உபதேச ரத்ன மாலை-4-9 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

பொய்கையார்  பூதத்தார்  பேயார்  புகழ்  மழிசை

ஐயன்  அருள்  மாறன்  சேரலர்  கோன் -துய்ய பட்ட

நாதன் அன்பர் தாள் தூளி நல பாணன் நல கலியன்

ஈது இவர் தோற்றத்து  அடைவாம் இங்கு -4

தோற்றத்து  அடைவு  அருளுகிறார் –ஆவிர்பூதம் –ஆழ்வார்களின் தோற்றத்து வரிசையை அருளுகிறார் இதில் –பிறந்தார்கள் என்று இல்லை-கர்மாதீனமாக இன்றி அவனின் இச்சையால் தோன்றினார்கள் –மீனோடு ஆமை-கல்கியும் பத்து போல் இங்கும் பத்து..

முதல் ஆழ்வார்கள்–பொன் கால் இட்டவர்கள்-நம்பி மூத்த பிரான் செம் பொன் கழல் அடி செல்வா பலதேவா -போல்..முதலில் அவதரித்த ஆழ்வார்கள்–வருத்தும் புரம் இருள் மாந்த மறையின் குருத்தின் பொருளையும் வேதாந்தத்தின் அர்த்தம் செம் தமிழ் தன்னையும் கூட்டி-ஞான சுடர் விளக்கு–பொய்கை=குளம்/மாதவன் பூதங்கள் மண் மேல் -ஆடி பாடி-பூதத் ஆழ்வார்/ஏற்றின விளக்கில் அவனை கண்டு–மா லாராள் தன்னோடு மாயவனை கண்ட தமிழ் தலைவன் –பேய் ஆழ்வார்/இடம் கொண்ட கீர்த்தி மளிசைக்கு-ஐயன் நிர்வாகர்-அருள் மாறன்–அடை குறிப்பு-அவன் அருள் கண்டீர் கிருபை வடிவு எடுத்த நம் ஆழ்வார்–சேரலர் கோன் கொல்லி காவலன்–பெருமாள் ஆநந்த பட்ட பொழுது ஆனந்தம் திரைக் ஏதேனும் ஆக ஆசை பட்டார் -தூய பட்ட நாதன்-பொங்கும் பரிவு-மங்களாசாசனம் பண்ணிய தூய்மை தன்னை பாராமல்-கோப ஜென்மத்தை ஆசை பட்ட தூய்மை–பட்டர்களுக்கு நாதன்–வித்வான் களுக்கு நாதன்–பட்டர் பிரானுக்கு நாதன்–பரத்வம் ஸ்தாபித்தார் வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தவர்–அன்பர் தாள் தூளி-தொண்டர் குலமே பெருமையாக திரு நாமம் கொண்டவர்-துளவ தொண்டர் அடி பொடி–நல பாணன் -நன்மையாவது–அடியார்க்கு என்னை ஆட படுத்த விமலன் என்று அருளிய நன்மை–அடியார்க்கு என்னை ஆட படுத்தாயே கேட்டார் தொண்டர் அடி பொடி தாசா ரசம் அறிந்த நன்மை–நல கணியன்–பாகவத சேஷத்வம் உற்றத்தும் நின் அடியார்க்கு அடிமை ததீய சேஷத்வம்-மிடுக்கு தோன்ற கலியன் —

அவதரித்த கிராம் சொல்லி அடுத்து

அம் தமிழால் நல கலைகள் ஆயுந்து உரைத்த ஆழ்வார்கள்

இந்த உலகில் இருள் நீங்க வந்து உதித்த

மாதங்கள் நாள்கள் தம்மை மண் உலகோர் தாம் அறிய

ஈது என்று சொல்லுவோம் யாம் -5

ஈது என்று சொல்லுவோம்-மாதங்கள் நாள்கள் -அம் தமிழ் நாம் அறிந்த மொழி–நல கலைகள்-குற்றம் இன்றி புருஷன் வாயால் வராமல் ஆதி அந்தம் இன்றி–இந்த விசெஷணம் தமிழுக்கும் உண்டு அகஸ்தியரால் பிரசாரம் நித்யம் ஆதி அந்தம் இல்லாதது–அத்யயனம் பண்ண அதிகாரம் காலம் யோக்யதை-தமிழுக்கு இவை இல்லை-சர்வருக்கும் –திருமாலால் அருள பெற்ற சடகோபன்–அவன் கொடுத்த ஞானம் சரீரத்தால் -என் வாய் முதல் அப்பன்–இரும் தமிழ்நூல் இவை மொழிந்து –மொழிவித்து –தானே தன்னை பாடி-ஆழ்வார்கள் வந்து உதித்த –இந்த உலகில் இருள் நீங்க –ஆண்டாள் உண்ணும் குலம்-நீயோ உண்ணாதவன்  எங்கள் குலத்தில் பிறந்தாய்– -வெண்ணெய் திருடி–உண்டாய்–அந்த உலகு இருப்பதால்-அந்தமில் பேர் இன்பம்-தெளி விசும்பு திரு நாடு–அயோத்யா -பதிக்க தகர்க்க முடியாதது சுடர் ஒளியாய் நின்ற தன உடை ஜோதி–அஞ்ஞானம் அந்தகாரமான இருள்-அறிவிலா மனிசரை திருத்த –விஷ்ணு பக்தன் அருகில் இருந்தால் உள இருள் நீங்கும் உபதேச பெற்று–பராங்குச -ஆதித்யம் பரகால  லோக திவாகரம்-ராமானுஜ திவாகரன்-மூவரும் அஞ்ஞானம் நீக்க –வந்து உதித்த–தோற்றினார்கள்–மாதங்கள் சித்தரை ஆவணி போல் –ஐப்பசி தொடக்கி-ஆனியில் முடிப்பார்கள் 7 மாதம் தான் –பங்குனி/சித்தரை யாரும் இல்லை–திரு நட்ஷத்ரம்  அஸ்வினி ஆரம்பம் இல்லை திரு வோணத்தில் தொடங்கி கேட்டையில் முடிப்பார் -அறிவினால் குறை இலார்–அகல் ஞாலத்து அவர் அறிய –இல்லை என்றுகுறை கூட படாதவர்கள் –தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து ஈஸ்வரன் கைங்கர்யம் இழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றி சம்சார பெரும் கடலில் ஆழ்ந்து–ஈது என்று சொல்லுவோம்–அஞான நினைவு படுத்துவது ஆச்சார்யர் கடமை சத் விஷயம் தெரிந்த பின்பு–

ஐப்பசி  இல் ஓணம் அவிட்டம் சதயம் இவை

ஒப்பிலாவா நாள்கள் உலகத்தீர் எப்புவியும்

பேசு புகழ் பொய்கையார் பூதத்தார் பூதத்தார் பேய் ஆழ்வார்

தேசுடனே தோன்று சிறப்பால்-6

தேஜஸ் உடன் -ஏப் புவியும் பேசும் படி–புஷ்பத்தில் தோன்றி யோனி சம்பந்தம் இன்றி–தேஜஸ்–ஞான சுடர் விளக்கு ஏற்றிய வைபவம்–ஞான வைபவம்–பிறப்பும் ஞானமும்-கருணை மேகம் பொழிந்து அல்லாது  நில்லாது -கரு மேகம் மெதுவாக வரும் கொடுத்து முடித்து வெட்க்கி ஓடி ஒளியும் மேகம்–எங்கும் தீர்தகராய் திரிந்தவர்கள்–மூன்று வைபவம்–ஏழை எதலன் கீழ்மகன்-மூன்று விஷயம் ஞானம் இன்றி குல குடி பிறப்பு ஆசாரம் இன்றி மூன்றில் தாழ்ச்சி அங்கு–புலவர் நெருக்கு உகந்த பெருமாள் –தேகழீசன்–கண் வளருவான் -வண்டு இசைத்தால் போல் கண் கண்ணாக செஷ்டிதங்கள் வளர்ப்பான் -கருப்பு சாறு -மூன்று சக்கரம் தானேயடி பட்டு திரு அந்தாதிகள் ஆகிய சாறு கொடுக்க- திவ்ய மகிஷிகள் ஆயுதங்கள் உடன்–உள் நாட்டு தேஜஸ் -பண்டை நாடு பதிகம் பிரம்மா ஜன்மம் வேண்டாம் தாஸ்ய சுகம் தெரிந்தவனின் பவனத்தில் புழுவாக ஆசைபட்டார் ஆளவந்தார்–அகம் வோ பாந்தவோ ஜாதக-கண்ணன் —

திருவோணம் -முப்புரி ஊட்டிய -பகவான் ஆழ்வார் ஆச்சார்யர் -திருவேம்கடத்தான் வாமன அவதாரம் திருவோணத்தா உலகம் ஆளவான்-பொய்கை ஆழ்வார் பிள்ளை லோகாச்சர்யர்-முப்புரி ஊட்டிய திவ்ய தேசம்  அ  உ ம காரம் ஏக சிம்காசசனம் ஸ்ரீவில்லி புத்தூர்–மத்ஸ்ய கூர்ம  வாமன அவதார தினம் –சர்வ பாபா கர நட்ஷத்ரம் திருவோணம்–

மற்று உள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்து உதித்து

நல் தமிழால்  நூல் செய்து நாட்டை உய்த்த பெற்றிமையோர்

என்று முதல் ஆழ்வார்கள் என்னும் பேர் இவர்க்கு

நின்றது உலகத்தே நிகழ்ந்து -7

நிகழ்ந்து நின்றது–இரண்டு காரணங்கள்–முன்னே வந்து உதித்தால் -முதல் –நல் தமிழால் நூல் செய்து -தாங்கள் பகவானியானுபவிக்க மட்டும் இன்றி-நாடு உய்ய –வித்தையால் முதல் ஆழ்வார்கள்–ரகஸ்ய த்ரயம்-திருமந்தரம்–போல்–தானே நரன் நாரணன் ஆக இருந்து அருளிய திரு மந்த்ரம்-சிங்காமை விரித்தான்–சிஷயனாய் இருந்தது சிஷ்யன் இருக்கும் இருப்பு நாட்டார் அறிக்கைக்காக –உபாயம் பகவான்-காட்டும் திரு மந்த்ரம்–வித்தையில் முதல் ஸ்தானம் திரு மந்த்ரம் –அனுஷ்டானம் துவயம்-காட்டும்–சரம ஸ்லோகம் விதி—பொய்கை  ஆழ்வார் -வையம் தகளியா அகல்–வார் கடலே நெய்யாக –வெய்ய கதிரோன் விளக்காக –விபூதி சொல்லி –சம்சாரம்லீலா விபூதி ஸ்ருஷ்ட்டி உண்டு அழிவு உண்டு -கால் பங்கு திரி பாத் விபூதி மூன்று மடங்கு நித்ய விபூதி–உபய விபூதி நாதத்வம்–பொய்கை ஆழ்வார் சொல்ல -அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புறு சிந்தை இடு திரியாக –குணங்களும் உண்டு–கல்யாண குண விசிஷ்டன் பகவான் என்றார் பூதத் ஆழ்வார்.ஸ்ரிய பதி என்றார் அடுத்து–ஆல் இலை-மார்கண்டேயர்-யார் கேட்க்க -திரு மார்பை காட்ட-பெரிய பிராட்டிக்கு நாதன் என்பதே சொரூபம் –சொரூப நிரூபக தர்மம்–பெரிய பிராட்டி –நல் தமிழால் நூல்–என்று–கொண்டாடுகிறார்கள்–என்று-நம் ஆழ்வாரும்–செஞ்சொல் கவிகாள் உயர் காத்து ஆள் செய்மின்-முதல் ஆழ்வார்கள் செம்  தமிழ் பாடுவார் இன்கவி பாடும் பரம கவிகள்–பரதத்வம் முழுமுதல் கடவுள் வேதாந்தம் தேட -ஸ்ரீ குணா ரத்ன கோசம்-பெரிய பிராட்டி வைபவம் பேச-உய்ரந்தவள்–திரு மார்பை பார்தத்தும் பாத அழுந்தி சிகப்பு ஏறி சின்னம் பார்த்து–அகலகில்லேன் இறையும் என்றும் –நாட்டை யுத்த பெற்றிமையோர்–

.பேதை நெஞ்சே ! இன்றை பெருமை அறிந்து இலையோ

ஏது பெருமை இன்றைக்கு என் என்னில் ஓதுகின்றேன்

வாய்த்த புகழ் மங்கையர்கோன் மா நிலத்தில் வந்து உதித்த

கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்-8

திரு மங்கை ஆழ்வார் அவதாரம்–ஈது இவர் தோற்றத்து அடைவு  முன்னம் சொல்லிய பின்பு-அடைவில் பாடாமல்-அடியார்கள் நினைவு கொள்ள ஐப்பசி-மாத க்ரமம் படி அடுத்த கார்த்திகை-மாசம் என்பதால்–திரு குறையலூர்–வாய்த்த புகழ்–பொருந்திய புகழ்–வாய் ஓதி வாள் வழியால் மந்திரங்கள் கொண்ட வைபவம்–வயலாலி மணவாளன்-ஆடல்மா குதிரை-நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் தோழா வழக்கன் தாள் ஊதுவான் நான்கு பேர்–பர காலன்-பிர மதத்தவர்களுக்கு காலன்-பரனான அவனுக்கும் காலன்–நடுக்கம்–நீலன்-கலியனோ மிடுக்கு–திரு மந்த்ரம் -மந்திர ராஜா திரு மந்த்ரம்–மந்திர அரசு தெய்வ அரசன் ஆலி நாட்டு அரசனுக்கு அரச மரத்தில் கொடுத்தான் நான்கு அரசு–வேடுபரி உத்சவம் இன்றும் சேவிக்கலாம் செருக்கு உடன் முதல் கேட்ட பின் மடி ஒதுக்கி குனிந்த தலை உடன் அனந்யார்க்க சேஷத்வம் -தீ பந்த ஒளியில் அற்புத சேவை–வாள் வழியால் மந்த்ரம் பெற்ற வைபவம்–

கவி லோக திவாகரன்–விளக்கு-எடுத்த மாதம் கார்த்திகை–வாழி பர காலன் –மங்கையர் கோன் தூயோன் சுடர் மான வேல் -நெஞ்சுக்கு இருள் கெடும் தீபம் –விஷ்ணு தீபம் ஏற்றி-பிறந்த வைபவம் ஒருத்தி மகனாய் பிறந்து -ஓர் இரவில்-ஒருத்தி மகனாய் -இனி பாசுர வைபவம் அடுத்து —

மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன்

ஆறங்கம் கூற அவதரித்த வீறுடைய

கார்த்திகையில் கார்த்திகை நாள் என்று என்று காதலிப்பார்

வாய்த்த மலர் தாள்கள் நெஞ்சே !வாழ்த்து-9

ஆறு பிர பந்தங்கள்-வேத சதுஷ்டய அங்கோ உப அங்கங்கள் 14 போலே—நான்கு வேதம் -ஆறு அங்கம் 8 உப அங்கம்–தமிழ் வேதம்-மாறன் அருளியவை–சாகையாய் விரவி இருக்க -எடுத்து கோத்து வியாசர் பண்ண–ஆறு அங்கங்கள்–கூற அவதரித்தார்–மீண்டும் வீறு உடைய கார்த்திகையில் கார்த்திகை நாள்–என்ன வீறு–அர்ச்சை அவதார பிராவண்யம்-அடியார்க்கு அடிமை–முதல் ஆழ்வார்கள் பரத்வம் திரு மழிசை அந்தர்யாமி குலசேகரர் ராமன் நம் ஆழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள் கிருஷ்ணா கலியன் அர்ச்சை திரு பாண் தொண்டர் அடி பொடி ஸ்ரீ ரெங்கத்தில் மண்டி கிடந்தனர்–கண்டியூர் -மல்லை என்று மண்டினார் உய்யலாமே –சீரார் திரு வேம்கடமே ….ஆராமம் சூழ்ந்த அரங்கம்–ராஜ குமாரர் பிடி தோறும் நெய் சேர்ப்பது போல் அடி தோறும் அர்ச்சை சேர்க்க வேண்டும்–வட திரு வேம்கடம் மேய மைந்தா மன்றம் அரகூத்தாடி வில் இருத்து –தோய்தான் -வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தா என்னும்..வீறு–திரு இந்தளூர் நும்மை தொழுதோம் ஊடல் -பாசுரம்-ஆணான தன்மையில்–சென்று சென்று மங்களா சாசனம் நம் ஆழ்வார் இருக்கும் இடம் வந்து பாடல் பெற்றனர்–பாரித்து கொண்டே போனார் இந்தளூர் பரிமள ரெங்கனை சேவிக்க –திரு தரை சாத்தித்து–நும்மை தொழுதோம் இம்மைக்கு இன்பம் பெற்றோம் வாழ்ந்தே போம்–அடியோமுக்கு எம்பெருமான் அல்லீரோ–நீர் இந்தளூரிரே–மயர்வற மதி நலம் அருளின்-நெஞ்சில் இருந்து மருவி தொழும் மனம் தந்தேன்-சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே –நும் அடியார் எல்லாரோடும் ஒக்க நினைந்து இருந்தீரோ–நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்–அடியார் எல்லோரோடும் நம் ஆழ்வாரையே கழிக்கிறார்–சொவ்குமார்யம் மார்த்வம்-மலையாள ஊட்டு போல அவர் -நான்கு பதிகம் விட்டு பிரிந்து அழுவார் சேர்ந்து களிப்பார் நான்கு பதிகம்–பட்ஷி தூது விட்டாலும் பர கால நாயகி-நம்ஜீயர் உகந்த பதிகம் தூ மலர் நான்கு பாசுரம் மட்டும் பாடி–ஐந்தாம் நேராக பாடி-ஒ மண் அளந்த தாடாளா ! பாடுகிறார்..வேதம் இதிகாசம் புராணம் பாஞ்சராத்ரம் திரு வாய் மொழி இவை வேதத்தின் அவதார வரிசை –அங்கீ அங்கம்-நாயனார் ஆச்சர்ய ஹிருதயம் விவரித்து அருளுகிறார்–மா முனிகள் வ்யாக்யானத்தில் சாம்யம்-சொரூபம் சேஷத்வம் கைங்கர்யம் பிரார்த்திக்க சரீரம் விரோதி-வேண்டாம் இருவரும் -பொய் நின்ற ஞாலமும் பொல்லா ஒழுக்கமும் அழுக்கு உடம்பும் -இனி யாமுராமை–மெய் நின்று கேட்டு அருளாய்–அடி கொதிப்பு-தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல் இருக்கும் சரீரம்–அனந்தாழ்வான் ஐதீகம்-வானவர் வானவர் கோன் உடன்..சிந்து பூ மகிழும் திரு வேம்கடம் –கரு நாகம் தீண்ட-கடி உண்ட பாம்பு கடித்த பாம்புக்கு பலம் அதிகமா ..விரஜை நதி கோனேரி –பரம பத நாதன்-திரு வேம்கட நாதன் கைங்கர்யம்–ஒரு படி இல்லாத சரீரம்-தேகம்-சரீரம் இளைத்துக்கொண்டு போகும் உடல் பெருத்து கொண்டுபோகும் உடல் தேகம் -மின்னின் நிலையில மன உயர் ஆக்கைகள் புறம் சுவர் ஓட்டை மாடம்.. புரளும் போது .அறிய மாட்டீர்….இதை ஆத்மா என்று நினைக்கிறாரே பொய் நின்ற ஞானம் –வெட்ட கொளுத்த  நனைக்க முடியாத ஆத்மா –வாடினேன் வாடி -ஆத்மாவை வெயிலே வைத்து தேகத்தை நிழல் வைத்து இருந்தார்–ஆல மரம் போல் அவன் திரு மேனி–பிரிந்து இருப்பது வெய்யிலில் வைப்பது–இனி கூடினேன் -சேர்ந்தால் வாழ்ச்சி…

பகவத் பிராவண்யம் ஏக்கம் இருவருக்கும் கிருஷ்ணா கிருஷ்ணா தத்வம் கிருஷ்ணா பக்தி-ஆழ்வார்..கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை–பேர் அமர் காதல்–பின் நின்ற காதல்–கழிய மிக்கதோர் காதல் வளர்ந்த விதம்…அம் சிறைய மட நாராய் -விரக தாபத்தால் தூது விடுகிறார்–நஞ்சீயர் உபன்யாசம் நடந்த ஐதீகம்–சரீர சம்பந்தம் இல்லை-கண்ணனுக்கே ஆம் அது காமம் உயர்ந்த புருஷார்த்தம் ஸ்வாமி–ஈர நெல் வித்து முளைத்து ஏறு இட்டு ஊரவர் கவ்வை ஏறு இட்டு அன்னை சொல் நீர் மடுத்து  காதல் கடல் போல வளர்த்தான் பர பக்தி -சேர்ந்தால் ஆனந்தம் விட்டு பிரிந்தால் துக்கம் முதல் நிலை பர ஞானம் அடைய துடிக்க பரம பக்தி கடைசி நிலை..-முனியே நான் முகனே பதிகம்–பெரிய திரு மொழி-முகம் காட்ட வில்லை தீர்த்த தாகம் தணிய குடித்தால் மட்டும் போதாது -திரு குறும் தாண்டகம் திரு ஏழு கூற்று இருக்காய் சரண் அடைந்தார் வர வில்லை-அதி பிரவர்த்தி-சிறிய பெரிய திரு மடல் அருளினார்–விபவ அர்ச்சை அவதாரம் அழிக்க–திரு நெடும் தாண்டகம்–ஆழ்வார் பிரிந்து பொறுக்காமல் முகம் காட்ட -காதல் பெருக்கின விதம்–

அர்ச்சையில் பிராவண்யம் இருவருக்கும் ..அழகிய மணவாளன் பட்டர் எம்பெருமானார் வடுக நம்ப கிடாம்பி ஆச்சான் திரு வேம்கடம் உடையான் அனந்தாழ்வான் திரு கண்ண புரம் திரு மங்கை ஆழ்வார்.. -அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே -தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே..-அடியோமுக்கு எம்பெருமான் அல்லீரோ இந்தளூரிரே–எம்பெருமானார் குழந்தைகள் உத்சவம் பொழுது வந்து பிரசாதம் பெற்ற ஐதீகம் பெரிய திரு பாவாடை உத்சவம்–அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று-அர்ச்சை உடன் நிற்காமல் கிருஷ்ண அவதாரம் மீளுவார் நம் ஆழ்வார்–பிறந்தது கிருஷ்ண அனுபவம்–அர்ச்சையிலும் ஆழ்ந்து –கரிய கோல திரு உரு காண்பன் நான் -மதுர கவி ஆழ்வார்..சரம பார்வை நிஷ்ட்டை–பொலிந்து நின்ற பிரான்–நம் ஆழ்வாரை பாட வந்தவர் பாடுவது ஏற்றம் –வெள்ளி வளை கை பற்ற –பரகால நாயகி இடைச்சி வெள்ளியில் ஆசை –அணி ஆலி புகுவர் கொலோ–சங்கை உடன் தாய் பேச்சு — திண்ணம் என் இள மான் புகுவது திரு கொளூரே–தெரியும்–தனியாக போனதால் பராங்குச நாயகி பொய் சேர்ந்து விடிவல்–பர கால நாயகியை வளை கை பற்றி கூட்டி போக ஊமத் தங்காய் தின்னா போல் இருவரும் மால் பிடித்து இருப்பார் என்பதால் –முலையோ முழு முற்றும் பொந்தில –கலையோ அரை இல்லை–கற்கின்ற வாசகமே திரு வேம்கடம்–சின்னவள் –கண புரம் கை தொழும் பிள்ளை -காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள் நீணிலா முற்றம்-பல் கூட முளைக்க வில்லை–இருவரும் சிறிய வயசில் –இப்படி அங்கி அங்கம் பாவம்..குறையல் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பு கொண்டவர் ஸ்வாமி ராமானுசன்–இவரையே சொல்கிறார் என்று என்று காதலிப்பார் கலி கன்றி தாசர்-நம் பிள்ளை–கார்த்திகை கார்த்திகை–ஆதரவு–சிஷ்யர்களுக்கும் வாய்த்த மலர் தாள்கள் வாழ்த்து மட நெஞ்சே-
-பிள்ளை லோகம் ஜீயர்  திருவடிகளே சரணம் ..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading