ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-6-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

தேரணங்கல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பாரணங்கிமிலேறேழு முன்னடர்த்த பணி முகில் வண்ணன் எம்பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிள வெழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே—–1-4-6-

தேர் அணங்கு -அல்குலுக்கு உதாரணம் சொல்ல கஷ்டப்பட்டு -சாம்யம் –
மறத் தொழில் புரிந்து-அறத்தில் இருப்பவன் கோபத்துடன் செய்த செயல்-
கயத்த-தகைத்த–பாட பேதம்
மேற்கு நாராயணன் கிழக்கே நர பர்வதம்
ஊர்வசி பர்வதம்-சிவ பர்வதங்களும் உண்டே
ஐராவதம் -பிளந்த விருத்தாந்தம்

வியாக்யானம் –
தேர் இத்யாதி
தேரானது பொருந்தி ஒப்பாய் நின்றுள்ள அல்குலை உடையளாய்
நிதம்ப பிரதேசத்தை உடையளாய்
அல்குல் என்று நோவு படுகைக்கு பேர்
தேர் தட்டை நிதம்பத்துக்கு ஒப்பாக சொல்லக் கடவர்கள்

அழகிய கயலொடு ஒத்த கண்களை உடைய
நப்பின்னை பிராட்டிக்காக மறத்தை-(கடிய) உடைத்தாய் இருப்பதொரு
செயலைச் செய்து -பூமியாக நோவு படும்படியாக
ககுத்துக்களை உடைய ருஷபங்கள் ஏழையும் நசித்து

அநந்தரம்
விரோதியைப் போக்கப் பெற்ற ஹர்ஷத்தாலே
குளிர்ந்த மேகம் போலே இருந்துள்ள
வடிவை உடையவனாய்
அவ்வடிவைக் கொண்டு என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவன்

காரணம் இத்யாதி –
பகீரதன் கங்கையை அவதரிப்பிக்கிற போது நடு வழியிலே
ஒரு மலை தடுத்து கொடு நிற்பதாய் -அத்தை இரண்டு பிளவாம் படி குத்தி
யானைகளையும் உருட்டிக்  கொண்டு இவ்வருகே போந்து
இழிந்ததாக சொல்லப்பட்டது இறே –
அதுக்கடி என் என்றால் –

காரணம் தன்னால்-
தன்னுடைய தபோ பலத்தால் பஸ்மமாய்க் கிடந்த தன்னுடைய பாட்டன்மாருடைய-(சகரனின் -60000-)
சுத்தி அர்த்தமாக கங்கையை பெற வேணும் என்று இறே தபஸ் பண்ணினான் இறே -(ஹரித்வாரில் பகீரதன் தபம்)
அந்த காரணத்தாலே

பழைமையாலே வந்த மிடுக்கை உடைய –
ஜலத்தை உடைத்தான கரு வரையானது இரண்டு பிளப்பாம்படி குத்தி –
அங்கு உண்டான ஆனைகளை தள்ளிக் கொண்டு வந்து இழிகிற –

அன்றிக்கே
அம்மலை தகைந்த அளவிலே -இந்த்ரனை நோக்கி தபஸ் பண்ணினனாய்
பின்னை அவன் தந்த -சதுர்த் தந்தியை -ஐராவதத்தை-இடுவித்து -அம்மலை இரு பிளவாம்படி குத்துவித்து
பின்னை அவ்வானை கொண்டு வந்ததாக ஒரு பிரமாண பிரசித்தி உண்டு –
அத்தை சொல்லிற்றாகவுமாம்-

————

(ஸ்வயம் வக்த க்ஷேத்ரம்
அஷ்டாக்ஷர க்ஷேத்ரம்
இலந்தை மரம் அடியில் தாபம்
நீல கண்ட -ஊர்வச–நாராயண -நர -நான்கு பர்வதங்கள்

மூர்த்தி -தர்ம ராஜன் -பிள்ளை நாராயணன்
மூர்த்தி சந்நிதி இங்கு உண்டு
வருஷம் ஒரு தடவை எழுந்து அருளுகிறார்
வியாசர் -ஓலை சுவடிகள் போலே மலைகள்

ஏழு பேரும் உள்ளே சேவை –கருடன் -பத்ரி விஷால் -நர நாராயணன் நாரதர் -குபேரன் -உத்தவர்
எதிரிலும் கருடன்
ராவலஜி கேரளா நம்பூதிரி
அலகானந்த உள்ளே மறைந்தார் -நாரத கண்டம் உள்ளே மறைந்தார்-தப்த கண்டம் உள்ளே மறைந்தார்-
கண்டாகர்ணன் கூட ஒரு தடவை பிரதிஷடை
பஞ்ச சிலா -கருட சிலா நாரத சில மார்க்கண்டேயர் சில நரசிம்மர் சிலா வராஹ சில
ப்ரஹ்ம தீர்த்தம் பிண்ட பிரதானம் )

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading