாலாய்
பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆருயிருண்டு –
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சாப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப்பின்னே இலைத்தடத்த குழலூதி
மண் சேர முலை யுண்ட மா முதலாய் வானவர் தம் கோவே என்று –
வஞ்சனைப் பேய் முலையோடு உயிர் வாய் மடுத்த்துண்டானை
மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள யுயிர் வவ்விய வெம்மாயோன் காண்மின்
பேய்முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையை தெள்ளியார் வணங்கப்படும் தேவனை -மாயனை –
பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்ததுண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை அமுதத்தினை நாதனை -நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை
நஞ்சு தோய் கொங்கை மேல் அங்கை வாய் வைத்து அவள் நாளை யுண்ட மஞ்சனார் –
தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க வன் மகனாயவளாவி வாங்கி முலையுண்ட நம்பீ
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே
பேய்ச்சி முலை யுண்ட பிள்ளாய்
யாயும் பிறரும் அறியாத யாமத்து மாய வலவைப் பெண் வந்து முலை தர பேய் என்று அவளைப் பிடித்து உயிரை யுண்ட வாயவனே
நள்ளிருள் வந்த பூதனை மாள –
அங்கோர் தாயுருவாகி வந்தவள் கொங்கை நஞ்சுண்ட கோயின்மை கொலோ
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
—————————————————-

மாயோம் தீய வலவலைப் பெரு மா வஞ்சப் பேய் வீய தூய குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் வானோர் தனித்தலைவன்
ஒக்கலை வைத்து முலைப்பால் உன் என்று தந்திட வாங்கி செக்கஞ்செக வன்றவள் பால் உயிர் செக வுண்ட பெருமான் –
மட நெஞ்சால் குறைவில்லா மகள் தாய் செய்தொரு பேய்ச்சி விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பேய்முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான் –
பேய் முலையுண்டு –தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரானை எந்நாள் கொலோ யாமுருகின்றது தோழீ-
வஞ்சப் பெண்ணை சாவப் பாலுண்டதும் –தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே
பேய் முலை நஞ்சு ஊணாக வுண்டான் -உருவோடு பேரல்லால் காணா கண் கேளா செவி
முகில் வண்ணா நின்னுருகிப் பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண் ஆய்த்தாய் முலை தந்தவாறு –
முலை உண்ட செங்கண் அவன்
உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை அகம் குளிர உன் என்று அளாவி உகந்து முலை யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும் அலையோ பண்பால் ஆனமையால் அன்று –
அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி யுனக்கு இரங்கி -நின்று முலை தந்த இந்நீர்மைக்கு அன்று வரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து
——————————————————————————————–

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய் தெருளா மொழியான்
பேய் முலை யுண்டு யுகந்தான் பண்டு
நலமே வலித்து கொல் நஞ்சூட்டு வன் பேய் நிலமே புரண்டு போய் வீழ சலமே தான் வெம் கொங்கை யுண்டான் மீட்டு ஆய்ச்சி யூட்டுவான் தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு –
பேய் முலை நஞ்சுண்டு–கோப் பின்னுமானான்
தீப்பால பேய்த்தாய் உயிர் காலாய்ப் பாலுண்டு அவளுயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி –

——————————————————————————————————————————————————————————————

வஞ்சனையால் வந்த-பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த விப்பிள்ளை
அஞ்சன வண்ணன் – கொங்கை நஞ்சுண்ட கோயின்மை
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரான்
வானவர் தாம் மகிழ வஞ்ச முலைப் பேயின் நஞ்சமுது உண்டவன்
பேய்ப்பால்முலையுண்ட பித்தன் -கேசவ நம்பீ-மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயன்
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர் துள்ளச் சுவைத்தான் -வன் பேய் முலை யுண்டதோர் வாயுடையன் –
பிள்ளை அரசே நீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன்
பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க வல்லான்
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய் அஞ்சனத்த வண்ணனாய ஆதி தேவன் அல்லையே
தாயாய் வந்த பேயுயிரும் தயிரும் விழுதும் உடனுண்ட வாயான் –
பேய்ச்சி முலையுண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன்
நஞ்சு தோய் கொங்கை மேல் அங்கை வாய் வைத்து அவள் நாளை யுண்ட மஞ்சனார் –
யாயும் பிறரும் அறியாத யாமத்து மாய வலவைப் பெண் வந்து முலை தர பேய் என்று அவளைப் பிடித்து உயிரை யுண்ட வாயவனே
வன் பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான்-தீப்பால பேய்த்தாய் உயிர் காலாய்ப் பாலுண்டு அவளுயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி –
வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேய் அலறி மண் சேர நஞ்சமர் முலையோடு உயிர் செக வுண்ட நாதன் -தானவர் கூற்று -பேய் முலை நஞ்சுண்டு–கோப் பின்னுமானான்
உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை அகம் குளிர உன் என்று அளாவி உகந்து முலை யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும் அலையோ பண்பால் ஆனமையால் அன்று
மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள யுயிர் வவ்விய வெம்மாயோன் காண்மின்
பேய்முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையை தெள்ளியார் வணங்கப்படும் தேவனை -மாயனை –
பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்ததுண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை அமுதத்தினை நாதனை -நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பி
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சாப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப்பின்னே இலைத்தடத்த குழலூதி
கலையுடுத்த வகல்குல் வன் பேய் மகள் தாயென முலை கொடுத்தாள் உயிருண்டவன் –
பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயனாய் -மாலாய்
பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆருயிருண்டு –
பொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி பெற்றெடுத்த தாய் போலே மடுப்ப ஆரும் பேணா நஞ்சுண்டுகந்த பிள்ளை
பண்ணேர் மொழி யாய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க் கழுதுக்கு இரங்காது அவள் தன் உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான்
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவு கொடு மாள வுயிருண்டு

கள்ளதாய பேய்மகள் வீட வைத்த வெய்ய கொங்கை ஐயபாலமுது செய்து ஆடகக் கை மாதர்வாய் அமுதுண்டது என் கொலோ
பேயிடைக்கிருந்து வந்த மற்றவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற தாயிடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்

முகில் வண்ணா நின்னுருகிப் பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண் ஆய்த்தாய் முலை தந்தவாறு –
நலமே வலித்து கொல் நஞ்சூட்டு வன் பேய் நிலமே புரண்டு போய் வீழ சலமே தான் வெம் கொங்கை யுண்டான் மீட்டு ஆய்ச்சி யூட்டுவான் தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து
தாய் முலைப் பாலிலமுதிருக்கத் தவழ்ந்து தளர் நடையிட்டுச் சென்று பேய் முலை வாய் வைத்து நஞ்சை யுண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
பேய்ச்சி முலை யுண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என்நெஞ்சம் ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் –
பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய் தெருளா மொழியான்

அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி யுனக்கு இரங்கி -நின்று முலை தந்த இந்நீர்மைக்கு அன்று வரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து

உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
ஆய்ச்சி பாலையுண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் யுண்டு பின் பேய்ச்சி பாலை யுண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு –
வஞ்சனையால் வந்தவள் தனுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெய் அமுதுண்டு –

பேய்முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான் –
பேய் முலையுண்டு –தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரானை எந்நாள் கொலோ யாமுருகின்றது தோழீ-
பேய் முலை நஞ்சு ஊணாக வுண்டான் -உருவோடு பேரல்லால் காணா கண் கேளா செவி
வஞ்சப் பெண்ணை சாவப் பாலுண்டதும் –தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே –

——————————————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading