அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா
பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–
—————————————————————-
முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-
நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்
1-4-1-ஆநுமாநிகாதி கரணம் -பிரகிருதி உலகின் காரணம் இல்லை
1-4-1-ஆநுமாநிகம் அபி ஏகேஷாம் இதி சேத் ந சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –
பிரக்ருதியும் காரணப் பொருளாக உபநிஷத் வாக்யங்கள் உள்ளன என்பர் -அது சரி அல்ல –
உடலை உருவகப் படுத்தவே அப்படி சொல்லப் பட்டது
கட உபநிஷத் –
இந் த்ரியேப்ய பரா ஹ்யர்த்தா அர்த்தேப் யஸ்ஸ பரமமந
மநசஸ்து பரா புத்திர் புத்தேராத்மா மஹான்பர
மஹத பரம வ்யக்த மவ்யக்தாத் புருஷ பர
புருஷான்ன பரம் கிஞ்சித் சா காஷ்டா சா பராகதி –என்று
புலன் -பொருள்கள் -மனம் -அறிவு -மஹான்-அவயகதம் உடல் -புருஷன் -இதை விட மேல் ஒன்றும் இல்லை –
இது சாங்க்ய மதம் ஈஸ்வர தத்தவத்தை ஒத்துக் கொள்ளவது இல்லை –
சித்தாந்தம் -முன்னால் அதே உபநிஷத்தில் யமன் நசிகேதனிடம்
ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ ச
புத்திம் து சாரதிம் வித்தி மன பிரக்ரஹமேவ ச
இந்த்ரியாணி ஹயா நா ஹூர் விஷயாம்ஸ் தேஷு கோசாரான்-என்றும்
விஜ்ஞாந சாரதிர் யஸ்து மன ப்ரக்ரஹ வான் நர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
உடலைத் தேராகக் கொண்டு மன உறுதியை தேர் ஒட்டுபவனாகவும் -மனத்தை கடிவாளமாகவும்
புலன்களை குதிரைகளாகவும் உலக விஷயங்களை பாதையாகவும்
யார் ஒருவனுக்கு இந்த தேர் சரியாக ஓடுகின்றதோ அவன் பரமபதம் சென்று அடைகின்றான்
இத்தால் பூர்வ பஷ வாதங்கள் உடைக்கப் படுகின்றன-
————————————————————-
1-4-2-ஸூஷ்மம் து ததர்ஹத்வாத் –
சூட்சும தசையில் உள்ள பிரகிருதி ஒருவகையாக மாறுதலை அடைந்து உடலாகி –
ஸ்தூல உடலாலே கார்யங்கள் செய்ய வேண்டுமே –
இந்த உடலே ஜீவன் என்னும் என்னும் தேரினை அதன் இலக்குக்கு எடுத்துச் செல்ல உதவும்-
————————————————————
1-4-3-தத் அதீனத்வாத் அர்த்தவத் –
பிரகிருதி எனபது பரம் பொரூடன் தொடர்பு கொண்டால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்
சாங்க்ய மதம் போலே பிரகிருதி மாறும் என்பதை ஒத்துக் கொண்டாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாது
பரம் பொருளின் ஆணைக்கு இடங்க நடந்தால் மட்டுமே பயனுள்ளதாகும்-
——————————————————————–
1-4-4-ஜ்ஞேய த்வாவச நாத் ச
சாங்க்ய மதத்தின் படி அவ்யக்த-பிரகிருதி – ஞானம் பற்றியே மோட்ஷம் என்று உபநிஷத் கூற வில்லை-
———————————————————————-
1-4-5-வததி இதி சேத் ந ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்–
கடவல்லி -3-15-
அசப்தம் அஸ்பர்சம் அரூபம் அவ்யயம் தத் அரசம் நித்யம் அகந்த வச்ச யத்-
அநாதி அநந்தம் மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே–
இந்த வரிகளுக்கு முன்னால்
விஜ்ஞான சாரதி யஸ்து மன ப்ரக்ரஹ வான்னர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்-என்றும்
அதற்கு கீழே -ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடோத்மாந பிரகாசதே
த்ருச்யதே த்வகர்யயா புத்த்யா ஸூ ஷ்மயா ஸூஷ்ம தர்சிபி – என்று இருப்பதால்
சாங்க்ய வாதம் புருஷர்களை விட மேல் இல்லை எனபது உடைக்கப்பட்டு
பரம் பொருள் யத்த தத்ரேச்யம் -முண்டகம் -என்றும் –
புத்தரோத்மா மஹான் பர -என்றும் மேலானவன் என்று உணர முடியலாம்-
—————————————————
1-4-6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபன்யாச ப்ரசன ச –
மூன்றைப் பற்றிய கேள்வியும் பதிலுமே உள்ளதால் பிரக்ருதியைப் பற்றிக் குறிப்பிட வில்லை என்று அறியலாம்
உபாயமும் உபேயமும் உபேதாவையும் -மூன்றையும் பற்றியே உண்டு –
யமனிடம் இருந்து மூன்று வரங்களைப் பெற்ற நசிகேதன்
முதல் வரத்தின் முலம் தந்தையை அருகில் கேட்டான்–இரண்டாம் வரத்தின் முலம் அக்னியைக் குறித்துக் கேட்டான் –
மோட்ஷம் பெற்றவர் சென்று அடையும் இடம் –மோட்ஷம் பெற விரும்புவர்களின் தன்மைகள் -வழி ஆகியவற்றை பற்றி –
ந ஜாயதே ம்ரியதே வா -அணோர் அணீயான்–இத்தா வேத யத்ரச-துர்க்கம் பதஸ்தத் கவயோ வதந்தி
ஆக மூன்றிலும் பிரக்ருதியைப் பற்றி இல்லை-
——————————————————
1-4-7-மஹத்வத் ச –
மஹத் என்று கூறும் இடத்திலும் பிரக்ருதியைப் பற்றி கூறவில்லை
புத்தேராத்மா மகான் பர -புத்திக்கு மேலே உள்ள ஆத்மாவைப் பற்றி -சாங்க்ய மத மஹான் பற்றி இல்லை
மேலும் மஹத பரம் அவயகதம் -என்று மஹானை விட மேலானது அவ்யக்தம்-
இங்கு சாங்க்ய மத அவ்யக்தம் பிரகிருதி பற்றி இல்லை-
ஆநுமாநிகாதி கரணம் சம்பூர்ணம்
———————————————————
1-4-2-சமசாதிகரணம் -ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி
1-4-8-சமசவத் அவிசேஷாத்-
உபநிஷத்தில் சமசம் -பதம் தெளிவாக கூறப்பட்டுள்ளது –
ஸ்வேதரா-4-5-
அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா
அஜோ ஹி ஏகோ ஜூஷமாண அநு சேதே ஜஹாத் யேநாம் புக்த போகாம் அஜ அன்ய-
சமசம் எனபது யாகங்களில் உதவும் ஒரு பாத்ரம் –
பிருஹு –4-2-3-
இதம் தச்சிர ஏஷ ஹி அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன–என்று-இப்படி மேலே பருத்து கீழே துளை உள்ளது
தலையே -மண்டை ஓடே -ஆகும் நமது தலையைக் குறிக்கும்
அஜா பிறப்பற்ற பிரக்ருதியைக் குறிக்கும்-
———————————————————————–
1-4-9-ஜ்யோதிர் உபக்ரமா து ததா ஹி அதீயதே ஏகே –
ஜோதியான பரம் பொருளைச் சார்ந்தே அஜா என்னும் பிரகிருதி உள்ளது –
தைத்ரியம் –
அணோர் அணீயான் மஹதோ மஹூயா நாத்மா–திஷ்டத் யந்தராத்மா-என்று
அஜா எனபது பரம் பொருளைச் சார்ந்த பிரக்ருதியே என்றதாயிற்று –
—————————————————————————-
1-4-10-கல்பந உபதேசாத் ச மத்வாதி வத் அவிரோத –
பிரகிருதி பிறப்பற்றது என்றும் கல்பாதியிலே உருவாக்கப் பட்டது என்பதும் முரண் பட்டது இல்லை –
தைத்ரிய உபநிஷத்தில் -5-7-
சூர்யா சந்திர மசவ் ததா யதா பூர்வம் கல்பயந் -என்றும்
ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–4-9 -என்று படைக்கப் பட்டதை சொல்லிற்று –
சாந்தோக்யம் -மது வித்யையில்-
பிரளயம் முடிந்து உலகம் படைக்கப் பட்ட பின்பு –
அசௌவா ஆதித்யோ தேவமது -என்று தேவர்களுக்கு மதுவாக உள்ளதையும்
பிரளய காலத்தில் –
நை வோதே தா நாஸ்த மேதா-என்று சூரியன் மறைவதும் இல்லை உதிப்பதும் இல்லை -எனபது போலே –
இரண்டு நிலைகளுக்கும் முரண்பாடு இல்லை-
சமசாதிகரணம் சம்பூர்ணம்
———————————————————————
1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் -இந்த்ரியங்களுக்கு ப்ரஹ்மமே அந்தர்யாமி –
1-4-11-ந சங்க்ய உப சங்கரஹாத் அபி நாநா பாவாத் அதிரேகாத் ச –
ப்ருஹத் ஆரண்யாகாவில்-4-4-17-
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா ஆகாசாஸ்ஸ ப்ரதிஷ்டித தமேவ மன்ய ஆத்மானம் வித்வான் ப்ரஹ்மாத்ருதோம்ருதம் –
என்று
5 தன்மாத்ரைகள் -5-ஞான இந்த்ரியங்கள் -5 கர்ம இந்த்ரியங்கள் -பிரகிருதி -மனம் -அஹங்காரம் -ஆத்மா
என்று 25 தத்வமாக ஜீவனைக் குறித்து
இவற்றை அறிந்தால் மோஷம் பெறலாம் என்கிறது உபநிஷத்
சாங்க்ய மதம் போலே சுதந்திரமான தத்வங்கள் அல்ல
யஸ்மின்-என்று பரம் பொருளைச் சார்ந்தே உள்ளவை-
———————————————————————–
1-4-12-ப்ராணாதய வாக்ய சேஷாத்-
பஞ்ச பஞ்ச ஜனா -ஐந்து பொருள்கள் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் 4-4-18-
பிராணஸ்ய பிராணமுத சஷூஷஸ் சஷூ ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம்-
அந்நஸ் யாந்னம்- மநஸோ யே மநோ விது—என்று –
பிராணன் கண் காது அன்னம் அல்லது நாக்கு மனம் என்பவை ஆகும்
—————————————————————————
1-4-13-ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸ்தி அந்நே –
காண்வ முனிவரின் உபநிஷத் வரியில் அன்னம் என்று கூறவில்லை என்றாலும் அதற்கு முந்திய வரியில்
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிராயூர் ஹோபாசதேம்ருதம் -ஜ்யோதிகள் அனைத்துக்கும் ஜ்யோதி என்று
புலன்கள் ஐந்துக்கும் ஜ்யோதியான பர ப்ரஹ்மத்தை சொல்லிற்று-
சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் சம்பூர்ணம்
——————————————————————————
1-4-4-காரணத்வாதி கரணம் -ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –
1-4-14-காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –
ஆகாயம் உட்பட அனைத்துக்கும் காரணமாக பர ப்ரஹ்மமே உள்ளது என்று கூறப்பட்டதால்
ப்ரஹ்மமே உலகின் காரணப் பொருள் –
சாந்தோக்யம் -2-7-1-
சத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -சத் என்பதே காரணப் பொருள்
தைத்ரிய உபநிஷத்தில் -3-19-1-
அசத் ஏவா இதம் அக்ர ஆஸீத் -என்று முதலில் அசத் என்பதே காரணப் பொருள்
ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் ஏதத் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -என்று காரணப் பொருள் அவ்யாக்ருதமாக இருந்தது
சாங்க்ய மதத்தில் அவ்யாக்ருதம் பிரகிருதி
தைத்ரியம் -2-1-1-
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-என்றும் தஸ்மாத் வை ஏ தஸ்மாத் ஆத்மான ஆகாச சம்பூத் -என்று
பரமாத்வா விடம் இருந்து ஆகாசம் தோன்றிற்று என்றும்
சாந்தோக்யம் -6-2-3-
தத் ஐ ஷத பஹூச்யாம் -பலவாக தோன்றுவேன் என்பதால் சத் அசத் அவ்யாக்ருதம்
போன்றவையும் ப்ரஹ்மத்தை குறிக்கும் பதங்கள்
ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் நாம ரூபாப்யம் வ்யாக்ருத யதா -என்று
இத்தையே குறிக்கும் -பர ப்ரஹ்மமே காரணம் என்றதாயிற்று
——————————————————————————-
1-4-15-சமாகர்ஷாத் –
மற்ற உபநிஷத்களிலும் கூறப்பட்டவற்றை குறிப்பிடுவதாலும் பர ப்ரஹ்மமே காரணம்
தைத்ரிய உபநிஷத் –
சோகா மயத பஹூச்யாம் பிரஜா யேய-என்றும்
அசத் வை இதம் அக்ர ஆஸீத் -என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்றும்
அதே உபநிஷத் –
ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய-என்று உள்ளே புகுந்து நகக் கண்கள் வரையில் உள்ளான் -என்கிறது-
காரணத்வாதி கரணம் சம்பூர்ணம்
———————————————————————————
1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் -ப்ரஹ்மமே அறியத்தக்கது –
1-4-16-ஜகத் வாசித்வாத்
யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
பாலாகி என்னும் ஒருவன் அஜாத சத்ரு என்ற அரசன் இடம் வந்து ப்ரஹ்மத்தை குறித்து கூறுவதாக சொல்லி
ப்ரஹ்ம தே ப்ருவாணி யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
யஸ்யா வா ஏதத் கர்ம -யாருக்கு இது கர்மமோ -இது என்றது உலகம் -கர்மம் -உலகை உருவாக்கும் செயலையும் சொல்லி
பர ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் என்றதாயிற்று
—————————————————————————
1-4-17-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –
அதாஸ்மின் பிராண ஏவ ஏகதாபவதி-என்றும்
தத்யதா ச்ரெஷ்டீ ஸ்வைர்ப்புங்க்தே யதா ஸ்வா ஸ்ரேஷ்டி நம் புஞ்ஜந்தி
ஏவமேவைஷா பிரஜ்ஞாத்மா ஏதைராத்மயிர் புங்க்தே
ஏவமேவைத ஆத்மான எனம் புஞ்ஜந்தி -என்றும்
ப்ரஹ்மேதே பிரவாணி -என்றும்
சர்வான் பாப்மநோப ஹத்ய சர்வேஷாம் பூதானாம் ஸ்ரைஷ்ட்யம் ஸ்வா ராஜ்ய மாதிபத்யம் பர்யேதி யா ஏவம் வேத -என்று
பிராணனை உடலாக உடைய ப்ரஹ்மத்தை உபாசனை செய்ய வேண்டும் என்றதாயிற்று –
—————————————————————————–
1-4-18-அன்யார்த்தம் து ஜைமினி ப்ரசன வியாக்யா நாப்யாம் அபி ச ஏவம் ஏகே –
அஜாத சத்ருவும் பாலாகியும் தூங்கிக் கொண்டு இருந்த மனிதனை எழுப்ப –
உடலில் வேறுபட்டவன் ஜீவன் -ஜீவனில் வேறுபட்டவன் பர ப்ரஹ்மம்
க்வ ஏஷ ஏதத் பாலாகே புருஷோசயிஷ்ட -தூங்கி எழுவதற்கு முன்னால் எங்கு இருந்தான்
விடையாக அதாஸ்மின் பிராண ஏவ ஏகதா-தூங்கும் பொழுது பிராணனில் ஒன்றி விடுகிறான்
சாந்தோக்யம் -சதா சோம்ய ததா சம்பன்னோ பவதி –தூங்கும் பொழுது சத்துடன் ஒன்றி விடுகிறான்
பிராணன் என்றது ப்ரஹ்மமே
ப்ருஹத் உபநிஷத் -ய ஏஷோந்தர் ஹ்ருதய ஆகாசஸ் தஸ்மின் சேதே-என்று தூங்குபவன் இதயத்திலுள்ள
ஆகாயம் ஆகிய பரம் பொருளிடம் தூங்குகின்றான்
பிராணன் போன்ற சொற்கள் ப்ரஹ்மமே என்றதாயிற்று-
————————————————————————————
1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -காணப்படுபவன் ப்ரஹ்மமே –
1-4-19-வாக்ய அந்வயாத்
ப்ருஹத் ஆரண்யாகாவில்-
நவா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவதி ஆத்ம நஸ்து காமாய பதி ப்ரியோ பவதி -என்றும்
ஆத்மா வரே அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய -மைத்ரேயி ஆத்ம நி கல்வரே த்ருஷ்டே
ஸ்ருதே மதே விஞ்ஜாதே இதம் சர்வம் விதிதம் -என்று அனைத்தும் அறிந்தவை ஆகும் –
இதம் சர்வம் யதயமாத்மா -இந்த ஆத்மாவே அனைத்தும் என்பதால் பரமாத்மா என்று உணர்ந்தால் மட்டுமே பொருந்தும்-
————————————————————————————-
1-4-20-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-
ஆஸ்மரத்யர் என்பவர் இதம் சர்வம் விதிதம் -ஒன்றை அறிந்தால் அதனைச் சார்ந்த அனைத்தையும் அறிந்தது போலே
ஆகும் என்பதால் பரமாத்மாவே என்கிறார்
———————————————————————————–
1-4-21-உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாத் இதி ஔடுலொமி
ந ஜாயதே ம்ரியதே -கட உபநிஷத் -கர்ம வினைகளால் தோன்றி மறைகின்றான் –
தனது உருவம் மட்டும் மாறும் மண் குடம் போலே அன்றி ப்ரஹ்மத்துடன் ஒன்றி விடுகிறான்
இந்த ஔடுலொமி கருத்து படியே -சாந்தோக்யம் –
ஏஷ சம்ப்ரசாத அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரஞ்ஜ்யோதி ரூப
சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்றும்
முண்டக உபநிஷத்தில்
யதா நத்ய ச்யந்தமாநா சமுத்ரே அஸ்தம் கச்சந்தி நாம ரூபே விகாயா
ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்று
ஜீவன் முக்தி அடையும் பொழுது ப்ரஹ்மமாகவே மாறுகின்றான் என்பதை உணர்த்தும்-
—————————————————————————————
1-4-22-அவஸ்திதே–இதி காசக்ருத்சன
ஜீவன் ப்ரஹ்மமாக இல்லாதது இயற்கையா -அப்படியானால் மோட்ஷம் அடையும் பொழுது ஜீவ ஸ்வரூபம் அழிய வேண்டும்
ஜீவன் தன ஸ்வரூபம் அழிய முயலாதே
ஏதோ ஒரு காரணத்தினால் ப்ரஹ்மமாக இல்லை என்று கொண்டால் முன்பு ப்ரஹ்மமாக இருந்து இருக்க வேண்டும்
மோட்சத்தின் பொழுது ப்ரஹ்மம் ஆகிறான் என்றது தவறாகும் –பரம் பொருள் ஜீவன் உள்ளேயே இருப்பதாக உணர்த்தவே
ஜீவனைக் குறித்த பதங்கள் கூறப்பட்டன
ப்ருஹத் ஆரண்யாகாவில்-ய ஆத்மா நி திஷ்டன் யச்யாத்மா சரீரம் -போன்ற பல வாக்யங்கள் உண்டே –
இதையே காசக்ருத்ச்னர் எடுத்துக் காட்டுகிறார்-
வாக்ய அந்வயாதி கரணம் சம்பூர்ணம்
———————————————————————————————-
1-4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –
1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —
பிரமமே உபாதான காரணமாக இருந்தால் மட்டுமே பிரதிஞ்ஞை எனப்படும் உண்மையான வரிகள் பொய்யாகாது
ச்வேதாஸ்வதார உபநிஷத்தில் -அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்-என்று மாயையான பரம் பொருள்
மாயையான பிரகிருதி கொண்டு உலகைப் படைக்கிறான்
பூர்வ பஷி -இதனால் நிமித்த காரணமும் உபாதான காரணமும் வெவ்வேறே என்பர்
ப்ரஹ்மத்தை உபாதான காரணமாகக் கொண்டால் மாறுதல் அடைய வேண்டி வரும் அவிகாராய என்றது பொய்யாகும் என்பர்
சித்தாந்தம் பிரதிஜ்ஞை -உததமாதே சம்ப்ராஷ்ய யே நாஸ்ருதம் ஸ்ருதம் பவத்யமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம் -என்று
பரம்பொருளைக் குறித்து சொல்லிற்று
எதை ஒன்றைக் கேட்டால் கேட்க்கப் படாதது கேட்க்கப் படுகிறதோ நினைத்தால் நினைக்கப் படாதவை
நினைக்கப் படுகிறதோ அறிந்தால் அறிந்தது ஆகின்றதோ -அதுவே பரம்பொருள்
சாந்தோக்யம் -திருஷ்டாந்தம் -யதா சோம்ய ஏகேந மருத் பிண்டேந சர்வம் ம்ருண்மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்
குயவன் என்று மட்டும் கொண்டால் அனைத்தையும் அறிந்தது ஆகாதே
ப்ரஹ்மத்தை உபாதானமாக் கொண்டு ஏற்படும் மாறுதல்கள் அவனது உடலாக உள்ள நமது சரீரத்தில் நிகழ்வதால் அவனுக்கு தோஷம் தட்டாதே
இத்தையே அஸ்மான் மாயீ ஸ்ருஜ்யதே -என்கிறது
————————————————————————————-
1-4-24-அபித்யோப தேஸாத் ச-
தனது சங்கல்பத்தை ப்ரஹ்மம் -ததைஷத பஹூச்யாம் -சாந்தோக்யம் என்றும்
ஸோ காமயத பஹூச்யாம் -தைத்ரியம் -என்றும் சொல்லுவதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று அறியலாம்-
——————————————————————————————–
1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச
வேத வரிகளும் ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று சொல்லுகின்றன
யஜூர் வேதம் -ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வருஷ ஆஸீத் யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்ட தஷூ
ம நீ ஷி ணோ மநஸா விப்ரவீமி வோ ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவ நாதி தாரயன்-என்று
காடு போலே ஆதாரமாக உள்ளவனும் ப்ரஹ்மமே -உபாதான காரணமாக இருக்கும் மரமும் ப்ரஹ்மமே
நிமித்த காரணமும் ப்ரஹ்மமே -என்றதாயிற்று-
—————————————————————————————–
1-4-26-ஆத்மக்ருதே
தன்னைத் தானே படைத்துக் கொண்டதாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே
தைத்ரியம் -ஸோ காமயத பஹூச்யாம் -என்றும்
ததாத்மானம் ஸ்வயமக்ருத-என்றும் கூறப்பட்டது
உலகில் உள்ளவற்றை தனது உடலாகக் கொண்டு-அவற்றை படைக்கும் கர்த்தாவாகவும்
தன்னால் படைக்கப் பட்ட தானே உருவாக்கப் பொருளாகவும் ப்ரஹ்மம் உள்ளது
இத்தாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே -என்னலாம்-
————————————————————————————
1-4-27-பரிணாமாத்–
பரிணாமத்தைக் கூறுவதால் ப்ரஹ்மம் குறையற்றது
ப்ருஹத் உபநிஷத்தில் -தத் ஹ இதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் தத் நாம ரூபாப்யாம் வ்யாக்ரியத
சூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் –ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -எப்பொழுதும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ளது
தோஷங்கள் தட்டாது-
———————————————————————————-
1-4-28-யோ நிஸ்ஸ கீயதே ஹி-
ப்ரஹ்மத்தை யோநியாகவும் கூறுவதாலும் அவனே உபாதான காரணமாவான்
முண்டக உபநிஷத் –
யத் பூத யோநிம் பரிபஸ்யந்தி தீரா -ஞானம் உடையவர்கள் பூதங்களின் யோனியாக காண்கின்றார்களோ -என்றும்
கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் -படைப்பவனும் புருஷனும் யோநியும் ஆக உள்ள ப்ரஹ்மம் -என்றும்
யதோர்ணநாபி ஸ்ருஜதே கிருஷ்ண தேச
யதா ப்ருதிவ்யாமொஷதய சம்பவந்தி
யதா சத புருஷாத் கேசலோ மாநி ததா ஷராத் சம்பவதீஹ விச்வம் -என்று
சிலந்தி நூலை தன்னுள்ளே இழுத்துக் கொள்வது போலேயும் -பயிர்கள் பூமியில் இருந்து தோன்றுவது போலேயும் –
பரம் பொருளின் இடத்தில் இருந்து உலகம் தோன்றுகிறது
கர்த்தா என்கிற பதம் நிமித்த காரணத்தையும்
யோநி என்கிற பதம் உபாதான காரணத்தையும் குறிக்கும்-
பிரக்ருத்யதிகரணம் சம்பூர்ணம்
———————————————————————————
1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-
1-4-29-ஏதேந சர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா
இதன் மூலம் ப்ரஹ்மமே அனைத்துக் காரணமும் என்றும்
ஸ்ரீ மன் நாராயணனே ப்ரஹ்மம் என்றும் படிக்கப் பட்டது –
சர்வ வியாக்யான அதிகரணம்-சம்பூர்ணம்
முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -சம்பூர்ணம்
————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply