பிறவி துயர் அற ஞானத்துள் நின்று
துறவி சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அற வனை ஆழிப் படை அந்தணனை
மறவியை இன்றி மனத்து வைப்பாரே 1-7-1
பிறவி துயர் நீங்க -கார்ப வாசமே துக்கம் தானே
ஆத்ம ஞானம் வேண்டும் இதை நீக்க –
அன்ன பிராண மனோ மய ஆத்ம ஞானம்
துயர் வந்தாலும் பொருள் படுத்த மாட்டான்
உடம்பு நான்/விகாரம் அறிந்து -உயிர்-எண்ணம் இல்லையே-
மனம் புத்தி இல்லை அறிந்து உண்மையான ஆத்ம ஞானம் அறிவது சுடர் விளக்கு -கைவல்யம் சம்சார துக்கம் அற்று போக
மேல் ஆனந்தம் பேர் இன்பம் பெற
துறவி-வேதம் அத்யாயயனம் பண்ணி அறிந்து
மேல் பரமாத்மா ஞானம் போக வேண்டும் –சம்சார வியாதி நீங்கி -திரு கல்யாணம் அவன் உடன் செய்வதே சுடர் விளக்கு
அவனுக்கு ஆள் படுத்தி –ஏஷ ஜீவன் ஆனந்தியதி –தன்னை கிட்டியவரை ஆனந்திப்பிது மோஷ தசையிலும் ஆனந்தம் கொடுப்பான்
போக ரூபமாய் இருக்கும் இது -இந்த்ரிய சுகம் துக்க ரூபமாய் இருக்கும்
இந்த ஆனந்தம் எல்லை இன்றி-அவனை போல் இருக்கும் இங்கு என்று கேவலரை நிந்திகிறார்
கைவல்யம் நிஷ்டரை
அவன் -மறக்காமல்-மறவியை-இன்றி- நெஞ்சில் சேஷ சயனன் -திரு அரங்கத்து அந்தணனை வைப்பதே இது கிட்டும்
வைப்பாம் மருந்தாம் அடியரை வல் வினைத்
துப்பாம் புலன் ஐந்தும் துஞ்ச கொடான் அவன்
எப்பால் யவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து
அப்பால் அவன் எங்கள் ஆயர் கொழுந்தே 1-7-2
வைப்பு -நிதி
வளரும் நிதி–புலன்கள் வாசனை தீர்த்து -மனுஷ்ய ஆனந்தம்–அகிஞ்சனன்-பேராசை இன்றி–மனுஷ்ய கந்தர்வன் தேவ கந்தர்வ பித்ரு தர்ம தேவதை -இந்த்ராதி விராட் புருஷ அவயவம் -பிருகஸ்பதி-பிரஜாபதி சதுர முக பிரமன்–உயர்த்தி உயர்த்தி போக-பர வாசுதேவ ஆனந்தம் -நலம் எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து –அப்பால் அவன்-எங்கள் ஆயர் கொழுந்தே –கிடைத்தால் எங்கள்-
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை வுண்ணும்
மாயப் பிரானை என் மாணிக்க சோதியை
தூய அமுதை பருகி பருகி என்
மாயப் பிறவி மயர்வு அருத்தேனே –1-7-3
கண்ணன்-ஆய்ச்சி மாரால் புடை உண்டு–அஞ்சி நோக்கும் அந் நோக்கும்–பாசாங்கு–மாயம்-மயக்கும் வித்தை
மயக்கமே தெளிவு இவன் விஷயத்தில்-மாய பிறவி-ஜன்மம் கர்ம துக்கம் அறுத்து -தூய அமுதை பருகி பருகி-
சளைக்காமல்-பகவத் குணா அமிர்தம் -மனோ வியாதி போக்க ஆனந்தத்தில் முழுக்க வேண்டும் –கல்யாண குணங்களை பருக பருக –
மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர் வினையே தரும் ஒண் சுடர் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ ? 1-7-4
அக்ஞானம் இன்றி என் மனத்தில் மண்டி-
பரமம் சாம்யம் கொடுப்பான்
அயர்வு அற்ற நித்யருக்கு ஆதி கொழுந்து தனி முதல்வன்
அவன் பிரயத்தனம் பெற்று என்னை பெற
மேலே விழுந்து வலை வீசி பிடித்து
என்னை இசையும் படி பண்ணினவன் ஜிதந்தே -சொல்ல வேண்டும்
இனிமேல் விடுவேனோ
விடுவேனோ ? என் விளக்கை என் ஆவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணின் உள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே -1-7-5
ஞான சொரூபனாய் இருந்து -உயிர் ஆக இருந்து நடுவே-அவகாசம் பார்த்து சமயம் பார்த்து வந்து உய்ய கொள்கின்ற நாதன்
பல கார்யம் பார்த்து-சமய பிரதீஷை-பார்த்து—கூட கூட்டி கொள்ள –குழல் ஓசை கேட்டதும் அனைத்தையும் விட்ட கோபிகள்-
சர்வ தரமான் பரித்யஜ்ய-பகவத் கைங்கர்யம் ஒன்றே -நாதன்-இனி அநாதை யாரும் இல்லை–சனாதனன் ஆகி விட்டும்-தொட்டு தொட்டு பேச வருவான்-பரம பவித்ரம் தொடுவே செய்து–இள ஆய்ச்சியர் -சேஷ்ட்டை லீலை செய்து-பாலன் என்று தாவி அணைத்தேன் வேங்கட கவி–வாயில் முத்தம் தந்தாண்டி மாலை இட்டவன் போல்-விடவே செய்து விழிக்கும் பிரான்
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மரா மரம் எய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ ? 1-7-6
விரிந்து மலர்ந்த துளசி கொண்டையில் சாத்தி கொண்டு–ஓடி கொண்டு இருந்த என்னை-தன் பால் ஆதாரம் -சிந்தையுள் புகுந்து -பெருக வைத்த அழகன்-
என்னுள் இரானஎனில் பின்னை யான் ஒட்டுவேனோ
யான் ஒட்டி என்னுள் இருத்துவன் ஒன்றிலன்
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல்
வான் ஒட்டுமோ ? இனி என்னை நெகிழ்கவே 1-7-7
நான் ஒட்டாத பொழுது விலகி போக கடாஷித்து தான் ஒட்டி வந்தான்
அனுக்ரகம் அவனை விஞ்சி இருகிறதே
அபரிமித அனுக்ரகம் செய்கிறான்
மேல் விழுந்து பிடிக்கிறான்
தாய் குழந்தைக்கு அன்னம் ஊட்டுவது போல் பரிவுடன் -என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஓடுகிற குழந்தையை பிடித்து மடியில் இருத்தி-கெஞ்சி-சரீரம் பற்று நீக்கி ஆத்மா கலந்து- என் சரீரத்திலும் அபிமானம் கொண்டு பக்த பராதீனன்-
இயல்வான்-இயல்பாக இந்த ஸ்வாபம்–இவ்வளவு கிருபைக்கு பாத்ரம் ஆனா பிறகு அவனை நினைக்காதவன் தீனன் தரித்திரன்
இனி நான் குறைத்து கொள்ள மாட்டேன்-திருப்தி உடன் இருப்பேன்
என்னை நெகிழ்கிலும் என்னுடைய நல நெஞ்சம்
தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை
முன்னை அமரர் முழு முதலானே 1-7-8
அவன் அருமை அறிந்து-விலகினால்-தான் பண்ணின கிருபை போதாது என்று நினைத்து கொள்கிறானாம்
தானும் நீங்க மாட்டான் –குற்றம் இருந்தாலும் –தனக்கு செய்த அபசாரம்-உபசாரம் என்று நினைத்து –
திருந்தினவர்களாக பார்கிறான்-அண்டினவர் குற்றம் இருந்தாலும் விட முடியாதவன்-சர்வ சக்தன்-
யதிவா ராவண சுயம்-ராவணன் வந்தால் தானே அவனுக்கு பெருமை
அவனை பரிஷை பண்ணி பெண்ணை கும்பகன் சுக்ரீவன் போல்வார்-பணிந்து இவனும் செய்கிறான்
நப்பின்னைக்காகா -சீதைக்காகா -அது போல் நம் எல்லாரையும் ஆள் கொள்கிறான்
நித்யர் போல் இடையருக்கும் ஆனானே
அமரர் முழு முதல் ஆகிய வாதியை
அமரர்க்கு ஈந்த ஆயர் கொழுந்தை
அமர அழும்ப துழாவி என் ஆவி
அமரத் தழுவிற்று இனி அகலுமோ ? 1-7-9
நித்யர் போல்வாருக்கு ஆதி /தேவர்களுக்கு அமிர்தம் கொடுத்து /ஆயர் கொழுந்தை-கண்ணன்-
அமர அழுந்த துலாவி-சாத்விக சாத்விக -ஆசை தீர ஆர அமர தழுவி-என் ஆவி அமர தழுவிற்று
ஆவியே அமரும் படி கலந்த பின்பு இனி சம்சாரத்தில் புகுமோ
அகலில் அகலும் அணுகில் அணுகும்
புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10
சிங்க பிரான் பிரகலாதனை பிடிக்க விடுவானோ-
என் ஸ்வாபம் அவன் ஸ்வாபம் இரண்டாலும் விட மாட்டோம்-
பொதுவான ஸ்வாபம் அகலில் அகலும் அணுகில் அணுகும் -சம புத்தி தான் -விஷம புத்தி இல்லை -ரிஷிகளுக்கு பரிந்து அசுரர் முடித்தான்
வேண்டும் என்றால் தன்னை கொடுக்கிறான் அர்ஜுனன் இவனை பெற்று வென்றான் துரி யோதனன் சேனை பெற்று இழந்தான் –அணுகினால் அணுகுவான்
விசேஷ கருணையால்-
ஆரா அமுதன் எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -பேசினாரே திரு மழிசை ஆழ்வாருக்கு
சரத்தை பொறுத்து
நாம தேவர் பாண்டு ரெங்கனுக்கு ஊட்டி விட உண்கிறான்
மம பிராணா பாண்டவர்
ஆழ்வார் -அவனை பற்றி பாடி கொண்டே இருப்பேன்-பாடி இளைப்பிலம்
பரிஷித் எப் பொழுதும் கேட்க விரும்பி இருந்தது போல்
குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப் பத்து
உடைந்து நோய்களை ஒடுவிக்குமே 1-7-11
வண்டு குடைந்து தேன் உண்ணும்-துழாய் முடியானை அடைந்தார் ஆழ்வார்
தென் குருகூர்-அங்கே நோக்கி சேவிக்க வேண்டும் —
கோத்து அருளிய சொல் மாலை
நோய்களை உடைந்து ஒடுவிக்கும்
பலன் சொல்லி நியமிக்கிறார்
பிறவி அற்று நீள் விசும்பில் பேர் இன்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் –அறவினியன்
பற்றும் அவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ! ஓடு -திருவாய் மொழி நூற்று அந்தாதி -7
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
April 4, 2012 at 5:29 am |
வினையறுக்க வந்ததே இப்பிறவி — வினைகள் பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம் என மூன்று வகை படும்.பிறப்போடு வருவது பிராரத்துவம், விதிக்கப்பட்டு வந்து பிறக்கிறோம்.
நல்லோரை சார்ந்து ஒழுக்கமாக வாழ்ந்து சத்தியமாக நேர்மையாக வாழ்ந்தால் இறைவன் அருளால் சற்குரு கிடைக்கும்.
http://sagakalvi.blogspot.com/2012/04/blog-post_03.html