இன் உயிர் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என் உயிர் நோவ மிழ ற்றேன்மின் குயில் பேடை காள்
என் உயிர் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்
என் உயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ ?–9-5-1
அவனை நினைக்கவே பிர பஞ்சம்
உலக பொருள் எல்லாம் அவனை நினைவு படுத்துமே
மிருதங்கம் மண் எடுக்கும் இடம்-அவன் நினைவு வர அங்கே உருண்ட
பகவத் சம்பந்தம்
மிதுனத்தில் கூவி கொண்டு -மிழற்றி
விச்லேஷம் அதிக படுத்தி-
அவனை வர கூவுங்களே
என் உயிர் போன்றவனே
திர்யக் புல்/மனிசர் அன்னம்-தேவர் அமுதம்-இவளுக்கு உயிர்
கூவிஎன் உயிர் அவனுக்கு கொடுக்க வேண்டுமே
உங்களை கூவ சொல்ல இதனை பாடு பட வேண்டுமா
இத்தனை வேண்டுவது அது அன்றோ ! அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து எங்குதிர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனையாம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2
அன்றில்- மிதுனம் இங்கும்
கரைந்து பிரேமை உடம் ஏங்க
அவன் ஒருவன் இடமும் மெய்யன் இல்லை
ஏலா பொய்கை உரைப்பான் -ஆண்டாள் இடம் பட்டம்
கன்று இருக்கா உறி பார்த்தான்
யமுனை கரையில்-தாயார் வஸ்த்ரம்-உடுத்தி கொண்டு-
ஸ்ரீ ரெங்க நாயகி-உறையூர் நாச்சியார்-மோதிரம் எங்கே -தேட போனேன்
உறையூரை கேட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை தேவர்கள் சாஷி-
பாம்பு குடத்தில் கை விட்டுசபதம்-பாம்பு அணை பள்ளி
காய்சின இரும்பை பிடித்து சத்யம்
ஆழி கொண்டு இருக்கிறீரே
அவன் கையதே எனது ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்தாடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினை யாட்டியேன் உயிர் இங்கு உண்டோ ?
எவன் சொல்லி நிற்றும் ? நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே –9-5-3
பிராண வல்லபன்
எவம்-பாட பேதம் ஏதாவது சொல்லி கொண்டு இருகிறீர்
ஆசை மட்டும் உண்டு- உயிர் தானே உயிர் காவலன் இடம் போனதே
யார் சொல்லி நிறுத்த முடியும்
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன்மின் நீரும் சேவலும் கோழி காள் !
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே –9-5-4
கூவல் கேட்டும் வெளி பட விலை
வெளிப் பட்டால் திரு வாய் மொழி முடிந்து விடுமே
விரக தாபத்தால் பாசுரம் கக்கி விடுவாள்
மேல் சுரம் கொண்டு கூவ மயிலை சொல்கிறார்
வாக்கு கண்ணா சொல்ல கை கால் தொண்டு செய்ய -உயிரும் உடலும் அந்தரத்தில் இருக்க
மற்றவை அவன் இடம் போய் சேர்ந்தன
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள் !
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழு உலகும் கொண்ட
நம் திரு மார்பன் நம் ஆவி யுண்ண நன்கு எண்ணினான் –9-5-5
பூவை பார்த்து அடுத்து
இந்திர ஜாலம் போல் அனைத்தையும் படைத்து
நம் திரு மார்பன்-ஆழ்வார் அபிமானம் உண்டு
நம் ஆவி உண்ண சங்கல்பித்தான்
என் தோழி என்பதால் உனக்கும் பேரு கிட்டும்
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே !
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசும் சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான் –9-5-6
கிளி பிள்ளாய்-அடுத்து
இனிமை குரல்
காகுத்தன் உயிர் ஆனவன் -பெருமாள்-
உன் வாய் போல் சிவந்து
கண்ணும் கையும் காலும் சிவந்து
அவனை சேர்ந்தவள் நீயும் என்னை சேர்ந்தவள் இல்லை
கூடி விட்டு நீங்கி நான் என்னை மறந்து
கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரை கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லொடு மின்னு மேகக் குழாம் காள் !
காட்டேன் மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே –9-5-7
அடுத்து மேகங்கள் –கண்ணன் போல்
வில்- சார்ங்கம் /மின்னல் கொடி போல் பிராட்டி /கருணை வர்ஷிகிறான்
மின்னும் உருவை காட்டாதே
மின் நும் -பன்மையில்
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தே ற்கு நீர்
குயில் பைதல்காள் !கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டி னீர்பண்புடை யீரே !–9-5-8
வண்ணம் கொல்கிறது உயிர் காலன்
நொந்து சொல்கிறேன்-
குயில்பிள்ளைகள்
கண்ணா நாமமே சொல்லி
சுகம் -அவன் இருக்கும் பொழுது- விரகத்தில் இதை சொல்லி கொல்கிறீர்
வர வில்லையே நெஞ்சு வெடிக்கும்
பண்புடை வண்டோடு தும்பிகாள் ! பண மிழற்றேன்மின்
புண் புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தன் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி யுண்டு எழ நண்ணினான் –9-5-9
பண்புடை வண்டு-தும்பி வண்டு இனம்
புண்ணில் வேல் கொண்டு குத்துவது போல் ரீங்காரம்
விசாலமான கண்
எழ எண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நன் நாரைக் குழாம் காள் ! பயின்று என் இனி !
இழை நல்ல வாக்கையும் பையவே புயக் கற்றது –
தழை நல்ல வின்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே –9-5-10
எழுந்து பறந்து போவது போல் பரம பதம் போக போகிறேன்-
நாரை- கொக்கு ஜாதி
சரீரம் புகுவது அற்றது
விரகத்தில் இருக்கிறது
பெருமாள்-கௌசல்யை பட்ட கஷ்டம் யாரும் பட கூடாது
புத்திர சோகம்
கிருஷ்ண விரகம்
தான் தான் முடிய நினைப்பார் நாடு வாழ்க என்று சொல்கிறார்-ஆழ வந்தார் நிர்வாகம்
நான் பட்ட பாடு நாடு பட வேண்டாம்-எம்பெருமானார்
என் விரகத்தால் லோகம் கஷ்டம் பட கூடாது என்பதால் உயிர் வைத்து கொண்டு இருக்கிறேன்-பட்டர்
ரசிக பேதம்
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்கு
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனை
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே –9-5-11
சேவிப்பவர்-பலன் பாசுரம்- -பிரேமை பக்தியால் மூன்று உலகும் உருகும்
இன் உயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் பின்னை யவன்
தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும் –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –85
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply