திருவாய்மொழி-2-4-ஆடி ஆடி அகம் கரைந்து – ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடி பாடி கண்ணீர் மல்கி –எங்கும்
நாடி நாடி நரசிங்கா ! என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே–2-4-1
தாய் படும் வருத்தம்-தலைவி படும் வருத்தம் விட அதிகம்-அந்த நிலை
நெற்றி அழகு-பள பளப்பு-அஷ்டமி சந்தரன் வாள் போல்
பிரேமை பக்தியால் ஆடி ஆடி பாடிபாடி-
உள்ளம் கரைந்து கண்ணீர் மல்கி-
சர்வத்யத்தில் இருப்பதால் எங்கும் –
வாடி-தர்சனம் கிட்டாததால்-
அவரை கூட்டி வர சாமர்த்தியம் இல்லையே
வாள் நுதல் இம் மட வரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் ! உம்மைக்
காண நீர் இரக்கம் இலீரே–2-4-2
மடம்-மோகம்
உன்னை காணும் ஆசையால் நைந்து
வாணாசுரன் யுத்தம் பெண்ணுக்கு தானே-
வகுளாபரண பராங்குச நாயகி —
இரக்க மனத்தோடு எரி அணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம்  எழீர் இதற்க்கு என் செய்கேன் ?
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3
நெருப்பில் அனைத்து இருக்கும் மெழுகு போல் உள்ளம் உருக
பெண்ணை ரஷிக்க அணை கட்டி அனைத்தும் பண்ணி –
இலங்கை செற்றவனே ! என்னும் பின்னும்
வலம் கொள் புள் ளுயர்த்தாய் !என்னும் உள்ளம்
மலங்க வெவ் வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்று இவளே –2-4-4
சேது பந்தம்-அணை கட்டி வரணும்
சக்தி உள்ள கருடன் இருக்க வரலாமே -பறந்து வர கூடாதா -கலங்கி பெரு மூச்சு விட்டு கலங்கி
கண்ணீர் கலங்கி-திசை நோக்கி தொழுவது ஒன்றே உபாயம்-
இவள் இராப் பகல் வாய் வெ ரீ இ தன்
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தன் அம் துழாய் கொடீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5
வாய் வெறிவி கொண்டே -பிரலாபம் கொண்டே இருக்க
துளசி தாம மாலை கூட கிட்ட வில்லையே
வண்டு ஆக இருந்தாலாவது அங்கு மொய்த்து கொண்டு இருப்பேனே
தகவல் ஒன்றும் இல்லையே
ஹனுமான் கணை ஆழி கொடுத்தது போலும் ஒன்றும் இல்லையே
தகவுடையவனே ! என்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் எனது
அக உயிர் க்கு அமுதே ! என்னும் உள்ளம்
உக உருகி நின்று உள்ளுளே –2-4-6
மறந்தும் கருணை இல்லை என்று சொல்லாமல்- நீர் நல்ல ஸ்வாபம் என்கிறாள்
மிகவும் விருப்பம் உள்ளவர் என்கிறாள்
அக உயிர் க்கு அமுதம் என்கிறாள்
உள்ளம் உருகி உள்ளத்தில் கொண்டு இருக்கிறாள்
உள்ளுள் ஆவி உலர்ந்து உலர்ந்து என
வள்ளலே ! கண்ணனே ! என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் ! என்னும் என
கள்வி தான் பட்ட வஞ்சனையே !  2-4-7
வறண்டு போன உள்ளம்-
இருந்தாலும் உன் திரு நாமம் -வள்ளலே –
இடம் கூட கருகும் படி உலர்ந்து
நீயோ வெள்ள நீரில் கிடகிராய்
சொல்லி தாகம் தீர்த்து கொண்டு-
கள்வி- ஒன்றும் சொல்லாமல்- தோழி மூலம் அறிந்தேன் -பிரேமை மறைப்பவள்-
பிரிகையால் பரிதவித்து தாகம் பட்டவர் தண்ணீர் தண்ணீர் என்னுமா போல் வள்ளலே என்கிறாள் –
வஞ்சனே ! என்னும் கை தொழும் தன
நெஞ்சம் வேவ நெடிது உயர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் ! உம்மை
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8
மறைந்து நிற்கும் வஞ்சனே
கஞ்சனை மிடுக்கு உள்ளவன்-கஞ்சன் வயற்றில் நெருப்பு என்று நின்ற வஞ்சனே
யுவா நீ – -பேதை இவள் –உன்னையே சரணம் என்கிறாள் இவள் இடமும் வந்ஞ்சமா
பட்ட போது எழு போது அறியாள் விரை
மட்டலர் தன் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேநியீர் ! நுமது
இட்டம் என் கொல் ? இவ் ஏழைக்கே –2-4-9
அஸ்தமித்த போது
எதுவும் அறியாமல்
உன் துளசி ஒன்றே லஷ்யம்
சக்கரம் தரித்து -அசுரரை கொன்று -பிரிவு ஒன்றால் இவளை கொன்று
என் நினைந்து இருந்தாய்-திரு இடந்தை/திரு அரங்கம்-உன் திரு உள்ளம் இஷ்டம் என்ன
ஏழை பேதை இராப் பகல் தன
கேழில் ஒண் கண்ண நீர் கொண்டாள் கிழார்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர்? இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன் மினே 2-4-10
ஒப்பு இல்லாத இவள்-
அபலை
கண்ண நீர் கண்களில் இறைக்கும்
இலங்கை அரக்கர் வாழ்வை கெடுத்தீரே
இவள் மான் பார்வை நோக்கம் பார்த்து வாட்டாமல் இருக்க கூடாதா
வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வன் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப் பத்தால் அடி
சூட்டலாகும் அந் தாமமே –2-4-11
அவனுக்கு வாட்டம் இல்லை
பக்தி கொடுக்க தான் நமக்கு வாட்டம் கொடுக்கிறான்
இசை கூட்டி பாட ஆழ்வாருக்கு ஆசை
இந்த பாசுரமே மாலை
அவன் திரு துழாய் மாலை கிடைக்கும்
ஆடி மகிழ் வானில் அடியார் குழாம் களுடன்
கூடி இன்பம் எய்தா குறை யதனால் –வாடி மிக
அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து
துன்புற்றான் மாறன் அந்தோ –திரு வாய் மொழி நூறு அந்தாதி –14
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading