நீராட்டம் –
நீராடப் போதுவீர் போதுமினோ -1
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால் -3
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து -4
இப்போதே எம்மை நீராட்டு -20
மார்கழி நீராடுவான் -26
நீராட என்னும் இத்தால் இவர்கள்
நினைக்கிறது கிருஷ்ண சம்ச்லேஷம்
தமிழரும் கலவியை சுனை நீராடல் என்பர்
யேக ப்ரஹ்ம பிரவிஷ்டோச்மி க்ரீஷ்மே சீதமிவ ஹ்ரதம்
புதுவையர் கோன் பட்டர் கோதை என்றும்
புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை -என்றும்
ஆச்சார்ய அபிமானத்தில் பழுத்தவள் ஆண்டாள் –
நீராட என்பதால்
கரசரண சரோஜே காந்திமன் நேத்ர மீனே ஸ்ரமமுஷி புஜவீசிவ்யா குலே
அகார்த்த்மார்த்தே ஹரிசரசி விகாஹனம் -தெரிவிக்கப் பட்டது போலே
காலை நல் ஞானத் துறை படிந்து ஆடிக் கண் போது செய்து -என்றபடி
சதாச்சார்யா துறையிலே படிந்து குடைந்தாடுவதும் தெரிவிக்கப் பட்டது-
————————————————————————————————-
மார்கழி மார்க்க சீர்ஷ–தலையான மார்க்கம் –ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
கொல்லை அரக்கியை மூக்கரிந்த குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே –
நத்யேஜயம் கதஞ்சன -பொய்யானாலும் கூட எனக்கு ஆச்சார்யா சம்பந்தம் பொய்யாகுமா –
நல்ல வென் தோழி நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –
சரம உபாயம் உயிர் நிலை ஆண்டாள் கருதியது –
நாராயணனே நமக்கு பறை தருவான் –
வங்கக் கடல் கடிந்த மாதவனை கேசவனை –
சாஷாத் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்தமயீம் தநூம்
மக் நாத் உத்தரதே லோகன் காருன்யாத் சாஸ்திர பாணிநா -என்றும்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி -என்றும்
சேமம் குருகையோ செய்ய பாற்கடலோ
நாமம் பராங்குசமோ நாராயணமோ
தாமம் துளவமோ வகுளமோ
தோள் இரண்டுமோ நான்கும் உளவோ பெருமான் உனக்கு -என்றும்
சொல்லக் கடவது இறே-
வங்கக் கடல் கடைந்த –ஸ்ருதி சாகரம் தமிழ் மறைகள் ஆயிரம் கடைந்த
மறைபாற்கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பணை பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்தருத்த
நிறைப்பான் கழல் அன்றி சன்மம் விடாய்க்கு நிழல் இல்லையே
மாதவனை -மகா தபச்வியினை
கேசவனை -இந்த்ரியங்களை அடைக்கிய ஆச்சார்யன் -ஜிதேந்த்ரியர்
இப்படிப் பட்ட ஆச்சார்யர்கள் -திங்கள் திரு முகத்து சேயிழையார்-
தாபத்ரயங்கள் கழிந்து அழகிய திருமுகம் ஆத்ம குணங்கள் பூஷணம்-
———————————————————————————————-
நாயகனும் எம்பெருமானும்
எம்பிரானை புத்ரனாக பெற்றதில் நந்த கோபனுக்கும் எம்பெருமானாருக்கும் சாம்யம் உண்டே
எதிராஜ சம்பத் குமார் -செல்வப் பிள்ளை
கோயில் காப்பானும் -எம்பெருமானாரே
தென்னரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
ஸ்ரீ மன் ஸ்ரீ ரங்க ஸ்ரீ ரியம் அனுபத்ரவாம் அனுதினம் சம்வர்த்தய –
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்றும் உவந்திடு நாள் –சகல திவ்ய தேசங்களையும் உத்தரித்து அருளினவர் –
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பான் –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் -என்றும்
நெடு வரைத் தோரணம் நிரந்து எங்கும் தொழுதனர் உலகே -என்றும்
சொல்லுகிறபடியே கொடியும் தோரணமான வாசல் பரமபத வாசல்
இதுவும் எம்பெருமானார் ஆளுக்குகைக்கு உட்பட்டதே –
எம்பெருமானார் திருவடிகளை பெறாதாவர்களுக்கு அரிது என்னும் இடம் காட்டப்பட்டது
மணிக் கதவம் தாள் திறவாய்
ஒன்பது ரத்னங்கள்
மறைப் பொருளுக்கு ரஷணமான நவ கிரந்தங்கள் செய்து அருளி
தாள் திறவாய்
இவற்றின் பொருள்களை நாங்கள் அறியும் படி காட்டி அருளுவீர்
நென்னலே வாய் நேரந்தான் –
முன்னமே எம்பெருமான் சோதி வாய் திறந்து எம்பெருமானாரைப் பற்றி அருளிய
கலௌ ராமானுஜஸ் ஸ்ம்ருத-என்றும்
கலௌ கச்சித் பவிஷ்யதி -என்றும்
உபதேஷ்யந்தி தி ஜ்ஞானம் ஜ்ஞாநினஸ் தத்வ தரிசின -என்றும்
——————————————————————————————————-
மார்கழித் தங்கள் மதி நிறைந்த நன்னாள் –
ராமானுஜர் திரு வவதாரம் –
சித்தரை நமக்கு முதல் மாதம்
மார்கழி தேவர்களுக்கு
போதுவீர் போதுமினோ -ஆசை உடையோர்க்கு எல்லாம்
கலந்து பேசின பேச்சரவம் –
திருப்பாவையில் த்வனி பொருள்
வேத வேதாந்த -ஸ்ருதி -இதிஹாச புராணங்களை கலந்து பேசுவர் முன்னோர்
முன்னோர் மொழிந்த மொழிகளோடு பிணங்காமல் பேசுவர்-
பாற் கடலுள் பையத் துயன்ற பரமன் –
உன் பாலேபோல் சீரில் பழுத்து ஒழிந்தேன் –பகவத் குணங்கள் பாலாகவும்
சீர்க்கடலை உள் பொதிந்த -குணங்களை கடலாகவும்
அனந்த குண சாகரம் ப்ரஹ்ம-குணங்களையே வாய் வெருவிக் கொண்டு திவ்ய பிரபந்தங்களையே அனுசந்தித்துக் கொண்டு-
ஓங்கி உலகளந்த உத்தமன் –
மண் மிசை யோனிகள் தோறும் –
ஞானம் கனிந்த நலம் கொண்டு-
எம்பெருமானை விட ஓங்கி -அதிசயத்து
ஓராண் வழியாக உபதேசித்தார் முன்னோர் ராமானுஜரே உத்தமர்
மற்றொரு பேறும் மதியாது –ராமானுஜர் உத்தமனே காட்டி அருளி –
ஆழி மழைக் கண்ணா –அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன் –
வவ்ருதே பஞ்சபிராயுதைர் முராரே -யதிராஜ சப்ததி
ஒன்றும் கை கரவேல் -இராமானுசன் என்னும் சீர் முகிலே
ஆழியுள் புக்கு –உபநிஷத் துப்தாக்தி மத்யோத்த்ருதாம் —ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ ஸூக்தியும் அனுசந்தேயம்
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு போலே
பசு பிராயரான நம்மிடையே தோன்றி எம்பெருமானார் –
நரு பசு -ஆளவந்தார்
வருத்தா பசு நரவபு -மணவாள மா முனிகள்
புண்யம் போஜ விகாசாயா பாப த்வாந்த ஷயாய ச
ஸ்ரீ மான் ஆவிர்பூத் ராமானுஜ திவாகர -என்னக் கடவது இ றே
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
பால் போன்ற நிறத்தவர் எம்பெருமானார்
சங்கு வாழ்ந்த இடம் புள்ளரையன் கோயில்
பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே –திருவரங்கத்திலே வாழ்ந்தது
கருதுமிடம் பொருது -பாஹ்ய சஞ்சாரம் செய்யும் சக்கரத் ஆழ்வான் போல் அன்றி
உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே –
ஸ்வாமியும் யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்கம் ஸூகமாஸ்வ
ஆகவே கோயில் சங்கு -எம்பெருமானாருக்கு மிகப் பொருந்தும் –
கலந்துபேசின பேச்சரவம் –
முன்னோர் மொழிந்த முறைப்படியே ஸ்ரீ ஸ்வாமி உடைய எல்லா ஸ்ரீ ஸூக்திகளும்
பகவத் போதாயன க்ருதாம் விச்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத் ர வ்ருத்திம்
பூர்வாச்சார்யாஸ் சஞ்சிசிஷிபு -தன்மாதானு சாரேண ஸூத்ராஷராணி வ்யாக்யாஸ்யந்தே –
வடமொழி தென்மொழி கலந்த மணிப்பிரவாளம் -திரு ஆறாயிரப்படி –எதிராசன் பேரருளால் பிள்ளான் அருளியது-
மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்து –
திருமுடி திருவடி சம்பந்தம்
அர்வாஞ்சோ யத்பத் சரஜி ஜத்த்வமாஸ்ரித்ய பூர்வே மூர்த்த்னா யச்யான் வ்யபமுகதா தேசிகா முக்திமாபு -பட்டர்
பாத கோடீரயோஸ் சம்பத்தேன சமித்யமான விபவான் -தேசிகன் –
மிக்குள்ள பிள்ளைகள் -சுவாமிக்கும் பூஜ்யராய் இருந்த பூர்வர்-
மணிக்கதவம் தாள் திறவாய்
நவ ரத்னங்கள் போலே கிரந்தங்கள் அருளியும்
அவற்றின் அர்த்த விசேஷங்கள் நமக்கும் கூட நிலமாம்படி அருளிச் செய்கையும்-
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் -அரும் கலமே
தேவப்பெருமாள் பெருந்தேவி கிருபைக்கு இலக்காகி
உத்தம சத்பாத்ரம் -மகா பூஷணம்
கற்று கறவை கணங்கள் –
கற்று –
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் ஸ்ருதிகள் நான்கும் எல்லை இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் –
பஞ்சாச்சார்ய பதாச்சித-
பெரிய நம்பி -சமாஸ்ரயணம் -மந்த்ரார்த்தம்
திருக் கோட்டியூர் நம்பி -ரகச்யார்த்தம்
திருமலை ஆண்டான் -திருவாய்மொழி
திருவரங்க பெருமாள் அரையர் -ஆளவந்தார் ஆழ்வார் -அருளிச் செயல்கள்
கோ வல்லவர் -மகா வித்வான்கள் -அவர் தம் பொற் கோடி கோ அல்லர் -ஸ்வ தந்த்ரர் அல்லர்-
கனைத்து இளம் கற்று எருமை –
ஸ்ரீ பெரும் பூதூரில் இரண்டு தடவை சேவிக்கும் பாசுரம்
நல் செல்வன் -ஸ்வாமி யை குறிக்கும் லஷ்மி சம்பன்ன -அஹம் சர்வம் கரிஷ்யாமி விபவம் போலே இவர் அர்ச்சையில் -நித்ய கிங்கரோ பவாதி
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்றும் உவந்திடு நாள் –
கள்ளம் தவிர்ந்து கலந்து –
ஆத்மா அபஹாரி
இனியது தனி அருந்தேல்
பாவைக்களம்-கால ஷேப மண்டபம் -ஆசை உடையோரை எல்லாம் புக்க விட்டாரே
உங்கள் புழக்கடைத் தோட்டம்
ஸ்வாமி விஹரிக்கும் தோட்டம் இருவகைப்பட்டு இருக்கும்
பாஷ்ய கீதாபாஷ்ய வேதார்த்த ஸங்க்ரஹாதிகள்
திவ்ய ப்ரபந்த ரஹஸ்ய த்ரயார்த்தங்கள் -இதுவே அந்தரங்கர் களுக்காகவே -புழக்கடைத் தோட்டம்
வாவியுள்
பஞ்சாச்சார்ய உபதேஸ வர்ஷம் நிறைந்த தடாகத்துக்குள் அவஹாகித்து
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின
தாமஸ அர்த்த வாதங்கள் தலை மடிந்து
சாத்விகார்த்தங்களின் விகாஸம்
கலியும் கெடும் கண்டு கொண்மின்
செங்கல் பொடிக்கூறை வெண் பல் தவத்தவர்
ஸந்யாஸிகள் ஓடித்திரியும் யோகிகளாய் இல்லாமல் மடாதிபதிகளாக்கி திவ்ய தேச நிர்வாக ஸாம்ராஜ்யங்களை ஏற்படுத்து
மடா பத்யம் யதிஸ் குர்யாத் விஷ்ணு பூஜா அபி வ்ருத்தயே
தங்கள் திருக்கோயில்
தங்கள் இல் –திருமந்திரம்
திரு இல் -த்வயம்
கோ இல் -சரம ஸ்லோகம்
ரஹஸ்ய த்ரய -அர்த்தங்களை -சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
அநாதி மாயயா ஸூஸூப்த
ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூரும் என்று பேசி வரம்பறுத்தார்
நங்காய்
பூர்ணர் -சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் ஸ்ருதிகள் நான்கும்
எல்லையில்லா அற நெறி யாவும் தெரிந்தவர்
நாணாதாய்
நாண் -வெட்கத்துக்கும் அஹங்காரத்துக்கும்
நாண் பெரியோம் அல்லோம் —
நீர் நுமது என்று இவர் வேர் முதல் மாய்த்தவர்களில் ஸ்ரேஷ்டர்
நாவுடையாய்
ஸகல வித்யா வாஹிநீ
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
அப்பனுக்கு சங்காழி அளித்தருளும் பெருமாள்
பங்கயக் கண்ணானை
கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
கம்பீராம்பஸ் ஸமுத்பூத ஸூம்ருஷ்ட நாள விகஸித புண்டரீக தள அமலாய தேக்ஷண
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பி
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -தத்வமஸி-ஸ்வாமி அர்த்த விசேஷம் கேட்டு யாதவ பிரகாசர் போல்வார் மூடிக் கொண்டது போலே
செங்கல் பொடிக் கூறை-காஷா யேண க்ருஹீத பீத வசநா-யதிராஜ சப்தத்தி
வெண் பல் -அச்யுத பதாம்புஜ யுக்மருக் மவ்யா மோஹதஸ்
ததிராணி த்ருணாய மேன-என்னும்படி
மகா விரகத சார்வ பௌமர்
தவத்தவர் -மம மம என்னாத தவ தவ -என்று சேஷத்வம் பரிமளிக்க நிற்பவர்
தங்கள் திருக் கோயில் -அமுதனார் ஆதீனத்தில் இருந்த கோயில் தங்கள் திருக் கோயில் என்னும்படி
சங்கிடுவான் -திறவு கோல்-ஆழ்வான் மூலமாக திரு கோவிலைப் பெற்ற இதிகாசம்-
உனக்கு என்ன வேறுடையை
எம்பெருமானார் தர்சனம் என்றே
மாற்றாரை மாற்றழிக்க
பாஷண்ட –தற்கச் சமணரும் –சாறுவாக மதம் நீறு செய்த –
அம்பரம் தண்ணீர் சோறு
பரம ஆகாசம் -விரஜை -அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜாநாத் -ப்ரஹ்ம அனுபவம் –
க்ருபா மாத்ர பிரசன்னாச்சார்யார்
அப்பரமபதத்தை ஊடறுத்தவர் இடைச்சுவர் தள்ளி
உந்து மத களிற்றன்
கந்தம் கமழும் குழலி -காரி சுதன் கழல் சூடிய முடியும் காண நல சிகை முடியும்
கம நீய சிகாயவேசம்
சிகயா சேகரிணம் பதிம் யதி நாம்
திருப்பாவை ஜீயர் ஐதீகம் பிரசித்தம்
தோரண விளக்கு -ஸ்தாவரமாய் இருக்கும்
குத்து விளக்கு -ஜங்கமம் இருக்கும்
குத்து விளக்கு எரிய -நம்பி பக்கலில் அர்த்த விசேஷம் கேட்டு அறிய
கோட்டு -கோட்டி
கால் கட்டு -திருவடி தொட்டு சபதம் செய்து கொடுத்த பின் அர்த்த விசேஷம் அருளியது ஸூ சகம்
மேல் ஏறி -சன்னதியின் மேல் ஏறி
ஆச்சார்யர் திவ்ய ஆஞ்ஞையைக் கடந்து
இத்தாலே மலர்மார்பா ஹிருதய வைசால்யம் –
செப்பம் உடையாய் ஆர்ஜவம் -மநோ வாக் காயம் கரண த்ரய சாரூப்யம்
திறலுடையாய் -பராபிபவன சாமர்த்தியம்
செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும்
தஸ்மை ராமானுஜார்யாய நம பரம யோகினே
யஸ் சுருதி ஸ்ம்ருதி ஸூ தராணாம் அந்தர் ஜுவரமசி சமத்
அத்தை செற்றார் உள்ளத்திலே போக்க விட்டார்
சோக வஹ்நிகம் ஜனகாத்மஜாயா ஆதாய தேநைவ ததாஹா லங்காம் -என்று
பிராட்டி திரு வயிற்றில் இருந்த சோக அக்னியை கிளப்பி இலங்கையை கொளுத்தின திருவடி போலே
சுருதி அந்தர் ஜுரங்களை எடுத்து செற்றார் வயிற்றில் எறிந்த படி
வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்ற படைத்தான் –
ஸ்வாமி சிஷ்ய ஏகாந்தி நாம் த்வாதசபிஸ் சஹஸ்ரை
சம்சேவிதஸ் சமயமி சப்த சத்யா
அனைவரும் ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
சிஷ்யாதிச்சேத் பராஜ்யம் -விஞ்சி
இங்கே செய்யவோ -இரண்டு ஆற்றின் நடுவே விண்ணப்பம் செய்யவோ -ஆழ்வான்
பால் சொரியும் -அர்த்த விசேஷங்கள்
ஆற்ற படைத்தான் -அபரிமிதமாக
மாற்றார் வலி தொலைந்து –யாதவ பிரகாசர் வந்து பணிந்த விருத்தாந்தம்-
திங்களும் ஆதித்யனும்
உபய வேதாந்தம்
ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் -அருளிச் செயல் கால ஷேபம்
இப்படிச் சொல்வதும் ஊற்றத்தைப் பற்ற –
பரசமய நிரசன பூர்வகம் அது -செவிக்கு இனிய செஞ்சொல் இது
சஷூஸ் மத்தா து சாஸ்த்ரேண
பூவைப்பூ அண்ணா
காயாம்பூ வண்ணனான கண்ணனைத் திரு உள்ளத்தில் கொண்ட நிழலீட்டாலே பூவைப்பூ வண்ணனாகவும் அண்ணனும் இருப்பாரே
பெரும்பூதூர் மா முனிக்குப் பின்னானாள் வாழியே
பூவைச் சுற்றி வண்டுகள் மொய்க்கும்
போந்தது என் நெஞ்சம் என்னும் பொன் வண்டு உனதடிப்போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி
மாரி ஈஷண ஸூதா ஸிந்து -த்ருஷ்ட அம்ருத வ்ருஷ்டி -உத்தேச்யமான மழை உண்டாக்குவதற்கும் பஹுவிதா துக்க வர்ஷிணி – த்யாஜ்யமான மழையைத் தவிர்க்கவும் எம்பெருமானார் திருவவதாரம் மலை முழைஞ்சில் -தத்வம் நிஹிதம் குஹாயாம் -பரத்வாஜர் -வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் திருப்பாவை ஜீயர்
தீ விழித்து -புத்தி விகாஸமடைந்து வேரி மயிர் பொங்க -கம நீய ஸிகா நிவேஸம் -சிகாய கேஸரிணம் பதிம் யதீ நாம் – உன் கோயில் நின்று இங்கனே போந்து அருளி -ஸ்ரீ பெரும்பூதூரில் இருந்து
கோப்புடைய சீரிய சிங்காசனம் –பஜதி யதிபதவ் பத்ர வேதீம் த்ரி வேதீம் -பேத அபேத கடக ஸ்ருதிகள்
வலி மிக்கசீயம் இராமானுசன் அறிவுற்று அவதார பிரயோஜனம் குறிக் கொண்டு
புத்திர் மநீஷா தீஷணா தீ -தீ விழித்து-விகசித்து
எப்பாடும் பேர்ந்து உதறி
ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமஞ்ச பத்ரி நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத த்வாராபதி ப்ரயாகா மதுரா அயோத்யா கயாபுஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனிம்
வேல் போற்றி திரிதண்டம்
சப்ததி-விஷ்வக் சேனோ எதிபதிர் ஆபூத் வேத்ரசாரஸ் த்ரிதண்ட -திருப்பிரம்பே த்ரிதண்டம் -உபய விபூதி நிர்வாக நிபுணம்
முககோலுக்கு மங்களா சாசனம்
தாடி பஞ்சகம் –
நெடுமால்
அச்யுத பதாம்புஜ யுகம ருக்ம வ்யாமோஹத
ஆலின் நிலையாய்-
பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன்
அபரிமிதமான சாகைகள் உள்ள ஆல மரம் போல் சிஷ்ய கோடிகள் நிறைந்து
சங்கம் -ஸ்பர்சத்தால் துருவனுக்கு
ஸ்வாமி ஸ்பர்சத்தால் ஆண்டான் ஆழ்வான் எம்பார் அனந்தாழ்வான் பிள்ளான் போல்வார்
கோல விளக்கு -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு குல பிரதீபம்
கொடி -சித்தாந்த விஜய த்வஜம்
விதானம் -தொடுத்து மேல் விதானமாய் பௌவ நீரார் அரவணை
சீர் -ஸ்வாமி ஸ்வரூபம் ரூபம் குண விபூதிகள்
வடுக நம்பி போலவும்
வாழி எதிராசன் -மா முனிகள் போலேயும்
உன் தன்னோடு உற்றோமே ஆவோம்
கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்
உன் தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்
—————————————————————————————————-
மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை உணாயே—-பெரியாழ்வார் திரு மொழி –2-2-6-
ஆண்டாளை சொல்லி
அவள் குழல் மேல் ஒரு வண்டு நுழைந்ததாம்
தூவி யம் புள்ளுடை தெய்வ வண்டு -எம்பெருமான் ஆகிற வண்டு காதல் கொண்டது
கூந்தல் வண்டு இழுக்கும்
இவள் தான் சூடிய மாலையாலே அவனை ஆகர்ஷித்தாள்
அலகவிதி ஹிதா பிஸ் ஸ்ரக்பிராக்ருஷ்ட தாதா -என்ற படி-
ஸ்வோச்சிஷ்டாயாம் சிரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்கதே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய-
—————————
மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண்ணினை துஞ்சா
இன்னடிசிலோடு பாலமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னோடு தோழமை கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்——5-5-
இதில் ஹம்ச விருத்தாந்தம் -இருள் நீங்க வேதம் உரைக்கத் தோன்றிய திரு வவதாரம்
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த -கலியன்
பின் இவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று அன்னமதானானே அருமறை தந்தானே –பெரியாழ்வார்
ப்ராஹ வேதான் அசேஷான் -இவ் உலகிருள் நீங்க
வேண்டிய வேதங்கள் ஓதி
வேத ப்ராதுர்பாவ விசேஷமான திவ்ய பிரபந்தத்தையும் அருளிச் செய்து
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் –
பெரியாழ்வார் -தம்மையே -அன்னமாக
ஆச்சார்யா ஹிருதயத்திலும் –நயா சலன் மெய் நாவன் நாத யாமுநர் போல்வாரை அன்னம் என்னும் –
ஆக ஆண்டாள் பெருமையை பெரியாழ்வாரும்
பெரியாழ்வார் பெருமையை ஆண்டாளும்
அருளிச் செய்ததாயிற்று
——————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply