ஏழாம் பத்தால்
உபாய க்ருத்யதுக்கு உபேஷிதமான விசித்ர சக்தி யோகத்தாலே –
யதாஜ்ஞானம் பிறந்தவர்களுக்கு கொடுக்கக் கடவதான பரம பதத்தைத் தானே உபாயமாக கொடுக்கும் இடத்தில் –
திர்யக் ஸ்தாவரங்களுக்கும் சத்ருவுக்கும் உள் படக் கொடுக்க வல்ல சர்வேஸ்வரன் திரு அடிகளை
ஷண காலமும் பிரிய ஷமரும் இன்றிக்கே –சாங்க பிரபதனம் பண்ணின -தம்மை-விஷயங்களிலே மூட்டி –
தன் பக்கலிலே சேராதபடி -அகற்றுமவையான -இந்திரியங்கள் நடையாடுகிற சம்சாரத்தில் -வைக்கக் கண்டு –
விஷண்ணராய்க் கூப்பிட்டு –
தம் தசை தாம் பேசமாட்டாதபடி -தளர்ந்து
பிறரால்- மீட்க ஒண்ணாதபடி -அபருஹ் சித்தராய் —
அவன் தன் விஜயங்களைக் காட்டி இவரைத் தரிப்பிக்க –
அந்த தரிப்பும் சம்சாரிகள் இழவைப் பார்த்து நினைத்து சுவறி பழைய வார்த்தியே தலை எடுத்து –
அனுபாவ்ய விஷயம் -ஸ்ம்ருதி விஷயமாய் ஒரு முகம் செய்து -நலிய நோவு பட்டு-
இப்படி எடுப்பும் சாய்ப்புமாக கிலேசம் செல்லச் செய்தே
-உபாய பூதனான உனக்கு ஞான சக்திகளிலே குறைவற்று இருக்க –
எனக்கு ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களிலும் ஆர்த்தியிலும் குறை வற்று இருக்க –
என்னை சம்சாரத்திலே வைக்கைக்கு அடி என் என்று கேட்க –
அவனும்
நமக்கும் நம் உடையாருக்கும் இனிதாக திருவாய் மொழி பாடுவிக்க வைத்தோம் காணும்
என்று அருளிச் செய்ய –
வ்யாசாதிகள் முதல் ஆழ்வார்கள் கவி பாட உண்டாய் இருக்க நம்மைக் கொண்டு கவி
பாடுவித்துக் கொள்வதே என்று அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து –
அதுக்கு பிரதி உபகாரம் தேக் காணாமையாலே –
இனி இது ஒழிய செய்யலாவது ஓன்று இல்லை-என்று
திரு வாறன் விளையிலே-பெரிய பிராட்டியாரோடு எழுந்து அருளி இருக்கிற பேர் ஓலக்கத்திலே –
திரு வாய் மொழி கேட்பித்து -அடிமை செய்வதாக மனோரதித்து –
அங்கே தம் திரு உள்ளம் பிரவணம் ஆகையாலே -பரம பதத்தில் இருக்கும் இருப்பையும் உபேஷிக்கும் படி ஆனவர் –
கீழ் தம்முடைய உபாய நிஷ்டை வெளி இடும்படி புகுர நின்றவர்களுக்கு –
திரு வாறன் விளையே -பிராப்யம் –அங்கு எழுந்து அருளி நிற்கிறவனே உபாயம் -என்று
தாம் அறுதி இட்ட பிராப்ய பிராபகங்களின் முடிவை தம் முகப்பாலே வெளி இடுகிறார் என்கிறார் —
——————————————
1-எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன்
மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே
2-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
பிராபகத்வம் புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்க
வல்ல சர்வ சக்தி பாதமகலகில்லா தம்மை
3-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு நலிவான்
சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டுக்
4-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில்
திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கித்
5-தேற்ற ஒண்ணாதபடி தோற்று ஒன்றி நிற்கப்
பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி
6-பழைய தனிமைக் கூப்பீடு தலை எடுத்து -சூழவும்
பகை முகம் செய்ய -எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க
உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த
வைசித்திரியைக் கேட்க
7-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை
அருளிச் செய்ய -என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர்
எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே
8-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த
நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக
கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர்
9-சரமோ உபாய பரர் ஆனார்க்கு நீள் நகரமது -துணித்தான்
சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று
பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் —
——————————————-
1-எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன்
மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே-
அதாவது-
எண்ணிலா பெரு மாயனே-7-1-1–என்று
எண்ணிறந்த ஆச்சர்ய குணங்களை உடையவனே என்றும் –
குணங்கள் கொண்ட மூர்த்தி யோர் மூவராய் படைத்து அளித்து கெடுக்கும் –7-1-1-
என்று சத்வாதி குண அனுகுணமான மூர்த்திகளைக் கொண்டு சிருஷ்டியாதிகளை பண்ணுபவன் என்றும் –
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் -7-2-7–என்று
இடமறிந்து சுக துக்கங்களை கல்பித்தவன் என்றும்
ஊழி தோர் ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும் -7-3-11-என்று
கல்பம் தோறும் ரூப நாம சேஷ்டிதங்களை வேறாக உடையனாய்க் கொண்டு ஜகத்தை ரஷிக்கும் என்றும் –
மாய வாமனனே -7-8-7–என்று ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் என்றும் –
உள்ளப் பல் யோகு செய்து -7-8-4–என்று திரு உள்ளத்தில் பல ரஷண உபாய சிந்தைகளும் பண்ணி நிற்றி என்றும்
இப்படிப் பல விதமாகச் சொல்லப் பட்ட உபாய க்ருத்யத்துக்கு
அபேஷிதமான ஆச்சர்ய சக்தி யோகத்தாலே
———————————————–
2-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் பிராபகத்வம்
புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்க வல்ல சர்வ சக்தி-
அதாவது-
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும் – 7-5-11-என்றும்
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் 7-6-10–என்றும்
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானே என்று அத்யவசித்து -பின்னை
நாட்டார்கள் செயல்களைக் கண்டு ஆதல்- யுத்தி ஆபாசம் கொண்டு ஆதல் –பிற்காலியாதே நின்று –
அவர்களுக்கு நிரதிசய ஆனந்த யுக்தமாய் -ஒருவராலும் ஸ்வ யத்னத்தால் ப்ராபிக்க ஒண்ணாது இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்தை
தன் அருளால் கொடுக்கிற தன் உபாயத்தை –
புற்பா முதலா புல் எறும்பாதி ஓன்று இன்றியே நற் பாலுக்கு உய்த்தனன் -7-5-1–என்றும்
நாட்டை அளித்து உய்யச் செய்து-7-5-2- -என்றும் –
சேட் பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட் பால் அடைந்த-7-5-3- -என்றும்
ஜ்ஞானம் லேசமில்லாத திர்யக் ஸ்தாவரங்களும்
பிராதி கூல்யத்தில் முதிர நின்ற சத்ருவுக்குக்குமாம் படி பண்ண வல்ல சர்வ சக்தி யானவன் –
பாதமகலகில்லா தம்மை-
அதாவது-
அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையும்-6-10-9- -என்று
தன் திருவடிகளை ஷண காலமும் அகல சக்தர் அன்றியே –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்—6-10-10-என்று சரணம் புக்க தம்மை-
——————————————-
3-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு-
அதாவது-
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆமவை -5-7-8–என்று
தன் திருவடிகளைக் கிட்டாதபடி அகற்றவற்றான இந்திரியங்களின் நடுவே –
இவ் உடம்பிலே இருக்கும் படி வைக்க கண்டு-
நலிவான் சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டு
அதாவது-
நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் -7-1-1–என்றும்
அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய்-7-1-10- -என்றும் –
விண்ணுளார் பெருமானேயோ -7-1-5–என்றும் –
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தீயோ-7-1-10- -என்று
விளம்ப ஹேது இல்லாத உபாயத்தை பரிக்ரஹித்தால் அது பல பிரதமாம் படியும்
கிடந்து கூப்பிடும் இத்தனை ஆகையாலே -கீழ் தாம் பரிக்ரஹித்த உபாயத்தின் பலமாய் வந்ததாய் –
கலங்கா பெருநகரம் கலங்கி -அவனுக்கு அங்கு குடி இருப்பது அரிதாய் வந்து
விழ வேண்டும் படியான சம்சாரத்தில் -அடிக் கொதிப்பால் வந்த பெரிய
ஆக்ரோசத்தோடே கூடிக் கொண்டு தம் தலையால் வந்தததையும் அவன் தலையில்
ஏறிடும் படியான பிராப்தியை உணர்ந்தவர் ஆகையாலே –இந்திரியங்களை இட்டு
நலிவிக்கிறாய்-நீ என்று அவன் மேல் பழி இட்டு –
(பிரஜை தெருவிலே இடறித் தாய் முதுகிலே குத்துமா போலே -ஸ்ரீ வசன பூஷணம் )
————————————————
4-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கி-
(திரு விருத்தத்தில்–62-(-இதுவே கங்குலும் பகலுமாக விரிந்தது )-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் -ஈங்கு இவள் தன் நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே -பாசுரப்படி இங்கு முறை கெட்ட -என்று அருளிச் செய்கிறார் )
அதாவது-
கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை-
அதாவது–
இப்படி கூப்பிட தானும் ஷமர் அன்றிக்கே -அவசந்னராய் கொண்டு -ஒரு பிராட்டி தசையை அடைந்து –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்-
இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும் –
சிந்திக்கும் திசைக்கும் -இத்யாதிப் படியே
திவாராத்ரா விபாகமற -அழுவது -தொழுவது -மோகிப்பது -பிரலாபிப்பது —
அடைவு கெடப் பேசுவது -நெடு மூச்சு எறிவது -அது தானும் மாட்டாது ஒழிவது –
ஸ்தப்தையாய் இருப்பது -இப்படி ஆர்த்தி விஞ்சி செல்லுகையாலே –
ஆசா சிந்தா ஸ்ம்ருதி கீர்த்திர் விலாபோன்மாத விப்ரமா
மோஹோ வியாதிர் ம்ருதிச்சேதி விகாரா காம ஜாதச -என்றார் போலே
அவஸ்தைகளுக்கு அடைவு பிடிக்க ஒண்ணாத படி நடக்கிற ஆர்த்தியை-
பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிற கோவில் திரு வாசலிலே
பெண் பிள்ளையைப் பொகட்டு திரு தாயார் கூச்சு முறை தவிர்ந்து -தானே இவள் தசையை அவருக்குச் சொல்லி –
திரு வரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாய் –
என் செய்திட்டாய் –
என் சிந்தித்தாய் –
என் செய்கேன் திரு மகட்கு -என்று
அவர் தம்மையே கேட்கும் படி அத்யாவசாதம் பிறந்து-
அடைவற்ற அரதியை -என்ற பாடமான போது –
கங்குலும் பகலும் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே திவாராத்ரா விபாகமற
அழுவது-தொழுவது -இத்யாதிகளாலே -ஆசா சிந்தாதிகளில் போலே
அவஸ்தைகளுக்கு ஓர் அடைவு பிடிக்க ஒண்ணாதபடி நடக்கிற அரதியை
என்று யோஜிக்கவுமாம்–
———————————————
5-தேற்ற ஒண்ணாதபடி தோற்று-ஒன்றி நிற்க பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி-
அதாவது-
தேற்ற ஒண்ணாதபடி தோற்று-
அதாவது-
அன்னையர்காள் என்னை தேற்ற வேண்டா -என்றும் –
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் -என்று
பார்ஸ்வச்தராலும் தேற்றி தரிப்பிக்க ஒண்ணாதபடி அபஹ்ருத சித்தராய் கொண்டு
பாரதந்த்ர்யமும் இழந்து –(வெள்ளைச் சுரி சங்கு சாரம்)-
ஒன்றி நிற்க பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி-
அதாவது-
இப்படி விரஹ வ்யதையாலே மிகவும் தளர்ந்து இருக்கிற இவரைத் தரிப்பைக்கைகாக தன்
விஜய பரம்பரையைக் காட்டிக் கொடுக்க கண்டு ப்ரீதராய் –
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடு ஒன்றி நின்ற சடகோபன் -என்று
தன் விஜயத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களோடு பொருந்தி இருக்கும்
படி பண்ணின பல தானமானது –(ஆழி எழ சங்கும் எழ சாரம்)
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -என்று
அவதார பிரயுக்த சௌலப் யத்தை உடையவனாய் -ப்ரிய பரனுமாய் -ஹித பரனுமாய் –
தான் அங்கீகரிக்க நினைத்தாரை -நிர்ஹேதுகமாக -மோஷ பர்யந்தமாக -நடத்தும் அவனுமாகிய
இவனை ஒழிய -மற்றும் ஒரு விஷயத்தை கற்பரோ -இப்படி சுலபமான இவ் விஷயத்தை
சம்சாரிகள் இழப்பதே என்று அவர்கள் இழவை அனுசந்தித்து -அதிலே சுவறி-( கற்பார் ராம பிரானை அல்லால் சாரம்)
———————————————-
6-பழைய தனிமை கூப்பீடு தலை எடுத்து –
அதாவது
பாமரு மூ உலகும் படைத்த பத்மநாபாவோ-என்று தொடங்கி
தனியேன் தனை யாளாவோ – என்று
ஒரு துணை அன்றிக்கே இருந்து -அவனுடைய ஜகத் காரணத்வாதிகளைச் சொல்லிக்
கூப்பிடும் படி -முன்புத்தை –
உண்ணிலாவியில் -கூப்பீடே மீளவும் தலை எடுத்து-
சூழவும் பகை முகம் செய்ய-
அதாவது
சூழவும் தாமரை நாண் மலர்போல் வந்து தோன்றும் -என்றும் –
இணைக் கூற்றம்கொலோ அறியேன் -என்றும் –
கண்ணன் கோளிழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே -என்று
முன்பு அனுபவித்தவனுடைய-முக அவயவ சோபையானது – விசத ஸ்ம்ருதி விஷயமாய் –
பார்த்த பார்த்த இடம் எங்கும் தோன்றி நின்று நலிய-
(திரு முக மண்டலத்தில் திருக்கண்கள் -திரு மூக்கு -திரு வாய் – திருப்புருவம் -திருக்காது -திருநெற்றி
முதலானவை நலிவதால் சூழவும் பகை முகம் செய்ய என்கிறார் )
-எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க-
அதாவது
விஜயங்களைக் காட்டித் தரிப்பித்த போது தலை சாய்ந்தும் -மீளவும் கூப்பிடும் படி தலை எடுத்தும்-
இப்படி எடுப்பும் சாய்ப்பும் ஆக செல்லுகிற கிலேசம் நடவா நிற்கச் செய்தே-
உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க-
அதாவது
உபாய பூதனான உனக்கு அஜ்ஞான அசக்திகளாகிற தோஷம் இன்றிக்கே இருக்க –
சரண்யனான எனக்கு -ஆகிஞ்சன்யம்-அநந்ய கதித்வங்களும் ஆர்த்தியும் உண்டாகையாலே அதிகாரி தோஷம் இன்றிக்கே இருக்க –
பாசங்கள் நீக்கி -என்று தொடங்கி
மாயங்கள் செய்து வைத்தி -என்று
அவித்யா கர்ம வாசன ருசிகளை -சவாசனமாகப் போக்கி -உனக்கு
அனந்யார்ஹ சேஷம் ஆக்கிக் கொண்ட பின்பு ஜன்ம மரணாத் யாச்சர்யங்களை உண்டாக்கி –
என்னை சம்சாரத்தில் வைத்த ஆச்சர்யத்தை அருளிச் செய்ய வேணும் என்று கேட்க-(மாய வாமனன் சாரம்)
—————————————
7-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய-
அதாவது
அவன் -நமக்கும் நம் உடையாருக்கும் -போது போக்காகா உம்மைக் கொண்டு திருவாய் மொழி
பாடிவித்து கொள்ள வைத்தோம் காணும் –என்று கர்மம் அடியாக அன்றிக்கே-
தன் இச்சையாலே இருத்தி –
உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய
அதாவது
உறப் பல இன் கவி -என்கிறபடியே
தனக்கு தகுதியான கவிகளைப் பாடுவித்து கொண்ட ஸ்வ பிரயோஜனமும் –
பர பிரயோஜனமுமான -வித்தை -வைத்ததுக்கு ஹேதுவாக அருளிச் செய்ய-
என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே-
அதாவது
வியாச பராசர வால்மீகி பிரப்ருதிகள்-முதல் ஆழ்வார்கள் -உண்டாய் இருக்க –
தம்மைக் கொண்டு கவி பாடு வித்த உபகாரத்தை அனுசந்தித்து –
என் சொல்லி நிற்பானோ-என்றும் ,
எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ -என்றும் ,
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் ஆர்வேனோ –
இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வேனோ -என்று
அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்தால்-எங்கனே நான் தரையில் கால் பாவுவது –
அவ் உபகாரத்தை கால தத்வம் உள்ள அளவும் அனுசந்தித்தாலும் -பர்யாப்தன் ஆகிறிலேன் –
சகல ஸ்தலங்களிலும் உண்டான சகல சேதனருடையவும்-வாகாத் யுபகரணங்களை-
நான் ஒருவனே யுடை யேனுமாய் — கால த்ரயத்திலும் -பேசி அனுபவித்தாலும் -த்ருப்தன் ஆவேனோ –
உதவிக் கைம்மாறு -என்று தொடங்கி –
எதுவும் செய்வது ஒன்றும் இல்லை இங்கும் அங்கும் -என்று இதுக்கு பிரத்யு உபகாரமாக
ஆத்ம சமர்ப்பணைத்தைப் பண்ணுவோம் -என்னில் -அதுவும் -ததீயமாய் -இருக்கையாலே –
உபய விபூதியிலும் செய்வது ஒன்றும் இல்லை என்னும் படியான உபகார ஸ்ம்ருதியோடு கூடிக் கொண்டு –
———————————————–
8-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த நிலத் தேவர் குழுவிலே
பாட்டுக் கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர்-
அதாவது-
செம்பவளத் திரள் வாய் தன் சரிதை கேட்டான் -பெருமாள் திருமொழி -10-8—என்கிறபடியே –
பிராட்டியை ஒழிய பெருமாள் தனி இருந்த இருப்பிலே குசலவர்கள்
ஸ்ரீ ராமாயணம் கேட்பித்தாப் போல் அன்றிக்கே –
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் எழ உலகை
இன்பம் பயக்க இனிது உடன் வீற்று இருந்து -என்று
ஆனந்த மயனான தனக்கும் -ஆனந்த வர்தகையான பிராட்டியும் தானுமான சேர்த்தியில் –லோகம் அடங்க வாழும் படி –
உபய விபூதி நாதத்வத்தால் வந்த வேறு பாடு தோற்ற எழுந்து அருளி இருந்த –
நிலத் தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளையில்-அந்த பூ சூரரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே –
பிரத்யு உபகாரமாக திரு வாய் மொழி கேட்விப்பித்து அடிமை செய்ய பாரித்து –
திரு வாறன் விளையில் பரத்வ விமுகமாம் படி தன் நெஞ்சு பிரவணம் ஆகையாலே –
திருவாறன் விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின் — சிந்தை மற்று ஒன்றின் திறத்து
அல்லாத் தன்மை -தேவ பிரான் அறியும் -என்று
பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –
ஹாவு ஹாவு -என்று சாம கானம் பண்ணும் பரம பதத்தில் கோஷ்டியையும் –
ஸ்வதஸ் சர்வஜ்ஞனாய் -நினைவுக்கு வாய்த் தலையிலே இருந்து –
எல்லோருடைய நினைவும் அறியும் அயர்வறும் அமரர்கள் அதிபதி அறிய விஸ்மரித்தவர் –
———————————————
9-சரமோ உபாய பரர் ஆனார்க்கு
அதாவது
கீழ் தாம் அருளிச் செய்யக் கேட்ட (அகலகில்லேன் இறையும் பாசுரத்தில்) ஸித்த சாதனத்திலே- தத் பரர் ஆனவர்களுக்கு
நீள் நகரமது -துணித்தான சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று
பிராப்ய சாதன அவதியைப் ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் .
அதாவது –
நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திரு வாறன் விளை –
வாணனை ஆயிரம்தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம்-என்றும்
உள்ளித் தொழுமின் தொண்டீர் -என்று
நிரதிசய போக்யமான திரு வாறன் விளை யாகிற மகா நகரமே பிராப்யம்–
அங்கு எழுந்து அருளி இருக்கிற உஷா அநிருத்த கடகன் ஆனவனே அந்த பிராப்யத்துக்கு பிராபகம் –
இவ்வர்த்ததில் மாறாட்டம் இல்லை -ஆகையால் இவ் அர்த்தத்தில் ருசி உடையார் புத்தி பண்ணுங்கோள் என்று –
பிராப்யத்தினுடைய அவதி ததீய விஷயம் என்றும் –
பிராபகத்தினுடைய அவதி அர்ச்சாவதார ஸூலபன் என்றும் –
இவ்வர்த்தத்தை தம்முடைய உகப்பாலே வெளி இட்டு அருளுகிறார்- ஏழாம் பத்தில் என்கை.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply