ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலபஸ் ஸ்ரீ தரஸ் சதா ––
(விவரணமான ப்ரபந்தமானாலும் இதுவே சிறியது
பெரியாழ்வார் -பெரும் தேவி கேட்டருளாய் -போல்
ரஹஸ்ய த்ரயங்களும் ஒவ்வொன்றுக்கு வேறே ஓன்று விவரணம் -என்று காட்டி -அருளும் கிரந்தம்)
(ரஹஸ்ய த்ரய தீபிகை என்றும் ஒரு நூல் இதே போல் உண்டு)
ஓர் ஒன்றில் அநுக்தங்களாய்-அவஸ்யம் ஜ்ஞாதவ்யங்களான அர்த்த விசேஷங்களுக்கு விவரணம் ஆகையாலே –
அதிலே ஸ்ரீ ரஹஸ்ய த்ரயமும் ஒருவனுக்கு ஜ்ஞாதவ்யமாகக் கடவது -எத்தை எது விவரிக்கிறது என்னில் –
பிரணவம் இருப்பதால் திருமந்த்ரத்துக்கு ஏற்றம்
சம்பந்தம் இதில் சொல்லும்
பிராட்டி சம்பந்தம் த்வயத்திலும்
திருவடி மஹிமை சரம ஸ்லோகத்திலும் உண்டே
ஸ விபக்திகமான அகாரத்தை அனந்தர அஷர த்வயம் (உகாரமும் மகாரமும் )விவரிக்கிறது –
அவ் வஷர த்வயத்தையும் மந்திர சேஷ பதத் த்வயம்(நம நாராயணாயா ) விவரிக்கிறது –
அப் பதத் த்வயத்தையும் த்வயத்தில் வாக்ய த்வயம் விவரிக்கிறது –
அவ் வாக்யத் த்வயத்தையும் சரம ஸ்லோஹத்தில் அர்த்த த்வயம் விவரிக்கிறது –
(சொல்ல வந்தவற்றை இவ்வாறு தெளிவாக அருளிச் செய்து மேல் விவரிக்கிறார் -தேத்தாங்கொட்டை போல் பூர்வர்கள் ஸ்ரீ ஸூக்திகள்)
அதில் அகாரத்தை அஷர த்வயத்தில் பிரதம அஷரம் (உகாரம் மகாரங்களுக்குள் உகாரம் )விவரிக்கிறது-விபக்தியை அனந்தர அஷரம் (வேற்றுமை உருபை மகாரம் )விவரிக்கிறது –
இதில் பிரதம அஷரத்தை பிரதம பதம் (உகாரத்தை நமஸ் )விவரிக்கிறது -அனந்தர அஷரத்தை அனந்தர பதம் விவரிக்கிறது –
இதில் பிரதம பதத்தை பிரதம வாக்யம் விவரிக்கிறது -அனந்தர பதத்தை அனந்தர வாக்யம் விவரிக்கிறது –
இதில் பிரதம வாக்யத்தைப் பூர்வ அர்த்தம் விவரிக்கிறது -உத்தர வாக்யத்தை உத்தர அர்த்தம் விவரிக்கிறது –
————–
இதில் சேஷத்வ பிரதி சம்பந்தியைச் சொல்லுகிற அகாரத்துக்கு அனந்யார்ஹ சேஷத்வ வாசகமான உகாரம்
விவரணம் ஆன படி எங்கனே -என்னில்
அகார வாஸ்யனுடைய சேஷித்வம் ஆஸ்ரயாந்தரங்களிலும் கிடக்குமோ –
அனன்ய சாதாரணமாய் இருக்குமோ -என்று சந்திக்தமானால்
அதனுடைய அனந்ய சாதாரணத்வ பிரகாசகம் ஆகையாலே உகாரம் அகார விவரணம் ஆகிறது –
எங்கனே என்னில்
உகாரத்தில் சொல்லுகிற -சேதனனுடைய அனந்யார்ஹ சேஷத்வம் -சித்திப்பது
அதற்கு பிரதி சம்பந்தியான சேஷித்வம் ஓர் இடத்திலே இளைப்பாறில்-(ராம விராம -வாரமும் வரம் கொடுத்தவனும் இளைப்பாறும் இடம் பெருமாள்)
அங்கன் அன்றியிலே அநேகம் சேஷிகள் ஆகில் அனந்யார்ஹ சேஷத்வம் சித்தியாது –
அந்யராய் இருப்பார் சில சேஷிகள் யுண்டாகில் அந்ய சேஷத்வம் சித்திப்பது ஒழிய அனந்யார்ஹ சேஷத்வம் சித்தியாது-
ஆகையாலே அகார வாச்யனுடைய சமாப்யதிக தாரித்ர்யத்தைச் சொல்லிற்று ஆயிற்று -(ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -இதில் தாரித்ரம்)
——–
சதுர்த்தியில் சொல்லுகிற சேஷத்வத்துக்கு ஆஸ்ரய விசேஷ பிரகாசகமாய்க் கொண்டு விவரணம் ஆகிறது மகாரம் –
நிராஸ்ரயமாக தர்மத்தின் ஸ்திதி இல்லையே -(சேஷிக்கு -ஆய பூர்த்தி அடைய ஆஸ்ரயம் தானே மகாரம் சேஷன்)
ஏறிக் கழிந்த லுப்த சதுர்த்தி
தத்வமஸி -தத் தவம் அஸி -பரமாத்மாவே ஜீவாத்மா சொல்லலாமோ என்னில்
ஐக்யம் சொல்ல வந்தது அல்ல
மமகாரம் தாது அர்த்தம் –மந ஞானி மந ஞான போதன-ஞானமயம் ஞான ஆஸ்ரயம்
நமஸ்-எனக்கு நான் அல்லன் விவரணம் வராதே
நாராயணாயா தத் புருஷ ஸமாஸமும் பஹு வ்ரீஹி ஸமாஸமும் ஒவ்வாதே
ஜகத் அத்தனைக்கும் அந்தராத்மாவான ப்ரஹ்மமே ஸ்வேதகேதுவுக்கும் அந்தராத்மா –
அவ ரஷனே -அனைவருக்கும் ரக்ஷகனான ப்ரஹ்மமே மகாரத்துக்கும் ரக்ஷகம்
தாதர்த்த சதுர்த்தி
உகாரம் பிராட்டிக்கு என்றும் சொல்வர்
பிரணவம் பிரகர்ஷனே ஸ்தூதயாதே யத்தால் நன்கு ஸ்தோத்ரம் பண்ணப்படுகிறானோ அதுவே பிரணவம்
கட உபநிஷத் சர்வ லோக ஈஸ்வரன் அகாரம் -உகாரம் லஷ்மி மகாரம் இருவருக்கும் தாஸன்
அவர்களுக்கு தயோ -லுப்த சஷ்ட்டி -அங்கு –
இத்தைக் காட்டிலும் அநந்யார்ஹ சேஷத்வ அர்த்தமே பிரதானம்
நாராயணனே நமக்கே பறை தருவான்
———
பகவத் வ்யதிரிக்தரை தன்னோடு பிறரோடு வாசியற அன்ய பராகச் சொல்லி –
அவர்களில் அந்ய தமன் சேதனன் என்கிறது உகாரம் -(எனக்கும் அல்லேன் பிறருக்கும் அல்லேன் -அவனுக்கே சேஷ பூதன்)
இதில் கழி யுண்கிற தேவதாந்த்ராதி மாத்ரத்தாலே அந்ய சப்தத்துக்கு பூர்த்தி இல்லாமையாலே
அவ் வன்ய சப்தத்தில் அந்விதனான தன்னையும் கழித்து அனந்யார்ஹதையைப் பூரிக்கிற முகத்தாலே
உகார விவரணம் ஆகிறது நமஸ் சப்தம் –
அஹமபி ந மம பகவத ஏவாஹமஸ்மி-(நானும் எனக்கு அல்லேன் -பகவானுக்கே உரியவன்) -என்கிறபடியே
ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இல்லாத அத்யந்த பாரதந்த்ர்யத்தைச் சொல்லலுகிறது நமஸ் சப்தத்திலே இறே-
ஆகையாலே உகார விவரணம் ஆகிறது நமஸ் சப்தம் –
———
சேஷத்வத்துக்கு ஆஸ்ரய விசேஷ ப்ரகாசகமான மகார வாஸ்யனுடைய சேஷத்வ பூர்த்தி பிறப்பது –
அகிஞ்சத் கரஸ்ய சேஷத்வ அநுபபத்தி (துளி கூட கைங்கர்யம் பண்ணாதவனுக்கு சேஷத்வம் ஒவ்வாதே )-என்கிறபடியே
கிஞ்சித் காரத்தாலே யாகையாலே கிஞ்சித் கார பிரகாசகமாய்க் கொண்டு மகார விவரணம் ஆகிறது நாராயண பதம் –
———–
அத்யந்த பாரதந்த்ர்ய பிரயுக்தமாய் வருகிற உபாய விசேஷத்தின் யுடைய ஸ்வரூபம் என்ன
இதில் இழிகைக்கு ஏகாந்தமான துறை என்ன –
இவ் வுபாய விசேஷமாக செய்ய வேண்டும் அம்சம் என்ன-
இவற்றைப் பிரகாசிப்பிக்கையாலே நமஸ் சப்த விவரணம் ஆகிறது த்வயத்தில் பூர்வ வாக்யம் –
ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் ப்ரபத்யே
ஸ்ரீ மன் நாராயணனாக இருக்கும்
சரணமாகப் பற்ற வேண்டும்
திருவடிகளைப் பற்ற வேண்டும்
——–
கைங்கர்ய பிரதிசம்பந்தி ஒரு மிதுனம் என்னும் இடத்தையும் –
அதற்கு களையான வற்றையும் கழித்துத் தருகையாலே
நாராயண சப்தத்துக்கு விவரணம் ஆகிறது உத்தர வாக்யம்
ஸ்ரீ மதே நாராயணாய நம-அவன் ஆனந்தத்துக்காகவே கைங்கர்யம் மிதுனம் இடத்தில்
———–
அவ் வுபாய ஸ்வீகாரம் சாதநாந்தர நிவ்ருத்தி பூர்வகம் ஆகையாலே தத் பிரகாசகமாய்க் கொண்டு
பூர்வ வாக்யத்துக்கு விவரணம் ஆகிறது பூர்வார்த்தம் –
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
———–
உத்தர வாக்கியத்தில் சொன்ன ப்ராப்ய சித்தி விரோதி நிவ்ருத்தி பூர்வகமாகக் கடவது என்று விவரணம் ஆகிறது
உத்தரார்த்தம்
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
———
சர்வாதிகாரமாயும் -அதிக்ருதாதி காரமாயும் -அர்த்த த்ரயாத் மகமாயும் இருக்கும் இதில்
ஸ்ரீ மத் என்கிற பதம் -புருஷகாரம் –
சரணம் ப்ரபத்யே -என்கிற பதம் -அதிகாரி க்ருத்யம்
நடுவில் நாராயண சரனௌ -என்கிற பதம் உபாயம்
ஸம்பந்த உபாய பேற்றில் தவறை -தாய் தோழி தலைமகள்
மந்த்ர ரஹஸ்யம்
விதி ரஹஸ்யம்
அனுஷ்டான ரஹஸ்யம்
உபாயம் புருஷகார சாபேஷமாயும் அதிகாரி சாபேஷமாயும் இருக்கும்(நடுவில் உள்ள நாராயண கீழ் மேல் பாதங்களை எதிர்பார்க்கும் )
பலத்தில் வந்தால் அந்ய நிரபேஷமாய் இருக்கும்
உத்தர வாக்யமும் பத த்ரயாத்மகமாய் இருக்கும்
இதில் ஆய -என்கிற இடம் கைங்கர்யத்தைச் சொல்லுகிறது
இதுக்குக் கீழ் கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லுகிறது –
மேலில் பதம் கைங்கர்யத்தில் களை அறுக்கிறது –
——————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply