ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
—
ஸ்ரீ ஆளவந்தார் திருமேனியிலே நோவு சாத்தி எழுந்து அருளி இரா நிற்கச் செய்தே
அவர் திருக்குமாரர் திருவரங்க பெருமாள் அரையர் புருஷகாரமாக
திருக் கோஷ்டியூர் நம்பியும் பெரிய நம்பியும் ஆளவந்தார் திருவடிகளிலே
தண்டன் சமர்ப்பித்து அடியோங்களுக்கு தஞ்சமாய் இருப்பதொரு அர்த்தம் பிரசாதித்து அருள வேணும் -என்ன
ஆளவந்தாரும் முதலிகள் இருவரையும் திரு உள்ளம் பற்றி –
உங்களுக்கு தஞ்சமாய் இருப்பதொரு அர்த்தம் இது –
கோயில் ஆழ்வாரே -(திருவாராதன பெருமாள் )-உங்களுக்கு உயிர் நிலை –
உங்களுக்கு தஞ்சம் என்று புத்தி பண்ணிப் போரும் கோள் -என்றும் –
பெரிய பெருமாள் திருவடிக் கீழே வீணையும் கையுமாய் சேவித்து இருக்கிற
திருப்பாண் ஆழ்வார் விக்ரஹத்தை பாதாதி கேசாந்தமாக சேவித்துக் கொண்டு போரும் கோள் என்றும் திரு உள்ளமாக(ஆளவந்தார் போல்வாருக்காக காட்டக் கண்டு அருளிச் செய்கிறார் –அவர் அரங்கனின் பாதாதி கேசாந்தமாகவே அனுபவித்துக் கொண்டு இருப்பது போல் நாமும் திருப் பாணாழ்வாரின் பாதாதி கேசாந்தமாக அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும்)
திருவரங்க பெருமாள் அரையரையும் முதலிகள் இருவரையும் திரு உள்ளம் பற்றி –
இதுக்கு பிரமாணமாக திருமலை யாழ்வார் உயிர் நிலை அறிந்து போரும் குறும்பு அறுத்த நம்பியையும்
பேரருளாளப் பெருமாள் உயிர் நிலை அறிந்து போரும் திருக் கச்சி நம்பியையும்
பெருமாள் உயிர் நிலை அறிந்து போரும் திருப் பாண் ஆழ்வாரையும்
திருப் பாண் ஆழ்வார் உயிர் நிலை அறிந்து போரும் திருவரங்கப் பெருமாள் அரையரையும் காட்டி அருளி
(புஷ்ப த்யாக போக மண்டபங்களில் பணிப் பூவும் ஆல வட்டமும் வீணையும் கையுமான
அந்தரங்கரை முடிமன்னவனும் வைதிகோத்தமரும் ,மகா முனியும் அனுவர்தித்த க்ரமும்-சூரணை -85-அதாவது சிந்து பூ மகிழும் திருவேம்கடம்-திருவாய் -3-3-2-என்கிறபடியே புஷ்ப மண்டபமான ஸ்ரீ திரு மலையிலே பணிப்பூவும் கையுமாய் திரு உள்ளம் அறிந்து பரிமாறுகையாலே ஸ்ரீ திரு வேங்கடம் உடையானுக்கு அந்தரங்கரான ஸ்ரீ குரும்பறுத்த நம்பியை-துளங்கு நீண் முடி அரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் –பெரிய திருமொழி -5-8-9–என்கிற அபிஷிக்த ஷத்ரியாக்யரான ஸ்ரீ தொண்டை மான் சக்கரவர்த்தி அனுவர்தித்த க்ரமும் –வேகவத் உத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம் வரதஸ் சர்வ பூதானாம் அத்யாபி பரித்ருச்யதே –ஸ்ரீ காஞ்சீ மஹாத்ம்யம் -என்கிற படியே த்யாக மண்டபமான ஸ்ரீ பெருமாள் கோவிலிலே திரு ஆல வட்டமும் கையுமாய் பெருமாளுக்கு அந்தரங்கராய் நின்ற ஸ்ரீ திரு கச்சி நம்பியை வைதிகோதமரான உடையவர் அனுவர்தித்த க்ரமமும்-தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்–பெருமாள்–1-1–என்கிற படியே
போக மண்டபமான ஸ்ரீ கோவிலில் வீணையும் கையுமாய் பெருமாளுக்கு அந்தரங்கராய்
வர்த்தித்த ஸ்ரீ திரு பாண் ஆழ்வாரை ஸ்ரீ லோக சாரங்க முனிவர் அனுவர்தித்த க்ரமும் –
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையரைப் பார்த்து
நீர் பெருமாள் உயிர் நிலை அறிந்து சேவிக்கிற விக்ரஹமே (திருப்பாணாழ்வாரது திவ்ய மங்கள விக்ரஹமே)அடியேனுக்கு உபாய உபேயம் என்று புத்தி பண்ணிப் போருவன் -என்று அருளிச் செய்ய –
திருவரங்கப் பெருமாள் அரையர் ஆளவந்தார் ஸ்ரீ பாதத்திலே தண்டன் சமர்பித்து
தேவரீர் நித்ய விபூதியிலே பரம பத நாதனை சேவித்து -இமையாத கண்ணராய்க் கொண்டு -முதல் திருவந்தாதி -32
போரத் திரு உள்ளம் பற்றி அருளிற்றோ -என்று விண்ணப்பம் செய்ய –
(இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர்-32–இமையாதகண் என்றது-ஞானக்கண். அது திறந்தால் அஜ்ஞானவிருள் அகலுமாதலால் இருளகலநோக்கி என்றார்)
ஆளவந்தாரும் இவரைக் குறித்து -நீர் பர ஸம்ருத்திக்கு உகந்து அத்யவசித்து இரும் -என்ன –
இவரும் திரு உள்ளம் பற்றி இருக்கிற அளவிலே
ஆளவந்தாரும் முதலிகள் இருவரையும் திரு உள்ளம் பற்றி –
ஒருவன் பிரபன்னன் ஆனால் -பகவத் அதீனமான ஆத்ம யாத்ரையிலும் –
கர்ம அதீனமான தேக யாத்ரையிலும் அந்வயம் உண்டு என்று இருந்தான் ஆகில் –
ஆத்ம சமர்ப்பணமும் குலைந்து நாஸ்திகனாய் விடும் -ஆகையால் உபய யாத்ரையிலும்
அந்வயம் இல்லை –
நாராயணனுக்கு நைரந்தர்ய (நிரந்தர )வேஷம் -தம் பக்கல் பேற்றுக்கு
நம என்னாதவர்களையும் –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -திருவாய்மொழி -3-9-9-என்பதொரு ஔதார்ய விசேஷம் உண்டு
நாரங்களுக்கு நைரந்தர்ய (நிரந்தர )வேஷம் -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
தம் பேற்றுக்கு த்வரிகையும் ஸ்வரூப ஹாநி -எம்பெருமான் ரஷ்யன் என்று இருக்கையும் ஸ்வரூப ஹாநி –(மங்களாசாசனத்தில் மட்டுமே மாறாடி இருக்கும்)
அப்படி இருந்தான் ஆகில் அனந்யார்ஹ சேஷத்வத்துக்கும் -ஸ்வ ஸ்வாமி
சம்பந்தத்துக்கும் சேராது -என்று அருளிச் செய்ய
இவர்கள் மீளவும் ஸ்ரீ பாதத்திலே தண்டன் சமர்ப்பித்து -அடியோங்களுக்கு பற்றும் உபாயம் ஏது -என்று கேட்க
ஆளவந்தாரும்
நீங்கள் என்னை புத்தி பண்ணிப் போரும் கோள் என்கை அடியேனுக்கு ஸ்வரூப ஹாநி
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றார் -பெரிய திருமொழி -7-4-2- என்ற இதுவே
உங்களுக்கு உபாய உபேயம் என்று புத்தி பண்ணிப் போரும் கோள் என்று அருளிச் செய்ய-
(அம் புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2–நித்ய வசந்தமாய்-ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற திருச் சேறையிலே ஸ்பர்தையாலே ( போட்டியாலே )ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற
கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய திருவடிகளைத் தொழுவார் –நிதித்யாசி தவ்ய-என்கிற-ஸ்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யா சி தவ்ய-த்ரஷ்டவ்ய
கேட்டு ஆராய்ந்து இடை விடாமல் சிந்தித்து காண -என்கிற விஷயத்துக்கு
இடம் காண்கிறிலேன் )
முதலிகளும் திரு உள்ளத்திலே முசித்து (வருந்தி)இருக்கிற அளவிலே
ஆளவந்தாரும் இவர்களைக் கண்டு -நீங்கள் முசிக்க வேண்டா
உங்களுக்கு திருமந்த்ரார்தம் போக மண்டபம் –
சரம ஸ்லோகார்த்தம் புஷ்ப மண்டபம் –
த்வயார்த்தம் த்யாக மண்டபம்
இதுக்கு பிரமாதாக்கள் திருக் கச்சி நம்பி முதலானார் என்று அருளிச் செய்தார் –
(மன்றம் அர கூத்தாடி மகிழ்ந்தாய்! என்றும்
வட திரு வேம்கடம் மேய மைந்தா! என்றும்-16)
இத்தை திருவரங்க பெருமாள் அரையர் திரு உள்ளம் பற்றி –
தேவரீர் அவதாரம் தீர்த்தம் பிரசாதித்து போம் அளவில் க்ரிமி கீடாதிகளுக்கு(தங்களையே சொல்லிக் கொண்டார்கள்) ஓர் அழிவு வந்தால் சேதம் இல்லை -என்று அருளிச் செய்ய
இவ் வார்த்தையை முதலிகள் திரு உள்ளம் பற்றி -ஆளவந்தார் வியோகத்திலே நாம்
ஆத்ம த்யாகம் பண்ணக் கடவோம் -என்று நிச்சயித்து இருக்கிற அளவிலே –
பெரிய பெருமாள் திரு ஒலக்கத்திலே இவ் விசேஷம் பிறக்க -பெரிய பெருமாள் திரு உள்ளம் பற்றி
திருவரங்கப் பெருமாள் அரையர் -திருக் கோட்டியூர் நம்பி பெரிய நம்பி முதலான அருள் பாடிட்டு
ஆளவந்தார் திரு மேனிக்கு ஒரு வாட்டம் உண்டாயிற்றாகில் நீங்கள் வியோகம் பண்ணில் நம் ஆணை -என்று ஆஜ்ஞ்ஞாபித்து
திருவரங்க பெருமாள் அரையர் திருக் கையிலே இவர்களைக் காட்டிக் கொடுத்து அருள
இவரும் அவர்களைக் கை பற்றி ஆளவந்தார் ஸ்ரீ பாதத்திலே சென்று இவ் விசேஷத்தை
விண்ணப்பம் செய்ய –
அவரும் இத்தைக் கேட்டு -நம் பேற்றுக்கு சஹியாதவர்கள் -பெரிய பெருமாள் இரண்டு ஆற்றுக்கும் நடுவே திருவாராதனம் கொண்டு அருள சஹியாதவர்கள் -என்று அருளிச் செய்து –
என்னுடைய வியோகத்தில் அவிவேகம் பண்ணினி கோள் ஆகில்
உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி முதலாக பெரிய பெருமாள் நாதமுனிகள் சடகோபன்
திரு உள்ளத்தை மறுத்தவர்கள் ஆவுதி கோள் -என்று தம்முடைய திவ்ய ஆஞ்ஞை இட்டு
இவர்களும் திரு உள்ளம் நேர் நொந்து இருக்கிற அளவிலே ஆளவந்தாரும்
பகவத் பாகவத விஷயங்களிலே தரமிடாதே பகவத் விஷயத்திலே(மட்டுமே) நோக்கானவன்
குரு பரம்பரை முதலாக திருவாராதனம் பண்ணுமா போலே -பாகவத விஷயத்திலே
தன் சத்தை மாண்டு ஆசார்ய விக்ரஹத்தை அனுசந்தித்து தீர்த்தம் கொண்டு போருகையும்
அவர்களும் தீர்த்தம் கொடுக்கும் அளவிலே அர்த்த காம பரவசர் அன்றிக்கே
தன் ஆசார்யனை நோக்கி குரு பரம்பரை பூர்வகமாக த்வயத்தை அனுசந்தித்துக் கொண்டு கொடுக்கையும் இருவருக்கும் -உபாதேயம்
ஜ்ஞநாதிக விஷயமுமாய் சமூஹமுமாய் சென்ற அளவிலே இருவரும்
அர்த்த காம பரவசராய் -பிராக்ருத சரீரத்திலே நோக்காய்- சமூஹத்திலே சென்ற முதலிகளை இகழ்ந்து திரு உள்ளம் கன்றுமாகில் ஆசார்யனே யாகிலும் இவர்களுக்கு தீர்த்தம் உபாதேயம் அன்று என்று அருளிச் செய்தார் -(பாகவத அபசாரம் க்ரூரம் என்பதை அருளிச் செய்கிறார்)
இவர்களும் திரு உள்ளம் பற்றி இருக்கிற அளவிலே ஆளவந்தாரும் முதலிகளைப் பார்த்து
உங்களுக்கு சரம அர்த்தம் பெரிய பெருமாள் திருக் குழல் கற்றையிலே ஒரு கருமுகை வெடிக்கையும்(பூ சாத்துகை)
ஆசார்ய விஷயத்தில் பிரதம தசை மத்யம தசையிலும் நின்று சரம தசையை அனுசந்தித்து
சந்தித்துப் போருகையும் உத்தாரக பிரதிபத்தி -என்று அருளிச் செய்து –
திருவரங்க பெருமாள் ஸ்ரீ பாதத்திலே தெண்டன் சமர்ப்பித்து -திருக்கோட்டியூர்
நம்பியையும் பெரிய நம்பியையும் திருமலை நம்பியையும் அவர் திருக்கையிலே
காட்டிக் கொடுத்தருள –
அவரும் கை பற்றி -நீங்கள் அவிவேகம் பண்ணினி கோள் ஆகில்
உங்களுக்கு தேச விசேஷம் இன்றிக்கே நித்ய ஸூரி திரளிலும் புகரப் பெராதே இழப்புதி கோள்-என்று அருளிச் செய்ய –
ஆளவந்தாரும் இச் செய்தியைக் கேட்டு –
திரு உள்ளம் உகந்து -உங்களுக்கு திருவரங்க பெருமாள் அரையருடைய விக்ரஹமே
உபாய உபேயம் -என்று புத்தி பண்ணி யிரும் கோள் -என்று அருளிச் செய்ய –
இவர்களும் அப்படியே புத்தி பண்ணின பின்பு திருமேனியிலே நோவு வாடி
திரு மாளிகையிலே திருவரங்க பெருமாள் முதலான முதலிகள் உடன் நீராடி
திரள இருக்க –
பெரிய பெருமாளுக்கு அமுதுபடி சாத்துப்படி குறைவறுத்து
அங்குள்ள சேனை மறையோர் புண்டரீகர் முதலான அனைத்துக் கொத்தையும் –
திரள் விலக்கி -சுற்றுக் கோயில்களுக்கும் அமுதுபடி சாத்துப்படி குறைவறுத்து
பெரிய பெருமாளை பெரிய திருமஞ்சனம் பண்ணி சாத்துப்படி சாத்தி
அங்குள்ள முதலிகள் அனைத்துக் கொத்தும் வந்து சேவிக்க –
பெரிய பெருமாளும்
அமுது செய்து அருளி நினைவற திரு வோலக்கத்து ஏற எழுந்து அருளி
திருவரங்க பெருமாள் அரையருக்கு அருள்பாடிட-அவரும் சேவிக்கிற இடம் ஒழிய
சூழ் விசும்பு அணி முகில் சேவிக்க -திரு வோலக்கம் அடைய இது என் என்று
விஸ்மயப்பட –
பெரிய பெருமாள் திரு நெற்றி மாலை நழுவி விழ
நம்பியார் -(அர்ச்சகர்) -எடுத்து பிரசாதிக்கிறோம் என்று இருக்கிற அளவில்
திருவரங்க பெருமாள் சடக்கென எடுத்து ஆளவந்தாருக்கு பிரசாதித்து அருள
அவரும் திரு உள்ளமுகந்து நிற்க -திருவடிக்கீழ் நின்றவரும் -உம்முடைய நினைவு
சித்தித்ததே -என்ன பெரிய பெருமாள் விடை கொடுத்தருள -திரு மாளிகையிலே சென்று
திருவரங்கப் பெருமாள் அரையர் திருக்கோட்டியூர் நம்பி முதலான முதலிகளைத்
தீர்த்தம் கொண்டு அமுது செய்யப் பண்ணி தெண்டன் சமர்ப்பித்து
சர்வ அபசாரங்களையும் பொறுத்தருள வேண்டும் -என்று ஷாபணம் பண்ணிக் கொண்டு
எழுந்து அருளா நிற்க –
திருவரங்கப் பெருமாள் அரையரும் -உமக்கு உண்டோ அவசாரம் –
என்று எடுக்க -எழுந்திருந்து பின்பு அமுது செய்து இவர்களுக்கு நல் வார்த்தை அருளிச் செய்ய –
இவர்களும் பெருமாள் திரு உள்ளம் ஏதோ -என்று தங்கள் அளவில் சிந்தித்து இருக்கிற
அளவிலே –
பேரருளாளப் பெருமாள் உடைய -அயன் கண்ட வைகாசி திரு நாளிலே
அவப்ருத திவசத்தின் அன்று ஆளவந்தாரும் நீராடி -பெரிய பெருமாளை திருவடி தொழச்
சென்று -உத்தம சந்தியும் (பெரிய அவசர தளிகை)அமுது செய்து -திருத் திரை நீக்கின அளவிலே தண்டன் சமர்ப்பித்து –
பாதாதி கேசமாகவும் -கேசாதி பாதமாகவும் -பெரிய பெருமாளை சேவித்து-
திருவடிக் கீழ் திருப் பாண் ஆழ்வாரையும் அநுபவித்து(சேவித்து மட்டுமே இல்லை அனுபவித்து -ஞானக் கண்ணால் அனுபவம் -அவனால் காட்டவே கண்டு அனுபவித்து)
அசங்கிதமாக-(எதிர்பாராமல்) -சடகோபன் சாதிக்கப் பெற்று திருப்பதியார் திருத்தளிகை பிரசாதம் பிரசாதித்து விடை கொடுத்தருள
முதலிகளும் திரு மாளிகையிலே சென்று
மீளவும் முதலிகளை தீர்த்தம் கொண்டு அமுது செய்யப் பண்ணி முஹூர்த்தம் இட்டு
வைகாசி மாசம் ஆறாம் தேதியிலே ஸ்ரவண நஷத்ரத்திலே அபிஜின் முஹூர்த்தத்திலே
முதலிகள் சேஷத்தை அங்கீகரித்து
ஆழ்வார்களை சரணம் புக்கு -ஆசார்யர்கள் முதலிகள் -ஸ்தாநத்தார் -முதலானவர்களை
அழைப்பித்து ஷமை பண்ணிக் கொண்டருள –
அவர்கள் -பெரிய பெருமாளுக்கு ஒரு அபசாரம் உண்டாகில் அன்றோ உமக்கு அபசாரம் உண்டாவது -என்ன
திருவரங்க பெருமாள் அரையர் முதலானவர்களை அங்குள்ள முதலிகள் கையிலே
கட்டிக் கொடுத்தருளி –
ஸ்தாநத்தாரைப் பார்த்து -பெரிய பெருமாள் திருவாராதனம்
திரு மந்திர புஷ்பம் கால காலத்திலே நடத்திக் கொண்டு போரும் கோள் -ஆச்சார்யர்கள்
முதலிகள் தேசாந்த்ரிகள் முதலானவரை அரவணைத்துக் கொண்டு போரும் கோள் –
என்று காட்டிக் கொடுத்தருள –
அவர்களும் அப்படியே ஆகிறது என்று அங்கீகரித்து
இது புதுமையாய் இருந்தது இது ஏதோ -என்று விடை கொண்டு போக –
———-
ஆளவந்தார் திருநாடு அலங்கரித்ததும் -அவருடைய விமல சரம விக்ரஹத்தை
திருப்பள்ளி படுத்த க்ரமமும்
பின்பு பத்மாசனத்திலே யோகமாக எழுந்து அருளி -மணக்கால் நம்பியைத்
த்யானித்து அவர் திருவடிகளை தம்முடைய நெஞ்சிலும் கண்ணிலும் திரு முடியிலும்
வைத்துக் கொண்டு -அவர் திருவடி நிலைகளை தம்முடைய முன்னே எழுந்தருளப்
பண்ணி வைத்துக் கொண்டு -ப்ரஹ்ம வல்லி -ப்ருகு வல்லி -புருஷ ஸூக்தம் –
அர்ச்சிராதி -சூழ் விசும்பு அணி முகில் முதலாக முதலிகள் சேவிக்க
திருச் சங்கு பரிமாற -சகல வாத்தியங்களும் முழங்க -ப்ரஹ்ம ரந்த்ரத்தாலே
ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருள -திருவரங்க பெருமாள் அரையர் முதலாக
எல்லாரும் வேரற்ற மரம் போலே கோஷித்து கொண்டு விழுந்து சோகிக்க
அங்குள்ளார் இவர்களை ஆற்றி -நம்பியைப் பார்த்து -முன் நடக்கும் க்ரமத்தை
செய்தருள -என்ன –
தாசிகள் திருவாசலிலே -திருவலகிட்டு -திரு நீர் விட்டு –(ஸ்தல ஸுத்தி பண்ணி) -திருப்பிண்டி இட்டு – (கோலமிட்டு )-திருக் காவணம் இட்டு -(பந்தல் இட்டு -)
கோடித்து -தர்ப்ப மாலை கட்டி செங்கழு நீர் மாலை கட்டி -பல பட்டுக்களாலே
திருமேல் கட்டுக் கட்டி திருக் காவணத்தின் நாலு வாசலிலும் கதளித் தாறுகள் உடன்
கமுகின் கன்றும் நட்டு -பல பலங்கள் நாற்றி -(பழங்கள் பல தொங்கவிட்டு )–
நாலு வாசலிலும் கொடியாடை கட்டி சித்ரபத்ரங்கள் வைத்து –
தெற்கு மேற்கு கிழக்கு வடக்கு வாசல் களிலே -பலாச அஸ்வத தகாதி ரௌதும்பர தோரணம் நாட்டி -த்ரோண வ்ரீஹி யைச் (நெல்லை)சொரிந்து பரப்பி நடுவே பூர்ண கும்பம் வைத்து -த்வாதஸ கலசங்களை நிறைத்து -கேசவாதியாக வைத்து -பூர்ண கும்பத்துக்கு குஸ தரப்பை தூர்வை விஷ்ணு க்ராந்தி புஷ்பாதிகளை இட்டு குரு பரம்பரா பூர்வகமாக த்வ்ய
அனுசந்தானத்துடன் கும்ப கலச அர்சனம் பண்ணி -த்வாதச நாமத்தாலே அந்த கலச ஸ்நானம் பண்ணி வைத்து பின்பு பஞ்சாம்ருதம் ஸ்நானம் பண்ணி வைத்து பின்பு
ஈசான்யமான சங்கர்ஷன கும்பம் ஒழிந்த நாலு கும்பங்களைக் கொண்டு
ஸ்ரீ புருஷ ஸூக்தத்தாலே திரு மஞ்சனம் பண்ணி வைத்து -முதலிகளை தீர்த்தம் கொண்டு
சுருளமுது பரிமாறி வேண்டிக் கொண்டு அவர்களை வலம் வந்து வாசல் முன்னில்
ஹேமக்ருத ஸ்தண்டிலத்தின் மேலே த்ரோண வ்ரீஹி (நெல்லை)பரப்பி -உலூகல முசலங்களை – (உரலையும் உலக்கையும்) -மந்திர ஸ்நானம் பண்ணி-வஸ்தர வேஷ்டனம் பண்ணி -அந்த உலூகலத்தை ஸ்தண்டிலோ பரிக்ருத வ்ரீஹியின் மேலே வைத்து -அதிலே ஹரித்ரா நிஷேபம் பண்ணி -(மஞ்சள் வைத்து) -சுத்த மலா அலங்க்ருதைகளாய் சக்ர முத்ரா முத்ரிதைகளாய் வைஷ்ணவிகளான விஷ்ணு தாசிகள் த்ரிவிக்ரமன் திரு வீதியை (உத்தர வீதியை )வலம் வந்து -திரு வாசலிலே ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்துக்கு தண்டன் சமர்ப்பித்து
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுஞ்ஞையைக் கொண்டு நடுவே வந்து நவ வஸ்த்ர வேஷ்டித மேரு தைவத்யமான அந்த முசலத்தைக் (உலக்கையை)கொண்டு- த்வாதச நாம உச்சாரணம் பண்ணி திருச் சூர்ணம் இடிக்க
திருவரங்கப் பெருமாள் அரையர் நம்பி முதலான முதலிகள்
ஸ்தண்டில மத்யஸ்தமாய் நவ கண்டையான ப்ருதி வ்யாகாரமாக உல்லேகனம்
பண்ணின (சித்திரமாக வரைந்து)அந்த வ்ரீஹி யுபரி ஸ்தாபிதமாய் பூமி தைவத்யமான -உலூகலத்(உரலை) உல்லேகனத்தின் அஷ்ட திக்குகளிலும் -திவ்ய சூர்ண -திவ்ய தைலதி வ்யாநுலேபன –
திவ்ய மால்ய -திவ்ய லாஜ -திவ்ய -துக்த திவ்ய ததி -திவ்யஜல -பூர்ணங்களாய்
சுத்த தந்து வேஷ்டிதங்களாய் -தர்ப்ப பவித்ர அஸ்வத்த பத்ர பவித்ரிதங்களான
அஷ்ட கலசங்களை த்வய அனுசந்தானதுடனே ஸ்தாபித்து -பரமாகாசத் தைவத்யமான
நவ ஸூர்ப்பத்திலே(முறத்திலே) திவ்ய நஷத்ர தைவத்யமான நிஸ் துஷ நவ லாஜத்தை (உமி இல்லாத நெல்லை) நிறைத்து
பூர்வ (கிழக்கு)திக்கிலே வைத்து ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்ரீ பாத தீர்த்தம் கொண்டு அந்த ஸ்ரீ பாதம் நிறைந்த கும்பத்தை மேற்கே வைத்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சமர்ப்பணீயமான
த்ர்வ்யத்தின் கிழியை வடவருகே வைத்து -பெருமாள் சாத்திக் களைந்து வர விட்டருளின
திருமலை பரியவட்ட பிரசாதங்களை பொற்றளிகை உடன் தென்னருகே வைத்து –
ஆளவந்தாரை தெண்டன் சமர்ப்பித்து விமல சரம விக்ரஹத்தை கண்ணிலும் நெஞ்சிலும்
தேக்கிக் கொண்டு சூழ எழுந்தருளி இருந்து-கண்ணி நுண் சிறுத் தாம்பும் திருப் பல்லாண்டும் சூழ் விசும்பணி முகிலும் திருவரங்கப் பெருமாள் இசையுடன் பாட பின்பு இயலாகவும் அனுசந்தித்து திவ்ய கீத ந்ருத்ய வாத்யத்துடன் திரு வீதியிலே இயலாக திரு விருத்தம் அனுசந்திதுக் கொண்டு வலம் வந்து -திரு மளிகை வாசலிலே இயல் சாத்தி
திவ்ய தைல -திவ்ய சூர்ண -திவ்ய மால்யாதிகளையும் பெருமாள் திருமஞ்சனம்
பண்ணி சாத்திக் களைந்து வரவிட்ட பட்டுப் பரியவட்டத்தையும் ஆளவந்தாருக்கு
சாத்தி அலங்கரித்து -ஆளவந்தார் திருமேனியிலே சாத்தி -தத் பிரசாதமாய் சேஷித்த
எண்ணெய் ஸ்ரீ சூர்ண பிரசாதங்கள் எல்லாம் திருவரங்கப் பெருமாள் அரையர் நம்பி முதலானோர் பிரசாதப்பட்டு அப்போது இருப்பை அகவாயில் ஸூபாஸ்ரயமாய் தேக்கிக் கொண்டு
ஸ்ரீ பாதத்திலே விழுந்து திருவடிகளை திருக் கண்ணிலும் திரு மார்புகளிலும்
திரு முடிகளிலும் தரித்துக் கொண்டு -அவர் ப்ரபத்தியை (ஸ்ரீ மன் யமுனா சரண சரணம் ப்ரபத்யே ஸ்ரீ மதே யாமுனாய நம)அனுசந்தித்து – திரு மிடறு தழு தழுப்ப திரு மேனிகள் வாட -திரு முத்து (கண்ணீர்)வீழ -திரு மூச்சு வெப்படிக்க ஆசார்ய விஸ்லேஷ அசஹிஷ்ணுக்களாய் -ஆர்த்தராய் -பரவசராக மற்றும் –
இங்குள்ள முதலிகள் வந்து இவர்கள் திருக் கண்களைத் துடைத்து ஆஸ்வசிப்பித்து
தேற்ற -வன்மையிலே மெள்ளப் பாடேறித் தேறி நின்று -பீட யானத்திலே ஆளவந்தாரை
ஏறி அருளப் பண்ணி -(பிரபத்தி)அனுசந்தானத்துடன் ஸ்ரீ பாதம் தாங்கிக் கொண்டு திருச் சங்கு பரிமாற
திவ்ய வாத்தியங்கள் எங்கும் முழங்க வேத பாராயணம் பண்ணி இயல் அருளிச் செய்ய
நடைபாவாடை இட கரும்பும் குடமும் ஏந்த -பொரியும் புஷ்பமும் எங்கும் சிதறி
திருப்பதியில் சுமங்கலிகள் மங்கள தீபம் ஏந்தி முன் செல்ல -இரு பக்கமும் சாமரம்
இரட்டிக்க -வெள்ளை வட்டமிட -தர்சனத்தில் ஆளவந்தார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் என்று ஒற்றை திருச் சின்னம் பரிமாற -திரு வீதிகள் தோறும் வலம் வந்து
திரு கரம்பன் துறைக்கு எழுந்தருளிவித்துக் கொண்டு போய் -ஒழிந்த சங்கர்ஷன கும்ப பூர்ண ஜலம் கொண்டு (பிரபத்தி)அனுசந்தானத்துடன் திவ்ய ஸ்தல சுத்தி பண்ணி -யதி சம்ஸ்கார வித்யுக்தமான படிகள் அடங்கச் செய்து கனித்து (பள்ளம் வெட்டி)பள்ளிப் படுத்துகிற அளவிலே
இளையாழ்வார் ஆளவந்தாரை சேவிக்க வேணும் என்னும் பேராசையோடே பெருமாள் கோயில் நின்றும் வந்து ஆளவந்தாரை திருமேனி உடன் சேவிக்கப் பெற்றிலேன் என்று அந்த சரம விக்ரஹத்தை சேவித்து
இவ்வளவாகிலும் பெற்றேனே -என்று அந்த விக்ரஹத்தை த்யான விஷயம் ஆக்கிக் கொண்டு ஆளவந்தாருக்கு நான் ஏகலைவன் என்று (ஆளவந்தார் கடாஷித்த ஏற்றம் உண்டே பரகத ஸ்வீ கார்யம்)யத்பதாம் போருஹத்யான – வித்வஸ்தா சேஷ கல்மஷ வஸ்து தாம் உபயா தோ ஸ ஹம யமுநேயம் நமாமி தம்-(கீதா பாஷ்ய த்யான ஸ்லோஹம்) -என்று ஆளவந்தார் உடைய கமல தயான தத் பரராய்க் கொண்டு பெருமாள் கோயிலுக்கு மீண்டு
எழுந்து அருளினார் என்று அருளிச் செய்வர்கள்
சரம உபதேச –
சரம நியமன –
சரம ததீய அனுவர்தன விசேஷ-
சரம கால ப்ரபோத (தெளிவு)-
சரம கால வ்யாவ்ருத்த –
ஸுக கமநங்கள் (அர்ச்சிராதி கதி)ஆகிற -சரம தச ஜ்ஞான அனுஷ்டான க்ரம சாதுர்யம் உள்ளது-பரமாசார்யரான இவர்க்கே இறே
————–
(துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும் நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—66-
—————————————————————————————
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply