உய்ய நினைவுடையீர் என்று கீழே இவராலே உபதேசிக்கப் பட்டவர்கள் (56-57)
இந்த உபதேசம் பலித்தவாறே-
ஸ்ரீ வசன பூஷணத்தின் ஆழ் பொருளைக் கற்றும் -என்றும்
ஸ்ரீ வசன பூஷணத்தின் வான் பொருளைக் கல்லாதது என்னோ -என்றும்
இப்படி அதன் அர்த்தத்தை நாங்களும் அறிந்து உஜ்ஜீவிக்கும்படி
அந்வய வ்யதிரேகங்களாலே பல காலும் அருளிச் செய்யா நின்றீர் –
(நம் கண்ணன் கண் அல்லாதோர் கண்ணே -அன்வயம் வ்யதிரேகம்
முதல் ஆழ்வார்கள் அன்வயமாகவும் திருமழிசை ஆழ்வார் வியதிரேகமாகவும்
நம்மாழ்வார் இரண்டாலும் அருளிச் செய்தார்களே
அதே போல் கீழே இரண்டு பாசுரங்களும்)
நாங்கள் அதில் அர்த்த க்ரஹணம் பண்ணும் உபாயம் என் என்ன –
ஆகில் சத் சம்ப்ரதாய நிஷ்டராலே ஸ்லாகநீயமான வியாக்யானம் யுண்டாகில்
அத்தை அதிகரித்து
அம் முகத்தாலே அறியுங்கோள் என்கிறார் –
(உண்டாகில்-என்பதால் துர்லபம் -மா முனிகள் காலத்திலும் பலவும் இருந்ததாகவும்
அவை லுப்தமாகவும் இருந்தமை தோற்றும் –
நாலூர் ஆச்சான் பிள்ளையும் ஸ்ரீ வசன பூஷணத்துக்கு வியாக்யானம் செய்து அருளினார் என்பர் –
அது லுப்தம் இப்பொழுது –
இப்பொழுது ஆய் ஸ்வாமிகள் மா முனிகள் வியாக்யானங்களே உள்ளன )
அன்றிக்கே
அபேஷா நிரபேஷமான தத் அர்த்த விஷயமாக வியாக்யானம் யுண்டாகில்
அத்தையும் நிரூபண முகேன அறிந்து
ஆதரியுங்கோள் என்கிறார் ஆகவுமாம்-
சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால்
மெச்சும் வியாக்கியை தான் யுண்டாகில் –நச்சி
அதிகரியும் நீர் வசன பூஷணத்துக்கு அற்ற
மதியுடையீர் மத்தியத்தராய் –58-
அற்ற-அற்றுத் தீர்ந்த
நச்சி அதிகரியும்-விரும்பி அந்வயிக்க வேண்டும்
மத்யஸ்தர் -பேச்சுப்பார்க்கில் கள்ள பொய் நூல்களும் க்ராஹ்யம்
பிறவி பார்க்கில் அஞ்சாம் ஒத்தும் ஆறு மூன்றும் கழிப்பனவாம் –
ஸச் சம்பிரதாய ஸ்துதியா
சதத உபலால்யா
லப்யதே சேத்
வசன பூஷண வாக்ய ஸீதா
ச வ்யஞ்ஜபி ஸகல மர்த்தயா பதார்த்த ஜாதம்
மத்யஸ் யைவ தசயா நநு பாவயநீய-
சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் –
அதாவது-
ஓதி-ஓதுவித்து-ஆதியாய் வரும் அந்தணர் அறா திருவாலி –என்கிறபடியே
விச்சேதியாத சத் சம்ப்ரதாயத்திலே சம்பத்தை யுடையராய்
தம்மைப் போல-
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-
வாக்யா லங்க்ருத வாக்யாநி வ்யாக்யாதரம் (தினசரி )-என்றும்
(வாக்யா லங்க்ருத–ஸ்ரீ வசன பூஷணம் -கால ஷேபம் செய்து அருளும்
மா முனிகளை நான் வணங்குகிறேன் )
வாக்ய சங்கதி வாக்யார்த்த தாத்பர்யாணி யதா ஸ்ருதம் வ்யாகுர்வன்னேவ பூர்வேஷாம் வர்த்தமான
பதே பதே ஸ்வ மநீஷீ கயா நைவ கல்பயன் கிஞ்சிதபி யயம் குப்தான் சர்வான்
குருதவேன கூடா நர்த்தான தீத்ருசத் -என்றும் சொல்லுகிறபடி
(வாக்ய சங்கதி -தொடர்பு
வாக்யார்த்த தாத்பர்யாணி -தாத்பர்யஅர்த்தம்
யதா ஸ்ருதம் வ்யாகுர்வன்னேவ பூர்வேஷாம் வர்த்தமான
பதே பதே -பூர்வர் நிர்வாகம்படியே
ஸ்வ மநீஷீ கயா நைவ கல்பயன் கிஞ்சிதபி யயம் குப்தான் -கொஞ்சம் கூட தானே கல்பிக்காமல்
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல்
சர்வான் குருதவேன கூடா நர்த்தான தீத்ருசத்-மறைந்து கிடந்த பொருள்களை பரம காருண்யத்தால் வெளியிட்டு அருளி )
ஸ்ரீ வசன பூஷண வியாக்யான ( விலஷணராய் ) விசஷணராய்
ஆச்சார்ய சந்நிதியிலே அநவரத ஸ்ரவணத்தை யுடையராய்
இருக்குமவர்கள் ஸ்ரவித்தக்கால் -என்கை –
(வர வர முனி சம்பு -கத்யம் பத்யம் இரண்டும் கலந்து -ராமாநுஜ சம்புவும் உண்டாம்
கேட்டக்கால் -கேட்பித்துக்கால் என்றபடி )
சச் சம்ப்ரதாய அர்த்தங்கள் எல்லாம் விசதமாகக் கை வந்து இருக்கும் படியான
மதிப்பை யுடையராய் இருக்கும் தாங்கள் கேட்டக்கால் –
மெச்சும் வியாக்கியை தான் யுண்டாகில் —
அதாவது –
ஸ்ரீ சீதா சரிதமான ஸ்ரீ ராமாயணத்தைக் கேட்ட விசேஷஞ்ஞர் எல்லாம்
அஹோ கீதஸ்ய மகாத்மியம் -என்று ஆதரித்தால் போலேயும் -(ஹஸித்தம் பாஷிதம் சைவ இத்யாதி )
செவிக்கினிய செஞ்சொல்லான ஸ்ரீ திருவாய் மொழியை-கேட்டாரார் வானவர்கள்-( 10-6-11 ) -என்றால் போலேயும்
சுத்த சம்ப்ரதாய பிரவர்தகர் ஆனவர்கள் இத்தைக் கேட்டு
இதுவும் ஒரு வியாக்யானம் இருந்த படியே என்ற ஈடுபட்டுக் கேட்குமதான வியாக்யானம் தான் யுண்டாகில் –
(வல்லர் என வல்லவர் -ஸ்ரேஷ்டர் ஸ்லாக்யிக்கும் படி )
அன்றிக்கே –
மெச்சும் வியாக்கியை தான் –
என்று மதிப்பானவர்கள் மதிக்கும் படியான வ்யாக்கியை தான் -என்னவுமாம் –
(ஈடுபாடும் மதிப்பும் வேண்டுமே -தடை இருந்தாலும் விலக்காமைக்கு ஈடுபாடும்
நச்சு அணுக மதிப்பும் -ஆக இரண்டும் வேண்டுமே )
வசன பூஷணத்துக்கு அற்ற மதியுடையீர் –
என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் அற்றுத் தீர்ந்த மதி யுடையீர் -என்னவுமாம் –
வசோ பூஷோ வியாக்யா ருசிர வர யோகீந்திர ரசிதா
வசோபிஸ் சர்வேஷாம் வர நிகம சாரசாஸ்
ஸூ பஹூளா கம்பீரா வாக்யார்த்தைரபி பவிதசத் சங்கதி கணை பிரசன் நாமே
ஸ்வார்த்தம் பிரகடயது தஸ்யைவ க்ருபயா (வர வர முனி காவ்யம் )-என்னக் கடவது இறே —
(வசோ பூஷோ வியாக்யா ருசிர வர யோகீந்திர -ஸ்ரீ வசன பூஷண வியாக்யாதா வான ஸ்ரீ மா முனிகள்
ரசிதா வசோபிஸ் சர்வேஷாம் வர நிகம சாரசாஸ்- அனைத்து வேதாந்த அர்த்தங்கள் சாரங்கள்
ஸூ பஹூளா கம்பீரா வாக்யார்த்தைரபி பவிதசத் சங்கதி கணை -நிறைந்த ஆழமான அர்த்தங்கள் -தொடர்பு கூட்டங்களை
பிரசன் நாமே ஸ்வார்த்தம் பிரகடயது தஸ்யைவ க்ருபயா—பரம கிருபையால் சாந்தமான மனஸ்ஸால் அர்த்தங்களை வெளிப்படுத்தட்டும் )
ஆகில் –
என்கிற எதி சப்தத்தாலே-அதனுடைய தௌர்லப்யம் தோற்றுகிறது –
அப்படி அலப்யமானது லபித்ததாகில்
நச்சி அதிகரியும் நீர் –
வசன பூஷண அதிகாரிகளாய்
உஜ்ஜீவிக்க வேணும் என்கிற இச்சை யுடைய
நீங்கள்
இத்தை விருப்பத்துடனே அதிகரியுங்கோள்-
கல்லாதது என்னோ கவர்ந்து -என்ன வேண்டாத படி யாய்த்து இப்போது இவர்க்கு –
வசன பூஷணத்துக்கு அற்ற –
ஸ்ரீ வசன பூஷணதுக்கு-மெச்சும் வ்யாக்யானமாய் இருக்கு மதானவற்றை –
(ஏற்ற என்றபடி )
மதி யுடையீர் மத்தியத்தராய் —
நச்சி அதிகரிக்கும் இடத்து-விவேக பரிகரமான மனசை யுடைய நீங்கள்
மத்யஸ்த பாவனையாலே-
அர்த்தத்தின் சீர்மையை ஆராய்ந்து பார்த்து
உங்கள் அதிகாரி பூர்த்திக்கு உடலாக அதிகரியுங்கோள் –
இத்தால்
சச் சம்ப்ரதாய சம் உக்தரான ஸ்ரீ ஆச்சார்யகளாலே ஆதரணீயமான வ்யாக்யானமே
சத் பரிக்ராஹ்யம் என்றது ஆய்த்து –
சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி
அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –
மாறில் முடும்பை யுலகாரியன் வசனக் கலனும்
மாறன் கருத்தின் மணவாளன் வார்த்தையும்
வல்லிருக்கைச் சீறும் படி திருத் தாழ்வரைத் தாதன்
தெரிந்து எனக்குத் தேறும்படி யுரைத்தான்
திருத் தாள்கள் என் சென்னியதே -என்றும் -வசனக் கலனும்-(வசன பூஷணமும் )
ஆச்சார்ய ஹ்ருத் சம்ஜ்ஞ நிபந்தநஸ்ய வியாக்யாம் அகார்ஷீத்-என்றும் சொல்லக் கடவது இறே
ஸ்ரீ வசன பூஷண
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயங்கள் ஆகிற
ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களுக்கு பிரதம வியாக்யானம் செய்து அருளியவர்
ஸ்ரீ திரு நாராயணபுரத்து ஆயி இறே
அவை அடி ஒத்தி இறே மற்றை வ்யாக்யானங்கள் யுண்டானது –
அவர்களோபாதி
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
அவர் -(ஸ்ரீ ஆய் ஸ்வாமியும் )
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடக்கமான சகல பிரபந்தங்களுக்கும்
ஸ்ரீ வசன பூஷணாதி திவ்ய ரஹஸ்யங்களுக்கும் அர்த்தம் கேட்டார் -என்று பிரசித்தம் இறே —
அதிஷ்டித சதுர் க்ராமாசார்யா தேவ பதேர் குரோ
சாஹார்த்தைர் லேபிரே யேன சர்வேச த்ராவிடாகமா-என்னக் கடவது இறே-
(தேவ பதேர் -நாலூர் ஆச்சான் பிள்ளையே தேவப் பெருமாள் )
(பூர்வர் வியாக்யானங்கள் இருந்தால் மா முனிகள் பண்ண மாட்டார் –
பெரியாழ்வார் திருமொழி -வியாக்யானத்தில் பார்த்தோம் –
ஆய் ஸ்வாமி வியாக்யானம் இருக்க -செய்தமை –
சம காலத்தவர் என்று இருக்கலாம் -இருவரும் சந்தித்தது உண்டே –
ஞான சதுர்த்திகள் மேலே -ஸூத்ரம்
இரண்டு நிர்வாகங்கள்
ஆய் ஸ்வாமி -காட்டி -பொருந்த வில்லை என்று அருளிச் செய்து -வேறே நிர்வாகம் காட்டி உள்ளார்
அவரை சந்தித்து பேசியபின்பு அவர் நியமனம் அடியாகவே செய்து இருக்கலாம்
அதே போல் ஸ்ரீ வசன பூஷணம் வியாக்யானங்களிலும் வாசி உண்டே
நடு நிலையில் இருந்து நீங்கள் பார்த்து கைக்கொள்ள வேண்டும் என்று இங்கே அதனாலே உண்டே
இனி இனி -20 பாசுரங்களில் வேறே வேறே பாசுரங்கள் ஆய் ஸ்வாமி காட்டி உள்ளார் –
மா முனிகளுக்கு விளாஞ்சோலை பிள்ளை இடம் கேட்டு திருவாய் மொழிப் பிள்ளை பெற்ற ஏற்றம் உண்டு –
வேளுக்குடி வரதாச்சார்யர் சதாபிஷேக ஸ்வாமிகள் இது பற்றி முன்பே பேசி உள்ளார்கள் –
பெரியாழ்வார் திருமொழிக்கு திருவாய் மொழிப் பிள்ளை -வியாக்யானமாக இன்று உள்ளது அவரது இல்லையாய் இருக்கலாம்
அவர் சந்ததி -இன்றும் திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமி என்றே உண்டு –
இது ஒண்ணான அவரது இல்லை என்று காஞ்சி ஸ்வாமிகள் சொல்வார்
மா முனிகளுக்கு பின் உள்ளார் செய்ததாக இருக்கலாம் )
——————————————————–
ஸ்ரீ வசன பூஷணமாம் தெய்வக் குளிகை பெற்றோம்
பாருலகைப் பொன்னுலகாப் பார்க்க வல்லோம் ( யதீந்த்ர ப்ரவண பிரபாவம் )-என்கிறபடியே
தம்முடைய பரம கிருபையாலே பரோபதேசம் பண்ணி
சத்கார சஹவாச யோக்யர் ஆனாரையும் திருத்தி –
இனி
தம் உபதேச நிரபேஷமாக திருத்தின சத் ஸதா அனுபவ யோக்யரான ஆச்சார்யர்களைப் பார்த்து
இதன் ரஸ்யதையை அவர்கள் உடன் பேசி அனுபவிக்கிறார் –
அன்றிக்கே –
தம் உபதேசம் கேட்டு திருந்தினவர்களை ஸ்ரீ ஆரியர்காள் -என்று கௌரவ்யதை தோற்ற
அருளிச் செய்கிறார் ஆகவுமாம் –
(நஞ்சீயரை பட்டர் கொண்டாடினால் போலவும்
பொலிக பொலிக பொலிக என்று தம்மால் திருந்திய ஸமூஹம் கண்டு
மங்களா சாசனம் பண்ணிய நம்மாழ்வார் போலேயும்
கண புரம் -கை தொழும் பிள்ளையை பிள்ளை என்னப் பெறு வரே —
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே )
ஓத வல்ல பிராக்கள் நம்மை யாளுடையார்கள் பண்டே -(3-7-3-)-என்றும்
ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் பின் -என்றும்
அருளிச் செய்தால் போலே இவர் தாம் தம்முடைய சிஷ்ய பிரசிஷ்யர்களை
மத் குரு என்றும்
நம் இறைவர் என்றும் இறே அருளிச் செய்து போருவ்து –
சீர் வசன பூஷணத்தின் செம் பொருளைச் சிந்தை தன்னால்
தேறிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம்–ஆரியர்காள்
என் தனக்கு நாளும் இனிதாகா நின்றது ஐயோ
உம் தமக்கு எவ்வின்பம் உளதாம் —-59-
சார்த்தா ஸ்மராமி
யதி வசன பூஷணாதி
வாஸோ வதாமி
யதி வா மதுரா மமாபி
ஆர்யா கதன்னு பவதாம் மனஸ் ப்ரஸன்ன
பூம்னா த்யோகி
விஷய அதிசயவாஹஹா
சீர் வசன பூஷணத்தின் செம்பொருளைச்-
அந்யருக்கு ஆழ் பொருளாய் -அரிதாய் -இருக்குமது-
தமக்கு செம்பொருள் என்று
செவ்வியதாய் இருக்கிறபடி –
செம்பொருளைச் சிந்தை தன்னால் தேறிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம்–
நெஞ்சாலே நிரூபிக்கிலுமாம்–
வாக்காலே அனுசந்திக்கிலுமாம் இதிலொரு நிர்பந்தம் இல்லை –
ஏதேனும் ஒரு காரணத்தாலே அனுசந்திக்கப் பெறிலும்
நித்ய அபூர்வமான போக்யமாய் இருக்கும் –
(எங்கனே சொல்லினும் இன்பம் பயக்கும் )
சாரார்த்த சங்க்ரஹம் ஆகையாலே
சதா அனுவர்த்தனம் பண்ணுகிற மனசுக்கு இனிதாய் இருக்கும் –
மகா ரச வாக்ய ஜாதம் -ஆகையாலே
வாக்குக்கு இனிதாய் இருக்கும்
இவர் மனத்தாலும் வாயாலும் கவர்ந்து அனுபவிக்கிறார் –
கீழில் அவர்களை இறே (சத்கார சஹவாச யோக்யர் ஆனாரை)
கல்லுங்கோள் சொல்லுங்கோள் -என்று விதிக்க வேண்டுவது –
தமக்கு அங்கன் அன்றிக்கே
இது பள்ள மடையாய் இருக்கிறபடி –
கற்று அதனுக்காம் நிலையில் நில்லும் -என்றும்
சிந்தை தன்னால் கல்லாதது என்னோ கவர்ந்து -என்றும் சொல்லக் கடவது இறே –
ஆரியர்காள் என் தனக்கு நாளும் இனிதாகா நின்றது ஐயோ –
செஞ்சொற் கவிகாள் -என்னுமா போல
இதில் அனுபவத்துக்கு தேசிகராய் இருக்குமவர்களே -என்கிறார் –
(அண்ணிக்கும் அமுதாகும் என் நாவுக்கே –
நான் கண்ட நல்லதுவே போல் )
என் தனக்கு நாளும் இனிதாகா நின்றது –
உங்களைப் போல் பேரளவுடையன் அன்றிக்கே
அடியேன் சிறிய ஞானத்தன்-( 1-5-7 )-என்கிறபடியே
அத்யல்ப ஞானத்தை யுடையனாய் இருக்கிற எனக்கு –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே -(2-5-4)-என்கிறபடியே
தொண்டர்க்கு அமுதான-(9-4-9)
ஸ்ரீ வகுள பூஷண வாக் அம்ருதத்தின் யுடைய சாரமான ஸ்ரீ வசன பூஷணமானது
நித்ய அபூர்வமுமாய்
நிரதிசய போக்யமுமாய்
இரா நின்றது –
விதி வாய்க்கின்று காப்பாரார் ஐயோ கண்ணபிரான் -( 5-1-1 ) -என்னுமா போல
ஹர்ஷ பிரகர்ஷத்தால் யுண்டாம தொரு பாசுரம் —
ஆரியர்காள் உம் தமக்கு எவ் வின்பம் உளதாம் –
ஆர்ய போகமாய் இருக்கிற இதடியாக ததேக போகராய் இருக்கிற உங்களுக்கு
எவ்வளவு ஆனந்தம் யுண்டாம்
அங்கே யுண்டான ஆனந்தம் இவர்க்கு இதடியாக இங்கே யுன்டாகிற படி
அது தான் இன்ப மிகு விண்ணாடு இறே –
உம் தமக்கு எவ்வின்பம் உளதாம் —
எனக்கு என்னளவிலேயாய் இருக்குமா போல
உங்களுக்கும் உங்கள் அளவுகளிலேயாய் இராதோ
வைதேஹி ரமஸேகச் சித்ர கூடே மயா சகா -என்னுமா போலே
(மூவருக்கும் -ஆனந்தம் துல்யம் -ஹேதுக்கள் வேறே வேறே போல் )
சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தைக் கண்டால் போல கண்டு
அவர்களோடு அதில் அனுபவ ரஸ்யதையை அநு பாஷித்து அருளுகிறார் ஆகவுமாம் –
இது தான் எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும் -ஸ்ரீ திரு வாய் மொழியில் படி யாய்த்து –
இத்தால்
இதனுடைய நிரதிசய போக்யதா அதிசயத்தால் யுண்டான
வைபவம் சொல்லிற்று ஆய்த்து-
——————————————-
ஸஸ்த்ர பாணியாக அவனே ஆச்சார்யராக திரு அவதாரம்
ஆச்சார்யர் மூலம் அவனை அடைவது முதல் நிலை
ஆச்சார்யர் மூலம் ஆச்சார்யரை அடைவதே இறுதி நிலை
அத்ர பரத்ர சாபி -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதே சாரார்த்தம் –
இத்தை புரிய வைக்கவே -60-70- -ஆச்சார்ய வைபவம் சொல்லும்
ஸ்ரீ வசன பூஷண ஸாரார்த்தங்களை 11 பாசுரங்களால் ஸ்வாமி வெளியிட்டு அருளுகிறார் –
ஆக ஸ்ரீ வசன பூஷணத்துக்காகவே –18 பாசுரங்களும் அதுக்கும் முன்பாக —
மூன்று 50-52-பாசுரங்கள் பிள்ளை லோகாச்சார்யார் வைபவம்
ஆக கீழ் (ஏழு பாசுரங்களில் )
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யராலே நிர்மிதமான ரஹஸ்யங்களில்
1-ஸ்ரீ வசன பூஷணத்துக்கு யுண்டான அப்ரதிம வைபவத்தையும்-(53)
2-அதுக்கு ஸ்ரீ வசன பூஷணம் என்று திரு நாமம் ஆகைக்கு அடியையும் -(54 )
3-ஏதத் அர்த்த அபிஞ்ஞரும் அனுஷ்டாதாக்களும் ஏகைக புருஷர் என்னுமத்தையும் -(55)
4-ஏதத் அர்த்த க்ரஹண விஷயமாக பரோபதேசம் பண்ணி யருளியும்-(56)
5-இதின் அர்த்தத்தை அபி நிவேசத்துடன் அதிகரியாமைக்கு ஹேது சிந்தனையும்-(57)
6-ஏதத் விஷயமாக விலஷண பரிக்ரஹ வியாக்யானம் யுண்டாகில் அது அங்கீகாரம் என்னுமத்தையும்-(58 )
7-இது தான் ஸ்வ பர விபாகம் அற நிரதிசய போக்யமாய் இருக்கும் என்னுமத்தையும்-(59 )
தர்சிப்பித்தாராய் நின்றார் –
இனி (மேல் எல்லாம் )
ஸ்ரீ வசன பூஷணம் ஆகிற இந்த திவ்ய பிரபந்தத்திலே
வேதார்த்தம் அறுதி இடுவது (1)-என்று தொடங்கி-
அத்தாலே அது முற்பட்டது (4)-என்னும் அளவாக
பிரதிபாத்ய அர்த்தங்களுக்கு எல்லாம் பிரமாணங்களை ஒருங்க விட்டு
(வேதம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலே–சூரணை-1–
ஸ்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –சூரணை-2-
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –சூரணை -3-
அத்தாலே அது முற் பட்டது –சூரணை -4-
அதே போல் இங்கும் முதல் 29 பாசுரங்களில் தமிழ் வேதங்களையே ப்ரமாணமாகக் கொண்டு என்றபடி )
இதிஹாச ஸ்ரேஷ்டம்-( 5 ) என்று தொடங்கி
ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே இப் பிரசங்கம் தான் உள்ளது -என்று
உக்தார்த்தை இதுக்குக் கீழ் நிகமித்து
(இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-சூரணை -5-
ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-
இப்ப்ரசங்கம் தான் உள்ளது –சூரணை-407-
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் உக்த அர்த்தம் )
அவர்களைச் சிரித்து இருப்பார் யுண்டு இறே
அவர் பாசுரம் கொண்டு இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் என்று -(சூரணை- 409 )
சரம பிரமேயத்துக்கு சரம பிரமாணத்தை ஒருங்க விட்டால் போலே
(சரம பிரமேயம்-ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்
சரம பிரமாணம்-கண்ணி நுண் சிறுத்தாம்பு )
இவரும்
அருளிச் செயல்களினுடையவும் ஏதத் வ்யாக்யானங்களுடையவும் -(முதல் 38 பாசுரங்கள் திவ்ய பிரபந்தம் )
தாத்பர்ய ரூபமாய் (ஸ்ரீ வசன பூஷணத்தை )
சரம பிரகரண பர்யந்தமான அந்த ஸ்ரீ வசன பூஷணத்தை கீழ் அடங்கலும்
அருளிச் செய்த அர்த்தங்களுக்கும்
மேல் அருளிச் செய்யப் புகுகிற சரம பர்வ நிஷ்டாக்ரமங்களுக்கும்
ஆப்த தமமான பிரமாணமாக (ஸ்ரீ வசன பூஷணத்தை ) அங்கீ கரித்த படியே அதில் தாத்பர்யமான
சரம பர்வ நிஷ்டாக்ரமங்களை
சரமத்திலே
இப் பாட்டுத் தொடங்கி
மேல் எல்லாம் ( 73 பாசுரங்கள் வரை )தர்சிப்பித்து அருளுகிறார் –
(சரம பர்வ நிஷ்டாக்ரமங்களை-ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதையே –
அதுவும் கடைசி சூரணை இல்லை -பிரமேயமே சரமம்
சரமத்திலே இப் பாட்டுத் தொடங்கி –பேடிகா விபாகத்தில் சரமம் இதுவே சரம ஸ்லோகம் போல் )
இதில்
முதல் பாட்டில்
தங்களுக்கு அசாதாரண சேஷியான ஸ்ரீ ஆச்சார்யன் விஷயத்தில்
அல்பமும் பக்தி இன்றிக்கே இருக்குமவர்கள்
சாதாரண சேஷியான ( எல்லாருக்கும் பொதுவான )ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்திலே பக்தியைப் பண்ணிலும்
பக்தி க்ருதனான (க்ரீதனான -விற்கவும் வாங்கவும் அமைத்துக் கொள்வானே )
அவன் தான் அவர்களுக்கு பிராப்ய லாபத்தைப் பண்ண
இச்சித்து இரான் ஆகையாலே அவர்கள் பிராப்யத்தை பிராபியார்கள் என்கிறார் –
தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —60-
(அம்புயை கோன்-ஆச்சார்யர் இடம் அன்பு லேசமும்-அத்வேஷம் மாத்ரம் – இல்லையாகில்
புருஷகாரமும் துர்லபம் என்று காட்டி அருளவே இங்கு இப் பத பிரயோகம்
கமல வாஸினி -தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே உலர்த்துவான்
தண்ணீர் பசை -ஆச்சார்ய ஸம்பந்தம் -இல்லையாகில்
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
மிதுனத்தை ப்ராப்யமாகக் காட்டி அருளுவதே ஆச்சார்யர் தானே
உளன் அலன் எனில் -ஸப்த பிரயோகம் -இல்லை எனில் போல் இல்லாமல் இங்கும் -அளிக்க வேண்டி இரான்
தான் -அளிக்க -வேண்டி இரான் -மூன்று பத பிரயோகங்களும் வியாக்யானம் உண்டே
இன்ப மிகு விண்ணாடு -திரு நாடு -இரண்டு பத பிரயோகம்
நந்த கோபன் கோயில்- உன் கோயில் -இரண்டும் திருப்பாவையில் –
நாயக ரத்னம் -ஆச்சார்யர் -பின்பு நப்பின்னை -பிராட்டி -பின்பு அவனைப் பற்றுகிறோம் )
பக்திம் விகாய
பத யோகோ நிஜ தேசிகஸ்ய
பக்தி பிரகர்ஷம் அபி யே பகவதி
தேப்ய
ரமா ஸஹஜர பரமம் பதம் யத் தாதும்
நஹி இச்சதி
நாதேபி ச தல் லபந்தே
தன் குருவின் தாள் இணைகள் தன்னில் –
மருளாம் இருளோட மத்தகத்துக்கு தந்தன் ( தன் தான் ) அருளாலே வைத்தவராய் -ஞான சாரம்
தனக்கு வகுத்த விஷயமான ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய அங்க்ரி யுகளம் தன்னிலே யாய்த்து –
பிரபத்தி ( பிரதிபத்தி உறுதி என்றுமாம் ) பண்ண பிராப்தம் –
அவன் தன் தாளையே யுன்னுவதே சால யுறும்( ஞான சாரம் 38 )-என்று இறே இருப்பது –
ஆகையால்
தஸ்மாத் பக்திர் குரௌ கார்ய (அந்திம உபாய நிஷ்டையில் ஆச்சார்ய லக்ஷணம் சொல்லும் இடம் )-என்கிறபடியே
(ஷத்ரிய பந்து அன்றோ பராம் கதி கண்டு கொண்டான் என்பதுக்கு மூலம் )
அவன் விஷயத்திலே அதி ஸ்நேஹத்தைப் பண்ண வேண்டி இருக்க –
அத்தைச் செய்யாதே –
(வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36-)
(தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –38-)
அன்பு ஓன்று இல்லாதார்-
பக்தையக தேசமும் இல்லாதார்
அந்தாமத்து அன்பு செய்து -என்று ஈஸ்வரனும் கூட
அதி ஸ்நேஹம் பண்ணும் விஷயத்திலே யாய்த்து
இவர்கள் அபி நிவேச லேசமும் இன்றிக்கே ஒழிகிறது-
அது இன்றிக்கே ஒழிந்தால் ஆவது என் –
பகவத் பக்தி யுன்டானால் என்ன –
அன்பு தன் பால் செய்தாலும் –
ஸ்வ விஷயத்திலே பக்தி ஜனகன் ஆனவன் இடத்தில் அன்றிக்கே
(பகவத் விஷயத்தில் பக்தி உண்டாக்கியவன் அன்றோ ஆச்சார்யர் )
அன்பனான தன் விஷயத்தில்,அன்பைச் செய்தாலும் –
(இவன் அன்பன்-அவர் அன்பை ஏற்படுத்தியவர் –
தன் பால் -அவர் பாசுரம் கொண்டே தான் அறுதி இட வேண்டும் –
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -கண்ணி நுண் சிறுத்தாம்பு –-11–
ஆகவே அதே அன்பு சப்த பிரயோகம் இங்கு -காதல் அபிநிவேசம் இல்லாமல் அதே அன்பு சப்த பிரயோகம்)
பிறர்க்கு அரிய வின்னபாதகத்தி -( திருச்சந்த விருத்தம் -100) –என்றும்
அரும் பெறல் அன்பு—(திருக்குறும் தாண்டகம் 5-) என்றும் சொல்லும்படியான
(பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-
இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு
அரும் பெறல் அன்பு புக்கு இட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக்
கரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே –திருக் குறும் தாண்டகம் –5)
பெறற்கு அரியதான பக்தியை – சரம விஷயத்தில் பக்தி அன்றிக்கே
பிரதம பர்வமான ஸ்வ விஷயத்தில் பரி பூரணமாகப் பண்ணினாலும் –
அப்படிப் பட்டவர்கள் தன் பிரசாத்துக்கு பாத்ரம் இன்றியே ஒழிகையால்
அம்புயை கோன்-இன்பமிகு விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் –
ஸ்ரீ ஆச்சார்ய விஷயீ காரம் அடியாக யுண்டான
ஸ்ரீ பிராட்டி புருஷகார பலத்தாலே
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு வானம் கொடுக்குமவனான ஸ்ரீ மாதவன் -( ராமானுஜ -68 )
ஆச்சார்ய விஷயத்திலே ஆதரம் மட்டமாய் இருக்கிறவர்களுக்கு
பிராப்ய பிரதானத்தில்( அளிக்க -பிர தானம் ) ப்ரீதி இன்றியிலே ஒழியும் –
(வேண்டி தேவர் இரக்க -தேவர்கள் பிரார்த்திக்க தானும் விரும்ன்பி –
இச்சன் ஹரி கணேஸ்வர -போல் –
அவனுக்கு விருப்பம் இருக்காது இங்கும் _
ஆதலால் நண்ணா ரவர்கள் திரு நாடு –
இப்படிக் கொடுக்குமவன் கொடாது ஒழிந்தால்
தெளி விசும்பு திரு நாடு -( 9-7-5 )ஆன பிராப்ய தேசத்தை ப்ராபியார்கள் –
ப்ராப்ய பலம்-( லாபம் ) பிராபகத்தாலே -( 93-)-என்னக் கடவது இறே –
இன்பமிகு விண்ணாடு –
அந்தமில் பேரின்பம்-(10-9-11) -என்றும்
நலமந்த மில்லதோர் நாடு- -என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய ஆனந்த மயமான ஸ்ரீ வைகுண்டத்தை ஸ்வ விஷயத்தில் ஆபி முக்ய லேசமே பார்த்து
மோஷ பிரதானத்தில் தீஷித்து இருக்கும் அவன் தான் –
அவர்கள் விஷயத்தில் ஔதார்யத்தைப் பண்ண இச்சியான் –
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் –
தான் விண்ணாட்டில்( விண்ணாட்டை விட ) சால விரும்பும் விஷயத்தில் விருப்பம் இன்றிக்கே ஒழிகையால்
பரம வ்யோம சப்த அபிதேயமான பரம பதத்தை அனுக்ரஹிக்க இச்சியான்
ஆகையால்
ஏனத்துருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் ( முதல் திருவந்தாதி -91 )-என்கிறபடியே
அவர்களுக்கு திரு நாடு சித்திக்கை அரிதாய் இருக்கும் –
வானவர் நாட்டை நீ கண்டு கொள் ( 3-9-9-)-என்று கொடுக்கும் -உதாரனானவன்
தான் கொடுக்க இச்சியாது ஒழிந்தால்
இவர்களுக்கு பிராப்யத்தை பிராபிக்க விரகு என் –
இழந்தே போம் இத்தனை என்று மனத்து உயிர்க்கும் -இத்யாதி –
இத்தால் –
ஸ்ரீ ஆச்சார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் (437)-என்று தொடங்கி
இத்தை ஒழிய ஸ்ரீ பகவத் சம்பந்தம் துர்லபம் (440 )-என்னும் அளவும்
அருளிச் செய்த அர்த்தம் பிரதி பாதிக்கப் பட்டது –
(ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் –ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் – அவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை —சூரணை -437
தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிக் கொள்ளலாம் –
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை விளைக்கும் –
பிரயோஜனம் அல்லாமையே அன்று -அவத்யகரமும் -என்கிறார் –சூரணை -438-
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே -நீரைப் பிரிந்தால் –
அத்தை உலர்த்துமா போலே –
ஸ்வரூப விகாசத்தை பண்ணும் ஈஸ்வரன் தானே –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் -அத்தை வாடப் பண்ணும் —சூரணை-439-
இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் –சூரணை -440-
இங்கன் சொல்லுகிறது என்-இவ் ஆசார்ய சம்பந்தம் குலைந்தது ஆகிலும் –
ஒழிக்க ஒழியாது -என்கிற பகவத் சம்பந்தம் உஜ்ஜீவனத்துக்கு உடல் ஆவாதோ என்ன –
அருளிச் செய்கிறார் –
அதாவது –
அநாதி சித்தமாய் இருக்க செய்தேயும் -ஆசார்யன் உணர்த்துவதற்கு முன்பு அசத் கல்பமாய் –
அவன் உணர்த்தின பின்பு இவனுக்கு கார்யகரமாகக் கடவதாய் -இருக்கும் அது –
இவ் ஆசார்யம் சம்பந்தம் குலைந்த போது-இதடியாக வந்த தானும் குலைந்து போம் ஆகையாலே –
இவ் ஆசார்ய சம்பந்த்தத்தை ஒழிய பகவத் சம்பந்தம் இவனுக்கு கிடையாது -என்கை –
ஆகையால் இது போயிற்று ஆகிலும் அது நமக்கு உஜ்ஜீவனத்துக்கு உடல் என்று இருக்க விரகு இல்லை என்று கருத்து –
ஸ்வரூப உஜ்ஜீவனம் -ஆச்சார்ய சம்பந்தம் பிரதானம் –இது ஒழிந்தால் -பகவத் சம்பந்தம் -நிலை நின்ற -யவாதாத்மபாவி துர்லபம் –
தத் சம்பந்தம் குலைந்து இருந்தால் -ஏதத் சம்பந்தம் சுலபமாம் -இது குலைந்தால் அது துர்லபம் –
சத்தா ப்ரயுக்தம் அன்றோ -பகவத் சம்பந்தம் -இங்கு சொல்வது ஆஸ்ரயண சம்பந்தம் –
சேஷி சேஷ பாவ சம்பந்தம் குலையாது –
ஆச்சார்யனால் பகவத் ஆஸ்ரயணம் -பகவானால் ஆச்சார்ய லாபம் பொது- முதல் ஐந்து படிகள் -பந்து சம்பந்தம் போகாது –
சாமான்ய சம்பந்தம் இருந்தால் ஆச்சார்ய சம்பந்தம் கிட்ட வாய்ப்பு உண்டு –
அவன் ஸுஹார்த்தத்தால் ஆச்சார்ய சம்பந்தம் -ஆச்சார்ய சம்பந்தத்தால் பகவத் ஆஸ்ரயணம்-
உஜ்ஜீவனம் -மோக்ஷ பர்யந்தம் -வஸ்து சத்தை வேறே –ஆச்சார்ய சம்பந்தம் அறிந்து உபதேசம் பெற்று தானே
ஆஸ்ரயணம் மூலம் உஜ்ஜீவனம் -லீலா விபூதி விளையாட்டு -சத்தை அடியாக –)
(தான் அளிக்க வேண்டி இரான் -மூன்று சப்தங்கள்
தான் தான் அளிக்க வேண்டும் -வேறே யாரும் கொடுக்க வல்லவர் அல்லர் –
அளிக்க தான் வேண்டும் -நாம் பிரார்த்திக்க மட்டுமே அதிகாரி -வேண்டினால் அளிப்பார் –
பயம் -சோகம் பிரபத்திக்கு அதிகாரம் -உபாயாந்தர சம்பந்தமும் உபாயத்தில் ஸ்வீ கார புத்தியும் இருந்தால்
நம் பக்கல் விசேஷ ப்ரீதியுடன் -அபிமானதுடன் -வேண்டி அளிப்பான்
தான் இச்சித்து அளிக்க வேண்டும் –
மடி பிடித்துக் கேட்க முடியாது பிரதான அர்த்தம் இல்லை -கடமைக்குச் செய்யாமல் விருப்பத்துடன் –
மேலைத் தொண்டு உகளித்து -பொரு சிறைப் புள் உகந்து ஏறுவான் –
இதுவே விசேஷ அபிமானம் -வேண்டி -பத அர்த்தம் –
பக்தி இல்லாதவனுக்கு கீதை சொல்லாதே –
சச பூஜ்யக -என் அளவிலாவது அடியார்களைப் பூஜிக்க வேண்டும் என்றானே –
ஆணை மீறினால் விசேஷ அபிமானம் வராதே –
திருமேனி திருவடி ஸ்தானம் தானே அடியவர்கள் –ஸ்வரூபத்தில் மட்டும் பக்தி வைத்து
திவ்ய மங்கள விக்ரஹத்திலும் அன்பு வைக்க வேண்டுமே – )
(ஏணி படகு த்ருஷ்டாந்தம்-ஆச்சார்யர் சம்பந்தம் பொருந்தாது -தாமரை நீர் சம்பந்தம் தான் பொருந்தும்
பகவத் சம்பந்தம் குலையும் என்றது -விசேஷ அபிமானம் குலைவதையே சொல்லிற்று
அந்தர்யாமித்வம் -வியாபகம் பொது -அது குலையாதே
சேஷ சேஷி பாவ ரூப சம்பந்தம் -உயிர்கள் எல்லாம் அரங்கனுக்கு -ஆச்சார்யரால் உணர்த்தப்பட்டது
ததீய சேஷத்வ பர்யந்தமாக ஆக வேண்டுமே அது நிலைக்க –
ஆச்சார்ய பக்தி இல்லை என்றால் தத் சேஷத்வமும் நிலை நிற்காதே –
சம்பந்தம் தெரிந்து கொண்டால் தானே மோக்ஷம் -உஜ்ஜீவனம் —
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின் மறந்திலேன் -ஞான ஜென்மம் –
பேயாழ்வார் சம்பந்தம் அடியாக திரு மழிசை ஆழ்வாரும் இவர் அடியாக கணி கண்ணனும் பெற்றார்கள்
சத்தா ப்ரயுக்தம் மோக்ஷ ஹேது இல்லை-அறிய வேண்டுமே – -அறிந்து கொள்ள தேவை ஆச்சார்யர் வேண்டுமே –
இது குலைந்தால் -நிமித்தம் போனால்- நைமித்திகமும் போகுமே –
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -ஆழ்வார்
இவர் நண்ணாரவர்கள் திரு நாடு-என்கிறார்
ராமானுஜர் அவதரித்த பின்பு நாம் நாதர் உடையவரானோமே
ஆச்சார்ய சம்பந்தம் ஸ்திரமாக இருக்க வேண்டும் என்று அன்றோ
மா முனிகள் இப்படி வலி உறுத்தி அருளிச் செய்கிறார் )
(காஞ்சி ஸ்வாமி -இப்பாட்டில் எழுவாய் அம்புயை கோன் –
அன்பு தன் பால் செய்தாலும் -அம்புயை கோனில் அந்வயிக்கும் –
அதே போல் தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார் –
சேர்த்து -மா முனிகள் பால் அன்பு இல்லாவிட்டால் –
மா முனிகள் வாக்கால் வர அவன் பிரயோகம் இப்படி அருளினான் –
மற்றது எல்லாம் காற்றிலும் நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை –
தேவி மற்று அறியேன் குருகூர் நம்பி
மாறனை மிக்குமோர் தேவும் உளதோ –
மால் தனை என்றே நான் கொண்டேன் -என்பாராம் -அவர் திரு வாக்கால் வரும்படி சங்கல்பம்
அம்புஜ நாயகனான தேவ நாதன் -திரு வயிந்த்ர புரத்தில் உபந்யசித்தாராம் –
அம்புஜ வல்லித் தாயார் -ஹேமாப்ய நாயகி
ஓர் ஒருவர் உண்டாகில் -மா முனிகள் போல் என்று இங்கே முன்பே பார்த்தோம் )
—————————————–
ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூ க்திகளைக் கொண்டே உபதேச ரத்ன மாலையும் அருளிச் செய்கிறார் –
பூர்வாச்சார்யர்களின் உபதேச ரத்னங்களைக் கொண்டே என்றும் கொள்ளலாம்
இனி-
கேவல சதாச்சார்ய சம்பந்தத்தாலே
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே
ஸ்ரீ வைகுண்டத்தை தந்து அருளும் என்கிறார் –
(கேவல -மட்டுமே -தப்பாக மட்டம் என்று உபயோகம்
இது ஒன்றே போதும்
ஆச்சார்ய சம்பந்தம் வந்த பின்பு ஆத்மகுணங்கள் வளர்ந்து மேலே மேலே உஜ்ஜீவனம் அடைவோம் )
இப்பாட்டுத் தான் -இப் பிரபந்ததுக்கு எல்லாம் -உயிர் பாட்டு இறே –
(கீழும் அம்புயை கோன் -இங்கும் திரு மா மகள் கொழுநன்-ஸ்ரீ சம்பந்தம்
நீயும் திரு மாலால் நெஞ்சம் கோள் பட்டாயே
பேறும் இழவும் -திருமால் -எங்கும் திருமால் அன்று இன்மை கண்டு )
ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் –61-
அடைந்தக்கால்-துர்லபம் -திருவடி -பக்ஷிகள் -கடகர்
தானே -வேறே ஸஹ காரி வேண்டாமால் -ஸ்ரீயப்பதி தானே -தன்னாலே -இவரே ஆச்சார்யர் -நான்கு அர்த்தங்கள் –
(திரு மா மகள் கொழுநன்-தானே குருவாக இருந்து வைகுந்தம் தரும்
ஆச்சார்யர் அந்தராத்மாவும் அவனே –சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் கச்சதி -என்றும்
ஸஸ்த்ர பாணிநா -என்றுமாம்
அக்னி ஸூர்யன் சப்தமே அவனை குறிக்கும்
பவக் கடலை உறிஞ்சி -முன்னே கூட்டிச் செல்லும் -அவன் அன்றோ –
குரு -சொல்லே அவனைக் குறிக்கும் -கு அந்தகாரம் ரு தன் நிவாரஹம்-
தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு
ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குரு-ரஹஸ்ய த்ரயம் அறிந்து அனுஷ்ட்டித்து –
சேஷ சேஷி பாவம் அறிந்து உபாய உபேய பாவம் அறிந்து -திருமந்திரமும் சரம ஸ்லோகமும் அறிந்து –
சரணாகதி அனுஷ்டானம் செய்து -த்வய நிஷ்டர் )
ஞானம் பரம்
தத் உசித ஆசாரண்யஞ்ச யஸ்ய
தஸ்மிந் குரோவ் பரமபக்தி ஜூஷே ஜனா
பவ்மா
ஸ்வயம்
மது ரஸா விலாய பத்ம ஜாயா காந்தன்
கருணயா
நிஜ தாமம் தத்தே
ஞானம் அனுட்டானம் –
ஞானமாவது-
உபாய அத்யாவசாய ரூபமாயும்
உபேய த்வரா விஷயமாயும் -உண்டான அறிவு
(பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும்
பேற்றுக்குத் த்வரிக்கையும்
சம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற
ப்ரஞ்ஞா அவஸ்தைகளுக்கு தோழி தாயார் மகள் என்று பெயர் -133-
உபாய விஷயத்தில் ஞானமும் உபேய விஷயத்தில் அனுஷ்டானமும் –
என் பணி எது என்னாதே அது ஆட்ச்செய்வதே )
அனுட்டானமாவது –
தத் அனுகுணமாக
அலர்மேல் மங்கை உறை மார்பா யுன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -(6-10-19)–என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நான் என்றும் -(3-3-1-)
நாயேன் வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டு அருளே-(1-9-1-) -என்றும்
சொல்லப் படுகிற உபாய உபேய அனுஷ்டானம் -என்கை –
(உபாய அனுஷ்டானம் உபேய அனுஷ்டானம் இரண்டுக்கும் இரண்டு நம்மாழ்வார் -ஒரே பாசுரம் கலியன் )
இதுவே இறே வாக்ய த்வயத்தில் பிரதிபாதிக்கிறது –
ஆகையால் ஷட் பத நிஷ்டனான சதாச்சார்யனை இறே இங்கு
சமாஸ்ரயணீயனாக அருளிச் செய்கிறது –
(அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை )
இவனுக்காகத் தான் உபாய அனுஷ்டானம் பண்ணி
ரஷிக்க வல்ல மகா பாகவதன் ஆக வேணும் இறே –
(உடையவர் என்று நேராக அருளிச் செய்யாமல் -இவ்வாறு அருளிச் செய்கிறார்கள்
உகந்து அருளின நிலங்களில் ப்ராவண்யம் -திருவரங்கத்தை திரு உள்ளத்தில் கொண்டே
இவ்வாறு அருளிச் செய்கிறார்கள்
இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம்புதல்வர்
தம்மதன்றோ தாயமுறை தான் -ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம்—60-
காலத்ரயேபி கரணத்ரய நிர்மிதாதி
பாப க்ரியஸ்ய ஸரணம் ப4க3வத் ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலா ரமணே அர்தி2தா யத்
க்ஷேமஸ்ஸ ஏவ ஹி யதீந்த்3ர! ப4வஸ் ஆஸ்ரிதாநாம் ||-ஸ்ரீ யதிராஜ விம்சதி)
இவை-
இவை யன்றே நல்ல இவை அன்றே தீய இவை என்றிவை அறிவேனேலும் -(பெரிய திருவந்தாதி )-என்கிறபடி
சத் அசத் விவேக பரிகரமான-ஞானம் என்றத்தாலே
விடுமவற்றை விட்டு
பற்றுமவற்றைப் பற்றியும் போருகிற-
த்யாஜ்ய உபாதேய ரூபமாய் இருக்கிற அனுஷ்டானங்கள்
என்கிற இவை யாகவுமாம்-
(ஞானம் அனுஷ்டானம் ஒருமை இவை பன்மை –
ஆகவே சத் அஸத் விவேக ஞானத்தால் த்யாஜ்ய உபாதேய அனுஷ்டானங்களை இவை என்கிறார்
போதரிக்கண்ணினாய் ஞானமும் நா உடையாய் அனுஷ்டானமும் போல் )
ஆச்சார்யனுக்கு அடையாளம் –
அறிவும் அனுஷ்டானமும் -என்றும்
விலஷணர் யுடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சையும் -என்று இறே
ஆச்சார்யர்கள் அருளிச் செய்தது –
ஸ்வ ஞானம்
பிராபக ஞானம்
ப்ராப்ய ஞானம்
முமுஷூபி ஞான த்ரயம் உபாதேயம் (ஏதத் அந்யத் ந கிஞ்சன)-என்னும்படி
(அர்த்த பஞ்சகத்தை சுருக்கி த்ரய ஞான ஸ்லோகம் இது
பஞ்சீ கரணத்தை த்ரயீவக் கரணம்-தேஜோ பன்னங்கள் பிருத்வி அப்பு தேஜஸ்ஸூ மூன்றையும் சுருக்கிச் சொல்வது போல்
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்திலும் பர வ்யூஹ விபவம் ஸ்பஷ்டம் –
அந்தர்யாமியை பரத்வத்திலும் அர்ச்சையை விபவத்தில் சுருக்கி -இதுவும் ஐந்தை மூன்றாக சொல்வது )
ஸ்வ ரூப அனுரூபமான உபாய உபேய விஷய ஞானம் –
இப்படி த்வ்யார்த்த பிரதிபாதகமான
ஸ்ரீ வசன பூஷணத்தின் யுடைய ஞான அனுஷ்டானங்களை —
(ஆத்ம ஸ்வரூபம் சேஷத்வம் பாரதந்தர்யம் அறியவே ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியும் ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தியும் ஏற்படுமே
இதுவே உபாய உபேய ஞானம் -இதுவே த்வயார்த்தம் -பூர்வ வாக்யமுயம் உத்தர வாக்கியமும் –
ஞானம் -ஒரே வார்த்தை -விளக்கி -த்வயத்தில் கோத்து –
ஸ்ரீ வசன பூஷண தாத்பர்யத்தோடே சேர்த்து அருளுவது அழகு )
நன்றாகவே யுடையனான குருவை –
இவற்றால் பரி பூர்ணனாய் இருப்பான் ஒரு பரம சத்வ நிஷ்டனை
ஆஸ்ரயித்தால் ஆயத்து கார்ய கரமாவது
இவற்றில் ஓன்று குறையிலும் ஆஸ்ரயிக்கும் அவனுக்கு அந்த ஆஸ்ரயண பலம் தலைக் கட்டாது
காட்டுத் தீ சூழ்ந்த விடத்து அந்தனும் பங்குவும் ( குருடனும் நொண்டியும் ) கூடி இருந்தால்
அப்ரயோஜனமாகவே இறே இருப்பது
சஷூஷ் மானுமாய் சரணவானுமாய் இருப்பான் ஒருவனாலே இறே அத்தைத் தப்பிப் பிழைக்கல் ஆவது –
ஆகையால் அனுஷ்டான ஹீனமான ஞானமும் ஞான ஹீனமான அனுஷ்டானமும் அகிஞ்சித்கரம் இறே
(கண் -ஞானம் கால் அனுஷ்டானம் -சம்சாரம் காட்டுத் தீ-ஆகவே இந்த த்ருஷ்டாந்தம்
பாவாடவி வர்ணனம் ஸ்ரீ மத் பாகவதத்தில் பெரிய அத்யாயம் உண்டே -அடவி காடு -சம்சாரம் என்னும் காடு –
சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -கர்மம் அடியாக இல்லையே -வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி கர்மம் அடியாகவே -இப்படி இரண்டும் போல்
நம் ஆச்சார்யர் உபகார ஆச்சார்யர் -அவர் கொண்டு போய் உத்தாரக ஆச்சார்யர் இடம் சேர்க்க
அவருக்கு ஞானம் அனுஷ்டானம் நன்றாகவே இருப்பதால் அது கார்யகரம் ஆகுமே
அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்குவார் -இல்லாதார்க்கு அன்றோ நீர் இரங்க வேண்டும் – )
ஞான ஹீனம் குரும் பிராப்ய -என்று தொடங்கி –
யதாபாரம் ந கச்சதி -என்னக் கடவது இறே –
கண்ணும் காலும் உண்டானால் இறே ஒருவனைக் கரை ஏற்றலாவது-
அந்த அநந்த க்ரஹண வசக -இத்யாதி –
(குருடன் கண் தெரிந்தவன் வசம் இருந்தால் தானே தாண்ட முடியும் )
தன்னை அக்கரை ஏற்ற வல்ல ஞானாதி பரி பூர்ணனாய் இருப்பான் ஒருவன் என்று இறே
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததும் –
ஆகையால் அசங்குசித ஞான அனுஷ்டானங்களை யுடையவர்களை ஆய்த்து ஆச்சார்யர்களாக ஆஸ்ரயிப்பது-
(விஷ்ணு போதம் -சர்வம் ஞானம் ப்லவம் படகு-ஸ்ரீ கீதை – -அவன் திருவடியே-ஆச்சார்யர் – அவனை அடைவிக்கும் )
குருவை அடைந்தக்கால் –
அஞ்ஞான நிவர்த்தகனாய் ஆசார பிரவர்த்தகனாய் (அனுஷ்டான பிரவர்த்தகனாய்) இருக்கிற ஆச்சார்யனை
உபாய யுபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்கிறபடியே
தனக்கு பிராப்யனாயும் பிராபகனாயும் அத்யவசித்து ஆஸ்ரயித்தக்கால் —
(கு சப்த அந்தகார வாசக ரு தத் நிவாரகத்வம்
குரு -பெரிய லகு சிறிய
தமேவ -இங்கு -மாம் ஏகம் அங்கு -கீதாச்சார்யன் -ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய பீடம் ஆசைப்பட்டு மேற் கொண்டான் அன்றோ
அடைவது -திடமான உறுதியான விஸ்வாசத்துடன் ஆஸ்ரயப்யதே )
அடைந்தக்கால் –
நெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போல
அஞ்சினான் புகலிடம் ஆன ஆச்சார்ய அபிமானத்தை
(அசைலம் -அஞ்சினான் புகலிடம்
சம்சாரம் கண்டு அஞ்சி ஈஸ்வரனைப் பற்ற –
ஈஸ்வரன் ஸ்வா தந்தர்யம் பற்றி அஞ்சினால் ஆச்சார்யரைப் பற்ற வேண்டுமே
நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் )
(ஆச்சார்ய அபிமானத்தை ஆச்சார்யருடைய ப்ரஸாதத்தாலே ) அவன் பிரசாதத்தால் பிராபிக்கப் பெற்றால் –
தங்களுக்காக சரண வரணம் பண்ணி ரஷிக்கும் அவனை தாங்கள் சரணமாக அடைந்தக்கால் –
(ஸ்வகத ஸ்வீ காரம் கூடாதே -ஆகவே அடைந்தக்கால் -பரகத ஸ்வீ காரத்தையே கொள்ள வேண்டும் )
குருவை அடைந்தக்கால் –
குருரேவ பரம் ப்ரஹ்மம்-என்றும்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்றும் சொல்லுகிறபடியே
குருதரனான குருவை ஆஸ்ரயித்தக்கால்-
(குருவே ப்ரஹ்மம் -ப்ரஹ்மமே குரு -இரண்டுக்கும் இரண்டு பிரமாணங்கள் )
இப்படி அலாப்ய லாபமானது லபிக்கப் பெற்றால்
அந்த ஆஸ்ரயண ராஜ குல மகாத்ம்யத்தாலே ( ப்ரபந்ந குல மஹாத்ம்யம் -அரசு இளம் குமரன் போல் )
ஸ்ரீ யபதியானவன் ஸ்வ பிராப்தியைப் பண்ணிக் கொடுக்கும் –
அடைந்தக்கால் மா நிலத்தீர் –
பசு மனுஷ்ய பக்ஷி வா ஏச வைஷ்ணவ சம்ஸ்ரயா -(சாண்டில்ய ஸ்ம்ருதி )-என்கிறபடியே
அவனுடைய அபிமானத்திலே அந்தர்பாவத்தை யுடையார் ஆனக்கால் –
மா நிலத்தீர் –
மகா பிருத்வியில் உள்ளவர்களே
ஞாலத்தார் தமக்கும் வானத்தவருக்கும் பெருமான்-(திருவாய்-3-5-8-)-என்கிறபடியே
(ஞாலத்தார்-படு கரணன் பக்கலில் தாய் அபிமானம் மிக்கு இருக்குமே -ஆகவே முதலில் இது )
அவனோடு யுண்டான அவர்ஜ நீய சம்பந்தம் யுடையவர்கள் ஆகையாலே உங்களை விட மாட்டுகிறிலன்
ஞாலத்தார் பந்த புத்தியும் -என்று இறே அருளிச் செய்தது –
(ஈஸ்வர பந்தத்தை இங்கே சொல்கிறது -சம்சார பந்தத்தை அல்ல )
இப்படி பிரதிபத்தியிலும் அதி ஸூலபமான உபாயத்தை இறே நாம் உங்களுக்கு விதிக்கிறது-
(நண்ணாதார் மெய்யிலூன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமா நித்வாதிகள் விஞ்சின
ப்ரணிபாத அபிவாதன பரிப்ப்ரஸ்ன சேவா பரர்க்கு உளம் கொள் பேசும் அளவன்று என்னும் அர்த்தத்தை
வம்மின் விரோதம் ஈனச் சொல் எவ் உயிர்க்கும் அறிய என்று அடைவு கெட அதபஸ்கர்க்கு உபதேசிக்கிறது
1-ஞாலத்தார் பந்த புத்தியும்
2-அனர்த்தமும் கண்டு ஆற்றாமையும்
3-மிக்க கிருபையும் இறே-சூரணை -203-
1-ஞாலத்தார் பந்த புத்தியும்–ஞாலத்தார் அவர்க்கும் வானத்தவர்க்கும் பெருமான்–திருவாய்-4-5-8- -என்று
நித்ய விபூதியில் உள்ளவோர்பாதி லீலா விபூதியில் உள்ளோர்க்கும் அவனுடைய சம்பந்தம் ஒத்து இருக்க –
இவர்கள் அவனை இழந்து கிடக்க ஒண்ணாது என்கிற சம்பந்த ஞானமும் )
ஆனால் நீர் சொன்னபடி அடைந்தால் ஆவது என் என்னில் –
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் –
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே-குருவாகையாலே-தத் ஆஸ்ரயணத்துக்கு
தேனைவதே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்கிறபடியே
அந்தத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -என்கிறார் –
(தேனைவதே-அந்த ஆச்சார்யர் பலத்தால் -தானே குருவான படியால் -நாம் அடைந்தக்கால் -தானே தரும் )
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-(10-8-1-) -என்றும்
(நின்றவன் படுத்தவன் இங்கு வந்து இருந்தான் )
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -(பெரியாழ்வார் -5-2-10-)-என்றும் சொல்லுகிறபடி
இவன் இடத்திலே -என்னுள்ளம் மாலுக்கு இடம் -என்னும் படி
விசிஷ்ட அதிஷ்டானமாக எழுந்து அருளி இருக்கையாலே அவன் தானே என்று சொல்லலாம் இறே
ஆச்சார்யனைப் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி -என்று இறே அருளிச் செய்தது –
(விசிஷ்ட அதிஷ்டானமாக-லஷ்மீ விசிஷ்டனாக -பிராட்டி உடன் கூட நம் உள்ளத்தை இருப்பிடமாக கொண்டான் -அது போலவே
தானே குருவாக அதிஷ்டானமாக -தேர்ந்து எடுத்துக் கொள்வான் -திருவடியைப் பற்றிக் கார்யம் கொள்ளுமா பாதி தானே )
இப்படி அவிநாபாவமுமாய்-அநதிக்ரமண (பிரிக்க முடியாததாயும் -உதற முடியாத காரணத்தாலும் )
ஹேதுவாயுமாய் இருக்கிற இவ் உபாயத்தாலே
தேனார் மலர் மேல் திருமங்கை -(பெரியாழ்வார்-1-3-7 )-என்னும் படியான
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன்
அவள் சார்வான ஸ்ரீ ஆச்சார்ய அபிமான நிஷ்டருக்கு பலம் கொடுப்பது அவளுக்கு உகப்பாகையாலே
(பூ மேல் திரு -நமக்கு என்னும் சார்வு -பேயாழ்வார்
த்வயம் பிராட்டியாலே பேறு சொல்லுமே
மஹரீஷீணாம் ஸூக வாஹனம் -அணைத்துக் கொண்டது போல் )
யஸ்யா வீஷ்ய முகம் (ஸ்ரீ ஸ்தவம் -கூரத்தாழ்வான் )-என்று அவள் முக மலர்த்திக்காக
கேவலம் சமபந்தம் மாத்ரமே பற்றாசாகக் கொண்டு தானே மேலே விழுந்து
ஸ்ரீ வைகுண்டத்தைத் தந்து அருளும் –
ஸ்வயமேவ பரந்தாமா ஸ்வயம் நயதி மாதவ -என்னுமா போலே —
(அவ்வானவருக்கு மவ்வானவர் –உவ்வானவர் உடைமை என்று உரைத்தார் –
பெரிய பிராட்டியார் பரிகரம் ஆச்சார்யர் )
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் –
தன்னோட்டை சேர்த்தியாலே
மது சம்ருதியை யுடைத்தான தாமரைப் பூவை தனக்கு வாசஸ் ஸ்தானமாக யுடையாளாய்
ஸ்ரீ என்று திரு நாமத்தை யுடையாளாய் ஸ்ரீ பெரிய பிராட்டியார்
தனக்கு வல்லபனான அவனை வசீகரித்து
ஸ்வ சம்பந்தம் அடியாக யுண்டான கடகத்வத்தை யுடைய ஸ்ரீ ஆசார்யனை ஆஸ்ரயித்தவர்களுக்கு
பல சித்தியை பண்ணுவிக்குமவள் ஆகையாலே ( கொடுக்க வைப்பவள் தானே பிராட்டி )
அவளுடைய பிரீதிக்காக தான் ஏறிட்டுக் கொண்டு
உபாய நிரபேஷனாய்-
அஹம் மோஷயிஷ்யாமி -என்கிறபடியே –
திரு மா மகள் கொழுநன் தானே –
திருமால் வைகுந்தம் -( 10-7-8 )-என்று சொல்லப் படுகிற
தன்னதான ஸ்ரீ வைகுண்ட வான் போகத்தை தந்து அருளும் —
(கொடுப்பதைக் கொடுத்தால் தானே கொடுப்பான் -லௌகிக விஷயம் போல் )
வைகுந்தம் தரும் –
வீடும் தரும் நின்று நின்றே -( திருவாய் -3-9-9 )-என்கிறபடியே இருவருமான சேர்த்தியிலே
நித்ய கைங்கர்ய நிரதனாய் வாழும் படியான பேற்றைப் பண்ணிக் கொடுத்து அருளும் –
இதில் சம்சயம் இல்லை —
இப்பாட்டுத் தான் -இப் பிரபந்ததுக்கு எல்லாம் -உயிர் பாட்டு இறே –
ஆக இத்தால் –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆய்த்து –
——————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply