ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
——
நூற்று ஐம்பத்து ஏழாம் வார்த்தை
சத்ருக்களுக்கு கரைய வேண்டா –
ஸ்வாமியுமாய் –
ஸ்ரீய பதியுமாய் -ஆனவன் உடைமை ஆகையாலே –
(காமாதிகள் -உள் சத்ருக்களுக்கு கரைய வேண்டாமே -ஸ்வாமி கார்யம் அன்றோ உடம்பின் அழுகைப் போக்கி அருளுவார்)
—————————————————–
நூற்று ஐம்பத்து எட்டாம் வார்த்தை
ஆசார்யன் மூன்றாலே உத்தேச்யன் –
1-(அர்த்த பஞ்சக)ஞான ப்ரதன் –
2-அனுஷ்டான ப்ரதன் –
3-உபாய ப்ரதன் -என்று
(ஆத்ம ஞானம் கை புகுந்தால் ஆச்சார்யன் கைப் புகுரும்-ஆச்சார்யன் கை புகுந்தால் மந்த்ரம் கைபுகும் -மந்த்ரம் கைபுகவே மற்றதும் கையதுவே)
ஸ்ரீ வைஷ்ணவர்களும் மூன்றாலே உத்தேச்யர் –
1-உபாயத்துக்கு முற் பாடர் –
2-உபேயத்துக்கு எல்லை நிலமாய் –
3-இருந்த நாளைக்கு உசாத் துணை என்று –
(மத் சித்தா -மத் கத பிராணா போதயந்த பரஸ்பரம் -திருநெடும் தாண்டகம் முப்பதும் -துஷ்யந்த ரமதிய -இருவருக்கும் ஆனந்தம் -)
பிராட்டியும் மூன்றாலே உத்தேச்யை –
1-புருஷகார பூதை –
2-கைங்கர்ய வர்த்தகை –
3-நித்ய ப்ராப்யை -என்று –
ஈஸ்வரன் மூன்றாலே உத்தேச்யன் –
1-ருசி ஜநகன் –
2-மோஷ ப்ரதன் –
3-உபாய பூதன் -என்று –
(ஆதாரம் பெருக வைத்த அழகன் -ருசி ஜனக -லாவண்யம் திருக்குறுங்குடியில் -பாதமே சரண மாக்கும் உதார குணம் வானமாமலையில் கொழுந்து விடும் -)
—————————————————-
நூற்று ஐம்பத்து ஒன்பதாம் வார்த்தை
ஸ்வபாவ அந்யதா ஞானம் –
ஸ்வரூப அந்யதா ஞானம் –இவை -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் —
இவன் ஆத்ம பிரதானம் பண்ணினாப் போலே இருப்பது ஓன்று இறே
அவன் -ஆசார்யன் -ஞானப் பிரதானம் பண்ணினபடி –
(சிஷ்யன் ஆச்சார்யனுக்கு தன்னதாக நினைத்து தன் ஆத்மாவை சமர்ப்பிப்பது சேஷத்வ ஸ்வரூப நிரூபிக்க தர்மத்தை மாறாடி நினைக்கும் விபரீத ஞானமாகும் -அதே போல் தமது ஆச்சார்யர்க்கு பரதந்த்ரனான தான் தம்முடைய சிஷ்யனுக்கு ஞானம் பிரதானம் பண்ணுவதாக ஒரு ஆச்சார்யன் நினைப்பதும் விபரீத ஞானமே ஆகும்)
———————————————————
நூற்று அறுபதாம் வார்த்தை
ஈஸ்வரனாகிற கர்ஷகன் -சேதனனாகிற திருப்பள்ளித்தாங் கன்றை -(விதை–)
சேஷத்வ ஞானமாகிற ஷேத்ரத்திலே ஊன்றி –
ததீய அபராதமும் – விபரீத ஞானமுமாகிற புழுக்கடியாமல் நோக்கி –
கைங்கர்ய அனுவர்த்தநமாகிற -மடையாலே –
ஆசார்யர்ன் அருளாகிற நீர் பாய்ச்சி –
அஹங்கார மமகாரமாகிற களை மண்டாமே –
பகவத் விஷயமாகிற களை கொட்டாலே சேற்றை எடுத்து –
விபரீத அங்கீகாரமாகிற மாடும்
சப்தாதி விஷயமாகிற பேய்க் காற்றும் – புகுராமே –
பிரபன்னத்வம் ஆகிற வேலியை இட்டு –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகிற வர்ஷத்தை உண்டாக்கி –
தளிரும் முறியும் மொட்டும் செலுந்துமாய் -(கொழுந்துமாய்-)
அதின் ஒளி மொட்டு எடுத்துக் கட்டின மாலை இறே பரமை காந்தி
(திருப்பள்ளித் தாங்கன்று =விதை –செலுந்து =கொழுந்து-பக்தி உழவனின் கிருத்யம் நன்றாக விளக்கி அருளுகிறார் -ஷேம கிருஷி பலன்)
——————————————————–
நூற்று அறுபத் தோராம் வார்த்தை –
பரம சேதனனாகிற பசியன் –
ஆசார்ய முகத்தாலே அவகாதனாய் –(அவகாத ஸ்வேதம் போல் -அவகாதம் -குத்துவது)
சேதநனாகிற சிறு நெல் பொறுக்கி –
வேதாந்தமாகிற உரலிலே –
உபதேசமாகிற உலக்கையாலே –
ஸ்ரவணமாகிற தலைத்துகை துகைத்து –
உடம்பாகிற உமி கழித்து -(தேஹாத்மபிமானம் தீர்த்து)
மனனமாகிற அடுக்கலிட்டு –
நிதித்யாசநமாகிற சுளகாலே -(ஸ்ரவணம் -மனனம் -நிதித்யாசிதவ்யம் – வேண்டாதவற்றை தள்ளி வேண்டியவற்றை நன்றாக உன்னி)
விவேகமாகிற கொழி கொழித்து –
அஹங்கார மம காரமாகிற -அடிக் கழித்து –
அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்த்ர்யமாகிற நுனிக் கொழித்து –
ருசி வாசனை யாகிற தவிடறக் குத்தி –
சேஷத்வ ஞானமாகிற வெளுப்பை உண்டாக்கி –
அத்யவசாயமாகிற அரிகுஞ்சட்டியிலே பிரபத்தி யாகிற நீரை வார்த்து –
சாதனாந்தரமாகிற தவிடறக் கழுவி –
பிரயோஜனாந்தரமாகிற கல்லற அரித்து,-
பரபக்தி யாகிற பானையிலே பர ஞானமாகிற உலை கட்டி –
அனுபவமாகிற அடுப்பிலே –
விஸ்லேஷமாகிற நெருப்பை இட்டு –
இருவினையாகிற விறகை மடுத்து –
த்வரை யாகிற ஊத்தூதி –
ஆற்றாமையாகிற கொதி கொதித்து –
பரமபக்தி யாகிற பொங்கினாலே -(பக்குவ தசையில்)
ஸூஷ்ம சரீரமாகிற கரிக்கலத்தோடே
ஸூஷூம்நையாகிய வாசலாலே புறப்பட்டு –
அர்ச்சிராதி யாகிற படி யொழுங்காலே(12 லோகம் -12 படிகள் -மேல் விரஜா நதி) மாக வைகுந்தமாகிற மச்சிலேற்றி
அப்ராக்ருதமாகிற பொற் கலத்தோடே –
அஹம் அன்னம் -என்கிற சோற்றை இட்டு – அஹம் அந்நாத -என்று புஜியா நிற்கும் –
இவை இரண்டும் முதலியாண்டான் அருளிச் செய்த வார்த்தை
———————————————————–
நூற்று அறுபத்திரண்டாம் வார்த்தை
கலங்குகிறதும் –
கலக்குகிறதும் –
கலங்கிக் கிடக்கிறதும் —
தெளிகிறவனும் –
தெளிவிக்கிறவனும் –
தெளிந்து இருக்கிறவனும் –
கலங்குகிறான் -சேதனன் –
கலக்குகிறது -அசித் –
கலங்கிக் கிடக்கிறான் -சம்சாரி –
தெளிகிறான் -சேதனன் –
தெளிவிக்கிறான் -ஆசார்யன் –
தெளிந்து இருக்கிறான் -ஈஸ்வரன் -(தெள்ளிய சிங்கம் அன்றோ)
ஆகையால்
கலங்குகிற தன்னையும் –
கலக்குகிற அசித்தையும் –
தெளிவிக்கிற ஆசார்யனையும் –
தெளிந்த ஈஸ்வரனையும் – அறிய வேணும் .
(தத்வ த்ரய ஞானம் -பகவத் பாகவத ஆச்சார்ய-ஈஸ்வர தத்வத்துக்குள் அடங்கும்)
——————————————————————–
நூற்று அறுபத்து மூன்றாம் வார்த்தை
நஞ்சீயர் பரம பதத்துக்கு எழுந்து அருளுகிற காலத்திலே-
தெற்கு ஆழ்வார் பட்டர் – (தூவிரிய பாசுர வ்யாக்யானத்தில் இவரை பெற்றி என்றும் சொல்வர்)
ஜீயர் ஸ்ரீ பாதத்திலே எழுந்து அருளி –
உமக்கு செய்ய வேண்டுவது என் -என்று கேட்டு அருள –
ஜீயர் –
பெருமாள் சர்வ ஸ்வதானம் பண்ண அனுபவிக்க வேண்டி இரா நின்றது -என்று
விண்ணப்பம் செய்ய –(திருப்பரியட்டமும் இல்லாமல் சேவை பெற்றால் மோக்ஷம் பெறுவோம் என்பர்)
பட்டரும் இத்தை –
திருமாலை தந்த பெருமாளுக்கு-இவர் நம் பெருமாளுடைய அர்ச்சகர் -அருளிச் செய்ய –
அவரும் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய –
பெருமாளும் புறப்பட்டு அருளி –
சேலையைக் களைந்து அருளி ஜீயரை அனுபவித்து அருள –
ஜீயரும் அனுபவித்து –
நம் பிள்ளை தொடக்கமான முதலிகளைக் குறித்து –
பெருமாள் எனக்கு சர்வ ஸ்வதானம் பண்ணி அருளினார் –
நானும் சர்வ ஸ்வதானம் பண்ணக் கடவதாக ஒருப்பட்டேன் -(அறிந்த சாரார்த்தங்களை அருளிச் செய்யப் போகிறேன்)
அபேஷை உடையார் உடைய படியே அபேஷித்து கொள்ளும் கோள் என்று அருளிச் செய்ய –
நம்பிள்ளையும் -அடியேனுக்கு தஞ்சமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –
என்று விண்ணப்பம் செய்ய –
மணக் கோலத்தே முளை தெளிப்பாரைப் போலே
இப்போது தஞ்சமான ஒரு வார்த்தை உண்டோ கேட்பது -என்று
பின்னையும் அருளிச் செய்த வார்த்தை –
ஆத்ம விநியோகம் ஈஸ்வரன் என்று இராதே
ஈஸ்வர விநியோகம் ஆத்மா என்று இரும் -என்று அருளிச் செய்ய –
இவர் திரு உள்ளம் பிரசன்ன மாகாமையாலே பேசாதே நிற்க –
உம்முடைய நினைவேது சொல்லிக் காணீர் -என்ன –
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் பரம பதத்துக்கு எழுந்து அருளினால்
இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் என் நினைத்து இருக்கக் கடவர் -என்ன –
அது அதிகார அநு குணமாய் அன்றோ இருப்பது –
த்ருப்தன் ஆகில் ஆர்த்தனாய் இருக்கிறான் -(த்ருப்த-நிந்தைக்கு உரிய களிப்பு இங்கு)
ஆர்த்தனாகில் த்ருப்தனாய் இருக்கிறான்(த்ருப்த-துடிப்புடன் இருந்தோம் -அவருக்குக் கிட்டிய பேறு நமக்கும் கிட்டும் என்ற கொண்டாடத்தக்க களிப்பு இங்கு) -என்று அருளிச் செய்ய –
பிள்ளையும் இவ்வர்த்தத்தை
அநுஷ்டான பர்யந்தமாக கண்டபடி –
அம்மங்கி அம்மாள் பரம பதத்துக்கு எழுந்து அருளுகிற காலத்தில் –
அவர் திரு மாளிகையிலே பிள்ளை எழுந்து அருள –
அவருடைய தேவியார் பிரசன்னையாய் இருக்க –
ஸ்ரீ பாதத்தில் சேவித்துப் போந்த முதலிகள் -இதுக்கு நிதானம் என் -என்று கேட்க –
அம்மாள் தேவியார் விஷயத்தில் இதுக்கு முன்பு பண்ணின ப்ராதி கூல்யம் உண்டாகில் அன்றோ –
அவர் பேற்றுக்கு இவர் வெறுக்க வேண்டுவது -என்று அருளிச் செய்தார்-(ஆர்த்தனாகில் த்ருப்தனாய் இருக்கிறான்-என்பதற்கு அனுஷ்டான த்ருஷ்டாந்தம் இது)
அநந்தரம்
தம்முடைய ஸ்ரீ பாதத்தை உடையார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திரு நாட்டுக்கு எழுந்து அருள –
ஸ்ரீ வைஷ்ணவர் பிள்ளைகள் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே விழுந்து அழ
இதுக்கு அடி என் என்று முதலிகள் கேட்க –
பெறுகிற தேசம் கொந்தளிக்கிற படி கண்டால் –
இழக்கிற தேசம் என் படக் கடவது -என்று அருளிச் செய்தார் –(சூழ் விசும்பு பதிக்கப்படு அங்குள்ளார் கொந்தளிக்கக் கண்டு)
———————————————————————
நூற்று அறுபத்து நாலாம் வார்த்தை
பட்டர் ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை –
பிரசாதக் கிழியை எடுத்துக் கொண்டு வாரும் -என்ன –
பிரசாதக் கிழியின் அருகே -பணக் கிழியும் இருக்க –
அவர் பிரசாதக் கிழியை எடுப்பது பணக் கிழியை எடுப்பதாக நிற்க –
இவர் வரக் காணாமையாலே எழுந்து அருளி –
இவர் நிற்கிற நிலையைக் கண்டு –
இடம் பெற்ற அளவிலே இருவரும்(பாப புண்ய கர்மங்கள் இரண்டுமே) உம்மை நலிந்தார்கள் ஆகாதே வாரீர் -என்று அருளிச் செய்தார் –
——————————————————————–
நூற்று அறுபத் தஞ்சாம் வார்த்தை
ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்திலே சேவிப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
ராகத் த்வேஷம் கொண்டாடி அவர்களில் ஒருவர் பரிபவப்பட்டோம் என்று பட்டினி விட –
பரிபவப் படுவாரும் தாமேயாம் –பட்டினி விடுவாரும் தாமேயாம் -என்று அருளிச் செய்தார் –
அவர்கள் இத்தை கேட்டு -வெட்கி -திருந்தினார்கள் –
—————————————————————–
நூற்று அறுபத் தாறாம் வார்த்தை
இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ராகத் த்வேஷம் கொண்டாடி வர –
இவர்களைச் சேர விட்டு அருள என்று -ஆச்சான் பிள்ளைக்கு -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் விண்ணப்பம் செய்ய –
ஜகத்தில் ஈஸ்வரர்கள் இருவர் உண்டோ -என்று அருளிச் செய்ய –
ஆகிலும் சேர விட்டு அருள வேணும் -என்ன –
ஸ்வ சரீரத்தை நியமிக்க மாட்டாத நான் –
அந்ய சரீரத்தை நியமிக்க புகுகிறேனோ -என்ன –
ஆகிலும் இப்படி அருளிச் செய்யலாமோ என்ன –
அத்ருஷ்டத்துக்கு அஞ்சி நெஞ்சை மீட்கக் கண்டிலோம் –
த்ருஷ்டத்துக்கு அஞ்சி வாயை மூடக் கண்டிலோம் –
நாம் இவர்களை சேர விடும்படி என
என்று அருளிச் செய்ய —
இருவரும் அந்யோந்யம் பீருக்களாய் தங்களில் ஏக மநாக்களாய் விட்டார்கள் –
(மனத்தில் ஓர் தூய்மை இல்லை வாயில் ஓர் இன் சொல் இல்லை -அத்ருஷ்டம் -நரகம்)
————————————————————
நூற்று அறுபத்தேழாம் வார்த்தை
பிள்ளை உறங்கா வல்லி தாசர் -முதலி யாண்டான் ஸ்ரீ பாதத்திலே சென்று –
தண்டன் இட்டு சிஷ்ய லஷணம் இருக்கும்படி என் -என்று விண்ணப்பம் செய்ய –
ஆண்டான் அருளிச் செய்த படி –
ஆசார்ய விஷயத்தில் சிஷ்யன் –
பார்யா சமனுமாய் –
சரீர சமனுமாய் –
தர்ம சமனுமாய் இருக்கும் –
அதாவது –
சொன்னத்தை செய்கையும் –
நினைத்தத்தை செய்கையும் –
நினைவாய் இருக்கையும் – என்று அருளிச் செய்தார் –
(ஞானம் நினைவாயே இருக்கும் -சரீரம் நினைத்தபடி செய்யும் -பார்யா சொன்னதைச் செய்பவள்)
———————————————————–
நூற்று அறுபத்து எட்டாம் வார்த்தை-
அநந்தரம் பிள்ளை கூரத் ஆழ்வான் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டன் இட்டு
ஆசார்ய லஷணம் இருக்கும்படி எங்கனே -என்று விண்ணப்பம் செய்ய –
ஆழ்வான் அருளிச் செய்தபடி –
சிஷ்யன் விஷயத்தில் -ஆசார்யன்
பர்த்ரு சமனுமாய் –
சரீரி சமனுமாய் –
தர்மி சமனுமாய் -இருக்கக் கடவன் –
அதாவது
ஏவிக் கொள்ளுகையும் –
எடுத்து இடுவிக்கையும் -அதாவது
அசேதனத்தைக் கொண்டு -நினைத்தபடி விநியோகம் கொள்ளுமா போலே விநியோகம் கொள்ளுகையும் –
எடுத்துக் கொள்ளுகையும் –
என்று அருளிச் செய்தார் –
(சிஷ்ய லஷ்மண பூர்த்தி ஆண்டானிடம் -ஆச்சார்ய சிஷ்யன் லக்ஷணங்கள் இரண்டுமே பூர்ணமாக இருப்பவர் ஆழ்வான்)
—————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply