ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -73 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவை மத்யஸ்தமாம் படி
தாம் அவ் விஷயத்திலே
ப்ரவணரான படி
சொல்லுகிறது –

———————————–

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழா  யானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான் ——-73-

பதவுரை

நெஞ்சே–(நல்லது கெட்டதுகளை ஆராயக்கூடிய ) மனமே!
நீ–நீ
பூந்துழாயானை–அழகிய திருத்துழாய் மாலை யணிந்த பெருமானை
புகழ்வாய்–ஸ்தோத்ரம் பண்ணினாலும் பண்ணு;
(அன்றியே)
பழிப்பாய்–நிந்திப்பதானாலும் நிந்தி;
(அன்றியே)
இகழ்வாய்–அநாதரித்தாலும் அநாதரி;
(அன்றியே).
கருதுவாய்–ஆதரித்தாலும் ஆதரி; (நீ உனக்கு இஷ்டமானபடி செய்;)
திகழ் நீர் கடலும்–விளங்குகின்ற ஜல பூர்த்தியை யுடைய ஸமுத்ரமும்,
மலையும்–பர்வதங்களும்
இரு விசும்பும்–பரம்பிய ஆகாசமும்
காற்றும்–வாயுவும்
உடலும்–(தேவாதி) சரீரங்களும்
உயிரும்–(அந்தந்த சரீரங்களிலுள்ள) (பிராணிகளும் ஆகிய இவற்றை யெல்லாம் )
ஏற்றான்–தரித்துக் கொண்டிருப்பவன் அவ் வெம்பெருமானே காண்.

——————————————————————————–

வியாக்யானம் –

புகழ்வாய் பழிப்பாய் நீ –
வாக்குத் தனக்கடைத்த காரியத்தைக் கொள்ளிலும் கொள்
அன்றிக்கே
பழிக்கிலும் பழி –

பூந்துழா  யானை –
புகழ்ந்து அல்லது நிற்க ஒண்ணாத விஷயம் –

இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே –
விஷயம் இருந்தபடி கண்டாய் இறே
இப் பொகடு சரக்கை அநாதரிக்கிலும் அநாதரி-
ஆதரிக்கிலும் ஆதரி

புகழ்வாய் என்கிறது மனசை
நெஞ்சே உனக்கு இவற்றில் நல்லது  தெரியும்   இறே

திகழ் நீர்க் -இத்யாதி
நீ முன்னம் செய்தபடி செய்
புறம்பு அவனை ஒழிய ஆஸ்ரயணீயர் இல்லை –
என்கிறார் –

திகழ் நீர்க் கடலும் மலையும் –
இரண்டாலுமாகக் காரியத்தைச் சொல்லுகிறது –

இரு விசும்பும் காற்றும் –
காரணமான பூதங்களுக்கும் உப லஷணம்-

உடலும் உயிரும் ஏற்றான் –
இத்தால்
இவை எல்லாம் அவனுக்கு கார்யதயா சேஷம்
அவன் சேஷி -என்கிறது

யச்யாத்மா சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம்
ஆதாரத்தைப் பற்றிலும் பற்று
ஆதேயத்தைப் பற்றிலும் பற்று
ரஷகத்வத்தைப் பற்றிலும் அவனையே பற்ற வேணும் –

உடலும் உயிரும் ஏற்றான் –
இவை யாகில் தான் என்றபடி –

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading