ந மே துக்கம் ப்ரியா தூரே ந மே துக்கம் ஹ்ருதேதி வா
ஏததேவா நுஸோசாமி வயோ அஸ்யா ஹ்யதிவர்த்ததே –5-5-
அவதாரிகை –
பிராட்டியைப் பிரிந்த விரஹத்தாலே பெருமாள் பேசும் பாசுரம் இது-
ப்ரியா தூரே -எனக்கு இனிமையான சீதை தூரத்தில் இருக்கிறாள் என்று –
ந மே துக்கம் -எனக்குத் துக்கம் இல்லை –
ந மே துக்கம் ஹ்ருதேதி வா-ராவணனால் அபஹரிக்கப் பட்டாள் என்றாவது எனக்குத் துக்கம் இல்லை –
ஏததேவா நுஸோசாமி வயோ அஸ்யா ஹ்யதிவர்த்ததே-இவளுடைய வயது கழிகின்றது அன்றோ -இத்தைக் குறித்தே வருந்துகிறேன்-
ந மே துக்கம் ப்ரியா தூரே ந மே துக்கம் ஹ்ருதேதி வா
ஏததேவா நுஸோசாமி –
மைதிலி நம்மைப் பிரிந்து தூரத்தில் வர்த்தியா நின்றாள் -என்றதுக்கு வெறுக்கிறேனும் அல்லேன்
இனி -வழிய ராஷஸ் ஸாலே பிரிவு பிறந்தது -இனி எங்கனே நாம் சாதிக்கும் படி -என்றதுக்கு வெறுக்கிறேனும் அல்லேன் –
அதாகிறது -கடக்க இருந்தாள் ஆகில் நாலு பயணம் உள்ளே எடுத்து விட்டுத் தீருகிறது
இனி பிரிவுக்கு ஹேது பூதனான பையலைக் கிழங்கு எடுத்துப் பொகடத் தீருகிறது அக்கார்யம் –
நான் இது ஒழிந்த அல்லாதவற்றுக்கு வெருவேன்-இது ஒன்றுக்குமே நான் மோஹிப்பது-அது எது என்னில் –
வயோ அஸ்யா ஹ்யதிவர்த்ததே-
இவை போலே காணும் என் அம்பாலே மீள விடலாவது ஓன்று அன்றே
அணைக்குக் கிழக்குப்பட்ட நீரை மீட்க்கப் போகாது இ றே-
———————————————————————————————————————————————————————————
சாபமாநய சௌமித்ரே ஸராம்ஸ் சாஸீ விஷோபமான்
ஸாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா –21-22- –
அவதாரிகை –
கடலை நோக்கி வரக் கிடந்த -ஜட -மூட -பிரக்ருதியானது வந்து முகம் காட்டாமையாலே
ஆழியைச் சீறி -திரு விருத்தம் -34-என்றும்
மாமயம் மகராலய அஸமர்த்தம் விசா நாதி -யுத்த -21-20-என்று மீன் படு குட்டமான இது நம்மை மதிக்கிறது இல்லை -கொடுவா தக்கானை -என்கிறார் –
சாபமாநய சௌமித்ரே -சுமித்ரையின் குமாரனான இலக்குவனே வில்லையும் கொண்டு வாரும்
ஸராம்ஸ் சாஸீ விஷோபமான் -விஷப் பாம்பை ஒத்த அம்புகளையும் கொண்டு வாரும்
ஸாகரம் சோஷயிஷ்யாமி -கடலை உலர்த்தப் போகிறேன் –
பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா-வானரர்கள் கால்களினாலே நடந்து செல்லட்டும் –
1-சாபமாநய-
குண ஹீனனான இவனை நியமிக்கும் படி குணவானான வில்லைக் கொடு வாரீர் -என்கிறார் -நற்குணம் -நாண் உடைய வில்
2- சாபமா நய –
இதன் கட்டை -வரம்பை குலைக்கும்படி -கட்டுடை உறுதியுடைய வில்லை கொண்டு வாரீர் -என்கிறார்
3- சாபமா நய –
இவனுடைய இறுமாப்பைப் போக்கும் படி வளைந்த -இயற்கையில் வளைந்த -வில்லைக் கொண்டு வாரீர் -என்கிறார் –
4- சாபமா நய -இது புல்லைக் கவ்வும்படி வில்லைக் கொண்டு வாரீர்
என்ற அளவிலே இளைய பெருமாள் தாம் படுக்கையான படியாலே படுக்கைப் பற்றிப் படைப் பற்றாகக ஒண்ணாது என்று குசை தாங்கி நிற்க -கால தாமதம் பண்ண –
1-சௌமித்ரே –
தாய்மார் சொல்லிற்று செய்யுமது ஒழியத் தமையன்மார் சொல்லிற்று செய்ய ஒண்ணாதோ
2- சௌ மித்ரே –
ராமே பிரமாதம் மா கார்ஷீ -அயோத்யா -40-15-என்று ஆய்ச்சி சொன்னபடி செய்ய வேண்டாவோ
3- சௌ மித்ரே –
ஏகம் துக்கம் ஸூ கஞ்ச நௌ-கிஷ்கிந்தா -5-18- என்று நைத்ரியைப் பார்த்தால் நம்மைப் பண்ணின பரிபவம் உமக்கும் இல்லையோ –
என்றவாறே பயப்பட்டு வில்லைக் கொண்டு வந்து கொடுத்தார் –
1-ஸராம்ஸ் ச-
இக்குறையும் தாரீர் என்கிறார் –
2- 1-ஸராம்ஸ் ச-
அம்புக்கு -அப்புக்கு-ஜலத்துக்கு -அம்பை இட்டு அழிக்க வேணும்
கண்ட கேநேவ கண்டகம் -இ ரே -முள்ளை முள்ளைக் கொண்டே எடுக்க வேணும் –
ஏகேந மகேஷூ ணா-பால -1-66-என்று ஓர் அம்பே அமைந்து இருக்கப் பல அம்பு வேண்டுவான் என்-என்னில்
சமித்ரஜ்ஞாதி பாந்தவம்-பால -15-27-என்று இக்கடலோடு துவக்கான ஏழு கடலையும் அழைக்கையில் யுண்டான திரு உள்ளத்தாலே
பிபேத ஸ புன சாலான் சப்தைகேந மஹேஷூணா கிரீன் ரசாதலஞ்சைவ -என்று
மராமரம் ஏழும் மலை ஏழும் கீழில் ஏழு உலகுமாக மூவேழு இருபத்தொன்றையும் ஓர் அம்பாலே துளை யுருவப் பண்ணினவருக்கு
ஒரு ஏழுக்கு பல அம்பு வேணுமோ என்ன
ஆனை தன பலம் அறியாதால் போலே கோபத்தின் மிகுதியாலே தம்முடைய மிடுக்கை மறந்து அருளிச் செய்தார் ஆகவு மாம் –
சோஷயிஷ்யாமி -என்று சுவறப் பண்ணப் போகிறவருக்கு அம்பென் என்னில்
3- சாரான் –
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -யுத்த -94-22-என்றும்
தீபத பாவக சங்கா சை சரை-யுத்த -103-4-என்றும்
சரங்கள் தமக்கே தாஹக சக்தி யுண்டாகையாலே அருளிச் செய்கிறார்
என்றவாறே போலியாய் இருப்பன சில அம்பைக்கொடுத்தார்
1-ஆஸீ விஷோபமான் –
இவை அன்றே -உம்மைப் போலே உக்த அனுஷ்டானம் பண்ணும்படியானவற்றைக் கொண்டு வாரீர்
2-ஆஸீ விஷோபமான் –
இவை அன்றே -உம்மை-போலே உக்த அனுஷ்டானம் பண்ணும் படியானவற்றைக் கொண்டு வாரீர் ]
3-ஆஸீ விஷோபமான் –
ஆ ஸீ விஷம் ஆகிறது திருஷ்டி விஷம் –
வாயிட்டுக் கடிக்க வேண்டா –
கண்ணிட்டுப் பார்த்த போதே படும்படியாய் இருக்குமது
அப்படியே இங்கும் வாய்ப்பட வேண்டா
உடலில் கண் பட்ட போதே அழியும்படியாய் இருக்கை –
என் தான் திரு உள்ளத்தில் ஓடுகிறது என்ன –
1-ஸாகரம் சோஷயிஷ்யாமி –
ஊண் அடங்க வீண் அடங்குமே -இதன் ஜீவனத்தை -ஜலத்தை உயர் வாழ்வை -சுவறப் பிடிக்கக் காணும் பார்க்கிறது
-2–ஸாகரம் சோஷயிஷ்யாமி –
நாம் உண்டாக்கின வருத்தம் உண்டோ இத்தை அழிக்கும் போது
3-ஸாகரம் சோஷயிஷ்யாமி —
ஏகஸ் த்வமஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா சம்ஹாரகஸ் ததா -ஜிதந்தே -3-என்கிறபடியே
சிருஷ்டி சம்ஹாரங்கள் இரண்டும் ஒருவன் பணி இ றே
4-ஸாகரம் சோஷயிஷ்யாமி —
அப ஏவ சசர்ஜா தௌ-மனு -1-8-என்று சிருஷ்டிக்கு முற்பட்டால் போலே சம்ஹாரத்திலும் ராவணனுக்கு முற்பாடனாக்குகிறோம்
5-ஸாகரம் சோஷயிஷ்யாமி –
கருதக்நமான இத்தைத் துடிக்க துடிக்க வெறும் தரை யாக்குகிறோம்
6- ஸாகரம் சோஷயிஷ்யாமி
அச்சேத்ய அயமதாஹ்ய அயமக்லேத்ய அசசோஷ்ய ஏவ ச -ஸ்ரீ கீதை -2-24–என்கிற ஆத்ம வஸ்து வன்றே
அசேதனமான நீராகையாலே உலர்த்தி விடுகிறோம்
7- ஸாகரம் சோஷயிஷ்யாமி –
இது நம்மோடு ஜ்ஞாதித்வம் கொண்டாடுமாகில் நாம் இத்தோடு ஜ்ஞாதித்வம் கொண்டாடுகிறோம்
ஜ்ஞாதே கார்யம் மஹோ தாதி -யுத்த -19-32-என்னக் கடவது இ றே
சகரர்கள் கல்லின குழி -தாயாதி காய்ச்சல் கொண்டு இத்தை அழிக்கிறேன்
8- ஸாகரம் சோஷயிஷ்யாமி –
அன்று அறுபதினாயிரம் பேர் கல்லினத்தை நாம் ஒருவருமே அல்லா வாக்குகிறோம்
9- ஸாகரம் சோஷயிஷ்யாமி —
விஷ வ்ருஷோ அபி சம்வர்த்ய ஸ்வயம் சேத்தும சாம்ப்ரதம் -என்று நாம் ஆக்கினதை அழிக்கல் ஆகாது
இதின் நீர்க்களிப்பு அறும்படி உலர்த்தி விடுகிறோம்
10- ஸாகரம் சோஷயிஷ்யாமி —
இத்தை ஆக்கும் போது அன்றோ நாம் வேண்டுவது
அழிக்கும் இடத்தில் ருத்ராதிகளை இட்டால் போலே அம்பை இட்டு அழிக்கிறோம்
இத்தால் பெறப் புகுகிற பிரயோஜனம் என்-என்னில்
1-பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா-
இவர்கள் மரக் கொம்பு பாயாமே மணல் குன்றிலே பாய்ந்து போவதாக
2- பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா-
இவர்கள் கை நீச்சு நீஞ்சாமே காலிட்டு நடப்பனவாக
3- பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா-
இவர்கள் அக்கரையோடு இக்கரையோடு தாவாமே காலிட்டு நடப்பனவாக
4- பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா-
இவர்கள் நீருக்கு மேல் அழுந்தாமே மண்ணிலே நடந்து போவதாக –
5- சாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா-
பண்ணின பாபத்துக்கு இதின் பெருமை எல்லாம் தரை மட்டமாக்கிக் குரங்கின் காலின் கீழே துகை யுண்ணும்படி பண்ணுகிறோம் –
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்ருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply