வ்யக்தமேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந
அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய சாஸ்வதோ த்ருவ
மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம
சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை
சர்வ லோகேஸ்வர சாஷால் லோகா நாம்ஹித காம்யயா
சராஷஸ பரீவாரம் ஹதவரம் ஸ்த்வாம் மஹாத்யுதி–யுத்த -114-14/15/16/17–
-ஏஷ-இந்த ராம பிரான் -மஹோ யோகீ -பெரிய யோகியாய்
பரமாத்மா -பரம் பொருளாய்
ஸநாதந-எல்லா காலத்திலும் இருப்பவராய்
அநாதி மத்யநிதந-முதல் நடுவு முடிவுகள் இல்லாதவராய்
மஹத பரமோ -மஹத்தைக் காட்டிலும் பெரியவராய்
மஹான்-உயர்ந்தவராய்
தமஸ -மூல பிரகிருதியைக் காட்டிலும்
பரம் -மேலானவராய்
தாதா -ஆதாரராய்
சங்க சக்ர கதா தர -சங்கு சக்கரம் கதை ஏந்தியவராய்
ஸ்ரீ வத்ஸ வஷா -ஸ்ரீ வத்சம் என்னும் மறுவை மார்பில் யுடையவராய்
நித்ய ஸ்ரீ-இணை பிரியாத ஸ்ரீ மஹா லஷ்மியை யுடையவராய்
அஜய்ய -ஜெயிக்க முடியாதவராய்
சாஸ்வதோ -விகாரம் அற்றவராய்
த்ருவ-நிலை நிற்பவராய் யுள்ளவர்
வ்யக்தம் -இது -தெளிவு
மஹாத்யுதி -பேர் ஒளியை யுடையவராய் –
சர்வ லோகேஸ்வர -எல்லா யுலகுக்கும் ஸ்வாமியாய்
விஷ்-சர்வ வியாபியான நாராயணன்
த்யபராக்கி-உண்மையான பராக்ரமத்தை யுடையவராய்
வா நரத்வமுபாகதை-வானர நிலையை அடைந்து இருக்கும்
சர்வை தேவைர்-எல்லா தேவர்களாலும்
பரிவ்ருதோ -சூழப் பட்டவராய்
மா நுஷம் வபு ஆஸ்தாய்-மனித யுருவை அடைந்து
சாஷாத் -நேரே
லோகா நாம் -உலகங்களுக்கு
ஹித காம்யயா -நன்மை செய்ய விரும்பி
சராஷஸ பரீவாரம் -ராஷச பரி ஜனங்களோடு கூடின
த்வாம் ஹதவான் -உன்னை கொன்றார் –
அவதாரிகை –
வேதாந்தங்க ளிலே-
ந கிரிந்திர த்வதுத்தரோ ந ஜ்யாயோ அஸ்தி வ்ருத்ரஹன் -என்றும்
மாமுபாஸ்வ -என்றும்
விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷி -என்றும்
சிவா ஏகோதிய சிவங்கர -என்றும்
ததா யதா பூர்வம் கல்பயத் -என்றும்
ப்ரஜாபதே சபான வேசம ப்ரபத்யே -என்றும் எவமாதி வாக்யங்களாலே சமாக்யா பிரமாணத்தை இட்டு -இந்திர ருத்ர ப்ரஹ்மாதிகள் காரணங்களாயும் மோஷ பிரதாராகராவும் சங்கித்து-
ஏகோ ஹைவ நாராயண ஆசீன்ந ப்ரஹ்மா நேஸாந -என்றும்
அத புநரேவ நாராயண ஸோ அநயம் காமம் காமையாதா -என்றும்
ப்ரஹ்மா சதுர்முகோஸ் சாயாத -என்றும்
த்ர்யஷ ஸூல பாணி புருஷோஸ் ஜாயதே -என்றும்
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே –ருத்ரோ ஜாயதே –இந்த்ரோ ஜாயதே –என்றும்
தத்வம் நாராயண பர -என்றும்
நாராயண பரம் ப்ரஹ்ம-என்றும்
ப்ரஹ்மா விதாப் நோதி பரம் -என்றும்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும்
சோன் வேஷ்டவ்ய ஸ விஜிஜ்ஞாசி தவ்ய-என்றும்
பராத்பரம் புருஷ முபைதி திவ்யம் -என்றும்
ஏவமாத்ய அந்ய பர நாராயண அநுவாக மஹா உபநிஷத் -ஸூ பால உபநிஷத் ப்ரப்ருதி ஸ்ருதி வாக்யங்களாலும்
ஸ்ருதி லிங்க வாக்ய பிரகரண ஸ்தான சாமாக்யா நாம் சமவாயே பார தௌர்ப்பல்ய மர்த்த விபர கர்ஷாத் -என்று
ஸ்ருதி லிங்காதி காரண ந்யாயத்தாலே பூர்வ பூர்வத்தைப் பற்ற உத்தர உத்தரம் துர்ப்பலமாய் சமாக்யை துர்பலம் ஆகையாலும்
உபக்ரமாதி காரண நியாயத்தாலும் -அந்தர்யாமி பர்யந்த ஸ்வா ர்த்தாபி தாயியாகையாலும் அவயவ சக்தியாலும்
நாராயணனே சர்வ காரணம் பரதத்வம் உபாஸ்யன் மோஷப்ரதன்-என்று அறுதி இட வ்யுத்பன்நாதிகாரமாய்
பக்த்யா சாஸ்த்ராத் வேதமி ஜனார்த்தனம் -என்று புண்யாதி காரமுமாய் க்லேசிக்குற படியைக் கண்ட ஸ்ரீ வால்மீகி பகவான் சதுரன் ஆகையாலே -ஆஸ்த்ரீ பாலம் பிரசித்தம் -என்னும்படி உலக்கைப் பாட்டாக பர்த்ரு ஹீனைகளாய் பிரலாபிக்கிற -தார அங்கதாதிகளைக் இட்டு –த்வமப்ரமேயச்ச –என்று தொடங்கி தத்வ நிர்ணயம் பண்ணி
இப்போது ராவண வதாநந்தரமாக மந்தோதரியை இட்டுத் தத்வ நிர்ணயம் பண்ணுகிறான் இப்ரதேசத்தால் –
எங்கனே -என்னில்
ராவணம் நிஹதம் ச்ருத்வா ராகவேண மகாத்மாநா -அந்தபுராத் விநிஷ்பேதூ ராஷச்ய ஸோ க கர்சிதா -113-1-என்று
பெருமாள் கையிலே ராவணன் பட்டான் என்று கேட்டு அந்தபுரத்தில் நின்றும் பெண்டுகள் புறப்பட்டு
உத்தரணே -113-3-என்று வடக்கு வாசலாலே புறப்பட்டுப் படுகலத்திலே சென்று
தா பதிம் -113-7-என்று ராவணனைக் கண்டு அறுப்புண்ட கொடிகள் போலே இவன்மேல் விழுந்து
பஹூமா நாத் -119-8/9-என்று வல்லபையாய் இருப்பாள் ஒருத்தி சர்வாங்க பர்ஷ்வங்கம் பண்ணிக் கிடந்தது கூப்பிட அடியாள் கூத்தி யாய் இருப்பாள் ஒருத்தி காலைக் கட்டிக் கிடந்தது கூப்பிட வேறு ஒரு கந்தரப் பிராட்டி பார்ஸ்வத்திலே வந்து
கழுத்தைக் கட்டிக் கூப்பிட
ஆற்றாமை மிகுந்து இருப்பாள் ஒரு அகப்பரிவாரத்தாள் பறி கொடுத்தால் போலே
கை எடுத்துக் கூப்பிட்டுத் தரையிலே கிடந்தது புரள தாசாம் -114-1/2- என்று இவர்கள் அப்படிக் கூப்பிடா நிற்க
பிரதான மஹிஷியியாய் அபிமதையுமாய் இருக்கிற மந்தோதரி யானவள் நினைக்க ஒண்ணாத தொழிலை யுடைய பெருமாளாலே
கொலை யுண்டு கிடக்கிற ராவணனை ஏற விழியப் பார்த்து -நெஞ்சு அழிந்து -பிரலாபித்து அழுகிறாள்
அழுதபடி -ந நு நாம மஹா பாஹோ தவ வைஸ்ரவண அநுஜ-க்ருத் தஸ்ய பிரமுகே ஸ்தாதும்-114-3/4/5-என்றும்
மானுஷாணாம்–114-7- என்றும்
நாட்டார் இரண்டு தோள் படைப்பார்கள் ஆகில் இருபது தோள் படைத்தவன் அன்றோ
ந சோ பார்த்தாவி மௌ பாஹூ-அயோத்யா -23-31-என்று நாட்டார் எழிலுக்கு தோள் படைத்தார்கள் ஆகில் ஆண்மைக்கு தோள் படைத்தாய் நீ யன்றோ
ஆளுடைமைக்கும் ஐஸ்வர்யம் உடைமைக்கும் வைஸ்ரவணன் தமி அன்றோ
நீயுமாய்க் கோபித்தால் நாட்டில் படை வீடு எல்லாம் அழித்துத் திரிந்த இந்த்ரனும் உன் முன்னே நிற்க வல்லனோ –
சாபா நுக்ரஹ சக்தரான ரிஷிகள் பிராமணர் திவ்யரான சாரண கந்தர்வாதிகள் அகப்பட உனக்கு அஞ்சி திக நதந்களிலே ஓடிப் போய்க் கிடப்பது –
இப்படி மதிப்பானாய்க் கிடக்கிற நீ ஷூத்ரரான மனுஷ்யருக்குத் தோற்றோம் என்று வேள்கவும் அறிந்திலையீ-
வரம் கொள்ளுகைக்குக் கூட பாத்தம் போராத மனுஷ்யர் கிட்ட ஒண்ணாத நிலத்திலே நின்று ஓர் உடம்பிலே அம்பு பட்டால் அவ்வடிவை விட்டு வேறு ஒரு வடிவு கொள்ள வல்லையாய் இருக்கிற
உனக்கு ராமனால் பிறந்த வி நாசம் எனக்க்குக் கூடி இருக்கிறது இல்லை என்று அநுபாபத்தி பட்டு
யதைவ -114-11/19- என்று குரங்குப் படை கொண்டு
உனக்கு அகப்பட தலைக்காவலாய் அழிவில்லாத பரிகரமும் தானுமாய் இருந்த கரனைக் கொன்ற படியாலும்
இந்த யுக்திகளாலே இவரை மனுஷ்யர் அல்ல -திவ்யர் -என்று அறுதி இட்டு –
அதவா வாஸவேந த்வம் தர்ஷித அஸி-114-13-என்று இந்த்ரனாலே நலிவு பட்டாயோ-யம குபேராதிகளா லேயோ -சம்ஹர்த்தாவான ருத்ரனாலேயோ -என்று சங்கி த்து
வாஸ வசய -114-13-என்றும் -யேந வித்ராசித்த –113-12- என்றும் -சேதாரம் –114-49- என்றும்
தூசியிலே நின்ற உன் மகன் கையிலே கட்டுண்டு போன இந்த்ரன் உன் முன்னிலையிலே நிற்கவும் மாட்டான்
எல்லார்க்கும் கூற்றம் ஆனானாகிலும் உனக்கு அஞ்சி ப்ரஹ்மாவை இட்டு உறவு செய்து நழுவின யமனும் மாட்டான்
தமையனே யாகிலும் ஏற்ற புரவியான புஷ்பகத்தை யகப்பட பரி கொடுத்து இன்று கூட மீட்க மாட்டாத வைஸ்ரவணனும் மாட்டான்
சந்திர ஹாசம் கொடுத்து உபகாரகனாய் இருக்கச் செய்தேயும் பீடத்தோடு -கைலாசத்தோடே -பிடுங்குண்ட வனாகையாலே ருத்ரனும் மாட்டான் -என்று கழித்து
சதாம் ஹி சந்தேஹபதேஷூ வஸ்து ஷூ பிரமாண மந்த காரண பிரண்ருத்தய -சாகுந்தலம்-1-19-என்று
மானஸ ப்ரத்யஷத்தாலும்
ராவண வதத்தில் ஐந்த்ரிய ப்ரத்யஷ்த்தாலும் -சேது பந்தன கர வாத வாலி வதாதி காரணங்களால் வருகிற அனுமானத்தாலும்
பராசச்ய சக்திர் விவிதைவ ஸ்ருயதே ஸ்வா வாவிகீ ஜ்ஞான பலக்ரியா ச -சவே -6-8- என்றும்
விசித்ரா சக்த யச்சைதா ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா -ஸ்ரீ விஷ்ணு புரா -6-7-70- என்றும்
சீதா லஷ்மீர் பவான் விஷ்ணு -120-28–என்றும் -பவான் நாராயணோ தேவ -120-13- என்றும்
சொல்லுகிற ஆகமக்ரமங்களாலும்
பெருமாளை பரவஸ்து என்று தானே அறுதியிட்டு தான் அறிந்த பிரகாரத்தை பிறர்க்கும் அறிவிப்பதாகக் கோலி
ராவணனை நோக்கி இவர் கேவலர் அல்ல -பர வஸ்துவான நாராயணன் –
தேவாதிகளால் படாத படி ப்ரஹ்ம அந்தர்யாமியாய் நின்று வரம் கொடுத்த படியாலே
சத்ய வாக்ய பிரயோகராகைக்காக தம்மை மூடி -மனுஷ்ய சட்டை இட்டு ஒறுப் புண்ட தேவர்களையும் -ருஷ -கரடி -வானர கோபுச்ச விக்ராஹன்களைக் கொள்ளுவித்து தம்முடைய விபூதியான லோகத்தை
வருத்தம் லோல கண்டகம் -பால -15-20-என்னும்படி நீ நலிந்த படியாலே தமக்கு வேண்டி அன்றிக்கே லோக ஹிதார்த்தமாக சபரிகரனான உன்னைக் கொன்று
பெரிய புகரும் தாமுமாய் நின்றார் என்று நிஷ்கர்ஷித்துத் தலைக் கட்டுகிறாள் இப் பிரதேசத்தில் இச் சதுஸ் ஸ்லோகியாலே-
—————————————————————-
முதல் ஸ்லோகம் –
அவதாரிகை –
இதில் முதல் ஸ்லோகத்தால் லீலா விபூதியிலே எல்லாரோடும் உருக்கலந்து நிற்கிற இவர்
சேதன அசேதன வி லஷணமான வஸ்து -என்று அறிந்தேன் -என்றாள்-
வ்யக்தமேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந
அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான்–114-14-
1-வ்யக்தம்-தெளிவு
அவரோ இவரோ என்று அலமந்து திரிந்தோம் -இப்போது ஒரு படி வெளியாயிற்று
2- வ்யக்தம் –
தேவதாந்திர விஷய விசாரமான போது தெரியாதபடி இருள் மூடிக் கிடந்தது –
பகவத் விஷயத்தில் வந்தவாறே பிரகாசமாய் அறிய வாயிற்று
ததாமி பத்தி யோகம் தம் -ஸ்ரீ கீதை -10-10- என்றும்
மத்த ச்ம்ருதிர் ஜ்ஞாநம போஹா நஞ்ச -ஸ்ரீ கீதை -15-15-என்றும்
அறியாதன அறிவித்த அத்தா -திருவாய் -2-3-2-என்றும்
ஜ்ஞானத்துக்கு ஊற்றுவாய் இவன் இ றே-
3- வ்யக்தம் –
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -நான் முகன் திரு -96-என்னுமா போலே
இத்தனை போதும் அறிந்திலேன் -இப்போது அறிந்தேன் -என்கிறாள் –
4- வ்யக்தம் –
கண்டவாற்றால் தனதே உலகென நின்றான் -திருவாய் -4-5-10-என்கிறபடியே
கண்டபோதே சர்வ லோகேஸ்வர சாஷாத் -114-17-என்னும்படி யானார் –
5- வ்யக்தம் –
கா தவம் பவசி-சுந்தர -33-6.7/8/9-என்று திருவடியானவன் -ருத்ர மருத் வ ஸூக்களுடைய தேவதையோ
சந்தரனைப் பிரிந்த ரோஹிணியோ
வசிஷ்டனைப் பிரிந்த அருந்ததியோ -என்று சங்கித்து-யுக்திகளால் பிராட்டி என்று அறுதி இட்டால் போலே அன்றிக்கே
கண்ட போதே பெருமாள் என்றும் பெருமாளை பர வஸ்து என்றும் அறுதி இட்டேன் -என்கிறாள் –
6-வ்யக்தம் –
மம வ்யக்தம் -மா ஜ்ஞாதம் -பார சபா -90-41-என்கிற திரௌபதியைப் போலே சொல்லுகிறாள் –
மஹத்யாபதி சம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி இத்யேவம் யதௌரா கீதம் வசிஷ்டேந மகாத்மநா
மேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந
அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான் ததிதா நீம் மா ஜ்ஞாதம் -பார சபா -90-41- என்றாள் இ றே –
ஜ்ஞாதம் என்று சாமான வாசியான ஜ்ஞான சப்தம் இவ்விடத்திலே ஸ்ம்ருதி விசேஷத்திலே பர்யவசிக்கிறது
7- வ்யக்தம்
ஸ ஹி தேவை ருதீர்ணச்ய ராவணசய வதார்த்திபி அர்த்திதேர் மா நுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு ஸநாதன -அயோத்யா -1-7- என்றும்
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் -திருவாய் -6-4-5-என்றும்
ராவண வதார்த்திகளான தேவர்கள் அபேஷையாலே வந்து பிறந்தார் என்கிற தேவ ரஹச்யம் இப்போது வெளியாயிற்று
8-வ்யக்தம் –
வர விரோதம் வரும் என்று ராவணன் படும் தனையும் தம்மை மறைத்து –
நாட்டிலே பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய்த் -திரு வாய் -7-5-2- என்கிறபடி திரிந்து ராவணன் பட்ட வாறே இப்போது வெளியாயிற்று
வெளியான படி எங்கனே எனில்
1- ஏஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந–இதிவா
பர வஸ்து என்னும் இடமானால் -வ்யக்தம் ஏஷ -என்று சாமா நாதிகரிக்க வேண்டாவோ -என்னில்
வக்தாவினுடைய விவஷா வசம் இ றே- வாக் ப்ரவ்ருத்தி -ராவண வதம் ராமனால் கூடாது எனபது -இந்த்ராதிகளோ எனபது அங்கும் கூடாது என்பதே சாமான்யத்திலே விசாரித்து யுக்திகளால் ஒரு படி அறிந்தோம் என்று விசேஷத்திலே -நிச்சயித்து தனியே ஒரு வாக்யமாகக் கிடக்கிறது –
மை நாக —என்று பஹூ முகமாக விகல்பமாய் -ஆ ஜ்ஞாதம் ச ஜடாயு இதர சரசா க்லிஷ்டோ வதம் வாஞ்சதி -போலே கிடக்கிறது –
வ்யக்தம் என்று தான் அறிந்தாள் ஆகில் -ஏஷ மஹா யோகி பரமாத்மா -என்று மேலே சொல்லுகிறது என்-என்னில்
ஸ த்வம் மானுஷ மாத்ரேண ராமேண யுத்தி நிர்ஜித -114-5-என்றும்
ஸ ராசாச பரிவாரம் ஹதவாம்ச்த்வாம்-114-7- என்றும் ராவணனை வோக்கிச் சொல்லுகிறவள் ஆகையால்
அவரோ இவரோ என்று சந்தேஹித்தவள் -ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் -சிறிய திருமடல் -23-என்றால் முற்பட
அனந்தரம் -உமக்கு அறியக் கூறுகேனோ-சிறிய திருமடல் -23-என்று ராவணனுக்கும் பிறர்க்கும் அறியச் சொல்லுகிறாள் –
பிணமாய்க் கிடக்கிறவனுக்குச்சொல்லுகிறது என் என்னில்
விரஹி நி களுமாய்ப் பதி ஹீ நைகளுமாய் இருக்கிற ஸ்திரீகள் நாயன்மார் அசந்நிஹிதராய் இருக்க முன்னிலையாக பாவித்துச் சொல்லக் கடவது
ந நு நாமாவி நீதா நாம் வி நே தாஸி பறந்தப –ஆரண்ய -49-26-என்றும்
ஷமசே தம் மஹீபதே-சுந்தர -38-39- என்றும்
ஹா ராமா – ஹா லஷ்மணா ஹா ஸூ மித்ரே ராமமாத சஹ மே ஜனநா -சுந்தர -28-8- என்றும்
முகில் வண்ணா தகுவதோ -திருவாய் -7-2-2- என்றும்
வட்கிலள் இறையும் மணி வண்ணா என்னும் –கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய் -திருவாய்-7-2-3- என்றும்
தகவில்லை தகவிலையே நீ கண்ணா -திருவாய்-10-3-1- என்றும்
அசோகா வநிகையிலே இருக்கிற பிராட்டி மால்யவானிலே இருக்கிற பெருமாளை நோக்கிச் சொன்னாள்-
தந்தாம் ஊர்களிலே இருக்கிற ஆழ்வார்கள் ஆகிற நாய்ச்சிமார்கள் தந்தாம் திருப்பதிகளில் இருக்கிற நாயன்மாரை நோக்கிச் சொன்னார்கள்
தாரையும் வாலி பட்டுக் கிடக்கிற போது-உத்திஷ்ட -கிஷ்கிந்தா -20-5/6-என்று சொன்னாள்
மந்தோதரியும்-ந நு நாம -மஹா பாஹோ தவ வைஸ்ரவண அநுஜ -114-3- என்றும் உத்திஷ்டோ -114-82-என்று சொன்னாள்
ப்ரத்யஷமாக லௌகிக வி லாபங்கள் தானே கானா நின்றோம்
இவள் தான் தனக்கு வ்யக்தமாகச் சொன்ன பாசுரம் என் -என்னில் –
ஏஷ பரமாத்மா நித்ய ஸ்ரீர் லோகா நாம் ஹித காம்யா ஸ ராஷஸபரிவாரம் ஹத வாம்ஸ் த்வாம் மஹாத் யுதி-என்று இப்புடைகளிலே
1- ஏஷ -இவர் –
மா நுஷம் வபுராஸ் தாய -114-16-என்று மனுஷ்யச் சட்டை இட்டுத் தம்மை மறைத்துக் கொடு நிற்கிற இவர்
2- ஏஷ –
ராம சோகசமாவிஷ்டம்–112-14-என்றும்
சம்ஸ்கார -114-92- என்றும்
எங்களுக்கு எல்லாம் நியாமகராய் -பூசலில் பட்டார்க்கு வெறுக்கிறது என் -சம்ஸ்காரத்தில் ப்ரவர்த்திக்கலாகாதோ -பெண்களை மீள விடும் -என்று
உத்தர க்ருத்யங்களுக்கு விதாயகராய் இருக்கிற இவர் –
3- ஏஷ –
விபீஷண ஸ்திரீகளை ஆபரண பூஷிதை யாக்கி நிற்கிற இவர் –
4- ஏஷ
கொழுந்தனார் பெண்டுகளை அந்தப்புர விபூஷிதைகள் ஆக்கி எங்களை ரண பூஷிதைகள் ஆக்கி நிற்கிற இவர்
5- ஏஷ –
தர்ம சம்ஸ்தாபநார்த்தாய -ஸ்ரீ கீதை -4-8-என்றும்
தர்ம பாலோ ஜனஸ் யாச்ய-ஆரண்ய -1-18-என்றும் ரிஷிகளுக்கு தர்மத்தைக் கொடுத்து
விபீஷண விதேயம் ஹி லங்கைஸ்வர்யமிதம் க்ருதம்-116-13- என்றும் விபீஷணனுக்கு அர்த்த ஐஸ்வர் யத்தைக் கொடுத்து
பஜஸ்வ காமம் ஸூ கரீவ -என்று -ஸூக்ரீவனுக்குகாமத்தைக் கொடுத்து
மா த்வம் சம நுஜ்ஞாதோ கச்ச லோகா ந நுத்தமான் -ஆரண்ய -68-30- என்றும்
ஆவஹத் பரமாம் கதிம் -கிஷ்கிந்தா -17-8- என்றும் ஜடாயு வாலிகளுக்கு மோஷத்தைக் கொடுத்து
அறம் பொருள் இன்பம் வீடு என்கிற புருஷார்த்தம் நாலும் மாண்டவாறே எனக்குக் கைவல்யத்தையே தந்து நிற்கிற இவர் –
6-ஏஷ –
சர்வ சக்திஸ் து பகவா ந சக்த இவ சேஷ்டதே-என்கிறபடியே -கர வாலி வதாதி சேது பந்த லங்கா பங்க ராவண வதாத் யதிமானுஷ சேஷ்டிதங்களைப் பண்ணி ஒன்றும் அறியாதாரைப் போலே நிற்கிற இவர் –
7-ஏஷ –
மாநுஷீம் தநுமா ஸ்ரீ தம் பரம் பாவமஜா நந்த -ஸ்ரீ கீதை -9-11-என்று அபலைகளான என் போல்வார்க்கு ஆஸ்ரீத சௌகர்யார்த்தமாகத் தாழ விட்டு நீர்மையைத் தண்மையாக நினைக்கும்படி எளியராய் இருக்கிற இவர் –
இப்படி எளியராய் இருக்கிற இவர் தாம் ஆர் -என்னில்
1- மஹா யோகீ-
கேவலர் அல்ல -சமஸ்த கல்யாண குணாத்மகோ அசௌ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-என்று கட்டடங்க நன்றான திவ்ய குணங்களை உடையவர் –
2- மஹா யோகீ –
ஏஷாம் விபூதி யோகஞ்ச -என்றும்
யோகயுக் பரமாத்மா அசௌ நித்ய மங்கள விக்ரஹ -என்றும் சொல்லுகிறபடியே
யுநக்தீதி யோக -என்று குணங்களுக்குப் பேராய்-
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண-என்றும்
உயர்வா யுயர் நலம் யுடையவன் -என்றும்
அதி விலஷணமான குணங்களுக்கு ஆகரமானவர் –
3- மஹா யோகீ –
யோக சந்னஹா நோபா த்யா நயா சங்கதி யுக்திஷூ எகிற இவ்வர்த்தங்களிலே யாகிலுமாம் –
முதல் சநநஹனமாய்-சந் நாஹா கவச்சத -என்று யுடம்புக்கீடாய் –
மஹா யோகம் என்று கேவலமான மானுஷ சந் நாஹம் அன்றியிலே இந்த்ரன் வரக் காட்டினதாய் –
திவ்யமாய் ராவண சச்தாச்த்ரங்களுக்கு ஈடுபடாதே
வி லஷணமான யுடம்புக்கு ஈடுடையராய் இருந்தார் என்றுமாம் –
சன்னாகம் -என்று கவசத்தை தமிழனும் சொன்னான் இ ரே
அன்றியிலே -4-மஹா யோகீ -என்று
சந்நத் தௌ விசரிஷ்யத -என்கிறபடியே -சந் நாஹம் -உத்யோகமாய் -உத்யோகம் தவ சம்ப்ரேஷ்ய -17-64-என்று ராஜ்யப் பிரஷ்டர் என்று முசித்து இராதே படை கூட்டுவது –
துணை அணைப்பது அணை யடைப்பது இலங்கையை யடைக்கப் பாய்ச்சுவது சுடுவது இடிப்பது கருடனை அழைப்பது ஔ சாதம் அழைப்பிப்பதாய்
பெரிய உத்சாஹம் யுடையராய் இருந்தார் என்றுமாம் –
அன்றியிலே -5- மஹா யோகீ –
என்று உபாயமாய் -உபாய கோ வதே தஸ்ய -பால -16-2-என்று இவர் கேட்பது –
பிரவிஷ்டோ மாநுஷீம் தநும் அவத்யம் தைவதைர் விஷ்ணோ சமரே ஜஹி-பால -15-21-என்று தேவர்கள் சொல்லுவதாய்
இப்படி வரத்தின் வரியில் அகப்படாதபடி-இது ஒரு யுபாயம் யுடையவராய் ஆயிற்று என்றுமாம் –
அன்றியிலே -6- மஹா யோகீ –
என்று த்யானமாய்-த்யை சிந்தாயாம் இ றே -தசரத யஜ்ஞத்தில் தேவர்கள் திரண்ட அன்று தொடங்கி ராவண வத பர்யந்தமாக நடுவுள்ள கார்ய சிந்தைகளில் ஒன்றும்
பழுது போகாதபடி பத்தும் பத்தாகக் கார்ய விசாரம் யுடையராய் இருந்தார் -என்றுமாம் –
அன்றியிலே -7- மஹா யோகீ –
என்று -சங்கதியாய்-நா சகா யஸ்ய சித்த்யாதி -என்று துணை இல்லாதவனுக்கு ஓன்று ஆகாமையாலே
இது முடியும்படியாக ஹனுமத் ஸூ க்ரீவ விபீஷணாதி களான சஹாய சங்கதி யுடையராய் இருந்தார் என்றுமாம் –
அன்றியிலே -8- மஹா யோகீ –
என்று யுக்தியாய்-உத்தர உத்தர யுக்தௌ ஸ வக்தா வாசஸ் பதிர் யதா -அயோத்ய -1-17- என்னுமா போலே
வன வாச நிவ்ருத்திக்கு இளைய பெருமாள் பஷங்களைத் தள்ளியும்
ஜாபாலி சொன்ன தர்ம ஆஷேபங்களைத் தள்ளியும்
வாலி வத அநந்தரம் அவன் சொன்ன பஷங்களைத் தள்ளியும்
விபீஷண சரணாகதிக்கு ஸூ க்ரீவ சரப ஜாம்பவத் ப்ரப்ருதிகள் யுடைய பஷங்களைத் தள்ளியும்
இப்படி பலரோடு கலந்த இடத்திலும் இத்தனை பேரையும் தள்ளும்படியான பிரபல யுக்திகளை யுடையவராய் இருந்தார் -என்றுமாம் –
அன்றியிலே -8- மஹா யோகீ –
என்று தபச்வீயாய் தலையும் சடையும் அரையும் மரவுரியுமான வேஷத்தாலும் இத்தனை பெண்டுகள் திரண்டு கிடக்க
முகம் எடுத்துப் பாராத விரக்தியாலும் வென்று கொண்ட ராஜ்யங்கள் ஸூ க்ரீவ விபீஷணா திகளுக்குக் கொடுத்துத் தாம் அவற்றில் நசை பன்னாமையாலும்
நினைத்தது முடிக்கும் படியான தப அனுஷ்டானத்தாலும்
இவர் தாம் பெரிய யோகியாய் இருந்தார் என்றுமாம் –
இப்படி யோகிகள் ஆகில் கர்ம வச்யரான சம்சாரியாய் இருந்தாரோ -என்னில் –
1- பரமாத்மா –
அப்படி அல்ல -சர்வ அந்தர்யாமியான புருஷோத்தமன் –
2- பரமாத்மா –
பரோ மா அஸ்மாதி தி பரம-என்றாய்
யஸ்மாத் பரம் நா பரம் அஸ்தி கிஞ்சித் -என்றும்
ந தத் சமஸ் சாப்யதி கஸ்ஸ த்ருஸ்யதே-என்றும்
ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா -திருவாய் -2-3-2- என்றும் சொல்லுகிறபடியே சமாப்யதிக தரித்ரனானவன்
3- பரமாத்மா –
ஆத்மா ஜீவே த்ருதௌ தஹே ஸ்வ பாவே பரமாத்மா நி -யத் நேர்க்கே அக் நௌ மதௌ வாதே -என்ற இவ்வர்த்தங்களிலும் ஆம் –
4- பரமாத்மா –
என்று ஜீவா ராசியாய்
சாச்ச த்யச்சா பவத் என்றும் -ச ஏவ சர்வம் யதஸ்தி யன் நாஸ்தி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-38-என்றும்
இல்லதும் உள்ளதும் -திருவாய் -7-8-4- என்றும் சொல்லுகிறபடியே
சரீராத்மா பாவத்தாலே அவன் தான் என்று சொல்லலாம்படிஇருக்கிறவர்
அன்றியிலே -5- பரமாத்மா –
என்று -த்ருதியிலேயாய்-தைர்யம் -ஆபத்யயி ஸ்வ கார்யேஷூ கர்த்தவ்யத்வ வஸ்தி திர் த்ருதி -என்று இ றே-
ராஜ்ய ப்ரம்ச வனவாச சீத அதர்சன ஜடாயுவதாதியான வ்யசனங்கள் வந்த அளவிலும் செய்யும் கார்யங்கள் ஈடேறும் படியான நிலையை யுடையராய் இருந்தார் -என்றுமாம்
அன்றியிலே -6-பரமாத்மா –
என்று தேஹத்திலேயாய்-நித்யம் நித்யா க்ருதி தரம் -என்றும்
ந பூத சங்க சம்ஸ்தா நோ தேஹோ அசய பரமாத்மா ந -என்றும்
மணியுருவில் பூதம் ஐந்தாய் -திரு நெடு -1- என்றும் –
எதிரிகளுக்கு ஈடுபடாத படியான நித்ய நிரவத்ய விக்ரஹராய் இருந்தார் -என்றுமாம் –
அன்றியிலே -7- பரமாத்மா –
என்று -ஸ்வ பாவத்திலேயாய் -சம்பாஹூப் யாம் நமதி சமபதத்ரை-என்றும்
வாங் மநசை கபூமயே -என்றும் -எளிவரும் இயல்வினன்-திருவாய்-1-2-2- என்றும்
நஹி பால ந சாமர்த்தியம் ருதே சர்வேஸ் வாத் ஹரே -என்றும்
காக்கும் இயல்வினன் -கண்ணபெருமான் -திருவாய் -2-2-9- என்றும்
சௌலப்ய-ரஷகத் வாதியான ஸ்வ பாவம் யுடையராய் இருந்தார் -என்றுமாம் –
அன்றியிலே -8-பரமாத்மா –
என்று பரமாத்மா வாசியாய் -அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்கிறபடியே
சர்வமும் வ்யாப்தமாய்த் தாம் வியாபகர் என்னலாம் படி இருந்தார் என்றுமாம் –
அன்றியிலே -9-பரமாத்மா –
என்று -யத்நத்திலே யாய் -யதன வாம்ஸ்ஸ பவிஷ்யாமி -என்றும்
உத்சாஹ பௌருஷம் சத்த்வம் -என்றும் மேலே மேலே உத்சாஹம் யுடையராய் இருந்தார் என்றுமாம் –
அன்றியிலே -10-பரமாத்மா –
என்று அர்க்க- சூர்ய- வாசியாய்-கபே ராம திவாகர -சுந்தர -17-18- என்றும்
தேஜஸா சூர்ய சங்காச -சுந்தர -35-9- என்றும்
முளைக்கதிரை -திரு நெடும் -14- என்றும்
சீரார் சுடர்கள் இரண்டாய் -திருவாய் -6-9-1- என்றும்
பிரதாபாதிகளால் ஆதித்யன் தானாய் இருந்தார் என்றுமாம் –
அன்றியிலே -11-பரமாத்மா –
என்று அக்னியாய் -அகரம் பதம் நயதீத் யக்நீ-என்றாய் -நயாமி பரமாம் கதிம் -என்றும்
காலாக் நி சத்ருசா குரோத -பால -1-18- என்றும்
நிர்த்த தேஹதபி காகுத்ச்த க்ருத்தஸ்த க்ருத்தஸ் தீவ்ரேண சஷூஷா-சுந்தர -30-14- என்றும்
நிலனாய் தீயாய் -என்றும் தாஹகத்வாதிகளாலே அக்னி தானாய் இருந்தார் என்றுமாம் –
அன்றியிலே -12-பரமாத்மா –
என்று மதி வாசியாய் -புத்திமான் மதுரா பாஷி -அயோத்யா -1-13- என்றும்
புத்தா ஹ்யஷ்டாங்கயா யுகத -கிஷ்கிந்தா -54-2-என்றும்
மதியினால் குறள் மாணாய -திருவாய்-1-4-3- என்றும் அவசர உசித புத்தியோகம் யுடையவர் என்றுமாம்
அன்றியிலே -13- பரமாத்மா –
என்று வாத -காற்று-வாசியாய் -தஸ்மை வாதாத்ம நே நம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-31- என்றும்
காலாய் -திருவாய் -6-9-1- என்றும் -சர்வ பிராணி பிராணந ஹேதுவான காற்றுத் தானாய் இருந்தார் –
இது எல்லாம் என் பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹேச்மின் புருஷ பர -ஸ்ரீ கீதை -13-23-என்று பரமாத்மா சப்தம் முக்தனுக்கும் பேராய் இருந்தது –
இது வ்யாவர்த்தகம் ஆகமாட்டாது -என்ன
1- ஸ நாத ந -பரமாத்மா –
முக்தன் நெடும் காலம் பக்தனாய்த் திரிந்து பின்பு முக்தன் ஆனால் அன்றோ பரமாத்மா சப்த வாச்யத்வம் வருவது –
இவன் எப்போதும் பரமாதமா சக்த வாச்யனாய் இருக்கும்
2- ஸ நாத ந பரமாத்மா –
இவன் நித்யம் விபும் சர்வகதம் -என்று சர்வ காலத்திலும் சர்வ தேசத்திலும் சர்வ வஸ்துக்களிலும் இருக்கும் –
ஸநாதந-பரமாத்மா -என்றாலும் -ஆத்மன் சப்தம் தேக வாசியாய் அசித்தாகையாலும் -நித்யம் சதா சதாத்மகம் -என்றும்
நித்யா சத்த விக்ரியா -என்றும் அசித்துத் தான் ஸநாதனம் ஆகையாலும் பர வஸ்து ஆகக் கூடாதோ -என்னில் –
1-அநாதி மத்யநிதந –
அசித்து ஸ்வரூபேண வித்யமாகிலும் ஆதி மத்ய அவஸாநங்கள் யுண்டு –
இவன் -அநாதி மத் யாந்தமஜம வ்ருத்தி ஷயமச்சுதம் -என்று அசித்துப் போலே ஆதி மத்திய அவஸா நங்கள் இன்றிக்கே இருக்கும் –
2- அநாதி மத்ய நிதந-
ஆதி மத்ய நிதநங்கள் மூன்றுக்கும் ஒவ்வொன்றுக்கு இரண்டு அவஸ்தையாய்
அஸ்தி-ஜாயதே -பரிணமதே-விவர்த்ததே -அபஷீயதே -விநச்யதி-என்று அசித்து ஷட்பாவ விகார யுக்தமாய் இருக்கும்
இவன் அப்படி அன்றிக்கே -அபஷய விநாசாப்யாம் பரிணாமர்த்தி ஜன்மபி வர்ஜித சக்யதே வக்தும் யஸ் சதாஸ் தீதி கேவலம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-11-என்று
சர்வதா சத்தையேயாய் வ்யதிரிக்த அவஸ்தா பஞ்சகங்கள் இன்றிக்கே இருக்கும் –
ஸ்தூல ஸூஷ்மாத்மாநே நம-என்றும் -அவ்யக்த வ்யக்த ரூபாய -என்று அசித்துத் தான் ஸூ ஷ்மமாய்-அவ்யக்தமாய் ஸ்தூலமாய் வ்யக்தமாய் இரண்டு அவஸ்தையாய் ஆயிற்று இருப்பது –
ஸ்தூலமாய் விகாரம் என்று பேரை யுடைத்தான ப்ருதிவ்யாதிகளுக்கு ஆயிற்று ஆதி மத்யாதிகள் யுள்ளது
ஸூ ஷ்மமாய் பிரகிருதி விக்ருதியான மஹாதாதிகளுக்கு
த்ரி குணம் யஜ்ஜ்கத்யோ நிர நாதி பிரபவாப்யாயம் -என்று ஆதி மத்யாதிகள் இல்லையே -என்ன
1- மஹத பரம –
அப்படி இருக்கிற மஹானுக்கும் அவ்வருகாய் இருக்கும்
2- மஹத பரம –
இவ்வருகுள்ள கார்ய வர்க்கங்களில் பெருத்து மகான் என்று சொல்லலாம்படியான மஹத் தத்வத்துக்கும் அவ்வருகாய் இருக்கும்
மஹத பரம-என்றால் மஹத பரம வ்யக்தம் அவ்யக்தாத் புருஷ பர -என்று -மஹானுகுக்கு பரம் அவயகதம் அன்றோ -அது வானாலோ என்ன –
மஹான்-
மஹதோ மஹீயான் -என்றும்
மஹாந்தம் விபு மாதமாநம் மத்வா தீரோ ந ஸோசதி -என்றும்
பெரியதுகும் பெரியதாய் முமுஷூ பாஸ்யமுமாய் இருக்கும் –
ஆக
இந்த ஸ்லோகத்தால் லீலா விபூதி யோகமும்
அங்குள்ள சேதன அசேதன வைலஷண்யமும் சொல்லிற்று –
—————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply