ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
——
வார்த்தை -229-
நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அர்த்தத்தை
ஒளித்துப் போருவார்கள் -த்வயத்தில் சப்தத்தை ஒதுக்கி ஒளித்துப் போருவார்கள்
———————————————————–
வார்த்தை -230-
திருமந்த்ரமும் சரம ஸ்லோகமும் ஆசார்ய வாக்கியம் –
த்வயம் சிஷ்ய வாக்கியம் -த்வயத்தில் பூர்வ கண்டத்தின் அர்த்தத்தை அனுசந்தித்தால்
ஸ்வ ரஷணார்தமாக விலங்கிக் கிடந்த துரும்பை எடுத்துப் பொகட பிராப்தி
இல்லை -உத்தர கண்டத்தின் அர்த்தத்தை அனுசந்தித்தால் தலை சொறிகைக்கு
அவசரம் இல்லை -மடல் எடுத்துக் கொண்டு புறப்படும் இத்தனை
நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அர்த்தத்தை ஒழித்துப் போருவார்கள் –த்வயத்தில் சப்தமே தொடங்கி ஒழித்துப் போருவார்கள் –திருமந்தரம் ஆச்சார்ய வாக்கியம் –த்வயம் சிஷ்ய வாக்கியம் –த்வயத்தில் பூர்வ கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் ரஷண அர்த்தமாக விலங்கிக் கிடந்த துரும்பு எடுத்து பொகட பிராப்தி இல்லை – உத்தர கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் தலை சொரிகைக்கு அவசரம் இல்லை மடல் எடுத்துக் கொண்டு புறப்படும் இத்தனை –நூற்று ஏழாம் வார்த்தை-(எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில் த்வய சரீரத்தை வெளியிடாமல் அத்ர த்வயம் என்றும் சாதித்து அருளிச் செய்துள்ளது நோக்கத் தக்கது -)
—————————————————————————–
வார்த்தை -231-
பகவத் சரணாரவிந்த சரணாகதனாய் ஜ்ஞாநினாம் அக்ரேசரனாய் -விலஷண
அதிகாரியான இப் பிரபன்னனுக்கு -உபாயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப விரோதி –
உபேயத்தில் நிவ்ருத்தி ருசி விரோதி –
இவ் விரண்டு அர்த்தத்துக்கும் நிரசன பூதர்-ஸ்வ ரஷண ஷமையாய் இருக்கச் செய்தேயும் ஸ்வ ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து அஸோக வநிகையில் எழுந்து அருளி இருந்த பிராட்டியும்-
பெருமாள் நில் என்று இருக்கச் செய்தேயும் -தம்முடைய செல்லாமையைக் காட்டி அவருடைய வார்த்தையை அதிக்ரமித்து -காட்டிலே தொடர்ந்து அடிமை செய்த
இளைய பெருமாளும் –
——————————————————————————-
வார்த்தை -232-
சம்சார சம்பந்தம் அற்று திரு நாட்டிலே போய் இருக்கும் அளவும் –
த்வயத்தில் இரண்டு கண்டத்தின் அர்த்தத்தையும் கொண்டு பிரபன்னனானவன்
கால யாபநம் பண்ணக் கடவன் –
——————————————————————
வார்த்தை -233-
ஆசார்ய சமாஸ்ரயணம் எப்போது -அப்போது பிறந்தானாகக் கடவன் –
அன்று முதல் சரீர அந்தம் அளவாக கீழ்ச் சொன்னபடி செய்து போரும் ஆகில் இறே
தன் ஸ்வரூபத்துக்கும் இவன் ஸ்வரூபத்துக்கும் சேருவது –
அல்லாத போது எம் பெருமான் இவனைப் புருஷகார முகத்தாலே விடமாட்டாதே விதியே என்று ரஷிக்கும் இத்தனை –
————————————————————————–
வார்த்தை -234-
நஞ்சீயருக்கு பெரிய பட்டர் (வேத வ்யாச பட்டர் தம்பி இருப்பதால் பராசர பட்டர் பெரிய பட்டர்)அருளிச் செய்த பத்து அர்த்தம் –
சரக்கு ஏற்றின மரக்கலத்துக்கு கேடு காற்றாலே யாதல் -சமுத்ரஸ்த பர்வத
சிகரம் தட்டியாதல் -பெரும் கடல் பாய்ந்தாதல் -மஹா மத்ஸ்யங்களினுடைய
புச்ச விஷேபங்களாலே யாதல் -ப்ரதீகாரம் இல்லாத அழிவு வருமா போலே
எம்பெருமான் திருவடிகளிலே பண்ணி வைத்த பிரபத்திக்கும் -பாகவத விஷயங்களிலே
அறிந்தும் அறியாததும் பண்ணின அபசாரங்களாலே சில அந்தராயங்கள் நாஸ
பர்யந்தமாக உண்டாகவே சம்பவிக்கும் தத் பய சம்பாவன நிவ்ருத்தி அர்த்தமாக
இப் பத்து அர்த்தத்தை கேட்டு புத்தி பண்ணி அனுஷ்டித்து நிர்ப் பரனாய் மார்பிலே
கை வைத்து உறங்கும் அவை என் என்னில் –
1-ஆசார்யன் திரு உள்ளத்தாலே அநவரதம் நினைக்கும்படியாக சரீரார்த்த பிராணங்களை
அழிய மாறி யாகிலும் ஒரு கைங்கர்யம் உறுதியாகச் செய்வது –(ஸரீரம் அர்த்தம் பிராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயத்-ஒன்றையாவது ஒழுங்காக விடாமல் ஆச்சார்யர் திரு உள்ளம் உகக்கும்படி செய்ய வேண்டும்)
2-பகவத் விஷயத்திலும் எல்லாரும் கொண்டாடும்படியாகவும் -திரு உள்ளத்துக்கு
பாங்காகவும் -தன் நெஞ்சு உணரவும் ஒரு ஸ்ரீ கார்யம் செய்வது –
3-பாகவத விஷயத்திலும் அப்படியே பல ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியிலும் –
இன்னான் கல்யாண குணங்களை உடையவன் -பகவத் பாகவத விஷயங்களில்
செய்து போரும்படி அழகு இது -என்று கொண்டாடும்படி போருவது –
4-சர்வ சாஷியாய் நினைவின் தலையிலே குடி இருக்கிற எம்பெருமான் (உள்ளூவார் உள்ளத்து உடன் இருந்து அறிதி)சிரியாதபடி வறை நாற்றமான(பொசிங்கின நாற்றம் -காந்தல்) அல்ப அஸ்திர பல ஸ்ரத்தையாலே ஏகாந்தத்திலும் அந்ய தேவத உபசானாதிகளை ஆஸ்ரியாது ஒழியவும் -அந்ய தேவத உபாசகரோடு
சஹ கமன சஹ வாஸ சஹ அவஸ்தான சம்பாஷணங்களை வருந்தியும் ஒழியவும் –
5-வறை நாற்றத்தை ஆசைப்பட்ட பெருச்சாளி இடரிலே அகப்பட்டு அனர்த்தப்
படுமா போலே அநர்த்த சம்பந்த ரதி நிமித்தமான போஜன ஆசன சயனாதி
சம்பந்த்தாலே ஜ்ஞான ஹானி பிறந்து -விபரீத ஜ்ஞானமும் பிறந்து –
ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியிலும் பஹிஷ் க்ருதனாய் விடும் – சிரஸ் சேத பர்யந்தமான மஹா ஆபத்து சம்பாதிதம் ஆனாலும் ஆத்ம தர்ம ப்ரஸ்யுதி பிறவாதபடி த்ருட
அத்யாவசாய நிஷ்ட ஆகாதனாகவும் -இதுக்கு த்ருஷ்டாந்த பூதர் இவர்கள் இறே
பெரிய நம்பியும் கூரத் ஆழ்வானும் -(தரிசனத்துக்காக தர்சனம் இழந்தவர் கூரத்தாழ்வான் -பசுபதி கோயிலில் பெரிய திருநம்பி திருவரசு உள்ளது -திட அத்யாவசிய -கோயிலுக்கு சென்று ஆச்சார்யர் திருவடி சேராமல் உறுதி கொண்டவர்)
6-சாமான்ய சாஸ்த்ரத்திலே கண் வையாதே(காண்பரோ கேட்பரோ தாம் -திருமாலை -7-) விசேஷ சாஸ்த்ரத்திலே அநவரத த்ருஷ்டியாய் -அனுஷ்டானத்திலும் அப்படியேயாய் -தன்னை ஒருங்கப் பிடித்து (ஆர்ஜவம் மனம் மொழி மெய் மூன்றும் சேர்ந்து)நிஸ் சம்சயனாய் இருக்கை –ஆதி பரதனும் திருக்கண்ண மங்கை யாண்டானும் இறே இதுக்கு பிரமாண பூதர் -(ஸ்வ வியாபாரத்தை விட்டார் -ரிஷி -மான் நினைத்து மானாகி பின்பும் ஆதிஜட பரதர் -ரைக்குவர் -விருத்தாந்தம்)நமக்கு எட்டாத நிலம் அன்றோ -என்னில் – ஏறுவான் சாரும் குதிரை இறே -இள நெஞ்சர்க்கு எல்லாம் இத்தை அத்யவசிக்க அருமை இல்லை –ஒருத்தி அப்யாசத்தாலே மலையை எடுத்துக் காட்டினாள் என்னும் பழம் சொல் இல்லையோ –(கல் எடுத்து- குன்று எடுத்து- பின்பு மலையை எடுத்தாள்)
7-கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான பிரதான ஷேத்ரங்களில்
நித்ய வாசம் பண்ணுதல் -அங்கே நித்ய வாசம் பண்ணி அபியுக்தரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பலகாலும் நினைக்கும்படி ஆப்தம் பண்ணி அர்த்த உபகாரத்தாலே யாதல் –
சேஷ வ்ருத்தியாலே யாதல் -அனுவர்த்தித்துக் கொண்டு போரவும் –
8-புத்ர மித்ர களத்ர ஷேத்ர அர்த்த தேஹாதிகளிலே அதி ப்ரசக்தி -ப்ரதிபத்தி
பண்ணாதே -ஆசார்யன் ஆத்ம ஹிதம் பண்ணினதுக்கு ஒரு வாசி தோற்ற அவற்றோடு
ஓட்டற்றுப் பரிமாறவும் –
9-பகவத் பாகவத கைங்கர்யத்தில் மிகவும் தாத்பர்யம் உடையவனாய்
சம்சாரத்தின் அநித்யத்வத்தை அனுசந்தித்து அவற்றோடு வேரோடு ஓட்டற விடுகையும்
10-நித்யனாய் பிரிய பூதனாய் சர்வ வித பந்து பூதனான எம்பெருமானை -நிரந்தரம்
நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே (101-அவர் நினைவு ஸத்ய ஸங்கல்பம்)-என்று அனுசந்தித்து வரவும்
இப்பத்தர்த்தம் பிரதிபத்தி ஸ்தானம் –
——————————————————————
வார்த்தை -235-
கந்தாடை யாண்டான் அருளிச் செய்த வார்த்தை –(முதலியாண்டான் வார்த்தையாகவும் இதே வார்த்தை உண்டு)
ஸ்ரீ வைஷ்ணவன் சம்சார மண்டலத்திலே இருக்கும் இருப்பை -பிராட்டி ராவண
பவனத்திலே இருந்து காட்டினாள் -எங்கனே என்னில் –
1-பிராட்டி இளைய பெருமாள் திறத்தில் அருளிச் செய்த வார்த்தை பெருமாள்
திருவடிகளை அகற்றினால் போலே இவனுக்கு ததீய அபராதம் எம்பெருமான் திருவடிகளை அகற்றும் –
2-பிராட்டிக்கு ராவண ஸ்பர்சம் போலே இவனுக்கு தேக சம்பந்தம் –
3-பிராட்டிக்கு தர்ஜன பர்த்ஸநாதிகளை (கைகளாலும் வாயாலும்–மிரட்டுதல் பயமுறுத்தல் முதலானவை)பண்ணின ராஷசிகள் சஹ வாஸம் போலே இவனுக்கு களத்ர புத்ராதி சஹ வாஸம் –
4-பிராட்டிக்கு மாரீச தர்ஸனம் போலே இவனுக்கு விஷய ப்ராவண்யம் –
பிராட்டிக்கு ராவண தர்ஸனம் போலே இவனுக்கு இந்திரியங்கள்(மநோ ரஜஸீயன் -மனமும் பத்து இந்திரியங்களும்)
5-பிராட்டிக்கு திருவடி தோற்றரவு -காட்சி -போலே இவனுக்கு ஆசார்யன் தோற்றரவு
6-பிராட்டிக்கு திருவடி ராம குணங்களை சொன்னால் போலே இவனுக்கு
ஆழ்வார்கள் அருளிச் செயல் –
7-பிராட்டிக்கு திருவாழி மோதிரத்தின் வரலாறு சொன்னால் போலே இவனுக்கு
ஆசார்யன் அருளிச் செய்த குரு பரம்பரை -(அந்தப்புரம் ஊடலைச் தீர்த்த கடகரான மோதிரம் -லஷ்மீ நாதஸ்ய ஸிந்து இத்யாதி -)
8-பிராட்டிக்கு திருவாழி மோதிரம் கொடுத்தால் போலே இவனுக்கு
ஆசார்யன் அருளிச் செய்த திருமந்தரம் –
9-பிராட்டிக்கு ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெண் பிள்ளைகள் உசாத் துணை ஆனால் போலே
இவனுக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் உசாத் துணை –
10-பிராட்டிக்கு விரோதியான ராவணாதிகளை நிரசித்து பெருமாள் பிராட்டியை
எழுந்து அருளிப் பண்ணிக் கொண்டு போனால் போலே விரோதியான பிரகிருதி
சம்பந்தத்தை அறுத்து எம்பெருமான் பரமபதத்துக்கு ஏறக் கொண்டு போகை –
இப் பத்து வார்த்தையும் அனுஷ்டான பர்யந்தமாக உடைய ஸ்ரீ வைஷ்ணவன் சரீரத் தளவும்
நிரபயமாக இருந்து எம்பெருமான் திருவடிகளைப் பெறும் –
————————————————————————
வார்த்தை -236-
காண வேணும் என்று ஆசைப்படுகை காட்சி –
அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுகை -அனுபவிக்கை –
கைங்கர்யத்தை ஆசைப்படுகை -அநுபவ ஜனித ப்ரீதிகாரித கைங்கர்யம்
இவை இத்தனையும் ஏக காலத்தில் கிடைக்கும் (கடிக்கும் கூடும்)அக்கரைப் பட்ட அதிகாரிக்கு –
—————————————————————————–
வார்த்தை -237-
ஒரு முமுஷுக்கு மூன்று த்யாஜ்யம் -மூன்று உபாதேயம் -அது என் என்னில் –
பௌருஷ சங்கம் -காம சங்கம் -அர்த்த சங்கம் -இவை மூன்றும் (த்யாஜ்யம்)
ஆசார்ய விக்ரக சங்கம் -ஆசார்ய கைங்கர்ய சங்கம் -ஆசார்யன் அருளிச் செய்த வார்த்தையில் அதி சங்கம் இவை மூன்றும் (உபாதேயம்)-
(சிஷ்யன் ஆச்சார்யர் திருமேனியை உகந்து கைங்கர்யம் பண்ண வேண்டும்)
———————————————————————–
வார்த்தை -238-
ஸ்வ ஸ்வரூப விரோதி -சம்பந்த விமோசனத்வம் -ஸ்வ ஸ்வரூப தர்ஸனத்வம் –
ஸ்வ ஸ்வரூப அநு பவத்வம் -ஸ்வ ஸ்வரூப விகாஸ வ்ருதித்வம் -ஸ்வ ஸ்வரூப அவிகாஸ அநு பவத்வம் -உபய விகாஸ வ்ருத்தித்வம் –
(ஸ்வ ஸ்வரூப விரோதிகளை ஆறுவகையாகப் பிரித்துக் காட்டுகிறது
1- பகவத் பாகவத ஆச்சார்யர்களுடன் உறவை அறுத்துக் கொள்ளுகை
2- எம்பெருமானை அறிவதில் ஊன்றி இராமல் ஸ்வ ஆத்மாவையே அறிவதில் ஊன்றி இருக்கை
3- எம்பெருமானைக் அனுபவிப்பதில் ஈடுபடாமல் ஸ்வ ஆத்மாவையே அனுபவிப்பதில் ஈடுபடுகை
4- கைங்கர்யத்தை பரம ப்ராப்யமாகக் கொள்ளாமல் தமது ஸ்வரூப ஆவிர்பாவத்தையே எல்லையாக கொள்ளுதல்
5-ஸப்தாதி விஷயங்களை அனுபவிக்கை
6-கைங்கர்யத்தை முக்யமாகக் கொள்ளாமல் குண அனுபவத்தையே முக்யமாகக் கொள்ளுதல்)
———————————————————————————–
வார்த்தை -239-
ஜ்ஞான தசை -பிராபக தசை -ப்ராப்தி தசை -பிராப்ய தசை -என்று நாலு
ஜ்ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிட்டு இருக்கக் கடவன்
ப்ராபக தசையில் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டு இருக்கக் கடவன்
ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிட்டு இருக்கக் கடவன்
ப்ராப்ய தசையில் த்வரையை முன்னிட்டு இருக்கக் கடவன் –
(1-ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை அறியும் ஞான தசையில் ஞானம் கனிந்த நலமான பக்தி முற்றி ஸ்வ பர ஸ்வரூபங்களை மாறாடி அவனுடைய ஞானம் சக்த்யாதிகளை மறந்து மங்களாசாசனம் செய்பவனாய் இருக்க வேண்டும்
2-அவனையே உபாயமாக உறுதி கொள்ளும் பிராபக தசையில் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக்கொண்டு அவனே உபாயமாக உறுதி கொள்ள வேண்டும்
3-பிராப்தி தசையில் பேற்றுக்குத் துடிப்புடன் இருக்க வேண்டும்
4-அடைந்த பின்பு கைங்கர்யங்களில் பாரித்து அனைத்தையுமே செய்ய உறுதி கொள்ள வேண்டும் -)
——————————————————————————————–
வார்த்தை -240-
அநுபவம் விச்சேதியாமைக்கும் -உசாத் துணைக்குமாக வாய்த்து
தேச விசேஷம் வேண்டுகிறது –
(மருள் ஒழி மடநெஞ்சே -அர்ச்சா ப்ராவண்யம் -திருவாறன் விளையே வேண்டுவேன் வைகுந்தம் வேண்டாமே என்றாரே கீழ் -இங்கு அர்ச்சாவதாரத்தைப் ப்ராப்யமாகக் கொண்டு அங்கு அடியார் குழாங்களுடன் உடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டுமே)
————————————————————————————–—-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply