(ஒவ் ஒன்றும் தங்கள் தலைவனுக்கு அடி பணிந்து
பெரிய திருவடி மேல் ஸத்ய பிரமாணம் பண்ணுமா இங்கு உள்ள பாம்புக்களைத் தீண்ட
மாட்டோம் கரடி ஜாம்பவான் -பாம்புகள் ஆதி சேஷன் -யானைகள் கஜேந்திரன்
சிங்கங்கள் நரஸிம்ஹர் இடம் ஆணை
கூரத்தாழ்வான் -பரஸ்பர விரோதம் இல்லாமல் இங்கு உள்ளவற்றை அனுபவிக்கிறார்
சிலம்பாறு -வேகமாக –மந்தமாக நுங்கும் நுரையுமாக -அருவியாக -மது குடித்து தள்ளாடும் போல்
இயற்க்கை கச்சேரி –
தேன் வண்டுகள் பாட -குயில்களும் பாட -ஹம்ஸங்கள் ஆட -மலர்கள் தேன் பொழிய -மான் கணங்கள் புல் மேயாமல் ரசிக்க –
ரிஷப கிரி -யமதர்மராஜன் தபஸ்ஸூ காளை வடிவம்
சங்க காலம் பிரசித்தம்
பதினெட்டாம் படி கருப்பன்
மலையாளர் -வர -காவல் தெய்வம்
சித்ரா பவுர்ணமி விசேஷம்
தை ஹஸ்தம் விசேஷம் -நித்ய ஸூந்தர பாஹு ஸ்தவம் பாராயணம்
யசோதை பிராட்டி கை பட்டு கபாலங்கள் சிறந்து
பெரியாழ்வார் திருவரசு
பின் -பிரகாரம் நித்ய திரு மஞ்சனம்
வஞ்சக் கள்வன் –
முடிச்சோதி அனுபவம் அழகரை அனுபவித்து
ஐப்பசி சுக்ல பக்ஷம் துவாதசி -தொட்டி திருமஞ்சனம்
திருமாலை ஆண்டான் அவதாரம் இங்கு –
பஞ்ச ஆயுதம் ஏந்தி மூலவர் சேவை
ஸூ ந்தர வல்லித்தாயார்
ஆண்டாள் அமர்ந்த திருக் கோலம் -கூடாரைசேர்த்தி உத்சவம்
பங்குனி உத்தரம் நான்கு தேவிமார்கள் உடன் சேர்த்தி )
வடக்குத் திருமலை -தெற்குத் திருமலை -கீழை வீடு மேலை வீடு -நான்கையும்
ஆழ்ந்து அனுபவம் ஆழ்வார்களாலும் ஆச்சார்யர்களாலும் –
திருத்தாயார் பதிகம் இது –
மூவரில் –பிரவேசம் —
இவ்விருப்பைத் தவிர்த்து பரம பதத்தைத் தர வேணும் என்று அபேஷித்தார்-
(கீழே திரு வல்ல வாழ் )
அப்போதே அது பெறாமையாலே -இத்தைத் தவிர்த்து அத்தை தருகைக்காக வந்து நிற்கிற
இங்கே ஆஸ்ரயித்து ( திருக்குறுங்குடியிலே -9-5- சரணாகதி செய்தார் )
நாம் அபேஷிதம் பெறாது ஒழிவோமோ என்று அவசந்னராய்
(ஐந்துடன் எழும் – சங்கதி
ஆறாவது ஐந்து உடன் தொடர்பு உடைய சங்கதி பார்த்தோம் -தானே எழுந்தார் –
சேர விட பிராட்டி இருப்பதை அனுசந்தித்து நெஞ்சையும் பிறரையும் கூட்டிப் போனார்
ஏழில் -அதீத வைராக்யம் -மருவு நெஞ்சே என்று
எட்டாம் -பதிகம் –நெஞ்சு இவரது த்வரைக்கு ஈடு கொடுக்காமல் இருக்க தாம் செய்து காட்டி
நெஞ்சைக் கூட்டிப் போனார் -ஆகவே விஷயம் ஏழாம் பாதிக்க விஷயம் தானே )
அந்த அவசாத அதிசயத்தாலே தாமான தன்மை அழிந்து
எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை பிராப்தராய்
(சாத்மிக்க போகம் கொடுக்கவே அவன் பிரிந்தான் )
அப்பிராட்டி தான் தம் தசையைத் தான் பேச மாட்டாதே கிடக்க
அவள் படியைப் பேசுகிற திருத் தாயார் தசையை ப்ராப்தராய் –
(மகள் அவஸ்தை முற்ற தாய் பதிகமாயும் அதுவும் முற்ற முற்ற தோழி பாசுரங்கள் பிறக்கும் )
அவள் தன் மகள் தசையை அனுசந்தித்து
இவள் ஆற்றாமை இருந்த படியால் அவனோடு அணைந்து அல்லது தரிக்க மாட்டாள் போலே போலே இருந்தது –
அணைத்து விட வல்லளே
அன்றிக்கே
இங்கனே நோவு படும் இத்தனையோ -என்று
பின்னையும் தானே அவனைக் கிட்டியே விடும் என்று
அறுதி இட்டு தரிக்கிறாளாய் இருக்கிறது –
(இப்படி எடுப்பும் சாய்ப்புமாகவே பாசுரங்கள் போகுமே )
(தந்தை தாயில்-9-7- சம்சாரத்தில் அருசி தோற்ற அருளிச் செய்து அத்தாலே பரமபத பிராப்தி அபேக்ஷிதம் –
அதுக்குக் கீழ் திரு மொழியில் –9-5-சரணாகதி -தத் அர்த்தமாக ஆஸ்ரயித்து -அது பெறாமையாலே
அது முன் இது பின்னாக இருக்கிறதே என்னில்
சரணாகதி என்ன பிரயோஜனம் கேள்விக்கு பதிலாக முமுஷுத்வம் என்றபடி
அந்யாப தேசத்தாலே பேசுகிறார் )
—————————————————–
மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூ வலருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-
(கடலுள் கிடந்து- அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது
இருவர் அவர் முதலும் தானே -என்பதால் இங்கும் கடலுள் கிடந்தது -என்கிறார்
கூடுங்கொலோ–சங்கை பாசுரம் தோறும் )
மூவரில் முன் முதல்வன் –
இந்த்ரனையும் கூட்டி மூவர்க்கு பிரதானன் -என்னுதல்-
அன்றிக்கே
மூவரில் வைத்துக் கொண்டு தான் பிரதானன் -என்னுதல் –
முழங்கார் கடலுள் கிடந்து-
திரைக் கிளப்பத்தாலே பெரிய கோஷத்தை உடைத்தான
திருப் பாற் கடலிலே ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கும் படி வந்து கண் வளர்ந்து அருளி –
பூ வலருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத்-
விலஷணமான திரு நாபி கமலத்திலே
ஜகத்தை சிருஷ்டித்து
பின்னைப் பிரளயம் வந்தவாறே -வயிற்றிலே எடுத்து வைத்து –
உள்ளே கிடந்து நெருக்குப் பட ஒண்ணாது என்று வெளிநாடு காண உமிழ்ந்து
இப்படி நோக்குகிற (ரக்ஷிக்கும் )-அயர்வறும் அமரர்கள் அதிபதியை –
திரு மால் இருஞ்சோலை நின்ற கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–
இப்படி உபய விபூதி உக்தனாய் இருந்து வைத்து –
(புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த-தேவர்கள் நாயகனை-இப்படி உபய விபூதி உக்தனாய்)
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து –
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த கிலேசத்தைப் பரிஹரித்து –
கோவிந்தாபிஷேகம் பண்ணினவன் –
பிற்பாடராய்-
இடக்கை வலக்கையும் அறியாத சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கைக்காக
திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –
அவனோடு அணைக்கைக்கு ஈடான அழகை உடையவள்
அணைந்தே விட வல்லளோ –
(தேவர்கள் நாயகன் -பரத்வம்
கடலினுள் கிடந்தான் -வ்யூஹம்
கோவலர் கோவிந்தன் -விபவம்
திருமாலிருஞ்சோலை நின்றவன் –அர்ச்சை )
———————————————-
(இடை அழகு கீழ்
கண் அழகு இதில்
கோவலர் கோவிந்தன் என்று வெண்ணெய் உண்ட வாயன் அழகனைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றைக் காணாவே
கயல் கண்ணி இவள் கண்ணனைக் காணுமோ என்று மநோ ரதிக்கிறார்
இதில் திருவரங்கம் சேர்ந்தே அனுபவம் )
புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னை
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்றான்
கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே –9-9-2-
(புனைகள் கண் வளரா நிற்கிற -பாட பேதம் -புன்னைகளே பொருந்தும் )
புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள்
புன்னைகள் வளரா நிற்பதாய்
காவிரியால் சூழப் பட்டு இருக்கிற கோயிலாகிற
மகா நகரத்திலே கண் வளர்ந்து அருளுகிற
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னை
பிரதானனை-
மூ வுலகும் படைத்த பிரதான மூர்த்தி தன்னை –
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்றான்-
பணைகள் மிக்க பூம் பொழிலிலே –
கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே –
ரஷணத்துக்கு இட்ட வீரக் கழல் த்வனியா நின்றுள்ள திருவடிகளை –
அவற்றைக் காண்கைக்கு கண் படைத்த இவள்
கண்டே விட வல்லளேயோ –
(திருத்துழாய் சாத்துவதும் -திரு அபிஷேகமும் கனை கழலும் ரக்ஷணத்துக்கு ஸூசகம் )
—————————————–
(ஆபரணங்கள் சாத்திக் கொண்டு -அவன் வந்தால் அவனுக்குப் பிடிக்குமே
கீழே அரங்கத்தில் பள்ளி கொண்டவன் தானே ஆல மா மரத்தினால் ஒரு பாலகனாய் –
என்பதால் அதை அனுபவிக்கிறார் )
உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகனாய் ஆலிலை மேல்
கண் துயில் கொண்டுகந்த கரு மாணிக்க மா மலையை
திண்டிறல் மா கரி சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
அண்டர் தங்கோவினை இன்று அணுகும் கொலோ என்னாயிழையே —9-9-3-
(ஆய் இழை -ஆராய்ந்து அணிந்த ஆபரணங்கள் )
உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகனாய் ஆலிலை மேல் –
சகல லோகங்களையும் எடுத்து வயிற்றிலே வைத்து
ஒரு பாலகனாய்
ஒரு பவனான ஆலந்தளிரிலே
கண் துயில் கொண்டுகந்த கரு மாணிக்க மா மலையை
கண் வளர்ந்து அருளி
ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்தை பண்ணப் பெறுகையாலே
ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய் இருக்கிறவனை –
திண்டிறல் மா கரி சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற –
சிம்ஹங்களுக்கு அஞ்சாத திண்மையை உடைத்தான
ஆனைகள் சேரா நின்றுள்ள
திரு மலையிலே நின்று அருளின –
(பத பதார்த்தங்களில் மிக்க திறல் -இங்கு அதுக்கு வியாக்யானம் )
அண்டர் தங்கோவினை இன்று அணுகும் கொலோ என்னாயிழையே –
அண்டாந்தர வர்த்திகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை –
அவனுக்கு ஈடாக ஒப்பித்து இருக்கிற இவள்
அவ் ஒப்பனையோடு சென்று அணுக வல்லளேயோ –
(ஒவ் ஒன்றும் தங்கள் தலைவனுக்கு அடி பணிந்து
பெரிய திருவடி மேல் ஸத்ய பிரமாணம் பண்ணுமா இங்கு உள்ள பாம்புக்களைத் தீண்ட
மாட்டோம் கரடி ஜாம்பவான் -பாம்புகள் ஆதி சேஷன் -யானைகள் கஜேந்திரன்
சிங்கங்கள் நரஸிம்ஹர் இடம் ஆணை
கூரத்தாழ்வான் -பரஸ்பர விரோதம் இல்லாமல் இங்கு உள்ளவற்றை அனுபவிக்கிறார்
சிலம்பாறு -வேகமாக –மந்தமாக நுங்கும் நுரையுமாக -அருவியாக -மது குடித்து தள்ளாடும் போல்
இயற்க்கை கச்சேரி –
தேன் வண்டுகள் பாட -குயில்களும் பாட -ஹம்ஸங்கள் ஆட -மலர்கள் தேன் பொழிய -மான் கணங்கள் புல் மேயாமல் ரசிக்க –
ரிஷப கிரி -யமதர்மராஜன் தபஸ்ஸூ காளை வடிவம்
சங்க காலம் பிரசித்தம்
பதினெட்டாம் படி கருப்பன்
மலையாளர் -வர -காவல் தெய்வம்
சித்ரா பவுர்ணமி விசேஷம்
தை ஹஸ்தம் விசேஷம் -நித்ய ஸூந்தர பாஹு ஸ்தவம் பாராயணம்
யசோதை பிராட்டி கை பட்டு கபாலங்கள் சிறந்து
பெரியாழ்வார் திருவரசு
பின் -பிரகாரம் நித்ய திரு மஞ்சனம்
வஞ்சக் கள்வன் –
முடிச்சோதி அனுபவம் அழகரை அனுபவித்து
ஐப்பசி சுக்ல பக்ஷம் துவாதசி -தொட்டி திருமஞ்சனம்
திருமாலை ஆண்டான் அவதாரம் இங்கு –
பஞ்ச ஆயுதம் ஏந்தி மூலவர் சேவை
ஸூ ந்தர வல்லித்தாயார்
ஆண்டாள் அமர்ந்த திருக் கோலம் -கூடாரைசேர்த்தி உத்சவம்
பங்குனி உத்தரம் நான்கு தேவிமார்கள் உடன் சேர்த்தி )
————————————————–
(ப்ரஹ்லாதனுக்காக
பரியனாக வந்த அவுணன் உடல் கீண்ட -அனுசந்தானம் இதில் )
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
பங்கய மா மலர்க் கண் பரனை யெம் பரஞ்சுடரை
திங்கள் நன் மா முகில் சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை யின்று நணுகும் கொலோ என் நன்னுதலே —9-9-4-
பரனை யெம் பரஞ்சுடரை-ஸ்வரூபத்தாலும் திவ்ய மங்கள விக்ரஹத்தாலும் பராத் பரன் –
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் -பரன் -ஜ்வலந்தம் பரஞ்சுடர் –
நங்கள் பிரானை-திருத்தாயாருக்கும் உபகாரகன்
என் நன்னுதலே-அபிமானம் -தனது ப்ராவண்யமே இவளது ப்ராவண்யத்துக்கும் ஹேது
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த –
சிம்ஹ வேஷத்தை உடையனாய்
ஹிரண்யன் உடைய வர பலத்தாலே திண்ணியதான மார்வை
அநாயாசேன கிழித்து
சிறுக்கன் விரோதியை போக்கப் பெற்றோமே -என்று அத்தாலே உகந்து
பங்கய மா மலர்க் கண் பரனை யெம் பரஞ்சுடரை –
உகந்த உகப்பு திருக் கண்களிலே தோற்றும் படி
இருக்கிற சர்வாதிகனை –
ஜ்வலந்தம் -என்கிறபடியே -திரு மேனியிலே புகுந்த புகரைச் சொல்லுகிறது –
திங்கள் நன் மா முகில் சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற –
சந்திர பதத் தளவும் ஓங்கின சிகரத்தை உடைத்தான
திரு மலையிலே வந்து சந்நிஹிதனாய் –
நங்கள் பிரானை யின்று நணுகும் கொலோ என் நன்னுதலே –
நமக்கு எளியவன் ஆனவனை –
அவ் வெளிமைக்கு தோற்று இருக்கிற இவள்
கிட்ட வல்லளேயோ –
(பரத்வத்துக்குத் தோற்ற நித்ய ஸூரிகள் போல் அல்லவே ஸுவ்லபயத்துக்குத் தோற்ற இவள் )
————————————
பரியனாக வந்த அவுணன் உடல் கீண்ட அனுபவம் கீழே –
உகந்த உள்ளத்தனாய் உலகம் அளந்த -பாசுரப்படி -திருவிக்ரமன் அனுபவம் இதில்
தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன்
தேனமர் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
வானவர் கோனை யின்று வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-5-
தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து –
மகா பலியினுடைய யாகத்திலே
ஆசூர பிரக்ருதிகள் நடுவே தனியே
வாமன வேஷத்தைக் கொண்டு போய்ப் புக்கு வளர்ந்து –
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன் –
பூமியாந்தரிஷ்யாதிகள் மூன்றடியிலே அடங்கும்படி
அளந்தவன் –
தேனமர் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற –
தேன் மிக்கு பூத்து இருந்துள்ள
சோலையாலே சூழப்பட்ட
திருமலையிலே வந்து நின்ற –
வானவர் கோனை யின்று வணங்கித் தொழ வல்லள் கொலோ –
அயர்வறும் அமரர்கள் அதிபதியை
அவர்களோடு ஒத்த ருசியை உடைய
இவள் வணங்கித் தொழ வல்லள் கொலோ –
ஸதா பஸ்யந்தி ஸூரயா –நித்ய அஞ்சலி -நம இத்யேவ வாயினர் போல் இவளும்
————————————————
(உகந்த உள்ளதனாய் என்றும்
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்றும்
அதி மானுஷ சேஷ்டிதங்கள் அனுசந்தித்து
மேலே மூன்று பாசுரங்களால் கோவலனாய் கோவிந்தனாய் -என்று
முதல் பாசுர அனுபவம் விசத தமமாக அனுபவிக்கிறார்
வட மா மதுரையும் தென் மதுரையும் சேர்ந்து அனுபவம் இதில்
அந்த அவதார பலம் இருக்கிறபடி )
நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ —9-9-6-
நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான் –
பர பக்தி இல்லாதார்க்கும்
ஈஸ்வரன் இல்லை என்கைக்காகிலும் நினையாதவர்க்கும்
அரியான்
சதுர் விம்சதி தத்வாத்மிகையாய் இருக்கும் பிரகிருதி
பஞ்ச விம்சகன் ஆத்மா
ஷட் விம்சகன் ஈஸ்வரன் -என்று
பரிகணித்தது இல்லை என்றும்
அதுவும் அன்றிக்கே இருக்கை –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று –
பர பக்திக்கும்
அத்வேஷத்துக்கும் வாசி வையாதே
தன்னைக் கொடுப்பான் ஒருவன் -என்கை –
(நேசம் அதி ஸ்நேஹம்
அது இல்லாமை என்றாலே நினையாதவர் ஸித்திக்குமே
இதுக்கு இரண்டு வித நிர்வாகங்கள்
ஈஸ்வர விஷய நிஷேததுக்கு ஆகிலும் நினையாதவர்
தத் பரிகணனும் இல்லை -தாத்பர்ய த்வயம்
அன்றிக்கே
ஒரே வாக்கியமாக -நேசம் இல்லாத த்வேஷ ஆதிக்யம் உள்ளாருக்கு அத்வேஷம் கொடுத்து
அத்துடன் நில்லாமல் தன்னையும் கொடுத்து அருளுகிறானே )
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான் –
பர பக்தியையும்
அத்வேஷத்தையும்
பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் –
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற –
அந்த அவதார பலம் இருக்கிறபடி –
கேசவ நம்பி தன்னைக் –
பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை –
கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ –
அக் குழலுக்கு தகுதியான
அவயவ சோபையை உடையவள்
கிட்ட வல்லளேயோ –
(அவருக்கும் ஒரு அவயவம்-குழலுக்கு- இவளுக்கும் ஓர் அவயவம் -கண்ணி-சொல்லி )
————————————-
தாத்பர்யம் அருளிச் செய்து தத்வார்த்தம் அருளிச் செய்கிறார் -இதில் –
புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ -9-9-7-
புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து –
பகாசுரன் வாயைக் கிழித்து
யுத்தோன் முகமாய்
பெரிய வடிவை உடைத்தாய் கொண்டு வந்த
குவலயா பீடத்தின் உடைய கொம்பை அநாயாசேன போக்கி –
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை –
க்ரித்ரித சகடமானது –
முலை வரவு தாழ்த்த சீறி நிமிர்த்த திருவடிகளுக்கு
இலக்காய் தூள் தூளாகும்படி பண்ணி
விரோதி நிரசனத்தால் வளர்ந்து புகர் பெற்று நின்ற நிலை –
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற –
விரோதி நிரசனத்தால் வந்த ஸ்ரமம் அடைய
ஆற்றலாம் படியான தேசம் ஆயிற்று –
தெளிந்த அருவிகள் ஆனவை கொழித்து எறடா நின்றுள்ள
திருமலையிலே –
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ –
தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி கொடு நிற்கிறவனை –
அந்த ஔதார்யத்துக்கு நாம் இலக்காக வேணும் என்று இருக்கிற
இவளுடைய மநோ ரதம் ஒரு படித் தலைக்கட்ட வற்றேயோ-
——————————————–
(பார்த்தன் தேரூர்ந்து ஒரு பார்த்தனுக்காகவோ
ஸ்ரீ பூமா தேவி யுடைய பாரம் போக்கவும் தேவர்களுக்காகவும் அன்றோ
ஸ்ரீ கீதா ஞானம் கொடுத்து ரஷித்தவன் )
பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்தொரு தேர் முன்னின்று
காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனைப் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே —9-9-8-
பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்தொரு தேர் முன்னின்று –
சத்ரு பஷமான துர்யோநாதிகள் மிகைத்தவன்று
கிருஷ்ணன்
அர்ஜுனன் பக்கலிலே கிருபையை பண்ணி
பாரத சமரத்திலே சத்ரு நிரசனத்துக்கு பரிகரமான
தேரிலே
(ஸ்ரீ கிருஷ்ணன் அமர்ந்ததாலேயே ஓர் அத்விதீய தேர் அன்றோ )
ரதியை (அர்ஜூனனை )சீறுமவனுக்கு
தான் இலக்காய்க் கொண்டு
உடம்புக்கீடிடாதே -வெறும் கையோடு நின்று –
(ஈடு -கவசம் -ஈட்டின் அர்த்தம் இதுவும் முன்பே பார்த்தோம் )
காத்தவன் தன்னை –
அவனை நோக்கினவனை –
ஒரு விபூதிக்காக முன் நின்ற படி சொல்லுகிறது
இப்படி சத்ருக்கள் முன்னே தன்னை அழிவுக்கு இட்டவனை –
இப்படி நோக்கினவன் தான் ஆர் என்னில்
விண்ணோர் கரு மாணிக்க மா மலையை –
நித்ய ஸூரிகள் பரிந்து நோக்க
அவர்களுக்கு அனுபாவ்யமாய்
ஸ்ரமஹரமாய்
ஸ்ப்ருஹணீயமாய் இருக்கிற
வடிவை உடையவனாய் இருக்கிறவனை –
தீர்த்தனைப் –
அவர்களுக்கு அவ் வடிவை அனுபவிப்பைக்கு கொடுத்துக் கொண்டு இருக்கும் இருப்பு
தன் பேறாகையாலே வந்த சுத்தியை உடையவனை –
பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற மூர்த்தியைக்-
அவர்கள் அனுபவித்த வடிவு அழகை
இங்கு உள்ளார் இழவாத படி
தனக்கு வாசஸ் ஸ்தானமாகப் போரும்படி
தர்ச நீயமான பொழி லாலே சூழப் பட்ட
திருமலையிலே நிற்கிற சர்வேஸ்வரனை –
கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே –
தன் மயிர் முடியாலே இவனைத் துவக்க வல்ல
இவள்
அவனைத் தொழுதாளாய்த் தலைக் கட்ட வல்லளேயோ –
——————————————————————
வடக்குத் திருமலையும் தென் திருமலையும் சேர்ந்து அனுபவம் இதில்
கோவலனானவனே மந்தி பாய் வட வேங்கட மா மலையானே -என்பதால்
அப்பனையும் அழகரையும் சேர்ந்து அனுபவிக்கிறார் –
வலம்புரி யாழியானை வரையார் திரடோளன் தன்னைப்
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச்
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற
நலந்திகழ் நாரணனை நணுகும் கொல் என் நன்னுதலே —9-9-9-
வலம்புரி யாழியானை வரையார் திரடோளன் தன்னைப் –
ஆஸ்ரித ரஷணத்துக்கு ஈடான பரிகரம் உடையவனை –
அப் பரிகரம் ஒழியவும் ரஷிக்கைக்கு ஈடான தோள் மிடுக்கை உடையவனை –
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச் –
ரஷித்து இலனேயாகிலும் விட ஒண்ணாத படி
கண்டார் இந்த்ரியங்கள் தன் பக்கலில் துவைக்கு ஈடான
திரு யஞ்ஞோபவீதத்தை உடையவனை –
ரஷிக்கைக்கு பாங்காக ரஷ்ய வர்க்கம் உள்ள இடம் தேடி
வேதைக சமதிகம்யனாய் வைத்து
கண்ணுக்கு இலக்காகும் படி திரு மலையிலே நின்றவனை –
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற –
அது தன்னை பரதத்வோடு ஒக்கச் சொல்லலாம் படி
எத்தனையேனும் சாலத் தண்ணியர்க்கும்
முகம் கொடுத்துக் கொடு நிற்கிற இடம் இறே இவ்விடம் –
ஸ்வர்க்கத்தில் அப்சரஸ்கள் வந்து ஆஸ்ரயிக்க
அவர்கள் உடைய சிலம்பின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தான ஆற்றை உடைய
திருமலையிலே வந்து நிற்கிற
நலந்திகழ் நாரணனை நணுகும் கொல் என் நன்னுதலே –
கல்யாண குணங்களாலும் உஜ்ஜ்வலிதனாகா நின்றுள்ள
சர்வாதிகனான சர்வேஸ்வரனை கிட்டுக்கைக்கு யோக்யமான
அழகை உடைய இவள் அவனைக் கிட்டிவிட வல்லளேயோ –
————————————————-
தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற
ஆடற் பறவையனை அணியாயிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே–9-9-10-
(காணும் என்று-ஒன்பது பாசுரங்களில் காணும் கொலோ சங்கை –
இதில் கண்டு கொண்டாள் என்று அருளிச் சேருகிறார் )
தேடற்கு அரியவனைத்
தானே தன்னைக் கொடு வந்து காட்டில் காட்டுமத்தனை யல்லது
ஸ்வ யத்னத்தாலே ஒருவராலும் ப்ராபிக்க அரிதானவனே –
திரு மாலிருஞ்சோலை நின்ற -ஆடற் பறவையனை –
திருவடி திருத் தோளிலே ஏறித்
திரு மலையிலே வந்து
தன்னைத் தானே கொடு வந்து காட்டினவனை –
அணியாயிழை காணும் என்று –
அவனைக் காண்கைக்கு ஈடான தன்னை
அலங்கரித்துக் கொண்டு இருக்கிற இவள் காணும் என்று –
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன –
மாடக் கொடிகளோடு கூடின மதிள்கள் இவற்றாலே
சூழ்ந்து இருக்கிற திருமங்கையில் உள்ளார்க்கு
பிரதானரான ஆழ்வார் அருளிச் செய்த –
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –
பாடலான பனுவல் பத்தையும் அப்யசிப்பார்க்கு
பிராப்தி பிரதிபந்தங்கள் அடங்கலும் போம் –
காணும் கொலோ என்கிற சம்சயம் இவர் தம்மோடேயாய்
இவர் உடைய பிரபந்தம் அப்யசிப்பார்க்கு
பிராப்தியில் ஒரு கண் அழிவு இல்லை –
(முதல் அடியிலேயே நிச்சிதம் )
———–
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
மூவர் முதல்வன் பார் ஆக்கி உண்டும் காத்து அளந்தும்
யாவரும் வேண்டிற்று நல்கும் சோலை மலை மேயவனைக்
கூடுவனோ என்று சங்கித்துத் தெளிந்த சீராலி
நாடன் எங்கள் எம் இறை –89-
கூடுவனோ –ஒன்பது பாசுரங்களில் கொல்-என்று சங்கை –
பல சுருதி பாட்டில் ஆடல் பறைவையனை அணியாயிழை காணும் என்று -சங்கை நீங்கி
நிச்சயமாக கூடுவாள் –
ஆழ்வார் நம்முடைய கடவுள் –
——————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply