அவதாரிகை –
இப்படிப் பட்ட ஐஸ்வர்யத்தை உடையவனை
ஆஸ்ரயிக்கும் போது
கண்ணாலே காண வேணுமே -என்ன
காணலாம் படி திரு மலையிலே நின்றான்
என்கிறார் –
—————————————————————————————
தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோரு நாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-
பதவுரை
தெளிந்த–ஸ்வச்சமாயிருக்கிற
சிலாதலத்தின் மேல் இருந்த மந்தி–கற்பாறையின் மீது இருக்கும் பெண் குரங்கானது.
அளித்த கடுவனை நோக்கி–ஸ்நேஹமுள்ள ஆண் குரங்கை நோக்கி
விளங்கிய வெண் மதியம் தான் என்றும் வேங்கடம்–‘விளங்குகின்ற வெளுத்த சந்திரன் (ப்பிடித்துக்) கொடு‘
என்ற சொல்லும்படிரு யிருக்கிற திருவேங்கடம்
மேல் ஒருநாள்–பண்டொரு காலத்தில்
மண்–பூமியை
மதியின்–தனது புத்தி சாதுரியத்தினால்
கொண்டு–(மாவலியிடத்தில் பெற்றுக்கொண்டு)
உகந்தான்–திருவுள்ள முவந்த ஸர்வேச்வான்
வாழ்வு–வாழுமிடம்
———————————————————————————————
வியாக்யானம் –
தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி –
ஸ்படிக மயமான சிலா தளத்திலே பெண் குரங்கு
திருச் சித்ர கூட பரிசரத்தில்
சிலா தலத்திலே
பிராட்டியும் பெருமாளும் இருந்தாப் போலே இருக்கிறது –
சிலா தலத்தின் மேல் இருந்த
சிலா தலத்திலே
முற்கோலி இருந்தபடி –
இருந்த –
வேண்டற்பாடு தோன்ற இருந்தபடி
கோதாவரி தீரத்திலே
சிலா தலத்திலே
முற்கோலிக் கொண்டு இருந்த பிராட்டியை போலே யாய்த்து
இந்தப் பெண் குரங்கும் –
அஸ்மின் மயா சார்த்தம் -ஆரண்ய -63-12-என்று பிராட்டி செய்த செயலை
திருமலையிலே திர்யக்குகள் அனுவர்த்தியா நின்றன –
அளிந்த கடுவனையே நோக்கி –
தன் பக்கலிலே மிக்க ஸ்நேஹத்தை யுடைத்தாய்
இது எப்போதோ நம்மை கைக் கொள்ளுவது என்று
காலம் பார்த்து நிற்கிற ஆண் குரங்கைப் பார்த்து
அளிந்த –
ப்ருகுடி படரைப் போலே
ஏவுவது காண் -என்று இருக்கை –
அளிந்த கடுவன் –
ஸ்நேஹத்தின் மிகுதி இறே ஊடல் –
கடுவனையே நோக்கி –
ஊடினால் ஒரு கடகர் பொருந்த விட வேண்டாதே
தானே பார்த்து வரத்தை சொன்னபடி
இங்கு இளையபெருமாள் இல்லையே –
நோக்கி –
சர்வ ஸ்வதானம் பண்ணி-
விளங்கிய வெண் மதியம் தா வென்னும் –
உஜ்ஜ்வலமான சந்திர மண்டலத்தை தா -என்னா நின்றது
எனக்கு பார்க்கைக்கு கண்ணாடி கொடு வந்து தா -என்பாரைப் போலே
திருமலையினுடைய அந்தம்
சந்திர பதத்துக்கு அவ்வருகேயாய்
அதிலே இருக்கிற மந்தி யாகையாலே
அப்புறம் இறே அதுக்குத் தோற்றுவது –
அவ்விடத்தில் களங்கம் இல்லையே
விளங்கிய வெண் மதியம் தா என்னும் ஆய்த்து –
தா என்னும் –
கடுவன் கீழே இருக்கையாலே அது மேலே நின்றும்
கீழ் நோக்கிக் கையை நீட்டுகிறபடி –
வேங்கடமே-
இப்படிப்பட்ட திருமலையே –
மேலோரு நாள் மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு –
பண்டொரு காலத்திலே
பூமியை புத்தி யோகத்தாலே அவன் இருப்புக்குச் சேரும்படி
தன்னைத் தாழ விட்டுக் கொண்டு
இரந்து
பெற்றதுக்கு உகந்தவன் தனக்கு
சம்பத்தாக் நினைக்கும் தேசம் –
மண் மதியில் கொண்டுகந்தான் –
கொள்ளும் விரகு அறிந்து
இரக்கக் கொடுக்கும் என்று
இரந்து
கொண்டான் –
வாழ்வு –
வர்த்திக்கும் தேசம்
அவனுடைய ஐஸ்வர்யம் -என்றுமாம் –
மண் மதியில் கொண்டு –
இந்த மௌக்த்யம்- அத்தை-பெண் குரங்கு சந்த்ரனை தா -என்றத்தை -ஸ்மரித்த படி –
—————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply