ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-7-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

ப்ரயோஜனாந்தர பரருக்கும் ஐஸ்வர்யாதிகளை அருளியும்
அநந்ய ப்ரயோஜனருக்கும் தன்னையே அருளுமவன்-

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-7-

அருளி-ஆயிரம் முகத்தால் இழியும் படி அருளி -திரு உள்ளத்தில் சங்கல்பிக்க –

வியாக்யானம்

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும் இந்திரர்க்கு அருளி
ஐராவதத்தையும்
கடலில் அமிர்தத்தையும்
ஸ்வர்க்கத்தையும்
அத்தோடு கூட தேவர்களுக்கு ராஜாவாய் இருக்கும் இருப்பையும்
இந்தரனுக்கு கொடுத்து அருளின –

(தன்னையே -அத்யாஹாரம் செய்து )
எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
எனக்கு சேஷி-
எனக்கு (தன்னை) தந்து அருளின -எந்தை –
(எமக்கும் -என்றதால் -களிறு இத்யாதிகள் இவருக்கு -பிரக்ருதிக்கு சேராதே -தன்னை -அத்யாஹரித்து வியாக்யானம் )

எனக்கு தந்தை
காரண பூதன்
எனக்கு ஸ்வாமி
இவற்றாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினான்

ஸ்வர்க்கத்தில் தேவர்கள் திருவடிகளை ஆஸ்ரயிக்க –
ஒரு  முகம் செய்து  வந்து
புகில் கடல் பொறாது என்று பார்த்து
ஆயிரம் முகத்தினால் போய்ப் புகு என்று -சர்வேஸ்வரன் திரு உள்ளமாய் அருள
அப்படி மந்திர பர்வதத்தில் நின்றும் வந்து இழிந்தது ஆயிற்று –
அன்றிக்கே –
கங்கை தன்னை ஆஸ்ரயிக்க
அது தான் அருளுகையாகவுமாம் –

ஆயிர முகத்தினால் –
மேருவிலே இழிந்து
மந்த்ரத்திலே இழிந்து
ஹிமவானில் இழிந்து
இங்கே பல வகைகளிலே வரும்படியை சொல்லக் கடவது இறே-

மந்த்ர பர்வமும் அங்கு -அமுதம் வந்ததால் -மந்த்ரம் -அஷ்டாக்ஷரமும்-அவனும் -என்றுமாம் –

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading