பப்ப வப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப ஐக்கள் போத வுந்த உந் தமர் காண்மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியா முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வு மானான் வதரி வணங்குதுமே–1-3-7-
——————————————
வியாக்யானம் –
பப்ப –
ஷேபோக்தியில் இவருடைய அநுகாரம் இருக்கிற படி –
வப்பர் மூத்த வாறு –
எல்லார்க்கும் மூப்பு வருகை தவிராது இறே
இத்தனை கழிய மூக்கலாம் ஆகாது இறே -என்பர்கள் -ஆயிற்று
மூப்பை ப்ரக்ருதி யாக்கி அதிலே மூத்த படியாக வாயிற்று சொல்லுவது –
பாழ்ப்பது –
இது சாலப் பொல்லாது
அறப் பொல்லாதாய் இருந்ததீ
இது அசித் சம்சர்க்கம் என்று வெறுப்புக்கு உடலாயிற்று-
சீத் திரளை ஒப்ப ஐக்கள் போத வுந்த –
பூய பிண்டம் போலே க்லேஷம் ஆனது போரத் தள்ள
சீத் திரளை ஒப்ப ஐக்கள்-கோளை- போத வுந்த —
அப்பர் மூத்தவாறு
பாழ்ப்பது -என்பர்கள் –
உந்தமர் காண்மின் என்று –
இவன் பக்கல் யௌவனமும் கையில் வீசமும் உள்ள வன்று
எல்லாரும் ஒக்க என் தமர் என் தமர் என்பர்கள் –
கையில் வீசமும் போய் இவனோட்டை சம்பந்தம் நமக்கு
அவத்யாவாஹம் என்று தோற்றும் படி யௌவனமும் போனவாறே
உன்னுடையவன் -என்றும் –
மற்றை அவளும் உன்னோடே -அன்றோ அவனுக்கு உறவு என்றும் –
தங்கள் உடன் ஒற்று அற சொல்லி பின் வாங்கா நிற்பர்கள்
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியா முன்னம் –
இவனைக் கொண்டு போது போக்கைகாக
முலைக் கச்சை நெகிழ்த்தி
முலையினுடைய சந்நிவேசத்தை காட்டுவார்கள்
இவன் கண்ணை விடுத்து எழப் பார்க்கும்
அத்தைக் கண்டு பிள்ளாய் -இவன் இவற்றோடு என்ன உறவு உண்டாய் பார்க்கிறான்
என்று சிரிப்பார்கள் ஆயிற்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் அப்பர் என்று சிரியாத முன்னம் என்னுதல் –
பண்டு தன் சர்வ ஸ்வத்தை நேர்ந்து இறே ஸ்மிதம் பெறுவது-
இப்போது இவன் இருப்பு கண்டு விட்டு சிரிப்பர்கள் ஆயிற்று –
வைப்பும் நங்கள் வாழ்வு மானான் –
பரிஹரித்த அன்றே சாதனமுமாய்
பின்னை
பிராப்யனுமானவன் வர்த்திக்கிற –
வதரி வணங்குதுமே –
ஒரு நாள் ஆதரித்து ஒரு நாள் சிரியாதவன் ஆயிற்று –
அம்ருதம் சாதனம் சாத்யம் -என்னக் கடவது இறே-
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply