திருவாய்மொழி-2-5-அம்தாமத்து அன்பு செய்து – ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

அவன் தன் திவ்ய ஆயுதங்கள் திவ்ய ஆபரணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் உடன் ஆழ்வார் இடம் கலக்க ,
அதனால் இன்பம் உற்று அருளிய திரு வாய் மொழி
அம்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாள் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள
செம் தாமரை தடம் கண் செம் கனி வாய் செம்கமலம்
செந்தாமரை அடிக்கள் செம் பொன் திரு உடம்பே –2-5-1
ஆசை தீர விரகம் தீர கலந்தான்
பரம பதத்தில் அனைவர் இடம் காட்டிய அன்பை ஆழ்வார் இடம்
உள -கலந்த பின்பு தான் இருக்கின்றன
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரகம் /திவ்ய ஆயுதம்/திவ்ய ஆபரணம்/திவ்ய திரு முடி /முத்து ஹாரம் உள
சிரிப்பும் குழல் ஊதும் அழகும் -பிராண வல்லபன்-
உள –ஒவ் ஒன்றிலும் சேர்த்து அர்த்தம்
செம் கனி வாய் உள செம் தாமரை அடிகள் உள
திரு வுடம்பு வான் சுடர் செம்தாமரை கண் கை கமலம்
திரு விடமே மார்பம் அயன் இடமே கொப்பூழ்
ஒரு விடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ !
ஒரு விடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2
சொர்ண ஜோதி போன்ற திரு அடி -நம பங்கஜ நேத்ரம் —
திரு மார்பில் பிராட்டி /கொப்பூழ் நான்முகன் -உடம்பில் ருத்ரன்
தனக்கு ஒன்றும் இன்றி
ஒரு இடம் இன்றி என்னுள் கலந்தான் -சர்வேச்வரி ஆஸ்ரிதர் உடன் கலந்து அருளினது போல் இன்றி சமஸ்த பிரதேசத்தாலும் கலந்து அருளினான்
என்னுள் கலந்தவன் செம்கனி வாய் செம்கமலம்
மின்னும் சுடர் மலைக்கு கண் பாதம் கை கமலம்
மன்னு முழு வே ழ் உலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாதது எப் பொருளும் தான் இலையே –2-5-3
என் உள்ளத்தில் கலந்து தானே ஆகி இருக்கிறவன்- செம் கனி வாய் –
தூணிலும் கலந்து -நாம் சொல்லும் சொல்லிலும் கலந்து
திரு உருவத்துடன் கலந்து
கண்ணும் கண்ணும் கலந்து /கையும் கையும் /வயிற்றில் உள்ள சர்வம் விஷ்ணு மயம் ஜகத் -என்னையே ஆக்கினான்
எப் பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும்
அப் பொழுதை தாமரை பூ கண் பாதம்  கை கமலம்
எப் பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி தொறும்
அப் பொழுதைக்கு அப் பொழுது என் ஆரா அமுதமே –2-5-4
எப் பொருளும் தானாய்-எதை பார்த்தாலும் அவனே தான்
மரகத மலை போல் இருக்கிறான்
அப் பொழுது மலர்ந்த தாமரை போல் கண் பாதம் கை
வஸ்து பரிசெதம் இன்றி கால பர்செதம் இன்றி
பிரிக்க முடியாமல் கலந்தான்
ஊழி தோறும் –எப் பொழுதும் -நச புன ஆவர்ததே —
பிரிந்து தாபம் சேர்ந்து ஆனந்தம்-இது பிரம விஷயம் ஆரா அமுதம்
போதும் என்று தோன்றாமல்–அலுப்பு இன்றி–கோபிகள் போல்-
அந்தமில் பேர் இன்பம் போர்ன ஆனந்தம்- சதைக பிரிய தர்சனம்
பார்க்க பார்க்க பிரியம் வளர சதா பிரிய தர்சனம் இங்கேயே
ஆரா அமுதம்-
ஆரா அமுதமாய் அல்லாவி வுள் கலந்த
காரார் கரு முகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம் பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீள் முடி நாண் பின்னும் இல்லை பலவே –2-5-5
மரவடி -சூடி கொண்டாலும் கந்தர்வன் போல் –
பூஷன பூஷணம் -அபரனங்களுக்கு அழகு கூட்டும் பெருமாள்
இவை நேராகாது அவனுக்கு
முடி சோதியாய் உன் முக சோதி யாய் மலர்ந ததுவோ -இவி நேரா நிகர் இல்லை
பல பலவே யாபரணம் பேரும் பல பலவே
பல பலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பல பல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம்
பல பலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ!–2-5-6
அநந்தம்-ஆபரணம் -அநந்த வியாபாரம்-
பாம்பணை மேல் பால் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்கா ஏறு உடன் எழ செற்றதுவும்
தேம்பணைய சோலை மரா மரம் எழ எய்ததுவும்
பூம் பிணைய தன் துழாய்ப் பொன் முடியம் போரேறே  –2-5-7
ரிஷபம் போன்ற -காளை–செய்த பள்ளி அமர்ந்ததுவும் –
அயர்வறும் அமரர்களாய் இருந்து -பார் கடல் இருந்ததும் -அவதாரம் -எல்லாம் எனக்காகா கிடீர் என்கிறார்
அனுபவித்து உருக ஆழ்வார்
தன் அருமை தெரியாமல் மக்கள் இருக்க -தான் அவதார பயன் அடைந்ததை ஆழ்வாரை பெற்றதும் பெற்றான்
பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடி ஓன்று இல்லாத தன் துழாய் மாலை யனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நாண் சொல்லுவது என் ? சொல்லீரே –2-5-8
பின் வாங்காத காளை-ஏறு-ரிஷபம் -உத்திஷ்ட நரசார்தூல -காம்பீரம் இவன் இடம் வந்த போட்ட பிச்சை
மேன்மை சொல்லி முடியாத -முடிவு இல்லாத சர்வ சமாத் பரன்
நானோ நீசரில் நீசன்  -இதிலும் முடிவு காண முடியாது
சேர்ந்தோமே –தயா தான் சேர்த்து வைத்தது பக்தி இல்லை-
அதை சொல்லி முடியுமா சொல் முடிவு காண முடியாது
அனுபவித்து தான் உணர முடியும்
ஆனந்தம் நானே நினைத்து கொண்டே இருக்க முடியும்
சொல்லி புரிய வைக்க முடியாது
சொல்லீர் என் அம்மானை என் ஆவி ஆவி அதனை
எல்லையில் சீர் என் கரு மாணிக்க சுடரை
நல்ல வமுதம் பெறற்கு அரிய வீடுமாய்
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9
ஆத்மாவுக்கும் ஆத்மா
அநந்த கீர்த்தி உடையவன்
நீல மாணிக்க -கரிய மாணிக்கம்
நல்ல உண்மையான அமிர்தம் இவனே
பரம பதமும் தானாய்
சர்வ கந்தன் சர்வ ரசன்
சர்வ பொருள் போல் இல்லாதவன்
சப்தத்துக்கும் ஆண் பால் பெண் பால் உண்டு
ஜலம்-நகு-அலி சப்தம் –
சர்வ சப்த வாக்கியம் ஆனவன்
தேவதா ஸ்திரீ/தேவகா -புல்லிங்கம்  தெய்வம் நகு
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10
எல்லா சொல்லும்  எல்லா பொருளும் இல்லாதவன் -தனி ஒருவன்
காண முடியாது -உளன் அல்லன் இல்லை அல்லன்
சுத்த வேதாந்தம் சர்வ விலஷணம்
ஆண் அல்ல பெண் அல்ல அல்லா அலியும் அல்ல —
அல்லன் -புருஷோத்தமன்
நாம் அறிந்த புருஷன் போல் இல்லை-
ஆதாரமாக இருப்பதால் உளன்

உபாசனை உருவாக -பேணும் உருவாகும்
அல்லனுமாம்
கோன் -அணுவுக்கு அணு
கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர் சடகோபன்
கூறின வந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே -2-5-11
வாசா மனோ கோசரம் –சொல்வது கால ஷேபதுக்கு தான்-
இதுவே பலம் இனிமை-
குட கூத்து அம்மான்-
இவ்வளவும் சொல்லி இதில் முடிக்கிறார்
கூறுதலே வேலை ஆழ்வாருக்கு
வாசு தேவ சர்வம் துர் லபம்
சங்கிலி கோத்தார் போல் அந்தாதி ஆயிரமும்
வைகுந்தம் கூடுவது பலம்-
உறவு நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
பலன் அள்ளி கொடுப்பார் ஆழ்வார் —
அந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன்
வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் –சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திரு வடிக்கே நெஞ்சமே !
வாய்ந்த வன்பை நாள் தோறும் வை –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –15

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading