ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா —
திருமந்தரம் -எட்டு திரு அஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் -எங்கனே என்னில் –
ஓம் -என்றும் -நம-என்றும் -நாராயணாய -என்றும் -மூன்று பதமாய் இருக்கும்
அதில் முதல் பதம் –
ஏக அஷரமான-பிரணவம் —
இது அகாரம் என்றும் உகாரம் என்றும் மகாரம் என்றும் மூன்று திரு அஷரமாய் -மூன்று பதமாய் இருக்கும் –
இரண்டாம் பதமான நமஸ் ஸூ –
ந-என்றும் -ம -என்றும் இரண்டு திரு அஷரமாய் இரண்டு பதமாய் இருக்கும்
மூன்றாம் பதமான நாராயணாய -பதம்
அஞ்சு திரு அஷரமாய் -நார -என்றும் -அயன-என்றும் -இரண்டு பதமாய் –
மேல் ஆய -என்று சதுர்தியாய் இருக்கும் –
எம்பெருமானுடைய-சர்வ ரஷகத்வமும் -சமஸ்த கல்யாண குணாத் மகத்வமும் -சர்வ சேஷித்வமும்-
ஸ்ரீ யபதித்வமும் -இவை அகாரார்த்தம் –
அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும் பகவத் அனந்யார்ஹத்வ சேஷத்வமும் இவை உகாரார்த்தம்
ஆத்மாவினுடைய ஜ்ஞானாநாந்தத்வமும் -ஜ்ஞான குணத்வமும்-நித்யத்வமும் -அணுத்வமும்-
ஏக ரூபத்வமும் -ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசத்வமும் -ப்ரக்ருதே பரத்வமும் -இவை மகாரார்த்தம் –
ஸ்வ அஹங்கார மமகார நிவ்ருத்தியும் -நிவ்ருத்தமான ஸ்வரூபத்தினுடைய அத்யந்த பாரதந்த்ர்யமும் –
பாரதந்த்ர்யா பராகாஷ்டையான ததீய சேஷத்வமும்= பரதந்த்ரனுக்கு அனுரூபமான உபாயத்வமும் -இவை நமஸ் சப்தார்த்தம் –
சேதன அசேதனங்களினுடைய நித்யத்வமும் -அவற்றினுடைய சமூஹத்வத்தையும் -சமூஹ சங்க்யாத்தத்வமும் -இவை நார சப்தார்த்தம் –
ஈஸ்வரனுடைய தாரகத்வமும் -வ்யாபகத்வமும் -நியந்த்ருத்வமும் -சர்வ வித பந்துத்வமும் -ப்ராப்யத்வமும் -ப்ராபகத்வமும் –
சகல ஜகத் காரணத்வமும்-இவை அயன சப்தார்த்தம் –
எம்பெருமானை ஒழிய ரஷகாந்தர பிரதிபத்தி நடையாடிற்று ஆகில் அகாரார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
அந்ய சேஷத்வம் நடையாடிற்று ஆகில் உகாரார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
அநாத்மாவான தேஹத்தில் ஆத்மபுத்தி நடையாடிற்று ஆகில் மகாரார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
ஸ்வ ஸ்வா தந்த்ர்யமும் -ஸ்வ ரஷண பிரதிபத்தியும் -ஸ்ரீ வைஷ்ணவ சமபுத்தியும் -உபாயாந்தரமும் நடையாடிற்று ஆகில்
நமஸ் சப்தார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
ஈஸ்வர சரீரபூதரான சேதன அசேதனங்களோடே ராகத்வேஷம் நடையாடிற்று ஆகில் நார சப்த்தார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
அபந்துக்கள் பக்கல் பந்துத்வ பிரதிபத்தி நடையாடிற்று ஆகில் அயன சப்த்தார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
அபோக்யமான சப்தாதி விஷயங்களிலே போக்யதா புத்தி நடையாடிற்று ஆகில் ஆய சப்த்தார்த்தம் நெஞ்சில் பட்டது இல்லையாகக் கடவது –
திருமந்த்ரத்துக்கு தாத்பர்யார்த்தம் ஏது-வாக்யார்த்தம் ஏது -ப்ரதாநார்த்தம் ஏது -அனுசந்தா நார்த்தம் ஏது -என்னில்
தாத்பர்யார்த்தம் -சகல வேத சாஸ்திர ருசி பரிக்ருஹீதம்
வாக்யார்த்தம் -ப்ராப்ய ஸ்வரூப நிரூபணம்
ப்ரதா நார்த்தம் -ஆத்ம ஸ்வரூப நிரூபணம்
அனுசந்தா நார்த்தம் -சம்பந்த அனுசந்தானம் –
சம்பந்தம் ஏது என்னில் –
அகார பதத்தால் பிதா புத்ர சம்பந்தம் சொல்லி –
அவ -ரஷணே -என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி –
லுப்த சதுர்தியாலே -சேஷி சேஷ சம்பந்தம் சொல்லி –
உகார பதத்தாலே பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –
மகார பதத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி –
நம பதத்தாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி –
நார பதத்தாலே சரீர சரீரி சம்பந்தம் சொல்லி –
அயன பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி –
ஆய பதத்தாலே போக்த்ருத்வ போக்யத்வ சம்பந்தம் சொல்லி
ஆக -திரு மந்தரத்தால் நவவித சம்பந்தம் சொல்லித் தலைக் கட்டுகிறது-
—————————————————————-
த்வய பிரகரணம் –
த்வயம் இரண்டு வாக்யமாய் -ஆறு பதமாய் -இருபத்து அஞ்சு திரு அஷரமாய் இருக்கும்
அதில் பூர்வ வாக்யம் பதினஞ்சு திரு அஷரமாய் -உத்தர வாக்யம் பத்துத் திரு அஷரமாய் இருக்கும் –
எங்கனே என்னில் –
ஸ்ரீ மன் நாராயண சரனௌ சரணம் ப்ரபத்யே -என்றும் -ஸ்ரீ மதே நாராயணாய நம -என்றும் இரண்டு வாக்யமாய் இருக்கும் –
ஸ்ரீ மன் நாராயண சரனௌ –என்றும் –
சரணம் -என்றும் –
ப்ரபத்யே -என்றும் –
ஸ்ரீ மதே -என்றும் –
நாராயண -என்றும் –
ஆய-என்றும்
நம -என்றும் –
பத்து அர்த்தமாய் இருக்கும் –
ஸ்ரீ என்கையாலே -எம்பெருமானுக்கே மறுக்க ஒண்ணாத பெரிய பிராட்டியாருடைய புருஷகாரத்வம் சொல்லி –
மத் என்கையாலே -அப் புருஷகாரத்தினுடைய நித்ய யோகம் சொல்லி –
நாராயண -என்கையாலே இப்படி புருஷகார பூதையான பெரிய பிராட்டியார் தான் குறை சொல்லினும் –
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் -என்னும்படியான வாத்சல்யாதி குண யோகம் சொல்லி –
சரனௌ -என்கையாலே அக் குணங்களுக்கும் பெரிய பிராட்டியாருக்கும் ஆஸ்ரயணீயமான விலஷண விக்ரஹ யோகம் சொல்லி –
சரணம் -என்கையாலே அவ் விக்ரஹமே உபாயம் என்னும் இடம் சொல்லி –
ப்ரபத்யே என்கையாலே உபாய ச்வீகாரம் பண்ணின அதிகாரியினுடைய அத்யவசாயம் சொல்லி –
ஸ்ரீ மதே-என்கையாலே மிதுனமே ப்ராப்யம் என்னும் இடம் சொல்லி –
நாராயண என்கையாலே எம்பெருமானுடைய சர்வ ஸ்வாமித்வம் சொல்லி –
ஆய -என்கையாலே அவன் திருவடிகளில் பண்ணும் வ்ருத்தி விசேஷம் சொல்லி
நம -என்கையாலே அவ் வ்ருத்திக்கு விரோதியான ஸ்வ அஹங்கார மமகார நிவ்ருத்தியைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –
த்வயத்துக்கு -தாத்பர்யம் ஏது -வாக்யார்த்தம் ஏது -பிரதானார்த்தம் ஏது -அனுசந்தானார்த்தம் ஏது -என்னில்
தாத்பர்யார்த்தம் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம்
வாக்யார்த்தம் -பிராபக ஸ்வரூப நிரூபணம்
பிரதானார்த்தம் -மிதுன கைங்கர்யம் –
அனுசந்தானார்த்தம் -ஸ்வ தோஷ அனுசந்தானம்
சொல்லித் தலைக் கட்டுகிறது –
————————————————————————————–
சரம ஸ்லோஹ பிரகரணம் –
சரம ஸ்லோஹம் இரண்டு அர்த்தமாய் -பதினோரு பதமாய் -முப்பத்திரண்டு திரு அஷரமாய் இருக்கும்
எங்கனே என்னில் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச -என்றும் இரண்டு அர்த்தமாய் இருக்கும் –
சர்வ தர்மான்-என்றும் –
பரித்யஜ்ய -என்றும் –
மாம் -என்றும் –
ஏகம்-என்றும் –
சரணம் -என்றும் –
வ்ரஜ -என்றும் –
அஹம் -என்றும் –
த்வா-என்றும் –
சர்வ பாபேப்யோ-என்றும் –
மோஷயிஷ்யாமி -என்றும் –
மா ஸூச -என்றும்
பதினோரு பதமாய் இருக்கும் –
சர்வ தர்மான் -என்கையாலே -இதர உபாயங்களைச் சொல்லி –
பரித்யஜ்ய -என்கையாலே -இதர உபாய நிவ்ருத்தியைச் சொல்லி –
மாம் -என்கையாலே சமயக் ஜ்ஞான உபாயம் சொல்லி –
ஏகம் -என்கையாலே -உபாய நைர பேஷ்யம் சொல்லி –
சரணம் -என்கையாலே உபாயத்வம் சொல்லி –
வ்ரஜ -உபாய ச்வீகாரம் சொல்லி –
அஹம் -என்கையாலே தன்னுடைய சர்வ சக்தித்வம் சொல்லி –
த்வா-என்கையாலே உபாய ச்வீகாரம் பண்ணின அதிகாரி ஸ்வரூபம் சொல்லி –
சர்வ பாபேப்யோ -என்கையாலே ப்ராப்ய பிரதிபந்தகங்களைச் சொல்லி –
மோஷயிஷ்யாமி -என்கையாலே ப்ராப்ய பிரதிபந்தக நிவ்ருத்தியைச் சொல்லி –
மா ஸூச –என்கையாலே நிர்ப்பரத்வ அனுசந்தானம் சொல்லித் தலைக் கட்டுகிறது –
சரம ஸ்லோஹத்துக்கு தாத்பர்யம் ஏது -வாக்யார்த்தம் ஏது -பிரதானார்த்தம் ஏது -அனுசந்தானார்த்தம் ஏது -என்னில்
தாத்பர்யார்த்தம் -சரண்ய ருசி பரிக்ருஹீதம்
வாக்யார்த்தம் -பிராபக ஸ்வரூப நிரூபணம்
பிரதானார்த்தம் -ஈஸ்வர ஸ்வரூப நிரூபணம் –
அனுசந்தானார்த்தம் -நிர்ப்பரத்வ அனுசந்தானம் –
சொல்லித் தலைக் கட்டுகிறது –
————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply