ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -58 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஆன பின்பு -அவ்விஷயத்தை விட்டு
நெஞ்சே
நமக்கு ஒருக்காலும் ஆறி இருக்க விரகில்லை கிடாய்
என்கிறார் –

—————————————–

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றில்லை யடை—58-

பதவுரை

நெஞ்சே–மனமே!
மலர் கொண்டு–புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டும்
தூபம்–தூபத்தை
கை ஏந்தி–கையிலே ஏந்திக் கொண்டும்.
தொழுது–(எம்பெருமானை ) வணங்கி
எழுதும்–உஜ்ஜீவிப்போம்;
எழு–நீ புறப்படு;
வாழி–(உனக்கு இந்த ஸ்வபாவம்) நித்தியமாயிடுக:
[நான் இப்படிச் சொல்லவதற்குக் காரண மென்ன வென்றால்]
மந்திரங்கள்–பகவந் மந்த்ரங்களை
பழுது இன்றி கற்பனவும்–முறைப்படியே நாம் அப்யஸிக்கின்றனவும்
மால் அடியே கை தொழுவான் –ஸர்வேச்வரன் திருவடிகளைத் தொழுவதற்காகவேயாம்:
ஆன பின்பு]
அந்தரம் ஒன்று இல்லை–(நாம் ஆறி யிருப்பதற்கு) அவகாசம் சிறிது மில்லை;
அடை–(அப் பெருமானை) விரைவில் சென்று கிட்டு.

———————————————–

வியாக்யானம் –

தொழுது –
அஞ்சலி பண்ணி

மலர் கொண்டு –
அழகிய செவ்விப் பூவைக் கொண்டு –

தூபம் கையேந்தி –
தூபத்தைக் கையாலே தரித்து –

எழுதும் –
உஜ்ஜீவிப்போம்

எழு-
கடுக எழுந்திரு
ஒருப்படு –

வாழி நெஞ்சே-
நெஞ்சே -உனக்கு இந்த சம்ருத்தி நித்யமாக செல்லுக –

பழுதின்றி –
குருகுல வாஸம் பண்ணிப் பழுது விழக் காண்கை –
முதலிலே சொல்லில் உத்பத்தி தோஷமேயாய் ஆயிற்று இறே
கிடந்தானை கண்டேறுகை அன்றிக்கே
சந்தை இட்டுக் கற்கை –

பழுதின்றி -மந்திரங்கள் கற்பனவும் -மாலடியே கை தொழுவான் –
நாம் திரு மந்த்ரம் தன்னில் வாசனை பண்ணுகிறது
பழுதின்றி மாலடியிலே   கை தொழுகைக்காக –
விச்சேத சங்கை வாராத படி சர்வேஸ்வரன் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யம் பண்ணுகைக்காக

அந்தரம் ஒன்றில்லை யடை-
ஆன பின்பு நமக்கு ஆறி இருக்க அவசரம் இல்லை
கடுகச் சென்று கிட்டு –

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading