உபதேச ரத்னமாலை –பாசுரம் -66/67/68/69/70- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

ஆர்க்கும் அந் நேர் நிற்கை அரிதாம் -என்றீர்
இதுக்கு ஒருத்தர் தாம் இல்லையோ என்று தம் திரு உள்ளத்துக்கு கருத்தாக
அதில்
இவ் வனுஷ்டானத்துக்கு ஒருத்தர் யுண்டு என்று அவரை தர்சிப்பித்து அருளும் முகத்தால்
இவ் வனுஷ்டானத்தை ஆதரித்துப் போரு என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

கீழே
ஸ்வரூப ரஷணத்தையும்-தேக ரஷணத்தையும் பிரஸ்தாபித்து அதில்
ஆத்ம ரஷணத்துக்கு உறுப்பாக ஆசார்யத்வத்தை இட்டு வைத்து
தமக்கு ஆதரணீயமான தேக ரஷணத்துக்கு உறுப்பான சிஷ்ய ரஷணத்தில் அருமையை அருளிச் செய்கிறார் –

(ஆச்சார்ய நிஷ்டர்களை விட சிஷ்ய நிஷ்டர்களையே விளக்கும் சூரணைகள் பல எங்கும் உண்டே
ஆச்சார்ய லக்ஷணம் 12 சூரணை களும் அதில் மும் மடங்கு சிஷ்ய லக்ஷணம் ஸ்ரீ வசன பூஷணத்தில் உண்டே
சிஷ்ய லக்ஷணம் அறிவதில் அருமை உண்டே )

(முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் =
ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —
நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு
நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒருகாலம் திருமேனி பாங்கின்றியிலே கண்வளர்ந்தருளுகிற போது
தமக்கு அந்தரங்கரான ஶ்ரீவைஷ்ணவர்களை அழைத்து
‘அடியேன் இப்போது திருவடிச்சாராமல் ஆலஸ்யமும் பொறுத்து இன்னமும் இங்கே சிறிதுநாள் இருக்கும்படி
“ஏழையேதலன்”, “ஆழியெழச்சங்கும்” பெருமாள் திருவடிகளிலே விண்ணப்பம்செய்து ப்ரபத்தி பண்ணுங்கோள்’ என்ன,
அவர்கள் அப்படியே செய்து, ஜீயருக்குப் பண்டுபோலே திருமேனி பாங்காயிற்று.
இத்தை ஶ்ரீவைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஜ்ஞாநவ்ருத்தருமாய் வயோவ்ருத்தருமான ஜீயர் இப்படிச் செயதார், இது இவர்ஸ்வரூபத்துக்குச் சேருமோ?’ என்று
விண்ணப்பம்செய்ய, பிள்ளையும் ‘அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம்; ஸகல வேத ஶாஸ்த்ரங்களும் போவது,

பிள்ளை எங்களாழ்வானைச் சென்று இப்படி இவர் நினைவைக் கேளுங்கோள்’ என்று கேட்க,
அவரும் ஶ்ரீரங்கஶ்ரீயில் ஸங்கம் போலே காணும் என்று இருள் தருமா ஞாலமான ஸம்ஸாரத்திலே
“நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடிஶதைரபி” என்றும்,
“யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுபவேப்ய நாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே என்ன,
பிள்ளையும் அத்தைக்கேட்டருளி, ‘திருநாராயணபுரத்தரையரைச் சென்று கேளுங்கோள்’ என்ன,
அவரும் ‘தொடங்கின கைங்கர்யங்கள் தலைக்கட்டாமையாலே காணும்’ என்ன, பிள்ளையும் அத்தைக்கேட்டு,
‘ஆகிறது, அம்மங்கியம்மாளைக் கேளுங்கோள்’ என்ன,
அவரும், ‘பிள்ளை கோஷ்டியிலே இருந்து அவர் அருளிச்செய்கிற பகவத் விஷயத்தைக் கேட்கிறவர்களுக்கு
ஒரு தேஶ விஶேஷமும் ருசிக்குமோ?’ என்ன, மீளவும் பிள்ளை அத்தைக்கேட்டு, ‘அம்மங்கி பெரியமுதலியாரைக் கேளுங்கோள்’ என்ன,
“பெருமாள் சிவந்த திருமுக மண்டலமும் கஸ்தூரி திருநாமமும் பரமபதத்திலே கண்டேனில்லையாகில்
மூலையடியே முடித்துக்கொண்டு மீண்டுவருவன்’ என்றன்றோ பட்டர் அருளிச்செய்தது,
அப்படியே இவரும் பெருமாள் சிவந்த திருமுக மண்டலத்தையும் விட்டுப் போகமாட்டராக வேணும்” என்றார்.

பிள்ளை இவை எல்லாத்தையும் கேட்டருளி ஜீயர் திருமுக மண்டலத்தைப் பார்த்து சிரித்து,
‘இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ?’ என்ன, ‘இவை இத்தனையுமன்று’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.
‘ஆனால் உம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லும்’ என்ன, பிள்ளை ‘தேவர் ஸர்வஜ்ஞராகையாலே அறிந்தருளாததில்லை;
ஆனாலும் அடியேனைக்கொண்டு வெளியிட்டருளத் திருவுள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன்.
தேவரீர் மஞ்சன சாலையிலே எழுந்தருளித் திருமஞ்சனம் செய்தருளித் தூய்தாகத் திருவொற்றெலியல் சாற்றி யருளி
உலாவி யருளும் போது குருவேர்ப்பரும்பின திருமுக மண்டலத்தில் சேவையும் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு
அடியேனுக்குப் பரமபதத்துக்குப் போக இச்சையாயிருந்ததில்லை’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.

இத்தைக் கேட்டருளிப் பிள்ளையும் முதலிகளும் ‘இந்த விபூதியிலும் இவ்வுடம்போடே ஒருவர்க்கு இவ்வைஶ்வர்யம் கூடுவதே!’
என்று மிகவும் திருவுள்ளம் உகந்தருளினார்கள் – என்று இந்த ஜீயருடைய ஆசார்ய ப்ரேமம் தமக்குண்டாக வேணுமென்று
நம்முடைய ஜீயர் தம்முடைய திருவுளத்தைக் குறித்து உபதேச ரத்தின மாலையிலே
“பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்திலன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான
அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்” என்றருளிச் செய்தருளினார்.)

(துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்
நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—66-

அத்யாதராதி
நிஜ குரும் கலி வைரி தாஸர்
நித்யாம் விபூதிம் அவத்யம்
நிரந்தரம் யஹா
சிஸ்ரூஷா தேக குரு மானஸ
தஸ்ய நிஷ்டாம்
பஸ்யான் மநோ ஹர பதே முனி புங்கவஸ்ய

பின்பழகராம் பெருமாள் சீயர் –
அவர் ஆகிறார்-
ஸ்ரீ லோகாச்சார்யரான ஸ்ரீ நம் பிள்ளைக்கு அத்யந்த அபிமத விஷயமாய்
அவர் சந்நிதியிலே சகல அர்த்தங்களையும் கேட்டு
அந்த ஸ்ருதமான அர்த்தத்தின் படியே-எல்லாம் வகுத்த இடமே -என்று
தத் ஏக நிஷ்டராய் அவரை ஷண காலமும் பிரியாதே
தத் கைங்கர்ய நித்ரராய் போருகிற ஸ்ரீ பின்பழகராம் பெருமாள் சீயர் —
தாத்ருசமான அதிகார பூர்த்தியை யுடையவர் –

பெரும் திவத்தில் அன்பு அதுவும் அற்று –
(அது -ஸ்ரேஷ்டமான அந்த அதுவும் )
துளிக்கின்ற பெரிய வான் -என்றும்
எம்மா வீடு -( 2-9-)-என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய ஸூக ரூபமாய் இருந்துள்ள த்ரிபாத் விபூதியாகிற
பிராப்ய தேசத்தை பிராபிக்க வேணும் என்கிற ப்ராவண்யமும் அற்று –
அதாவது –

மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே —என்றும் (மா கம் -பெரிய திவம் இங்கு )
வானுலகம் தெளிந்தே என்று எய்துவது ( திருமங்கை )-என்றும் சொல்லுகிறபடியே
எல்லாராலும் விரும்பப் படுவதான தேசத்திலும் விருப்பம் அற்று
குரு வேர் பரம்பின திரு முக மண்டலத்தின் சேவையையும்
சுற்றிச் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு
அடியேனுக்குப் பரம பதத்துக்குப் போக இச்சை இருந்தது இல்லை இறே-என்று
அருளிச் செய்து போருவர் -என்கை-

இப்படி அதில் ஆதரமும் மட்டமாம் படி அதிலும் இஷ்டமாய் இருப்பதான விஷயத்தைச் சொல்லுகிறது –
மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு ஆன அடிமைகள் செய் –
அதாவது
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை ஆசை யுடன் நோக்குவன்-என்கிறபடியே
அந்த தேச விசேஷத்தில் யுண்டான ஆதரத்தை எல்லாம்
தமக்கு தேசிகரான ஸ்ரீ நம்பிள்ளை விஷயத்திலே கைங்கர்யத்திலே யாய்த்து – இவர்
ஒருமடைப் படுத்திக் கொண்டு போருவ்து -என்கை –
ஆகையால் இவருக்கு ஒரு தேச விசேஷமும் ருசியாது இறே –

(அர்ச்சிராதி மார்க்கம் திருவேங்கட யாத்திரை அக்ரூர கமனம் மூன்றுமே நித்ய அனுசந்தானம் –
இவை எல்லாம் இவருக்கு ஆச்சார்ய கைங்கர்யமே யாத்ரையாய் போருமே –
அந்தாமத்து அன்பு செய்து எங்கும் பக்க நோக்கு அறியாத பைந்தாமரைக் கண்ணன்
அஸ்மாத் துல்யோ பவ தி -இதுக்கும் அவனே முன்பே அனுஷ்டித்துக் காட்டி அருளினான் அன்றோ )

(திருகோட்டியூர் நம்பி கோயிலுக்கெழுந்தருளித் திருநாள் ஸேவித்து மீண்டெழுந்தருளுகிறவரை
எம்பெருமானார் அநுவர்த்தித்து ‘அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை அருளிச்செய்யவேணும்’ என்று கேட்க,
நம்பியும் ஒருநாழிகைப் போது திருக் கண்களைச் செம்பளித்துக் கொண்டு நின்று, பின்பு
‘எங்கள் ஆசார்யர் ஶ்ரீஆளவந்தார் அடியோங்களுக்கு ஹிதம் அருளும் போது அகமர்ஷண ஸமயத்திலே
திருமுதுகிருக்கும்படி வல்லார் கடாரம் கவிழ்த்தாப் போலே காணும் இருப்பது;
அதுவே நமக்குத் தஞ்சமென்று விஶ்வஸித்திருப்பேன்; நீரும் மறவாமல் இத்தை நினைத்திரும்’ என்று
அருளிச்செய்தாரென்று ப்ரஸித்தமிறே. நம்பிதான் திருக்கோட்டியூரிலே தளத்தின் மேலே படிக்கதவைப் புகட்டு
ஆளவந்தாரை த்யாநித்துக்கொண்டு யமுனைத்துறைவர் என்கிற மந்த்ரத்தை
ஸதாநுஸந்தாநமாய் எழுந்தருளி இருப்பர் என்று அருளிச் செய்வர்.)

நம்பிள்ளைக்கு ஆன வடிமைகள் செய் அந்நிலையை –
தம்முடைய ஆத்ம ரஷணத்தில் அநவரதம் அவஹிதராய் –
பரமபதம் தம்முடைய சிறுமுறிப்படி செலுத்தும்படி இருப்பராய்-
(பக்கத்து திருமாளிகை அம்மையார் திருமாளிகைக்கு எழுதிக் கொடுத்த ஐ திக்யம் முன்பே பார்த்தோம்
கொற்றி அம்மை பிராட்டிக்கு -சமன் கொள் வீடு தந்த ஐ திக்யம்
திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம் –
நாகப்பழம் கொடுத்த பெண் பிள்ளை
ஸ்த்ரீகளே அறிந்த ரஹஸ்யம் -)
தமக்கு வகுத்த விஷயமாய் இருக்கிற ஸ்ரீ நம்பிள்ளைக்கு
இச்சா பிரக்ருத் யது குணைர் உபசாரைஸ் சதா உசிதை -என்கிறபடியே
தத்தத் அவஸ்த உசிதமாக சுழற்றிப் பரிமாறுகை முதலான
சகல வித கைங்கர்யங்களையும் அவர் உகக்கும்படி
செய்து கொண்டு போந்த லோக விலஷணமான நிஷ்டையை

(வைஷ்ணவனாயிருப்பானொரு ராஜா ஒரு பெருந்திரள் வருகிறத்தைக் கண்டு
‘நம்பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ, நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ’ என்று கேட்டான்.
இப்படி மஹா ஸம்ருத்தியான ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே நம்பிள்ளை வாழ்ந்தருளுகிற காலத்திலே
ஶ்ரீபாதத்திலே உடையளாயிருப்பாளொரு அம்மையாருக்குத் திருமாளிகைக்கருகே ஒருகோல் துறை(தரை) உண்டாய்,
அதிலே குடியிருக்கும் ஸப்ரஹ்மசாரியாய் இருப்பாரொரு ஶ்ரீவைஷ்ணவர், ‘பிள்ளை திருமாளிகைக்கு நெருக்கமாயிருக்கிறது,
இந்த ஒருகோல் துறையையும் ஆசார்யனுக்குக் கொடுக்கவேணும்’ என்று அந்த அம்மையாருக்குப் பலகாலும் அருளிச்செய்ய,
அவளும் ‘கோயிலிலே ஒருகோல் துறை ஆர்க்குக் கிடைக்கும், நான் திருவடி சேருந்தனையும் கொடேன்’ என்ன,
ஶ்ரீவைஷ்ணவரும் அந்தச் செய்தியைப் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய, பிள்ளையும்
‘உனக்கொரு ஶரீரத்துக்கு ஒர் சத்திடமன்றோ வேண்டுவது? முதலிகள் எழுந்தருளியிருக்க வென்றொரு
கோல் துறையையும் நமக்குத் தாரும்’ என்று திருவுள்ளம் பற்றி யருள,
அவளும் ‘அடியேன் அப்படிச் செய்கிறேன்; தேவரீர் பரமபதத்திலே ஒருகோல்துறை அடியேனுக்குத் தந்தருளவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘தந்தோம்’ என்று அருளிச் செய்ய, ‘அடியேன் ஸாது, அதிலே பெண் பெண்டாட்டி, தருகிறோம் என்று
அருளிச்செய்த வார்த்தையால் போராது, எழுதி எழுத்திட்டுத்தரவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘இவள் இப்படிக்கு கேட்பதே’ என்று மிகவும் திருவுள்ளமுகந்து,
‘இன்ன வருஷம் இன்ன மாஸம் இத்தனையாம் தேதி இந்த அம்மையாருக்குத் திருக்கலிக்கன்றி தாஸன்
பரமபதத்திலே ஒரு கோல்துறை கொடுத்தேன்; இத்தை ஶ்ரீவைகுண்டநாதன் க்ரயம் செலுத்திக் கொண்டு கொடுத்தருளவும்’
என்று ஶாஸநம் எழுதித் தம்முடைய திருவெழுத்தும் சாத்திக் கொடுத்தருளினார்.
பின்பு அந்த அம்மையார் திருமுகத்தையும் வாங்கிக்கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதப்பட்டு
அன்று மற்று நாளும் பிள்ளையை ஸேவித்துக்கொண்டு ஸுகமேயிருந்து, மூன்றாம் நாள் பரமபதத்துக்குப் போனாள்.
ஆகையால் உபயவிபூதியும் ஆசார்யனிட்ட வழக்காயிருக்கு மென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.)

நன்னெஞ்சே –
நல் நெஞ்சே நம் பெருமான்-(திருவட்டாறு பதிகம் )-என்றும்
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்-( 1-10-4 ) -என்றும் சொல்லுகிறபடி
அந்த சரம பர்வ நிஷ்டையை
பிரார்த்தித்துக் கொண்டு போருகிற விலஷணமான நெஞ்சே –
விலஷணர் யுடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சை யுடைய நெஞ்சே –
(சாஸ்த்ர ஜன்ய ஞானம் பஹு கிலேசம் –
ஆச்சார்யர் வாழ்வும் வாக்குமே எளிதில் அனுபவித்து அனுஷ்ட்டிக்கலாம் படி இருக்குமே )

ஊனமற எப்பொழுதும் ஓர் –
அப்படியே சரம பர்வமான ஆச்சார்ய கைங்கர்ய நிஷ்டையை ப்ராபித்துக் கொண்டு
சங்கோசம் அற சர்வ காலத்திலும் அனுசந்தித்திப் போரு-
அசக்ருதாவ்ருத்தி அபேஷா கார்யம் இறே -(விருப்பமுடன் கேட்டு நினைத்து இடைவிடாமல் சிந்தித்து )

இவர் தாம்
அந்நிலையை -என்றும்
தன்னிலையை -என்றும்–பலகாலும் அபேஷித்து அருளுவார் ஆய்த்து –
அதாவது
வடுக நம்பி தன்னிலை -இறே –
(ஆர்த்தி பிரபந்தம் -வடுக நம்பி நிலை மதுரகவி நிலையை அபேஷித்து அருளுவார் )

இப்படி இருக்கிற இவருடைய ஆச்சார்ய அபிமான நிஷ்டையை
தேவு மற்று அறியேன் -என்று இருக்கும் ஸ்ரீ மான்கள் ஆன அதிகாரிகள்
ஸ்ரீ ஆழ்வார் திரு மகளார் ஸ்ரீ ஆண்டாள் -என்று தொடங்கி
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளிலே நம்முடைய ஸ்ரீ ஜீயர் என்னும் அளவாக
இத்தையும் அப்படியே
அந்திம உபாய நிஷ்ட அக்ரேசரான அஸ்மத் பரமாச்சார்யாரும் (பரவஸ்து பட்டர் பிரான் ஜீயரும் )
அருளிச் செய்தார் இறே –

சேஷித்வ
சரண்யத்வ
ப்ராப்யத்வங்கள்
மூன்றும் ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை விஷயத்தில் அனுசந்தித்து
தத் ஏக நிஷ்டராய் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ ஜீயர்
என்று ஸ்ரீ எதிராஜ விம்சதி வியாக்யான பிரவேசத்திலே
ஸ்ரீ அப்பிள்ளையும் அருளிச் செய்தார் இறே-

(ஸ்ரீ எதிராஜ விம்சதிக்கு ஸ்ரீ அப்பிள்ளை வியாக்யானம் உண்டு என்று இங்கே காட்டி அருளுகிறார் )

———————————————————-

கீழே
ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே யுடையனான குருவை அடைந்தக்கால் -என்றும்
ஆன வடிமைகள் செய்யும் நிலையை -என்றும்
(உபாயத்துக்கும் உபேயத்துக்கும் இந்த இரண்டு பாசுரங்கள் )
ஆச்சார்யனையே உபாய உபேயமாக அருளிச் செய்யா நின்றீர் –
அல்லாதார் அடைய
பகவானையே-பிராப்யனாயும் பிராபகனாயும் ஸ்வீகரியா நின்றார்கள்
இவை இரண்டிலும் வழி எது என்று தம் திரு உள்ளத்துக்குக் கருத்தாக
வாக்யத் த்வய உக்த உபாய உபேயங்கள் தான் சரம பர்வ பர்யந்தம் அல்லது இராமையாலே
அதில் தாத்பர்யம் அறியாதார் வார்த்தை அன்றோ அது –
(பூர்வ உத்தர வாக்ய த்வயத்திலேயே திருவடி ஸ்தானம் தானே ஆச்சார்யர் -சரம பர்வ-ததீய பரவந்தமாய் இருக்குமே
அறிந்து அறிந்து தேறி தேறி தாத்பர்யம் உணர வேண்டுமே )

அத்ர பரத்ர சாபிப்படியே அங்கோடு இங்கோடு வாசி அற
ஸ்ரீ ஆச்சார்யன் திருவடிகளிலே உபகார ஸ்ம்ருதி யாவதாத்மா பாவி யாகையாலே-
அங்கே போனாலும் ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய உகப்பே பேறாம் படி அன்றோ
அத்தலைக்கு அடிமை செய்து போருவ்து –
ஆகையாலே ஏதத் விருத்தமான வார்த்தையைக் கேட்டு நீ அஜ்ஞதை அடையாதே
அஞ்ஞான நிவர்த்தகமான பூர்வர்கள் உடைய விலஷணமான அனுஷ்டானத்தை
அநுவிதானம் பண்ணப் பார் ( பின்தொடர்ந்து அனுஷ்ட்டிக்கப் பார் )- என்கிறார் –

ஆச்சார்யர்கள் அனைவரும் முன் ஆசரித்த
ஆசாரம் தன்னை அறியாதார் -பேசுகின்ற
வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள்
சீர்த்த நிலை தன்னை நெஞ்சே சேர் —67-

ஆசரித்த ஆசாரம்-அனுஷ்டித்த அனுஷ்டானம்

சர்வேபி பூர்வ குரவ
சமயேன யேன
தேர் யுக்தம் ஆசன ஆகலயதாம்
வாஸோ வர மானஸ்ய வா ப்ரமித்வம்
வர்த்தஸ்வ
பூர்வ தர தேசிக வர்த்த நேந

(நம்பெருமாள் தேர் என்றால் எம்பார் புனர்வசு திரு நக்ஷத்ரம் முதல் நாளே கொண்டாடுவதை பார்த்து மருளாதே
பிரதம பர்வ நிஷ்டர்களை எடுத்துக் கழிக்கிறார் எடுத்துக் கழிக்கவும் தகுதி வேண்டுமே
உன் அடியார் எல்லார் உடன் ஓக்க எண்ணாதீர் -நம்மாழ்வாரை கழித்தார் போல்
கற்பார் எல்லாம் ராம பிரானை அன்றி மற்றும் கற்பரோ -கண்ணனை கழித்தார் அன்றோ –
மருள் ஒழி நீ மட நெஞ்சே -திவ்ய தேச கைங்கர்யம் -திருவாறன் விளைக்கே அற்று தீர்ந்தாயே முன்பு –
அத்தை எடுத்து கழித்தார் போல் )

ஆச்சார்யர்கள் அனைவரும் -முன் ஆசரித்த ஆசாரம் தன்னை –
அவர்கள் தான் ஒருவர் இருவர் அன்றிக்கே –
ஸ்ரீ மதுர கவிகள் ஸ்ரீ நாத முனிகள் தொடக்கமான
ஸ்ரீ சைலேசர் அளவாக யுண்டான
நம்முடைய ஸ்ரீ ஆச்சார்யர்கள் அனைவரும் பிற்பாடரான நமக்கும் அனுஷ்டேயமாம் படி
முற்காலத்திலே
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி -( 6-10-11 )-என்னும்படி
பரம்பரையாகத் தம் தாம் ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே
தங்களுக்கு உபேயமாகவும்
அவன் திருவடிகளே உபாயமாகவும்
எல்லாரும் ஏக கண்டராக அருளிச் செய்து அப்படியே
ஆசார தீத் யாசார -என்று ஆசரித்துக் கொண்டு போருகிற அந்தப் பரிசுத்தமான அனுஷ்டானம் தன்னை –

(ஆழ்வார் திரு உள்ளம் ப்ராப்யம் திவ்ய தேசம் பிராப்பகம் -அவனும் -கொள்வானே
ஆச்சார்யரைப் பற்றி அவனை அடைவது -முதல் நிலை
அவனைப் பற்றி ஆச்சார்யரைப் பற்றுகிறோம் -நடு நிலை
ஆச்சார்யரே உபாயம் உபேயம் சரம நிலை )

அறியாதார் –
அவர்கள் இடத்திலே உபசன்னராய்–அந்தே வாசிகளாய் இருந்து
அப்யசித்து
கண்டு
கேட்டு–அறியாதார் —

பேசுகின்ற வார்த்தைகளைக் –
கூறும் சமயங்களை ஆறும் குலைய ( ராமானுஜ ) -என்றாப் போலே
(ஏழாம் சமயம் -அவனைப் பற்றி அவனை அடைவது)
கேவல உக்தி சாரமேயாய்-
நிரரர்த்தகமாய்-
ஆபாத ப்ரதீதமாய்-
தங்கள் துர் ஹிருதயதுக்கு தோற்றிற்று ஒன்றைச் சொல்லிலும் –
வார்த்தைகளைக் கேட்டு மருளாதே –

(வார்த்தை மட்டும் அழகு
சிறப்புடன் பூனை இறப்பில் இருந்தால் புறப்பட மாட்டாது
பரண் மேல் பூனை இருந்தால் எலி வராது -யுக்தி மாத்திரம் போல் )

அப்படி அடி அற்று இருப்பதான பிரதிபன்ன பாஷணங்களைக் கேட்டு பிரமியாதே —
அவர்கள் தான் ஆபத்தை போக்கிக் கொள்ளுகிறோம் என்று பிரமித்தும்
உத்க்ருஷ்டராக பிரமித்தும் –
போருவர்கள் – ஆகையால்
அவர்கள் வார்த்தையும் பிரமத்துக்கு உடலாய் இருக்கும் இறே –

கேட்டு அறியாதார் பேசுகின்ற வார்த்தைகள்
ஆகையாலே
அறிவு கேடான மருளை விளைவிப்பதாய் இருக்கும்
பூர்வாச்சார்யர்கள் போதம் அநுட்டானங்கள்
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி -என்கிறபடியே
அவர்கள் தான் தெருள் கொள்ளச் சொல்லுகிறார்கள் அன்றே –
ஆகையால் அறியாதார் வார்த்தைகளைக் கேட்டு புத்தி சலனம் பிறந்து அலமாவாதே -( அலமந்து போகாதே )

பூருவர்கள் சீர்த்தி நிலை தன்னை நெஞ்சே சேர் –
அதாவது
மதுரகவி சரித அநுகாரி மஹித சாரித்ரராய் இருக்கிற பூர்வர்கள் யுடைய நிஷ்டையை
மனசே-ஸூ பிரதிஷ்டமாக அனுசந்திக்கப் பார் -என்கை-

(மதுரகவி ஆழ்வார் -வேதியர் பெரியவர் -சதுர்த்த குல 16 வயசு பிள்ளையாக
நம்மாழ்வார் திருவடிகளில் அன்றோ ஆஸ்ரயித்தார் )

அதுக்கு சீர்மை -யாவது
சீர்த்த மதுரகவி செய் கலையில் பிரதி பாதிக்கப் படுமதான சீர்மை இறே

நிலை யாவது -நிஷ்டை –
அது தான் திரு மந்த்ரத்திலே-பதத் த்ரயத்தாலும் பிரதிபாதிக்கப் படுகிற
சேஷித்வ
சரண்யத்வ
ப்ராப்யத்வங்கள்
ஆகிற ஆகாரத் த்ரயத்தையும்-பிரதம பர்வத்தளவன்றிக்கே
சரம பர்வத பர்யந்தமாக அனுசந்தித்தப் படியே
அந்த பத த்ரயார்த்த நிஷ்டையை யுடையராய் இருக்கும் இருப்பாய்த்து –

இப்படி விலஷணமாய் இருப்பதொரு நிலையை அபேஷித்து இருக்கிற நமக்கு பரிகரமான நெஞ்சே
அந்நிலையை உன்னிடத்திலே சேரும்படி பண்ணப் பார்

அன்றிக்கே
அடை நெஞ்சமே -என்னுமா போலே
அத்தைச் சென்று சேர் என்கிறார் ஆகவுமாம்-

சீரியதான அர்த்தத்தை பர்வத குஹரங்களிலே சேமித்து வைக்குமா போலே
அறியாதார் வார்த்தைகளால் அவிசால்யமாம் படி-
மலை கலங்கிலும் மனம் கலங்காது -என்னும் படியான
தம் திரு உள்ளத்திலே-அந்தச் சீர்த்த நிலையைச் சேரப் பார்க்கிறாரே இவர் தாம்

இத்தால்
ஸ்ரேஷ்ட சமாசாரமே கர்த்தவ்யம் என்றது ஆய்த்து –

———————————————————

நாம் முன் யுக யோகிகள் போல் இல்லாமல் கலி கோலாகலம் செய்யும் இடத்தில்
போகிகளாய் இருக்க -விஷப்பரீஷை இல்லாமல்
த்யாஜ்ய உபாதேயங்களை அறிந்து விட வேண்டியவற்றை விட்டு
பற்ற வேண்டியவற்றை பற்ற வேண்டிய விவேக ஞானம் வேணுமே –
மத்யம பத நிஷ்டரான அவர்களையே பின் தொடர வேண்டுமே –
முக்குணத்தில் இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று -திரு ஏழு கூற்று இருக்கை –

கீழில் பாட்டில் ‘
சிஷ்டாச்சாரமே பிரமாணம் என்று அங்கீகரித்து
இப் பாட்டிலே இப்படி பிரமாணிக அநு ரூபமான அனுஷ்டானங்களை
அருளிச் செய்கிறார் –
(மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் –செய்யாதன செய்யோம் )

நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும்
ஆத்திக நாத்திகரு மாமிவரை -ஓர்த்து நெஞ்சே
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடுச்
சொன்னவரை நாளும் தொடர்–68-

ஏ ஹ்ருதயே தான்
ஏ நாஸ்திகாக விஜஹீதீ
ஏ து மூர்த்தான் ஸ்தான ஆஸ்திக நாஸ்திக
ஏ து ஆஸ்திகாக
நயபதாது ந பரிச்சவந்தே மான
தான் அன்வஹம் பரிஷ் நுவஷ்ய
தமோ அபஹந்ருணு

ப்ராமாணிகர் ஆகையாலே தத் உபய வ்யாவ்ருத்தராய் மத்யஸ்தராய் இருக்கிறவரே
ஆச்சார்ய பரதந்த்ரனாய் இருக்கிற அதிகாரிக்கு
ஆப்தராய்
அங்கீகார யோக்யராய்
அனுவர்த்த நீயராய் இருக்கும் அனுகூலர் படியையும்
இதுக்கு அசலாய் அனங்கீகார விஷயமாய் இருக்கும் அனனுகூலர் படியையும்
அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளம் பற்றி
அது தன்னைத் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –
நாத்திகரும் -என்று தொடங்கி –

நாத்திகர் ஆகிறார்
உள்ளோடு புறம்போடு வாசி அற நாஸ்திகராய் இருக்குமவர்கள் –

ஆத்திகர் ஆகிறார்
உள்ளோடு புறம்போடு வாசி அற ஆஸ்திகராய் இருக்குமவர்கள்

(வேதம் பிரமாணம் அல்ல நாஸ்தி என்னுமவர்கள்
தேகமும் ஆத்மாவும் வேறே வேறே அறியாமல் கர்மம் அடியாக தேகம் என்று அறியாதவர்கள்
அஸ்தி என்பவர்கள் ஆஸ்திகர் )

ஆஸ்திக நாஸ்திகர் ஆகிறார்
புறம்பு ஆஸ்திகரைப் போலேயும் –
உள்ளே நாஸ்திகராய் இருக்குமவர்கள் –
(ஞானம் இருந்தும் வைராக்யம் இல்லாமல் )

அது தன்னை அஞ்ஞனான விஷய பிரவணன் கேவல நாஸ்திகனைப் போலே
ஜ்ஞானவானான விஷய பிரவணன் ஆஸ்திக நாஸ்திகனைப் போலே -(ஸ்ரீ வசன பூஷணம் சூரணை-187)-என்ற இடத்துக்கு
நாஸ்திகன் ஆகிறான் –
தர்ம அதர்ம பரலோக சேதன ஈஸ்வரர்களுக்கு பிரதிபாதகமான சாஸ்த்ரத்தை
பிரமாணம் என்று அறிகையாலே ஆஸ்திகன் -என்றும் சொல்லலாம் படி இருப்பானே
அந்த சாஸ்திர மரியாதையில் அடங்காதே தோற்றிற்று செய்து திரிகையாலே நாஸ்திக சமனாய் இருக்குமவன் –
என்று இப்படி ஸ்ரீ ஜீயர் தாமே வியாக்யானம் செய்து அருளினார் இறே-

(அஜ்ஞானான விஷய பிரவணன் கேவல நாஸ்திகனை போலே –
ஞானவானான விஷய பிரவணன் ஆஸ்திக நாஸ்திகனை போலே –ஸ்ரீ வசன பூஷணம் சூரணை-187–

ஏவம் பூத விஷய தோஷத்தை அறியாமையாலே இதிலே பிரவணனனான அவனுக்கும் –
இத்தை அறிந்து வைத்தே பிரவணனான அவனுக்கும் வாசியை அருளி செய்கிறார் மேல் –

அஞ்ஞான விஷய பிரவணன் ஆகிறான் –
விஷயங்களினுடைய தோஷ பூயஸ்தையும்- ஸ்வரூப விருத்தத்தையும் அறியாதே -அவற்றை ஆசைப் பட்டு மேல் விழுகிறவன் –
கேவல நாஸ்திகன் ஆகிறான் –
தர்ம அதர்ம பரலோக சேதன ஈஸ்வராதிகளுக்கு பிரதிபாதகமான சாஸ்த்ரத்தில் பிரமாணிய புத்தி ஒன்றும் இன்றிக்கே –
ஸ்வரை சஞ்சார பரனாய் திரிகிற சுத்த நாஸ்திகன் –
ஞானவானான விஷய பிரவணன் ஆகிறான்-
விஷயங்களினுடைய தோஷ துஷ்டத்தையும் -ஸ்வரூப விருத்தத்தையும் அறிந்து வைத்தே -அவற்றை விரும்பி மேல் விழுகிறவன் –
ஆஸ்திக நாஸ்திகன் ஆகிறான் –
தர்ம அதர்மாதி சகல பிரதிபாதகமான சாஸ்த்ரத்தை பிரமாணம் என்று இசைகையாலே –
ஆஸ்திகன் என்று -சொல்லலாம் படி இருப்பானாய்-
அந்த சாஸ்திர மரியாதையில் அடங்காதே தோற்றிற்று செய்து திரிகையாலே -நாஸ்திக சமனாய் இருக்கும் அவன் –

கேவல நாஸ்திகனைத் திருத்தலாம்
ஆஸ்திக நாஸ்திகனை ஒரு நாளும் திருந்த ஒண்ணாது –ஸ்ரீ வசன பூஷணம் -சூரணை -188-

த்ருஷ்டாந்தர பூதரான இவர்கள் இருவருக்கும் விசேஷம் எது என்ன –அருளிச் செய்கிறார் –
சாஸ்த்ர தர்மாதிகளிலே பிராமண புத்தி இல்லாத கேவல நாஸ்திகனை நியாய உபதேசத்தால் மெல்ல திருத்தாலும் –
அறிந்தும் உதாசீனனாய் மனம் போலே யதா இஷ்டம் சஞ்சரிப்பவனை கால தத்வம் உள்ளதனையும் சர்வ சக்தனாலும் திருத்த ஒண்ணாது –
அஞ்ஞான சுகம் ஆராத்யா -இசைவடைய செய்யலாம் எளிதாக -களிமண் ஈரமாக இருக்க பானை பண்ணலாமே –
தூங்குபவனை எழுப்பலாம் பாவனை பண்ணுபவனை எழுப்ப முடியாதே –
அதாவது –
சாஸ்த்ரத்தை இல்லை என்று தோற்றிற்று செய்து திரிகிறவனை-
சாஸ்திர ஆஸ்திக்யம் பிறக்கைக்கு உறுப்பான உபதேசங்களைப் பண்ணி –விதி நிஷேத வச்யனாம் படி திருத்தலாம் –
சாஸ்திர ஆஸ்திக்யம் உடையனாய் -தத் பிரதிபாத்ய பிரமேயங்களையும் அறிந்து வைத்து -பாப பயம் இன்றியே –
நாஸ்திகவத் ச்வைரம் சஞ்சரிக்கிறவனை
சொல்லி அறிவிக்க தக்கது ஒன்றும் இல்லாமையாலே -உபதேச முகத்தால் ஒரு நாளும் திருத்த ஒண்ணாது என்கை –
இத்தால் அஞ்ஞான விஷய பிரவணனை –
விஷய தோஷத்வ உபதேச முகத்தாலே விரக்தனாம் படி திருத்தலாம் –
ஞானவானான விஷய பிரவணனை –
விஷய தோஷாதிகளை வ்யக்தமாக அறிந்து வைத்தே ப்ரவர்த்திக்கிறவன் ஆகையாலே –
தத் உபதேசத்தால் ஒருநாளும் திருத்த அரிது என்றது ஆய்த்து-
அஜ்ஞ்ஞஸ் ஸூகம் ஆராத்யஸ் ஸூகதரம் ஆராத்யதே விசேஷஞ்ச –
ஜ்ஞான லவ துர் விதத்தம் பிரஹ்மாபி நரம் நரஞ்சபதி -என்னக் கடவது இறே-
ஆகையால் அவனிலும் இவன் நிக்ருஷ்ட தமன் என்று கருத்து )

நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகர் -ஆவது
ஆஸ்திகோ தர்ம சீலஸ் ச -என்னும்படி
தர்ம அதர்மாதி சகல பிரதிபாதகமான சஸ் சாஸ்த்ரத்தை பிரமாணம் என்று அறிந்து
அந்த மர்யாதையிலே நின்று-
அப்படியே அதில் உக்தமான சத் அனுஷ்டானங்களையும் அனுஷ்டித்துக் கொண்டு போருகிற
பிரமாணிகரான ஆஸ்திகர் -என்கை –
(நற்கலை -வேத ஸாஸ்த்ரங்கள் – நன்னெறி-சன்மார்க்கம் -இரண்டும் வேணுமே -ஆஸ்திகோ தர்ம சீலஸ் ச
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் )

அன்றிக்கே
அத்யாத்ம சாஸ்தரங்களான ஸ்ரீ கீதாதிகளில் ஓதப் படுகிற
உபாய அத்யாவஸ்ய ரூபமான பிரபத்தி மார்க்கத்திலே வழி பட்டு இருக்கிற ஆஸ்திகர் என்று ஆகவுமாம்

ஆஸ்திகனாய் இவ்வர்த்தத்தில் ருசி விச்வாசங்களை யுடையனாய் உஜ்ஜீவித்தல்
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய-(முமுஷுப்படி-275- ) -என்று இறே அருளிச் செய்தது –

(ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசி விச்வாசங்கள் உடையனாய் உஜ்ஜீவித்தல் –
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய நடுவில் நிலை இல்லை -என்று
பட்டருக்கு எம்பார் அருளி செய்த வார்த்தை-(முமுஷுப்படி-275- )

நெறி யறியாதார் -என்று தொடங்கி இறையுரை தேறாதவரும் – (ஞான சாரம் -27 )என்றார் இறே

நெறி அறியா தாரும் அறிந்தவர் பால் சென்று
செறிதல் செய்யாத் தீ மனத்தர் தாமும் -இறை யுரையைத்
தேறாதவரும் திரு மடந்தை கோன் உலகத்
தேறார் இடர் அழுந்துவார் –ஞான சாரம்–27-

நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும்-
ஆகையால் ஸ்வ தந்த்ரனுக்கு அனுரூபமான
ஸ்வர்க்காதி ரூப பல தத் சாதனங்களை பிரதிபாதிக்கிற சாஸ்திரங்களிலும்
ஸ்வ அஹங்கார கர்ப்பமான
பகவத் உபாசனத்தையும்
தத் பலமான பகவத் அனுபவ கைங்கர்யங்களையும்
பிரதிபாதிக்கிற சாஸ்திரங்களிலும் பிரதி பத்தி விளையவும் கூடும்

ததேக போகமான கைங்கர்ய தத் சாதனங்களை பிரதிபாதிக்குமதான –
நற்கலை- யுண்டு பிரபத்தி சாஸ்திரம்
அதில் நன்னெறி யுண்டு -பிராப்ய பிராபக அனுஷ்டானங்கள்
அது தங்களுக்கு கை வந்து இருக்கும் படியான ஆஸ்திக்யம் பிறக்கை அரிதாய் இறே இருப்பது
(சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் )

அன்றிக்கே
நற்கலை என்று
சீர்த்த மதுரகவி செய்கலை யான கண்ணி நுண் சிறுத் தாம்பாய்
அதில் நன்னெறி -என்று
தேவு மற்று அறியேன் -என்றும்
மேவினேன் அவன் பொன்னடி -என்றும்
ஆள்புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -என்றும் சொல்லுகிறபடியே
(ஸ்வரூப ஞானம்-ஓம் -நமஸ் நாராயணாயா -ததீய பர்யந்ததுக்கு இப்பிரமாணங்கள் )
சேஷத்வாதிகளைச் சொல்லுகிற ஸ்ரீ மதுரகவிகளின் யுடைய சன்மார்க்கமான சரம பர்வ நிஷ்டை யாகவுமாம்-
இந்நிஷ்டை யுடைய பரம ஆஸ்திகர்கள் தாம் ஓர் ஒருவர் என்னும் படி அரிதாய் இறே இருப்பது –

ஆத்திக நாத்திகருமாமிவரை -ஓர்த்து –
கீழ்ச் சொன்ன நாஸ்திகாதி த்ரயருடையவும்
ஸ்வரூப ஸ்வ பாவங்களை நன்றாக ஆராய்ந்து –

நெஞ்சே-
இவர்களை விவேகித்து பற்றுகைக்கும் விடுகைக்கும் பரிகரமான நெஞ்சே
அஞ்ஞரையும்
விசேஞ்ஞரையும்
ஞான லவ துர்விதக்தரையும்
நன்றாக விவேகித்து அவர்கள் ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறிந்த பின்பு-

முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு
முன் சொன்ன அப்ரமாணிகரான நாஸ்திகரையும்
பின் சொன்ன பஷ பாதிகளான ஆஸ்திக நாஸ்திகரையும்-
சாஸ்திர மார்க்கத்தில் அடங்காத சஹாசிகர் என்று கை விட்டு –
அதாவது
யத் ப்ரத்யஷம் ததேவ அஸ்தி நாஸ்த் யன்யத் இதி நிச்சிதா
அர்த்த காம பரா பாப நாஸ்திகா தேக கிங்கரா -என்று தொடங்கி
விஞ்ஞான லஷணை ஸ்தான் துஸ் சமயக் வ்யசிதஸ் த்யஜேத் -என்கிறபடியே
இப்படி மூர்க்கரான இவர்கள் இருவரையும் விட்டு
விடுகை கண்டீர் விதி -(ஞான சாரம்-30- )-என்கிறபடியே
சவாசனமாக பரித்யஜித்து -என்கை-

மாடும் மனையும் கிளையும் மறை முனிவர்
தேடும் உயர் வீடும் செம் நெறியும் –பீடுடைய
எட்டு எழுத்தும் தந்தவனே என்று இராதார் உறவை
விட்டிடுகை கண்டீர் விதி –ஞான சாரம்–30-

இனி பற்றப் படுமவர்களைச் சொல்லுகிறது –
நடுச் சொன்னவரை நாளும் தொடர் -என்று –
ப்ராமாணிகர் ஆகையாலே தத் உபய வ்யாவ்ருத்தராய் –
மத்யஸ்தராய் –
இருக்கிறவரையே –
அந்த ஆஸ்திகர் வாசி அறிந்து ஆதரித்துப் போரும் நெஞ்சே
அவர்களை நித்யமாக அனுவர்த்திக்கப் பார் –
அனுவ்ரஜாம் யஹம் நித்யம் -என்கிறபடியே அவர்கள் அடியை தொடர்ந்து திரியப் பார் –

நடுச் சொன்னவரை நாளும் தொடர் –
மத்யமபதோக்தரை-
அதாவது
பிரதம பதத்தில் கழி யுண்கிற தேகாத்ம அபிமானிகளான நாஸ்திகரையும்
சரம பதத்தில் கழி யுண்கிற விஷய சபலரான ஆஸ்திக நாஸ்திகர் போல் அன்றிக்கே
மத்யம பத உக்தமான
தத் ஏக உபாயத்வத்தையும்
ததீய பார தந்த்ர்யத்தையும் யுடையராய்
அவர்களில் அத்யந்த விலஷணராய் இறே ஆஸ்திகர் படி இருப்பது என்கை –

ஆகையால்
ப்ரதிகூலர் ஆனவர்கள் யுடைய ஷண கால மாத்ரமான சஹவாசம்
சத்தையையே நசிக்குமா போலே
இவர்கள் யுடைய ஷண கால மாத்ரமான சம்ஸ்லேஷமும்
சத்தா தாரகமாய் இருக்கையாலும்
சத்தா சம்ருத்திக்கு ஹேதுவாகையாலும்-
சர்வ காலமும் அவர்களை பின் சென்று பிழைக்கப் பார்

அவர்கள் நன்னெறியை யுடையார் ஆகையாலே நீயும்
அன் நன்னெறியிலே நின்று
உஜ்ஜீவிக்கும் படி அவரை நாடொறும் உபசத்தி பண்ணு –

இத்தால்
அனுகூல சஹவாசமும்
பிரதிகூல சஹவாச நிவ்ருத்தியும் சொல்லிற்று ஆய்த்து –

(நாஸ்திக ஆஸ்திகர் என்று சொல்லாமல் ஆஸ்திகர் நாஸ்திகர் என்றது –
ஸத் சம்ப்ரதாயம்-ஸத் கார்யவாதம் -பிரபஞ்சம் -அஸ்தி என்னும் அத்தைச் சொல்லி
அத்தை இல்லை என்பார் -உண்டே –
இல்லவே இல்லை -சொல்ல முடியாதே -முயலும் உண்டு -கொம்பும் உண்டே -முயல் இடத்தில் கொம்பு இல்லை
இங்கு இல்லை இப்பொழுது இல்லை என்றாலே இருப்பதே சித்திக்கும்
எங்கும் எப்பொழுதும் உனக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கிறார் -பிரகலாதன்
நத்யே வாஹம் -இருந்தேன் அல்லேன் என்பது இல்லை -அஹம் ஜாதி ந ஆஸம் இதி ந –
அஸ்தி உறுதிப்படுத்த இரண்டு ந காரங்கள் -)

———————————————————

கீழில் பாட்டில் உக்தமான அனுகூல பிரதிகூல ரானவர்கள் சஹவாசத்தால் பலிக்குமத்தை
ச த்ருஷ்டாந்தமாக
இரண்டு பாட்டாலே அருளிச் செய்கிறார் –
அதில் இப்பாட்டில் அனுகூல சஹவாசத்தால் பலிக்குமத்தைச் சொல்லுகிறது –

(பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்
மரகதக் கல்லை உடைத்தால் பச்சை நிறம் எங்கும் பரவும் )

நல்ல மணம் உள்ள ஒன்றை நண்ணி இருப்பதற்கு
நல்ல மணம் யுண்டாம் நலமது போல் -நல்ல
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்
குணமதுவே யாம் சேர்த்தி கொண்டு—69-

(நலமது போல்–நயமது போல் பாட பேதம் _

ஆமோதவத் குஸூம ஸம்வசல நேன
யத்வத்
ஆமோதவான் பவதி கேச பரோப்ய கந்த
தத்வத் பவந்தி
ஸத்வத் குணவத் ஜன சம்பந்த
பீதா குணர் அபி ஐநா

நல்ல மணம் உள்ள ஒன்றை நண்ணி இருப்பதற்கு நல்ல மணம் யுண்டாம் நலமது போல் –
நல்ல மணமாவது
அல்லாதவற்றின் யுடைய பொல்லாத மணத்தையும் போக்கும்படியான ஸூ கந்தத்தை யுடைத்தாய் இருப்பதொன்று –
அதாவது
ஆமோ தவத் குஸூம ஸம்வசல நேன யத்வத் ஆமோதவான் பவதி கேச பரோப்யகந்த -என்கிறபடியே
ஸ்லாக்கியமான பரிமளத்தை யுடைய புஷ்பத்தை சேர்ந்து இருப்பதொரு கேச பாரத்துக்கு தன்னுடைய
ஸ்வ பாவமான சிக்கு நாற்றம் போய்
மணங்கள் நாறும் வார் குழலார் -என்னும்படி பரிமள பிராசுர்யம் யுண்டாம் ந்யாயம் போலே –

நல்ல குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக் குணமதுவே யாம் சேர்த்தி கொண்டு –
நறிய நன்மலர் -( திருவாய் 5-5-11 )-என்கிறபடியே
சேஷத்வ ஞான பரிமளத்தை யுடையராய்
ஜ்ஞான பக்த்யாதி சத் குண யுக்தராய் இருக்குமவர்கள்
தங்களுடனே சஹவாசம் பண்ணி இருப்பாருக்கு அவர்கள் யுடைய சஹவாச ரூபமான சம்பந்தம் கொண்டு
அஞ்ஞான கந்தம் இன்றிக்கே-
அந்த ஸ்லாக்கியமான குணமே சித்திக்கும் –

மணத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் விரும்புமா போலே
சேஷம் என்று ஆத்மாவை ஆதரிக்கிறது –(ஸ்ரீ முமுஷுப்படி-சூரணை -71)

ஒரு செய் நிரம்ப நீர் நின்றால்-என்று தொடங்கி
உறாவுதல் தீரக் கடவதாய் இருக்கும் -(ஸ்ரீ வசன பூஷணம் -சூரணை -260-)-என்று இறே அருளிச் செய்தது –

(ஒரு செய் நிரம்ப நீர் நின்றால் அசல் செய் பொசிந்து காட்டுமாப் போலே இவை இல்லாதார்க்கும்
இவர்களோட்டை சம்பந்த்தாலே வுறாவுதல் தீரக் கடவதாய் இருக்கும்–ஸ்ரீ வசன பூஷணம் -சூரணை -260-

இவர்களோட்டை ஸஹ வாசத்தால் சித்திக்கும் அது எது -என்ன அருளி செய்கிறார் –
அதாவது
ஒரு வயலிலே நிறைய நீர் நின்றால் -நீரற்று உறாவிக் கிடக்கிற அசல் வயல் –
தத் அசலாக இருப்பதாலே வந்த பொசிவாலே வாட்டம் அற்று கிடக்குமா போலே –
ஞான பக்தி வைராக்யங்கள் ஆகிய இவை இல்லாமையாலே ஸ்வரூபம் உறாவிக் கிடக்கிறவர்களும்
இவற்றால் பரி பூர்ணரான இவர்களோட்டை ஸஹவாச ரூப சம்பந்த்தாலே இவற்றிலே சிறிது அந்வயம் உண்டாய் –
இவை நேராக இல்லாமையால் -உண்டான வுறாவுதல் தீரக் கடவதாய் இருக்கும் -என்கை-
ஞானாதிகள் இல்லாத குறை தீரும் / உகந்தவன் உகந்து மடை விடவே விளைவது ஒரு நல்ல வயல் செய்யில் -நிரம்ப நிரந்தரம் நீர் நின்றால் –
உடையவன் உபேக்ஷிக்கும் அசல் செய் -உபேக்ஷை அடியாக ஞானாதிகள் பசை அற்று -உலர்ந்த சம்சாரிக்கும் அந்த ரக்ஷகனான பூர்ண கடாக்ஷத்தாலே
ஸ்ரீ வைஷ்ணவ தர்சன ஸ்பர்ச மாத்திரத்தாலே -ஞானாதி பசை இல்லா உறாவுதல் தீர –வறட்சி கெட தோன்ற பொசிந்து காட்டுமா போலே–
நெஞ்சப் பெரும் செய்யை யுடையவராக கடவதாய் இருக்கும் –மடல் எடுக்க பாரித்த திருவாய்மொழி காதல் கடல் புரைய விளைவித்த காரமர் கண்ணன் –
அனுகூலர் சஹ வாசத்தால் ஞானாதிகள் நமக்கும் உண்டாகும் -என்றவாறு -ஸஹ வாச ரூப சம்பந்தம் -தர்சனம் ஸ்பர்சம் வேண்டுமே )

ஆக இத்தால்
இவனுக்கு யுண்டான சத் குணங்களும்
சத்துக்கள் யுடைய சஹவாசத்தாலே சம்பவிக்கும் -என்றது ஆய்த்து –

ஸ்ரீ பாகவத சம்ச்லேஷம் –
ஸ்ரீ பகவத் சம்ஸ்லேஷத்தையும் பிறப்பித்து
அபாகவாத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து-( பிறப்பித்து )
இவனையும் கரை மரம் சேர்த்து விடும் -என்று இறே ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்திற்று –
சத் சங்காத் பவதி ஹி சாதுதாகிலா நாம் -என்னக் கடவது இறே –
(ஸத் சங்கம் நிஸ் சங்கம் -ஸத் சங்கமே விஷயாந்தர ப்ராவண்யம் கழிக்குமே )

—————————————————–

கேசவன் தமர் -இருபத்து ஏழு தலைமுறைகளுக்கும் பலித்ததே நம்மாழ்வார் மேல் கடாக்ஷித்தது –
விபீஷணன் அங்கீ கரிக்கப் பட்டதுமே கூட வந்த நால்வரும் கைக்கொள்ளப் பட்டார்கள் –
ராவணன் கூட இருந்ததே காரணமாக அனைவருக்கும் தாழ்ச்சி
வாழ்ச்சியும் தாழ்ச்சியும் ஸஹ வாசித்தாலே பலிக்குமே –

இதில்
பரி த்யஜ்யரான பிரதிகூல சஹவாசத்தாலே பலிக்குமத்தை அருளிச் செய்கிறார் –

தீய கந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்து இருப்பது ஒன்றுக்குத்
தீய கந்தம் ஏறும் திறமது போல் -தீய
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பாருக்குக்
குணமதுவேயாம் செறிவு கொண்டு —70-

செறிவு-சம்பந்தம் –
நாற்றம் வாசனை -பொதுவாக துர் நாற்றம் நல்ல வாசனை லோகத்தில் தப்பாக
நாற்றத்துழாய் -ஸப்த பிரயோகம் உண்டே
தீய கந்தம் -மணிப்பிரவாளம் -கீழே நல்ல மணம் -ஸூத்த தமிழ்
குணம் -சமஸ்க்ருதத்தில் இருந்து வந்த தமிழ் சொல்

ஏதி பூதி கந்தம் நிலனம்
சமுபைதி வஸ்து
தத் பூதி கந்தம் அதிராத் உபஜாயதேஹி
ஏதத் க்ரமேண
ரமணீய குணோபி லோபே
நிந்தியான் குணான்
பஜதி நிந்த்ய குணாஸ்ரயேண

தீய கந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்து இருப்பது ஒன்றுக்குத் தீய கந்தம் ஏறும் திறமது போல் –
ஹேய கந்தாஸ்பதமாய் இருப்பதொரு
லசு நாதி (லசனும்-பூண்டு ) பதார்த்தத்துக்கு கிட்ட இருப்பதொரு ஸூகந்த பதார்த்தத்துக்கும்
தத் சம்சர்க்கத்தாலே அதில் யுண்டான ஸூகந்தம் போய்
ஹேய கந்தமானது நாள் தோறும் அதிலே ஏறி வரும் பிரகாரம் போல் -என்கை –

அதுதான் ஸ்வ சமீப மாத்திர சம்பந்தத்தாலே அல்லாதவற்றின் யுடைய
சத் கந்தத்தையும் சவாசனமாகப் போக்கி
தத் கந்தத்தைத் தந்து தன்படியாய் ஆக்குமதாய் இருப்பது ஓன்று இறே –
(தர்ம புத்திரர் -கர்ணன் விஷயத்தில் கண்டோமே )

தீய குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பாருக்குக் குணமதுவேயாம் செறிவு கொண்டு –
அப்படியே
ஹேய குண யுக்தராய் இருக்குமவர்களுடன் சம்சர்க்கித்தவர்களுக்கும் அந்த ஹேய குணம் யுண்டாம்
அவர்கள் யுடைய பிணக்கைக் கொண்டு அபாகவாத சம்ஸ்லேஷத்தையும்
பாகவத விஸ்லேஷத்தையும் பிறப்பித்தும்
இதில் பரித்யஜ்யரான
பிரதிகூல சஹவாசத்தாலே பலிக்குமத்தை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ பகவத் விஸ்லேஷத்தையும் பிறப்பித்து இவனையும் முடித்து விடும் -என்று இறே
இதுக்கும் ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது –

சதாம் அசேவநாத் நித்யம் அசதாம்ச நிஷேவணாத் ஷீயந்தே ச
அத நஸ்யந்தி ஜ்ஞான வைராக்ய பக்த்ய -என்னக் கடவது இறே –

ஆக இத்தால் –
அசத்துக்கள் ஆனவர்கள் சஹவாசத்தாலே
சேஷத்வாதி குணங்கள் வேரோடு போய்
அசந்நேவ-என்னும் படியாய் இறே ஆவது என்றதாயிற்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading