திரு பல்லாண்டு- அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போலத் திரு மாலே ! நானும் உனக்குப் பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா வென்று நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே ! உன்னைப் பல்லாண்டு கூறுவனே –11
சுத்தன்-பவித்ரன்
நாமம் பல பரவி
இரண்டாலும் ஐஸ் வர்யார்திகள் உடன் பல்லாண்டு அருளுகிறார் இதில்
திருமாலே ! விளித்து அருளுகிறார்
வழக்கு- நியாயம்-தவறான வழக்குகள் ஒன்றும் இல்லை
அணி-திரு ஆபரணம்
சம்சாரத்துக்கு ஆபரணம்-திலதம் உலகுக்கு என்பர்
கோட்டியூர் -தேவர்கள் கோஷ்டியாக சேர்ந்த இடம் -திரு கோட்டியூர்
அபிமான துங்கன்-கர்வம் மிகுந்தவர் -செல்வ நம்பி போல்
நல் வகையால்-திரு மந்த்ரம் கொண்டு ஜபம் ஹோமம் செய்ய கூடாது
அர்த்தம் தான் முக்கியம்

அர்த்த ஞானம் வர வேண்டும் –
தீ வகை-ஜப ஹோமம் செய்வது
நமோ நாராயண என்று -அவனுக்கே உரியவன்
திரு நாமம் பலவும் சொல்லி
அனைத்து விதங்களிலும் தீர்த்தன்
திரு மந்த்ரம் வியாக்யானம் அஷ்ட ஸ்லோகி பராசர பட்டார் முதலில் அருளி
அருளி செயல் ரகஸ்யம் விவரணம் நாயனார் அருளி
நான்கு ஸ்லோஹம் திரு மந்த்ரத்துக்கு
பிரதமம் அ காரம் -வழக்கு அல்லாதவை அநேகம் இறே
ஆத்மா தேகம்–ம காரம் -மூன்றாவது எழுத்து அறிவாளி-தேகத்துக்கு அறிவு இல்லையே
தேகத்தில் ஆத்மா புத்தி செய்வது வழக்கு அல்ல -என்னுடைய தலை-என்=ஆத்மா
இதை அறிந்த பின் ச்வதந்த்ரன் என்று அனுசந்திக்கை வழக்கு இல்லை -ஆய பார்க்க வேண்டும்
ஆய –அடிமை-அவனுக்கு அறிந்து கொள்ள வேண்டும்
வேதாந்த தாத்பர்யம்-சார தமம்-அநுவாக – நாராயண காயத்ரி
அடிமை-யாருக்கு-தேவதாந்தரம்-உ காரம் -அவனுக்கே அடிமை ஏவ காரம் அவதாரணம் காட்டும்
பகவத் பஜன பலன் பிரயோஜனான்தரம் என்று இருக்கை வழக்கு இல்லை நாராயணா காட்டும்
உபாயாந்தரம் கூடாது நம பதம் காட்டும்
பிறர் நன் பொருள்-பிறர் =பரமாத்மா பொருள் அசித் நன் -ஜீவாத்மா
நீராய் நிலனாய் -உயிராய் உலகில் திரியும் கர்மம்- அனைத்து ஆத்மாவுக்கும் ஒரே ஆத்மா அவன்
சர்வாந்தர்யாமி -அறிந்து சேவித்தால் அனுபவம் அதிகம்
அவனே எல்லா உறவு முறையும் -ஆபாச பந்துகள் விட்டு நிருபாதிக பந்து அவன் ஒருவனே
பகவத் அனுபவத்தை மமேதம் என்று இருப்பது வழக்கு இல்லை அடுத்து
நம பதம் மூன்று இடங்களில் சேர்த்து -சொரூபம் -தன்மை /உபாயம்/கம்யம் அடைய வேண்டிய பலம் அறுதி இட்டு காட்டும்
ஓம் நம /நம நம /நாராயண நம
ச்வாதந்த்ர்யம் நிஜ ரஷனம் -அவனே -சந்தோஷம் அடைவதும் அவனே -ஹரே -ஒருவனுக்கே
நம பதம் முக்கியம்
சரம ஸ்லோஹம் ஏக பதம் போல்
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே

மங்களாசாசனம் செய்வதே வழக்கு பொங்கும் பரிவு
முகப்பிலே பல்லாண்டு அருளுனார்
வாடினேன் வாடினேன் -பொய் நின்ற ஞானமும் -இனி யாம் உறாமை சொல்ல வில்லையே
இவர் இருக்கும் இருப்பே வழக்கு
செல்வ நம்பி இடமும் தவறான வழக்கு இல்லை
அவ்வூரில் இருக்கும் அனைவரும் இப்படி தான்
அணி ஆபரணம்-அணி திரு அரங்கம்
ஊரிலேன் காணி இலேன் -சொல்லும் படியான ஊர் இல்லை
உகந்து அருளின தேசமே -ஆபரணம்-ஆழ்வார் வாயில் புகுந்து
அபிமான துங்கன்-கர்வம் மிக்கு-பகவத் சம்பந்தம்
இல்லை எனக்கு எதிர் போல் -கர்மத்தால் வந்த அகம்காரம் தள்ள தக்கது
தாசோஹம்-வைஷ்ணவ அபிமானம் பூர்ணம்
அத்வைதி அஹம்-ஸ்ரீ வைஷ்ணவர் தாசோஹம்
சதா சோஹம்-தாச தாசோஹம் -அடியார் அடியார்
கைங்கர்யம் அடியார்க்கு –
செல்வ நம்பி- உகந்து அருளின நிலங்களில் குறைவு நிறைவுகளில் –
ஸ்ரீ வைஷ்ணவர் தேக யாத்ரையில் குறைவு நிறைவுகள்-
ஸ்ரீ வைஷ்ணவ அபிமானம் ஸ்ரீ வைஷ்ணவ விஷய அபிமானம்
செல்வன்-சொரூப பிராப்ய ஐஸ் வர்யத்தால் குறைவு இன்றி
ஞான பக்தி வைராக்கியம் குறைவு இன்றி
லஷ்மணன் லஷ்மி சம்பனவ்-அடையாளம் கைங்கர்யமே இளைய பெருமாளுக்கு
அஹம் சர்வம் கரிஷ்யாமி என்று இருந்தார் செல்வ நம்பி ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும்
இன்று வந்த ஐஸ் வர்யார்த்தி -அவரை போல் -பழ அடியேன் வேற சொல்லி கொள்கிறான்
சாதுக்களுக்கு பிரகலாதன் உபமானம் சொல்வது போல் சொல்லி கொள்கிறார்
புதுசாக வந்தவன் பழ அடியேன் சொல்லலாமா
கர்மத்தால் வந்த அகம்காரம் போனால் தாஸ்யம் சர்வ ஆத்மாகளுக்கும்
ஓன்று கூடிதனாய்-அசித் சம்பந்தம் -பற்று அறுக்க -வினை பற்று அறுக்க -கூடினேன்-
பழ அடியேன் என்னும் அதே ஒழிக்க ஒழியாதது -நாயனார் கர்ம சம்பந்தம் வந்தேறி –
பகவத் பிரசாதத்தால் கழிக்க -சத்தை-தாச பூத -பூ சத்தாயாம் தாது -தாசத்வம் இல்லை என்றால் இருந்தும் பலன் இல்லை
அதவா -இயல்பாகவே ஏற்பட்ட -ஞானம் உடையாருக்கும் இன்று ஆசரிக்கும் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் -அன்பன்
இன்று வந்த நமக்கும் -இன்பும் அன்பும் முற்படுவது கோல மலர் பாவைக்கும் அன்பாகிய என் அன்பேயோ -பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்-ஈசன் பற்று இலன்-நித்யர் இடமும் இன்று ஆஸ்ர்யைக்கும் அவன் இடம் முற்றமும் நின்றனன்

பற்று இலையாய்- அவன் இடம் முற்றில் அடங்கே
சுக்ரீவன்-இன்று வந்தவன்-அவனை இழந்து பிராட்டி கிடைத்தால் என்ன பலன் என்கிறான்
என் கண் பாசம் வாய்த்த பரம் சுடர் சோதிக்கே -ஈசன் வானவர்க்கு ஸ்வாமி யாக இருக்கிறான்
மூத்தாள் இளையாள் போல்
ஈஸ்வர அபிப்ராயத்தால்
திரு மாலே -மிதுனத்தில் சேஷம்
மாலுக்கு சேஷம் அவள் வைஷ்ணவச்சி நாம் ஸ்ரீ வைஷ்ணவர்
பிரதி சம்பந்தி கைங்கர்யம் ஏற்று கொள்ளும் மிதுனம்
சென்றால் குடையாம்–திரு மால்கு அரவு-மிதுன சேஷத்வம் அங்கும்
அதவா -தேவரீருக்கு பிராட்டி நிரூபகம் போல் தாஸ்யம் நமக்கு நிரூபகம்
சொரூப நிரூபகம் தனி தன்மை
சத்யம் ஞானம் அனந்தம் பிரமம் -நிரூபிக்க பட்ட பிரமத்தில் இருக்கும் இவை
திரு இல்லா தேவரை தேவன் மின் தேவு
வையம் தகளியா வார் கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகா செய்ய சுடர் ஆழியான் உபய விபூதி
அடுத்தவர் நாராயணன்
அடுத்து பேய் ஆழ்வார் திரு கண்டேன் ஸ்ரீ ய பதித்வம் வேதாந்தா தத்வ சிந்தாம்
அது போல் நமக்கு சேஷத்வம்-ஞானம் ஆனந்தம் புற இதழ் சேஷத்வம் உள் இதழ் போல்
பூவுக்கு மணம் போல் சேஷத்வம் கொண்டே ஆத்மாவுக்கு ஏற்றம்
ஞான ஆனந்த அமலத்வாதிகள் சொரூப நிரூபகம்

பிரயோஜனந்த பரர்-சேஷி பக்கல்-வேறு பிரயோஜனம் -விலை மகள்
மற்ற தேவதை-தொழுவது விலை மகள் இடம் போவது போல்
உனக்கு பழ அடியேன்-
மாணிக்கம் அழுக்கில் இருக்கிறது -கழித்து பார்த்தால் உணரலாம்
உடம்பு சேஷத்வத்தை மறைத்து இருக்கிறது
அநந்ய பிரயோஜனன் ஆக்க வல்ல உனக்கு–எங்களையும் -சொரூபம் எப்படி பிறந்தது
வேதாந்த தாத்பர்யம்–சாரம் ஆழ்வார் பாசுரம்-
பிரணவம் திரு பல்லாண்டு
நம பதம் கண் நுண் சிறு தாம்பு
நாராயண திரு வாய் மொழி முதல்வன
மந்திர ரகச்யத்தால் வந்தது என்கிறார்மேல்

நல் வகையால்-ஜபம் ஹோமம்-இன்றி
அர்த்த அனுசந்தானமே வேண்டும்
அர்த்தம் விட்டு விட்டு ஜபம் செய்வது தீ வகை
திரு மந்த்ரம் அனைத்தையும் தரும்
நமோ நாராயணா சர்வமும் கொடுக்குமே
சர்வார்த்த சாதகம்
நாமம் பல பரவி-அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி என்றார் இறே ம்யுன்னம்
பரவி-கிரமம் இன்று எங்கனே சொல்லினும் கிட்டும்
பலனை எதிர் பார்த்து சொன்னால் தான் கிரமம் வேண்டும்
எங்கனே சொல்லினும் இன்பம் பயக்குமே
முன்பு மமேதம் என்று இருந்தவர் மங்கள சாசனாம் பண்ண யோக்யதை கிட்ட இது ஒன்றே போதும்
இசைவு ஒன்றே வேண்டும் -போதுமினே போதுவீர் இச்சையே போதும்
பல் வகையாலும் பவித்ரனே -பல விதத்திலும் சுத்தன்
பிரயோஜனான்தரம் -அதுக்கு அடிக்கடி நீர் நுமது வேர் முதல் மாய்த்து
-சேஷத்வம் -தேவாந்தர பஜனம் போக்கி வெள்ளுயிர் ஆக்க வல்ல அர்த்தம்
அன்றிக்கே
சொரூபம் ரூபம் குணம் விபூதி -பார்த்தாலும் நினைத்தாலும் -பவித்ரம் கிட்டுமே
இதுவும் பல் வகையாலும் பவித்ரன்
ரூப ஸ்ரீயை பார்த்த வாறே -போக்குமே
உன்னை -சர்வேஸ்வரன்
கூறுவனே -ஆழ்வாரே மூன்று வகையால்- பாடினார் என்ற அர்த்தம் -மூவர் முகத்தாலும் தானே அருளுகிறார்
ஏக வசனம்-முன்பு ஊருக்கு ஒருவன் போலவும் கொள்ளலாம் -கோஷ்டிக்கு ஒருவர் போலவும் கொள்ளலாம்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
.பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்  திரு அடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading