அருளிச் செயல்—ஸ்ரீ மத் – பாகவதம் – —

ஷீராப்தி வைபவம் –

 

பாலாலிலையில் துயில் கொண்ட பரமன்——————————————-நாச்சியார் -13-2-
மன்னிய நாகத்தணை மேல் ஓர் மா மலை ப————————————–பெரிய திருமடல் -2
சுடராழி சங்கி இருபால் பொலிந்து தோன்ற ————————————–பெரிய திருமொழி -2-10-9-

திருமடந்தை மண்மடந்தை இரு பாலும் திகழ ————————————-பெரிய திருமொழி -3-10-1-
ஆயிரம் தோள் பரப்பி முடி யாயிரம் மின்ன———————————-பெரியாழ்வார் -4-3-10
கடலோதம் கால் அலைப்ப———————————————————-முதல் திருவந்தாதி -16
கடலோன் கை மிசைக் கண் வளர்வது போல்————————————திருவாசிரியம் -1
உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்டு ————————————–பெரிய திருமடல் -8
இணை இல்லா இன்னிசை யாழ் கெழுமி இன்பத்
தும்புருவும் நாரதனனும் இறைஞ்சி ஏத்த————————————————-பெருமாள் திருமொழி -1-5

கொந்தலர்ந்த நறும் துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழப் ————–பெரிய திருமொழி -2-10-2-
பக்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் சித்தர்களும் தொழுது இறைஞ்ச —-பெரியாழ்வார் -4-9-6-
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற ——————————————-கண்ணி நுண் சிறுத் தாம்பு -8
ஏழு உலகும் தனிக் கோல் செல்ல வீற்றிருந்து ———————————திருவாய் மொழி -4-5-1

—————————————————————————————————————————————————————————

அவதார காரணம்

 

விண் கொள் அமரர்கள் வேதனை தீர —————————————————பெரியாழ்வார்-1-2-16
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய —————————————பெருமாள் திருமொழி -1–10
பாரேறு பெரும் பாரம் தீர ——————————————————பெரிய திருமொழி -2-10-8
துவரிக் கனி வாய் நில மங்கை துயர் தீர ————————————-பெரிய திருமொழி -8-8-9-
மண்ணின் பாரம் நீங்குதற்கே-வேண்டித் ——————————-திருவாய்மொழி –6-4-5-
வேண்டித் தேவர் இரக்கச் சாது சனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு ———–திருவாய்மொழி -3-5-5-
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற -இவனைப் பெற்ற
வயிறு உடையாள் என்னும் வார்த்தை எய்துவிக்கத்———————————பெரியாழ்வார் -2-2-6-
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ ——————————————-பெரிய திருமொழி -7-5-1-
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்த —————————————-பெரியாழ்வார்-5-3-1-
தாயைக் குடல் விளக்கம் செய்யக்———————————————————-திருப்பாவை -5-

———————————————————————————————————————————————————————————

அவதாரம் –

 

கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்து ————————————————-பெரியாழ்வார்–4-1-1-
மல்லை மூதூர் வடமதுரையில் ——————————————————————திருவாய்மொழி-9-1-6-
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச் சித்தம் பெரியாத தேவகி தன வயிற்றில்
அத்தத்தின் பாத்தா நாள் தோன்றிக் ————————————————————பெரியாழ்வார்-1-2-6-
கஞ்சன் வலைத்தவன்று காரிருள் எல்லில் பிழைத்து ————————————–நாச்சியார்-3-9-
எடுத்த பேராளன் நந்த கோபன் தன இன்னுயிர்ச் சிறுவன் என்னக்———————–திருவாய்மொழி-8-1-3-
கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் குமரனாய்த்——————————–திருப்பாவை-1
தெய்வ நங்கை யசோதைக்கு ——————————————————–பெருமாள் திருமொழி-7-5-
போத்தந்த பேதைக் குழவியாய்ப் ——————————————————பெரியாழ்வார்-1-2-1
பல தேவற்க்கோர் கீழ்க் கன்றாய் ——————————————————நாச்சியார்-4-1-
ஆயர்கள் நாயகனாய் ————————————————————–பெரியாழ்வார்-1-5-11-

ஆயர் பாடிக்கு அணி விளக்காய்க் ——————————————————–பெரியாழ்வார்-2-2-5-

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்துக்கும் கொழுந்தாய் ——————————திருப்பாவை-17-
காண்டலின்றிக்———————————————————————————-திருவாய்மொழி-6-4-5-
கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான் வளர்ந்து—————————இரண்டாம் திருவந்தாதி -98-

——————————————————————————————————————————————————————-

ஆயர்பாடியில் மங்களம் கொண்டாடுதல்-

 

எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட ————————————–பெரியாழ்வார்–1-1-1
பாடுவார்களும் பல் பறை கொட்ட ———————————————–பெரியாழ்வார்–1-1-2-
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாட ———————————————-பெரியாழ்வார்–1-1-5-
அயலிடத்து பேர்ந்து —————————————————————-பெரிய திருமொழி-10-5-4-
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ ——————பெரியாழ்வார்-2-1-7-
சித்த மனையாள் அசோதை என்னப் பேணிச் சீருடைப் பிள்ளை ————பெரியாழ்வார்-1-1-3-
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்———————————————————-திருப்பாவை-25

————————————————————————————————————————————

பூதனை வதம்

தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் ————————————பெரிய திருமொழி–3-10-7-
பெண்மை மிகு வடிவு கொடு ———————————————————–பெரிய திருமொழி—3-9-6-
வன் பேய்ச்சி தன்மகனாகத் தான் முலை உண்ணக் கொடுக்க—————-பெரிய திருமொழி—10-4-7-
முலை உண்பான்போல் முனிந்துண்டு———————————————–இரண்டாம் திருவந்தாதி-8
வஞ்சனத்து வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கி ———————————திருச் சந்த விருத்தம் -43
சூருருவின் பேயளவு கண்டு—————————————————————முதல் திருவந்தாதி–3

——————————————————————————————————————————————–

சகட பங்கம் –

மாணிக்கம் கட்டி வயிர மிடை கட்டி ————————————————–பெரியாழ்வார்–1-3-1-
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில் ————————-பெரியாழ்வார்–1-2-5-
உறங்குவான் போலே கிடந்தது ———————————————————-பெரியாழ்வார்–1-2-3-
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே -தாளை நிமிர்த்து——————–பெரியாழ்வார்-1-2-11-
தாளை நிமிர்த்து ————————————————————————–பெரியாழ்வார்
உருளும் சகடம் உதைத்து————————————————————–திருவாய்மொழி–2-1-8-

—————————————————————————————————————————————————

கண்ணனுக்கு நாமகரணம் செய்தல்

ஆய்ப்பாடியாயர் ——————————————————————————பெரியாழ்வார்–1-1-4-
பத்துநாளும் கடந்த விரண்டா நாள் எத்திசையும் சயமரம் கோடித்துக்——-பெரியாழ்வார்–1-1-8-
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னை ————————————–திரு நெடும் தாண்டகம் -3
வேதம் வல்லார்களைக் கொண்டு ——————————————————திருவாய்மொழி–4-6-8-
கார் முகிலே என் கண்ணா —————————————————————-திருவாய்மொழி–2-3-7-
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்து ————————————-பெரியாழ்வார்–4-6-2-
நாவினால் நவிற்று இன்பம் எய்த —————————————————-கண்ணி நுண் சிறுத் தாம்பு-2

——————————————————————————————————————————————————-

பால லீலைகள் –

மாயக்கூத்தன் —————————————————————————-திருவாய்மொழி-8-5-1-
தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்——————————-பெரியாழ்வார்–1-4-1-
பொன்முகக் கிண் கிணி யார்ப்ப புழுதி யளைந்து
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைச் —————————————பெரியாழ்வார்-1-5-9-
கோமள வெள்ளி முளைப் போல் சில பல் விலகக்
கண கண சிரித்து வந்து முன் வந்து ——————————————————-பெரியாழ்வார்-1-7-4-
நின்று முத்தந்தந்து -ஆயர்கள் போர் ஏறாய்ச் செங்கீரை யாடி ——————–பெரியாழ்வார்–1-5-2-
எண்ணெய் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக் ———————-பெரியாழ்வார்-1-4-11
கண்ணை புரட்டி விழித்துக் கழை கண்டு செய்து ——————————————-பெரியாழ்வார்-2-4-6-
வெண்ணெய் விழுங்கி விரைய வுறங்கி —————————————————-பெரியாழ்வார்-2-5-3-
பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாரும் சிரிப்ப ——————————பெரியாழ்வார்-2-7-1-
மடங்கொள் மதி முகத்தாரை மால் செய்து ————————————————பெரியாழ்வார்-2-7-7-
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா —————————————————பெரியாழ்வார்-1-4-5-
மழலை முற்றாத இளம் சொல்லால்
வாணிலா வம்புலீ சந்த்ரா வா வா என்று ——————————————————பெரியாழ்வார்–1-6-4-
அம்புலி விளித்து———————————————————————————பெரியாழ்வார்–1-4-3-

———————————————————————————————————————————————————————

யசோதை பிள்ளை வாயுள் வையம் ஏழும் கண்டது

 

மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும்
உண்ணும் திறந்து மகிழ்ந்து —————————————————————–பெரியாழ்வார்-1-2-18
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வாயுள் வையம் ஏழும் காண ————————————————————–பெரியாழ்வார்–1-1-6-
ஆடியாடி அசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தையாடி—————–பெரியாழ்வார்–2-2-10

————————————————————————————————————————————————————–

யசோதை கண்ணனை உரலில் கட்டுதல் –

 

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைக்க —————————————————————-திருப்பாவை-30
வெள்ளிமலை இருந்தால் ஒத்த வெண்ணெய் யைத் —————————-பெரிய திருமொழி-10-7-5-
தாயார் மனங்கள் தடிப்ப—————————————————————–பெரிய திருமொழி–10-5-2-
உளம் குளிர அமுது செய்து ————————————————————–பெரிய திருமொழி-3–8-7-
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ————————————–முதல் திருவந்தாதி -24
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் –பெரிய திருமொழி-6-7-4
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுது
பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித் ————————————————பெரியாழ்வார்-1-10-7-
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கி
சீரால் அசோதை ———————————————————————————-பெரியாழ்வார்-2-3-13
அன்புற்று நோக்கி யடித்தும் பிடித்தும்ம் அனைவர்க்கும் காட்ட ————————பெரியாழ்வார்-2-3-8
ஊரார்கள் எல்லாரும் காண ——————————————————————–சிறிய திருமடல்-35
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்டு ———————————————-கண்ணி நுண் சிறுத் தாம்பு –1
பெருமா வுரலில் பிணிப்புண்டு இருந்து —————————————————–பெரியாழ்வார்–1-2-10-
விண் எல்லாம் கேட்க அழுது ———————————————————————-பெரியாழ்வார்–2-3-6-
எழில் கோள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கி————————————————–பெருமாள் திருமொழி  -7-8

————————————————————————————————————————————————————————————

மருத மரங்களை முறித்தது –

மணமருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப்போய் உரலோடும் ————————————பெரிய திருமொழி–8-3-4-
ஒருங்கொத்த இணை மருதம் உன்னிய வந்தவரை —————————————பெரியாழ்வார்-1-6-5-
ஊறு கரத்தினொடும் உந்தி
எண்டிசையோரும் வணங்க
இணை மருதூடு நடந்திட்டு———————————————————————-பெரிய திருமொழி–3-3-3-

————————————————————————————————————————————————————————

மாடு கன்றுகளை மேய்த்தல் –

அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்தும் எங்கும் ஆர்ப்ப
மழகன்றினங்கள் மறித்துத் திரிந்து ——————————————————————–பெரியாழ்வார்–1-3-20-
புகழ்ப் பலதேவன் என்னும் தன நம்பியோட பின் கூடச் சென்று ——————————பெரியாழ்வார்–1-8-5-
தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடை இட்டு ————————————————பெரியாழ்வார்-3-1-1-
வெண்ணெய் விழுங்கி வெருங்கலத்தை வெற்ப்பிடை இட்டு அதனோசை கேட்டு ——–பெரியாழ்வார்–2-9-1-
அசல் அகத்தார் பரிபவம் பேச —————————————————————————பெரியாழ்வார்–2-9-2-
இல்லவம் புகுந்தவர் மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு ————————————————————————–பெரியாழ்வார்–2-9-10-
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்டு——————————————————–திருப்பாவை –28
இட்டமான பசுக்களைஇனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாடி ——————நாய்ச்சியார் –14-1-
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல் வனமாலை மினுங்க நின்று விளையாடி ———-நாய்ச்சியார் -14-2
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்து குழலூதி ————————————————————-மூன்றாம் திருவந்தாதி -42
கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு மழை கொலோ வருகிறது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழைய குழல்களும் கீதமுமாகி ——————————-பெரியாழ்வார்-3-4-1-
முற்றத்தூடு புகுந்து தன முகம் காட்டி புன்முறுவல் செய்து ————————————–நாய்ச்சியார் -2-9-
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகளுடன் வைத்த நெய்யும் காய்ந்த பாலும்
வடி தயிரும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியோமே ————————-பெரியாழ்வார்–2-2-2-
ஆயிர நாழி நெய்யைப் பாகம் தான் வையாது உண்டு ————————————————பெரிய திருமொழி-1–7-10

————————————————————————————————————————————————————————–

வத்சாஸூர பகாஸூர வதம் –

கானக வல்விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறிந்து ————————————பெரியாழ்வார்-1-6-4
பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு கள்ளவசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்டு —————————————————————பெரியாழ்வார்-2-5-4-

———————————————————————————————————————————————————————

தேணுகாஸூ ர வதம் –

வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன் நாசமாகி
நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோள் இல்லையாக்கி ——————————————————————திருச்சந்த விருத்தம் -80

——————————————————————————————————————————————————————-

காளிய மர்த்தனம் –

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிடப் ———————————————————————நாய்ச்சியார் –4-4-
பூத்த நாள் கடம்பேறித் தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி —
விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்துப் படம்பாடு பைந்தலை ————————————பெரியாழ்வார்-2-10-3-
மேல் எழப் பாய்ந்திட்டு உடம்பை அசைத்து —————————————————————-பெரியாழ்வார்-3-9-9-
வேயின் குழலூதி வித்தகனாய் நின்று ———————————————————————-பெரியாழ்வார்–3-9-7-
நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து ——————————————————————நாய்ச்சியார் -12-7-

————————————————————————————————————————————————————–

பிரலம்ப வதம் –

பாண்டி வடத்தில்
பிலம்பன் தன்னை பண் அழியப் பலதேவன் வெல்ல —————————————————-

——————————————————————————————————————————————————————–

கண்ணன் காட்டுத் தீயை விழுங்கல்-

நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரியக் ————————————————பெரிய திருமொழி-1-7-5-
காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்று ————————————————————–திருவாய் மொழி –5-6-8-
தான் விழுங்கி உய்யக் கொண்டு —————————————————————————பெரிய திருமொழி-11-6-7-

————————————————————————————————————————————————————————–

 

கண்ணன் வேணு கானம் செய்தல் –

வள்ளி நுடங்கிடை மாதர் வந்தலர் தூற்றிடத் துள்ளி
விளையாடித் தோழரோடு ————————————————————————பெரியாழ்வார்-3-2-7
கானகம் பாடி உலாவி ——————————————————————————–பெரியாழ்வார்-3-6-4-
உலாவிச் சிறு விரல்கள் தடவிப் பரிமாறச்
செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிக்கக் ————————————————-பெரியாழ்வார்-3-6-8
குறு வெயர்ப் புருவம் கூடலிப்ப கோவலர் சிறுமியர்
இளங்கொங்கை
குதுகலிப்ப மேனகையோடு திலோத்தமை யரம்பை
உருப்பசியரவர் வெள்கி மயங்கி ———————————————————————–பெரியாழ்வார்-3-6-4-
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தந்தம் வீணை மறப்பப் ————————பெரியாழ்வார்-3-6-5-
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக் ————————பெரியாழ்வார்-3-6-8-
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்க
மருண்ட மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த
புல்லும் கடைவாய் வழி சோர இரண்டு பாடும் துலங்கா புடை பெயரா ———————–பெரியாழ்வார்-3-6-9-
எழுது சித்திரங்கள் போல் நிற்க
மரங்கள் நின்று மது தாரைகள் பாய
மலர்கள் வீழ வளர் கொம்புகள் தாழக்—————————————————————–பெரியாழ்வார்-3-6-10
கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்துக்
கொழுத்து இழிந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பக் கோவலனாய்க் குழலூதி ————————————————-பெரியாழ்வார்-3-4-4-

—————————————————————————————————————————————————————-

கோபியர் வஸ்தராபஹரணம்-

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் —————————————————-திருப்பாவை -1
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்த ——————————நாய்ச்சியார் -3-1-
பங்கய நீர் குடைந்தாடுகின்றார்கள் ஆயர் மட மக்களைப் பின்னே
சென்று ஒளித்து இருந்து அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு
அரவேரிடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி இருந்து ———————————-பெரிய திருமொழி-10-7-11
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாடி ——————————————-நாய்ச்சியார் -8-10-

——————————————————————————————————————————————————————-

வேள்வி மங்கையர் போகய அன்னம் சமர்ப்பித்தது –

பத்த விலோசனத்தில் வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து
வேண்டடிசில் உண்டு ———————————————————————————-vநாய்ச்சியார்-12-6-

————————————————————————————————————————————————————–

கோவர்த்தனத்தைக் குடையாக எடுத்தது –

இந்தரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில்
பழ நடை செய் மந்திர விதியில் பூசனை பெறாது ———————————-பெரிய திருமொழி-2-3-4-
இமயப் பெருமலை போல்
அமைந்த சோறது எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு
முற்ற வாரி வளைத்து உண்ண———————————————————–பெரிய திருமொழி-4-2-3-
மேலை யமரர்பதி மிக்கு வெகுண்டு வர
காள நன்மேகமவை கல்லோடு கார் பொழிய —————————————-பெரிய திருமொழி-10-7-7-
வண்ண மால் வரையே குடையாகச் —————————————————பெரியாழ்வார்-1-6-2-
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும் ———————————————பெரியாழ்வார்-5-1-8-
கப்பமாக மடுத்து மணி நெடும் தோள் ————————————————-பெரியாழ்வார்-3-5-6-
காம்பாகக் கொடுத்துக் கல் எடுத்துக் கன்மாரி காத்து ——————————திரு நெடும் தாண்டகம் -13

———————————————————————————————————————————————————————

கண்ணன் கோபிமாரோடு விளையாடுதல் –

மங்கல நல் வனமாலை மார்விலி லங்க
மயில் தழைப் பீலி சூடி
பொங்கிள வாடை யரையில் சாத்திப்
பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து
கொங்கு நறுங் குழலார்களோடு
குலைந்து குழல் இனிதூதி ——————————————————————–பெருமாள் திருமொழி -6-9-
கொல்லமை செய்து குரவை பிணைந்து ———————————————–திருவாய்மொழி –4-2-2-
சுழலக் குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி ———————————பெரிய திருவந்தாதி -31
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்து ————————————————————-திரு நெடும் தாண்டகம் -16
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து —————————–திருவாய்மொழி-8-8-4-
முற்றா இளையார் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்து ——பெரிய திருமொழி -3-8-8-

———————————————————————————————————————————————————————-

கேசி வதம் –

மாவாயின் அங்கம் மதியாது கீறி ————————————————-பெரிய திருமொழி–3-2-8-

————————————————————————————————————————————————-

கண்ணனும் பலராமனும் மதுரைக்கு எழுந்து அருளுதல் –

வில்லார் விழவில் வடமதுரை விரும்பி—————————————–பெரிய திருமொழி-6-7-5-

————————————————————————————————————————————-

கூனியினுடைய கூனலை நிமிர்த்தல்

நாறிய சாந்தம் நமக்கு நல்கு எண்ணத்
தேறி அவளும் திரு உடம்பில் பூச
ஊறிய கூனினை உள் ஒடுங்க அன்று ஏறி யுருவி———————————-பெரியாழ்வார்-1-9-4-

————————————————————————————————————————————————————————

குவலயா பீட வதம் –

வில் பிடித்து இருத்து ————————————————————–பெரியாழ்வார்-4-7-7-
வள வெழும் தவள மாடம் மதுரை மா நகரம் தன்னுள் ——————திருமாலை –45
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
வெண் மறுப்பு ஓன்று பறித்து—————————————————-பெரிய திருமொழி -2-2-8-

—————————————————————————————————————————————————

மல்லர் வதம் –

இருமலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் ——————————-பெரிய திருமொழி -2-2-8-
வலிய முடி இடிய வாங்கி—————————————————–பெரிய திருவந்தாதி -41-

——————————————————————————————————————————————————–

கம்ச வதம் –

செம்பொன் இலங்கு வலங்கை வாளி
திண் சிலை தண்டோடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு
கேடகம் ஒண் மலர் பற்றித் ——————————————–பெரிய திருமொழி-2-8-3-
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் ——————-மூன்றாம் திருவந்தாதி -99
கறுத்திட்டு எதிர் நின்ற ——————————————————-பெரியாழ்வார்-2-6-3-
கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்ற ——————————–திருப்பாவை-25
அரையனை எழப் பாய்ந்து உதைத்துக் ———————————-பெரியாழ்வார்-4-7-7-
குஞ்சி பிடித்து அடித்து ——————————————————–பெரிய திருமொழி-3-10-3-
உயிரது உண்டு —————————————————————–பெரிய திருமொழி-3-10-9-
அவன் மாளக் கண்டு——————————————————–திருக் குறும் தாண்டகம் -1

————————————————————————————————————————————–

சாந்தீபன் புத்ரனை மீட்டுக் கொடுத்தது –

மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா யுரு யுருவே கொடுத்து ————————-பெரியாழ்வார்-4-8-1-

————————————————————————————————————————————–

ருக்மிணி பரிணயம் –

கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைபிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைபிடித்து —————நாச்சியார் திருமொழி 11-9-
உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு ————————–பெரியாழ்வார்-3-9-3-
விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச் சிரைத்து
அன்று அங்கு அமர் வென்று நங்கை அணி நெடும் தோள்புணர்ந்து —-திருவாய்மொழி -7-10-6-
ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்து அருளித் ———-பெரிய திருமொழி-7-5-6-
திருவுக்கும் திருவாகிய செல்வனாய்———————————————-பெரிய திருமொழி-7-7-1-
பெண் அமுதுண்டு—————————————————————————பெரிய திருமொழி-6-1-2-

————————————————————————————————————————————————–

ஏழ் விடை செற்று பின்னையை மணந்தது –

துப்புடையார்கள் தம் சொல் வழுவாது ஒருகால்
தூய கருங்குழல் நல தோகை மயிலனைய
நப்பின்னை தன் திறமா நல் விடை ஏழ் அவிய ——————————பெரியாழ்வார்-1-5-7-
வீயப் பொருது வியர்த்து நின்று —————————————————பெரியாழ்வார்-4-1-4

——————————————————————————————————————————————————-

நரகாசுர வதம்-

மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர்  தம்மைக் கவர்ந்து——————————————-பெரியாழ்வார்-4-3-3-

—————————————————————————————————————————————————-

த்வாரகை ஏற்படுத்தியது –

பதினாறாயிரம் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராக வீற்று இருந்து ——————————————பெரியாழ்வார்-4-9-4-

—————————————————————————————————————————————————-

பாரிஜாத அபஹரணம் –

என்னாதான் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வல் நாதப் புள்ளால் வலியப் பறித்துக் ——————————-பெரியாழ்வார்-3-9-1-
கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்த்ரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்து —————-பெரியாழ்வார்-2-1-9-

———————————————————————————————————————————————————-

வாணன் ஆயிரம் தோளும் துணித்தது –

மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த
காவலை கட்டழித்துப் ———————————————————————பெரியாழ்வார்-4-3-4-
பரிவின்றி வாணனை காத்தும் என்று அன்று
படையொடும் வந்து இருந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவி ————————————————————திருவாய்மொழி -3-10-4-
பொரு கடலை அரண் கடந்து புக்கு ———————————————————திரு நெடும் தாண்டகம் -20
மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி
பாய ஆழி சுழற்றிய—————————————————————————-திருப்பல்லாண்டு -7

————————————————————————————————————————————————————-

பௌண்டரக வாசுதேவ பங்கம் –

புகராருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிர் உண்டு
அரசன் நகராயின பால்பட நாமம் எறிந்து ———————————————-பெரிய திருமொழி -2-4-7-

காய் சினந்த காசி மன்னன்  நாசமுற்று வீழ நாள் கவர்ந்து——————–திருச் சந்தவிருத்தம் -107

—————————————————————————————————————————————————

சிசுபால வதம் –

கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடையப் ——————————————திருவாய்மொழி7-5-3-
பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாள்
இணைக் கீழ் சேர்த்துப் —————————————-திருவாய்மொழி-7-5-10-

—————————————————————————————————————————————————

தந்த வக்கரனை முடித்தல் –

பொங்கரவ வக்கரனைக் கொன்று ——————————மூன்றாம் திருவந்தாதி -21

————————————————————————————————————————————————–

த்ரௌபதி கண்ணனை சரணம் அடைதல் –

அனந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்
அணி இழையைச் சென்று
எம் தமக்கு உரிமை செய் -எனத் தரியாது
எம்பெருமான் அருள் என்ன ————————————பெரிய திருமொழி-2-3-6-

———————————————————————————————————————————————————————-

கண்ணன் விஸ்வரூபம் எடுத்தது –

பங்கயக் கண்ணன் —————————————————————–திருவாய்மொழி-3-4-6
ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான்
துன்று முடியான் துரியோதனன் பக்கல் சென்று ———————–பெரியாழ்வார்-2-6-4-
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதன்னாய் மன்னவனால் சொல்லுண்டு ———————————பெரிய திருமொழி-115-7
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்து ———————————————-பெரிய திருமொழி-9-1-8-
ஊர் ஓன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால் ——————–பெரியாழ்வார்-2-6-5
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க
ஓர் பாரதமாம் பெரும் போரில்————————————-திருவாய்மொழி-6-4-10-

——————————————————————————————————————————————————–

பார்த்தன் தேரில் கண்ணன் பாகனாய் நின்றது –

பற்றலர் வீயக் கையில் கோல் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை ———————-பெரிய திருமொழி-2-3-1

——————————————————————————————————————————————————

அர்ச்சுனன் கண்ணன் சேவை மேல் அர்ச்சித்த
பூவை சிவபெருமான் முடியிலே கண்டது –

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி அவையே சிவன் முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிய ———————————————திருவாய்மொழி-2-8-6-

——————————————————————————————————————————————————-

ஸ்ரீ கீதை யுபதேசம் –

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத் தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்து ———————————————-திருவாய்மொழி-4-8-6
நீர்மையினால் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள் செய்து நின்று ——-திருவாய்மொழி-3-5-7-

—————————————————————————————————————————————————————

ஜெயத்ரனை மடித்தது-

ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப
சயத்திரன் தன் தலையைப்
பாழில் உருளப் படை பொருது—————————————-பெரியாழ்வார்-4-1-8-

————————————————————————————————————————————————–
பரிஷித்தை உயிர் மீட்டு அருளியது –

மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்து ——————————பெரியாழ்வார்-4-8-3
எல்லா சேனையும் இரு நிலத்து அவித்து —————————–திருவாய்மொழி-3-2-3-
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப —————————————–பெரிய திருமொழி-2-3-6-
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து
அவர்களையே மன்னராக்கி ——————————————-பெரியாழ்வார்-4-9-6

———————————————————————————————————————————————-

வைதிகன் பிள்ளைகளை மீட்டுக் கொடுத்தல் –

வேதவாய் மொழி அந்தணன் ஒருவன்
எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தாலும் காணாள்
கடிய தெய்வம் கொண்டு ஒளிக்கும்-என்று அழைப்ப —————-பெரிய திருமொழி-5-8-8-
இடர் இன்றியே ஒரு நாள் போழ்தில்
எல்லா வுலகும் கழியப்
படர்புகழ்ப் பார்த்தனும் வைதிகனும்
உடனேறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகன் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்து————–திருவாய்மொழி-3-10-5-

————————————————————————————————————————————————

ஆதி அஞ்சோதி உருச் சேர்தல் –
துயரில் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ உலகில் புக உய்த்து ——————–திருவாய்மொழி-3-10-6-
கதையின் திருமொழி யாய் நின்று —————————————-இரண்டாம் திருவந்தாதி -64
நல்குரவும் செலவும் நரகமும் ச்வர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்
பல்வகையும் பரந்து————————————————————-திருவாய்மொழி-6-3-1-
வைகுந்தம் புகுதலும் ———————————————————திருவாய்மொழி-10-9-9-
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும் ——————-முதல் திருவந்தாதி -52
மால்வண்ணன் தாள் தாமரை யடைவோம் என்று —————–நான்முகன்  திருவந்தாதி -91
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்திச் ————————நான்முகன்  திருவந்தாதி -9
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி —————————-திருவிருத்தம் -21
ஏதமில் தண்ணுமை யக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமிக்
கீதங்கள் பாடி மயங்கி திருவடி தொழ——————————-திருப்பள்ளி எழுச்சி -9
பாடுநல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க ———————-திருவாய்மொழி-5-9-3-
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச —————————பெரிய திருமொழி-5-7-6-
உவந்த உள்ளத்தனாய் ————————————————————–அமலன் -2
அண்டமாய் எண்டிசைக்கும் ஆதியாய் நீதியான
பண்டமாம் பரம சோதியாய் —————————————————-திருக் குறும் தாண்டகம் -11
ஆடரவ அமளியில் அறி துயில் அமர ——–திரு எழு கூற்று இருக்கை

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே

தடங்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடை பூதங்களே யாய்க்

கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி

நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே நம்பால் ——திருவாய்மொழி-5-2-4-

————————————————————————————————————————————————

தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைத்
தொழுது நன் மொழியால் தொகுத்துரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச்
சித்தமும் திருவோடு மிகுமே ————————————பெரிய திருமொழி-10-9-10-

பொலிக பொலிக பொலிக —————————————திருவாய்மொழி-5-2-1-

———————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading