திரு அவதார அருளிச் செயல்கள் –
வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி -பேணிச் சீருடை பிள்ளை பிறந்தினில்
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன் மண் கொள் வசுதேவர் தம் மகனாய் வந்து திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணன் –
உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –
உருவுடையாய் யுலகேழும் உண்டாக வந்து பிறந்தாய் திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் –
மக்கள் அருவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய் திருமாலிரும் சோலை எந்தாய் –
நந்தகோபன் குமரன் யசோதை இளம் சிங்கம் –மன்னு வடமதுரை மைந்தனே -ஆற்றப் படைத்தான் மகனே
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர –
கஞ்சன் வலை வைத்த வன்று காரிருளில் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போதந்தாய்
பெற்று இருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்து ஒரு தாயில் வளர்ந்த நம்பி –
நந்த கோபன் என்னும் கொடிய கடிய திருமாலால் வெற்றிக் கருளக் கொடியான் தன் மீ மீ தாடா வுலகத்து வேற்ற வெறிதே பெற்ற தாய் –
மாலாய்ப் பிறந்த நம்பியை –
நந்தன் பெற்றனன் நல்வினையில்லா நாங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே
ஆயர் பிள்ளையாய் ஆனை மேய்த்தி-
திருமடந்தை மண் மடந்தை இருபாலும் திகழ தீ வினைகள் போயகல வடியவர்கட்கு என்றும் அருள் நடந்து இவ் வேழ் உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த –
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்துறை கோயில் –
மாற்று அரசர் மணி முடியும் திரளும் தேசும் மற்றவர் தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளயுமுடன்கள்ள வந்து தோன்றிக் கத நாகம் காத்து அளித்த கண்ணர் –
மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை -நன்நறையூர் நின்ற நம்பியை –
தந்தை காலில் பெரு விலங்கு-தாள விழ நள்ளிருட்கண் வந்த வெந்தை பெருமானார் மருவி நின்ற ஊர்
நந்தன் முதலை நிலமங்கை நல் துணைவன் அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான் கந்தம் கமழ்
காயா வண்ணன் கதிர் முடி மேல் கொந்து நறும் துழாய் கொண்டூதாய் கோல் தும்பி
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன சிந்தை சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெரும் அளவிருன்தேனை –
நந்தன் பெறப் பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே எந்தை பெருமானே உன்னை என்னம்மம் சேமம் உண்ணாயே
பெற்றத் தலைவன் எங்கோமான் பேரருளாளன் முதலாய் சுற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா –
பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயலிடத்து உற்றார் ஒருவரும் இன்றி உலகினில் மற்றாரும் அஞ்ச போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே
மணமகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற முதலை அண்ணல் –
நந்தன் முதலைக்கு இங்கு என் கடவோம்
ஈடும் வலியும் உடைய இந் நம்பி பிறந்த ஏழு திங்களில்
அல்லிக் கமலக் கண்ணனை –
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடி
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் -மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை தூய அமுதை –
அமரர் முழு முதல் ஆகிய வாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –
ஆராவமுதாய் அல்லாவியுள் கலந்த காரார் கருமுகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலை
எங்கும் உளன் கண்ணன் –
கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அனந்தனை
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்டவன் கண்டீர்
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்
வல்வினை தீர்க்கும் கண்ணனை
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை
கடியன் கொடியன் நெடியமால் உலகம் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தன்
பிறந்தவாறும் –மாயங்களும் எனதாவியை நின்று நின்று உருக்கி யுண்கின்ற இச் சிறந்த வான் சுடரே –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
மனப்பரிப் போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தான சீற்றத்தினை முடிக்கும்
-புனத் துழாய் மாலை மார்பன் என்னப்பன் தன மாயங்களே
நிறம் கரியானுக்கு நீடுலகுண்ட திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வனவற்கு கறங்கிய சக்கரக் கையவனுக்கு –
விண் மீதிருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் –
வந்தாய் போல் வாராதாய் வாராதே போல் வருவானே
என்னுடைய கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -என் திரு மார்பன் தன்னை –
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே அடியனேன் பெரிய வம்மானே –
மாயக் கூத்தா வாமனா கொண்டால் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா
பிறந்த மாயா –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் திண்ணமாம் நும்முடைமை யுண்டேல்
அவனடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டாம் நும்மததாதும் அவனன்றி மற்றில்லையே
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர்கட்கு எல்லாம் விண்ணாளன்-
காட்டித் தன் கணை கழல்கள் கடு நரகம் புகழ் ஒழித்த கண்ணன்
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்
கதையும் பொருளும் கண்ணா நின் பேரே இதயம் இருந்தவையே எத்தில் கதையின் திரு மொழியாய் நின்ற திருமாலே –
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
நாராயணன் என்னை யாளி நரகத்துக்குச் சேராமல் காக்கும் திருமால்
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற நாதனை ஞாலம் விளங்கும் நாதனை ஞாலம் தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பனை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனை
தீ வினைக்கு அரு நஞ்சை நல் வினைக்கு இன்னமுதத்தினை பூவினை மேவிய தேவி மணாளனை –
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன மலரடிப் போதுகளே
சீரால் பிறந்து சிறப்பால் வளராது –
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் சீர் கலந்த சொல்
கையில் கனி எண்ணக் கண்ணனைக் காட்டித் தரிலும் –
————————————————————————————————————-
திருமடந்தை மண் மடந்தை இருபாலும் திகழ
தீ வினைகள் போயகல வடியவர்கட்கு என்றும் அருள் நடந்து இவ் வேழ் உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த
-இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –
கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன்
-மணமகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நிலமங்கை நல் துணைவன் அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்-
கந்தம் கமழ் காயா வண்ணன்
தீ வினைக்கு அரு நஞ்சாய் நல் வினைக்கு இன்னமுதாய் பூவினை மேவிய தேவி மணாளன்
நாராயணன் என்னை யாளியாய் நரகத்துக்குச் சேராமல் காக்கும் திருமால்
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நிற்கும்
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்-காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –
ஆராவமுதாய் அல்லாவியுள் கலந்த காரார் கருமுகில் போல் என் அம்மான்
தாமரைக் கண்ணன் விண்ணோர் பரவும் தலைமகன் -தாமோதரன் தனி முதல்வன் ஞாலம் உண்டவன்
வண்ண மா மணிச் சோதி அமரர் தலைமகன் – நெடுமால் -மாயன் -கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணல் அச்சுதன் அனந்தன்
செய்ய தாமரைக் கண்ணன் உலகு ஏழும் உண்டவன்-மூவராகிய மூர்த்தி-முதல் மூவர்க்கும் முதல்வன்
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
அளிக்கும் பரம கண்ணன் ஆழிப் பிரான்
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் வல்வினை தீர்க்கும் எங்கும் உள்ள கண்ணன்
அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தான சீற்றத்தினை முடிக்கும்
-புனத் துழாய் மாலை மார்பன் என்னப்பன்-
நிறம் கரியான் – நீடுலகுண்ட திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வன் – கறங்கிய சக்கரக் கையவன்
விண் மீதிருப்பான் மலை மேல் நிற்பான் கடல் சேர்ப்பான் மண் மீது உழல்வான் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவான்
வந்தாய் போல் வாராதாய் வாராதே போல் வருவான்
என்னுடைய கோவலன் என் பொல்லாக் கரு மாணிக்கம் -என் திரு மார்பன்
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –
பாரெல்லாம் உய்ய திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணன் –
வேண்டித் தேவர் இரக்க-மக்கள் அருவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து -ஒருத்தி மகனாய்
தந்தை காலில் பெரு விலங்கு-தாள விழ நள்ளிருட்கண் வந்த வெந்தை பெருமானார் -மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன் மண் கொள் வசுதேவர் தம் மகனாய் -திருவுடையாள் மணவாளான் -மன்னு வடமதுரை மைந்தன்
ஈடும் வலியும் உடைய இந் நம்பி உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருந்து -உருவுடையானாய் யுலகேழும் உண்டாகவந்து பிறந்து-
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
நாராயணன் என்னை யாளி நரகத்துக்குச் சேராமல் காக்கும் திருமால்
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
வேதன் வெண் புரி நூலv விண்ணோர் பரவ நின்ற நாதன் ஞாலம் விளங்கும் நாதன் ஞாலம் தத்தும் பாதன்பாற்கடல் பாம்பனை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதன்
தீ வினைக்கு அரு நஞ்சை நல் வினைக்கு இன்னமுதம் பூவினன் மேவிய தேவி மணாளன்
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன மலரடிப் போதுகளே
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணன் -மாலாய்ப் பிறந்த நம்பி-
மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை-ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர –
பெற்று இருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்து ஒரு தாயில் வளர்ந்த நம்பி -தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல்
பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயலிடத்து -சீரால் பிறந்து சிறப்பால் வளராது –
ஆயர் பிள்ளையாய் ஆனை மேய்த்தி-ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்காய் -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனாய்
நந்தகோபன் குமரன் யசோதை இளம் சிங்கம் –நந்தன் முதலை யாய் -அண்ணலாய் -நந்தன் பெறப் பெற்ற நம்பீயாய் நான் உகந்து உண்ணும் அமுதாய் -எந்தை பெருமானாய்
பெற்றத் தலைவனாய் எங்கோமானாய் பேரருளாளனாய் முதலாய் சுற்றக் குழாத்து இளங்கோவாய் தோன்றிய தொல் புகழாளானாய்
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனாய் அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறாய்
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செம் கேழ் விரலினும் கடைக் கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன் நல்வினையில்லா நாங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே என்னும்படி
அமரர் முழு முதலாகிய வாதியாய் அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் -மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியாய் தூய அமுதாய் அல்லிக் கமலக் கண்ணன்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமான் கடியன் கொடியன் நெடியமால் உலகம் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தன்
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனாய் அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறாய் அத்தாலே அடியனேன் பெரிய வம்மானாய்
மாயக் கூத்தனாய் வாமனனாய் கொண்டால் வண்ணானாய் குடக் கூத்தனாய் வினையேன் கண்ணனாய்
பிறந்த மாயான்–வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி–
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர்கட்கு எல்லாம் விண்ணாளன்-
காட்டித் தன் கணை கழல்கள் காட்டி கடு நரகம் புகழ் ஒழித்த கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து திண்ணமாம் நும்முடைமை யுண்டேல்
அவனடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டாம் நும்மததாதும் அவனன்றி மற்றில்லையே –
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே
சீரால் பிறந்து சிறப்பால் வளராது –உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
கையில் கனி எண்ணக் கண்ணா கதையும் பொருளும் நின் பேரே இதயம் இருந்தவையே எத்தில் கதையின் திரு மொழியாய் நின்ற திருமாலே –
—————————————————————————————————–
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply