ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை–429/430/431/432/433/434/435/436/437/438/439/440–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

சூரணை -429-

ஈஸ்வரனுக்கு சேஷ வஸ்துவை உபகரித்தான் –
சேதனனுக்கு சேஷியை உபகரித்தான் –

இரண்டு தலைக்கும் இவன் உபகரித்தவை இவை என்று அருளிச் செய்கிறார் –

அதாவது –
மேன்மேலும் சிருஷ்டி அவதாரங்களைப் பண்ணி வசீகரிக்க பார்த்த இடத்திலும் –
ஓர் ஆத்ம வஸ்துவும் எட்டுப் படாமையாலே -இழவாளனாய் இருக்கிற ஈஸ்வரனுக்கு –
சேஷமான ஆத்ம வஸ்துவை அஜ்ஞாத ஜ்ஞாபன முகேன திருத்தி -இஷ்ட விநியோக அர்ஹமாமாம் படி கை படுத்தினான் –
பகவத் ஜ்ஞான அபாவத்தாலே அசத் கல்பனை கிடந்த சேதனனுக்கு –
பகவத் சம்பந்தத்தை அறிவித்து -இச் சேஷியான அவனை காட்டிக் கொடுத்தான் என்கை –
இத்தால் ஆசார்யனுடைய -சேதன ஈச்வரர்கள் இருவருக்கும் உபகாரகன் ஆகை ஆகிற வைபவம் சொல்லப்பட்டது –

——————————————

சூரணை -430-

ஈஸ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப் பட்டு இருக்கும் –

இன்னம் ஒரு பிரகாரத்தாலே ஆசார்ய வைபவத்தை பிரகாசிப்பிக்கிறார் –

அதாவது –
இதுக்கு இட்டு பிறவாத ஈஸ்வரன் தானும் இவ் ஆசார்யத்வத்தின் ஏற்றத்தை பற்ற
இதிலே மிகவும் ஸ்ரத்தை பண்ணி இருக்கும் -என்கை –

—————————————

சூரணை -431-

ஆகை இறே -குரு பரம்பரையில் அன்வயித்ததும் –
ஸ்ரீ கீதையும் -அபய பிரதானமும் -அருளிச் செய்ததும் –

அது எங்கே கண்டது என்னும் ஆ காங்ஷையிலே அத்தை மூதலிக்கிறார்-

அதாவது –
ஆச்சர்யத்வத்தை ஆசைப் பட்டு இருக்கையாலே இறே –
சதாசார்யவம்  சொஜ்ஜேய ஆசார்யணாம சாவசாவித்யா பகவத்த -என்னும்படி –
குரு பரம்பரையிலே -த்வய உபதேஷ்ட்ருத்வேன அன்வயித்ததும் –
ஆசார்ய க்ருத்யத்தை ஏறிட்டுக் கொண்டு அர்ஜுனனைக் குறித்து -தத்வ விவேகாதி சரம உபாய பர்யந்தார்த்த பிரதிபாதிகையான ஸ்ரீ கீதை அருளி செய்ததும் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நிமித்தமாக – சக்ருதேவ பிரபன்னாய த்வாச்மீதி சயாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வரதம் மம-என்று
அபய பிரதானம் அருளி செய்ததும் -என்கை –
இத்தால்-
ஈஸ்வரனும் ஆசைப் படும் படி அன்றோ ஆசார்யத்வத்தின் பெருமை என்று -ஆசார்ய வைபவம் சொல்லிற்று ஆயிற்று

———————————————

சூரணை -432-

ஆசார்யனுக்கு சத்ருச பிரத்யுபகாரம் பண்ணலாவது-
விபூதி சதுஷ்டயமும் -ஈஸ்வர த்வயமும் உண்டாகில் –

இன்னும் ஒரு வழியாலே ஆசார்ய வைபவத்தை தர்சிப்பிக்கிறார் –

அதாவது –
உபய விபூதியையும் விபூதிமாணன் ஈஸ்வரனையும் தான் இட்ட வழக்காம் படி பண்ணிக் கொடுத்த ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு சத்ருசமாக
பிரத்யுபகாரம் பண்ணலாவது -இப்படியே இன்னும் இரண்டு விபூதியும் விபூதிமானாய் இருப்பான் ஈஸ்வரனும் வேறு உண்டாகில் இறே -என்கை –
யோதத் யாத்ப் பகவத் ஜ்ஞானம் குர்யாத்த்தர்ம உபசேவனம் க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யான்ந் தத் துல்யம் கதஞ்சன -என்றார் இறே –
இத்தால் ஆசார்யனுடைய பிரத்யுபகார அவகாச ரஹித மகா உபகாரத்வம் ஆகிற வைபவம் சொல்லிற்று ஆயிற்று

—————————————–

சூரணை-433-

ஈஸ்வர சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் –
ஆசார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் –

இன்னமும் ஒரு முகத்தாலே ஆச்சார்ய வைபவத்தை அருளிச் செய்கிறார் –

இவ்விடத்தில் ஈஸ்வர சம்பந்தம் -என்கிறது -ஈஸ்வரனைப் பற்றுகை -என்ற கீழ் சொன்ன தாத்ருச்ய ரூப சம்பந்தத்தை –
அந்த -பந்த மோஷங்கள் இரண்டுக்கு பொதுவாகையாவது-
கர்ம அநு குணமாக சம்சரிப்பிக்கவும் -காருண்ய அநு குணமாக முக்தனாக்கவும் -வல்ல
நிரந்குச ஸ்வாதந்த்ரனோடு உண்டான சம்பந்தம் ஆகையாலே -உபய சாதாரணமாய் இருக்கை-
ஆசார்ய சம்பந்தம் -ஆகிறது -ஆசார்யனை பற்றுகை -என்று கீழ் சொன்ன தத் ஆஸ்ர்யண ரூப சம்பந்தம் –
அது -மோஷத்துக்கே ஹேதுவாகையாவது-கர்ம அநு குணமாக சம்சரிக்கவும் விடும் ஸ்வதந்த்ரன் அன்றிக்கே –
சர்வ பிரகாரத்தாலும் இவனை உஜ்ஜீவிப்பித்தே விடும் நிரதிசய க்ருபாவானோட்டை சம்பந்தம் ஆகையாலே –
சம்சார மோஷங்களுக்கு பொது அன்றிக்கே சம்சார விமோசன ஏக ஹேதுவாய் இருக்கை –
இத்தால்-
மோஷ ஏக ஹேதுத்வ நிபந்தனமான வைபவம் சொல்லப்பட்டது –

——————————————-

சூரணை -434-

பகவல் லாபம் ஆசார்யனாலே-

உத்தராகத்வத்தில் ஆசார்யனுடைய ஆதிக்யத்தை அருளிச் செய்தார் கீழ் –
உபகாரத்வத்தில் ஈஸ்வரனுடைய ஆதிக்யத்தை அருளி செய்க்கைகாக வடி கொண்டு எழுந்து இருக்கிறார் மேல் –

அதாவது –
நிருபாதிக சேஷியாய் நிரந்குச ச்வதந்த்ரனாய் இருக்கும் பகவானை லபிக்கை –
தத் சம்ருத ஏக பிரயோஜனனாய் கொண்டு -மங்களா சாசனத்துக்கு ஆளாக வேணும் என்று தன்னை அங்கீகரித்து –
தத் வியாமோஹா விஷயம் ஆக்கின ஸ்வ ஆசார்யனாலே -என்கை -‘

——————————————————

சூரணை -435-

ஆசார்ய லாபம் பகவானாலே –

ஏவம் பூதனான ஆசார்யன் தன்னை லபிக்கைக்கு ஹேது எது என்னும் அபேஷையில்
அருளிச் செய்கிறார் –

அதாவது –
பகவத் லாப ஹேதுவாய் -பரம ப்ராப்ய பூதனான ஆசார்யனை லபிக்கை –
ஈச்வரச்யச ஸௌ ஹார்த்தம் -இத்யாதிபடியே -நிருபாதிக சூஹ்ருதாய் -விசேஷ கடாஷ பற்றாசைகளையும் தானே கற்பித்து கொண்டு –
விசேஷ கடாஷம் பண்ணி –
அத்வேஷத்தை பிறப்பித்து –
ஆபிமுக்க்யத்தை உண்டாக்கி –
சாத்விக சம்பாஷணத்திலே மூட்டி –
சதாச்சார்யா ப்ராப்தியை –
பண்ணுவிக்கும் -நிர்ஹேதுக க்ருபாவானான -பகவானாலே -என்கை-

———————————

சூரணை -436-

உபகார வஸ்து கௌரவத்தாலே -ஆசார்யானில் காட்டில் – மிகவும் உபகாரகன் ஈஸ்வரன் —

ஆனால் இருவரும் உபகாரத்தில் சமரோ என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
உபயரும் உபகரித்த வஸ்துக்களை சீர் தூக்கி பார்த்தால் -ஆசார்ய உபகார வஸ்துவான -பந்த மோஷ அபய ஹேதுவாய் -பிரத பர்வமாய் –
இருக்கிற பகவத் விஷயத்தில் காட்டில் -பகவத் உபகார வஸ்துவான -மோஷ ஏக ஹேதுவாய் -சரம பர்வமாய் -இருக்கிற
ஆசார்ய விஷயத்தினுடைய கௌரவத்தாலே -ஈஸ்வரனை உபகரித்த ஆசார்யனைக் காட்டில் மிகவும் உபகாரகன் ஈஸ்வரன்

———————————————————–

சூரணை -437
ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் –
ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் – அவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை —

நமோ சிந்த்யாத் ப்புதாக்லிஷ்ட ஞான வைராக்ய ராசயே நாதாய முநயே அகாத பகவத் ப்பக்தி சிந்தவே -என்கிறபடியே –
ஆசார்யன் தனக்கு ஏற்றம் -ஞான வைராக்ய பக்திகளாலே -இறே-
அந்த ஞான வைராக்ய பக்திகள் உண்டான அவன் இந்த ஆசார்ய சம்பந்தத்தை நெகிழ நின்றான் ஆகிலும் -அவை பகவல் லாபத்துக்கு உடலாமோ என்ன –
அருளிச் செய்கிறார் -மேல் –

அதாவது –
கீழ் சொன்னபடி யே-உத்தாரகனும் உபகாரனுமாய் இருந்துள்ள ஸ்வ ஆசார்யன் இவன் என்னுடையவன் என்று அபிமானித்து இருக்கும் படி அவன் திருவடிகளில்
தனக்கு உண்டான சம்பந்தம் -ஸ்வ விப்ரபத்தி யாலே குலையாத படி அதை நோக்கிக் கொண்டு கிடந்தால்-
ஆத்ம அலங்காரங்களான -தத்வ ஞானம் -அப்ராப்தி விஷய வைராக்கியம் – ப்ராப்த விஷய பக்தி -ஆகிற ஆத்ம குணங்கள் இல்லையாகிலும் –
அவ் ஆசார்ய பிரசாதிகளாலே க்ரமமே உண்டாக்கி கொள்ளலாம் –
சர்வ மங்கள ஹேதுவான அந்த ஆசார்ய சம்பந்தம் ஸ்வ பிரதிபத்தியால் குலைந்தால் –
ஞாநாதிகளானவை பூர்வ சூக்ருதங்களாலே சிறிது உண்டாயிற்று ஆகிலும் –
பகவத் அங்கீகார ஹேது  ஆகாமையாலே நிஷ் பிரயோஜனம் -என்கை

———————————–

சூரணை -438-

தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிக் கொள்ளலாம் –
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை விளைக்கும் –

பிரயோஜனம் அல்லாமையே அன்று -அவத்யகரமும் -என்கிறார் –

அதாவது –
பதி விரதையான ஸ்திரீக்கு பதி சம்பந்த சூசுகமான தாலி ஒன்றும் போகாமல் கிடந்தால் –
பூஷணங்கள் இல்லையே ஆகிலும் -முதல் உண்டான போது-பண்ணிப் பூண்டு கொள்ளலாய் இருக்கும் –
இத்தனை பூஷணங்கள் உண்டே என்று நினைத்து தாலியை வாங்கிப் பொகட்டால்-
விதவ அலங்கார கல்பம் ஆகையாலே பூண்ட பூஷணங்கள் எல்லாம் அவத்யவஹங்களாய் இருக்கும் -என்கை –
இத்தால் –
ஆத்ம பூஷனங்களான-ஞான வைராக்ய பக்திகள் இல்லையே ஆகிலும் -ஆசார்ய சம்பந்தம் மாத்ரம் குலையாமல் கிடந்தால் அவன் பிரசாதத்தாலே
அவைகளை க்ரமேண உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் இத்தனையும் குலைந்தால் ஆத்ம குணங்களான ஞான வைராக்ய பக்திகள் எல்லாம் உண்டானாலும் –
அவை ஸ்லாக்யதா ஹேது அன்றிக்கே -அவத்யாவஹமாய் விடும் -என்றபடி

———————————————

சூரணை-239-

தாமரையை உலர்த்தக் கடவ ஆதித்யன் தானே -நீரைப் பிரிந்தால் –
அத்தை உலர்த்துமா போலே -ஸ்வரூப விகாசத்தை பண்ணும் ஈஸ்வரன் தானே –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் -அத்தை வாடப் பண்ணும் —

ஆச்சார்ய சம்பந்தம் கிடந்தாலும் -ஸ்வரூப விகாசகன் ஈஸ்வரன் அன்றோ –
அது குலைந்தது ஆகிலும் -இத்தனை ஆத்ம குணம் உடைய அவனுக்கு அவன்
ஸ்வரூப விகாசத்தை பண்ணானோ என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஜலஜம் -என்னும்படி ஜலத்திலே பிறந்து ஜல ஏக தாரமாய் இருக்கும் தாமரைக்கு –
நியமேன விகாசகனாய் போரும் ஆதித்யன் தானே -ஸ்வ தாரகமான ஜலத்தை
விச்லேஷித்தால் -அந்த தாமரையை விகசிப்பியாத மாத்ரம் அன்றிக்கே –
சோஷிப்பிக்குமா போலே –
ஆச்சார்ய அன்வயத்தாலே சத்தை பெற்று -ஸ்வ சத்தா தாரகமான தத் சம்பந்தம்
குலையாதே நிற்கும் அளவில் -இவனுடைய ஸ்வரூபத்தை ஞான விகாச முகேன-
உள்ள உலகு அளவும் யானும் உளனாவன் -என்னும்படி –
விகசிப்பிக்கும் ஈஸ்வரன் தானே -ஸ்வ சத்தா தாரகமான ஆசார்ய சம்பந்தத்தை
ஸ்வ விப்ரபத்தியாலே இவன்குலைத்து கொண்ட காலத்தில் -தான் விகசிப்பிக்க
கடவ அந்த ஸ்வரூபத்தை விகசிப்பியாத மாத்ரம் அன்றிக்கே -நாளுக்கு நாளும்
நஷ்ட பிரஜ்ஞ்மாய் -சங்கோசித்து போம்படி பண்ணும் -என்கை –
நாராயணா அபிவிக்ருதம் யாதி குரோ பிரச்யுதச்ய துர்புத்தே
கமலம் ஜலாதபேதம் சோஷய திரவிர்ந தோஷயதி- என்னக் கடவது இறே–

————————————————–

சூரணை -240-

இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் –

இங்கன் சொல்லுகிறது என்-இவ் ஆசார்ய சம்பந்தம் குலைந்தது ஆகிலும் –
ஒழிக்க ஒழியாது -என்கிற பகவத் சம்பந்தம் உஜ்ஜீவனத்துக்கு உடல் ஆவாதோ என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
அநாதி சித்தமாய் இருக்க செய்தேயும் -ஆசார்யன் உணர்த்துவதற்கு முன்பு அசத் கல்பமாய் –
அவன் உணர்த்தின பின்பு இவனுக்கு கார்யகரமாகக் கடவதாய் -இருக்கும் அது –
இவ் ஆசார்யம் சம்பந்தம் குலைந்த போது-இதடியாக வந்த தானும் குலைந்து போம் ஆகையாலே –
இவ் ஆசார்ய சம்பந்த்தத்தை ஒழிய பகவத் சம்பந்தம் இவனுக்கு கிடையாது -என்கை –
ஆகையால் இது போயிற்று ஆகிலும் அது நமக்கு உஜ்ஜீவனத்துக்கு உடல் என்று இருக்க விரகு இல்லை என்று கருத்து –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading