மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -75-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி
விரோதி நிரசன சீலனான
கிருஷ்ணன்  தனக்கு வாசஸ் ஸ்தானமாக
விரும்பி இருக்கும் திருமலை
விருத்தாந்தத்தை
அனுபவிக்கிறார் –

——————————————————————————–

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-

பதவுரை

தடாவிய–பரப்பை யுடைத்தான
கோடு-சிகரங்களினுடைய
உச்சி வாய்–உச்சயிலே
அகடு தேய்ப்ப–கீழ் வயிறு உராயும்படியாக
சார்ந்து–கிட்டி
ஊர்ந்து இயங்கும்–மெல்ல ஸஞ்சரிக்கின்ற
வண் மதியின்–அழகிய சந்திரனிடத்துள்ள
ஒண் முயலை–அழகிய முயலை,
சினம் வேங்கை–கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது
சேர்ந்து–கிட்டி
பார்க்கும்–(அதைப் பிடித்துக் கொள்ளவும்விட்டுப் போகவும் மாட்டாமல்) எப்போதும் பார்த்தபடியே நிற்கப் பெற்ற
ஆயன்–கண்ணபிரானுடையதாய்
புனம் வேங்கை நாறும்–தன்னிலத்தில் வளர்ந்து செழிப்புற்ற வேங்கை மரங்கள் கமழப் பெற்றதான
பொருப்பு–மலை

———————————————————————————

வியாக்யானம் –

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய் –
பரப்பை யுடைத்தான
சிகரத்தின் உடைய
உச்சியிலே கிட்டிக் கீழ் வயிறு தேயும்படிக்கீடாக –

ஊர்ந்தியங்கும் வெண் மதியின்-
தன் போக்யதையாலே மெல்ல சஞ்சரியா நின்றுள்ள
சிகரத்திலே தேய்கையாலே
சாணையில் இட்டாப் போலே
ஒளியை யுடைத்தான சந்தரன் பக்கல் யுண்டான –

ஊர்ந்தியங்கும்-வெண் மதியின்-
தன்னிளைப்பார லாம் என்று சஞ்சரிக்கிற
வெளுத்த நிறத்தை யுடைத்தான சந்தரன் –

ஒண் முயலை –
அவன் பக்கல் யுண்டான
அழகிய முயலை
அதுக்கு பரபாகமாய் இருக்கிறபடி –

சேர்ந்து சின வேங்கை பார்க்கும் திருமலையே –
கோபத்தை யுடைத்தான
வேங்கைப் புலி வந்து கிட்டி
தனக்கு ஆமிஷமான முயல் என்று
புத்திபண்ணி கண் வைக்கும் திருமலையே –
சஹஜ சாத்ரவத்தாலே பார்க்கும் –
ஒருவனைப் பற்றி அத்தாலே விசஜாதியமாய் இருக்கையாலே கிட்டாது
பார்த்த படியே இருக்கும் –

ஆயன் புன வேங்கை நாறும் பொருப்பு –
கிருஷ்ணன் என்னது என்று அபிமானிக்கும் நிலமாய்
ஜாதி உசிதமான வேங்கையின் பரிமளத்தை யுடைத்தான திருமலை –
காட்டு வேங்கையின் பரிமளமே யான திரு மலை –

ஆயன் –
காடும் மலையும் உகக்குமவன் –
காட்டிலே வர்த்திக்கும் இடையருக்குக்காட்டில்
மரங்களுடைய நாற்றம் சாலப் ப்ரியம் இறே-

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading