அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-
பதவுரை
அமலன்–பரிசுத்தனாய்
ஆதி–ஜகத்கார பூதனாய்
பிரான்–உபகாரகனாய்
என்னை–(இழி குலத்தவனான) என்னை
அடியார்க்கு–(தனது) அடியவர்களான பாகவதர்களுக்கு
ஆள்படுத்த–ஆட்படுத்துகையாலே வந்த
விமலன்–சிறந்த புகரை யுடையனாய்
விண்ணவர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனாயிருந்து வைத்து
(ஆஸ்ரிதர்கட்காக)
விரை ஆர் பொழில்–பரிமளம் மிக்க சோலைகளை யுடைய
வேங்கடவன்–திருவேங்கடமலையில் வந்து தங்குமவனாய்
நிமலன்–ஆஸ்ரயிப்பார்க்கு அரியனாயிருக்கையாகிற குற்றமற்று, ஆஸ்ரித பாரதக்திரியத்தை வெளியிட்டு நிற்குமவனாய்
நின்மலன்–அடியாருடைய குற்றத்தைக் காண்கையாகிற தோஷமில்லாத வத்ஸலனாய்
நீதி வானவன்–சேஷ சேஷி முறை வழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரமபதத்துக்கு நிர்வாஹகனாய்
நீள் மதிள்–உயர்ந்த மதிள்களை யுடைய
அரங்கத்து–கோயிலிலே (கண் வளர்ந்தருளுகிற)
அம்மான்–ஸ்வாமியான அழகிய மணவாளனுடைய
திருக் கமல பாதம்–திருவடித் தாமரைகளானவை
வந்து–தானே வந்து
என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே–என் கண்ணுக்குள்ளே புகுந்தன போலிரா நின்றனவே
———
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை —
பெரிய பெருமாள் திருவடிகளில் அழகு மேல் விழுந்து தம்மை அடிமை கொண்டது என்கிறார் –
—
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –
முதல் பாட்டில் –
பெரிய பெருமாள் திருவடிகளின் அழகு தம்மை ஆட்கொண்டது என்கிறார் –
ஆகாசத்தின் நின்றும் சஹ்யத்திலே வர்ஷித்து
அங்கு நின்றும் காவேரி யாறாய்ப் போய் இழிந்து
கால்களாய்ப் புகுந்து போய்
நாட்டாருக்கு உப உக்தமாமா போலே
பரமபதம் ஆகிற பரம வ்யோமத்தின் நின்றும்
திருமலையிலே வந்து இழிந்து
தெற்கு நோக்கி வந்து
பள்ளநாலியான கோயிலிலே தேங்கி
கீழ் மேலாக கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் ஆகிற
மதுரவாற்றின் இடைப் புகுந்து ஓடுகிற காலை அனுபவிக்கிறார் –
———
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம்-
அமலன் –
ஸூத்தன் -என்றபடி
இவன் ஸூத்தனாகை -யாவது -தான் ஒருவன் ஸூத்தனாகை யன்று -தன்னோடு சம்பந்தித்தாரையும்
ஸூத்தராக்க வல்ல அடிவுடைமை –
துயரறு சுடரடி இறே
பாவநஸ் சர்வ லோகானாம் த்வமேவ ரகு நந்தன -என்னுமா போலே-
அமலன் -என்கிறது
ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற தம்மை விஷயீ கரித்த பின்பு தன் பக்கல்
தோஷம் தட்டாதே -அநச் நன்ந நயோ அபிசாக ஸீத -என்கிறபடி விளங்குகிறபடி
பரமாத்மா அக்னியை உண்ணாமலேயே -பிரகாசிக்கிறது –
என் கண் பாசம் வாய்த்த பரஞ்சுடர் சோதிக்கே-
ஆதி –
ஆதியத இதி ஆதி -ஸ்ப்ருஹணீயன் -என்றபடி –
தம்மை விஷயீ கரிக்கைக்கு அடியானான் -என்று -ஆதி –என்னவுமாம் –
ஜகத் காரணத் வாதிகளைச் சொல்லவுமாம் –
ஆக இரண்டு -பதத்தாலும் -ஹேய ப்ரத்யநீகத்வமும் கல்யாண குண யோகமும் சொல்லுகிறது –
பிரான் –
இவ்வோ நிலைகளை எனக்கு அறிவித்த உபகாரகன்
பிரான் –
உபகாரத்தைச் சொல்லி -சொல்லப் பற்றாமே -எத்திறம் -என்கிறார்
அடியார்க்கு-
சத்நஹாரீ ச பார்த்தவ -என்கிறபடியே -இவ் வஸ்துவின் சீர்மையாலே இது நம்மளவில் அடங்காது-
நம் அடியார்க்கு ஆம் இத்தனை -என்று அவர்களுக்காக்கினான் என்கிறார் –
அடியார் -தம் பக்கலிலே சேஷி ப்ரதாரராய் இருக்குமவர்கள் –
என்னை யாள்படுத்த விமலன் –
தன்னிடை யாட்டமும் யறியாத என்னை -தன் அடியார்க்கு சேஷ பூதன் ஆக்கின
ஸூத்தன் -என்கிறார் –
என்னை –
ப்ரக்ருதிக்கு அடிமை செய்து போந்த என்னை –
தந்தத்தின் சீர்மை அறியாத என்னை –
தேஹாத்ம அபிமாநிகள் தீண்டாத என்னை –
நன்மைக்கு தனக்கு அவ்வருகு இல்லாதது போலே தீமைக்கு எனக்கு அவ்வருகு இல்லாத என்னை –
ஆள் படுத்த –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வைத்திலன்
அவர்களுக்கு சேஷம் ஆக்கினான்
பகவத் சேஷத்து அளவில் நின்றால் மீள சங்கை உண்டு –
பாகவத் சேஷத்தளவும் சென்றால் மீளப் போகாதே
உகப்பாலே வருமது ஆகையாலே -ஒரு ஷேத்ரம் பத்து எட்டு க்ரயம் சென்றால் மீள விரகு இல்லை –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு முதலிகள் உடைய விஷயீ காரம் பெருமாளுடைய விஷயீ
காரத்துக்கு முற்பட்டாப் போலே இவருக்கு ததீய விஷயீ காரம் முற்ப்பட்ட படி –
ஆநயை நம் ஹரிச் ரேஷ்ட -அங்கு
இங்கு லோக சாரங்க மஹா முநிகளை போய் ஆழ்வாரை அழைத்துக் கொண்டு வாரும் என்றான்-
அடியார்க்கு என்னை ஆட்படுத்த –
தான் சேஷித்வதினுடைய எல்லையில் நின்றால் போலே -சேஷத்வத்தின்
எல்லையில் என்னை வைத்தான் –
விமலன் –
என் சிறுமை பாராதே ததீயர்க்கு சேஷம் ஆக்குகையால் வந்த ஔஜ்வல்யம்
எதிரிகள் தரம் பாராதே சீரியர் தாம் தாம் அளவிலே இறே கொடுப்பது-
விண்ணவர் கோன் –
ஆள் இல்லாதவன் அல்லன் கிடீர் இப்படி விஷயீ கரித்தான் –
நித்ய ஸூரிகள் எடுத்து கை நீட்டும் படி இருக்கிறவன் கிடீர் -கதிர் பொறுக்கி ஜீவிப்பாரை போலே
நித்ய சம்சாரியாய் இருக்கிற என்னை நித்ய முக்தரோடு ஒக்க விஷயீ கரித்தான்
இவ் ஔதார்யம் கற்றதும் அவர்களோடே கிடீர் என்றுமாம்
அஸ்மாபிஸ் துவ்யோ பவதி -விபீஷணன் நம்மோடு ஒருவனாக ஆகட்டும் -என்றார்கள் இறே
விண்ணவர் கோன்
இங்குத்தை குழாத்தை ஒழிய அங்குத்தை குழாத்தையும் காட்டிக் கொடுத்தான்
உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப்பட வேண்டியது இல்லை
கோன்
அவர்களாலும் எல்லை காண முடியாது-
விரையார் பொழில் வேங்கடவன் –
பரிமளம் நிறைந்து இருந்துள்ள சோலையை உடைய திரு வேங்கட மலையை உடையவன் –
பெரிய பெருமாளை பாடா நிற்க்க திருமலையிலே போவான் என் என்னில்
ஒருவனைக் கவி பாடும் போது அவனுடைய வரத்து சொல்லி இ றே கவி பாடுவது –
பரம பதத்தில் -நின்றும் ஸ்ரீ மதுரையிலே தங்கி -திருவாய்ப்பாடிக்கு வந்தால் போலே –
ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும் -திருமலையிலே தங்கிக் காணும் கோயிலுக்கு வந்தது –
என்று பட்டர் அருளிச் செய்யும் படி
அன்றியே –
கோயில் போக்யதை தமக்கு நிலம் அல்லாமையாலே திருமலையிலே போய் தரிக்கப்
பார்க்கிறார் -என்றுமாம் –
விரையார் –
நித்ய ஸூரிகளை உடையவன் ஆவதுக்கு மேல் ஓர் ஐஸ்வர்யம்
விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் –
ஆற்றிலே அழுந்துவார் -ஆழம்காலிலே இளைப்பாறத் தேடுமா போலே அவர்களும்
வந்து அடிமை செய்யும் இடம்
வேங்கடவன் –
அர்ச்சாவதாரத்துக்கு பொற் கால் பொலிய விட்ட இடம் –
நிமலன்
இத் தலையை பெறுகைக்கு பச்சை இட்டவனும் தானே
இத் தலையில் அர்த்தித்வம் இன்றிக்கே இருக்க இப்படி உபகரிக்கையால் வந்த ஔஜ்வல்யம்
இவனும் ஓர் அடி இடப் பார்த்து இராது ஒழிகை
பத்ப் யாமபிக மாச்சைவ ஸ்நேக சந்தர்சநேந ச-
நீதி -வானவன்
சேஷ சேஷித்வங்கள் முறை மாறாத நித்ய விபூதியில் உள்ளவன்
ஈஸ்வரோஹம் -என்று எதிரிட்டு இருக்கும் இடம் இ றே இவ்விடம் –
அங்கு கலக்குவாரும் இல்லை கலங்குவாரும் இல்லை
இங்கு கலக்குவாரும் உண்டு கலங்குவாரும் உண்டு –
நீள் மதிள் அரங்கத்தம்மான் –
நீதி வானவன் -என்னா -நீள் மதிள் அரங்கத்தம்மான் –என்கிறார் –
அளப்பரிய ஆரமுதை அரங்கமேய அந்தணனை -என்னுமா போலே
நீள் மதிள்-
ரஷகத்துவதுக்கு போரும்படியான மதிளை உடைய பெரிய கோயிலிலே கண் வளர்ந்து
அருளுகிற பரம சேஷி –
அம்மான் –
ஈரரசு தவிர்ந்தால் இ றே சேஷித்வம் பூர்ணம் ஆவது
திரு மலையிலே போக்யதை நிலம் இல்லாமையாலே மீளவும் கோயிலிலே புகுகிறார்
வெள்ளத்தை கள்ளமடையாலே பள்ளத்தே விடுமா போலே
திருவேம்கடமுடையான் வடக்குத் திருவாசலாலே வந்து புகுந்தான் அத்தனை -என்றுமாம்
திருக் கமல பாதம் –
செவ்வி குளிர்த்தி விகாசம் பரிமளம் தொடக்கமானவை
ஆதித்யனைக் கண்டால் இறே தாமரை அலருவது –
இத்தாமரைக்கு ஆதித்யன் இவர் –
பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்
இவருடைய தளிர் புரையும் திருவடிகள் இருக்கிற படி
அம்மான் திருக் கமல பாதம் –
தொடர்ந்து வருகைக்கு ப்ராப்தி –
வந்து –
த்விபாந்தரத்தில் சரக்கு சேர வேண்டினால் பாதிப் பாதி வழி யாகிலும் –
வருதல் -ஒருதலைப் பற்றுதல் செய்ய வேணும் இறே -அங்கன் இன்றியே –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்கிறபடி
வழி வந்தானும் -தானே பற்றினானும் தானே -என்கிறது-
என் கண்ணினுள்ளன
எத்தைக் கண்ட கண்களுக்கு இவை விஷயம் ஆகின்றன
நீதி வானவன் -கமலபாதம் -என் கண்ணினுள்ளன-
சதா தர்சனம் பண்ணுகிறவர்கள் உடைய கண்ணுக்கு இலக்கானது கிடீர் என் கண்ணுக்கு இலக்கு ஆய்த்து –
வல்லதனை நாளும் விரோதம் பண்ணினேன்
போக்கற்றவாறே என் கண்ணை செம்பளித்தேன்
தொடர்ந்து வந்து செம்பளித்த கண்ணை யுறுத்து உள்ளே புகுந்து நிற்கையாலே என் கண்ணினுள்ளன-என்கிறார்
அன்றியே
தம் கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று கண்ணைச் செம்பளித்தார்
கண்ணினுள்ளே பிரகாசிக்கத் தொடங்கிற்று-
ஒக்கின்ற –
பிரயோஜனம் இரண்டுக்கும் ஒத்திரா –
நின்றது அங்குதைக்கு சீல ஸித்தி -இங்குத்தைக்கு ஸ்வரூப ஸித்தி
ஒக்கின்ற –
ப்ரத்யஷ சாமாநகாரமாய் -இருத்தது -என்னுதல்
என் கண்ணுக்கு இலக்கான இடத்திலும் பழைய நிலை குலையாது -இருந்தது என்னுதல்
சம்சாரிகளைப் பார்த்து உங்களுக்கும் ஒக்குமோ என்கிறார் ஆதல்
இந்த லாபம் அத் தலைக்கு ஒக்குமோ என்கிறார் ஆதல் –
அமலன் -உயர்வற உயர்நலம் உடையவன்
ஆதி –யவன்
பிரான் மயர்வற மதி நலம் அருளினன்
அடியார்க்கு -பயிலும் சுடர் ஒளி
விண்ணவர் கோன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
வந்து -அவர் தொழுது எழு -என்றார் -இவர்க்கு அவை தானே -வந்தன-
——————————————————————-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய வியாக்யானம்-
அமலன் –
ஸ்ரீ வால்மீகி பகவான் -கோ குணவான் -என்று ப்ரஸ்நம் பண்ண -இஷ்வாகு வம்ஸ ப்ரபவ –
என்று சீல குணத்தை முந்துறச் சொன்னாப் போலேயும் –
நம் ஆழ்வார் ஆநந்த வல்லியில் ஆநந்த குணத்தை -உயர்வற உயர்நலம் உடையவன் –
என்று ப்ரதமத்திலே அநுபவித்தாப் போலேயும் –
இவரும் தம்முடைய நிஹீநதையைப் பாராதே மேல் விழுந்தபடியைக் கண்டு
அவனுடைய ஹேய ப்ரத்யநீகதையைப் முற்பட அனுபவிக்கிறார் –
தம்முடைய ஜன்மாதிகளால் உண்டான நிகர்ஷ அனுசந்தாநத்தாலே அகல –
அது தானே பற்றாசாக -திரு உள்ளம் புண்பட்டு மேல் விழுந்த இடத்திலும்
அத் தலைக்கு அவத்யம் இன்றியிலே நிர்மலனாய் இருக்கிற படியைக் கண்டு -அமலன் -என்கிறார் –
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதி –
அமலன் –
அபஹத பாப்மத்வாதி குணங்கள் ஆத்மாவுக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஹேய சம்பந்த அவஹமாய் பகவத் ப்ரசாதத்தாலே உண்டாக வேண்டி இருக்கும் –
இவன் அங்கன் அன்றியே இருக்கும் –
அமலன் –
ஸூத்தன் என்றபடி -இவன் ஸூத்தனாகை -யாவது -தான் ஒருவன் ஸூத்தனாகை யன்று -தன்னோடு சம்பந்தித்தாரையும்
ஸூத்தராக்க வல்ல அடிவுடைமை –
துயரறு சுடரடி இறே-
பாவநஸ் சர்வ லோகானாம் த்வமேவ ரகு நந்தன -என்னுமா போலே-
அமலன் –
அகில ஹேய ப்ரத்ய நீகன் –
அசித் கதமான பரிணாமம் -தத் சம்ஸ்ருஷ்ட சேதன கதமான -அஞ்ஞான துக்கங்கள் –
முக்த கதமான ஜ்ஞான சங்கோச விகாசங்கள் –
நித்ய சித்த கதமான பாரதந்த்ர்யம்
இவையாகிய ஹேயங்களுக்கு ப்ரத்ய நீகனாய் இருக்கும்
பாரதந்த்ர்யத்துக்கு குறை என் என்னில் –
தனக்கு அவ்வருகு ஒருவன் உளனானால் வருமதே பாரதந்த்ர்யம் -அது ஈஸ்வரனுக்கு
அவத்யம் இறே -பரதந்த்ரனுக்கு சேஷித்வம் அவத்யமா போலே
புருஷனுக்கு ஸ்தநோத் பேதமும் ஸ்திரீகளுக்கு சமச் குணம் யோகமும் காணும் அந்த
மாறாட்டத்தாலே வரும் அவத்யம் –
ப்ரத்ய நீகனாகையாவது -உக்த அவத்யங்கள் தன்னை ஸ்பர்சியாமல் இருக்கும் அளவன்றிக்கே
புறம்புள்ள அவத்யங்களையும் அறுத்துக் கொடுக்க வல்லவனாகை
தேஜஸ் திமிரங்கள் போலே ஹேய ப்ரத்யநீகன் -என்கை –
ஆகை இறே இவனை ஒழிந்தாருக்கு அடைய இவனே சுபாஸ்ரயமாய் இருக்கிறது –
ஆதி –
இப்படி நிஹீநரான உம்மை மேல் விழுந்து அங்கீகரிக்கைக்கு அடி என் என்ன
பெற்ற பாவிக்கு விடப்போமோ -என்கிறார் –
ஆதி –
ஆதி யத இதி ஆதி -ஸ்வரூப ரூபாதிகளைக் கண்டு எல்லாரும் மேல் விழும்படி இருக்கிற தான்
இத் தலையில் நிஹீநதை பாராதே மேல் விழுந்தான் -என்கை
ஆதி யத இதி ஆதி-தன்னை அனுபவித்தால் வேறு ஒன்றில் போக ஒட்டாதபடியாய் இருக்கும் –
ஆதி –
பூர்வஜ -என்னுமாபோலே -என்னுடைய நிகர்ஷத்தைப் போக்கி தன் பக்கலில் சேர்த்துக் கொள்ளுகையாலே
என் பேற்றுக்கு முற்பாடன் ஆனவன் –
ஆதி –
அடியில் அழிந்த ஜகத்தை உண்டாக்கினாப் போலே -நான் அழித்துக் கொண்ட ஸ்வரூபத்தை
உண்டாக்கினவன் –
இத்தால் -கல்யாண குண யோகத்தை சொல்லிற்று –
ஆக இரண்டு -பதத்தாலும் -ஹேய ப்ரத்யநீகத்வமும் கல்யாண குண யோகமும் சொல்லிற்று –
பிரான் –
கீழ்ப் பண்ணின உபகாரத்தை நினைத்து -பிரான் -என்கிறது ஆதல் –
மேல் பண்ணப் புகுகிற உபகாரத்தை நினைத்து பிரான் -என்கிறது ஆதல் –
பிரான் –
என் நிகர்ஷம் பாராதே என்னை விஷயீ கரித்த உபகாரகன்-
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –
எனக்கு -என்றும் -பிறர்க்கு -என்றும் திரிந்த என்னை –
தனக்கும் தன் அடியார்க்கும் ஆக்கின பரிசுத்த ஸ்வபாவன்
தலையைப் பிடித்து கால் கீழே இட்டுக் கொண்டான் –
ரத்ன ஹாரீ ச பார்த்திவ என்னுமா போலே நல்லது கண்டால் -அவர்களுக்கு -என்று இறே –
ஸ்வ விஷய சேஷத்வத்தை உண்டாக்கின அளவு அன்றிக்கே
ததீய சேஷத்வ பர்யந்தமாக்கி
ததீய சேஷத்வம் நிலை நிற்கும்படி பண்ணினான்
ஆத்மாவுக்கு நிலை நின்ற வேஷம் சேஷத்வம் ஆகையாலே -அடியார்க்கு -என்கிறார்-
அடியார்க்கு –
இவர்களுக்கு -ஊரும் பேரும் தாருமாகிறது சேஷத்வம் ஆய்த்து –
சேஷத்வம் இறே இவ் வாத்மாவுக்கு பிரதம நிரூபகம்
என்னை –
தேஹாத்ம அபிமாநிகளும் தீண்டாத என்னை –
ப்ரக்ருதிக்கு அடிமை செய்து போந்த என்னை –
தந்த பதத்தின் சீர்மை யறியாத வென்னை –
நன்மைக்கு தனக்கு அவ் வருகு இல்லாதாப் போலே தீமைக்கு எனக்கு அவ் வருகு இல்லாத வென்னை
ஆட் படுத்த –
பகவத் சேஷத்து அளவில் நின்றால் மீள சங்கை உண்டு –
பாகவத் சேஷத்த்ளவும் சென்றால் மீளப் போகாதே
உகப்பாலே வருமது ஆகையாலே -ஒரு ஷேத்ரம் பத்து எட்டு க்ரயம் சென்றால் மீள விரகு இல்லை –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு முதலிகள் உடைய விஷயீ காரம் பெருமாளுடைய விஷயீ
காரத்துக்கு முற்பட்டாப் போலே இவருக்கு ததீய விஷயீ காரம் முற்ப்பட்ட படி –
ஆநயை நம் ஹரிச் ரேஷ்ட –
ஆட் படுத்த –
தான் சேஷித்வதினுடைய எல்லையில் நின்றால் போலே -சேஷத்வத்தின்
எல்லையில் என்னை வைத்தான் –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –
அவர்களோடு சம புத்தி பண்ணித் தராமே -அவர்களுக்கு சேஷ பூதன் ஆக்கின பரிசுத்த ஸ்வபாவன் –
ஐஸ்வர்யார்த்திகளும் ஆத்ம ப்ராப்தி காமரும் தன்னைப் பற்றுவர்கள் இறே –
இவ்வளவு புகுர நிறுதுகைக்கு அதிகாரிகள் அல்லர்களே யவர்கள்
அநந்ய பிரயோஜனர் இறே இவர்க்கு ஆவார்
தாமும் அநந்ய பிரயோஜனர் ஆகையாலே -விசேஷித்து லோக சாரங்க மஹா முனிகளை
இட்டு தம்மை விஷயீ கரித்ததை சொல்லுகிறார்
தம்மை வஹித்த அளவில் தாம் சேஷ பூதர் ஆனபடி என் என்னில்
திருத்துழாய் திரு அபிஷேகத்தில் இருந்தது என்னா சேஷத்வம் குலையாதே-
மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம்ன் ருபை -என்றாம் என்னா
அவனுடைய சேஷித்வம் குலையாதாப் போலே
(மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம் ந்ருபை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12-என்றும்
கிங்க ரௌ சமுபஸ்தி தௌ -பால -31-4-என்றும் சொல்லக் கடவது இறே-
சர்வ நியந்தா வானவன் ஒரு சம்சாரிக்கு புத்திரன் ஆனான் இறே –
இது இறே ஆஸ்ரித அர்த்தமான ஸ்வரூப அந்யதா பாவம் –)
விமலன் –
என் சிறுமை பாராதே ததீயர்க்கு சேஷம் ஆக்குகையால் வந்த ஔஜ்வல்யம்
எதிரிகள் தரம் பாராதே சீரியர் தம் தாம் அளவிலே இறே கொடுப்பது-
விண்ணவர் கோன் –
நிஹீ நரான உம்மை இப்படி விஷயீ கரித்தது ஆள் இல்லாமையாலேயோ என்னில் –
ஒரு த்ரிபாத் விபூதியாக தன்னை தாலாட்ட இருக்கிறவன் கிடீர் என்னை விஷயீ கரித்தான் -என்கை
இவ் ஔதார்யம் கற்றது அவர்களோடே கிடீர் என்றுமாம் –
அஸ்மாபிஸ் துவ்யோ பவதி -விபீஷணன் நம்மோடு ஒருவனாக ஆகட்டும் -என்றார்கள் இறே
விண்ணவர் கோன்
இங்குத்தை குழாத்தை ஒழிய அங்குத்தை குழாத்தையும் காட்டிக் கொடுத்தான்
உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப்பட வேண்டியது இல்லை
கோன்
அவர்களாலும் எல்லை காண முடியாது-
விரையார் பொழில் வேங்கடவன் –
பரிமளம் நிறைந்து இருந்துள்ள சோலையை உடைய திரு வேங்கட மலையை உடையவன்
சர்வ கந்த என்கிற வஸ்து வாகையாலே போலியான பரிமளம் கண்டு கால் தாழ்ந்தது இத்தனை
குஸஸ்தலே நிவஸத் -என்னுமா போலே
பரம பதத்தில் நின்றும் கோயிலிலே ஏற வருகைக்கு என்று தங்குகிற தேசம் திருமலை
பிள்ளை திரு நறையூர் அரையரை சிலர் -பெரிய பெருமாளை அனுபவிக்க இழிந்தவர்
திருவேம்கடமுடையானைப் பாடப் போவது என் என்ன –
ஆற்றிலே அமிழ்ந்துகிறவன் ஒரு காலை தரையிலே ஊன்றினால் பிழைக்கலாமோ
என்று கால்
தாழ்க்குமா போலே இவரும் பெரிய பெருமாள் அழகிலே அழுந்துகிறவர் ஆகையாலே
திருமலையிலே கால் தாழ்ந்தார்-
அது மடுவாகிறது அறிகிறிலர் -வேறு சிலர்
பெரிய பெருமாளை பாடா நிற்க்க திருமலையிலே போவான் என் -என்று அவரைக் கேட்க
ஒருவனைக் கவி பாடும் போது அவனுடைய வரத்து சொல்லி இறே கவி பாடுவது –
பரம பதத்தில் -நின்றும் ஸ்ரீ மதுரையிலே தங்கி -திருவாய்ப்பாடிக்கு வந்தால் போலே –
ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும் -திருமலையிலே தங்கிக் காணும் கோயிலுக்கு வந்தது –
நித்ய சூரிகளை உடையவன் ஆவதுக்கு மேல் ஓர் ஐஸ்வர்யம்
விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் –
ஆற்றிலே அழுந்துவார் -ஆழம்காலிலே இளைப்பாறத் தேடுமா போலே அவர்களும்
வந்து அடிமை செய்யும் இடம்
வேங்கடவன் –
அர்ச்சாவதாரத்துக்கு பொற் கால் பொலிய விட்ட இடம் –
நிமலன்
நிர்ஹேதுகமாக விஷயீ கரித்த ஸூத்தி யோகத்தை உடையவன் –
இத்தலையை பெறுகைக்கு பச்சை இட்டவனும் தானே
இத்தலையில் அர்த்தித்வம் இன்றிக்கே இருக்க இப்படி உபகரிக்கையால் வந்த ஔஜ்வல்யம்
இவனும் ஓர் அடி இடப்பார்த்து இராது ஒழிகை
ஓர் அடி இட்டார் உண்டாகில் -பத்ப் யாமபிக மாச்சைவ ஸ்நேக சந்தர்சநேந ச -ஆபிமுக்யம்
அடியாக அங்கீகரித்து ஓர் அஞ்சலி மாதரமும் கூட உண்டு அறுக்க மாட்டாதான் ஒருவன்
நிமலன் –
இத்தலைக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே தன பேறாக இருக்கை
அமலன் -என்றது இவரைத் தனக்கு ஆக்கினபடி –
விமலன்-என்றது தன் அடியார்க்கு ஆக்கினபடி –
நிமலன் -என்றது நான் பச்சை இடா நிற்க என் கார்யம் செய்தான் -என்கை
நிமலன் –
இது தன் பேறாக செய்தான் -என்கிறார் –
க்ருத க்ருத்யஸ்த தாராம -என்கிறபடியே
நின் மலன் –
தான் உபகரித்தானாய் இத்தலை -உதவிக் கைம்மாறு என்னுயிர் -என்றால் போலே
பிரத்யுபகாரம் தேடித் தடுமாறாத படி -ப்ரணஷ் டஸ்ய யதா லாப என்கிறபடியே
உடையவன் உடைமையைப் பெற்றான் ஆகில் நமக்கு என் என்று –
ஆத்ம லாபம் தன்னதாம்படி இருக்கிற ஸூத்தியை உடையவன் –
நீதி -வானவன்
இப்படி புகுர நிறுத்துகைக்கு அடி -சேஷ சேஷித்வங்கள் முறை மாறாத நித்ய விபூதி-வாசனை என்கை
ஈஸ்வரோஹம் -என்று எதிரிட்டு இருக்கும் இடம் இறே இவ்விடம் –
அங்கு கலக்குவாரும் இல்லை கலங்குவாரும் இல்லை
இங்கு கலக்குவாரும் உண்டு கலங்குவாரும் உண்டு –
நீள் மதிள் அரங்கத்தம்மான் –
நீதி வானவன் -என்னா -நீள் மதிள் அரங்கத்தம்மான் –என்கிறார் –
அளப்பரிய ஆரமுதை அரங்கமேய அந்தணனை -என்னுமா போலே
நீள் மதிள் அரங்கம் –
ரஷகத்துவதுக்கு போரும்படியான மதிளை உடைய பெரிய கோயிலிலே கண் வளர்ந்து
அருளுகிற பரம சேஷி –
இப் பாசுரம் கேட்டுப் போலே காணும் திருமங்கை ஆழ்வார் திரு மதிள் செய்தது
அழகிய வாயாலே இது அருளிச் செய்த பின்பாகாதே திரு மாளிகைகளும் திருக்
கோபுரங்களும் கனத்தது-
அம்மான் –
அங்குள்ளோரோடு ஒத்த ப்ராப்தி இங்கு உள்ளோரோடும் உண்டாகையாலே இங்கு வந்து சாய்ந்து அருளிற்று
அம்மான் –
ஈரரசு தவிர்ந்தால் இறே சேஷித்வம் பூர்ணம் ஆவது
திரு மலையிலே போக்யதை நிலம் இல்லாமையாலே மீளவும் கோயிலிலே புகுகிறார்
வெள்ளத்தை கள்ளமடையாலே பள்ளத்தே விடுமா போலே
திருவேம்கடமுடையான் வடக்குத் திருவாசலாலே வந்து புகுந்தான் அத்தனை -என்றுமாம்-
திருக் கமல பாதம் –
பெரும் காற்றிலே யிழிவார் தெப்பம் கொண்டு இழியுமா போலே -ஒரு தாமரைப் -பூவை
திருஷ்டாந்தம் -ஆக்குகிறார் -செவ்வி குளிர்த்தி நாற்றம் விகாசம் -இவை தாமரைப் பூவைப் போலே இருக்கையாலே –
ஆதித்ய சன்னதியிலே அலறும் தாமரை போலே ஆஸ்ரித சன்னதியிலே அலறும் தாமரை யாயத்து -திருவடிகள்-
பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்
இவருடைய தளிர் புரையும் திருவடிகள் இருக்கிற படி
அம்மான் திருக் கமல பாதம் –
என்கையாலே ப்ராப்தமுமாய் ப்ராப்யமுமாய் ஆன திருவடிகள் -என்கை
நாராயண சரணங்கள் –என்றபடி
வந்து –
என்று அவனுடைய உபாய பூர்த்தி -சொல்லுகிறது
விதிஸி வசனகாத் யைர்தத் யாது மத்யந்த தூரமான திருவடிகள் கிடீர் என்னளவும் வந்து
விஷயீ கரித்தது
த்விபாந்தரத்தில் சரக்கு சேர வேண்டினால் பாதிப் பாதி வழி யாகிலும் –
வருதல் -ஒருதலைப் பற்றுதல் செய்ய வேணும் இறே -அங்கன் இன்றியே –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்கிறபடி
வழி வந்தானும் -தானே பற்றினானும் தானே -என்கிறது-
என் கண்ணினுள்ளன
எத்தைக் கண்ட கண்ககளுக்கு இவை விஷயம் ஆகின்றன
நீதிவானவன் -கமலபாதம் -என் கண்ணினுள்ளன-
சதா தர்சனம் பண்ணுகிறவர்கள் உடைய கண்ணுக்கு இலக்கானது கிடீர் என் கண்ணுக்கு இலக்கு ஆய்த்து –
வல்லதனை நாளும் விரோதம் பண்ணினேன்
போக்கற்றவாறே என் கண்ணை செம்பளித்தேன்
தொடர்ந்து வந்து செம்பளித்த கண்ணை யுறுத்து உள்ளே புகுந்து நிற்கையாலே என் கண்ணினுள்ளன-என்கிறார்
அன்றியே
தம் கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று கண்ணைச் செம்பளித்தார்
கண்ணினுள்ளே பிரகாசிக்கத் தொடங்கிற்று-
ஒக்கின்ற –
பிரயோஜனம் இரண்டுக்கும் ஒத்திரா –
நின்றது அங்குதைக்கு சீல ஸித்தி -இங்குத்தைக்கு ஸ்வரூப ஸித்தி
ஒக்கின்ற –
என் கண்ணுக்கு இலக்கான உங்களுக்கும் ஒக்கும் என்கிறார் –ஆதல்
கண்ணினுள்ளன ஒக்கின்றவே -என்று ஒரு பதமாய்
என் கண்ணினுள்ளன வானாப் போலே இரா நின்றது -என்றபடி –
ஒன்பது பாட்டு வழியிலே அனுசந்தித்து பத்தாம் பாட்டிலே திருவடி தொழுதார் என்கிற
ஐதிகத்தின் படியே மானஸ சாஷாத்காரம் தான் கண்ணிட்டுக் கண்டால் போலே இருக்கை
அங்கன் இன்றிக்கே –
மானஸ சாஷாத்காரத்தோடு சேர்ந்து இருந்ததீ -சஷூர் விஷயமான திருவடிகள் என்றுமாம் –
அமலன் -உயர்வற உயர்நலம் உடையவன்
ஆதி –யவன்
பிரான் மயர்வற மதி நலம் அருளினன்
அடியார்க்கு -பயிலும் சுடர் ஒளி
விண்ணவர் கோன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
வந்து -அவர் தொழுது எழு -என்றார் -இவர்க்கு அவை தானே -வந்தன –
———————————————————————-
ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -அவதாரிகை
இதில் முதல் பாட்டு -திரு மந்த்ரத்திலும் த்வயத்திலும் முமுஷுவுக்கு அவஸ்ய
அனுசந்தேயங்களான அர்த்தங்களை ஸூசிப்பிக்கிறது
வியாக்யானம்
அமலன் -என்கிறது மலப்ரதிபடன் -என்றபடி -இத்தால் மோஷ ப்ரதத்வம் சொல்லிற்று ஆய்த்து –
இது பிரதானமான ரஷகத்வம் ஆகையாலே பிரியப் பேசப்படுகிறது
ஆதி –
ஏஷ கர்த்தா ந க்ரியதே -இத்யாதிகளில் படியே சர்வ ஜநதேக காரண பூதன்
இத்தால் -காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுவுக்கு சரணமாக பற்றப்படுமவன் என்று பலிதம்
இக் காரணத்வமும் மோஷ பிரதத்வமும் சத்ர சாமரங்கள் போலே சர்வ லோக
சரண்யனுக்கு விசேஷ சிஹ்னங்கள்-
பிரான் –
கருணா க்வாபி புருஷே இத்யாதிகளில் படியே சர்வ உபகாரகன்
இங்கு ஆத்மாக்கள் உடைய சத்தாதி ஸ்தாபனம் முதலாக பரிபூர்ண கைங்கர்ய ப்ரதான
பர்யந்தமாக -ப்ரத்யுபகாராதி நிரபேஷனாவனனுடைய
அநுகம்பா அக்ருத்யங்கள் எல்லாம் சாமான்யேந -சொல்லப்படுகிறது
இது எல்லாம் பிரதம அஷரார்தமான ரஷண -பேதம்
இவை தம்மளவில் பர்யவசித படியிலே இம் மூன்று பதத்துக்கும் தாத்பர்யம்
இது மேல் பாசுரங்களிலும் காணலாம்-
அடியார்க்கு என்னை -ஆட்படுத்த -என்கிற இடத்தில் –
அடியார்-என்கிற இத்தால் -த்ருதீய அஷரத்திலே சொன்ன ஜீவ வர்க்கமும்
ஜீவனில் ஈஸ்வரனைக் காட்டில் வேறுபாடும் அந்யோந்யம் பிரிவும் -காட்டப்படுகிறது –
அடியார் -என்றால்
சர்வ சாதாரணமாக சதுர்த்தியில் சொன்ன தாதர்த்யவான்களை எல்லாம்
காட்டிற்றே யாகிலும் -இங்கு அடியார் -என்கிறது –
யோ ஹ்யேநம் புருஷம் வேத தேவா அபி ந தம் விது –
என்னும்படி அபரிச்சேத்ய மகாத்யம்யரான சேஷத்வ ஜ்ஞான ரசிகரை –
இப்படி அடியார்க்கு -என்று விசேஷ உபாதானம் பண்ணுகையாலே –
மத்யம அஷரத்தின் படியே நிருபாதிக சேஷிகள் வேறு இல்லாத -படியும்
கர்ம உபாதிக சேஷிகளோடு தமக்கு துவக்கு அற்ற படியும் சொல்லிற்று ஆயிற்று –
சர்வ சேஷி யாகையாலே சர்வத்தையும் யதேஷ்டமாக விநியோகிக்க ப்ராப்தனாய் –
நிரந்குச ஸ்வதந்த்ரன் ஆகையாலே சர்வத்தையும் யதேஷ்டமாக விநியோகிக்க சக்தனுமான
சர்வேஸ்வரன் -அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரீ தர்க்கு சர்வமும் சேஷமாகக் கடவது -என்று
விநியோக விசேஷத்தால் சர்வருக்கும் பாகவத சேஷத்வம் நித்ய சித்தமானால்
அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரீதர்க்கு பகவத சேஷத்வம் ஈஸ்வரன் தன்னையும் பாகவதரையும் ஒழிந்த
அந்யரைப் பற்ற சேஷத்வம் இல்லாதபடி-வருகிறதே இதின் பலமான -கைங்கர்யமும் இப்படி
வருகிறது ஆகையாலே -என்னை அடியார்க்கே ஆட்படுதினான் -என்ற அவதாரணமும்
இங்கே விவஷிதம்
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பரோடு உற்றிலேன் -என்று இறே இவர்களுடைய -பாசுரம்-
என்னை ஆட் படுத்த –
யூயமிந்த்ரிய கிங்கரா -என்னும்படி இந்திரிய கிங்கரனாய் வைத்து -அதுக்கு மேலே –
ஈஸ்வரோஹம் -என்று இருக்கக் கடவ -என்னை -அதோஸஹமபி தே தாஸ -என்னப்
பண்ணின உபகாரத்தில் காட்டிலும் -உற்றதும் உன் அடியார்க்கு -அடிமை என்னப்
பண்ணின இதுக்கு மேலே ஒரு உபகாரம் உண்டோ என்று -இப் பரம உபகாரத்தையும்
பிரித்து -பேசுகிறார்
இது நமஸில் தாத்பர்யம்
கீழ்ச் சொன்ன க்ர்த்ருத்வாதிகளாலே -எருத்துக் கொடி யுடையான் -முதலான ஆத்மாந்தரங்களுக்கு
போலே அஜ்ஞாநாதி தோஷங்கள் இவனுக்கு உண்டாகில் இவன் முன்பு சொன்ன
சாஷான் மோஷ ப்ரதானம் பண்ண வல்லனோ -என்ன –
விமலன்
நித்ய நிர்தோஷன் -இத்தால் பத்த முக்த விலஷணன் -என்றது ஆயிற்று –
இவ்வளவு ஸூரிகளுக்கும் இல்லையோ என்ன –
விண்ணவர் கோன் –
பராதீன ஸூத்தி யோகத்தை உடையரான ஸூரிகளைக் காட்டில் வேறு பட்டவன் –
இத்தாலே ஸூரி சேவ்யமான பர ரூபமும் தோன்றுகிறது
இப்படி எட்டா நிலத்திலே இருக்கும் இருப்பு இங்கு உள்ளாருக்கு நிலம் அன்றே -என்ன-
விரையார் பொழில் -வேம்கடவன்
பரிமளம் வடிவு கொண்டால் போலே இருக்கிற திருச் சோலைகளை உடைய திரு மலையிலே
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்கிறபடியே எல்லாருக்கும்
ஆஸ்ரயிக்கவும் அநுபவிக்குமாம்படி -இருள் தரும் மா ஞாலத்துள் குன்றத்து இட்ட விளக்காய் -நிற்கிறவன்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் -ஆவேனே என்னும்படி பிறந்த ஸ்தாவரங்களுடைய
ஆமோதம் அதிசயமாய் இருக்கும் –
இப்படி சர்வ ஸூலபன் ஆனாலும்
அவ் வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
என்னும்படி -நிற்குமோ -என்ன
நிமலன்
ப்ரஹ்ம ருத்ராதிகளும் அஞ்சி அருளப்பாடு முன்னாக அணுக வேண்டும்படியான
ஐஸ்வர்யத்திலே குறும்பற்ற நம்பிக்கு கூசாதே நிரந்தர சம்ஸ்லேஷம் பண்ணலாம்படி
தன் ஈஸ்வர சுணை யாகிற ஆஸ்ரயண விரோதி தோஷத்தை -மறைத்து
அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி -என்கிறபடியே ஆஸ்ரீத பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு நிற்குமவன்
இப்படி சௌலப்ய சௌசீல்யங்கள் உண்டானாலும் ஆஸ்ரீத தோஷத்தைக் காணும் ஆகில்
அணுகக் கூசார்களோ –என்னில்
நின்மலன் –
அவிஜ்ஞாதா -என்றும் -என் அடியார் அது -செய்யார் என்றும் சொல்லுகிறபடியே
ஆஸ்ரீதருடைய தோஷ தர்சனம் ஆகிற சரண்ய தோஷம் இல்லாதவன்
சர்வஜ்ஞனாய் இருக்கச் செய்தே ஆஸ்ரீத தோஷத்தை காணான் என்றது –
காணும் அதுவும் இவர்கள் உடைய தோஷத்தைக் கழிக்க உறுப்பாம் -என்றபடி –
விமலன் -என்று தொடங்கி -இவ் வஞ்சு பதங்களாலே நாராயண சப்தத்தில்
உபாயத்வ ப்ராப்யத்வங்களுக்கு உபயுக்தமான உபய லிங்கத்வமும்
உபய விபூதி நிர்வாஹகத்வமும் சொல்லிற்று ஆயிற்று
மேல் -இவன் ஸ்வரூப ப்ராப்த கைங்கர்ய ரூபமான நீதியிலே நிரதரான நித்ய ஸூரிகளுக்கு
சேவ்யனானாப் போலே நமக்கும் சேவ்யனாம் என்று -சதுர்த்தியில் கருத்தான
கைங்கர்ய பிரதி சம்பந்தித்வத்தை அனுசந்திக்கிறார்
நீதி -வானவன்
இங்கு வான் -என்கிற சப்தம் ஸூரி சஹிதமான பரம பதத்தை சொல்லுகிறது
நீதியை நடத்துவிக்கும் வானிலே வர்த்திக்குமவன் -என்னவுமாம் –
தேன வஞ்சயதே லோகன் மாயா யோ கேந கேசவ -என்கிறபடியே –கலக்குவாரும்
அவசா நந்தி மாம் மூடா -என்கிறபடியே கலந்குவாரும் இல்லாத தேசம் ஆகையாலே
தாஸ்யம் ஐஸ்வர்ய யோகேன ஜ்ஞாதீ நாஞ்ச கரோம் யஹம் –என்றும்
பரம ஈஸ்வர சம்ஜ்ஞோஸ்ஜ்ஞா கிமந்யோ மய்ய வஸ்திதே -என்றும்
இங்கு பிறக்கும் ஈசேசி தவ்யத்தின் மாறாட்டம் இல்லாத பரம பதத்தில் நித்ய வாஸம்
பண்ணுகிறவன் என்றது ஆய்த்து-
இப்படி சர்வ சேவ்யனான சர்வ சேஷி -விபீடணற்கு வேறாக நல்லான் -என்கிறபடியே
தமக்கு இப்போது விசேஷித்து அனுபவிகலாம்படியைப் பேசுகிறார் –
நீள் மதிள் அரங்கத்தம்மான் –
அயோத்யை -என்றும் அபராஜிதை -என்றும் சொல்லுகிற கலங்கா பெரு நகரத்தின் படியைக்
கொடி யணி நெடு மதிள்களாலே -ஸூ ரஷிதமான ஸ்தல விசேஷத்தாலே காட்டி –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான -தன் படியை -செங்கோல் உடைய திருவரங்க செல்வனார் ஆன
ஆகார விசேஷத்தாலே அறிவித்துக் கொண்டு சேஷித்வத்தின் எல்லையிலே தான் நின்றால் போலே
சேஷத்வத்தின் எல்லையில் என்னை நிறுத்தின ஸ்வ தந்திர ஸ்வாமி
அரங்கத்தம்மான் –
நீர்மைக்கும் மேன்மைக்கும் எல்லை யானவன்
இவனுடைய உபாயத்வ ப்ராப்யத்வங்களில் உறைப்பு உண்டான திருவடிகளை அனுபவிக்கிறார்
திருக் -கமலபாதம்
பாவநத்வ போக்யத்வங்களாலே சுபாஸ்ரயமான திருவடிகள் –
திருவுக்கு லீலா கமலம் போலே இருக்கிற பாதம் -என்னவுமாம்-
வந்து
வந்து என்கிற இத்தால் ஓடின தம்மை துடர்ந்த படியும்
அயத்ந லப்தங்களான படியும் -தோன்றுகிறது -இத்திருவடிகளில் வைத்த கண்
வாங்க ஒண்ணாத படியான போக்ய அதிசயத்தை ஓர் உத்ப்ரேஷையாலே அருளிச் செய்கிறார்
என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
தேவாதிகளில் தலைவரான ப்ரஹ்மாதிகள் அடையவும்
சனகாதிகளான யோகிகள் அடையவும்
திவ்ய சஷூஸ் ஸுக்களுக்கும் கூட தூயமாய் இருக்கக் கடவ அவை –
மனுஷ்ய மாத்ரமான என்னுடைய மாம்ஸ சஷூஸ் ஸுக்களுக்கும்
அத்ய அசன்னமாய் இரா நின்றன -என்று ஆச்சர்யப் படுகிறார் –
நீள் மதிள் அரங்கத்தம்மான் திருக்கமல பாதம் -என்று
த்வயத்தில் பூர்வ உத்தர நாராயண சப்தார்த்தையும் -சரண சப்தார்த்தையும் அனுசந்தித்த படி –
இப்பாட்டால் –
1-மோஷ -பிரதத்வத்தையும்
2-ஜகத் -காரணத்வத்தையும்
3-மற்றும் சர்வப்ரகார உபகாரத்வத்தையும்
4-அவற்றில் சார தமமான உபகார விசேஷத்வத்தையும்
5-நித்ய நிர்தோஷத்வத்தையும்
6-நித்ய ஸூரி நிர்வாஹத்வத்தையும்
7-நித்ய விக்ரஹவத்தையும்
8-சர்வ ஸூலபத்வத்தையும்
9-சௌசீல்யத்தையும்
10-வாத்சல்யத்தையும்
11-கைங்கர்ய உத்தேஸ்யத்வத்தையும்
12-கைங்கர்ய ஸ்தான விசேஷத்வத்தையும்
13-சர்வ ஸ்வாமித்வத்தையும்
14-15-திருவடிகளினுடைய பாவனத்வத்தையும் போக்யத்வத்தையும்
16-அவற்றை தான் அநாயாசமாக அநந்ய த்ருஷ்டிகளாகக் கொண்டு அனுபவிக்கப் பெற்ற படியையும்
முன்னிட்டு ஸ்ரீ ய பதியினுடைய பராகாஷ்டாப்ராப்த குண ப்ரகர்ஷங்களை அனுசந்தித்தார்-
அவற்றில்
1-சம்சார நிவர்தக காஷ்டை யாவது -களை யற்ற கைங்கர்யத்தை கொடுக்கை –
2-காரணத்வ காஷ்டை யாவது -காரணாந்தரங்கள் எல்லாம் தான் இட்ட வழக்காய் –
தனக்காதல் -தன்னுடைய ஜ்ஞான சக்திகளுக்கு ஆதல் -ஒரு காரண சம்பாவனை இன்றிக்கே இருக்கை –
3-சரண்யத்வ காஷ்டை யாவது -தன்னை ரஷகனாக பற்றினவர்களுக்கு தன்னை ஒழிய
மற்றவரை ரஷகராகப் பற்ற வேண்டாதபடி இருக்கை
4-உபகாரத்வ காஷ்டை யாவது -ஒரு ஷூத்ர வ்யாஜத்தை அவலம்பித்து உபய விபூதி
விசிஷ்டனான தன்னை அனுபாவ்யனகக் கொடுத்தும் -அதுக்கு மேல் கொடுக்க லாவது
இல்லாமையாலே நித்யருணியாய் இருக்கை
5-க்ருபா காஷ்டை யாவது -சத்ருவினுடைய சம்பந்திகளும் கூட த்யாஜ்யர் என்ற பரிவர் முன்னே
சத்ரு தானும் இசையில் ஸ்வீகரிப்பேன் -என்று எதிர் பேசும்படியான இரக்கத்தை உடையனாய்
அவர்கள் தாங்களும் இவனை கைக் கொள்ளும்படி பண்ணுகை –
6-ஸ்வா தந்திர காஷ்டை யாவது -தன்னையும் பிறரையும் தான் நிறுத்தின நிலைகளிலே
நிறுத்தும் போது விலக்க வல்லார் இன்றிக்கே இருக்கை
7-நிர்தோஷத்வ காஷ்டை யாவது -தோஷ யுக்தங்களான பதார்த்தங்களோடு உண்டான
சம்சர்க்கத்தாலும் -பிறர்க்குஅஞ்ஞான துக்க ஹேதுக்கள் ஆனவற்றை தான் அனுஷ்டித்தாலும்
தனக்கு அஞ்ஞான துக்கங்கள் வராது இருக்கை
8-ஸ்வாமித்வ காஷ்டை யாவது -விபூதிமான்களை எல்லாம் தனக்கு விபூதியாக உடையவனாய் இருக்கை
9-சௌலப்ய காஷ்டை யாவது -அகல நினைப்பாருக்கும் அகல ஒண்ணாத படி அணுக நிற்கை
10-சௌசீல்ய காஷ்டை யாவது -தன் பக்கல் ஈச்வரத்தை சந்கிப்பாருக்கும் வெளி இடுவாருக்கும்
தானே மறு மாற்றம் சொல்லி மேலும் தன்னை தாழ விட்டு பரிமாறா நிற்கை
11-வாத்சல்ய காஷ்டை யாவது -அந்தரங்கராய் இருப்பாரும் ஆஸ்ரீத விஷயத்தில்
ஆயிரம் கோடி குற்றம் காட்டிலும் அநாதரம் பிறப்பிக்க ஒண்ணாது இருக்கை –
12-ப்ராப்யத்வ காஷ்டை யாவது -தன் விசேஷணம் ஆக அல்லது மற்று ஒரு ப்ராப்யம் இல்லாது இருக்கை
13-ஆஸ்ரீத பஷ பாதித்வ காஷ்டை யாவது -சர்வ வர்ண சமனான தான் ஆஸ்ரீத சங்கல்பத்தோடே
விரோதித்த தன் சாமான்ய சங்கல்பத்தைஅசத் கல்பமாக்கி அநிதர சுலபமான ஆபிமுக்யதைப் பண்ணுகை
14-போக்யத்வ காஷ்டை யாவது -தன் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால் தன் விசேஷணமாக
சர்வத்தையும் அனுபவிக்குமது அதின் திவலையோடு ஒத்து இருக்கை
15-அயத்ந போக்யத்வ காஷ்டை யாவது -போகார்தமாக கரண பிரேரணமும் வேண்டாதபடி
தென்றலும் பரிமளமும் வந்தாப் போலே -வந்தது விலக்க ஒண்ணாத படி அனுபாவ்யனாய் இருக்கை
16-இவை எல்லாம் இப்பதங்களில் அடைவே ஆழ்வார் அனுபவித்த படியை அனுசந்திப்பது-
—————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply