பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 3-8-நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே !-

திரு நாங்கூர் அனுபவம் ஆரம்பம் –

நாங்கை நாலாயிரம் -நாலாயிரம் குடிகள் வாழ்ந்த ஷேத்ரம் ஆதலால் அவர்களுக்காக பதினோரு இடங்களிலே சந்நிதி பண்ணலாயிற்று
திரு மணி மாடக் கோயில் மங்களா சாசனம் இதில் –

————————————————————–

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-1-

நந்தா விளக்கே -அணையாதே விளக்கே –
ஸ்வயம் பிரகாசகமான ஜ்ஞானத்தை குணமாக யுடையவன் -ஜ்ஞான ஸ்வரூபத்தை யுடையவன் –
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு -பெரியாழ்வார் 4-3-11-
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கு -திருவாய் -4-7-1-
ஞானச் சுடர் விளக்கேற்றி -இரண்டாம் -1-
உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி -மூன்றாம் திருவந்தாதி –
ஹர்த்தும் தமஸ் சதஸ தீச விவேக்தும் ஈசோ மாநம் ப்ரதீபமிவ காருணிகோ ததாதி -ஸ்ரீ ரீங்க ராஜ ஸ்தவம் –
சாஸ்திரம் கொண்டே அறிய முடியும் –

அளத்தற்கு அரியாய் –
தேச கால வஸ்து பரிச்சேதம் இல்லாதவன் –
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் -திருவாய் -1-1-10-சர்வ வியாபி –
த்ரிவித பரிச்சேத ராஹித்யம் -ஸ்ரீ பாஷ்யம் இதனாலே -அநந்தன் -என்னும் திரு நாமம் இவனுக்கு –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-தைத்ரியம் என்பதையே
நந்தா விளக்கே -அளத்தற்கு அரியாய் -ஆழ்வான் நிர்வாஹம்
நந்தா -சத்யம் –/விளக்கு -ஞானம் –/அளத்தற்கு அரியாய் -அநந்தம் ப்ரஹ்ம –
நர நாரணனே
நர நாரணனாய் உலகத்து -அற நூல் சிநகாமை விரித்தான் என்பர் மேலும்
இவை எல்லாம் கிடக்க காள மேகத் திரு உருவைக் காட்டி  தங்களை ஆழம் கால் படுத்தியது பற்றி –
கரு மா முகில் போல் எந்தாய் -என்கிறார்
இவ்வாறு இமையோர்கள் ஏத்தி அருள் இரக்கிறார்கள் இங்கே
திரு நாங்கூர் சோலை வளம் மேலே சொல்லப் படும்
தேன் வண்டு களி வண்டு சுரும்பு வண்டு -பல வகை யுண்டே  –

————————————————————

முதலைத் தனிமா முரண் தீர அன்று முது நீர்த் தடத்துச் செங்கண் வேழம் உய்ய
விதலைத் தலைச் சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மானிடம் விண்ணனவும்
பதலைக் கபோதததொளி மாட நெற்றிப் பவளக் கொழுங்கால பைங்கால் புறவம்
மதலைத் தலை மென்பெடை கூடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே—3-8-2-

முதலைத் தனி மா முரண் -பகவத் பக்தர்களை ஹிம்சிக்க வேணும் என்று இருந்த துஷ்டத் தனம்
விதலை -நடுக்கம்
வி தலை -பஷி ராஜன் வி பஷி -கருடன் மேலே என்றுமாம்-

பதலை யாவது நுனியில் ஸ்தாபிக்கப் படும் கும்பங்கள்
கபோதம் -மாடப் புறா -அப் புறாக்கள் தங்கி வாழும் இடம் சந்நிவேசத்தையும்
கபோதம் கபோதை கபோதி என்றும் வ்யவஹரிப்பது உண்டு -மாடங்களில் ஒரு பகுதி
மதலைத்தலை-பிள்ளைத் தூண்களின் தலையிலே-

———————————————————-

கொலைப் புண் தலைக் குன்ற மொன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர் செய்து கொங்கு ஆர்
இலைப் புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மானிடம் ஆளரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி
மலைப்பண்ட மண்டத்திரை யுந்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-3-

ஆஸ்ரிதர் விரோதிகளைக் களைந்து ஒழிந்தால் அந்த சந்தோஷத்துக்குப் போக்குவீடாக பிராட்டி
திரு முலைத் தடங்களாலே அணைத்து அமுக்கி கட்டுதல் –
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகவாஹம் -பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பார்த்தாராம் பரிஷவஜே
குன்றம் -ஆகுபெயரால் யானையைக் குறிக்கும்
காவேரி வாய்க்கால் பெருக்கால் திரு நாங்கூர் சுற்று பிரதேசங்களில் உள்ளது பற்று -பொன்னி திரை யுந்து நாங்கூர்
ஆளரியால்-ஆண்மைத் தனம் நிரந்த சிங்கங்கள் என்றபடி-

———————————————————-

சிறையார் உவணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறையார் நெடு வேல் அரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் இடந்தான்
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி யாறங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-4-

கருடன் -ஸூபர்ணா-உவணம் எனத் திரிந்து -மாலி சுமாலி வதம் -புள்ளூர்ந்து செய்து அருளி -அவனே இங்கே  சேவை சாதிக்கிறான்
முத்தீ -கார்ஹபத்யம் -ஆஹவ நீயம் -தஷிணாக்னி
புகழ் எய்தி -பரம வைதிகர்கள் வாழும் புகழ் -நாங்கூர் நாலாயிரம் –

——————————————————-

இழையோடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாடவன் தாள் குருந்தம் ஒசித்துத் தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான்
குழை யாட வல்லிக் குலமாட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை யாடு சோலை மயிலாலு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-5-

யசோதை பிராட்டி அணிந்து கொள்ளும் ஆபரணங்கள் உடன் வந்தது பற்றி -இழையோடு-
கொங்கைத் தலை கொங்கைத் தலம்-பாட பேதங்கள்
தடம் தாமரை பொய்கை புக்கான் -காளிய நர்த்தனம்-கோபிகள் யுடன் ஜலக் கிரீடை என்றுமாம் –

——————————————————————————-

பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க்கழுதுக்கு இரங்காது அவள் தன
உண்ணா முலை மற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தானிடம் ஓங்கு பைந்தாள்
கண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக் கழு நீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து
மண் எனது இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-6-

பூதனை நிரசனம் ஆழ்வார்கள் மிகவும் ஈடுபட்டு அருளுவார்கள்
ஆய்ச்சியர் -ஆய்சிகள் அனைவரும்  அஞ்ச -யசோதை அஞ்ச -உயர்வு பன்மை
மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே –
அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -பெரியாழ்வார் -3-1-1-என்றும்
பேய்ச்சி முலை யுண்ட பின்வை இப்பிள்ளை பேசுவது அஞ்சுவனே -பெரிய திருமொழி -10-7-8-
பகுவாய் -ராஷச தன்மைக்கு உரிய விசேஷணம்-கழுது -பேய்
பிள்ளை விழுப்பரையரும் ஆப்பானும் கூட அனுசந்திக்க -வைகி-மூன்றாம் அடியிலும் -வைகு -நான்காம் அடியிலும் ஆவ்ருத்திக்கு பொருள் –
பட்டர் -இளைய ஸூகுமாரமான எருமைகள் என்பதால் -வைகுதல் -விளம்புதல் –

———————————————-

தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன மேல் அடி வைத்த அம்மானிடம் மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண் நெற்கு எனச சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-7-

நுழைப் பாவையர் -குறத்திகள்
தழைக் காட்டவிழ்  தாமரை -தழை தாமரை -கட்டவிழ் தாமரை –
கட்டு நெகிழாமல் முகுளமாக இருக்கும் தாமரையும் -கட்டு அவிழ்ந்து மலர்ந்த தாமரையும்
விடம் கால் -காலுதல் -வீசுதல் -என்பதால் காற்று
அதன் உச்சி தன் மேல் அடி வைத்த -அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் ஆழியம்  கண்ணா யுன் கோலப் பாதம் -திருவாய் -10-3-6-
அடியார் பிரார்த்தித்து பெற வேண்டியவை இந்த துஷ்ட காளியன் பெற்றானே –
செழு முத்து வெண் நெல்லுக்கு என்ன -தங்கள் முத்துவின் சீர்மையும் தாங்கள் பெரும் நெல்லின் தாழ்வும் தெரிவிக்கப் பட்டன
முன்றில் சென்று -இல் முன் சென்று -குறத்திகள் நாழி நெல்லுக்கு நாலு  நாழி முத்து கொள்ளுங்கோள் என்று
வலுக் கட்டாயமாக சொல்வார்களாம் -இல்லத்திலும் முத்துகள் சிறந்து இருப்பதால் –

——————————————————-

துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
இளையார் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மானிடம் வேல் நெடுங்கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-8-

கோழி அழைப்பதன் முன்னம் -நாமம் ஆயிரம் ஏத்த நின்ற -நாச்சியார் திருமொழி –
ஸ்ரீ கிருஷ்ண லீலைகள்  முன்னடிகளில் -கூறை பறித்தல் -சிற்றில் சிதைத்தல் போல்வன
துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியார் -மூன்று வகைப் பொருள்
துளைகள் நிறைந்த கரிய மெல்லிய புல்லாங்குழல் போலே இனிய குரல் யுடைய ஆய்ச்சியர்
நீரில் துளைந்து -படிந்து -நிறைந்துள்ள கரிய மெல்லிய கூந்தலை யுடைய ஆய்ச்சியர்
துளைகள் பொருந்திய கரிய மெல்லிய குழலின் பெயரையும் அதன் அடை மொழிகளையும் தங்கள் கூந்தலுக்கு யுடைய ஆய்ச்சியர்
கூந்தல் சுருண்டு இருக்கும் நிலையில் துளைகள் தென் படுவதால் -துளையார் என்று துளை மிக்கு இருக்க
அதாவது சுருண்டு கறுத்து மிருதுவான குழலை
உடையராய்-என்றுமாம் –
வைதிக புருஷர்கள் -வீட்டுப் பெண்கள் -கிளிகள் யாவரும் வேதம் ஓதும் திரு நாங்கூர்-

———————————————

விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா ! விளங்கு சுடர் ஆழி என்னும்
படையோடு சங்கு ஓன்று   உடையாய் ! என நின்று இமையோர் பரவும் இடம் பைந்தடத்துப்
பெடையோடு செங்கால அன்னம் துகைப்பத் தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்
மடையோட நின்று மது விம்மு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-9-

நப்பின்னை பிராட்டி கொழுநனே இங்கே சேவை சாதிக்கின்றான்
அன்னப்  பறவைகள் மிதுனமாக விளையாட அந்த துகைப்பால் மது வெள்ளம் பெருகி செங்கழுநீர்  ஓடைகளில் ஓட –
ஆஸ்ரயத்தை பேணிப் பரிமாற அறிகிறன இல்லை
அத்தாலே துக்கப் பட்ட
தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர் மடையோட நின்று மது விம்மு –
திரண்ட தாமரைப் பூ வின் நடுவே
செங்கழுநீரின் மது வெள்ளமானது
மடையாலே போகா நிற்கச் செய்தேயும்
அதினுடைய மிகுதியாலே உள்ளே நின்று
விம்மா நிற்கும் ஆயிற்று –
திரண்ட புண்டரீகங்களின் நடுவே அன்னங்கள் துக்கிக்க
நடுவு நிற்கிற செங்கழு நீரானது மது வெள்ளம் இடா நிற்கும்-

—————————————–

வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர் மணி மாடக் கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டைய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கண்டார் வணங்கக் களியானை மாதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகாண்டு விரும்புவரே–3-8-10-

ஓத வல்லவர்கள் ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் ஆவார்
மருந்து தின்னப் பின் வாங்கும் பிரஜைகளை வெல்லக் கட்டி கொடுத்து ருசி விளைவிப்பது போலே
இஹ  லோக புருஷார்த்தங்களை காட்டி மேலே கூட்டிஷ் செல்வர்
விரும்புவர் -சிற்றின்பங்களை   நுகந்து  பின்  க்ரமமாக பரம புருஷார்த்தம் விரும்புவர்-

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading