எந்தை தந்தை தந்தைதந்தை தம்மூத்தப்பன் எழ படி கால் தொடங்கி
வந்து வழி வழி ஆட் செய்கின்றோம் திரு வோனத் திரு விழவில்
அந்தி யம் போதில் அரி யுருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே –6
அழைத்த மூவரும் ஆழ்வார் இடம் வந்து சேர்ந்து திரு பல்லாண்டு பாடுகிறார்கள்
வந்து சேர்ந்ததை இதில் சொல்லி ஒன்பதாவது பாசுரத்தில் மங்களா சாசனம்
எழ ஆள் காலும் பழிப்பிலோம் அங்கு
எந்தை -எழ இங்கும்-எழ படி கால் தொடங்கி-
ஆள் செய்கின்றோம்-மண்ணுக்கும் மணத்துக்கும் கொண்மின் -அங்கு-
நடந்த சரித்ரம் பல்லாண்டு பாட -அது போல் நரசிம்க அவதாரத்துக்கு இங்கு பல்லாண்டு
அநந்ய பிரயோஜனர் -அருகில்-ரசம் -சேர்ந்து அனுபவிக்க -கூட்டத்துடன் சேர -மூன்று காரணம் அங்கு
இதில்-நெடு வாசி அநந்ய பிரயோஜனர்பிரயோஜனாந்த பரர் இருவருக்கும் -அறிந்து
-சௌசீல்யம் குணம் புரை அற கலந்து -அவர்ஜநீய சம்பந்தம்-விட முடியாத சம்பந்தம்
தயங்காமல் புகு வார் -தேங்காதே புகுவார் –
தங்கள் சொரூபத்திலும் -எந்தை-இருவர்குலம் /தந்தை-மூன்று குலம் /மூத்த அப்பன் -இருவர் குலம் –
சொரூப அனுரூபமான விருத்தி-ஆள் செய்கிறோம்/கடந்த அவதாரத்துக்கு மங்களாசாசனம் -அவர்கள் சொல்லி கொண்டு வர
அவர்களை கூட்டி கொள்கிறார்
தம் தாம் ஏற்றம் தாங்களே சொல்வது சாத்விகருக்கு உக்தமோ
ஆழ்வார் திரு உள்ளம் பயம் கெடுப்பதற்கு சொல்லி கொண்டு வருகிறார்கள்
வானர முதலிகள் பயம் போக திரு அடி-கருடன்-ஆகாசம் -நாகம் எதிரி-வேகம் விட நான் வேகமாக போவேன்-ஸ்ரீ ராமாயண ஸ்லோஹம் போல்
கூழ் ஆள் பட்டவரை எங்கள் குழுவில் புக ஒட்டோம் முன்பு
தானும் தகப்பனுமாக இருவர்
மொன்று தந்தை சொல்லி
தம்-மூன்றாவது தந்தை -அவருக்கு மூத்த அப்பன்-பாட்டனார்
திரள அருளி செய்தது போல் திரள சொல்லி கொண்டார்கள் இங்கும்
பிரித்து சொல்ல பலன்-குலம் மங்களாசாசனம் பண்ணாதவர் இல்லை என்று சொல்வதற்கு
தந்தை பிறப்பிக்க -வேதம் ஓதி தந்தவன் தான் சிறந்த தந்தை
ஆபாச பந்துகள் இல்லை
கல்வி பிறப்பை கொடுத்த சம்பந்தம் –
உடல் பிறப்புக்கு முக்யத்வம் கொடுக்கலாமா
உண்டு பண்ணின பிதா இல்லை வேதம் சொல்லி கொடுத்த பிதா
சகி வித்யா -சந்தானம் கொண்டாடுவதை போல்
பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்து குரு ரத்னாதி தான தான்யாதி சர்வ தர்மாம்ச சர்வ காமாம்ச அஷரம்
விட்டு விடு உலகம் அளந்த பொன் அடியே
-சர்வ -லோக விக்ராந்த சரணம் -எனபது
பகவத் சம்பந்தம் என்பதால் கொண்டாடலாம்
209 சூத்திரம்பிரயோஜனம் பகவத் சம்பந்தமும் அசம்பந்தமும் – ஸ்ரீ வசன பூஷணம் -பூர்வர் ஸ்ரீ சுக்திகள் கொண்டே அருளி செய்தது
விடாமல் வந்து கொண்டு -வித்யா சந்தானதிலும் பகவத் சம்பந்தம் -பிராமணியம் விலை செய்கிறது இழவுக்கு உறுப்பு ஆகும்
வேதையச்ய சர்வை -போர்வை பாகம் கர்ம /உத்தர பாகம் வேதாந்தம் –
அவனே அறிய படுகிறான்-
அங்கம் அர்த்த நிர்ணயம் பண்ணி -அடைவதற்கு பண்ணுகிறான்
பிராமணியம் அப் பொழுது தான் சித்திக்கும்
பகவத் ஹேது லாபம் வேதாந்தம்- அது இழவுக்கு உறுப்பு ஆகில்-
பாகவத சம்பந்தமும் வேண்டும் -எந்தை தந்தை-பாகவதர்-பகவத் சம்பந்தம் உண்டே
பலத்தை தருவது-பிரயோஜகம் –
அசம்பந்தம்- பாகவதர் உடன் சேராமல்-
அர்த்த கிரமம் பிரித்தும் திரளாகவும் சொல்லி
வந்து -மங்களாசாசனம் பண்ண வந்து
வழி வழி -விடாமல் செய்து கொண்டு இருக்கிறோம்
வேதம் ஓதாமல் மூன்று தலை முறை பிராமணியம் சித்திக்காது போல்
மங்களா சாசனம் பண்ணாத தலை முறை இருந்தால் அது போல்
சாஸ்திர வழியாகவும் -என்னலுமாம்
சிஷ்டாசார்யம்-அனுஷ்டித்து காட்டி -இருக்கிறார்கள்- இரண்டு வழி இதனால்
சாந்தி சாந்தி சாந்தி -பொலிக பொலிக பொலிக -பச்யேம சதச்யஸ் சதம் -சர்வான் தேவான்
தண்ட காரனியா ரிஷிகள்-திட விரதம்-திரு மேனி கண்டதும் -பல்லாண்டு அருளினது போல்
ஆள் செய்கை-திரு பல்லாண்டு பாடுகை
பந்தனை தீர பல்லாண்டு விருத்தி கைங்கர்யம் ஆழ்வாரே அருளுகிறார்
சந்தானம் ஏற்றம் சொல்லி இனி தங்கள் கைங்கர்யம்
திரு நஷத்ரம் சொல்லாத இடங்களுக்கும் லஷணம் திரு வோண திரு விழவில்
ஸ்ரோனா நஷத்ரம் விஷ்ணு -புஷ்பம் திட்டு துழாய் அம்சம் போல் திரு வோணம் கலந்து இருக்கும்
அத்ததின் பாத்தா நாள் தோன்றிய அச்சுதன்–மறைத்து சொல்கிறார் –
பிறந்த ஏழு திங்களில் சகடாசுரன் நாள்கலோர் நாள் ஐந்து திங்கள் அளவிலே -நாலா ஐந்தா ஒன்பதா தடுமாற வைத்தார்
ஸ்வாதி-மறைத்து இங்கும் சொல்கிறார்
திரு விழவு=திரு நாள்
ஒருத்தி மகனாய் -ஓர் இரவில் ஒருத்தி மகனாய்-ஆண்டாளும் மறைத்து
அஷ்டம கற்ப தீங்கு -பிரதி கூலன்–மக்கள் அருவரை கல்லிடை மோத-
அந்தியம் போதில்- தேவர்களுக்கு பலம் குறைவு அசுரர்களுக்கு பலம் அதிகம்
அரை சிவந்த ஆடை-அந்தி அம போதில் நிறதாடை-கழற்றாத ஆடை -கழற்றும் ஆடை
சாயம் காலமும் நிறத்தையும் பிரிக்க முடியாது
ஆடை நினைவு பின்னாட்டுகிறது
அங்கும் அந்தி -சேராதவற்றை சேர்த்த அவதாரம்
சர்வ வியாப்தி நிரூபிக்க
வரம் மீறாமல் அவதரித்தான் -ஈஸ்வரன்
யானை தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை யாலே
பக்த பரன்-பிரகலாதன் மீது அபசாரம்
யாதவ சிம்மம் ராகவ சிம்மம் ரென்கேச சிம்மம்
அரி உருவாகி -அந்தி அம் பொழுதில் -மடியில்- நகத்தால்
திரு மேனி சம்பந்தம் கிடைத்ததே –நாரசிம்க வகுபு ஸ்ரீ மான்
நரம் கலந்த சிங்கமாய் -சக்கரை சேர்த்த பாலாய் -அழகியான் தானே அரி உருவம் தானே
சௌந்தர்ய லாவண்ய -சமுதாய சோபை -அதி மனோகர –
பல கூறு செய்தான்-உன்னை சிந்தையினால் இகழ்ந்த
கழுத்துக்கு மேல் அமையும் கை கொள்ள வாயால் சொன்னால் போதும்
கை விட கழுத்துக்கு கீழ் பார்ப்பான் -உள்ளே யாவது நினைத்து கொண்டு இருக்கிறானா பார்த்தானாம்
அழிய செய்தது -தீன்குநினைப்பார் பின்புள்ளார் பயம் கொள்ளும் படி
பந்தனை தீர -அநுக்கம்-குழந்தை நடுக்கம்-வியாதி போல் -உடலை கிண்டி
திரு அவதரித்த திவசம்-அன்றே -கொன்றதால்-பரியனாக வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அமலன்-அரங்கத்து அமலன்-தூணுக்கு நடுவில் தோன்றிய குற்றம் திரு மணத் தூண் நடுவில் தோன்றியதால் குற்றம் இல்லை
அபதானம் திரு விளையாடல் சேஷ்டிதம் –
பல்லாண்டு -பாடி நடுக்கம் தீர -அனுகூலர் வாயால் ஒரு கால் ஒரு தடவை சொல்ல
கால தத்வம் உள்ள அளவும் பாடுவதே கைங்கர்யம்
ஆதி கூறுதும்-கூறுவனே-அடி வரவும் முடிவும் சேர்ந்து சொல்வார்
என்று பாடுதுமே முடியும் இதில்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply