ஸ்ரீ இராமாயண -அபய பிரதான சாரம் -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -ஏதத்து வசனம் ஸ்ருத்வா -17-16/மந்த்ரே வ்யூஹே – -17-18/அந்தர்த்தா நகதா – -17-19/ப்ரணிதீ ராஷசேந்த்ரஸ்ய – -17-20/அதவா ஸ்வயமே வைஷ – -17-21/மித்ரா டவீப லஞ்சைவ -17-22/ப்ரக்ருதயா ராஷசோ -17-23/ராவணேந ப்ரணிஹிதம் -17-24–

ஏதத்து வசனம் ஸ்ருத்வா ஸூ க்ரீவோ லகு விக்ரம
லஷ்மணஸ்ய அக்ரதோ ராமம் சம்ரப்த மித மப்ரவீத் –யுத்த -17-16-

ஏதத்வசனம்-இந்த வார்த்தையை
து ஸூ க்ரீவோ-ஸூ க்ரீவனோ என்னில்
ஸ்ருத்வா-கேட்டவுடன்
லகு விக்ரம-விரைவான நடையை யுடையவனாய்
லஷ்மணஸ்ய அக்ரதோ ராமம் -இலக்குவனுடைய திரு முன்பே ஸ்ரீ ராம பிரானிடம்
சம்ரப்த மித மப்ரவீத் -பரபரப்புடன் இவ்வார்த்தையை யுரைத்தான் –

அவதாரிகை –
மஹா ராஜர் பெருமாள் பக்கல் பரிவாலே ஸ்ரீ விபீஷண ஆழ்வானுடைய அநு கூல பாஷணங்களை
விப்ரலம்பம் என்று புத்தி பண்ணி தந் நிரசன அர்த்தமாகப் பெரிய பதற்றத்தோடு கூடப்
பெருமாளுக்கு ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்தார் -என்கிறது-

ஏதத்து வசனம் ஸ்ருத்வா –
ராகவம் சரணம் கத -என்கிற அவ்வார்த்தையைக் கேட்டதற்குப் பின்பு மகா ராஜர் வேறு பட்டார் -என்கிறது –
சிந்தயித்வா முஹூர்த்தம் து -யுத்த -17-4-என்கிற இடத்தில்
சாரனும் அல்லன் தூதனும் அல்லன் -சத்ரு -என்று நிர்ணயித்த போது கூச்சத்தால் பிறந்த விக்ருதி போல் அன்றி இ றே இது தான் –
பாதகத்தை மறைத்து பெருமாள் தன்னை அநு கூலன் என்று சவீ கரிக்கைக்கு வார்த்தையைச் சொல்லி
அம்முகத்தாலே நலிய வந்தவன் என்று பிறந்த விக்ருதி இ றே-

லகு விக்ரம-
இவன் சரண உக்தி பெருமாள் செவிப்படும் ஆகில் பின்பு மீட்க ஒண்ணாது –
நாம் அந்த சப்தத்துக்கு முற்ப்பட வேணும் -என்று சடக்கென போனார் -என்கிறது –
லஷ்மணஸ் யாக்ரத –
தம்மோபாதி பரிவரான இளைய பெருமாள் சந்நிதியிலே –
அவரும் அஸ்தானே பயசங்கி யாகையாலே அவரையும் கூட்டிக் கொள்ளுகிறார் –
பரதச்ய வதே தோஷம் நாஹம் பஸ்யாமி-அயோத்யா -96-23-என்றவர் இ றே –
ராமம் –
ராகவம் சரணம் கத -என்கிற வாக்ய ஸ்ரவணத்தால் யுண்டான சந்தோஷத்தால் அபி ராமராய் இருக்கிறவரை
சம்ரப்தம் –
பெருமாளுக்கும் இவர் போகிற வழியை அந்யதா கரிக்க ஒண்ணாத படி அடர்த்துக் கொண்டு
அதாகிறது –
ராஜ்ஜியம் விட்டுப் போந்து குவால் நாள் யுண்டோ
ராஜ நீதியை மறந்ததோ
இவ்விடம் லங்கைத்வாரம் அன்றோ
ராவணன் செய்யும் அநீதிகள் அறிய வில்லையோ
ஒருத்தன் சரணம் என்னும் காட்டில் இவற்றை மறந்ததோ -என்றால் போலே சொல்லுகை –
இதம் அப்ரவீத் –
வந்தவன் ராஷ சேந்த்ரனாய் இருந்தான்
அநு கூல பாஷாணமும் பண்ணினான்
இவன் ஆராய இருக்கிறானோ -என்று சந்தேஹித்து பெருமாளுக்கு இவன் வரவு சொல்லுகை அன்றிக்கே
சத்ரு என்றே நிச்சயித்து -தத் பரிஹாரத்துக்குச் செய்ய வேண்டும் ஹித அம்சத்தை சொன்னார்
ராகவம் லஷ்மணஸ்யர்க்ரத சம்ப்ரப்தம் இதம் அப்ரவீத் –
பெருமாளை  பிராட்டி இளைய பெருமாளை நோக்கி அடர்த்து வார்த்தை சொன்னால் போலே
த்வாமா ஹ ஸீதா பஹூ வாக்ய ஜாதம்-ஆரண்ய -13-12-போலே சொன்னார் என்னவுமாம் –

————————————————————————————————————————————————————————-

மந்த்ரே வ்யூஹே நயே சாரே யுக்தோ பவிது மர்ஹசி
வா நராணாஞ்ச பத்ரம் தே பரே ஷாஞ்ச பரந்தப -யுத்த -17-18-

மந்த்ரே-மந்திர ஆலோசனையிலும்
வ்யூஹே -சேனையின் அணி வகுப்பிலும்
நயே -சாம தான பேத தண்டாதி உபாயங்களிலும்
சாரே-வேவுபார்ப்பதிலும்
யுக்தோ பவிதும் -கவனம் உள்ளவர் ஆவதற்கு
அர்ஹசி -தகுந்தவர் ஆகிறீர்
வா நராணாஞ்ச -வானவர்களுக்கும்
பத்ரம் தே பரே ஷாஞ்ச -மற்றும் உள்ளார்க்கும் மங்கலம் உண்டாகுக-
பரந்தப -எதிரிகளை வருத்தும் வீர தீரரே-

அவதாரிகை –
இவர்கள் நம்மை ஒன்றும் செய்ய ஒண்ணாத படி தேவர் மந்த்ராதிகளிலே பிரவர்த்திக்க வேணும் -என்று சொல்லி
அவ்வளவிலே நில்லாத பரிவாலே மங்களா சாசனம் பண்ணுகிறார்-

மந்த்ரே –
நியாய வித்துக்களான சசிவரோடே ரஹாசி ராஜ கார்யம் நிரூபிக்கை-
வ்யூஹே –
யுகத யோக்யமான சேனைகளை நிலையிலே நிறுத்துகை
நயே-
சாமர்த்த உபாயத்தாலே கார்யம் நடத்துகை
சாரே –
பராபிப்ராய பரி ஜ்ஞான அர்த்தமாக நிபுணனான புருஷனை ஏவுகை
யுக்தோ பவிது மர்ஹசி-
முன் போலே நமக்கு எதிர் ஆரென்று இருக்க ஒண்ணாது –
ராஜ்ய க்ருத்யங்களிலே அவஹிதராகை யோக்யம்
தைவ -விதி – பௌ ருஷங்களிலே-சுய முயற்சியிலே –
பௌ ருஷதத்தை பூர்வ அர்த்தத்தாலே சொல்லி
அதுக்கு தைவ சஹாயத்தை ஆஸாசிக்கிறார் உத்தர அர்த்தத்தாலே
பத்ரம் தே –
சர்வ லோக நாதரான தேவர்க்கு மங்களம் யுண்டாக வேண்டும்
வா நராணாஞ்ச –
ராகவார்த்தே பராக் ராந்தா -ந பிராணே குருதே தாம் -என்று இருக்கும் வானர கோலாங்கூ லாதிகளுக்கும்
பத்ரம் தே-
மங்களம் யுண்டாக வேணும்
பரே ஷாஞ்ச –
அல்லாத லஷ்மணாதி களுக்கும்
வாநராணாம் பரே ஷாஞ்ச விஷயே மந்த்ரே வ்யூஹே நயே சாரே யுக்தோ பாவித்தும் அர்ஹசி-
வானரங்கள் உடைய சத்ருக்கள் யுடையவும் விஷயமாக  மந்த்ராதிகளிலே அவஹிதராக வேணும்
பரந்தப-
சத்ருக்கள் அடைய சேனைக் கூட்டம் மண் உண்ணும்படி அன்றோ தேவர் பிரதாபம் இருக்கும் படி
இத்திரு நாமம் யதார்த்தம் ஆக வேணும்-

————————————————————————————————————————————————————-

அந்தர்த்தா நகதா   ஹ்யதே ராஷசா காம ரூபிண
ஸூ ராச்ச நிக்ருதி ஜ்ஞாச்ச தேஷு ஜாது ந விஸ்வ சேத்-யுத்த -17-19-

அந்தர்த்தா நகதா -மறைந்து நடக்கிறவர்களாயும்
ஏதே ராஷசா -இந்த அரக்கர்கள் –
காம ரூபிண-விரும்பிய உருவத்தை   எடுக்க வல்லராயும்
ஸூ ராச்ச-போர் வல்லராயும்
நிக்ருதி ஜ்ஞாச்ச ஹி-வஞ்சிக்கும் உபாயங்களை அறிந்தவராயும் உள்ளனர் அன்றோ
தேஷு -அவர்களிடத்தில்
ஜாது-ஒரு போதும்
ந விஸ்வ சேத்-நம்பிகை வைக்கக் கூடாது-
அந்தர்த்தா நகத  ஹ்யதே ராஷசா –
ஏதே என்று பிரத்யஷ சித்தமானவர்களை -அந்தர்த்தா நகதா -என்கிறபடி என் என்னில் –
இவர்கள் காண்கிற அளவல்லர் -அதிபடை யுண்டு என்னும் நினைவாலே
ஏதே –
இவர்களுடைய ஆகாரமே அவிஸ்வச நீயதையைச் சொல்லித் தாரா நின்றது -என்கை-
இவர்கள் நாலைந்து பேர் வந்து நம்மைச் செய்வது என் -என்னில்
காம ரூபிண-ஸூ ராச்ச நிக்ருதி ஜ்ஞாச்ச –
நேர் கொடு நேர் நலிய மாட்டார்களே யாகிலும் வஞ்சிக்க விரகு அறிவார்கள் –
உமக்குச் செவ்வியில் யுண்டான அபியோகம் இத்தனையும் வஞ்சனத்திலே உண்டு காணும் அவர்களுக்கு –
தேஷு ஜாது ந விஸ்வ சேத்-
ஆனபின்பு ஆயிரம் பிரபத்தி பண்ணினாலும் அவர்கள் பக்கல் நிரூபகனாய் இருகுமவன் விஸ்வசிப்பான் அல்லன் –

—————————————————————————————————————————————————————-

ப்ரணிதீ ராஷசேந்த்ரஸ்ய ராவணஸ்ய பவேதயம்
அநு பிரவிஸ்ய சோஸ் மா ஸூபேதம குர்யான் ந சம்சய -யுத்த -17-20-

ப்ரணிதீ ராஷசேந்த்ரஸ்ய ராவணஸ்ய -அரக்கர் தலைவனான இராவணனுடைய ஒற்றனாகவே
பவேதயம் -இருக்க வேண்டும் -அப்படிப்பட்ட
அநு பிரவிஸ்ய சோஸ் மா ஸூ –அநு ப்ரவஸ்ய அஸ்மாஸூ -நம்மிடத்தில் உள் நுழைந்து
பேதம குர்யான் -ஒருவருக்கு ஒருவர் கலஹம் யுன்டாம்படி செய்வான் –
ந சம்சய -இதில் ஐயம் இல்லை –

அநு கூலன் அல்லனாகில் இவன் ஆராய் வந்தான் –
வந்தவன் தான் அவஹிதரான நம் பக்கல் செய்யும் கார்யம் என் என்னில்
அவற்றைச் சொல்லுகிறது -ப்ரணிதீ ராஷசேந்த்ரஸ்ய-இத்யாதியாலே –
அயம் ப்ரணிதிர் பவேத் –
நீர் சரனாகதாக நினைக்கிற இவன் –
ராவணன் வர விட்டான் ஒருத்தனாக வந்தவன் -ஒருத்தனாகில்முதலிலே தன்னை அமைத்துக் கொண்டு
வருமது ஒழிய
விபீஷண  இதி ஸ்ருத -17-10- என்றும்
விபீஷணம் உபஸ்திதம் -17-15- என்றும்
ராகவம் சரணம் கத -17-14- என்றும்
தன்னை வெளியிட்டுக் கொண்டு சரணம் புகுருமோ –
சரணம் என்று புகுந்தார் சிலர் சந்னர் செய்யும் கார்யத்தைச் செய்வார்களோ -என்னில்
ராஷசேந்த்ரஸ்ய ராவணஸ்ய-
வசஸ் யன்யத் மனஸ் யன்யத் கர்மண் யன்யத் -என்கிறபடியே
தான் வேறு  ஒருத்தனாய் இருக்க -வேறு ஒருத்தனாகச் சொல்லி -கார்ய காலத்திலேயே வேறு ஒருவனாகச் செல்லும்
துர்வர்க்கத்துக்கு  நிர்வாஹகனான ராவணன் மதித்து வர விட்டானாகக் கடவன்
ஆனால் தான் புகுந்து செய்வது என் -என்னில்
அநு பிரவிஸ்ய சோஸ் மா ஸூ –
நமக்கு பிரதிகூலனானவன் நம் பக்கலிலே அநு கூல வேஷத்தோடு பிரவேசித்து –
பேதம குர்யான் –
ஏக்கம் துக்கம் ஸூ கஞ்ச நௌ-என்று இருக்கும் தேவரையும் என்னையும் எதிரிகளாம் படி பண்ணும்
ந சம்சய –
ராவணன் சம்பந்தத்தாலே சத்ருவாக நினைக்கும்படி இருக்கிற இவன்
சரணம் புகுந்தானானால் அநு கூலனோ பிரதி கூலனோ என்று சம்சயிக்க அன்றோ அடுப்பது என்ன
அது வேண்டா -துஷ்ப்ரக்ருதி யாகையாலே ஆநுகூல்யம் சம்பவியாது
வஞ்சகனாயே வந்தான் என்று நிச்சிதம் –

——————————————————————————————————————————————————————————-

அதவா ஸ்வயமே வைஷ சித்ரமா சாத்ய புத்தி மான்
அநு பிரவிச்ய விஸ்வஸ்தே கதாசித் ப்ரஹ ரேதபி -யுத்த -17-21-

அதவா -இல்லாவிடில்
ஸ்வயமே வைஷ -இவ் விபீஷணன் தானே
சித்ரமா சாத்ய -சித்ரம் ஆசாத்திய -அவகாசத்தைப் பெற்று
புத்தி மான் -அறிவாளியான
அநு பிரவிச்ய-நம்முடனே கலந்து
விஸ்வஸ்தே-நாம் அவனை நம்பின அளவிலே
கதாசித் ப்ரஹ ரேதபி -ஒரு காலத்திலேயே நம்மை அடித்தானும் அடிப்பான் –

அவதாரிகை –
நாம் ஏக ரசராய் இருக்க நம் பக்கலிலே இவனுக்கு புத்தி பேதம் பண்ணலாய் இருக்குமோ என்ன –
இதில் அவகாசம் பெற்றிலன்  ஆகில் அநு கூலன் என்று நாம் விச்வசிக்கும் அளவும் நம்மோடு ஒரு நீராகக் கலந்து
இடம் பெற்றதொரு போதிலே தானே ப்ரஹரிக்கிலும் ப்ரஹரிக்கும்-என்கிறார் –
அதவா –
பேதம் குர்யாத் என்கிற பஷத்தை வ்யாவர்த்திக்கிறது –
ஸ்வயமே வைஷ –
என்னைக் கொண்டு உம்மை நலிதல்
உம்மைக் கொண்டு என்னை நலிதல்
செய்ய இடம் பெற்றிலன் ஆகில் தானே நலியிலும் நலியும்
எப்போது இவன் நலிவது என்னில் –
அநு பிரவிச்ய விஸ்வஸ்தே-
நாம் விஸ்வசிக்கும் அளவும் அநு கூலனாய் நம்மோடு ஒரு நீராகக் கலந்து
நான் விஸ்வசித்த அளவிலே –
விஸ்வசித்தாலும் நம் சேர்த்தியில் இவனுக்கு நலிய அவகாசம் யுண்டோ என்னில்
சித்ரமா சாத்ய –
நாம் விஸ்வசியாத போது இவனுக்கு இடம் இன்றிக்கே ஒழியும் இத்தனை போக்கி விஸ்வசித்தால் அவனுக்கு நலிய இடம் அரிதோ –
புத்தி மான் –
இடம் இல்லாவிடிலும் காண வல்ல புத்தி கூர்மையையும் யுடையவன் -என்கை
ரஷண தர்மத்தில் அவசர ப்ரதீஷரான உமக்கு உள்ள புத்தி யோகத்தளவு காணும் இவனுக்கு பர ஹிம்சையிலே
கதாசித் ப்ரஹ ரேதபி –
இடம் பெற்ற ஒரு போதிலே   ப்ரஹரிக்கிலும் ப்ரஹரிக்கும்
அதவா
இவன் ராவணனுடைய ப்ரணிதி மாதரம் அன்றிக்கே
ராவணன் தான் முன்பு சந்நியாசி வேஷம்  கொண்டு நலிந்தால் போலே
சரணாகத வேஷத்தைக் கொண்டு நம்மோடு கலந்து நாம் விஸ்வசித்த வாறே இடம் பெற்ற போதிலே நலிய வந்தானாகவும் கூடும் -என்றாகவுமாம் –

—————————————————————————————————————————————————————————————

மித்ரா டவீப லஞ்சைவ மௌ லம் ப்ருத்யபலம் ததா
சர்வ மேதத் பலம் க்ராஹ்யம் வர்ஜயித்வா த்விஷத் பலம் -யுத்த -17-22-

மித்ரா டவீப லஞ்சைவ மௌ லம் -நட்புப் படையும் காட்டுப் படையும் மூல பலமும்
ப்ருத்யபலம் ததா -அப்படியே கூலிப் படையுமாகிய
சர்வ மேதத் பலம் க்ராஹ்யம் -ஏதத் சர்வம் பலம் க்ராஹ்யம் -இந்த எல்லாப் படைகளும் கூட்டுக் கொள்ளத் தக்கவை
வர்ஜயித்வா -நீக்கி
த்விஷத் பலம் -எதிரிகளின் சேனையை-

அவதாரிகை –
நாம் எதிரிகள் மேலே எடுத்து விட்ட அவ்வளவிலே அத்தலையில் நின்றும் செவ்வியனாய் வந்தவன்
அடிபெற்று வந்தானாக வேணும்
அவனை ச்வீகரிக்கை ராஜ நீதி யன்றோ –
ராஜாக்களாய் இருக்கிற உமக்கு இது அறிய வேண்டாவோ -என்ன
அது நீதி யன்று -என்கிறார் –
மித்ரப லம்-
அதாவது சம ஸூ க துக்கிகளாய் இருக்கை-
ஔ ரசம் மித்ரா சம்பத்தம் ததா தேச கரமாக தம்
ரஷிதம் விசா நேப் யஸ்ஸ மித்ரம் ஜ்ஞேயம்   சதுர்விதம் –
அடவீப லம் –
வனப்படை
மௌ லம் –
பித்ருபை தாமஹகரமாக தமான தாஸ்ய வர்க்கம்
ப்ருத்யபலம் ததா –
கூலிப்படை
சர்வ மேதத் பலம் க்ராஹ்யம் –
இந்தச் சதுர்வித பலமும் க்ராஹ்யம்
வர்ஜயித்வா த்விஷத் பலம் –
சத்ருபலம் க்ராஹ்யம் அன்று
அரிர் மித்ரமரேர் மித்ரம் மித்ரமித்ரம் தத பரம் -இத்யாதி
இதுக்கு சாஸ்திரம் வேணுமோ
அவன் மேலே அம்புபடக் கண்ண நீர் பாயும் இவனையோ நமக்கு பலமாகக் கொள்ளுவது-

———————————————————————————————————————————————————–

ப்ரக்ருதயா ராஷசோ ஹ்யேஷா ப்ராதாஸ் மித்ரஸ்ய வை விபோ
ஆக தஸ்ச ரிபோ பஷாத் கதமஸ் மிம்ஸ்ச விஸ்வசேத்  -யுத்த -17-23-

ப்ரக்ருதயா ராஷசோ-பிறப்பால் அரக்கன் அன்றோ
ஹ்யேஷா -ஏஷ ஹி -இவன் தான்
ப்ராதாஸ் மித்ரஸ்ய வை -சத்ருவுக்கு சரீரம் போன்றவன்
விபோ -ஸ்வாமியே
ஆக தஸ்ச ரிபோ பஷாத் கதமஸ் மிம்ஸ்-எதிரியினுடைய பக்கத்திலிருந்து வந்தவன் அன்றோ எப்படி
விஸ்வசேத் -நம்பிக்கை வைக்கலாம் –

அவதாரிகை –
வர்ஜயித்வா த்விஷத் பலம் -என்ற சாமான்யத்தாலே அநாதரிக்கக் கடவோமோ –
அங்குத்தை நசை அற்றுப் போந்தவன் விச்வச நீயன் அன்றோ –
ஆனால் அவனைப் பரிஹரிக்கத் தட்டு என் -என்ன
அங்குத்தை நசை அற்றுப் போராமைக்கும்
அத்தாலே விச்வச நீயன்  அல்லாமைக்கும்-ஹேதுக்களைச் சொல்லுகிறது -ப்ரக்ருத்யா –இத்யாதியாலே –
ப்ரக்ருதயா ராஷசோ ஹ்யேஷா –
பிறப்பாலே ராஷசன் என்னும் இடம் உமக்கு சம்ப்ரதிபன்னமே
ஆனால்  அவனை அநாதரித்து விஜாதீயரான நம்மைப் பற்ற சம்பாவனை யுண்டோ
ஹி -அன்றோ -சம்ப்ரதிபத்தௌ-
ப்ராதாஸ் மித்ரஸ்ய –
ப்ராதா ஸவோ மூர்த்தி  ராத்மன-என்று நம் சத்ருவுக்கு சரீரம் என்று சொல்லலாம் படி இருக்கிற அவன் அன்றோ
வை –
ராவணஸ்ய அநு ஜோ ப்ராதா -என்று தன் வாயாலே சொல்லுகையாலே பிரசித்தம் அன்றோ –
நீரும் பிராதாவை விட்டு அகன்று அன்றோ நம்மைப் பற்றினது என்ன
விபோ -ஆக தஸ்ச ரிபோ பஷாத் –
என்னைப் போல் நிரஸ்தனாய் வந்தவன் அன்றே
அவன் ஒலக்கத்தின் நின்றும் வந்தவன் அன்றோ
விபோ
முதலிகள் என்று ஆராய்ச்சியைக் கை விடாதே கொள்ளீர் –
கதமஸ் மிம்ஸ்ச விஸ்வசேத்  –
இப்படி இவனை அநாதரிக்கைக்கு அநேக ஹேதுக்கள் யுண்டாய் இருக்க
என்ன ஹேத்வ ஆபாசம் கொண்டு இவனை விஸ்வசிப்பது-

————————————————————————————————————————————————————–

ராவணேந ப்ரணிஹிதம் தமவேஹி நிஸாசரம்
தஸ்யா அஹம் நிக்ரஹம் மன்யே ஷமம் ஷமவதாம் வர -யுத்த -17-24-

ராவணேந ப்ரணிஹிதம்-ராவணனால் சாரனாக அனுப்பப் பட்டவனாக
தமவேஹி நிஸாசரம் -தம்  நிஸாசரம் அவேஹி -அந்த அரக்கனை அறியும்
ஷமவதாம் வர-தகுதி அறிவாரில் தலைவரே -தஸ்யா அஹம் நிக்ரஹம் -அவனுடைய வதத்தை நான்
மன்யே ஷமம் -தகுந்ததாக நினைக்கிறேன் –

அவதாரிகை –
அவன் தன்னைப் பரிபவிக்கையாலே நசை அற்று ஆர்த்தனாய் சரணம் புகுந்து வந்தான் என்று
விஸ்வசிக்கத் தட்டு என்-
அந்த பிரதிபத்தி விப்ரலம்ப க்ருதை-என்னும் இடத்தை சஹேதுகமாகச் சொல்லுகிறார் –
ராவணேந ப்ரணிஹிதம் தம் –
நீர் அநு கூலனாக பிரமிக்கிறவனை நமக்கு சத்ருவான ராவணனாலே ப்ரணிதிகர்மத்திலே நியுக்தனாக புத்திபண்ணிநீர் –
அவேஹி –
உமக்கு இவன் ப்ரணிதி என்னும் இடம் தொடருகிறது இல்லையாகில்
என் பக்கலிலே ஒரு அபூர்வ வ்யுத்பத்தி பண்ணி அருளீர் –
அறியாதவை எல்லார்க்கும் கேட்டறிய வேணும் –
ஆனால் இவனைச் செய்ய வடுப்பது என் -என்ன –
தஸ்யா அஹம் நிக்ரஹம் மன்யே ஷமம்-
நான் அவனுடைய நிக்ரஹமே உக்தம் என்று நினைக்கிறேன்
இவனை உள்ளபடி அறிந்தவன் –
வஞ்சகனான இவனுடைய நிக்ரஹமே உக்தம் என்று அறுதி இட்டேன் -என்கை-
பகவத் விரோதம் உண்டாம் இடத்தில் வாதமே கர்த்தவ்யம் என்னும் இடம் சாஸ்திர சித்தம் –
த்வௌ து மேவாத கார்யேச்மின் ஷந்தவ்யௌ கதஞ்சன
யஜ்ஞ விக் நகரம் ஹன்யாம் பாண்டவா நாஞ்சதுர்ஹ்ருதம் என்றும்
கர்ணம் பிதாய நிரயாத் -என்றும்
யச்யாம்ருதா மலயச-என்றும்
நா ஹமாத்மா நம் -என்றும்
ஷமவ தாம் வர -யுக்தங்கள் எல்லாம் அறிவார்க்குத் தலைவர் அல்லீரோ
யுக்தங்கள் எல்லாம் அறிந்து அருள வேண்டாவோ –
அதவா –
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே ஷமம் -என்கிற போது-அவ்வளவிலும் பெருமாளுடைய திரு முகத்தில் இரக்கத்தைக் கண்டு
உம்முடைய ப்ரேமாதிசயத்துக்கு துஷ்டனான இவனோ விஷயம் –
ஆ ஸ்ரீ தன் அன்றோ விஷயம் -என்கிறார் என்றுமாம் –

—————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading