உபதேச ரத்னமாலை –பாசுரம் -53/54/55/56/57- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

இப்பிரபந்த ஆரம்பத்திலே –
தாழ்வாதுமில் குரவர்-என்றும்
அவர்கள் உரைத்தவர்கள் -(3 )-என்றும் –
ஏதத் விவரணமான-ஆழ்வார்கள் ஏற்றம் -என்கிற-( 34 ) பாட்டிலே
அவர்கள் செய்த வியாக்கியைகள் உள்ளது எல்லாம் -என்றும் அருளிச் செய்தவற்றில்

சேஷமானதான ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் உடைய வைபவத்தையும்
அவராலே அருளிச் செய்யப் பட்டதாய்
ஸ்ரீ வகுள பூஷண சாஸ்திர சாரம் -என்றும் –
சாங்காகில திராவிட சம்ஸ்க்ருத ரூப வேதவ் சாரார்த்த சங்க்ரஹம் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ திருவாய்மொழி யினுடையவும்
மற்றை அருளிச் செயலினுடையவும் அர்த்தத்தை பிரதி பாதிக்குமதாய்
பூர்வோக்தமான அருளிச் செயல்களின் வியாக்யான அர்த்தங்களையும் பொதிந்து கொண்டு இருப்பதாய்-

அது தான் ஸ்ரீ பகவத் அபிப்ராயம் என்னுமது தோற்ற
ஸ்ரீ பகவத் அவதார விசேஷமான அவராலே அருளிச் செய்யப் பட்டதுமாய்
ச க்ரமமாக த்வ்யார்த்த பிரதிபாதகமுமாய்
சரம பர்வ நிஷ்டையை முடிவாம்படி
அத்தை முடி போலே யுடையதுமாய்-அத்தாலே அ சத்ருசமாய் இருப்பதுமான
ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய வைபவத்தையும் பஹூ முகமாக அருளிச் செய்வாரான இவர்

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸங்க்ரஹ மஹா ரசா வாக்ய ஜாதம்
சர்வஜ்ஞ லோக குரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
அகுண்ட உத்கண்ட வைகுண்ட கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்–ஸ்ரீ வசன பூஷண தனியன்

புருஷகார வைபவஞ்ச சாதனசஸ்ய கௌ ரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே–ஸ்ரீ வசன பூஷண தனியன்

இப்பாட்டில்-
இப்படி ஸ்ரீ லோகாச்சார்யர் என்று லோக பிரசித்தரான இவர்
லோக உஜ்ஜீவன அர்த்தமாக
தம்முடைய கிருபையாலே செய்து அருளின )அஷ்டாதச ) ரஹஸ்ய பிரபந்தங்களில் காட்டில்
ஸ்ரீ வசன பூஷணத்துக்கு யுண்டான சீர்மையை அருளிச் செய்கிறார் –

(ஏழு பாசுரங்களால் சீர்மையும் அடுத்து பத்து பாசுரங்களால் சாரமும் அருளிச் செய்கிறார் )

அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும் -உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை யொன்றுக்கு இல்லை
புகழ் அல்ல இவ் வார்த்தை மெய் யிப்போது–53-

யண்ணல்-ஸ்ரேஷ்டர் -ஸ்வாமி –
கலை-ஸாஸ்த்ரங்கள்
திராவிட வேத ஸாஸ்த்ரமான திருவாய் மொழி சாரம் -ரஹஸ்ய வேத சாஸ்திரமே ஸ்ரீ வசன பூஷணம்

கோ வா பிரபந்த
இஹ லோக குரு பிரபந்த
சாத்ருச மேவ சகலேஷு
வாங் மயேஷு
தத்ராபி கிம்
வசன பூஷண துல்யம் அந்யத்
இதம் வசனம் சத்யம்
ந மித்யா

அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாரியன் –
தஸ்ய நாம மஹத்யச-என்கிறபடியே திரு நாமம் அடியாக வந்ததாய் இருப்பதான
எண்ணிறந்த யசஸை யுடையராய் –
ஸ்ரீ முடும்பை இறைவன் -என்னும் படி
ஸ்ரீ முடும்பை என்னும் மகா நகரத்துக்கு நிர்வாஹகரான ஸ்ரீ லோகாச்சார்யர் –

(ராஜ மந்திரி அருகில் முடும்பை கிராமம் உள்ளது
கந்தாடை என்றும் விஞ்சி மூரி என்ற கிராமமும் ஆந்திராவில் உள்ளதாம்
விஜய நகர சாம்ராஜ்யம் தான் புனர் நிர்மாணம்
ஹரிஹரர் புக்கர் தொடங்கி கிருஷ்ண தேவ ராயர்
நிறைய இடங்களை அந்தணர்களுக்கு கொடுத்து -இக்குடும்பத்தார் அங்கு போய் இருந்து இருக்கலாம் )

அன்றிக்கே –
ஸ்ரீ முடும்பை உலகாரியனான அண்ணல் -என்னுதல் –
ஸ்ரீ முடும்பை -குடிப்பேர்
கீழே ஸ்ரீ ஈயுண்ணி மாதவர் -என்றாப் போலே
இவரையும் – ஸ்ரீ முடும்பை உலகாரியன் -என்கிறது –
ஜ்ஞாநாதிகர் யுடைய சம்பந்தம் உள்ளது அடங்கலும் அடிக் கழஞ்சு பெற்று இருக்கும் இறே –
(சிறியாழ்வான் அப்பிள்ளையே ஈயுண்ணி மாதவர் )

உலகாரியன் -இன்னருளால் செய்த கலை யாவையிலும் –
இவர் அபேஷா நிரபேஷமாக தம்முடைய அஹேதுகமான கிருபையாலே யாய்த்து
அசேஷ திவ்ய பிரபந்தங்களையும் அருளிச் செய்தது
அண்ணலான முறையாலே இறே இவற்றை இன்னருளாலே செய்து போந்தது –
அவை தான் அநேகங்கள் ஆகையாலே-யாவை -என்னும் அத்தனை –

யாவையிலும் என்றதுக்கு
இப்படி அருளிச் செய்த அசேஷ ரஹஸ்யங்களிலும் வைத்துக் கொண்டு
ஒரு ரஹஸ்யத்துக்கும்-

உன்னில் –
நன்றாக ஆராய்ந்து நிரூபிக்கில் –

திகழ் வசன பூடணத்தின் சீர்மை யொன்றுக்கு இல்லை –
அத் யுஜ்வலமான ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய கௌரவம் ஒன்றுக்கும் இல்லை –
அவை பல என்னும் காட்டில்-அவற்றில் ஓன்று தான் அர்த்த பூர்த்தியை யுடைத்தான
இதனுடைய பெருமைக்கு ஒப்பாக வல்லதோ –

அதாவது
ஆர்ஷ வசனங்களான அத்யாத்ம சாஸ்த்ரங்களில் காட்டில்
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஸ்ரீ ஆழ்வார்கள் அருளிச் செயல் மேலாய்
அத்தைக் காட்டிலும்
ஸ்ரீ ஆழ்வார்கள் அருள் பெற்று அவர்கள் அருளிச் செயலில் தாத்பர்யங்களை
வெளியிடுகிற ஸ்ரீ ஆச்சார்யர்கள் திவ்ய ஸூக்திகள் மேலாய்
அவற்றைக் காட்டிலும்
ஸ்ரீ ஆச்சார்யர்கள் அருளை யுடைய இவருடைய மந்தராக்ரயமான திவ்ய ஸூக்திகளாய் உள்ள
அசேஷ ஸ்ரீ ரஹஸ்யங்களும் மேலாய்
அவற்றில் காட்டிலும்
அதிசய அர்த்த கௌரவத்தை யுடைத்தாய் இதிஹாச ஸ்ரேஷ்ட இத்யாதிப் படியே
கீழ் உக்தமான அர்த்தங்களையும் பிரகாசிப்பித்துக் கொண்டு இருக்கையாலே
வந்த பெருமையை யுடைத்தாகையாலே
ஸ்ரீ வசன பூஷணம் ஸ்வ பிரபந்தங்கள் பர பிரபந்தங்கள் எல்லாவற்றிலும் அதிசயிதமாய் இருக்கத் தட்டில்லை –

(இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது-ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -5-)

ஆகையாலே இறே இவர் இப்படி அ சத்ருசமாக அருளிச் செய்தது –
ஸ்ரீ ஆச்சார்யர்கள் திவ்ய ஸூக்திகளில் காட்டிலும் இவர் திவ்ய பிரபந்தங்கள் அதிசயிதமாய் இருக்கிறது
இவற்றைக் கொண்டே அவற்றின் தாத்பர்யம் அறிய வேண்டுகையாலே –

புகழ் அல்ல இவ் வார்த்தை –
புகழ் வில்லை -என்னுமா போலே இப் பிரபந்தத்தை விசேஷமாக சொல்லுகிற இவ் வார்த்தை
கேவலம் அர்த்த வாதமாய் ஸ்துதி பரமாய்
இருப்பது ஓன்று அன்று –

மெய் யிப்போது-
இப்போது இதன் வைலஷண்யத்தை நிரூபித்துச் சொல்லுகிற இப் பிரபந்த விஷயமான வார்த்தை சத்தியமே –
இவர் தாம் பொய் இல்லாதவர் ஆகையாலே
மெய் இப்போது -என்று இவ் வர்த்தத்தின் உடைய ஆப்திக்கு உடலாக சத்யம் பண்ணி சாதித்து அருளுகிறார் –

ஸ்ரீ வசன பூஷணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை என்கிற வார்த்தை
மெய் – சத்யம் சத்யம் -என்னுமா போலே –

இத்தால்
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் பல என்னுமதுவும்
அவற்றிலும்
ஸ்ரீ வசன பூஷணம் அ சத்ருசமான வைபவத்தை யுடையது என்னுமதுவும்
த்யோதிக்கப் பட்டது –

—————————————-

ஏவம் வித வைலஷண்யத்தை யுடைய இப்பிரபந்ததுக்கு
வக்தாவானவர் தாமே
தத் அனுகுணமாக
திருநாமம் சாத்தின படியை அருளிச் செய்கிறார் –
(காரணப்பெயர் என்னலாம் படி திரு நாமம் சாத்தி அருளினார் என்றபடி )

(திரு சேர்த்தே -திரு வாராதனம் -ஸ்ரீ குண ரத்ன கோஸம் -ஸ்ரீ வசன பூஷணம்
டன் வந்தான் கதை -திருவரங்க சுத்தி மொத்தமும் களவு -திரு வேண்டாம் சொன்னதால் மொத்த திருவும் போனதே )

(ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -அளியல் நம் பையல் என்ன –
இது ஒன்றே மோக்ஷ ஏக ஹேது -ஆகவே ஏவ காரம் –
அவனது அபிமானம் மோக்ஷம் பந்தம் இரண்டுக்கும் ஹேது ஆகுமே
உலக விஷய தோஷ தர்சனம் -பகவத் விஷயத்தில் எளிதாக மூட்டும்
இங்கு பகவத் ஸ்வா தந்தர்யம் அறிந்து ஆச்சார்யரைப் பற்றுவது அடுத்த படி
அதுக்கும் மேலே ஆச்சார்யர் நம் மேல் வைக்கும் அபிமானம் –
மக்நான் -உத்தாரதே -ஏக காரணம் -ஸஸ்த்ர பாணிநா -அவனே ஆச்சர்யராக -திரு அவதாரம் -)

(ஸ்ரீ வசன பூஷணம் -மணி மகுட வியாக்கியானங்கள் மா முனிகள் அருளிச் செய்து –
இங்கு 53–59-பாசுரங்களால் அதன் மகிமையையும்
மேலே எல்லா பாசுரங்களாலும் அதன் சாரமும் அருளிச் செய்கிறார் –
அப்ரதிம வைபவம் -53-
இப்பிரபந்த திருநாமம் வந்த ஹேது –54-
அதிகாரி துர்லபம் -55-
அர்த்த கிரஹணம் பண்ண நமக்கு உபதேசம் –56-
இந்த ஸ்ரேஷ்ட அர்த்தம் அறிந்து அதிகாரி துர்லம் ஆனதுக்கு ஹேது –57-
இதுக்கு வியாக்கியானங்கள் -பிரபந்த கர்த்தாவின் திரு உள்ளத்துக்கு பொருந்துமாறு இருந்தால் ஆதரணீயம் –58-
ஸ்வ பர போக்யமாக இருக்கும் பிரபந்தம் -59-)

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்து அவரே ஸ்ரீ வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின் –54-

(என் என்னு -பாட பேதங்கள்
சிர் -வைபவம் உடைய
மின் அணியாச் சேரச் சமைத்து அவரே-ஸ்ரீ வசன பூஷணமாக அருளிச் செய்து அருளிய
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யாரே -தாமே
ஆத்மாவுக்கு அன்றோ இப் பூஷணம்
ரத்னம் -வைரம் போல் -பூர்வர் ஸ்ரீ ஸூக்திகள்-அதுக்கு தங்கம் போல் இவரது ஸ்ரீ ஸூக்திகள் )

பிராதாம்
பிரபத்தி பதவீம் மயதாம்
குரு நாம் ரோஹிஷ்ணுநா
வசன ரத்ன கதம்ப கேந
ஏதாம் க்ருதிம்
ஹ்ருதய
புத ஆத்ம பூஷாம் -கற்றோர் -கல்வி தனில் ஆசை உள்ளோர் –
தத்தம் வரம் வசன பூஷண நாமதேயம் –

முன்னம் குரவோர் –
பூர்வ காலத்திலே-ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யாருக்கு அவ்வருகு உண்டானவர்களாய்
நமக்கு நாதரான ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் சர்வ ஆத்மாக்களுடையவும் ஹிதத்தைக் குறித்து
அருளிச் செய்த திவ்ய ஸூக்திகள் தன்னை
மிகவும் தத் பிரசுரமாம் படி ( பிராஸுர்யம் -நிறைந்து )
இதுக்கு ஆப்த பிரமாணமாக ( பிரம-உண்மை ஞானம் -கரணம் -கருவி ) அங்கீ கரித்து யாய்த்து
இவர் இத்தை பிரபந்தீ கரித்தது -என்கை –

மொழிந்த வசனங்கள் –
ஜ்ஞாதவ்யார்த்த பிரகாசகமாக அருளிச் செய்த திவ்ய வசனங்களை –
அவர்கள் தாம் பலர் ஆகையாலே
ஆப்திக்கு உடலான அவர்கள் வசனங்களும் பலவாய் இருக்கிறபடி –

வசனங்கள் தன்னை மிகக் கொண்டு –
தர்மஜ்ஞ்ஞஸ் சமய பிரமாணம் வேதாச்ச-(மனு ஸ்ம்ருதி ) -என்கிறபடியே
அல்லாத பிரமாணங்கள் அநேகங்கள் யுண்டாய் இருக்கவும்
அதில் அனுஷ்டாதாக்களான இவர்களுடைய
மந்தராக்ரயமான திவ்ய ஸூக்திகள் ஆகையாலே
அத்தை இதுக்கு முக்ய பிரமாணமாக அங்கீ கரித்து
அந்த வசன பிரசுரமாய் இறே இத்தை அருளிச் செய்து அருளிற்று

(மூதறியும் அம்மனைமார் -மேலையால் செய்வனகள் -செய்யாதன செய்யோம்
இதுவே முக்கியம் -வேதாஸ் ச -அதுவும் பிரமாணம் என்பர் இதுக்கு இரண்டாம் பக்ஷம் )

ரத்ன பூஷணம் சமைப்பார் பல ரத்னங்களை முந்துறச் சேர்த்துக் கொண்டு சமைக்குமா போலே
இவரும் வசன பூஷணம் சமைக்கிறவர் ஆகையாலே
அர்த்தவத்தான வசனங்களை மிகவும் கொண்டு கூட்டின படி –
ஸூ வ்யாஹதானி மஹதாம் ஸூஹ்ருதாநி ததச் சத
சஞ்சின் வந் தீர ஆஸீத சீலஹாரி சிலம்யதா-( பாரதம் )–என்னக் கடவது இறே –
(களத்து நெல்லைத் திரட்டி -பிரயத்தனம் -செய்து -கண்ணும் பருத்தாக சேகரிப்பது போல் தீரர்கள் )

இப்படி இவற்றைக் கொண்டு செய்கிறது ஆர்க்கு என்னில் –
கற்றோர் தம் உயிர்க்கு –
கற்றோர்க்கு வரிசை கொடுக்கைக்காக-
அதாவது
தங்களுக்கு ஹிதைஷிகளாய் இருக்கிற ஆச்சார்யர்களுடைய சந்நிதியாலே
ஜ்ஞாதவ்ய ( அறிய வேண்டிய )சகலார்த்தங்களையும் நன்றாக கேட்டு இருக்கிறவர்கள் உடைய ஸ்வரூபத்துக்கு
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று -(பெரிய திருமொழி – 8-10-3-)
அறியக் கற்று வல்லார் -(திருவாய் -5-5-11 )-என்னக் கடவது இறே
(கற்றோருக்கும் கல்வி தன்னில் ஆசை உடையோர்களுக்கும்
கற்றோர்க்கு இல்லாமல் கற்றோர் தம் உயிருக்கு -ஆத்மாவுக்கு தானே இது )

மின் அணியாச்-
ஏவம் விதரான அதிகாரிகள் உடைய ஸ்வரூப ஔஜ்வல்யத்தை
யுண்டாக்கும் படியான ஒளியை யுடைய பூஷணமாக –

உயிர்க்கு மின் அணியாச் –
அநித்தியமான உடலுக்கு பூஷணம் சமைப்பார் நடுவே
இவர்
நித்தியமான உயிர்க்கு பூஷணம் சமைத்தார் இறே –

உயிர்க்கு மின் அணியாச் –
கௌஸ்துபதுக்கும்-கௌஸ்துபம் -என்னலாம் படி இருக்கை
வைகுண்ட ப்ரிய கண்ட பூஷணமாய் இறே இருப்பது-

(குரு மா மணிப் பூ திகழும் திரு மார்பு –
ஸ்ரீ வத்சம்-அசித் -மச்சம் –
ஸ்ரீ கௌஸ்துபம் -ஜீவ பிரதிநிதி
நீல நாயக்கல் -கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம்
ரத்னத்துக்கு ரத்னம் இப்பிரபந்தம்-ஆபரணத்துக்கு ஆபரணம் இது
புருடன் மணி வரமாக )

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸந்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ லோக குரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகுண்ட உத்கண்ட வைகுண்ட கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்–(ஸ்ரீ வசன பூஷணம்-தனியன்-)

மின் அணியாச் சேரச் சமைத்து அவரே –
ஔஜ்வல்ய ரூபமான ஆபரணமாய் சேரும்படி என்னுதல் –
ஸ்வரூபத்துக்கு சேரும் படி -என்னுதல் –
கீழ்ச் சொன்ன வசனங்கள் எல்லாம் அன்யோன்யம் சந்தர்ப்பமாம் படி சமைத்தவரே பேரிட்டார்

சமைக்க -என்றது –
பண்ண -என்றபடி
ஆரஞ்சமைக்க -என்று இறே இவர்கள் சாதிப் பேச்சு இருப்பது –
(இவர்கள் -பொற் கொல்லர்கள் )

சமைத்தவரே ஸ்ரீ வசன பூஷணம் என் பேர் இக்கலைக்கு இட்டார் பின் –
அதாவது –
ஆபரண நிர்மாணகர் தாமே அந்த ஆபரணத்துக்கு அனுகுணமானதோர் அபிதானத்தை கற்ப்பிக்குமா போலே
வசன சந்தர்ப்ப ரூபமான வசன பூஷணத்தை நிர்மித்த அந்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தாமே
ஸ்ரீ வசன பூஷணம் என்கிற இந்த அதிசயமான திரு நாமத்தை
இந்தப் பிரபந்தத்துக்கு சாத்தி அருளினார் -என்கை –

(பாடின ஆழ்வார் பாட பாட்டுடைத்தலைவனே மிதுனமாக திருவாறன்விளையில் கேட்ட ஏற்றம் திருவாய் மொழி
வால்மீகி ராமாயணம் குசலவர்கள் பாட பெருமாள் மட்டும் கேட்டு -பாட்டுடைத்தலைவி கேட்க்காமல் போனதே )

பின் –
சேரச் சமைத்த பின் -என்னுதல்-
அந்த ரஹஸ்யங்களை அருளிச் செய்த பின் -என்னுதல் –

(காட்டு அழகிய சிங்கர் சந்நிதியில் இவர் கால ஷேபம் –
தேவப்பெருமாள் நியமனம் அடியாகவே பிரபந்தம் உருவானது )

அவரே பேரிட்டார் –
பிதா புத்ரஸ்ய நாம குர்யாத் -என்கிறபடியே
தமக்கு அதிசயமான திரு நாமத்தை தமப்பனார் (வடக்குத் திருவீதிப்பிள்ளை )ஆதரித்து சாத்தினாப் போலே
இத்தை ஈன்ற தாயான தாமும் அப்படியே இதுக்கு அதிசயமான திரு நாமத்தைச் சாத்தி அருளினார் ஆய்த்து –
இந்த பிரபந்தம் மூலமாக விறே
இவருடைய ஜ்ஞான சந்தானம் அவிச்சின்னமாய் நடந்து செல்லுகிறது –

(தம் அப்பனார் -அப்பா -அப்பன் -உபகாரகன் -தகப்பன் மருவிய சொல்
பிள்ளை லோகாச்சார்யார் -என்று ஆச்சார்யர் திரு நாமமே ப்ராஸூர்யம் ஆனது போல் இவரது இந்த ப்ரபந்தமும் -)

வசன பூஷணம் என் பேர் –
ரத்ன பிரசுரமான பூஷணத்தை ரத்ன பூஷணம் என்னுமா போலே
ஆச்சார்ய வசன பிரசுரமாய்
அனுசந்தாக்களுக்கு ஒஜ்வல்ய கரமாய் இருக்கையாலே
இதுக்கு ஸ்ரீ வசன பூஷணம் என்று திரு நாமம் ஆய்த்து
என்று ஸ்ரீ ஜீயர் தாமே இதன் வியாக்யான பிரவேசத்தில் அருளிச் செய்து அருளினார் இறே –

வசன பூஷணம் என் பேர் இக் கலைக்கு இட்டார் –
இந்த -ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்தரத்துக்கு –
இப்படி திவ்யமாய் இருப்பதொரு திரு நாமத்தை நிர்தேசித்து அருளினார் –
முகம் அறிந்தவன் கோத்த முத்துத் தாழ் வடத்தை-
இது ஒரு கோவை இருந்தபடி என் -என்று -அதன் வாசி அறிந்தவர்கள் கொண்டாடுமா போலே
இதுவும்
வாங்மணி ஸ்ரக் க்ரைவேய பூஷாத் மகம் -என்னும்படி
வசன சந்தர்ப்பத்தை யுடைத்தாகையாலே –

இக்கலை -என்று
இவர்க்கு ஈடுபாடாய் இருக்கிறது –

(கலை இலங்கு மொழியாளர் -கலை -சாஸ்திரம் –
மொழி பாஷை அர்த்தங்கள் -செந்தமிழும் வட கலையும் திகழ்ந்த நாவர்
இதுவும் ப்ரஹ்மம் அடைய வழி காட்டி அருளுவதால் ஸாஸ்த்ரம்
மீமாம்ஸா ஸாஸ்த்ரம் -கர்ம விசாரம்
ப்ரஹ்ம விசாரம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் போல்
இது ரஹஸ்ய த்ரய ஸாஸ்த்ரம் -)

———————————————————-

புருஷகார வைபவஞ்ச சாதனச்ய கௌ ரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

கீழ்-
ஸ்ரீ வசன பூஷணம் என்று திரு நாமம் சாத்தும் படியான இதன் பெருமையை அருளிச் செய்தார் –
இதில்-
ஏதத் அர்த்த தர்சிகள் யுடையவும்-
ஏதத் பிரதிபாத்ய அனுஷ்டாதாக்கள் யுடையவும்-
அருமையை தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் —

(இது ஸ்வ சோதனைக்கே -இன்னும் ஒருவரைப் பார்த்து நீர் ஸ்ரீ வசன பூஷணம் படி
நடக்க வில்லை என்று சொன்னால் சொன்னவனே அறியாதவன் ஆகிறான் )

(த்வாபர யுகத்திலே வாஸூ தேவ சர்வம் என்று இருப்பார் ஸூ துர்லபம் –
கலியில் -அத்தையும் தாண்டி பாகவத சேஷத்வம் அறிந்து அறிந்தபடி அனுஷ்ட்டிப்பார் மஹா துர்லபம் அன்றோ
மதுரகவி நிஷ்டை ஓர் ஒருவர் தான் உண்டு -சத்ருக்ந ஆழ்வான் -வடுக நம்பி -போல்வார் – )

ஆர் வசன பூஷணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார்
ஆர் அது சொல் நேரில் அனுடிப்பார் -ஓர் ஒருவர்
யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும்
அண்டாதது அன்றோ அது –55-

த்யானந்திகே
வசன பூஷண வாரி ராசேக
சதாம் அபிதேய ரத்னம்
தே
சத் ப்ரகர்ஷ தே சஞ்சரிந்தி
யஹா கோபி சாம்பவி சேத்
விரலோகி

ஆர் வசன பூஷணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார் –
ஸ்ரீ வசன பூஷணத்தின் யுடைய அகாதமான அர்த்தத்தை அதிலே அவகாஹித்து
உள் புகுந்து உள்ளது எல்லாம் அறிவார் ஆர் –
எத்தனை அதிசயித ஜ்ஞாநராய் இருப்பார்க்கும் இத்தை ஸ்வ யத்னத்தால் அறிய வென்றால்
துர் அவஹாகமுமாய் துஸ் தரமுமாய் இறே இருப்பது –

முதலடியில் அல்லாதவற்றில் இதுக்கு யுண்டான வாசி அறிந்து இத்தைப் பாடம் பண்ணுவார் அரிதாய் இருக்கும் –
அது ஒரு படி செய்தார்கள் ஆகில் அர்த்தம் அறிகை அரிதாய் இருக்கும் –
அதுவும் பெரு வருத்ததோடு கூட மேல் எழ சிறிது அறிந்தார்களே யாகிலும்
ஆழ் பொருள் எல்லாம் அறிவார் மிகவும் தேட்டமாய் இறே இருப்பது –

ஆழ் பொருள் –
ரத்னாகாரமானது-(ஆகாரம் -இருப்பிடம் )
மலைகளும் மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலைகடல் -(பெரிய திருமொழி -2-8)–என்னும்படி
ஆழ் கடலான தனக்குள்ளே மணி முக்தாதிகளான சிறிய பதார்த்தங்களைக் கொண்டு இருக்கும் –
அதுக்கு தேசிகரான முழுகுவர் இறே முழுகி எடுப்பார் –
மற்றை யார்க்கும் கரை யருகும் செல்ல ஒண்ணாதாய் இருக்கும்

அப்படியே
ஸ்ரீ வசன பூஷண வாரிராசி யான இதுவும்
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருளான
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் என்கிற அகாத அர்த்தத்தை யுடைத்தாய் இருக்கும் –

(வேதியர் -மிக்க வேதியர் -வேதியர் பொருள் -மிக்க வேதியர் பொருள் -வேதத்தின் உள் பொருள் –
மிக்க வேதத்தின் உள் பொருள் -ஆழமான அர்த்தம்
ததீய சேஷத்வ பாரதந்த்ரம் -அத்ர பரத்ர சாபி -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –
பக்தி யோகம் தாண்டி பிரபத்தி தாண்டி தான் பற்றும் பற்றும் உத்தாரகம் அன்று என்று உணர்ந்து
ஆச்சார்யர் தாமே அபிமானித்து கைக்கொள்ளுதல்
ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு –
ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும் வேண்டுமே -விலக்காமை வேண்டுமே -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –
இவன் நம்முடையவன் என்று -இவரே ஆண் பிள்ளை என்று ராமானுஜர் அனந்தாழ்வானை அபிமானித்தது போல்
தான் பற்றும் பற்று அக்னி ஸ்பர்சம் அகங்கார கர்ப்பமாய் இருக்குமே )

இதுவும் அறிவித்தேன் ஆழ் பொருளை -(நான்முகன் )-என்னும்படி
தேசிகர் அறிவித்தாய் ஆய்த்து அறியலாவது –
வாக்ய சங்கதிர் இத்யாதி ஸ்ருதம் விநா மகதாம் அபி அஸஹ்யாநி -என்று இறே
அறிகையில் உள்ள அருமை இருப்பது –

(கடலுக்கும் ஸ்ரீ வசன பூஷணத்துக்கும் சாம்யம் சொல்லி வருகிறார் )

அங்கும் –
செழும் கடல் அமுதினில் பிறந்த (திருவிடந்தை )-அவள் பிரயோஜனமாய் இருக்கும் –
இங்கும்
புருஷகார வைபவம் -தொடங்கி -(26 சூரணைகள் )-ஆச்சார்ய அபிமானம் -ஈறாக
ஆறு பிரகரணத்தாலும் சொல்லுகிற அர்த்தங்கள் எல்லாம் ஆழ் பொருள்களாய் இருந்ததே யாகிலும்
சரம பிரகரணத்தில்-(குரோர் உபாயதாஞ்ச யோ)
சரம உபாயத்துக்கு சேஷமாய் இறே இருப்பது –

ஆகையால் இறே –
திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும் -என்று தொடங்கி
மன்னிய இன்பமும் மா கதியும் குரு வென்னு நிலை பெறும் இன்பொருள் தன்னையும் -என்று இறே
பொருள் முடிவாக அருளிச் செய்தது-

(1-திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-(1-22)
2-திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும் (23-114 )
3-அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும் (115-141 )
4-மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும் (142-242 )
5-ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும் (ப்ரபந்ந தினசர்யா 243-307 )
6-நாரணன் தாள் தரு நல் குரு நீதியும் (சதாசார்ய லக்ஷணம் – 308-320 )
7-சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர் தன்மையும் (ஸச் சிஷ்ய லக்ஷணம் -321-365 )
8-தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும் (நிர்ஹேதுக தயை 366-406)
9-மன்னிய இன்பமும் மா கதியும் குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும் (407-469 )
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன் எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்)

(ஒன்பது பிரகரணங்கள் ஆறாகும் பொழுது
முதல் அதுவே
2-3-4-5- பிரகரணங்கள் -இரண்டாவதும் மூன்றாவதும்
6-7-இரண்டும் சேர்ந்து நாலாவது ஆகும் –
8-ஐந்தாவது
9-ஆறாவது பிரகாரணம் ஆகும் )

(புருஷகார வைபவஞ்ச சாதனச்ய கௌ ரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே)

(பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை ஆறு பெறுவான் முறை அவன்
கூறு குருவை பனுவல் கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே )

(1-புருஷகார வைபவஞ்ச-பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை -(1-22-)
2-சாதனச்ய கௌரவம்-ஆறு -( 23-79 )
3-தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய–பெறுவான் முறை -( 80-307-)
4-சத்குரு உபசேவனம் -அவன் கூறு குருவை பனுவல் (308-365-)
5-ஹரிதயாம் அஹேதுகீம்–கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான் (366-406 )
6-குரோர் உபாயதாஞ்ச–மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு ( 409-469 )
எலாம் வசன பூடணம் அதில் தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே )

பெரு விலையனான ஆபரணத்துக்கு
நாயகக் கல் போலே யாய்த்து
ஸ்ரீ வசன பூஷணத்துக்கு
இப் பிரதேசம் -(ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்-447 )
நாயக ரத்னமாய் இருக்கும் படி
(எண்ணிக்கையில் நடுவில் உள்ள சூரணை கொள்ளாமல் விஷயத்துக்கு நாயகம்
மேம்பொருள் பாசுரம் திருமலைக்கு போல் )

இத்தனையும் அருளிச் செயலைப் பற்ற அதிஷ்டிக்கை இட்டுக் கொண்டு வந்தது
கீழ் அடங்கலும் மேல் அடங்கலும்
இதன் நிஷ்டையை ஸ்தாபிக்கிறது -என்று இறே
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்னும் இடத்துக்கு ஸ்ரீ ஜீயர் வியாக்யானம் செய்து அருளிற்று –
ஆகையால் இதுவே ஆழ் பொருளாகக் கடவது –

வேதம் ஒரு நான்கின் உட்பொருள் தந்த மெய்ப்பொருள் -என்று தொடங்கி
தீதில் சரணா கதி தந்த தன் இறைவன் தாளே அரணாகும் என்னுமது -( ஞானசாரம்-31- )-என்று இறே அருளிச் செய்தார் –

(வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது –31-ஆச்சார்யர் திருவடிகளே அரண் என்பதே மெய் பொருள் )

அன்றிக்கே
பேறு தருவிக்குமவன் தன் பெருமை -என்று தொடங்கி
நல் குருவின் வன்மையோடு எல்லாம் ஸ்ரீ வசன பூஷணம் அதில் தேறிட நமக்கு அருளுகையாலே
ஆறு பிரகரணத்தில் உக்தமான அசேஷார்த்தங்களும்
ஒரு சேதனனுடைய உஜ்ஜீவனத்துக்கு
ஓர் ஒன்றே ஜ்ஞாதவ்யமாக வேண்டுகையாலே
எல்லாம் ஆராய்ந்து அறிய வேணும் என்று ஆழ் பொருள் என்கிறார் ஆகவுமாம்-

முந்தின யோஜனையில்-
ஆழ் பொருள்கள் எல்லாம் என்கிறதுக்கு சேர-
மற்றை அர்த்தங்கள் எல்லாம் ஆஸ்ரயண விதி சேஷங்களாய் அறியப் படுமதாய் இருக்கும் –
தன்னை அறியும் போது உக்த லஷண யுக்தனான தான் என்று அறிய வேணும் –
ஆச்சார்யனை அறியும் போது ஆறு பிரகரணத்தாலும் பிரதி பாதிக்கப் படுகிற
ஷட் பத ( த்வய ) நிஷ்டனாக அறிய வேணும் –
ஆகையால் ஆழ் பொருள்கள் எல்லாம் அறிய வேணும் –

இதில் அர்த்தங்கள் எல்லாம் சாப்தமாக (மேல்) எழத் தோன்றி இருந்ததே யாகிலும்
இதுக்கு எல்லாம்-சர்வார்த்தான் விபரீதாம்ச-(ஸ்ரீ கீதை 18-32)- -என்னும் படி விபரீத அர்த்தத்தை கற்பித்து
அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்வார் ஒழிந்து
இதில் யதார்த்த ஞானத்தை யுடையராய்
இத்தை விஸ்வசித்து உஜ்ஜீவிப்பார் அரிதாய் இறே இருப்பது
ஆமார் அறிவுடையார் ஆவார் அரிதன்றே–(பெரிய திருவந்தாதி 37 )என்னக் கடவது இறே
ஆகையாலே அறிவார் ஆர் -என்கிறார்-

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யதுவுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மதுகரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை — பெரிய திருவந்தாதி-37-

(வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்க்கு உகந்து-சரணாகதி செய்வார்க்கு -விபரீத அர்த்தம் –
தான் அருள் செய்யும் நினைத்தவருக்கு உகந்து செய்வான் )

இனி மேல் இதன் அனுஷ்டாதாக்களின் அருமையை அறிவிக்கிறது –
ஆரது சொல் நேரில் அனுஷ்டிப்பார் –
தத் விபரீதங்களை அனுஷ்டித்துப் போருமது ஒழிய
தத் உக்த அர்த்தத்தின் படியே
நேரே நெறியே ஆசரித்து போருவார் ஆர் –
ஸ்ரீ வசன பூஷண வழியிலே வழி படுவார் யுன்டாவது அரிதாய் இறே இருப்பது –

(கற்க கசடற கற்க கற்றபின் அதுக்கு தக்க நிற்க வேண்டுமே )

அல்லாத சாஸ்த்ரங்களை அறிந்து அனுஷ்டிப்பார் யுண்டாகிலும்
இந்த திவ்ய சாஸ்திரத்தின் படியே அனுஷ்டிப்பார் அரிது இறே
ஆகையால் அருளிச் செய்தவர் தாமே அதின் படியை
ஊனமற ஆசரித்து இருக்கும் நாளை நாள் எனை நினைந்து -என்று
அந்த பரம ரஹஸ்ய பிரதிபாதகமான அர்த்தத்தின் படி அசங்குசிதமாக அனுஷ்டிக்கும் படியையும்
தத் பலமாக ஆச்சார்ய அநு ஸ்மரணத்தையும்-அருளிச் செய்தார் இறே –

இதன் ஆழ் பொருளை அறிந்தும்-அது சொல் நேரில் அனுஷ்டித்துப் போருவார்
ஸ்ரீ உலகாரியன் அருள் தப்பாமல் எய்திய தரத்தை யுடைய
ஸ்ரீ ஜீயர் தாம் ஒருவரும் இறே உள்ளது –

இனி இந்த மகா பிருத்வியிலே எல்லாம் சம்பாவிதங்களாய் இருக்க
தாத்ருசரான இவர்களைக் கிட்டாதோ என்று தம் திரு உள்ளத்துக்குக் கருத்தாக –
ஓர் ஒருவர் யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே — என்கிறார் –
இத்தை அறியவும்
அனுஷ்டிக்கவும்
அருமருந்து போலே ஓர் ஒரு மகாத்மாக்கள் யுண்டாகில் உண்டாம் அத்தனை காண் —

ஓர் ஒருவர் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கரம் அண்ணனும்
அவருக்கு
ச ப்ரஹ்மசாரிகளாய்
செந்தமிழ் சேர் ஸ்ரீ பட்டர் பிரான் ஜீயர் அன்றி
தேவு மற்று அறியாத ஸ்ரீ அழகிய மணவாள ஜீயரும் தத் பரதந்த்ரர் இறே –

(பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் -இவர் பூர்வாஸ்ரம இயற் பெயர் கோவிந்த தாசர் அப்பர்
திருக்குமாரர் – அழகிய மணவாள ஜீயர் —
இவர் திருக்குமாரர் வரதாச்சார்யர் -இவரே பிள்ளை லோகம் ஜீயர் -)

அண்ணனை எண்ணில் மற்று ஒருவரை எண்ணாது என் அணி விரலே -என்று
ஸ்ரீ வைஷ்ணவ தாசரான ஸ்ரீ அண்ணா மதிக்கும் படியான ஸ்ரீ மதுரகவி தாசர்
அண்ணன் போல்வார் ஒருவர் யுண்டாகில் யுண்டாம் அத்தனை

ச மகாத்மா ஸூ துர்லப -என்றும்-
ஸூ துர்லபா பாகவதாஹி லோகே -என்றும்-
தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்டே ப்ரிய தர்சனம் -என்றும் -சொல்லுகிறபடியே
பகவத் பரராய் இருப்பவர்கள் தான் தேட்டமாய் இறே இருப்பது –

இனி
அனுகூலரான ஆச்ச்சார்ய பரதந்த்ரர் அத்யந்த அபூர்வராய் இறே இருப்பது –
பகவத் பாரதந்த்ர்யத்துக்கு
ராமோ ராமோ ராம இதி -என்று ஒரு நாடாக யுண்டாய்த்து
ஆச்சார்ய பாரதந்த்ர்யதுக்கு
பரத அனுஜரான ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் ஒருவர் இறே உள்ளது

உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்வார் பத்துப் பேர் யுண்டு இறே
அவர்களைச் சிரித்து இருப்பார் ஒருவர் யுண்டு இறே
வடுக நம்பி ஆண்டானையும் ஆழ்வானையும் இரு கரையர் என்பர் -என்று இப்படி
குரு பக்தோத்த மோத்தம -என்னும்படி குரு பக்தர் ஆகையாலே
உத்தமோத்தமராய் ஸ்ரீ மான்களான அதிகாரிகள் ஓர் ஒருவரை இறே அருளிச் செய்தது –

(உண்டபோது ஒருவார்த்தையும் –உண்ணாத போது ஒரு வார்த்தையும் –சொல்லுவார் பத்து பேர் உண்டு இறே –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது —சூரணை -408–
அவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே –
அவர் பாசுரம் கொண்டு – இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –சூரணை -409-
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் —சூரணை -411-)

யுண்டாகில் -என்கிற எதி சப்தத்தாலே
ஓர் ஒருத்தர் தானும் துர்லபம் என்று தோற்றுகிறது-
இப்படி அலாப்ய லாபமானது கிட்டிற்று ஆகில் அவ்வளவு காண் –

உள்ளமே –
ஸ்ரீ வசன பூஷண் பூஷிதமான மனசே –
அதில் அகாதமான அர்த்தத்தை அறிந்து
தத் உக்தமான அனுஷ்டானத்தையும் ஆசரித்துக் கொண்டு போருமவர்களை
ஆதரித்துக் கொண்டு போருவாய் நீயே அன்றோ –

என் -ஓர் ஒருத்தர்க்கு ஒழிய அது எல்லார்க்கும் இது யுண்டாகாதோ-என்ன
எல்லாருக்கும் அண்டாதது அன்றோ அது –
தாங்களும் தங்களில் வைஷ்ணவர்கள் என்று இருக்கில்
எல்லார்க்கும் அதில் கம்பீரமான அர்த்தத்தை
ஸ்வ யத்ன ரூப ஞானத்தாலே அறியவும்
தத் ப்ரதிபாத்யமான விலஷண அனுஷ்டானத்தை
ஸ்வ யத்ன ரூப சக்தியாலே அனுஷ்டிக்கவும்
அசக்யமாய் இருப்பது ஓன்று அன்றோ –

அண்டாதது -அடங்காதது –
அத்தாலும் அசக்யமானது -என்றபடி –
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாய் இறே இருப்பது

அது –
என்று அர்த்தத்தில் துரவாஹத்வமும்
அனுஷ்டானத்தில் அசக்யத்வமும்
தோற்றி இருக்கிறது –

லோகோ சார்ய க்ருதே லோக ஹிதே வசன பூஷணே தத்வார்த்த
தர்சினோ லோகே தந் நிஷ்டாச்ச ஸூ துர்லபா-

ஜகதாச்சார்யரசிதே ஸ்ரீ மன் வசன பூஷணே தத்வஜ் ஞ்ஞாநஞ்ச
தன் நிஷ்டாம் தேஹி நாத யதீந்திர மே-என்றும் சொல்லக் கடவது இறே –

(உபதேச ரத்ன மாலை அறிய பலனும் எந்தை எதிராசன் இன்னருள் கிட்டும் –
அது கிட்டியவாறே ஸ்ரீ வசன பூஷண அர்த்தமும் அனுஷ்டானமும் கிட்டும் –
திருவாய் மொழி பெரிய திருமொழி அறியவும் எங்கள் கதியே ராமானுஜ முனியே அருள வேண்டும்

இந்த உபதேச ரத்தின மாலை தன்னை சிந்தை தனில் நாளும் சிந்திப்பார் எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவர் தாம் –
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி தன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற
எங்கள் கதியே இராமானுச முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும் தங்கு மனம் நீ எனக்குத் தா – )

————————————————

கீழ் ஓர் ஒருவர் யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே -என்று
அதிகாரிகள் சங்குசிதராய் இருக்கிறபடியைக் கண்டு
சர்வரும் வசன பூஷண அதிகாரிகளாம் படி திருத்துவோம் என்று
திரு உள்ளம் பற்றி
அபி முகராய் இருக்கிறவர்கள் ஆபி முக்யமே பற்றாசாக இதில்
அர்த்த நிஷ்டை யுடையராம் படி
அவர்களைக் குறித்து -பரோபதேசம் பண்ணி அருளுகிறார் –

உய்ய நினைவுடையீர் உங்களுக்குச் சொல்லுகின்றேன்
வையம் குரு முன்னம் வாய் மொழிந்த -செய்ய கலை
யாம் வசன பூஷணத்தின் ஆழ் பொருளைக் கற்று அதனுக்
காம் நிலையில் நில்லும் அறிந்து –56-

உக்ராத் பவாப்தி குஹராத் -உக்ரமான சம்சார புதைகுழி
(சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜநம்-ஜிதந்தே ஸ்தோத்ரம் )
த்ருதம் உத்தகீர்ஷா
ஜாயேதுவோ யதி ஜனார்த் உபாய ஏக
ஆலோகியதாம்
வசன பூஷண ஆத்ம நீதம்
நிஷ்டீயதாம் தத்
நியமேன
தத் யுக்த மார்க்கே

உய்ய நினைவுடையீர் –
உஜ்ஜீவிக்க வேணும் என்கிற மனசை யுடையவர்களே
மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமையும் -என்கிறபடியே
மனஸ் சஹாகாரம் ஆகிற சம்பத்தை யுடைய நீங்கள்

(பழுதிலா ஒழுகல் ஆறு -வேதம் கற்க வேண்டும் -இதுக்கு மனம் ஒன்றுமே போதுமே
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே )

இந்த சம்பத்தின் மேலே எந்த அதிகாரத்தை ஆர்ஜித்துக் கொள்ளப் போகிறீர்கோள் –
ஈஸ்வரன் படியைப் பார்த்தாலும்
ஆபி முக்யத்துக்கு அவ்வருகே –
அந்யன் நசேச்சதி ஜனார்த்தன -என்னும் படி இறே இருப்பது –
திரு மந்த்ரத்தின் யுடைய தாத்பர்யமான இப் பிரபந்த அப்யாச அனுஷ்டானங்களுக்கும்
ஸ்ரத்தை இறே வேண்டுவது –

(வேத சாரம் – உபநிஷத் சாரதர -அநுவாக சார தம- காயத்ரியில்
முதல் ஓதுகின்ற பொருள் முடிவான சுருக்கு தானே திருமந்திரம் )

ஆகையால் இவ்வளவு ஆனுகூல்யம் யுடைய –
உங்களுக்குச் சொல்லுகின்றேன் –
உங்கள் உஜ்ஜீவனத்திலே ஊன்றி இருக்கிற நான் உங்கள் கார்யம் பலிக்கும் தனையும்
இந்தப் பரமார்த்தத்தை சொல்லா நிற்கிறேன் –
சொல்ல உபக்ரமித்தல் சொல்லி முடித்தல் செய்ய வில்லை –
நீங்கள் அதிலே நிலை நிற்கும் தனையும் நான் சொல்லுகை தவிரேன் –
(நமது உஜ்ஜீவனமே மா முனிகள் நினைவு -சொல்லுகின்றேன் வர்த்தமானம் –
சொன்னேன் என்று முடிக்க வில்லையே
இது வரை முன்னுரை தானே -இனி மேல் தானே ஸ்ரீ வசன பூஷண சாரங்கள் )

ஆகில் நீர் சொல்லப் புகுகிற அந்த ரஹஸ்யம் தான் ஏது என்னில் –
வையம் குரு முன்னம் வாய் மொழிந்த –
பூர்வாச்சார்யர்களைப் போலே அர்த்தத்தின் சீர்மையைப் பார்த்து
ரஹஸ்யமாக உபதேசித்துப் போருகை அன்றிக்கே
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தம்முடைய கரை புரண்ட கிருபையாலே பின்புள்ளாரும் உஜ்ஜீவிக்கும் படி
முற்காலத்திலே மொழி பட்டோடும் கவியமுதம் -(திருவாய் – 8-10-5 )-என்னும்படி
தம்முடைய அனுபவத்துக்கு போக்கு வீடாக அருளிச் செய்து அருளின –

செய்ய கலையாம் வசன பூஷணத்தின் ஆழ் பொருளைக் –
அனுகூலருக்கு ஸ்வார்த்த பிரகாசத்தை பண்ணிக் கொண்டு இருப்பதான ஆர்ஜ்வத்தை உடைத்தாய்
சாஸ்திர ரூபமாய் இருப்பதான ஸ்ரீ வசன பூஷணமுடைய கம்பீரமான அர்த்தத்தை –

கற்று –
சத் சம்ப்ரதாய நிஷ்டரான சதாச்சார்யர்கள் சந்நிதியிலே
அவர்கள் அப்யசிப்பிக்க
அப்யசித்து –

தத் பலமாக –
அதனுக்காம் நிலையில் நில்லும் அறிந்து –
அந்த அப்யச்தமான அர்த்தத்துக்கு அனுகுணமான நிஷ்டையிலே
அதனுடைய கௌரவத்தை அறிந்து நில்லுங்கோள்-
உங்களுக்கு உஜ்ஜீவனம் சித்திக்கும் –

ஆழ் பொருளைக் கற்று -அதனுக்காம் நிலையில்-நிற்கை யாவது –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்கிற அகாத அர்த்தத்தை
ஸ்வாச்சார்யர்கள் சந்நிதியிலே சேவித்து ( காலஷேபம் கேட்டு-உணர்ந்து )
அதன் கௌரவத்தை அறிந்து
அதுக்கு அனுகுணமான நிஷ்டையில் நிஷ்டராய் இருக்கை -என்றபடி –

கேட்டிருக்கையாய் இருக்கும் (443)-என்றும்
கேட்டிருப்பார் -என்றும் – சொல்லக் கடவது இறே –

(ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பலகாலும் அருளி செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –சூரணை-443-)

(பூர்வர் அருளிச் செய்ய கேட்டு அதன்படி இருக்க வேண்டுமே
விஷ்ணு சித்தர் கேட்டு அதன் படி இருப்பார் )

இத்தால்
ஸ்ரீ வசன பூஷண அர்த்த நிஷ்டையே உஜ்ஜீவனம் என்றது ஆய்த்து –

(இதில் உறுதியே உஜ்ஜீவனம் –
தொழுது எழு என் மனமே
தொழுதால் எழலாம் உஜ்ஜீவனம்
தொழுவதே உஜ்ஜீவனம் -இதுவே வாழ்க்கை
பிறந்தார் உயர்ந்தே -பிறந்து உயர வேண்டாம் -உயர்ந்தே பிறந்தவர் ஆகிறார்
அதுவே போல் இதில் உறுதியான மனசே உஜ்ஜீவனம் )

——————————————-

கற்று அதனுக்காம் நிலையில் நில்லும் அறிந்து -என்று
அந்வய த்தாலே
இதில் அர்த்தத்தை ஸ்தாபித்தவர் –

கல்லாதது என்னோ கவர்ந்து -என்று
வ்யதிரேகத்தாலும்
இதில் அர்த்தத்தை ஸ்தாபித்து அருளுவாராய்
அபி முகராய் செய்கிறோம் என்று ஆறி இருந்த
கீழில் அவர்களைக் குறித்து

இவர்கள் இத்தை அபிநிவேசத்துடன் அதிகரியாமைக்கு
அடி ஒன்றும் காண்கிறிலோம் -என்று
ஸ்வ விசாரமாகப் பண்ணி
அருளுகிறார் –

தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் சிந்தை தன்னில்
மாசறவே யூன்றி மனனம் செய்து -ஆசரிக்க
வல்லார்கள் தாம் வசன பூஷணத்தின் வான் பொருளைக்
கல்லாதது என்னோ கவர்ந்து —57-

ஏ தேசிகா அதிகதானி
உபதேச ரத்னானி
ஆஸஸ்ய தே சதி
ததா ஆஸ்ரயிதம் சக்தா
தே யத்ன தகா
வசன பூஷண கூடம் அர்த்தம்
நைவ ஆஸ்ரயந்தி
பரிசீலன குதோந வித்வான்

தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் –
ஸ்வ பர ஹித பரராய் இருக்கிற தேசிகர்கள் சந்நிதியில்
ப்ரஸ்ன கால பிரதீஷராய் –
ஸ்ரவித்த ஸ்லாக்கியமான அர்த்தத்தை –

(சித்தம் சத் ஸம்ப்ரதாயே ஸ்திர தியமநகம் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
சத்வஸ்தம் சத்யவாஸம் சமய நியதயா சாது வ்ருத்த்யா ஸமேதம்
டம்பா ஸூ யாதி முக்தம் ஜித விஷயி கணம் தீர்க்க பந்தும் தயாளும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேசிகம் பூஷ்ணுரீப்சேத் -ஸ்ரீ நியாஸ விம்சதி —–1-

சத் புத்தி சாது சேவீ சமுசித சரிதஸ் தத்த்வ போதாபிலாஷீ
ஸூஸ்ருஷூஸ் த்யக்த மான ப்ரணி பதன பர ப்ரஸ்ன கால ப்ரதீஷ
சாந்தோ தாந்தோ அநஸூயு சரணமுபகத சாஸ்த்ர விசுவாஸ சாலீ
சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவி தபிமதம் தத்த்வத சிக்ஷணீய -ஸ்ரீ நியாஸ விம்சதி–3-)

சிந்தை தன்னில் மாசறவே –
சம்சய விபர்யய ரூபமான மநோ மாலின்யாதிகள் ச வாசனமாகப் போம் படி –
(சம்சய விபர்யய ரூபமான ஐயம் திரிபு )

யூன்ற மனனம் செய்து –
ஸ்ருதஸ்ய அர்த்தஸ்ய யுக்தி தோநு சிந்தனம் மனனம் -என்கிறபடியே
அந்த ஸ்ருதமான அர்த்தத்தை ஹிருத் கதமாக
மாசற்றால் மனனம் -என்னும் படி மனனம் பண்ணி –

ஆசரிக்க வல்லார்கள் தாம் –
உக்தமான அனுஷ்டானத்தில் ஒன்றும் நழுவாமல் – ஆசரிக்க வல்ல சக்தியை யுடைய தாங்கள் –

வசன பூஷணத்தின் வான் பொருளைக் –
தங்கள் அனுஷ்டானதுக்கு அனுக்ரமணி போலே இருக்கிற ஸ்ரீ வசன பூஷணத்தின் யுடைய
சீரியதான அர்த்தத்தை –
கனத்த பொருளை –

கல்லாதது என்னோ கவர்ந்து –
குருவான அர்த்தத்தை குருக்கள் சந்நிதியிலே அபி நிவேசத்துடன் இவர்கள் அதிகரியாமைக்கு ஹேது என்னோ –
(குரு -பெரியது லகு சிறியது -குருக்கள் ஆச்சார்யர்கள்
ஆழமான அர்த்தத்தை ஞானத்தால் பெரிய ஆச்சார்யர்கள் )
மா நிதியம் வசன பூஷணம் யுண்டே அதின் படியை யூனமற வாசரித்து -என்னும் படி
மகா நிதி போலே இருக்கிற இத்தைப் பெற்று வைத்து
அந்தகன் -அநந்த நிதி கண்டால் போலே அபேஷையோடே அதிகரிக்க வேண்டி இருக்க —
அத்தை உபேஷித்து-
வரில் பொகடேன் கெடில் தேடேன் -என்று இருக்கிறது ஏதோ –

இவர்கள் தங்களுக்கு ஞான சக்தியாதிகள் யுண்டாய்-
இதுக்கு அர்த்த பூர்த்தியும் யுண்டாய் இருக்க –
இத்தை மேல் விழுந்து மண்டி அதிகரியாமைக்கு அடி அறிய அரிதாய் இருக்கிறது –

அறிகைக்கும் அனுஷ்டிக்கைக்கும் ஈடான ஞான சக்திகள் தங்களுக்கு இல்லை என்ன ஒண்ணாது –
அனுஷ்டேயார்த்த பிரகாசகமான இதுக்கு அர்த்த பூர்த்தி இல்லை என்ன ஒண்ணாது –
ஆயிருக்க இப்படி இருக்கிறது அபி நிவேச மாந்த்யம் இறே என்றத்தை தாம் நிரூபிக்கும் முகத்தாலே
இது யுண்டாம்படி திருத்தி அருளுகிறார் –
கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வாத் -என்னும்படி
சாஸ்திர அனுஷ்டான யோக்கியமாய் இறே மனுஷ்ய ஜன்மம் தான் இருப்பது –

(நா வாயில் உண்டே–ஏத்தும் பொழுது உண்டே -என் நினைந்து போக்குவார் இப்போதே –
கர்த்ருத்வாதி கரணம் -ஞானம் வடிவு ஞானம் ஸ்வரூபன் -அறிவுடையவன் கர்த்தா –
செயல்படும் திறன் -சாஸ்திரம் அர்த்தவத்தாக ஆகவே –
கட்டளை இடுவதால் சாஸ்திரம் -ஸாஸனாத் -பின்பற்ற ஒருவன் இருந்தால் தானே
அது இருக்க பிரயோஜனம் -பொருள் உள்ளதாகும் –
இதுவும் திவ்ய சாஸ்திரம் -இதுக்கும் கர்த்தாவாக இருக்க வேண்டுமே -)

இத்தால்
இவ் வர்த்தம் பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இராமல்
சத் த்வரராய் சமக்ரமான இச்சையாலே சாதித்து அறிய வேணும் என்று கருத்து –
(துடிப்பால் த்வரையுடன் இருக்க வேண்டுமே
பேறு தப்பாது என்று துணிகையும் பேற்றுக்கு த்வரிக்கவும் வேணுமே
அடையும் இடம் ஸ்ரேஷ்டம் -விரோதி பாஹுல்யம் -நிரங்குச ஸ்வ தந்த்ரன் -பண்ணும் சரணாகதி எளிது –
மூன்றாலும் நம்பிக்கை விஸ்வாசம் குறையுமே
அதே போல் இங்கும் ஆபிமுக்யம் மாத்திரம் உள்ளது -அடைந்தே தீர வேண்டும் என்னும் பெரு விருப்பம்
அபிநிவேசம் வர -மாந்த்யம் குறைக்க உபதேசித்து அருளுகிறார் )

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading