அவதாரிகை
ஜன்ம வ்ர்த்தாதிகளால் குறைய நின்றே
இந்த ஜ்ஞானம் உடையவர்கள்
இந்த ஜ்ஞான விதுரராய்
ஜன்ம வ்ருத்தாதிகளால் உயர்ந்தவர்களுக்கு
சர்வேஸ்வரனோபாதி பூஜ்யராய்
ஜ்ஞான பிரதான ப்ரதிக்ர ஹவ்யவ ஹாரங்களுக்கும்
அர்ஹர் ஆவார் என்கிறார்
(உத்பத்தியிலாவது ஆசாரம் முதலியவற்றிலாவது ஒருவகையாலும் குறையின்றியே
ஸத்ஸந்தாந ப்ரஸூதர்களாய் ஸதாசார நிஷ்டர்களா யிருக்கும் சதுர்வேதிகளை நோக்கி எம் பெருமான் கூறின வார்த்தை;-
‘ஓ சதுர்வேதிகளே’ உங்களைப் போலே, ப்ரஹ்மாதொடங்கி நெடுகி வருகிற வம்ச ப்ரவாஹத்திலே பிறந்து
சதுர்வேதிகளா யிருப்பவர்கள் தாம் பூஜ்யர், மற்றையோர் அநாதரணீயர் என்று நீங்கள் பாவிக்கலாகாது;
எந்த ஜாதியிலே பிறந்தவரேனும் எனது அடியவர்களானால் அவர்களை நீங்கள் தொழ வேணும்;
பரஸ்பரம் ஜ்ஞாநத்தைக் கொடுத்துக் கொள்ளலாம். விசேஷமாகச் சொல்வதேன்?
என்னை நீங்கள் எவ்விதமாக ஆராதிக்க உடன்பட்டிருக்கிறீர்களோ, அவ்விதமாகவே அவர்களையும் ஆராதிக்க வேண்டியது தான்”
என்று ஸ்ரீபாஞ்சராத்ரத்திலே
“பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா” என்று தொடங்கி
“தஸ்மைதேயம் ததோக்ராஹ்யம் ஸசபூஜ்யோ யதாஹ்யஹம்” என்பதீறாகவுள்ள ஸ்லோகங்களை நோக்குக–)
—–
பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே
பதவுரை
மதிள் திருவரங்கத்தானே!-;
ஒழுகல் ஆறு–பிரமன் முதல் தங்களளவும் நீண்டு வருகிற பரம்பரையில்
பழுது இலா–ஒரு குற்றமு மற்றிருக்குமவர்களாய்
பல சதுப்பேதிமார்கள்–நான்கு வேதங்களையும் ஓதினவர்களாயுமுள்ளவர்களே!
எம் அடியார்கள் ஆகில்–“நமக்கு அடிமைப்பட்டவர் களாயிருந்தால் (அவர்கள்)
இழி குலத்தவர்களேனும்–தாழ்ந்த வகுப்பில் பிறந்தார்களே யாகிலும்
நீர்–நீங்கள்
தொழுமின்–(அவர்களைத்) தொழுங்கள்;
கொடுமின்–(உங்களிடத்திலுள்ள விசேஷார்த்தங்களை அவர்களுக்கு) உபதேசியுங்கள்;
கொள்மின்–(அவர்களிடத்தில் விசேஷார்த்தங்க ளுண்டாகில் கேட்டுக் கொள்ளுங்கள்
என்று–என்று உபதேசித்தருளி
நின்னோடும் ஒக்க–உனக்கு ஸமமாக
வழிபட–அவர்களை ஆராதிக்கும்படி
அருளினாய்–உரைத்தருளினாய்
(போல்-அசை).
————————-
பழுதிலா வொழுகலாற்றுப் –
ப்ரஹ்மா தொடங்கித் தங்கள் அளவும் வர நெடுகிப் போகிற
வம்ச பிரவாஹத்திலே ஒரு தோஷம் இன்றிக்கே இருக்குமவர்கள்
அதாகிறது –
உத்பத்திகளிலே யாதல்
ஆசாராதிகளிலே யாதல்
ஒருவகையாலும் ப்ராஹ்மண்ய ப்ரஸ்யுதி யின்றிக்கே யிருக்கை-
பல சதுப்பேதிமார்கள் –
இவ்வம்சத்தில் சதுர்வேதிகளாய் இருப்பர் அநேகர் -என்கை-
சதுர்வேதா ரிஷயே -என்கிறபடியே
ரிஷி சமராய் இருக்கை –
சதுப்பேதிமார்கள் –என்று சம்போதனை –
ஒழுகல் -நெடுமை
ஆறு -வழி –
இழி குலத்தவர்கள் ஏலும் –
இதில் கீழ்ப் பட்டது இல்லை என்னும் நிஹீன குலத்தில்
பிறந்தார்களே ஆகிலும்
ஏலும் –
பஹூனாம் ஜன்ம நாமந்தே -என்கிறபடியே
அநேக ஜன்ம புண்யங்களின் உடைய அவஸா நத்திலே
ஸ்வரூப ஞானம் பிறக்கும் என்று சொல்லுகையாலே
ஜ்ஞானாதிகராய் இருப்பார்க்கு நிஹீன ஜன்மம் கூடாது –
விதுர தர்ம வ்யாயாதிகளைப் போலே கூடிற்றே யாகிலும் –
எம் அடியார்கள் ஆகில் –
என்னோட்டை அசாதாரண பந்தத்தை அறிந்து
ஜ்ஞான அனுகூலமான ஸ்வ ஆசாரத்தை உடையராகில் –
கைங்கர்யமே எல்லா நன்மைகளுமாக நினைத்து இருக்குமவர்களாய்
ஈஸ்வரனும் இவர்கள் திறத்தில் நாமே இவர்களுக்கு உபாய உபேயங்களும் எல்லா உறவும் என்றும்
நினைத்து இருக்கப் பெறுமவர்கள் –
தொழுமினீர் –
தொழுமின் -நீர் –
நீங்கள் தொழும் கோள்
ஏஷ ஏவ சதா தம –என்கிறபடியே
உங்கள் உடைய வித்யா வ்ருத்தங்களும்
ஜன்ம உத்கர்ஷங்களும்
மத ஹேதுவாகை யன்றிக்கே –
தம ஹேது என்று இருக்கும்
நீங்கள் அவர்கள் காலிலே விழுங்கோள்-
காலேஷ்வபி ச சர்வேஷூ -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பகவத் பிரசாதம் ஒழிந்த சாதனாந்தரங்கள்
பய ஸ்தானம் என்று இருக்கும் நீங்கள் அவர்களை ஆராதியுங்கோள
பரஸ்பர நீச பாவை -என்கிறபடியே
ஸ்வரூப ப்ராப்தமான நீச பாவமானது அவர்களுக்கு ஸ்வரூப சித்தம் –
உங்களுக்கு துர்மாநத்தாலே துஷ்கரம் –
அவர்களைத் தொழவே உங்கள் சம்சார பீஜமான துர்மானம் போம் –
எங்கே கண்டோம் என்னில்
கைசிக சம்பந்தம் ப்ராஹ்மன்ய பிரஸ்யுதியாலே வந்த
ப்ரஹ்ம ராஷசத்வத்தை பிராமணனுக்கு போக்கிக் கொடுக்கக் கண்டோம் இறே-
கொடுமின் கொண்மின்-
அவர்கள் உங்கள் பக்கல் ஒரு ஜ்ஞான அபேஷை பண்ணில் நீங்கள் ஆதரித்து சொல்லுங்கோள் –
அவர்கள் பகவத் ஜ்ஞானத்தை உங்களுக்கு பிரசாதிக்கில் கேட்டு க்ருதார்த்தர் ஆகுங்கோள் –
ஜாதி நிபந்தனமான சம்பந்தம் போலே யாதல்
குண நிபந்தனமான சம்பந்தம் போலே யாதல்
நீர் மேல் எழுத்தான சம்பந்தம் அன்று இறே இவர்களோடு பண்ணும் சம்பந்தம் –
இது யாவதாத்மபாவியான சம்பந்தம் இறே –
என்று நின்னோடும் ஒக்க வழி பட அருளினாய் போல் –
இப் பாசுரம் பல பிரதரான தேவரீரே அருளிச் செய்த பின்பு இதில் ஒரு சம்சயம் உண்டோ –
நின்னோடும் ஒக்க வழி பட-
எனக்கு மேல் பூஜ்யர் இல்லாமையாலே என் மாத்ரமே யாகிலும்
அவர்களை ஆராதித்து நல் வழி போங்கோள் –
அருளினாய் –
பக்தி ரஷ்டவிதாஹ் ஏஷா யாஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே
சவிப்ரேந்த்ரோ முனிச் ஸ்ரீ மான் சயதிச்சை பண்டித
தஸ்மை தேயம் ததோராஹ்யம் –
என்கிறபடியே –
அருளினாய் –
இந்தாஹாச்யம் தேவரீர் கிருபையால் அருளிச் செய்த இத்தனை இறே –
பூசித்து நல்கி உரைப்பர் தம் தம் தேவியர்க்கே -என்று
பகவத் சம்பந்த யுகதர் உடைய பாவநத்வம்
நித்ய ஸூரிகளும் தம்தாமுடைய அபிமத விஷயங்களுக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணினார்களாய்
உபதேசிக்கும் அத்தனை இறே –
மதிள் திருவரங்கத்தானே –
உபதேச மாத்ரமாய்ப் போகாதே கோயிலிலே வந்து
லோக சாரங்க மகா முனிகள் தலையிலே திருப் பாண் ஆழ்வாரை அழைத்து
இவ்வர்த்தத்தை வ்யாபரித்து காட்டிற்று இலீரோ –
மதிள் திருவரங்கத்தானே ––
கோயிலிலே மதிளைக் கடக்கில் அன்றோ
தேவரீர் காட்டின இம் மரியாதையைக் கடக்கலாவது –
(ஆசார்ய ஹ்ருதயத்தில் -“ம்லேச்சனும் பக்தனானால் சதுர் வேதிகள் அநுவர்த்திக்க அறிவுக் கொடுத்துக்
குல தைவத்தோ டொக்கப் பூஜை கொண்டு பாவந தீர்த்த ப்ரஸாதனா மென்கிற திருமுகப் படியும்”, என்னும்
ஸ்ரீஸூக்தியும் அதன் வ்யாக்யாந ஸ்ரீஸூக்திகளும் இங்கு அநுஸந்திக்கக் கடவன)
——————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply