திருவாய்மொழி-1-4-அம் சிறைய மட நாராய் – ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

தூது பதிகம்

பாகவதம் ஸ்ரீ ராமாயணம்
தேவேந்திர நாயை தூது விடுகிறான் வேதம் -ரிக்
மேகம் கடல் பஷி போல்
திரு அடியும் மரம் பஷி கண்டு சீதை பிராட்டியை பார்த்தாயா
கோதாவரி இடம்தாயார் பெருமாள் வந்தால் சொல்லு என்கிறாள்
கோபிகளும் மாதவி மல்லி கொடியை கேட்டார்கள் -காளிதாசனும் ஹம்ச பஷி தூது
அம் சிறைய மட நாராய் அளியத்தாய் ! நீயும் நின்
அம் சிறைய சேவலுமாய் ஆவா ! என்று எனக்கு அருளி
வெம் சிறைப் புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ ? 1-4-1
ஆச்சார்யர் -கடகர் இவை –
வண்டு-கிருஷ்ணா பக்தி என்கிற தேனை உண்டு
சர்வேஸ்வரன் இடம் பந்தம் லோக பந்து தானே அவன்

யார் இடமும் நம் தாபம் சொல்லி கொள்ளலாம்
சுத்தமான பிரேமை வர ஞானம் வேண்டுமே
அதனால் முதல் மூன்று திரு வாய் மொழியில் அவன் சொரூபம் நம் சொரூபம் கட்டி
சூர்பணகை இந்த்ரியம் இழுக்க போனது போல் இன்றி கோபிகள் போல் ஆழ்வார்
ஞான உபதேசம் அருளி -வைராக்கியம் அருளி உலகம் இன்றி விலகி
விஸ் லேஷ நாயகி பாவனையில் -சார தம -விஷய சொரூபம் -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் கிருஷ்ணா விரகமே உரு எடுத்து
தசரதர் பெருமாள் பிரிந்து போனது போல் லஷ்மணன் மீன் தண்ணீர் பசை இழந்தது போல்
சரீரம் தான் உரு கொண்டு இருப்பது போல்
சௌசீல்யம் சௌந்தர்யம் நினைக்க நினைக்க இந்த நிலை
கண்ணில் காண்பன அனைத்தையும் தூது விடுகிறார்
வானர ஜாதி பெருமாளால் வீறு பெற்றது போ
பஷி ஜாதிகள் வீறு பெற்றன ஆழ்வார்களால்-பட்டர் ஸ்ரீ சுக்தி இது.
கிளி நாரை வண்டு பார்த்து ஆழ்வார் பாசுரங்கள் நினைவு வருமே –சம்பந்தம் கிட்டியதால் –

நாரை கொக்கு போல்- மடப்பம் கொண்ட -பிரேமை உடன்–கொஞ்சி குலாவி கூட்டமாய் இருக்கும்
அழகிய சிறை-நினைத்த பொழுது பறக்கும் படி-ஆழ்வாரை பார்க்க -அளியத்தாய்-காக்க வல்ல —
உனக்குயேற்ற சேவல்-ஆண் பஷி–அம் சிறைய சேவல்-ஆச்சர்யரும் பத்னியும்-நினைத்து
மிதுனமே உத்தேசம்-பம்பா தீரத்தில் பெருமாள் பார்த்து அருளிய வார்த்தை-
நர நாராய்-பதில் ஆ ஆ என்று குறல் கொடுக்க வேண்டாமா –
கருட கொடி உடைத்தவன்-உங்கள் ஜாதி–பஷி ராஜனே வாகனம் கொடி
தூது போனால்-சிறையில் வைத்தால்-கிளி கூண்டு போல-சிறை வைத்தால்
அங்கனே ஆகில் அதுஉன் பேரு அன்றோ —
நச புன ஆவர்ததே கிட்டுமே -ஆழ்வாரே புருஷா காரம் ஆகுமே
என் செய்த தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்

என் செய்தும் ? உரைத்தக்கால் இனக் குயில் காள் ! நீரலிரே ?
முன் செய்த முழு வினையால் திரு அடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாது என் அகல்வதுவோ ? விதி இனமே 1-4-2
சிவந்த தாமரை கண்-எம் பெருமானார்க்கு –

உரைத்தக்கால் என் செய்யும்
குயில்கள் கூவும் -குயில் காக்காய் -கருப்பு-இனம் போல் இருக்கும்
தூ தூ விரட்ட -குயிலே உன்னை கொண்டாட -சாது -வசந்த காலம் வந்தது கோவை கொஞ்சும்
சமஸ்க்ருத வார்த்தை -ஜாதி குயில் காள் -குழல் வார அக்காக்காய் கண்ணன் குழந்தை காட்டுகிறாள் யசோதை
லவ குசர்குரல் போல்-சுரதொடே வந்த கார்யம் மறந்து –
கைங்கர்யம் கொடுக்க வில்லை -பூர்வ வினை-காரணம் -அபசாரம் என்னவோ –
கெஞ்சிதாக–புருஷோத்தமன் -எதிர் தலை பெண் உடை உடுத்தி கொண்டு-பாஞ்சாலி-பெண் பார்த்து ஆண்களுக்கு பெண் ஆசை வந்தது போல்
ராஜ ரிஷி பிரம ரிஷி ஆனா பின்பு -விஸ்வாமித்ரர் –போல்–புருஷதத்வம் இருப்பதால் மீண்டும் ராஜ ரிஷி போல் ஆனாரே
பெண் உடை உடுத்த வைக்கும் ..பிருந்தாவனம் அர்ச்சகர்கள் இன்றும் பெண் உடை கொண்டு பிரேமை தலைக்கு ஏற ஏற –
வசந்த உத்சவம் பட்டர் அலங்காரம் திரு ஆபரணம் சாத்தி கொண்டு-நாயகி பாவம்-நாயகனை சேவிக்க கோபி பாவத்தில் சாமர கைங்கர்யம் செய்தார்
தாசி போல்-பாவம் உருவத்தை கொடுக்க —
விதியினால் பெடை மணக்கும் மென் நடைய வன்னம் காள் !
ம்தியினால் குறள் மாண ஆய் உலகு இரந்த கள்வர்க்கு
மதி இலேன் வல் வினையே மாளாதோ ? என்று ஒருத்தி
மதி எலாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே 1-4-3
இனம் சேர்க்கை-ஹம்ச நடை அழகு /
வாமன பிரமச்சாரி -பசுவோ பூமியோ கண்ணிகையோ தானம்-மகா பலி கேட்டதும் அனைத்து பெண்களும் ஆசை பட்டது போல் ஆழ்வாரும்-
நினைக்க -அனுபவித்து மாளாத கர்மம் –அவன் பார்த்து நீக்க வேண்டும் –என் கர்ம வினையால் விலகி இருக்க -அவனுக்கு தொண்டு செய்ய -அவனே கிருபை-பிரதி பந்தகம் நம் வல்வினையே –கோபிகள்- கொள்ளை ஆசை எங்களுக்கும் அவனுக்கும் -விதி பிரிகிறதே -அயோத்யா வாசிகளும் பெருமாளை பிரிந்து –தமக்கு பக்தி இல்லை என்று நினைப்பது போல் சக்தி உண்டே -அனைவரையும் ரஷிக்க -விதி தான் தீர வேண்டும்
அது போல் உள் கலங்கி ஆழ்வார் மூர்ச்சித்து இருக்கிறாள்
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ ?
நன் நீர்மை இனி அவர் கண் தங்காது என்று ஒரு வாய் சொல்
நன் நீலம் அகன்றில்காள் நல்குதிரோ ?நல்கீரோ ? 1-4-4
அன்றில்-பசி -நிலைமை கண்டு இரங்கி-நேரில் வந்து ஆறுதல் வார்த்தை சொன்னால் போதாதோ-
அவன் இடம் கருணை இல்லை சொல்லாதீர் ஆசை இல்லாமல் போகாது -கருணை இல்லாமல் போனாலும் ஆசை போகாது
என் நீல முகில் வண்ணன் அவன் எனக்கு –பக்தி ஒன்றாலே உறவு கொண்டாடுகிறாள்
அவர் –பூஜ்ய வசனம்-அவள் சொல்ல வில்லை-தேவிமார் பெருமை புரிந்து -நப்பின்னை/ பூமி /ஸ்ரீ தேவி –
உயிர் தங்காது என்று சொல்லும் ..

நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் எழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ ? நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர் புனல் படப்பை இரை தேர் வன் சிறு குருகே
மல்கு நீர்க் கண்னேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே 1-4-5
குருகு பஷி-கொக்கு போல் -அழகிய சிறிய -கொண்டாடுகிறாள்
சர்வ லோக ரஷகன்-என்னை காக்க முடியாதா –
பேச முடியுமா கிட்டே போக முடியுமா -சதா பச்யந்தி சூரர் –
கண்டக்கால்-வாய்ப்பு கிட்டித்து ஆனால்-
நிலைமை சொல்லவா –தீபாந்தரம் தாண்டி வருமே பறவைகள்-கடல் தாண்டி-
புனல் பரப்பு தாண்டி-இரை ஆகாரம் தேட போகுமே –
கடல் கரைக்கு அப்பால் உள்ள பிராட்டி காற்று பட வில்லையே பெருமாள் துக்கம் பட்டது போல்-
சேஷ சயனம்-மீன் தேடி போகுயம் பொழுது -கடல் போல் இங்கு கண் நீர் உண்டே சொல்லுமே

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா  முன்
அருளாழி புள் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருள் ஆழி வரி வண்டே ! யாமும் என் பிழைத்தோமே? 1-4-6
கிருபை இன்றி இருக்கும் -பக்தியே பாவம் தானே
அருளாத ஸ்வாபம் கொண்டவர்-என்கிறார்
செய்தது போதாது தாகம்-
ஆழ்வார் ஆவி துவரா முன் –

அவர் நாயகி விஷயத்தில் கிருபை செய்ய வேண்டும்–
தாரகம்-உயிர் தரிக்க -அருள் ஆழி கருணை கடல்-
புள் கடவி-கருட சேவை-எங்கள் தெருவே போனால் தமக்கும் சொருப ஹானி வராது –
வாசலில் வந்து  பார்க்காமல் -ஜாலதரங்கம் வழியாக கண்டு ஜீவித்து இருப்போம்
அவள் முடிவதற்கு முன்பு  -ஆஸ்ரித பரித்ரானமாக எழுந்து அருளும் பொழுது ஒரு நாள் இவள் தெருவில்
போக வேண்டுமே –ஆழி வரி வண்டு இது மட்டும் நீ சொன்னாலே போதும் நாம் பிழைப்போம் -நிச்சயமாக அவன் செய்வான்
என் பிழை கோப்பது போலப் பனி வாடை ஈர்க்கின்றது
என் பிழையே நினைந்து அருளி அருளாத திரு மாலர்க்கு
என் பிழைத்தாள் திரு வடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே ! யான் வளர்த்த நீ யலையே 1-4-7
இளம் கிளியை–வாடை காற்று எலும்பில் ஊசி குத்துவது போல் –விரகத்தால்
என் பிழை தான்-அபசாரம் தான்-பிரிந்து இருக்க காரணம் —
அவர் ஸ்வாபம் மாற்றும் படி செய்த பிழை செய்து இருக்க வேண்டும் –
முகமும் காட்ட வில்லை என்ன பிழை சொல்ல வில்லை
அந்த பிழை என்ன என்று கேட்டு வா –
யான் வளர்த்த -வளர்தததானால் பயன் பெற்றேன்-இளம் கிளியே
நீ யலையே ? சிறு பூவாய் ! நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனி உனது
வாய் அலகின் இன் அடிசில் வைப்பாரை நாடாய் 1-4-8
நீ அல்லவா பூவை-பஷியே–நெடுமாலுக்கு என் தூதாய் போய் -வியாதி நுவல் -சொல்
வெளுத்து விரக சாயலொடு அழகு குன்றி இருக்கிறேன்
இனி தான்யம் போடுவதை நிறுத்தி விடுவேன்-வேறு எங்காவது போய் கொள்ளு
சரம தசையில் தனதுதிரு ஆராதன பெருமாளை பார்த்து -திரு ஆராதன பிள்ளை-இந்த கண்ணனுக்கு -திரு நாமம்
பெரிய திரு மலை நம்பி -திரு நாட்டுக்கு போகும் சந்தோஷம் விட -இந்த பிள்ளையை விட்டு போகும் துக்கத்துடன்-
இனி யாரையாவது திரு ஆராதனதுக்கு பார்த்து கொள்-ஐதீகம்
நாடாத மலர்நாடி நாள் தோறும் நாரணன் தன
வாடாத மலர் அடி கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்று இருத்தல் வினை யற்றது என் செய்வதோ ?
ஊடாடு பனி வாடாய் ! உரைத்தீராய் எனது உடலே 1-4-9
உடலை சுமக்காமல் குடலை சுமந்து பூ மாலை கட்டி கைங்கர்யம் செய்யவே
புஷ்பகைங்கர்யம்-வகுத்த தொண்டு-காற்றும் இதை தானே செய்கிறது -பூ தூவி மணம் கொணர்ந்து
இருவருக்கும் தொண்டு–இது தானே -உஊடி ஆடி வர கூடிய நீ அவன் இடமாவது சென்று சொல்
உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்

கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடல் ஆழி மட நெஞ்சே ! வினையோம் ஒன்றாம் அளவே 1-4-10
சம்சார சாகரம்-உடல் எல்லாம் நீ தானே
பிரயோக சக்கரம் கொண்டவன் இடம் இது சொல்லி
நெஞ்சை தூது விடுகிறாள் இதில்
அளவி யன்ற வேழ்  உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வன் குரு கூர் சடகோபன் வாய்ந்து உரைத்த
அளவியன்ற வந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்
வள வுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே 1-4-11
அளவுக்கு சொல்ல பதினான்கு லோகம் /வியாபகம் சொல்லவும்
குருகூர் சடகோபன்-ஆதி நாதன் இருப்பதால் வளம் மிக்க –
அளவு இயன்ற -அர்த்தம் சொல்லி மீளாது–
அந்தாதி -ஆயிரம்-பெருமை இல்லை உள்ளதை சொல்லி கொள்கிறார்
வளமிக்க உரை வியாக்யானம் -வர போவது சூசுகம் –கலியும் கெடும் கண்டு கொண்மின்
போல –பெருமை சேரும் வானை விட ஓங்கி பேர் இன்பம் தானே கிட்டும் -நிகம பாசுரம்
அம்சிறைய புள்கள் தமை ஆழியானுக்கு  நீர்
என் செயலை சொல்லும் என இரந்து— விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம் -திருவாய் மொழி நூற்று அந்தாதி -4
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading