ஸ்ரீ பெரிய திருமொழி-2-7-6-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

சாதனாந்தர சம்பந்தம் இல்லாத குடி அன்றோ -நமஸ் சப்தார்த்த நிஷ்டையான
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கும் பிரபன்ன குடி அன்றோ என்ன –
பேற்றுக்கு தரிக்கும் நாராயணாயா சப்தம் பற்றி இருக்கிறாள் –
உண்ணாது உறங்காது ஒலி கடலை அடைத்து வருபவர் வரவில்லையே என்று மயங்குகிறாள் –

ஆதி வராஹ க்ஷேத்ரம்
மேகநாதன் -பலி-பிள்ளை
மாலி மால்யவான் உதவி கேட்டு வர
இந்திரன் தபஸ் செய்து மகிழ்ந்து சேவை

நித்ய கல்யாண பெருமாள்
தாலவர் -ரிஷி குனியின் பெண்ணுக்கும் தாலவர் ரிஷிக்கும் –365-பெண்கள் –
இவள் திருவடியைப் பற்றித் தன்னைப் பற்ற
கோமள வல் லி தாயார்
வராஹ தீர்த்தம் கல்யாணி தீர்த்தம் –

தன் குடிக்கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயிலங்கை
வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயத்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-6-

————————————————————-

வியாக்யானம் –

தன் குடிக்கேதும் –
நம் குடி என்னாதே தன் குடி என்கிறாள் ஆயிற்று-

எம்பெருமானார் தர்சனம் -என்னுமா போலே –
நம் பிரதிபத்தியால் சொன்னோம் ஆகை அன்றிக்கே
பெருமாள் இராமானுசன் உடையார் என்றே அருளிச் செய்வர் –
பெரு விலையனான ரத்னத்தை நடுவே இட்டு கோத்தால்
முன்னும் பின்னும் ஒக்க விலை போமா போலே -காண் -என்று பிள்ளான் –
(நாயக ஸ்ரீ -ஹார மத்ய மணி நியாயம் -திருவடி சம்பந்தமும் திருமுடி சம்பந்தமும் உண்டே )

தன் குடிக்கேகேதும் தக்கவா நினையாள்-
ஜனகானாம் குலே -என்கிறபடியே இவள் பிறந்த பின் யாயிற்று
இக் குடியில் முன்பு இல்லாத ஏற்றம்  எல்லாம் உண்டாயிற்று –

ஒரு நாள் பட்டர் இனிதாக வாசித்த படியைக் கேட்டருளி
எம்பார் எழுந்து இருந்து நின்று
கண்ண நீரை விழவிட்டு
சிதிலாந் தரகரணராய்-பட்டரைக் காட்டி –
ஜனகானாம் குலே கீர்த்தி மகாரிஷ்யதி மே ஸூதா -என்று
அருளிச் செய்தாராம் –

தத் தஸ்ய -என்கிறபடியே
நம்முடைய பேற்றுக்கு நாம் வருந்துகைக்கு ப்ராப்தி இல்லை
அவனாலே பேறு-என்று இருக்கும்படி யாயிற்று –
பெறுவது அவனை யாகில் இக் க்ரமம் கொண்டு கார்யம் என்
என்று இரா நின்றாள் அவள் –
முகத்திலே விழித்துக் கொண்டு நின்று க்ரமம் பார்க்க அமையாதோ என்று இரா நின்றாள் இவள் –
எப்பொழுது கனியும் என்று இருக்க வேண்டும் -அவள்
நம்பியை நான் கண்ட பின் முடியுமா-இவள்

இவள் நிலை இருந்த படி இது –
நீ உன் குடிக்குத் தக்கவா நினைக்க வேண்டாவோ –
தண்டகாரண்ய ரிஷிகள் இடம் சொன்னீரே –
நீர் இனி உம்முடைய மரியாதையை நோக்கிக் கொள்ளப் பார்த்தீரோ இல்லையோ என்கிறாள் –
இவளை துடங்கி காணும் இக்குல மரியாதை நடத்துவதாக நினைத்து இருந்தது –
தன்னைத் துடங்கி குல மரியாதை நடத்துவதாக நினைத்து இருக்க –
தான் இத்தை கடலிலே கவிழ்க்கப் பார்க்கிறாள் –

ஏதும் தக்கவா நினையாள் –
மடலைக் கடைக்கணிப்பது-வேண் யுத்க்ரத நத்தில்
ஒருப்படுவதாக நின்றாள் –

நினையாள் –
திருத் தாயார் தான் இவள் நினைவையும் அடி
ஒத்துகிறாள் காணும்
இவளை இழக்க மாட்டாமையாலே –

தடங்கடல் நுடங்கெயிலங்கை வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும் –
வேண் யுத்க்ரத நத்தில் ஒருப்பட வேண்டாத படி
வந்து உதவும் படியை அனுசந்தித்து இனியளாகா நிற்கும் –
அதிலே ஒருப்பட்ட அளவிலே வந்து உதவினவன் இறே –
பரப்புடைதான கடலை அகழாக உடைத்தாய்
சத்ருக்கள் கேட்ட போதே நுடங்கும்படியான மதிளை உடைத்தாய் –
அன்றிக்கே
புரிப்புடைத்தான மதிள் என்னுதல் –

யிலங்கை வன் குடி மடங்க –
ஊரிலே அரணே அன்றிக்கே
வர பலத்தாலே பல்கிப் பரந்துள்ள குடியானது
திரியட்டும் முடிந்து போம் படியாக –
ராஷசரைப் போலே மாயையால் அன்றிக்கே
நிறம் உடைத்தான பூசலிலே வன் குடி மடங்க
துளைத்த வார்த்தை உண்டு -ஸ்ரீ இராமாயண வ்ருத்தாந்தம் –
அத்தைக் கேட்டு

இன்புறும் –
நம் அவஸ்தை உடையாள் இருப்பாள் ஒருத்திக்கு உதவின போதே
எனக்கும் உதவினவன் அன்றோ -என்று
அத்தாலே இனியளாம்-

மயங்கும் –
உதவாதவன் உதவாது ஒழிகை அன்றிக்கே
உதவும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து
நம் தசை இதுவாய் இருக்க உதவாது ஒழிவதே –
என்று மோஹிக்கும்-

நம் தசையை உடையாள் ஒருத்திக்கு உதவினவன் அன்றோ
என்று அந்த அண்ணிமையை அனுசந்தித்து இனியளாய்-
அணித்தாக உதவினவன் நமக்கு வாராது ஒழிவதே -என்று மயங்கும் –

மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை
மயங்கினால் இழக்கலாம் அவளோ -இவள் –
மின் கொடி போலே இருக்கும் இடையானது சுருங்கும் படியாக
மேலே நெருங்கா நிற்கும் ஆயிற்று –
மேலே இருந்து கீழே வெட்டுவரைப் போலே தன் குடி இருப்பை அழியா நின்றதாயிற்று-

மென் முலை –
முலைக்கு காடிண்யம் ஸ்வ பாவமாக இருக்கச் செய்தே
மென் முலை என்கிறது விரஹ அசஹம் அல்லாமையாலே –

பொன் பயத்திருந்த –
இதடைய மண்ணீடாய்க் கழிந்த தாயிற்று –

என் கொடி-
இவளுடைய வை லஷண்யத்துக்கு
உதவாது ஒழியிலும்
தன் வயிற்றில் பிறப்புக்கு
உதவாது ஒழிய ஒண்ணாது என்று இருக்கிறாள் –
(சரம ஸ்லோகம் -பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பை நம்பிய ஆண்டாள் போல்)

இவளுக்கு என் நினைந்து இருந்தாய் –
இவளுடைய
வை வர்ண்யமும்
அத்யாவச்யமும்
செல்லாமையும்
வடிவு அழகும்
பிறப்பும்
இருந்தபடியாலும் உமக்கு உதவாது ஒழியப் போமோ-

இடவெந்தை யெந்தை பிரானே –
இவளைக் காட்டில் உமக்கு உண்டான வைவர்ண்ய
உத்யோதகம் இறே திருவிடவெந்தை யில் இருப்பு –

உடம்பு வெளுப்பு அன்றாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க அமையும் இறே –
உம்முடைய வைவர்ண்யம் தோற்ற
திருவிடவெந்தையில் எழுந்து அருளி இருக்கிற நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என்-

(தேவிகளைப் பிரிந்து விரஹத்தால் அன்றோ ஸ்ரீ பூ வராஹப் பெருமாள்
மகாத்மாக்கள் பிரிந்து இருக்க முடியாத மார்த்வம் உமக்கும் உண்டே )

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading