முதல் ஆல்வார்கலோடும் திரு மழிசை ஆழ்வார் உடன் எம்பெருமான் நம் ஆழ்வார் ஹிருதயத்தில்
திருவாய் மொழி கண்ணி நுண் சிறுத் தாம்பு
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுது — 2- 5- 4- நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே –
மலைக்கு நாவுடையேற்கு – -6 -4 -9 – நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே – 6- 10- -10 – மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை – -5 -2 -7 – தேவு மற்று அறியேன்
பாடி இளைப்பிலம் – 1- 7- 10- – பாடித் திரிவனே
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் – 8- 10- 4- – திரி தந்தாகிலும்
உரிய தொண்டர் தொண்டர் – 6- 9- 11- நம்பிக்கு ஆள் உரியனே
தாயாய் தந்தையாய் – 7- 8- 1- – அன்னையாய் அத்தனாய்
ஆள்கின்றான் ஆழியான் – 10- 4- 3- – என்னை ஆண்டிடும் தன்மையான்
கடியனாய் கஞ்சனைக்கொன்ற பிரான் – 9- 6- 11- தக்க சீர் சடகோபன்
யானே என்தனதே என்று இருந்தேன் – 2- 9- 9- – நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
எமர் கீழ் மேல் எழு பிறப்பும் மா சதிர் இது பெற்று – 2- 8-1 – இன்று தொட்டு எழுமையும்
என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் – -7 -9 -1 – – நின்று தன புகழ் ஏத்த அருளினான்
ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்க – 1- 7- 7- – என்றும் என்னை இகழ்விலன் காண்மின்
மயர்வற மதி நலம் அருளினன் – -1 1-1 – எண்திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே
அருளுடையவன் – 2- 10-11 – அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கது
பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் -10 -8 -2 – நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் – 3- 3- 1- – ஆட்புக்க காதல் அடிமைப் பயன்
ஆராத காதல் – -2 -1 -11 – ஆட்புக்க காதல்
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும்
கொண்டாய்- 5- 7- 3- – செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய
என் அன்பேயோ – -10 -10 -7 – தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய்
உலகம் படைத்தான் கவி – 3- 9-10 – மதுரகவி
உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும்
தம்மூர் எல்லாம் – 5- 3- 11- – நம்புவார் பத்தி வைகுந்தம் காண்மினே
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு -எத்திறம்
பிறந்தவாறு
பையவே நிலையம் வந்து கண்ணி நுண் சிறுத் தாம்பு
உரலை நேராக செதுக்கப் போகாது -அப்போதாக கயிற்றை நெடுக விட போகாது -இனி இவனை விட்டு நெடிய
கயிறு தேடி எடுக்கப் புகில் பின்னை இவன் தான் எட்டான் -காற்றில் கடியனாய் ஓடும் -இனி செய்வது என் –
என்று அவள் தடுமாறிய படியைக் கண்டான் -கட்டுண்ணப் பண்ணிய -சதகரூப ரூபாய -பிறந்து
படைக்க நினைத்த குணத்தை இழக்காமல் இருக்க -கட்டுண்ணப் பண்ணினான் –
கண்ணியார் குறுங்கயிற்றால் கட்டவெட்டேன்று இருந்தான் -பெரியதிருமொழி – 5- 9- 7- –
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் – பெரியதிருமொழி – 11- 5- 9-
தாம் நா சைவ –யதி சக் நோஷி -சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது –
அவர் உயர்வற உயர்நலம் உடையவன் குணத்தை முதலில் அனுபவித்தார்
அவன் திரு மேனியில் ஸ்பர்சித்ததொரு தாம்பை வர்ணிக்கிறார்
அவருடைய உத்தேச்ய வஸ்து வெளிறாய் கழிகிறது இறே
கட்டுண்ணப் பண்ணிய -பக்தி உண்டே யாகிலும் அவன் தானே தன்னை அணைத்து
தர வேண்டும்படியாய் -இது பின்னையும் சிறிதாய் இருக்கும் ஆய்த்து-
நாயமாத்மேத்யாதி –யமேவைஷ வ்ருணுதே தேந லப்யஸ் தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே
தநூம் ஸ்வாம்–என்றபடி -இந்த பக்தி நெஞ்சில் அந்ய பரதையை அறுக்கும் இத்தனை –
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தன்னைக் கட்டி -திரு சந்த விருத்தம் –83 –
எட்டு என்று திரு அஷ்டாஷரமாய் -அத்தாலே யாதல் –
இரண்டு என்று வாக்ய த்வயமாதல் -அத்தாலே யாதல் –
வசீகரித்து என்னவுமாம் -அல்லது எட்டும் இரண்டும் அறியாதார்க்கு
கட்டப் போகாதே –
களவிலே தகனேறினபடி -அபிமத ஸித்திக்கு ஓர் அஞ்சலியே சாதனம் என்று அறிந்து
தொழுகையும் -பெருமாள் திரு மொழி – 7- 8- – செய்வான் இறே
பெரு மாயன் -அவாப்த சமஸ்த காமன் -தனக்கு ஒரு குறை உண்டாய் -அது தன்னை
ஷூத்ரரைப் போலே கழவாகிற வழி அல்லா வழி இழிந்து சர்வ சக்தியான தான்
அது தன்னை தலைக் கட்ட மாட்டாதே -வாயது கையதாக அகப்பட்டு கட்டுண்டு
பையவே நிலையும்-திரு வாய் மொழி – 5- 10- 3- உடம்பு வெளுத்து நின்ற நிலை அளவும் செல்ல நினைக்கிறார் –
என்னப்பனில் -பகவத் சம்பந்தம் அற வார்த்தை சொன்னார் ஆகில் ஆழ்வார் சம்பந்தம்
அற வேணும் இறே -பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணம்-என்றபடியே அவ்வருகு
போவாரையும் துவக்க வல்ல விஷயத்தில் துவக்குண்டு சொல்கிறார் –
என்னப்பனில் நண்ணி -இங்கே தோஷ தர்சனம் காண விரகு இல்லையே –
நல்கி என்னை விடான் நம்பி -திருவாய் மொழி – 1- 10-8 -ஆழ்வார் உத்தேச்யமாக பற்றின
விஷய பூர்த்தி இவர் பற்றின -தென் குருகூர் நம்பி -ஆசார்யர்களை நம்பி என்ன கற்பித்தார்
என்றக்கால் -ஓர் உக்தி மாத்ரமே அமையும் இவ் விஷயத்துக்கு
மனோ வாக் காயம் மூன்றும் வேண்டி இருக்கும் பகவத் விஷயத்துக்கு
பூர்த்தி சௌலப்யம் இரண்டாலும் வந்த ஏற்றம்-
——————————————————————————————
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply