ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -62 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவற்றை உண்டாக்கி
மேல் உள்ள கார்யங்கள் தாங்களே செய்து கொள்ளுகிறார்கள் என்று
இருக்கை  அன்றிக்கே
இவற்றுக்கு விரோதி யுண்டாமன்று
களை பிடுங்குவானும் அவனே
என்கிறார் –

———————————————

புணர் மருதின் ஊடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மண மருவ மால் விடை யேழ்   செற்று கணம் வெருவ
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
சூழரவப் பொங்கு அணையான் தோள் ——-62-

பதவுரை

புணர் மருதின் ஊடு போய்–ஒன்றோடொன்று இணைந்திருந்த (இரட்டை) மருதமரத்தின் நடுவே தவழ்ந்து சென்று
[பின் பொருகாலத்தில்]
பூங்குருந்தம் சாய்த்து–(இலையும் கொம்புந் தெரியாதபடி) பூக்கள் நிரம்பியிருந்த குருந்த மரத்தை தள்ளிப் போட்டு
(மற்றுமொரு காலத்தில்)
மணம் மருவ–(நப்பின்னைப் பிராட்டியோடு) விவாஹம் நிறைவேறுதற்காக
மால் விடை ஏழ் செற்று–பெரிய வடிவையுடைய ஏழு ரிஷபங்களையும் முடித்து
(இன்னமொரு காலத்தில்)
கணம் வெருவ–எல்லாப் பிராணிகளும் நடுங்கும்படி
ஏழ் உலகும் தாயினவும்–மேலேழுலகங்களில் தாவிச் சென்றவையும்
எண் திசையும் போயினவும்–எட்டுத் திக்குக்களிலும் போய்ப் பரவியவையும்.
[எவையென்றால்]
சூழ் அரவம் பொங்கு அணையான் தோள்–(பரிமளம் குளிர்த்தி மென்மை என்னும் குணங்கள்) நிரம்பிய திருவனந்தாழ்வானை
சிறந்த படுக்கையாக வுடையனான ஸர்வேச்வரனது திருத் தோள்களேயாம்.

————————————————————

வியாக்யானம் –

புணர் மருதின் ஊடு போய்ப்-
ஓன்று என்னலாம் படி நிர் விவரமான மருதின் நடுவே
இடம் கண்டு போய் –

பூங் குருந்தம் சாய்த்து –
அடியே பிடித்துத் தலை யளவும் செல்லப் பூத்து
தர்ச நீயமாய் நின்ற குருந்தத்தைச் சாய்த்து –
பூவைக் காட்டி அந்ய  பரதை பண்ணி வஞ்சிக்க  நினைக்கை –

மண மருவ மால் விடை யேழ்   செற்று
நப்பின்னை பிராட்டி யோட்டைப்
பணி க்ரஹண மங்களமானது தலைக் கட்டுகைக்காக
கொடியவான வ்ருஷபங்கள் ஏழையும் முடித்து

கணம் வெருவ ஏழுலகத் தாயினவும் –
சங்கைஸ் ஸூராணாம்-என்கிறபடியே
அநு கூலரான தேவ ஜாதி விளைவது அறியாதே அஞ்சும்படிக்கு ஈடாக
ஏழு லோகங்களையும் வளர்ந்து அநாயாசேன அளந்து கொண்டனவும் –

கீழ் 
தானாகக் வந்த ஆபத்து போக்கின படியும்
நப்பின்னை பிராட்டிக்கு வந்த ஆபத்து போக்கின படியும் சொல்லிற்று

இங்குப்
பிராட்டிக்குச் செய்யும் செயலை
இந்த்ரனுக்குச் செய்த படி சொல்லுகிறது-

மெண்டிசையும் போயினவும் –
எட்டு  திக்குகளிலும் போய் வ்யாபித்தனவும் –

சூழரவப் பொங்கு அணையான் தோள் –
உரப்பை யுடைத்தாய்
நாற்றம் குளிர்த்தி மென்மைகளால் குறைவற்று உயர்ந்து இருந்துள்ள
திரு வநந்த வாழ்வான் மேலே திருக் கண் வளர்ந்து அருளக் கடவ சர்வேஸ்வரன் உடைய
திருத் தோள் கிடீர்

அவன் மேலே சாய்ந்தாலும் பொறாத படியான  ஸூகுமார்யத்தை யுடையவன் கிடீர்
இச் செயல்களைச் செய்தான்
படுக்கையில் கண் வளரப் பெறாதே அலமந்து திரிவதே

பாண்டு ரஸ்ய ஆதபத்ரஸ்ய சாயாயாம் ஜரிதம் மயா-அயோத்யா -2-15-
சிம்ஹாசனத்தில் இருக்க அவசரமே பெற்றிலன் -என்கிறார்

இக் காலத்தில் இறே நிழலிலே முத்துக் குடை இடுவது –

———————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading