ஸ்ரீ இராமாயண -அபய பிரதான சாரம் -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -ராஷசோ ஜிஹ்மயா -17-25/ப்ரவிஷ்ட சத்ரு சைந்யம் -17-26-/வத்யாதாமேஷ -17-27/ஏவமுக்த்வா து தம் ராமம் –17-28/ஸூ க்ரீவஸ்ய து -17-29/யதுக்தம் கபி ராஜேன -யுத்த -17-30/ஸூஹ்ருதாஹி -17-31/இத்யேவம் பரிப்ருஷ்டாஸ்தே -17-32-

ராஷசோ ஜிஹ்மயா புத்த்யாசந்திஷ்டோ அயம்  உபஸ்தித
ப்ரஹர்த்தும் மாயயா சந்நோ   விஸ்வச்தே த்வயி ஸாநக -யுத்த -17-25-

ராஷசோ ஜிஹ்மயா புத்த்யாசந்திஷ்டோ -அரக்கன் வஞ்சகமான புத்தியாலே தூண்டப் பட்டவனாய் –
அயம் -இந்த
உபஸ்தித -அணுகி இருப்பவனாய்
ப்ரஹர்த்தும் -உங்களை அடிப்பதற்கு
மாயயா சந்நோ   -வஞ்சனையால் மறைந்தவனாக இருக்கிறான்
விஸ்வச்தே த்வயி -நீரும் உம்மைச் சேர்ந்தவர்களும் நம்பின அளவில்
அநக -குற்றம் அற்றவரே-

அவதாரிகை –
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே -என்று ப்ரணிதி வதம் யுக்தம் என்னக் கடவீரோ -என்ன
கேவலம் ப்ரணிதித்வமே அன்று
துஷ்ப்ரக்ருதி யாகையாலே இடம் பெற்ற இடத்திலே நலியக் கூடுமாகையாலே கொல்லத் தட்டில்லை என்கிறார் -ராஷச-இத்யாதியாலே –

அயம் ராஷசோ-
ராவண ப்ரணிதியாய் வந்த ராஷசன் கேவலம் ப்ரணிதி  காரித் தளவில் வ்யாபரிப்பனாய் வந்தான் அல்லன்
என் செய்ய வந்தான் என்னில்
ஜிஹ்மயா புத்த்யாசந்திஷ்டோ ப்ரஹர்த்தும் உபஸ்தித –
குடில புத்த்யா பிரேரித த்வாம் ப்ரஹர்த்தும் உபஸ்தித -ராஷசர் ஆகிறார் குடில புத்திகள் என்னும் இடம் நமக்கு அநு பூதம் அன்றோ
ராவணே சந்திஷ்ட குடில புத்த்யா உபஸ்தித -என்னவுமாம்
நம்மை இங்கனே நலியலாய் இருக்குமோ என்னில் –
மாயயா சந்நோ   –
க்ருத்ரிமத்தாலே தன்னை மறைத்து வந்தவன் ஆகையாலே நலியலாம் –
அதாகிறது –
சரணாகத வேஷத்தாலே தன் க்ரௌர்யத்தை மறைத்து வருகை –
எப்போது இவன் நலிவது -என்னில்
விஸ்வச்தே த்வயி –
இவன் அகவாய் ஆராயாதே உக்தி மாத்ரத்தை கொண்டு சரணாகதன் என்று உம்மை  அதீநம் ஆக்கின அளவிலே –
ச சப்தத்தாலே லஷ்மணாதி களையும் சமுச்சயிக்கிறது –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்-என்று ஆ ஸ்ரீ தர்க்கு அழிவுக்கு இட்ட வடிவாகத் தம்மை நினைத்து இருப்பார் என்று பார்த்து
உமக்கு நெஞ்சு எரியும் லஷ்மணாதி களையும் நலியும் என்கிறார்  –
அநக –
ஆத்ம அநு மானத்தாலே பிறர் பக்கல் தோஷம் காண அறியீர்
நான் சொல்லவாகிலும் அறிந்து அருளீர் –

—————————————————————————————————————————————————————-

ப்ரவிஷ்ட சத்ரு சைந்யம் ஹி ப்ராப்த சத்ருர தர்க்கித
நிஹந்யா தந்தரம் லப்த்வா உலூகா நிவ வாய்ஸ-யுத்த -17-26-

ப்ரவிஷ்ட-நுழைந்தவனாய்
சத்ரு சைந்யம் -எதிரியின் சேனையினுள்
ஹி-அன்றோ –
ப்ராப்த-எதிரியின் அந்தரங்கனாய் இருக்கும் நிலையை அடைந்தவனாய் –
சத்ருர தர்க்கித -சத்ரு அதர்க்கித -எதிரியானவன் ஆராயப்படாத
நிஹந்யா -கொல்லுவான்
தந்தரம் லப்த்வா -இடத்தைப் பெற்று
உலூகா நிவ -கோட்டான்களைப் போலே
வாய்ஸ-காக்கை-

அவதாரிகை –
ஸ்வ நிகர்ஷ பூர்வகமாக நம் பக்கலிலே சரணம் புகுந்த இவன் பக்கலிலே தோஷத்தை நினைத்து
ஆராய்கை நமக்குப் போருமோ -என்னில்
சத்ருவானவன் நம்மை நலிகைக்காக சரணம் புகுந்தால் இவனை ஆராயாதே ச்வீகரித்தால்
மஹா நர்த்தம் விளையும் என்கிறார் -ப்ரவிஷ்ட -இத்யாதியாலே-
ப்ரவிஷ்ட சத்ரு சைந்யம் ஹி  சத்ருர தர்க்கித –
இவன் அநு கூலனோ பிரதி கூலனோ என்று ஆராயாதே அநு கூல வேஷத்தாலே
சத்ரு சைன்யத்தை பிரவிஷ்டனாய்க் கொல்லும்-
ச சைன்யனானவனை ஒருத்தனாய்க் கொல்லப் போமோ -என்னில் –
ப்ராப்த-
அந்தரங்க தாம் ப்ராப்தானான சத்ருவானவன் சத்ரு சைன்யத்தை நலியும்
ஒரு திரளை ஒருவனால் நலியப் போமோ என்னில் –
நிஹந்யா தந்தரம் லப்த்வா -அந்தரம் லப்த்வா நிஹன்யாத்-ஸ்வா பாதிகள் உண்டான அளவிலே கொல்லும்
சஹஜ சாத்ரவத்துக்கும் ஒன்றே அநேகத்தை நசிப்பிக்கும் என்னும் இடத்துக்கும் திருஷ்டாந்தம் சொல்லுகிறார் –
உலூகா நிவ வாய்ஸ-
காகம் ஒன்றுமே தனக்கு சஹஜ சத்ருக்களான திவா பீதங்களைத் தனக்கு அவகாசமான அஹஸ் ஸிலே நலியுமாப் போலே –
தூங்கும்  கோட்டான்களை  -ஒரே காகம் கொல்லுவது போலே –

——————————————————————————————————————————————————————-

வத்யாதாமேஷ தீவ்ரேண தண்டே ந ஸ சிவை சஹ
ராவணஸ்ய நருஸம்ஸஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண-யுத்த -17-27-

வத்யாதாமேஷ -ஏஷ வத்யதாம் -இந்த விபீஷணன் கொல்லப் படட்டும்
தீவ்ரேண தண்டேந-கொடியதான தண்டனையால்
ஸ சிவை சஹ -எதிரிகளோடு கூட
ராவணஸ்ய நருஸம்ஸஸ்ய ப்ராதா -கொடியவனான ராவணனுடைய சஹோதரன்
ஹ்யேஷ விபீஷண-ஏன் எனில் இந்த விபீஷணன் –

அவதாரிகை –
இப்படி இவனால் பஹூ முகமாக வரும் அனர்த்தத்தை விண்ணப்பம் செய்து இருக்கச் செய்தேயும் பெருமாளுக்கு
அவன் பக்கல் தண்ணளி மாறாதே இருக்கையாலே பீத பீதனாய்ச் சினம் தோற்றித் தாமே இவனுடைய வதத்தை ஆஜ்ஞாபிக்கிறார் -வத்யதாம் -இத்யாதியாலே –
வத்யாதாமேஷ –
இவனைக் கட்டி இட்டு வைத்தல் –
மாரீசனைப் போலே மேலே ஓர் அனர்த்தத்தை விளைக்கும்படி தொடுத்த அம்போடு விடுதல் செய்யக் கடவோம் அல்லோம் –
கொன்றே விடுவோம் –
தீவ்ரேண தண்டே ந –
கொல்லும் இடத்திலும் ஓர் அம்பாலே ஊதினால் போலே கொல்லுகை அன்றிக்கே
தலையிலே முடி வைத்தால் போலே சிங்க விளக்கு எரிக்கக் கடவோம் -என்கை –
ஸ சிவை சஹ –
நம்மை நலிகைக்குகூட்டுப் படையாய் வந்தவர்களைத் தலை யறுத்து இவன் கையிலே கொடுத்த பின்பு இவனைக் கொல்லக் கடவோம் –
தீவர தண்டத்தாலே நலிகைக்கு ஹேது சொல்லுகிறது மேல் –
ராவணஸ்ய நருஸம்ஸஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண-
இவன் பாதகன் என்னும் இடம் விதிதமாய் இருக்காய் -க்ரூர கர்மாவான ராவணனுடைய ப்ராதா என்னும் இடம் சம்ப்ரதிபன்னம் இ றே-
சுரி குழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த -கொடுமையில் கடுவிசை அரக்கன் -பெரிய திரு -5-7-7-க்ரூர கர்மா வி றே அவன்  –
பெற்ற தாயையும் தகப்பனையும் சேர இருக்கப் பொறாதவன் இ றே
உடலையும் உயிரையும் பிரித்தால் போலே நித்ய அநபாயினி யான பிராட்டியையும் பெருமாளையும்
கடல் ஒரு புறமும் மலை ஒரு புறமுமாக ஆக்கின பையலுக்கு
ப்ராதா ஸவோ மூர்த்திராத்மந -என்கிறபடியே  அவயவம் என்று சொல்லலாம் படி ப்ரத்யா சன்னன் அன்றோ
ஹிஸ் சம்ப்ரதிபத்தௌ-இது
ப்ரணிதி என்றும் சத்ரு என்றும் சொல்லுகிற பூர்வ பஷத்துக்கு மூலம் –

———————————————————————————————————————————————————————————–

ஏவமுக்த்வா து தம் ராமம் சம்ரப்தோ வாஹி நீ பதி
வாக்யஜ்ஞோ வாக்ய குசலம் ததோ மௌ நமுபாகமத  –யுத்த –17-28-

ஏவமுக்த்வா து தம் ராமம்-ராம பிரானைக் குறித்து இம்மாதிரி சொல்லி
சம்ரப்தோ -பரபரப்போடு கூடினவராய்
வாஹி நீ பதி -வானவர்க்கு அரசரான சுக்கிரீவ மஹா ராஜர்
வாக்யஜ்ஞோ -வார்த்தை சொல்ல அறியரான
வாக்ய குசலம் -வார்த்தை சொல்ல வல்லரான
ததோ மௌ நமுபாகமத -பிறகு மௌனம் ஆனார் –

அவதாரிகை –
இப்படி பெருமாளைக் குறித்து விண்ணப்பம் செய்த இடத்திலும்
பெருமாளுக்கு அவன் பக்கல் உண்டான ஆபி முக்யத்தைக் கண்டு
இனி அவர் அருளிச் செய்யும் வார்த்தைக்கு அநு கூலமாக வார்த்தை சொல்லக் கடவோம் என்று பேசாதே இருந்தார் -என்கிறது மேல் –

ஏவமுக்த்வா து –
து சப்தத்தால் ஸ்வ வாக்ய அநாதரமும்-விபீஷண பஷபாதமும்  பெருமாள் திரு முகத்தில் தோற்றின வாறே
பயத்தால் பிறந்த வேறு பாட்டைச் சொல்லுகிறது –
தம் ராமம் –
ஸ்வ வாக்ய அநாதரமும் விபீஷண பஷபாதமும் தோற்ற இருந்த பெருமாளை
சம்ரப்தோ-
பெருமாள் திரு உள்ளத்தைப் பின் செல்லாதே பிரேம பரவசராய் ஹடாத் கரித்துச் சொன்ன
வாஹி நீ பதி-
பரிவில் வந்தால் அவர்களுக்கு நிர்வாஹகர் என்னலாம்படி இருக்கிறவர்
இத்தால் இவர் வார்த்தை முதலிகளுக்கு எல்லாம் இஷ்டம் என்று கருத்து
வாக்யஜ்ஞோ –
பெருமாளுக்கு மறு நாக்கு எடுக்க ஒண்ணாத படி சொல்லும் வார்த்தைகளை அறியுமவர் –
வாக்ய குசலம் –
வக்ர சித்தாந்தத்தை அறிந்து அத்தைப் புரட்டித் தன நினைவிலே விழும்படி வார்த்தை சொல்ல வல்லவரை
ததோ
இனி இவர் வார்த்தை சொல்லுவது ஒழிய தாம் சொல்லும் வார்த்தை யடையச் சொல்லுகையாலே
மௌ நமுபாகமத-
அருளிச் செய்யும் வார்த்தைக்கு அவசர பிரதானம் பண்ணி இருந்தார் –

———————————————————————————————————————————————————————————-

ஸூ க்ரீவஸ்ய து தத்வாக்யம்  ஸ்ருத்வா ராமோ மஹா பல
சமீபாஸ்தா நுவா சேதம் ஹநுமத் ப்ரமுகான் ஹரீன் –யுத்த -17-29-

ஸூ க்ரீவஸ்ய -சுக்ரீவனுடைய
து தத்வாக்யம் -அந்த வசனத்தை
ஸ்ருத்வா-கேட்டு
ராமோ -ஸ்ரீ ராமபிரான்
மஹா பல-மிகுந்த மன வலிமையுடைய
சமீபாஸ்தா நுவா சேதம் ஹநுமத் ப்ரமுகான் ஹரீன் -அருகில் இருந்த ஹனுமான் முதலிய வானரர்களைக் குறித்து இவ்வார்த்தையைச் சொன்னார்-

அவதாரிகை
மஹா ராஜர் ப்ரேமாந்தர் ஆகையாலே தம் வார்த்தை கேட்க மாட்டார் என்று
பெருமாள் -திருவடி முதலானாரைக் குறித்து வார்த்தை அருளிச் செய்கிறார் –
ஸூ க்ரீவஸ்ய து தத்வாக்யம்  ஸ்ருத்வா-
விப்ர பன்னத்தைச் சொன்னாலும் இவர் வார்த்தை அன்றோ என்று சுவீகரிக்க வேண்டி இருக்குமவருடைய யுக்தி யுக்தமான வார்த்தையைக் கேட்டு
து -சப்தத்தாலே இவர் வார்த்தை கேட்ட பின்பு பெருமாள் திரு உள்ளத்தில் பிறந்த விசேஷத்தைச் சொல்லுகிறது –
அதாகிறது
நாம் கை விட்டார்க்கும் இவர் உளர் என்று இருந்தோம்
இவரும் கைவிடும்படியான தயநீய தசையை ப்ராப்த்ரான விபீஷணனுக்கு நாம் அல்லது இல்லை யாகையாலே
என்று திரு உள்ளத்தில் பிறந்த பஷபாதம்
ராமோ மஹா பல-
மஹா ராஜர் சொன்ன யுக்திகளால் கலங்காத திண்மையை யுடைய ரானார் என்கை
சமீபாஸ்தா நுவா சேதம் ஹநுமத் ப்ரமுகான் ஹரீன் –
மஹா ராஜர் வார்த்தை கேட்டு நின்ற முதலிகளை
மஹா ராஜரோபாதி ப்ரேமாந்தராய் இருக்கச் செய்தேயும் கருத்து அறிந்து
கார்யம் செய்ய வல்லரான திருவடி முதலானாரை-
ஹரீ நுவாச
ப்ரியேண சேனாபதி நா -என்று சேனை முதலியார் பெருமாள் திரு உள்ளம் மதித்து விண்ணப்பம் செய்யத் திருக் கண்களால் அனுமதி பண்ணிப் போருமது  தவிர்ந்து  –
ராம கார்யத்துக்கு கடவராகில் குரங்குகள் ஆனாலும் அவர்கள் அனுமதியை அபேஷித்துத் தாம் வார்த்தை கேட்கவுமாய்  விழுவதே -என்று ரிஷி கொண்டாடுகிறான் –
இதம் உவாச –
தம் கார்ய வு றுதிக்கு வேண்டும் வார்த்தையை அநந்தரம் கேட்க ப்ராப்தமாய் இருக்க மஹா ராஜருடைய
வைபவ பிரகாசமான வார்த்தையைச் சொன்னார் –

——————————————————————————————————————————————————————————————

யதுக்தம் கபி ராஜேன ராவணா வரஜம்பிரதி
வாக்யம் ஹேது மதர்த்யம் ச பவத் பிரதி தச்சருதம்  -யுத்த -17-30-

யதுக்தம் கபி ராஜேன-வானர ராஜாவான சுக்ரீவனால் யாதொரு வசனமானது சொல்லப் பட்டதோ
ராவணா வரஜம்பிரதி -ராவணன் தம்பியான விபீஷணனைக்   குறித்து
வாக்யம் ஹேது மதர்த்யம் ச -காரணங்க ளோடே   கூடியதாயும் வேண்டத் தக்கதாயும் இருக்கும் வசனமானது
பவத் பிரதி தச்சருதம்  -பவத்பி தத் அபி ஸ்ருதம் -அவ்வார்த்தை உங்களால் கேட்கப் பட்டது அன்றோ-

அவதாரிகை –
மஹா ராஜர் தம் பக்கல் ப்ரேமாதிசயத்தாலே சொன்ன வார்த்தை என்று திரு உள்ளம் பற்றி -அத்தைக் கொண்டாடுகிறார் –
யத் வாக்யம் உ க்தம் –
மஹா ராஜர் நமக்கு நல்லார் போலே நாமும் நல்லோமாகில் இ  றே அவ்வார்த்தைக்குப் பாசுரம் இடலாவது
யதுக்தம் என்னும் இத்தனை –
கபி ராஜேன –
குழைச் சரக்குடையார் இதுக்கு என் வருகிறதோ என்று அஞ்சி வார்த்தை சொல்ல ப்ராப்தம் இ றே-
அதவா –
கபி ராஜேன யதுக்தம் –
தம்முடைய முதன்மை தோற்ற சொல்லப் பட்ட வார்த்தை யாதொன்று -சம்ரப்த மித மப்ரவீத் -என்று அடர்த்து வார்த்தை சொல்லிற்று –
ராவணா வரஜம்பிரதி –
ராவண சம்பந்தத்தைப் பார்த்தால் இப்படி கலங்கி வார்த்தை சொல்லுகைக்கு தட்டில்லை -என்று
இவருடைய கலக்கத்துக்கு ஹேது சொல்லுகிறார்
ஹேது மத்-
வத்யதாம் என்று பிரதிஜ்ஞா மாத்ரமாய் இருக்கை அன்றிக்கே ராவணா வரஜத்வாத் யுபபத்தி யுக்தமாய் இருக்கை  –
அர்த்யம் –
ஒருத்தருடைய பரிவிலே வார்த்தை சொன்ன பிரகாரம் என்று கேட்டார்க்கு எல்லாம் ப்ரார்த்தமாய் இருக்கை
ச-
ச சப்தத்தாலே ஆர்த்தவன் மதுரம் லகு என்றால் போலே மற்றும் யுண்டான வசன குணங்களை சமுச்சியிக்கிறது
பவத் பிரதி தச்சருதம்  –
அபி சப்தம் பிரஸ்னே முதலிகளால் கேட்க்கப் பட்டது இல்லையோ
ஸ்ருதமாகில் ஒன்றை நியமியாதே அநாவிஷ்க்ருதராய் இருக்கை பிராப்தாமோ -என்று கருத்து
சா நு நய பிரச்னமாய் -ஸ்வ பஷத்துக்கு கூட்டும்படி அநு நய சஹிதமாய் பிரச்னம் பண்ணுகிறார் -என்றுமாம் –

————————————————————————————————————————————————————————-

ஸூஹ்ருதாஹி அர்த்த க்ருச்ச்ரேஷூ யுக்தம் புத்திமதா சதா
சமர்த்தே நாபி சந்தேஷ்டும் சாஸ்வதீம் பூதி மிச்சதா –யுத்த -17-31-

ஸூஹ்ருதாஹி அர்த்த க்ருச்ச்ரேஷூ -நண்பனாலே கார்ய சங்கடங்க ளிலே
யுக்தம் -தகுந்தது
புத்திமதா சதா -அறிவாளியாய்
சமர்த்தே ந-வல்லமை யுடையவனே
சாஸ்வதீம்-நிலையான
பூதிம் -செல்வத்தை
இச்சதா -ஆசைப் படுகிறவனான
சந்தேஷ்டும் அபி-உபதேசிக்கைக்கும்-

அவதாரிகை
பவத் பிரபி தச்ச்ருதம் -என்று நிர்ணய அபெஷமான வார்த்தையைக் கேட்டு
உபய பரதந்த்ரரான நாம் நிர்ணயிக்கை யுக்தமோ-என்று முதலிகள் நினைவாக
இவ்வளவில் ஸூ ஹ்ருத்தத்வத்தாலே உபதேசம் யுக்தம் என்கிறார் -ஸூ ஹ்ருதா -இத்யாதியாலே –

ஸூஹ்ருதாஹி
சோபா நமாசம்ச தீதி  ஸூ ஹ்ருத் -அச்ன்னிதானத்திலும் சோபனத்தை ஆசம்சிக்குமவன் இ றே ஸூஹ்ருத்தாவான் –
ஒருத்தனுடைய அனர்த்தத்தில் நெஞ்சு எரிவு யுடையனாய் இருக்குமவனால் –
அர்த்த க்ருச்ச்ரேஷூ –
கர்த்தவ்ய அகர்த்தவ்ய நிர்ணய சங்கடங்களிலே
ராகவம் சரணம் கத -என்று வந்த விபீஷண ஆழ்வான் தன்னை ச்வீகரியாது ஒழியில் பிழையாதானாய் இருந்தான்
தச்யாஹம் நிக்ரஹம் மன்யே என்கிற மஹா ராஜர் ஹிம்சியாது ஒழியில் பிழையாது இருந்தார்
இப்படியான சங்கடத்தில்
புத்திமதா –
இது கர்த்தவ்யம் இது அகர்தவ்யம் என்று நிர்ணயிக்க ஷமனாய் இருந்துள்ளவனாலே
சமர்த்தேந –
நிர்ணயித்த படியே எதிரியால் மறு நாக்கு எடுக்கப் போகாமல் தள்ளிச் சொல்ல சக்தனானவனாலே
சாஸ்வதீம் பூதி மிச்சதா –
ஒருவனுக்கு நித்ய சித்தமான விபூதியை ஆகாங் ஷித்து இருந்தவனாலே  இப்போது சாச்வதியான பூதியாக நினைத்து இருக்கிற
சரணாகத சம்ரஷண சங்கல்ப அநு பால நத்தை -யசஸ் சரீரத்தை சாஸ்வதியாக நினைத்து இருக்கிறவர் ஆகையாலே
நம் சரீரத்துக்கு என் வருகிறதோ என்று இருக்கும் மஹா ராஜர் அசாஸ்வதியான பூதியை இச்சிக்கிறார் என்று நினைக்கிறார் –
சதா –
பர சம்ருத்தி ஏக பிரயோஜனனாய் இருந்துள்ளவனாலே
சாஸ்வதீம் பூதிம் இச்சதா சதா –
சாச்வதீயான பூதியை இச்சித்து தான் உளனாய் இருந்துள்ளவனாலே -என்றுமாம் –
அபி சந்தேஷ்டும் யுக்தம் –
அபி சப்த -அவதாரணே -ஏவம் விதனான ஸூ ஹ்ருத்தாலே
ஆகேஸ் க்ரஹணான் மித்ரம் -என்கிறபடியே ஹிதம் சொல்லுகை யுக்தம்
இஸ் ஸ்லோகத்தால்
ஆ ஸ்ரீ தர் சந்தா அநு வர்த்திகள் அன்றிக்கே
ஷோபகரர் ஆனாலும் அந்த ஷோபம் அவர்களாலே சாமிக்க வேணும் என்கிற பெருமாளுடைய ஆ ஸ்ரீ த பாரதந்த்ர்யம் சொல்லிற்று –

————————————————————————————————————————————————————————————-

இத்யேவம் பரிப்ருஷ்டாஸ்தே ஸ்வம் ஸ்வம் மதமதந்த்ரிதா
சோபசாரம் ததா ராமமூசுர் ஹிதசி கீர்ஷவ –யுத்த -17-32-

இத்யேவம்-இதி ஏவம்-என்று இவ்வாறாக
பரிப்ருஷ்டாஸ்தே -கேட்க்கப் பட்ட அந்த வானரர்கள்
ஸ்வம் ஸ்வம் மதமதந்த்ரிதா –
தங்கள் தங்கள் கருத்தை கவனம் உள்ளவர்களாய்
சோபசாரம் ததா-அப்போது துதியுடன் கலந்ததான
ராமமூசுர் -ராமம் ஊசு -ஸ்ரீ ராம பிரானைக் குறித்து சொன்னார்கள் –
ஹிதசி கீர்ஷவ –ஸ்ரீ ராமபிரானுக்கு நன்மை புரிவதில் இச்சை யுடையவர்களாய் –

அவதாரிகை –
இப்படிப் பெருமாள் அருளிச் செய்தவாறே
முதலிகள் சோபசாரமாகத் தந்தாம் மதத்தை விண்ணப்பம் செய்தார் -என்கிறது இத்யேவம் -இத்யாதியாலே-

இத்யேவம்-
பிரகார வாசியான பதத்வயத்தாலும் உகத வசன பிரகாரத்தையும் அநுநய பிரகாரத்தையும் சொல்லுகிறது
பரிப்ருஷ்டாஸ்தே –
பரித பிரசன்னம் ஆதல் -பரி ஸ்தித்வா பிரசன்னம் ஆதல்
பரி பிரசன்னம் ஆவது -நேர் நேர் கேட்கை அன்றிக்கே தன நினைவிலே விழும்படி கேட்கை –
விபீஷண அங்கீ காரம் மஹா ராஜரைப் போலே உங்களுக்கு இஷ்டமோ அநிஷ்டமோ என்று நேர் வேர் கேட்கை அன்றிக்கே
ஸூ ஹ்ருதயா பிரதேஷ்டும் யுக்தம் -என்று சாமான்யேனகேட்கை –
பரி ஸ்தித்வா பிரசன்னம்ஆவது -அபி சப்தத்தாலே வந்த சா அநு நய பிரசன்னம் -அதாகிறது அநு சரித்துக் கேட்கை –
ஆக இத்தால் தம் மேன்மை தோற்ற பிரச்னம் பண்ணுகை அன்றிக்கே ஆச்சார்யனை சிஷ்யர்கள் கேட்குமாபோலே  கேட்கை –
தே –
கேட்டதுக்கு கருத்து அறிகையும்
கார்ய நிர்ணயத்துக்கு வேண்டும் அளவுடைமையும்
ஸ்வம் ஸ்வம் மதம்
தேஷு ஜாது  ந விஸ்வசேத் -என்று மகா ராஜர் மதத்தில் விழும்படியாக
பரீஷா ஹேது பேதங்களாலே  தந்தாமுடைய மதத்தை
அதந்த்ரிதா-
ராம கார்யத்தில் சாவதா நராய்யுள்ளார் -கவனமாய் யுள்ளார்
சோபசாரம்-
பெருமாளுடைய பெருமையை புகழ்ந்து கொண்டு
ததா –
பெருமாளுக்கு தாங்கள் ஹிதம் சொல்லுகை அபெஷிதமான தசையிலே
ஹிதசிகீர்ஷவ
பெருமாளுடைய பிரியம் ஒரு தலையானாலும் ஹிதத்தைப் பேணுவார் -பேணுதலில் இச்சை யுடையராய் இருக்குமவர்கள் –

———————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading