எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம்
பித்தர் போலே சித்தம் வேறாய் பேசி அயரா முன்
அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே–1-3-6-
வியாக்யானம் –
எய்த்த சொல்லோடு –
ஈளை துடங்கி எய்க்கை அன்றிக்கே முந்துறவே எய்த தாயிற்று சொல்லுவது –
அது தான் அநந்தரம் ஈளை யோடே கொடு போய் சேர்க்கும்-
அதின் அனந்தர மாக இளைப்பு வந்து கைக் கொள்ளும் ஆயிற்று –
இருமி இளைத்து உடலம் அது தான் இருமலுக்கு பூர்வ பஷ வர்த்தியாய் இருக்கும் இறே
இருமி அத்தாலே சரீரம் போர இளைக்கும் ஆயிற்று –
பித்தர் போலே-
நினைவு ஒன்றும் சொல் ஒன்றுமாய் இருக்கும் ஆயிற்று-
பித்தேறினால் போலே நெஞ்சல் நினைப்பது ஒன்றாய் வாயால் சொல்லுமதும் ஒன்றாய் இருக்கும் ஆயிற்று –
சித்தம் வேறாய் பேசி -அயரா முன் –
இப்படி பேசுகையும் கூட அரிதாம் படி அயர்வோடே தலைக்கட்டும் –
இப்படி மோஹிப்பதர்க்கு முன்னே –
அத்தன் எந்தை யாதி மூர்த்தி
அங்குத்தை ஸ்வாமி யானவன் எனக்கு ஹித காமன் ஆனவன்
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரன் –
ஆழ் கடலைக் கடைந்த
அரியன செய்தும் அபேஷிதம் செய்து கொடுக்குமவன் –
மைத்த சோதி
அபேஷிதம் செய்யா விடிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவன் –
எம்பெருமான் –
அவ்வடிவு அழகைக் காட்டி என்னை அடிமை கொண்டவனுடைய
வதரி வணங்குதுமே –
வதரியை ஆஸ்ரயிப்போம்
——————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply