ஸ்ரீ பாஷ்யம்— –1-1-2- -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

ஜென்மாதி அதிகரணம்  –
சங்கதி -7 வகைகள் உண்டு-நிரூபிதக
1. சாஸ்திர சங்கதி. பொதுவாக சாஸ்திரம் பிரமாண-பிரமேயங்களை பற்றியது.
மீமாம்ஸா சாஸ்திரமான வேதாந்த சாஸ்திரத்துக்கு விஷயம் ஜீவாத்ம-பரமாத்மா வாகும்.
ஶ்ரீபாஷ்யத்துக்கு ஸ்வாமி சுவாமி எம்பெருமானாரே சாரீரக மீமாம்ஸா பாஷ்யம் என்று பெயர் கொடுத்துள்ளளதால்
இது ஆத்மா விஷயமான சாஸ்திரம். சரீரே பவ :சரீரக : ஜீவாத்மாவைக் குறிக்கும். சாரீரஹ ஏவ சாரீரக : இரண்டும் ஒன்றே.
சாரீகஸ்ய ஜீவஸ்ய மீமாம்ஸா என்றால் ஆத்ம விசாரமான சாஸ்திரம் இது என்பது பொருள். மீமாம்ஸா = விசாரம்.
காவ்யம் ராமாயாணம் சீதாயா சரிதம் போலே-பூர்வ உத்தர மீமாம்ச -உக்தி பிரதானம் -தர்க்க சாஸ்திரம்
சுருதி பிரதானம்  -வேதார்த்த சாஸ்திரம்-சாஸ்திரங்கள் உடன்பாடு உண்டே

2. காண்ட சங்கதி. ஸம்ஹிதா , பிராம்மண, ஆரண்யகம் போன்ற வேத பாகம் பூர்வ காண்டத்தில் அடங்கும்.
இவை கர்ம விசாரமானவை. வேதாந்த பாகம் உத்தர காண்டமாகும். இவை இரண்டுக்கும் கர்ம காண்டம் – ஞான காண்டம் என்று பெயர்.
காண்ட சங்கதி என்றால் வேதார்த்த விசாரம் கர்மகாண்டத்தில், வேதாந்தார்த்த விசாரம் ஞான காண்டத்தில் என்பதாகும்.

3. த்விக சங்கதி . நான்கு பாகங்கள் கொண்ட சரீரக சாஸ்திரத்தில் முதல் இரண்டு அத்தியாயங்கள் சித்த த்விகம்.
கடைசீ இரண்டும் சாத்ய த்விகம் ஆகும்.
சித்தத்விகம் ஜகத் காரண விஷயமான பரமாத்மாவைப் பற்றியது.
சாத்ய த்விகம் அவனை அடைய உபகாரணமாய் இருக்கிற உபாஸனாதி உபாயங்களைப் பற்றியது.
இவை இரண்டுக்குமான தொடர்பு த்விக சங்கதி.

4. அத்யாய சங்கதி. முதல் அத்யாயம் சமன்வயா அத்யாயம் . எல்லா ஸ்ருதி வாக்கியங்களும் பரமாத்மாதான் ஜகத் காரணம்
என்று நிரூபிபதை சொல்ல வந்தது.

5-பாத சங்கதி -ஒவ்வொரு அத்யாயத்திலும் 4 பாதங்கள். முதல் அத்யாயம் முதல் பாதத்துக்கு அவியோக விவச்சேத பாதம் என்று பெயர்.
இப்படியாக அடுத்தடுத்த பாதங்களின் காரண காரிய சம்பந்தத்தைச் சொல்வது பாத சங்கதி

6-பேடிகா சங்கதி -folder போல் -முதல் நான்கும் சாஸ்த்ராரம்ப அதிகரணங்கள்-முதல் 4 சூத்திரங்கள் ஒரு பேட்டிகா.
மற்றவை ஒரு பேட்டிகா. முதல் பேட்டிகா சாஸ்திர ஆரம்ப ஸமர்த்தன ரூபமானது. ஆக அது ஒரு விபாகம்.
இப்படி விபாக ரீதியாக விவரிப்பது பேட்டிகா சங்கதி.

7-அதிகரண சங்கதி -அவாந்தர-சங்கதி-கீழ்-மேல் அதிகாரங்களுக்கான விஷய தாரை அதிகரண சங்கதி.

அதிகரண நாமகரணம் -ஜென்மாதி -தர்க்க மீமாம்ச வியாகரண நியாய சாஸ்திரம்

அவாந்தர சங்கதி உதாஹரணம் -சொல்வார்கள்
தர்க்க சாஸ்திரம் படித்து ப்வ்ய்யாகரன் சாஸ்திரம் -அலங்கார சாஸ்திரம் மீமாம்ச சாஸ்திரம் படித்த சிஷ்யர்கள் ஒரு குருவிடம்
தர்க்க சாஸ்திரம் சிஷ்யர் இடம் விசேஷ அபிமானம்
அவேச்சேதகம்-புகை உள்ள இடம் தீ –
பட்டச்ய கத்யாம் சரகத்ய  வித்யா -குருவின் நடுவில் ஓணான் போகுமா -வாக்கியம் அலங்காரம் பார்த்து
காய்ந்து போன மரத்தில் பாம்பு உள்ளது

ஜந்மாஸ்ய யதஹ தத் பிரஹ்ம- (1-1-2)

பிரஹ்மம் விசார்ய யோக்கியமான வஸ்து என்று முதல் சூத்திரத்தால் சொன்ன பிறகு
அடுத்து அந்த பிரஹ்மம் எது என்ற கேள்வி எழுகிறது. இப்படி நடுவிலே கேட்கப்படுகிற கேள்விக்கு பதிலாக இரண்டாவது சூத்திரம் அவதரிக்கிறது.
இந்த இடைப்பட்ட கேள்வியே இரண்டு சூத்திரத்துக்குமான அவாந்தர சங்கதி யாகும்.

ஜந்மாஸ்ய யத : தத் பிரஹ்ம .

ஜன்ம + ஆதி = ஸ்ருஷ்டி ஸ்திதி பிரளயம். படைத்துக்கு காத்து கரத்தல் . பஹு ரீஹி ஸமாஸம் .
1. அதக்குண பஹு ரீஹி ஸமாஸம் (உ.ம்.) சித்ரகுஹு 2. தத்குண பஹு ரீஹி ஸமாஸம். (உ.ம். லம்ப கர்ண:)

ஜன்மாதி தத்குண பஹு ரீஹி ஸமாஸம்.

எப்படிப் பட்ட புருஷனாலே, ஸ்ருஷ்டி ஸ்திதி பிரளயம் பிரவர்திக்கின்றனவோ தத் பிரஹ்ம .

ஜென்மாதி -ஆதி சப்தம் -சிருஷ்டி ஸ்திதி பிரளயங்கள் -சமஸ்த பதம் -பஹூ விகுதி சமாகம்
பீதாம்பரம் -பீதம் அம்பரம் யஸ்ய சகா –
ஜன்ம ஆதி யஸ்ய சகா –
அஸ்ய ஜகத் -ஜகத்தை விவரிக்க இரண்டு விசேஷணங்கள் சொல்லி மீமாம்ச -யஞ்ஞம் சொல்லும் சூத்ரம் இது என்பர்
ப்ரஹ்மாசாரி -வேத அத்யயனம் பண்ணுபவன்  -நேரான அர்த்தம்
சம்ஹித கிரந்தம்
ப்ரஹ்ம சப்தம் -வேதம் சொல்லும்
சம்ஹிதா வாக்கியங்களையும் ஸ்வாமி பிரமாணங்களாக காட்டு அருளுவார்
சங்கரர் உபநிஷத் மட்டுமே காட்டுவார் –

வித்யா ஸ்தானம்
புராண தர்க்க மீமாம்ச இத்யாதிகள்
புராணங்கள் அப்ரமாணங்கள் இல்லை-சாத்விக ராஷச தாமஸ புராணங்கள் உண்டே
இதிகாசத்தில் புராண கதைகள் உண்டே
இதிகாசம் –
புராணம் –
சப்த சமுத்ரங்கள் -எம்பார் ஸ்வாமி காட்டி
ஜம்போத்தீபே -சங்கல்பம்
ஸ்தல புராணங்கள் உண்டே –
பாகவதம் பிரமாணமாக நிறைய பூர்வர்கள் காட்ட வில்லை
வியாசர் பராசரர் பெயர் வர ஆளவந்தார் -ஸ்ரீ விஷ்ணு புராணம் புராண ரத்னம் –

ஷேத்ரஞ்ஞன் -சரீர சரீரி பாவம் –
கடத்வம் -பொதுவானது –
ஜீவாத்மா -பலவுண்டு -ஸ்வ பாவங்கள் மாறும் -எதனால் மாறுபாடும் புரியாது –
வைசித்ரியம் பார்க்கிறோம் -அசிந்த்யம்-பகவத் சங்கல்ப அதீநத்தால் –
கர்ம அநு குணமாக -பலன் -பிரசித்தம் -பகவான் தான் பல ப்ரதன் -கர்ம இல்லை
அநுப பபத்தி வரும் –
சர்வ கர்ம -பார்த்து -அதற்கு அநு குணமாக –

எந்த கர்மாவுக்கு எந்த சமயத்தில் பலனை அனுபவிக்கப் பண்ணுவது எம்பெருமானது சங்கல்பம் அடியாகவே தானே –
கர்மா -அவயகதம் -என்றும் பெயர் -ஸ்தம்ப சதுர்முக பிரம்மா வரை ஷேத்ரஞ்ஞன் –
சர்வேஸ்வர நிகிலே ஹேய ப்ரத்ய நீக்க கல்யாணைகக குணங்கள் கொண்டவன்
சத்யசங்கல்பன் –ஞானாதி -சர்வஜ்ஞ்ஞன் -சர்வ சக்தன் –பரம காருணிகா–
நிர்ஹேதுக தயா -பரஸ்மாத் பரம் -8 விசேஷனங்கள் யஸ்மாத் பிரம்மாதி -நியத தேக கால பல போக பிரயோக –
விசேஷனங்கள் மீண்டும் மீண்டும் காட்டி அருளி -நிர்விசேஷ வாதம் நிறைந்து இருந்த காலம் –
ஈஸ்வரனுக்கு 8 விசேஷணங்களை சொல்லி இருக்கிறார் ஸ்வாமி ராமானுஜர்.
1. ஸர்வேஸ்வராத்
2. நிகில ஹேய பிரத்யநீக ஸ்வரூபாத்
3. சத்ய சங்கல்பாத்
4. ஞான ஆனந்த கல்யாணகுணகணாத்
5. ஸர்வஜ்ஞாத்
6. ஸர்வ சக்தேஹே
7. பரமகாருணிகாத்
8. பரஸ்மாத் பும்ஸா–இத்தனைக்கும் இடம் கொடுப்பது, நமக்கு அவன் வகுத்த சேஷியாகையாலே என்பதை
இந்த விசேஷணங்கள் மூலமாக காட்டுகிறார் பகவத் ராமானுஜர்.

அதிகரண அம்சங்களான
விஷயம், சம்ஸயம், பூர்வ பக்ஷம், சித்தாந்தம், ஆக்ஷேபம், சமாதானம் என்கிற வரிசையில்
இந்த ஜந்மாதஸ்ய அதிகரணத்தில் விஷய வாக்கியம் உண்டா ? என்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டு அதற்கு அவசியம் இல்லை,
என்பதற்கான காரணம் முதல் 4 அதிகரணங்களும் சாஸ்திர ஆரம்பக ரூபமான அதிகரணங்களாக இருக்கிறபடியாலே என்று கொள்ள வேண்டும்.

முதல் 4 அதிகரணங்களின் உத்தேஸ்யம்
ஜிக்ஞாசாதிகரணம் வித்பத்தி அபாவத்தைப் பரிகரிக்கிறது.
ஜன்மாதஸ்யாதிகாரணத்தில் பிரதிபத்தி துஸ்சக -அ.து. ஞான துஷ்கர தோஷத்தை பரிகரிக்கிறது.

பிரதிபத்தி துஸ்சகமாவது – பகவானை பாஹ்ய பிரத்யக்ஷத்தால் (ரூப-ரச-கந்த-சக்ஷுர்-ஷோத்ர இந்திரியங்களால்) கிரஹிக்க முடியாது .
மானஸ பிரத்யக்ஷத்தாலும் பரமாத்மாவை கிரஹிக்க முடியாது.
காரணம் என்னுடைய ஆத்மாவை என்னுடிய மனசால் கிரஹிக்கலாமே யொழிய இன்னொருவருடைய ஆத்மாவை என்னுடைய மனஸால் கிரஹிக்க இயலாது.
ஆத்மாவைக் காட்டிலும் பரமாத்மா வேறுபட்டவனாகையாலே , என்னுடைய ஆத்மாவாய்க் கொண்டு பரமாத்மாவை கிரஹிக்க முடியாது.

பரமாத்மாவை அனுமானத்தாலும் சாதிக்க முடியாது. காரணம் புகையும் நெருப்புக்குமான சம்பந்தத்தை பாக சாலையில் அடிக்கடி
பார்த்துண்டாகையால் (வியாப்தி க்ஞானம் இருக்கிற படியால்) பர்வதோ, வஹ்னி மாந் , தூமத்வாத் என்கிற அனுமிதி ஏற்படுகிறது.
பரமாத்ம பிரத்யக்ஷம் இல்லாதபோது அவனைப் பற்றிய வியாப்தி கிரஹணம் ஏற்படாது.
ஆகையால் அனுமான பிரமாணத்தாலும் பரமாத்மாவை கிரகிக்க முடியாது.

சப்த பிரமாணம் (அ) சாப்த போதம் கொண்டு பிரஹ்மத்தை அறியாலாமோ என்னில் ,
வஸ்துவுக்கும், சப்தத்துக்குமான சம்பந்த ஞானம் – சக்தி கிரஹம் ஏற்படாதவரை அந்த இரண்டையும் சேர்த்து புரிந்து கொள்ள முடியாது.
உதாரணத்துக்கு Greek (or) Latin பாஷையில் ஏதாவது சொன்னால், அந்த சப்தம் எதை குறிக்கிறது என்று நமக்கு புரிவதில்லை.
வாச்ய-வாச பாவம் இல்லாத போது சக்தி கிரஹம் ஏற்படுவது இல்லை .

ஆக பிரத்யக்ஷத்தாலும், அனுமானத்தாலும், சப்தத்தாலும் பரமாத்ம ஞானத்தை சம்பாதிக்க முடியாதபோது,
பிரஹ்மத்தைப் பற்றிய சாஸ்திர ஆரம்பணம் அவசியமில்லை என்பது இங்கு ஆக்ஷேபம்.

லக்ஷணாதயா பிரஹ்மம் பிரதிபாத்யம் . கார்யத்தைக் கொண்டு காரண வஸ்துவை புரிந்து கொள்வது.
ஸ்ருஷ்டிதமான ஜகத்தைக் கொண்டு ஸ்ரஷ்டாவான பிராஹ்மத்தை ஆரியப் போகும் என்பது சமாதானம்.

அடுத்த கேள்வி – ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய காரணத்வம் பிரஹ்மத்துக்கு விசேஷணமா? உபலக்ஷணமா? என்பது.

இதி ஸூத்ராத்ரகா -உத்தர பஷம் ஆஷேபம் சமாதானம் -சம்ப்ரதாயம் –
பிரத்யஷத்தால் அறிய முடியாதே -சஷூர் -பாஹ்ய பிரத்யஷம் -ரூபம் பிரதானம் -ஆந்திர ப்ரத்யஷம் –
அஹம் கச்சாமி -என்னுடைய வாத்மாவை தான் அறிய முடியும் -மானஸ பிரத்யஷம் –
அனுமானம் ஊகித்து-மற்றவ்வர் ஆத்மா இருப்பதை அறிவோம் -பிரவ்ருத்திகளை வைத்து –
சப்த பிரமாணம் -சப்தம் -வஸ்து -க்ரஹணம் சம்பந்த ஞானம் -வேண்டுமே -பத பதார்த்தங்கள் –
கடம் கஜம் சப்தங்கள் தொட்டு அறிவோம் -பர ப்ரஹ்மா அப்படி அறிய முடியாதே பிரதிபத்தி ஞானம் கிட்டாதே –
வாக்ய வாச்ய பாவம் –
லஷணத்தால் புரிந்து கொள்ள முடியும்
எதோ வாசோ நிவர்த்தந்தே -ஜகத் சிருஷ்டி ஸ்திதி பிரளயம் உண்டே -இந்த லஷணத்தால் அறிவோம் –
விசேஷணங்கள் என்றும் உப லஷணம் என்றும் -கொள்ளலாம்

லஷணம் மூலம் அறிய இந்த அதிகரணம் -சிருஷ்டி ஸ்திதி பிரளய காரணம் அவன் –
இதில் அனுபபத்தி உண்டா -இதம் ஜகத் -பிரத்யஷம் –
விஷய வாக்கியம் -ப்ருகு வருணன் -கதையாக சொல்லி –
தைத்ரியம் ப்ருகு வல்லி -சிஷா வல்லி முதல் – ஆனந்த வல்லி அடுத்து -ப்ருகு வல்லி மூன்றும் –
பர ப்ரஹ்மம் அறிய -வருணன் பிள்ளை ப்ருகுவுக்கு சொலி
இமானி பூதானி -ஜாயந்தே -ஜீவநதி –லயதி-தபஸ் மூலம் அறிய முயலுவாய் -தபோ ப்ரஹ்மேதி தப்ஸ் தான் ப்ரஹ்மம் என்கிறார் அடுத்து
கரணம் வஸ்து இரண்டும் ஒன்றாக இருக்குமோ

பிருஹுர்வை வாருணி – வருணம் பிதரம் உபஸஸார அதீஹி பகவோ பிரஹ்மேதி என்று தொடங்கி
ஏதோவா இமாநி பூதாநி ஜாயந்தே , ஏந ஜாதாநி ஜீவந்தி , யத் பிரயம் அப்விஸந்தி தத் விஜிக்ஞாசஸ்வா என்பதான வாக்கியம்
அதில் சொல்லப்பட்ட அஸ்ய பரிதிருஸ்யமான ஜகத : யாரால் ஸ்ருஷ்டிக்கப் பட்டு காத்து லயம் அடைகிறதோ
அந்த காரண வஸ்துவே பிரஹ்மம் என்று பதில் கூறுமுகமாக அமைந்தது தான்
சூத்ரம் 1 – 1 – 2 க்கு விஷய வாக்கியம்.–ஸீக்ஷ வல்லி , ஆனந்த வல்லி வரிசையில் உள்ள பிருஹு வல்லியில்

பிருஹு என்கிற பிள்ளை தன்னுடைய பிதாவாகிய வருணனைப் பார்த்து தனக்கு ”பிருஹ்மத்தைப் ” பற்றி சொல்லு என்று கேட்க
ஏதோவா இமாநி பூதாநி ஜாயந்தே , ஏந ஜாதாநி ஜீவந்தி , யத் பிரயம்தி அபிஸந் விஸந்தி , தத் பிரஹ்மேதி –
தபஸா பிரஹ்ம விஜிக்ஞாசஸ்வா என்று சொல்லி தபோ பிரஹ்மேதி ஸதபோ தப்பியதா , ஸதபத் தப்த்வா என்பதாக
அந்த பிரஹ்மத்தை வெளி இந்திரியங்களால் தெரிந்தது கொள்ளமுடியா தாகையால் , தபஸ் மூலமாக தெரிந்து கொள்ள முயற்சிப்பாய் என்று உபதேசித்தார்.
அன்னம் , பிராணம் , மனஸ் , விக்ஞானம் என்று அடுத்தடுத்து தியானத்துக்கு விஷயமாக்கி,
முடிவில் ஆனந்தம் பிரஹ்மே திவ்ய க்ஞாநாத் என்கிற தெளிவு பிறக்கிறது பிள்ளைக்கு.

மேலும் தபசே பிரஹ்மம் என்றதன் பொருள் ஸூக்ஷ்மமானது .பொதுவாக சாதனம் சாத்தியமாகாது .
பிரஹ்மத்தை அறிய சாதனமான தபஸ் , அதுவும் பிரஹ்மம் என்று கூறுவது எப்படி பொருந்தும் ?
பிரஹ்மத்தை அடைய பிரஹ்மமே உபாயோபேயம் என்பதை ஸூக்ஷ்மமாக தெரிவிப்பதாகும் .

பிரஹ்மா வா அரே திர்ஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாசி தவ்ய : என்ற இடத்தில்
ஸ்துத்தவ்ய என்றில்லாமல் நிதித்யாசி தவ்ய : என்றதை நோக்க வேண்டும்.

திரஷ்டும் இச்சதி திதிருஷ்டா என்றாகும். படிதும் இச்சதி பிடதிசதி என்றாகும், கர்த்தும் இச்சதி சிகீர்ஷதி என்றாகும்.
In Sanskrit compound words can be made single word in this way. அதுபோல த்யாதும் இச்சதி என்பது நிதித்யாஸதி என்றாகும்.
பார்த்தல், கேட்டல், நினைத்தல் என்பது நம் புலன்களைக் கொண்டு செய்ய முடிவது போலே தியானம் என்பது நம்மளவில் கூடுவதில்லை.
அதற்கு முயற்சிக்கத்தான் முடியும். என்பதை உணர்த்தவே
தியாதும் என்பதோடு +இச்சதி என்பதாக ”சந்நந்த ” பிரத்யயம் சேர்த்து நிதிதித்யாஸனமாக படிக்கப் பட்டுள்ளது.

இப்படி பிரஹ்மத்துக்கு லக்ஷணங்களைச் சொன்னால் கூட அந்த பிரஹ்மத்தை தெரிந்து கொள்ள முடியாது என்று சந்தேகம் சொல்ல
விசேஷண – விசேஷ்யங்கள் விளக்கப்படுகின்றன மேல்.

ரக்தம் + கமலம் = ரக்தகமலம். ரக்தம் விசேஷணம். கமலம் = விசேஷ்யம்.-விசேஷணஸ்ய இதர வியாவர்த்தகம்.

பசூணாம் ஸமஜ :
மனுஷ்யாணாம் ஸமாஜ :

கண்டோ, முண்ட, பூர்ண ஸ்ருங்க : கௌ : என்பது ஒருபசு மாட்டைக் குறிக்காது. காரணம்
கொம்புள்ள, கொம்பு இல்லாத, கொம்பு மொட்டையான தன்மை ஒரே சமயத்தில் ஒரு பசுவினிடத்தில் இருக்க சாத்தியமில்லை.
எனவே அது பசூணாம் ஸமஜ : (கூட்டம்)

அதுபோல, ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய காரணத்வமாகிற விசேஷணங்கள் ஒரு பிரஹ்மத்தினடத்தில் இருக்க முடியாதே என்பது ஆக்ஷேபம்.

1. ரக்தம் 2. குருத்வவது 3. ஏகம் புஸ்தகம் என்று பல விசேஷணங்கள் புத்தகமான ஒருவஸ்துவில் சாத்தியம் தானே?
என்பது அவாந்தர பிரச்சனம் (எதிர் கேள்வி).

ஆனால் புத்தகம் (= விசேஷ்யம் ) கண்ணுக்கு விஷயமாய் , தன் முன்னால் பார்க்கக் கூடிய வஸ்துவாய் இருக்கிற பக்ஷத்தில்
இப்படி பல விசேஷண முள்ள ஒருபொருளை புரிந்து கொள்ள முடியும்.
அதற்கு விசேஷ்யம் பிராமண கோச்சாரமாய் இருக்க வேண்டுமே என்பது பிரதிவாதி ஆக்ஷேபம்.
அப்படிச் சொல்லப்பட்ட விசேஷணங்கள் விருத்த விசேஷணங்களாகவும் இருக்கக் கூடாது.
உ.ம். ஸ்யாம: ஸ்வேத: பீனோ தேவதத: என்பதில் ஸ்யாம: ஸ்வேத: என்பது பரஸ்பர விருத்த லக்ஷ்ணம்.
கருப்பானவன் என்றால் வெளுப்பானவன் என்பது பொருந்தா தாகையாலே.

இங்கு கேள்வி என்னவென்றால், பிரஹ்மத்தைப் பற்றி நாம் முன்னமே அறிந்த பாடில்லை .
அதற்கு மற்ற வஸ்துக்களை போல் மூர்த்தத்தோடு கூடியதா? அமூர்த்தமா? என்றும் தெரியாத படியால் ,
ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய விசேஷணங்களால் மூன்று பிரஹ்மங்கள் ஸித்திக்குமே என்பது இன்னொரு ஆக்ஷேபம்.
அதுவா , பிரஹ்மத்துக்கு ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய காரகத்வம் விசேஷணதயா பிரஹ்ம த்ரித்வம் சம்பவிக்கும் என்பது எதிர் வாதம் .

உபலக்ஷணம் என்றால் தர்மியிடத்தில் சில தர்மங்கள் ஒருசமயம் இருந்து வேறு சமயத்தில் இல்லாமல் போவது .

சததம் வித்யமானம் விசேஷணம். கமலத்துக்கு ரக்த வர்ணம் அபிருதத் விசேஷணம்.

கதாசிது அவித்யமானம் – கதாசிது வித்யமானம் உபலக்ஷணம். காகம் இருந்த வீடு அவனுடையது உ.ம்.

பூர்வ பிரதிபன்ன ஆகாரம் இல்லாதபோது – If we do not know the object previously –
உபலக்ஷண தர்மமாகவும் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய காரகத்வம் பிரஹ்மத்திட்டத்தில் அந்வயிக்காது என்பது இன்னொரு ஆக்ஷேபம்.

இரண்டு வகையாலும் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய காரகத்வம் பிரஹ்மத்துக்கு லக்ஷணம் ஆகமுடியாது என்பதே- 2 வது சூத்திரத்துக்கான பூ. பக்ஷ.

தரஷ்டவ்யா -பார்த்து -ஸ்ரோதவ்ய -ஸ்தோத்ரம் பண்ணி -மனனம் பண்ணி த்யானம் பண்ணி நிதித்யாசிதவ்ய –
த்வய பிரத்யயம் எங்கும் -த்யாதவ்ய சொல்லாமல் சன் பிரத்யயம் சேர்த்து அருளி
சன் பிரத்யயம்-கர்த்தும் இச்சதி -பண்ண விரும்புகிறான் -த்யானம் எனபது நம் கையில் இல்லை
தைல தாராவது அவிச்சின்னமாக -ஸ்ம்ருதி பண்ண வேண்டும் –
முயலும் செய்கையே நம்மது -அதனால் தான் சன் பிரத்யயம் -த்யானம் செய்வதும் அறிவதும் அவனது நிர்ஹேதுக கிருபை அடியாகவே –
லஷணம் சொல்லி புரிய வைக்கிறார் இந்த அதிகரணத்தால்-தபஸ் பண்ணியே அறிய முடியும் -தபோ ப்ரஹ்மேதி என்று மேலே சொல்லி –
தபஸ் பண்ணினான் தபஸ் பண்ணின பின்பு -அன்னம் ப்ரஹ்மம் அறிந்து -லஷணம் அன்வயிக்கிறதே –
வருணன் இடம் சொல்ல -மேலே ஆழ்ந்த தபஸ் பண்ணச் சொல்லி -பிராணன் -அன்னம் விட உயர்ந்ததாக அறிந்து –
மனஸ்-விஜ்ஞானம் -அடுத்து அடுத்து -அறிந்து கொண்டு -ஆனந்தோ ப்ரஹ்மேதி
ஸ்வயம் பிரகாசமான வஸ்து அறிந்த பின்பு மீண்டும் வருணன் இடம் போக வில்லை –
ஏவம் வேதம் ப்ரஹ்மம் ப்ரதிஷ்டிதா -ஒருவன் புரிந்து கொண்டு பகவத் ப்ரேரிதனாய் கொண்டு மற்றவருக்கும் சொல்லி –
விஷய வாக்கியம் இத்தை எடுத்து அருளி -ஸ்ரீ பாஷ்யகாரர் –
சம்சயம் -பூர்வ பஷம் -கிம் பிராப்தம் -லஷணம் கொண்டு புரிந்து கொள்ள முடியாது
சிவந்த தாமரைப் பூ விசேஷணம்-வ்யாவ்ருத்தி காட்ட -இதர பேதம் காட்ட –
அநேக விசேஷணங்கள் இருந்தால் அநேக விசேஷ்யங்கள் இருக்க வேண்டுமே -சங்கை -மூன்று வஸ்துவா
கண்ட முண்ட பூர்ண -ஸ்ருங்க கோ சமூகம் -சமஜ -சமாஜக மனுஷ்ய பசுக்கள் –
சமாஜமா சமஜமா-கேள்வி உண்டு -ஒரு கொம்பு மட்டும் /கொம்பே இல்லாத /பூர்ணம் கொம்பு –

கண்டோ, முண்டோ, பூர்ண ஸ்ருங்க : கௌ: என்ற விருத்த விசேஷணங்ளும் கால பேதத்தால் ஒரு வாஸ்துவில் இருக்க வாய்ப்பு உண்டு.
முதலில் மொட்டை கொம்போடு கூடியதாய் இருந்து, பிறகு அது பாதி வளர்ந்து,
முடிவில் பூர்ணமாக வளர்ந்த கொம்போடு கூடியதாக அதே மாடு இருக்க தடையில்லை யாகையால்,
பிரஹ்மத்திட்டத்தில் ஸ்ருஷ்டி காலம், ஸ்திதி காலம், பிரளயகாலம் என்று வேறு வேறு சமயத்தில் நடைபெறுகிற படியால்
கால பேதேன ஏ தேஷாம் விரோதம் நாஸ்தி.
ஆக இந்த ஜகத் ஜன்மாதி காரணம் பிரஹ்மத்திட்டத்தில் இருக்க , ”பிரஹ்ம த்ரிப்த்வ ” நியதி இல்லை.

விகாராஸ்பதமான வஸ்துவுக்கு அநித்திய பிரசங்கம் வருமே என்று பௌத்தர்கள் ஆக்ஷேபிக்க

ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய காரணத்வ பிரயுக்தமாக வருகிற ஸ்வரூப விகாராதி தோஷங்கள் பிரஹ்மத்திடத்தில் கிடையாது ,
ஏனென்றால் சோதக வாக்கியங்களாக அடுத்து சொல்லப் படுகிற ”சத்யம், க்ஞானம், அனந்தம் பிரஹ்ம ” என்கிற
லக்ஷணங்களாலே இந்த பொளத்த ஆபாதித அநித்ய தோஷம் மறுக்கப்படுகிறது .

பர்த்ரு பிரபஞ்சருடைய ஸ்வரூப விகார வாதம் போலே அன்று விசிஷ்டாத்வைதத்தில் சொல்லப்பட்ட பிரஹ்ம விகாரம்.
சிதசித் வஸ்துக்கள் பிரஹ்மத்துக்கு சரீர மாகக் கொண்டு, அந்த சரீர விகாரம் தான் அவனுக்கு உண்டு தவிர ஸ்வரூப விகாரம் கிடையாது.

சுண்டு விரல் – அபுருஷன் – அசேதனம்.
மோதிர விரல் – புருஷன் – சம்சாரி சேதனன்
நடு விரல் – உத்புருஷன் – முக்தாத்மா
ஆள்காட்டி விரல் – உத்தம புருஷன் -; நித்யர்கள்
பெரு விரல் – அந்யத் புருஷ- பரமாத்மா.

ஸகலேதர வியாவர்த்தம் பிரஹ்ம பிரத்யக்ஷம் ஸக்யம் – சேதநாசேதன விலக்ஷணன் பிரஹ்ம என்பது இதன் பொருள்.
ஸ்ருஷ்டி ஸ்திதி லய காரணன் என்பதனால் அவனிடத்தில் எந்தவித தோஷமும் அவனிடத்தில் தட்டாது என்பதே
”சத்யம், க்ஞானம், அனந்தம் பிரஹ்ம ” என்கிற லக்ஷணத்தின் விளக்கம்.

சயாம யுவ சிவந்த கண்கள் சம பரிமாணம் தேவ தத்தன் -அநேக விசேஷணங்கள் இருக்கலாம்
விசேஷயம் முன்பே தெரிந்து இருந்தோமானால் -பிரமாணாந்தரங்கள் மூலம் அறிந்து -விரோதங்கள் இல்லாத விசேஷணங்கள் இருந்தால் –
ப்ரஹ்மம் மூன்றா -விசேஷணம் ஆக கொள்ள முடியாது -அதனுடைய தர்மம் இல்லை -முதல் ஆஷேபம்
உப லஷணம்-தர்மங்கள் தரமி இடம் எப்பொழுதும் இருந்தால் –
வித்யமானம் சதா சாது விசேஷணம் -கமலம் -சிகப்பு -எப்பொழுதும் இருக்கும்
அவித்யமானம் சாது வ்யாவ்ருத்தும் கதா –
நேற்று பஷி இருந்த பூமியே தேவ தத்தன் பூமி போலே -கேதாரம் பூமி
சிருஷ்டி காரனத்வம் ஒரு சமயம் இப்பொழுது ஸ்திதி பின்பு பிரளயம்
பூர்வ பிரதிபன்னாகாரம் இருக்க வேண்டுமே உன்ன லஷணம் என்றால்
ப்ரஹ்ம வஸ்து தெரிந்து இருந்தால் தான் உப லஷணம் -பறவை பூமி முன்பே தெரிந்து இருக்க வேண்டுமே –
இதிலும் ஆஷேபம் உண்டே
புராணம் -சிருஷ்டிக்கு சதுர்முகன்
வேதாந்தம் ப்ரஹ்மமே மூன்றுக்கும்
சங்கர்ஷணன் ப்ரத்யும்னன் அனிருத்தன்
சாத்விக புராணம்
புராணங்கள் அபிரமாணிகம் என்று சொல்ல முடியாதே
இடைச் செருகல்களும் உண்டு என்பர்
சூரியன் த்ரஷ்டா -one eighth ஆக்கி -சுதர்சனம் கொடுத்தான் என்பார் –
இதிகாசங்கள் பிரதானம் -அதிலும் இடைச் செருகல் என்பர் -சப்த தீபங்கள் சப்த சமுத்ரங்கள் -கண்டம் என்று தப்பாக சொல்லி –
தர்க்க சாஸ்திரம் வாதங்களும் உண்டே
லஷ்மி ஷீரா சமுத்திர -ஆதி தம்பதி -ஜகன் மித்யா -சத்யம் -புராணம் ஸ்வரூபம் அந்தரங்கம் அறிவது கஷ்டம்
ஸ்தல புராணம் -செல்லப்பிள்ளை வஷ்டத்சலம் கடைந்து -எடுத்து வந்தவர் என்பர்
அந்தரங்கர் மட்டுமே அறிவார் ஜகத்துக்கு உபாதானம் ப்ரஹ்மமே

பாகவதம் நிறைய இடங்களில் பூர்வர்கள் பிரமாணமாக காட்ட வில்லை ஸ்ரீ விஷ்ணு புராணம் நிறைய இடங்களில்
சுவாமி தேசிகன் பாகவத் காட்டி உள்ளார் -சிலர் பாகவதம் பின்பு –
வியாசர் கர்த்தா இல்லை என்பர் சிலர் வியாசர் -ப்ராசரர் பெயரை வைக்க ஆளவந்தார் இச்சயித்தார்
புராண லஷணம் சிருஷ்டி மன்வந்தரம் -பெரிய விஷயம் -கடல் போன்ற ஆழம் –
சாத்விக புராணங்கள் எதி தர்மங்கள் -நமக்கு இல்லை
விசேஷணம் உப லஷணம் இரண்டாகவும் கொள்ளலாம் -இது – சோதக லஷணம் -தோஷங்கள் வாராது -காரணமாக இருந்தாலும் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -காட்டி சித்தாந்தம் ஸ்தாபிக்கிறார்
சைவம் வைஷ்ணவம் போலே பிரம உபாசனம் இல்லை
தாமச ராஜச குணங்கள் கொண்டு வந்த புராணங்கள்
குண த்ரய விபாக யோகம் -ஸ்ரீ கீதை -பௌதிக வஸ்துகள்-அப்ராக்ருதம் சத்வ வஸ்துகள்

ப்ரஹ்ம பஹூத்வம் அவர்ஜ நீயம் –
மேல் சித்தாந்தம்
உப லஷணம் -பிரசித்தி -ததைவ -ஏகமேவ அத்விதீயம் -யாக சத் சப்த வாச்யம் –
பஹூச்யாம் பிரஜாத்யேயே-நிமித்த உபாதான காரணத்வம்-
பந்தி வாசிக்கத் தெரிந்து -சகாரம் துவர்த்தம் –உபலஷனம் விசேஷணம் இரண்டாகவும் கொள்ளலாம் –
வஸ்து ஞானம் முன்னமே தெரிய வேண்டும் -கேதாரம் பஷி தேவதத்தன் உதாரணம் பார்த்தோம்
ராம -ரூட் ரமயதீதி ராம ரமயந்தே யோகின –கர்ஷதி ஆகர்ஷதி கிருஷ்ணன் -ஆகர்ஷிப்பவன் -ப்ரஹ்மம் இது போலே -ஹனுமந்தராயர் கதை –
வியாகரணம் -தாது பிரத்யயம் புஸ்தகம் -அவ்யுக்த சப்தம்
நாராயண வ்யுத்பத்தி உண்டே -பண்டித பாஷணம்- ப்ரஹ்மம் சப்தத்தாலே தெரியும் –
எது தன்னை ஜகத் ரூபமாக அமைத்துக் கொள்கிறதோ அதுவே சிருஷ்டி ஸ்திதி லயம் காரணம்
ப்ருகு தாது பிரத்யயம் கொண்டே அறியலாம்
கால பேதென ஜன்மாதீன ந விரோதம் -என்று விசேஷணம் என்றும் கொள்ளலாம் –

பரஸ்பர விரோத விசேஷங்கள்
சிகப்பு வெள்ளை புஷ்பம்
சிகப்பு மிருதுவான புஷ்பம் -இருட்டு வெளிச்சம் –
ராம சுக்ரீவம் யோ ஐக்யம்-அபிப்ப்ராயத்தில் ஐக்யம் –
கால பேதத்தால் விரோதம் நாஸ்தி -சிருஷ்டி ஸ்திதி சம்காரம் மூன்றும் நடந்து கொண்டே இருக்கும்
இதுக்கு ஆஷேபம் -ஜகத் ரூபமாக மாறினால் -தோஷம் தட்டுமே –
பரிணாமம் உண்டா ப்ரஹ்ம வஸ்துவுக்கு -விகாரம் என்றால் அநித்தியம் தானே
சமன்வயாதிகரணம் சாஸ்திர யோநித்வாதிகரணம் அடுத்து வரும் -ஸ்வரூபம் ஸ்வ பாவம் விகாரம் –
உபாதானம் -கடம் மண் -என்று கொண்டால் இது போன்ற கேள்விகள் வரும்
குகையில் சூஷ்ம வஸ்து -யாரோ ஒருவன் தான் அறிவான் -பரமாத்மா வுடன் சர்வான் காமான் சக –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம சோதக லஷணம்
காரண வாக்கியம் -சத்ய பதம் -நிருபாதிக -=சேதன வ்யாவர்ய்த்தம்
ஞானம் பதம் -சங்கு சீதா ஞானம் வந்து விலகும் முக்தர் வ்யாவ்ருத்தம்
அநந்தம் பதம் நித்ய வ்ய்வாருத்தம் -சம்சார பந்த லேசமும் இல்லாதவர் -அனந்தகருட விஸ்வக்சே னாதிகள்
அப்ருஷன் பிரகிருதி -புருஷன் -பக்த முக்த நித்ய -அங்குஷ்ட மாத்திர -உத் புருஷன் உத்தர புருஷன் உத்தம புருஷன் -ஐந்து விரல்கள்
பின்டா அண்டம் -பிரபஞ்சம் சம்பந்தம் –
சகல இதர விலஷணன் சர்வேஸ்வரன் என்பதை காட்டும் சத்யம் ஞானம் அநந்தம் -ப்ரஹ்ம
பின்ன பிரவ்ருத்த சாமான்யாதிகரண்யம் வேற -இதற்கு சம்பந்தம் இல்லை

காரணம் கார்யம் -மிருத்பிண்டம் -மண் குடம் -ஜகத் தோஷங்கள் எங்கே இருந்து வந்தன -ப்ரஹ்மத்தில் இருந்து இருக்க வேண்டும் –
பரமாத்மா ஸ்வரூபத்தில், அம்சத்தில் பரிமாணம் உண்டா -ஸ்வரூப பரிமாண வாதிகள் -சித் அசித் விசிஷ்டம் ப்ரஹ்மம் –
ந முக்ய பரிமாணம் -சித் அசித் மட்டுமே -அனுபபத்திகள் ஏற்படும் -அம்சியில் இல்லை அம்சத்தில் தான் என்றாலும் சில அனுபபத்திகள் உண்டே
உத்தம புருஷன் -சகல இதர வைலஷண்யம் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம சோதக லஷணம் -விசஜாதீயன் –
காரண வாக்கியம் எதோ வாசோ நிவர்த்தந்தி -தாஜ்ஜலா தாஜ்ஜ்யம் தல்லம் த்தனம் -சாந்தோக்யம் –

தத் ஜலாநிதி சாந்த உபாஸீத (சாந்தோக்கியம்) தஜ்ஜம் தல்லம் ததனம் என்று விபாகம் பண்ணினால்
தஜ்ஜம் = தஸ்மாது ஜாயதே இதி தஜ்ஜம்
தல்லம் = தஸ்மாது லீயதே இதி தல்லம்
ததனம் = தஸ்மாது ஸ்தித்வம்
என்பதான காரண வஸ்துவே உபாசனத்துக்கு விஷயம். காரணந்து த்யேய: என்பதும் காண்க.

அப்படிப்பட்ட பிரஹ்மம் சாகலேதர வியாவர்த்தகம். சத்யம், க்ஞானம், அனந்தம் பிரஹ்ம என்றும் சொல்லப்படுகிறது.

தாபத்ரய சஞ்சீவினி -சம்பூர்ணமாக மீண்டும் வராமல் ஏகாந்த ஆத்யநதிக துக்க நிவ்ருத்தி மோஷம் –
நேதி நேதி மார்க்கம் இல்லாத -இது தான் பர ப்ரஹ்மம் –இது தான்
அசத்யா வ்யாவ்ருத்தம் அஜ்ஞ்ஞானம் பரிச்சேத்யாதி வ்யாவ்ருத்தம் அத்வைதிகள் –
சத்தியவாதி தான் -அசத்யவாதி இல்லை -என்றும் அறியலாம் நிருபாதிக சத்ய வாச்யன் -நாமாதி அர்ஹம் -சேதனசேனங்கள்

சத்யம் -எதிர்பதம் மித்யா பாம்பு கயிறு –ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா என்றா சொல்லுகிறோம் நாமும் -கேள்வி வரும் பரிகாரம் எது –
சேதனாசேதனங்கள் வ்யாவ்ருத்தி சத்யம் என்றால் —
ஞானம் பூத பவிஷ்ய எக்காலங்களிலும் அசங்குசிதமாகாத ஞானம்
தர்ம பூத ஞானம் -விபு வாக்கும் பிரகாசம் -மழுங்காத ஞானாம் -முக்தர்கள் வ்யாவ்ருத்தி –
அனந்த தேச கால வஸ்து பரிச்சேதம் இல்லாத -ஸ்வரூபம் -ச குண-நித்யர் வ்யாவ்ருத்திகள் -அனந்த கருட விஷ்வக் சேநாதிகள்-
சாலோக்யம் சாரூப்யம் சாயுஜ்யம் -நான்கு விதங்கள் உண்டே
அபக்த பாப்மாதிகள் -சமா அதிக தரித்திரன் -அவன் ஒருவனே –
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் –
அன்யோன்ய ஆஸ்ரய தோஷம் -ஜகத் ஜன்மாதிகரணம் புரிய சத்யம் ஞானம் அநந்தம் புரிய வேண்டும்
ப்ரஹ்ம பதமே காட்டிக் கொடுக்கும் இவற்றை -க்ரமமாக காட்டி அருளுகிறார்
லஷண வாக்யங்கள் -விலஷண vasthu காரண வஸ்து லஷணம் மூலம் புரிந்து கொள்ளலாம் -சித்தாந்த சம்ப்ரதாயம் நிகமிக்கிறார்

ஸ்வரூப லஷணம் -சந்தரன் குழைந்தைக்கு காட்டி -ததஸ்த லஷணம் -கொஞ்ச காலம் தான் இருக்கும் ஒரே அளவு அறிய –
உபாதி காட்டாமல் ஸ்வரூபம் விளக்கி –
குண குணி பாவம் ஒத்துக் கொள்ளாத அத்வைதிகள் –
யதோவாயந்தி ததஸ்த லஷணம் போலே என்பர் ஜகமே மித்யா என்பதால் இப்படி அருளுவார் –
ஜன்மாதி என்ற ஸூத்ரம் -ஜகத் காரணம் -என்பதால் அத்வைதி வாதம் பொருந்தாது –
ஈஷாதாதிகரணம் ப்ரஹ்ம வஸ்து பார்த்தது -குண குணி பாவம் உண்டு நிர்விசெஷம் பொருந்தாது
தர்க்கமும் பொருந்தாது –
நதிக்கரை நதியின் அம்சமா -ததாஸ்த லஷணம் அத்வைதி இப்படியும் சொல்லி -நமது சம்ப்ரதாயத்துக்கு அருகில் இங்கே சொல்வார்கள் –

சப்த பிரயோகம் வந்ப்தாலே அத்வைதி வாதம் போகும் வாயைத் திறக்காமல் இருந்தால் தான் அத்வைதி வாதம் நிலை நிற்கும்
ப்ரஹ்ம உபாசனம் எதற்கு நாமே ப்ரஹ்மம் என்றால்
ப்ரஹ்மம் சத்யம் வாக்கியம் சத்தியமா -வேறே வஸ்து உண்டே ஆகும் அந்த வாக்யமே மிதியை யாகுமே விவகாரம் –
பாரமார்த்திகம் என்று மழுப்புவார்கள் –
அனுஷ்டானம் அத்வைதிகள் நம் போலே ஆராதனம் போல செய்து அவர்கள் வாதத்தை முறிப்பார்கள் –

நநு, அத என்று தொடங்கி இதி சேத் , ந ” என்பதாக முடிகிற பங்திகள் பூர்வ பக்ஷ விஷயமானது .
அத்ர அபிதீயதே என்ற தொடங்கி சொல்லப்பட்டவை சித்தாந்த விஷயமாகும்.
பூர்வ பக்ஷ கண்டனம் செய்யும்போது கூட பிராமணிகா ந பகுமன்யதே என்பதாக பகவத் ராமாநுஜர் கூறுகிற சைலி போற்றத்தக்கது.
கிரியான்வய பதத்தால் அல்லது சப்தத்துக்கும்-அர்தத்துக்குமான சம்பந்தம் கிடையாது என்கிற வாதம் சிலவிடங்களில்
பொருந்தக் காணலாம் ஒழிய எல்லாவிடங்களிலும் அதுவே நியதியாகாது.

———————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading